உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
ஜெயலலிதாவுடன் நிரூபமா ராவ் திடீர் சந்திப்பு-ஏன்? முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தூதராக பணியாற்றியவர் நிரூபமா ராவ். பின்னர் மத்திய வெளியுறவுத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். தற்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இவர் பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில் சென்னை வந்த நிரூபமா ராவ் திடீரென முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ராவ் தெரிவித்தார். நிரூபமா ராவின் பூர்வீகம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 3 replies
- 970 views
-
-
ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ், இலங்கையில் ஈழத் தமிழர்களின் நலனை காக்கும் வகையில் தமிழக சட்ட மன்றத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கவும் ஜெயலலிதா தொடர்ந்து குரல் கொடுப்பார். யாருக்கும் அவர் பயப்படமாட்டார். அவரது துணிச்சல் பாராட்டுக்குறியது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீராங்கனை வேலு நாச்சியார் போன்…
-
- 0 replies
- 564 views
-
-
தமிழினத்தை அழிக்க நினைக்கும் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றுதான் நான் சொன்னேன். ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பாபர் மசூதியின் தீர்ப்பும், தேசிய அவமானமும் என்ற தலைப்பில் திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய சீமான், தமிழ் இனத்தை அழிக்க நினைக்கும் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நான் சொன்னேன். அதற்காக நான் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமா? நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லையே? கருணாநிதி ஊழல் செய்தார் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஜெயலலிதா ஊழல் செய்தார் என்று கருணாநிதி சொல்கிறா…
-
- 0 replies
- 846 views
-
-
ஜெயலலிதாவை சோனியா டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா? இல்லையா? செவ்வாய்க்கிழமை, மே 24, 2011, சென்னை: நாங்கள் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அவர் டீ-பார்ட்டிக்கு அழைத்ததாக பத்திரிகைகளில்தான் படித்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதன்மூலம் அவரை சோனியா காந்தி டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்: கடந்த வாரம் நான் உங்களை சந்தித்தபோது வாரம் ஒரு முறை உங்களை சந்திப்பதாக கூறினேன். நேற்று சந்திப்பதாக இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அமைச்சர் மரியம் பிச்சை இறந்ததால் திருச்சி செல்ல வேண்டியதாகிவிட்டது.…
-
- 1 reply
- 730 views
-
-
ஜெயலலிதாவை முதல்வராக்குங்கள் என்று நான் ஒருபோதும் கூறவில்லை-சீமான் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் அமர்த்துங்கள் என்று நான் ஒருபோதும் வாக்காளர்களையோ, தமிழக மக்களையோ கேட்டுக் கொண்டதில்லை என்று கூறியுள்ளார் நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான். கட்சியின் வேலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் காட்பாடியில் நடந்தது. அதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில், ஆந்திரா, கேரளாவில் சாதி கட்சிகள் இல்லை. தமிழ்நாட்டில் தான் சாதி கட்சிகள் உள்ளது. அவர்கள் தமிழன் என்ற தேசிய இனத்தை சாதி என்ற பெயரில் கூறு போடுகிறார்கள். ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் கருணாநிதி வீட்டில் போய் நிற்காமல் தனியாக நின்று இருந்தால் சீமானுக்கு இந்த வேலையே இருந்து இருக்காது நானும் அவர்களுடன் ச…
-
- 0 replies
- 717 views
-
-
ஜெயலலிதாவை விமர்சிப்பதா? இலங்கை அரசுக்கு சீமான் கண்டனம் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தொலைக்காட்சி சிறப்பு நேர்காணலில் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே அளித்துள்ள பதில்கள், இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் இலங்கை அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதையே காட்டுகிறது. தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சி. உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். ஜெயலலிதாவிற்கு தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து தமிழ்நாட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்தட்…
-
- 2 replies
- 445 views
-
-
தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் ‘காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறும்’ முடிவை தி.மு.க. எடுக்கும் என்றுதான் தொண்டர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் வழக்கம்போல் கருணாநிதி தொண்டர்களை ஏமாற்றி விட, ‘தலைவரின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை’ என்று புலம்புகிறார்கள் தொண்டர்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதும் உயர்நிலைக் குழு கூட்டத்தைக் கூட்டினார், கருணாநிதி. இதையடுத்து, தி.மு.க. அவசர உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கடந்த 10-ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. வெளியேறிவிடும் என்று உடன்பிறப்புகள் அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், தி.மு.க. அவசர உயர்நிலை செயல்திட…
-
- 0 replies
- 684 views
-
-
ஜெயா அவமதிப்பு விவகாரம்; சுஸ்மா கடும் கண்டனம்! இலங்கை ராணுவ இணையதளத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மீனவர் பிரச்சினை தொடர்பாக கடிதம் எழுதுவதை அவதூறாக சித்தரித்து சர்ச்சைக்குரிய வகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. பின்னர் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தகுதியற்ற வகையில் இலங்கை மன்னிப்பு கேட்டுக்கொண்டது. இந்த நிலையில், இலங்கையில் இந்த செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்று வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது மிகவும் முக்கியமான விவகாரம் என்றும் இது தொடர்பாக இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, இலங்கைக்குக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்…
-
- 0 replies
- 837 views
-
-
ஜெயா டி.வி யின் கடைசி கட்ட அதிரடி பிரச்சாரம் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க வின் கடைசி கட்ட அதிரடிப் பிரச்சாரம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் முக்கிய குற்றவாளியாக மரண தண்டனை வழங்கப்பட்டு பின்னர் கருணை மனுவால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நளினியின் சகோதரி கல்யாணியின் கணவர் ராஜா விக்ரம் இயக்கிய, எடிட்டரரகப் பணியாற்றிய, தயாரித்த "கலைஞரின் கண்ணம்மா" திரைப்படம். கலைஞருடன் இன்வர்களுக்கு என்ன தொடர்பு என்று திடீரென ஒரு தகவல்களை ஒளிபரபுகிறது. காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி பிளவுறுமா? இது எவ்விதத்தில் அ.தி.மு.க விற்குப் பலனளிக்கும்? http://pithatralgal.blogspot.com/2006/05/85.html http://therthal2006.blogspot…
-
- 9 replies
- 2.2k views
-
-
”ஜெயா ரீ.வியின் சென்னை அலுவலகம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவோம்.” இப்படி அத்தொலைக்காட்சி சேவை அலுகத்துக்கு தொலைபேசி அழைப்புக்களை விடுத்து மிரட்டி உள்ளார் புலிகள் இயக்க ஆதாரவாளர் ஒருவர். இலங்கைத் தமிழில் பேசி இருக்கின்றார். கேணல் என்று அவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஜெயா ரீ.வி புலிகள் இயக்கத்துக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்புச் செய்து வருவதனாலேயே இம்முடிவை எடுத்துள்ளனர் என்று கூறி உள்ளார். கடந்த புதன்கிழமை புலிகள் இயக்கத்துக்கு எதிரான செய்தி ஒன்றை ஜெயா ரீ.வி ஒளிபரப்பியதைத் தொடர்ந்தே இம்மிரட்டல்கள் இடம்பெற்றிருக்கின்றன. செய்தி ஒளிபரப்பாகி ஐந்து நிமிடங்களில் முதலாவது மிரட்டல் வந்திருக்கின்றது. எதிர்வரும் 18 ஆம் திகதி மதுரையில் இடம்பெற இருக்கும் …
-
- 5 replies
- 768 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜூலை 13 அன்று சீனாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். 20 ஜூலை 2025, 04:53 GMT புதுப்பிக்கப்பட்டது 20 ஜூலை 2025, 04:58 GMT இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்பட உயர்மட்ட அதிகாரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார். கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், இருநாட்டு உறவுகளை மீண்டும் வலுப்படுத்த முயற்சிக்கும் காலகட்டத்தில் ஜெய்சங்கரின் சீன பயணம் அமைந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வரும…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
ஜெய்பூரில் தொடர் குண்டு வெடிப்பு 80 பேர் பலி! 150 பேர் காயம் புதன், 14 மே 2008 [கொழும்பிலிருந்து மயூரன்] ஜெய்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 7 தொடர் குண்டு வெடிப்புகளில் 80 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 150 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். திரிபோலியா பஜார், ஜோஹரி பஜார், மாணிக் செளக், பேடி செளபாட், சோட்டி செளபாட் ஆகிய இடங்களில் நேற்று மாலை 7.35 மணியளவில் அடுத்தடுத்து சக்திய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன. 12 நிமிடங்களில் தொடராக அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன. திரிபோலியா பகுதியில் உள்ள அனுமன் கோயிலில் குண்டுவெடித்துச் சிதறியதில் பலர் பலியாகினர். ஒரு குண்டு காரிலும் மற்றொன்று கடை ஒன்றிலும் வெடி…
-
- 0 replies
- 791 views
-
-
ஜெய்ஷ்-இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரைக் காணவில்லை- பாகிஸ்தான் அறிவிப்பு ஜெய்ஷ்-இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரையும் அவரது குடும்பத்தினரையும் காணவில்லை என சர்வதேச தீவிரவாத நிதித் தடுப்பு கண்காணிப்பு அமைப்பிடம் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச தீவிரவாத நிதித் தடுப்பு அமைப்பின் சார்பில் கடந்த ஒக்டோபரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில் கடந்த வருடம் மத்திய துணை இராணுவப் படை (Central Reserve Police Force) வீரர்கள் மீது புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40இற்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.…
-
- 0 replies
- 330 views
-
-
ஜெருசலேத்தில் அமெரிக்கத் தூதரகமும் காசா மரணங்களும் கடந்த வாரம் ( மே 14 ) ஜெருசலேத்தில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்படுவதற்கு முன்னதாக காசா பள்ளத்தாக்கில் இடம்பெற்ற வன்முறை தூதரகத்தை டெல் அவீவிலிருந்து சர்ச்சைக்குரிய நகருக்கு மாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீர்மானத்தினால் ஏற்படக்கூடிய பயங்கரமான விளைவுகளை உலகிற்கு மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்தியிருக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு ட்ரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரக இடமாற்றம் குறித்து அறிவித்தபோது அவரின் அந்தத் தீர்மானம் பாலஸ்தீனப் பிராந்தியங்களில் வன்முறையை மூளச்செய்யும் என்பதுடன் எந்தவொரு சமாதான முயற்சியையும் சிக்கலாக்கும் என்று பலர…
-
- 0 replies
- 380 views
-
-
ஜெருசலேத்தை பாலத்தீனத் தலைநகராக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும்: துருக்கி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என்று முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்துவான் வலியுறுத்தியுள்ளார். படத்தின் காப்புரிமைTR இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனத்தின் உச்சி மாநாடு ஒன்றில் உரையாற்ற…
-
- 0 replies
- 341 views
-
-
ஜெருசலேமில் தூதரகத்தை முறையாக திறந்து விட்டதாக கொசோவோ அறிவிப்பு! இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதலின் மையத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய நகரத்தில் தூதரகத்தை நிறுவிய முதல் ஐரோப்பிய நாடாக தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசோவோ மாறியுள்ளது. ஜெருசலேமில் உள்ள தனது தூதரகத்தை முறையாக திறந்து விட்டதாக கொசோவோ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதும், செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கொசோவோ-செர்பியா உச்சிமாநாட்டின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. கொசோவோ ஜெருசலேமில் தனது தூதரகத்தை நிறுவுவதில் அமெரிக்கா மற்றும் குவ…
-
- 0 replies
- 347 views
-
-
ஜெருசலேமில் வெடித்த புதிய மோதலால் 100 க்கும் மேற்பட்டோர் காயம் ஜெருசலேமில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய பொலிஸாருக்கும் இடையே சனிக்கிழமை வெடித்த புதிய மோதல்களின் விளைவாக 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பழைய நகரான டமாஸ்கஸ் கேட்டில் எதிர்ப்பாளர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசினர், அதிகாரிகள் கையெறி குண்டுகள், இறப்பர் தோட்டாக்கள் மற்றும் நீர் பீரங்கி மூலம் பதிலளித்துள்ளனர். யூதக் குடியேற்றவாசிகளால் உரிமை கோரப்பட்ட நிலத்திலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான அமைதியின்மையாக இது தொடர்கிறது. அல்-அக்ஸா மசூதி அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் குறைந்தது 17 இஸ்ரேலிய பொலிஸார் காயமடைந்ததாக அவச…
-
- 21 replies
- 1.7k views
-
-
ஜெருசலேமில், மீண்டும் மோதல்: 57 பாலஸ்தீனர்கள் காயம்! ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பொலிஸாருடனான மோதலில், குறைந்தது 57 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் சமமாக மதிக்கும் இடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மோதல் பதிவாகியுள்ளது. பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் ஆம்புலன்ஸ் சேவையின் படி, 14 பாலஸ்தீனியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யூத வழிபாடு நடந்து கொண்டிருந்த மேற்கு சுவரை நோக்கி, நூற்றுக்கணக்கான மக்கள் பாறைகள் மற்றும் வானவேடிக்கைகளை வீசத் தொடங்கியபோது தங்களது படைகள் தலையிட்டதாக…
-
- 0 replies
- 273 views
-
-
ஜெருசலேம் சர்ச்சை: லெபனானில் அமெரிக்கத் தூதரகம் முன் வெடித்த வன்முறை பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை எதிர்த்து, லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன. கருப்புக் கொடி ஏந்திய போராட்டக்காரர்களை தடுக்க, கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கியை அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பீய்ச்சி அடித்தனர். முன்னதாக அமெரிக்காவின் இந்த முடிவிற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மத்திய கிழக்கு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் தரகராக அமெரிக்காவ…
-
- 0 replies
- 396 views
-
-
ஜெருசலேம் தொடர்பான அமெரிக்க அறிவிப்பை நிராகரிக்கும் ஐ.நா. தீர்மானம் வெற்றி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் அபார வெற்றி பெற்றுள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionஅரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐ.நா. பொதுக் குழு அவ…
-
- 4 replies
- 415 views
-
-
ஜெருசலேமிலுள்ள யூத கோவிலில் (சினகோக்) நடந்த தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் வரையில் இறப்பு.
-
- 19 replies
- 1.4k views
- 2 followers
-
-
ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப்புக்கு பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அமெரிக்கா ஒருதலைபட்சமாக அறிவிக்கக்கூடும் என்பது குறித்து தான்கவலை கொண்டுள்ளதாக, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், அதிபர் டிரம்பிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து எந்த முடிவாக இருந்தாலும், `இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்…
-
- 0 replies
- 431 views
-
-
ஜெருசலேம் விவகாரம்: தூதரை திரும்ப அழைத்த பாலத்தீனம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP பேச்சுவார்த்தைக்கான தங்களது அமெரிக்க தூதரை திரும்ப அழைக்கப்போவதாக பாலத்தீனம் அறிவித்துள்ளது. அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தார் அதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. டிரம்பின் சமீப…
-
- 0 replies
- 601 views
-
-
ஜெருசலேம்தான் இஸ்ரேல் தலைநகர்: சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக தன்னிச்சையாக அங்கீகரிக்க உள்ளதாக டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், டெல் அவிவ்வில் இருக்கும் அமெரிக்க தூதகரத்தை டிரம்ப் உடனடியாக ஜெருசலே…
-
- 4 replies
- 488 views
-
-
பாலத்தீனியர்களின் தலைநகரான ஜெருசேலத்தில் தொடர்மாடி யூதக் குடியிருப்புகளை அமைக்கவுள்ளதாக இல்ரேலிய அரசாங்கம் அறித்துள்ளது. ஜெருசேலத்தின் கிழக்கே உள்ள ஹர் ஹோமா என்ற பகுதியல் 500 வீடுகளையும், மாலேஹ் ஆதுமிம் பகுதியில் 240 வீடுகளைக் கட்டவும் இஸ்ரேலிய அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. கோபத்துக்குகு உள்ளாகிய பாலஸ்தீனிய அரசியல் தலைவர்கள் குடியேற்றத் திட்டங்கள் எதிர்காலத்தில் பேச்சு வார்த்தைகளைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஜெருசேலம் விவகாரகங்களுக்கான அமைச்சர் ஜெருசேலம் பகுதியில் குடியேற்றங்களை இஸ்ரேல் அரசாங்கம் அமைக்காது என ஒருபோதும் கூறியதில்லை எனத் தெரிவித்துள்ளார். pathivu.com
-
- 0 replies
- 697 views
-