Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜேர்மனியில்... 100 பேரை கொன்ற, கொடூர தாதி! ஜேர்மனியில் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட மருந்துகளை வழங்கி தாதியொருவர் 100 பேரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த 41 வயதான ஆண் நர்சு நீல்ஸ் ஹேஜெல் என்ற இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றியுள்ளார். இந்த நிலையில் நோயாளிக்கு அளவுக்கு அதிகமான ஊசி மருந்து மற்றும் மாத்திரைகளைக் வழங்கி வந்த நிலையில் அதில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 2005 ஆம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் வைத்தியசாலையில் நோயாளிக்கு மருத்துவர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி செலுத்தப்பட்ட போது அவர் கை…

  2. ஜேர்மனியில்... குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான, தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு... பரிந்துரை! ஜேர்மனியில் குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு சுகாதார நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. எனினும், அத்தகைய தடுப்பூசிகளின் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், குரங்கு அம்மை தொற்று அபாயம் நிறைந்தவர்களுக்கு மட்டும் அந்தத் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. பாலியல் ரீதியில் புதியவர்களுடன் நெருங்கிப் பழகுவோருக்கு அந்த நோய்த்தொற்று அபாயம் அதிகமிருப்பதாகவும், இதுவரை அந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அந்த வகையைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. ஜேர்மனியில் 130க்கும்…

  3. ஜேர்மனியில்... கொரோனா, தொற்று வீதத்தில் வீழ்ச்சி. ஜேர்மனியில் கொரோனா தொற்று வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக சமீபத்தைய தரவுகள் காட்டுகின்றன. அதன்படி ஏழு நாட்களில் கொரோனா தொற்று வீதம் 100,000 பேரில் 13.2 ஆக பதிவாவதாகவும் இது கடந்த வாரத்தில் இது 20 க்கு மேல் இருந்தது என்றும் தரவுகள் காட்டுகின்றன. இருப்பினும் கொரோனா தொற்றுடன் தொடர்புடைய இறப்புகளின் எண்ணிக்கை 90,000 ஐ கடந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 137 இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2021/1223054

  4. ஜேர்மனியில்... கொவிட் தொற்று பரவல் குறைந்து வருகின்றது! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பரவல் குறைந்துவருவதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி சமீபத்திய நாட்களாக நாளொன்றில் பாத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை சரி பாதியாக குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 642பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 39இலட்சத்து 40ஆயிரத்து 211பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92ஆயிரத்து 643பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்ப…

  5. ஜேர்மனியில்... சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு, கட்டாய கொவிட்-19 தடுப்பூசி: நீதிமன்றம் ஒப்புதல்! ஜேர்மனியின் உயர் நீதிமன்றம், சுகாதாரப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கான ஆணையை அங்கீகரித்துள்ளது. மார்ச் நடுப்பகுதியில் நடைமுறைக்கு வந்த இந்த நடவடிக்கைக்கு எதிரான புகார்களை நிராகரித்ததாக மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) இதனை அறிவித்தது. இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், சுகாதாரப் பணியாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை, அவர்களது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. நோய் பரவல் அபாயம் நிறை…

  6. ஜேர்மனியில்... மூன்று வாரங்கள், நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல் ஈஸ்டர் விடுமுறையை நிறுத்தி கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஜேர்மனி அறிவித்துள்ளது. பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதிபர் அங்கலா மேர்க்கெல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் முதலாம் திகதி முதல் 5 வரை கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஈஸ்டர் பண்டிகைக்கு ஐந்து நாட்கள், ஜேர்மனியர்கள் வீட்டிலேயே தங்க வேண்டும் என்றும் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://athavannew…

  7. ஜேர்மனியில்... மேர்க்கலுக்குப் பின்னர், யார் ஜனாதிபதி – தீர்மானம்மிக்க தேர்தல் இன்று அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தல் இன்று ஜேர்மனியில் நடைபெறவுள்ளது. இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகின்ற நிலையில், பிரசாரத்திற்கான இறுதித் தினமான நேற்று, ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிடும் அரசியல்வாதிகள் நாடு முழுவதும் பாரிய பிரசாரங்களில் ஈடுபட்டனர். பதவியிலிருந்து நீங்கிச்செல்லும் ஜனாதிபதி அங்கெலா மேர்க்கெலின் வலதுசாரி கட்சிக்கும், சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் வழமைக்கு மாறாக கடும் போட்டி நிலவுமென கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் சமூக ஜனநாய…

  8. ஜேர்மனியில்... யூத மத எதிர்ப்புடனும், இனவாதப் போக்குடனும்... யாரும் செயற்படக்கூடாது: அதிபர் அறிவுறுத்தல்! ஜேர்மனியில் யூத மத எதிர்ப்புடனும் இனவாதப் போக்குடனும் யாரும் செயற்படக்கூடாது என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவுறுத்தியுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்த ஜேர்மனி வாழ் யூதர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஆகியன ஜேர்மனியின் பல நகரங்களில் இந்த வார இறுதியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்தனர். தலைநகர் பெர்லினில் நடைபெற்ற போராட்டத்தின்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்தனர். இது தொடர்பாக 60பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெலின் இந…

  9. ஜேர்மனியில்... விமானிகள், வேலைநிறுத்தப் போராட்டம்: நேற்று 800 விமானங்களை இரத்து! விமானிகளின் திட்டமிடப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கை காரணமாக, ஜேர்மனியின் லுஃப்தான்சா எயார்லைன்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) 800 விமானங்களை இரத்து செய்யவுள்ளது. அத்துடன், அதன் இரண்டு பெரிய மையங்களான பிராங்பேர்ட் மற்றும் முனிச்சில் இருந்து ஏறக்குறைய அனைத்து பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களையும் இரத்து செய்வதாக ஜேர்மன் கேரியர் லுஃப்தான்சா தெரிவித்துள்ளது. லுஃப்தான்சா விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிற்சங்கம் வியாழன் தொடக்கத்தில் ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகள் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து வெளிநடப்பு செய்யப் போவதாகக் கூறியது. இந்த முடிவான…

  10. ஜேர்மனியில்... விலை உயர்வு நெருக்கடியைச் சமாளிக்க, 65 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு! உக்ரைன் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதை அடுத்து, பல ஐரோப்பிய நாடுகள் நீண்ட குளிர்காலத்திற்குத் தயாராவதற்கு அவசர நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய எரிவாயு விநியோக தடையால் நேரடியாக மற்றும் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஜேர்மனி, மக்கள் மற்றும் வணிகங்கள் உயரும் விலையைச் சமாளிக்க உதவும் வகையில் 65 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் எரிசக்தி செலவுகள் உயரும் என்ற எதிர்பார்ப்புகளின் மத்தியில், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்…

  11. ஜேர்மனியில்... கொவிட்-19 தொற்றினால், 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மொத்தமாக 86ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 86ஆயிரத்து 9பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை 35இலட்சத்து 58ஆயிரத்து 148பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 13ஆயிரத்து 833பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 252பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 51ஆயிரத்து 839பே…

  12. போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு உக்ரைனுடனான போரில் புடினுக்கு வெற்றியா தோல்வியா என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார் என்கிறது ஜேர்மன் தரப்பிலிருந்து எழுந்துள்ள ஒரு குரல். ஜேர்மனியைக் கைவிட்ட புடின் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தது. ஜேர்மனிக்கும் வேறு வழியில்லை, ஆகவே, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொண்டது. ஆனால், அதற்காக ஜேர்மனியை தண்டிக்க முடிவு செய்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின். ஆகவே, தங்கள் எரிவாயுவை அதிகம் சார்ந்திருந்த ஜேர்மனியைக் கைகழுவினார் புடின். அவரது முடிவு ஜேர்மனியில் பதற்றத்தை உருவாக்கியதை மறுப்பதற…

    • 47 replies
    • 3.5k views
  13. ஜேர்மனியுடனான எல்லையை மீண்டும் திறக்க ஆஸ்திரியா திட்டம்! ஜேர்மனியுடனான எல்லையை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து பயணிகளுக்கு எல்லை மூடப்பட்ட பின்னர், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு குறித்த எல்லை திறக்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆஸ்திரியாவும் ஜேர்மனியும் தங்கள் எல்லையைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரிய சுற்றுலாத்துறை அமைச்சர் எலிசபெத் கோஸ்டிங்கர் தெரிவித்துள்ளார். மேலும், ஜேர்மனி அதிபர் அங்கலா மெர்கல் மற்றும் ஆஸ்திரிய ஜனாதிபதி செபாஸ்டியன் குர்ஸ் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) எல்லையை படிப்படியாக திறப்பதற்…

  14. ஜேர்மனியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை பாலியல் வன்முறைக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்திய இருவரிற்கு அந்த நாட்டின் நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. 1998 முதல் 2008 வரையான காலப்பகுதியில் 450ற்கும் அதிகமானவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குபடுத்தியதாகவும் 32 பேரை பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட அன்ரியாஸ் -மரியோ என்ற பெயர்களால் அழைக்கப்படும் இருவரி;ற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. ஜேர்மனியின் வடபகுதியில் உள்ள ஹமெலின் என்ற பகுதியில் விடுமுறை முகாமிற்கு சென்ற சிறுவர்களை இவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் இருவரில் ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வந்த சிறுமியை பார்க்கசென்றவ…

    • 0 replies
    • 400 views
  15. ஜேர்மனியை தாக்கிய புயலால் வெள்ள அனர்த்தம் ஜேர்மனியின் வட கிழக்கு கடற்கரையை தாக்கிய புயல் காரணமாக அங்கு பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அங்கு இடம்பெற்ற மோசமான வெள்ள அனர்த்தம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் வட பிராந்தியத்திலிருந்து போலந்து எல்லைக்கு அண்மையிலுள்ள யூஸ்டொம் தீவு வரையான பால்டிக் கடற்கரைப் பிராந்தியத்திலுள்ள நகர்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடல் மட்டமானது சாதாரண மட்டத்திலும் சுமார் 6 அடியால் உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/15168

  16. ஜேர்மனியை தொடர்ந்து பிரான்ஸிலும் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்! ஜேர்மனியை தொடர்ந்து பிரான்ஸிலும் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) தளர்த்தப்படவுள்ளன. இந்தநிலையில், நாளை முதல் பொதுப்போக்குவரத்துக்களில், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதேபோல, பொதுப் போக்குவரத்துக்களைக் குறிப்பிட்ட நேர எல்லைக்குள் உபயோகிப்பதற்கு, வேலைத்தள அத்தாட்சிப் பத்திரம் கட்டாய நடைமுறையாக்கபட்டுள்ளது. இதனை பின்பற்றாதவர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் 135 யூரோக…

  17. 22 JAN, 2024 | 03:02 PM ஜேர்மனியில் பிர­ஜா­வு­ரி­மை­யைப் பெறு­வ­தற்­கான விதி­களை தளர்த்தும் புதிய சட்­டத்­தி­ருத்­தங்கள் அந்­நாட்டுப் பாரா­ளு­மன்­றத்­தினால் கடந்தவாரம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன. புதிய சட்­டத்­தி­ருத்­தத்­தின்­படி, ஜேர்­ம­னியில் சட்­ட­பூர்­வ­மாக 5 வரு­டங்கள் வசிப்போர் பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடியும். இது­வரை 8 வரு­டங்­களின் பின்­­னரே பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடி­யு­மாக இருந்­தது. அதே­வேளை, விசேட ஒருங்­கி­ணைப்பு அடை­வு­மட்­டங்­களை பூர்த்தி செய்வோர் இது­வரை 6 வரு­டங்­களில் பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க தகுதி பெற்­றி­ருந்­தனர். இக்­கா­ல­வ­ரம்பு தற்­போது 3 வரு­டங்­க­ளாக குறைக்­கப்­பட்­­டுள…

  18. ஜேர்மனின் புதிய அரசாங்கம் கஞ்சாவை சட்டபூர்வமாக்க திட்டமிட்டுள்ளது. ஜேர்மனியில் மூன்று முன்னணி காட்சிகள் புதிய அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை வெளியிட்டதையடுத்து புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்க தயாராக உள்ளது. முன்னதாக ஏஞ்சலா மெர்கலின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுற்றதை அடுத்து SPD தலைவர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் சான்செலராக பதவியேற்கவுள்ளார். மத்திய-இடது SPD, தாராளவாத சுதந்திர ஜனநாயகவாதிகள் கட்சி மற்றும் பசுமைவாத கட்சிகள் சேர்ந்த இந்த கூட்டணியானது புதன்கிழமையன்று, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கூட்டணி அரசாங்கத்திற்கான தங்கள் நிகழ்ச்சி நிரலை 180 வெளியிட்டது. அதில், ஜேர்மனியில் நிலக்கரி சக்தியைக் குறைத்தல் மற்றும் கோவிட் தொற்று நோயைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற பிற நடவடி…

    • 0 replies
    • 364 views
  19. ஜேர்மனில் பெண்களுக்கு அதிகரிக்கும் பாலியல் தொல்லை ; மேலுமொரு முறைப்பாடு பதிவு[ Saturday,16 January 2016, 05:42:23 ] பொது நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்தேக நபரான புகலிடக் கோரிக்கையாளருக்கான கடை உத்தரவை ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜேர்மனில் புதுவருடப் பிறப்பன்று இடம்பெற்ற விழாவில் பதிவாக பாலியல் துஷ்பிரயோக மற்றும் சேஷ்டை முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற நிலையிலேயே தற்போது இந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. குறித்த நீச்சல் தடாகத்தை அண்மித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் முகாமிலுள்ள நபரே இந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். இதேவேளை இதுபோன்ற பல்வேறு பாலியல் தொல்லை த…

  20. ஜேர்மனில் முதல் முறையாக இஸ்லாமியப் பெண் சபாநாயகராக தெரிவு ஜேர்மன் நாட்டின் மாகாண பாராளுமன்ற வரலாற்றில் முதன் முதலாக இஸ்லாமியப் பெண் ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமியரான முத்ரீம் ஆர்ஸ் என்ற 50 வயதுடைய பெண்ணே, படீன் - வுட்டம்பேர்க் (baden württemberg) மாகாண பாராளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், ஜேர்மன் மாகாணங்களில் உள்ள பாராளுமன்ற வரலாற்றில் ஒரு இஸ்லாமியர் சபாநாயகராக தெரிவாகியுள்ளது இதுவே முதல் தடவையாகும். முத்ரீம் ஆர்ஸ் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். இவரது பெற்றோர் துருக்கி நாட்டிலிருந்து ஜேர்மனியிலுள்ள ஸ்டட்கர்ட் (stuttgart) நகருக்கு குடிபெயர்ந்துள்ளத…

  21. ஜேர்மன் அதிபரை மிரட்டிய உள்துறை அமைச்சர்! அகதிகள் பிரச்சினையில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ஒரு நல்ல முடிவு எடுக்காவிட்டால் ராஜினாமா செய்ய இருப்பதாக மிரட்டியுள்ள உள்துறை அமைச்சர் Horst Seehofer, அவருக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அடுத்த மூன்று நாட்களில் எனது இரண்டு பொறுப்புகளையும் ராஜினாமா செய்வேன் என்று Horst Seehofer தெரிவித்தார். அவர் ஃபெட்ரல் அரசில் உள்துறை அமைச்சராகவும் CSU கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இன்று மதியம் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கும் Horst Seehofer, ஒரு நல்ல முடிவு எட்டப்படாவிட்டால் தனது பொறுப்புகளில் தொடர்வதா அல்…

  22. ஜேர்மனியில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களை தாக்குவதற்கு ஈரான் மறைமுகத் திட்டம் போட்டிருக்கிறது என்ற சந்தேகத்தை ஜேர்மன் அரச சட்டத்தரணி காறல் ரஞ்ச் இன்று வெளியிட்டார். ஜேர்மனிய பிரஜை ஒருவருக்கும், ஜேர்மனில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தமை அம்பலமானதைத் தொடர்ந்து அவருடைய கருத்து வெளியாகியுள்ளது. மேற்கண்ட சந்தேக நபருடைய வீட்டில் ஜேர்மனிய போலீசார் நடாத்திய தேடுதல் சந்தேகத்தை மேலும் உறுதியாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலை முடுக்கிவிட்டால் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடாத்த ஈரான் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டார். கடந்த செவ்வாயன்று பெருந்தொகையான ஈரான் ஆர்பாட்டக்காரர் தெகிரானில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு…

  23. ஜேர்மன் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்றுக்கு தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல்; பொலிஸார் குவிப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேர்மனியின் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்று மூடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் எஸ்ஸன் நகரில் உள்ள ‘லிம்பெக்கர் ப்ளெட்ஸ்’ என்ற கட்டிடமே இவ்வாறு மூடப்பட்டது. பொலிஸாருக்குக் கிடைத்த உறுதியான தகவலையடுத்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, கட்டிடத்தின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து கட்டிடத்தின் கட்டுப்பாட்டை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். இதனால், அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள நிலத்தடி ரயில் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.…

  24. ஜேர்மன் சான்சலருக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் குறி: அதிர்ச்சி தகவல் Ca.Thamil Cathamil April 10, 2016 Canada ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக அந்நாட்டு புலனாய்வு துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து ரகசிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, பிரான்ஸ் தலைநகரான பாரீஸிலும் ஜேர்மனியிலும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில், ஜேர்மன் புலனாய்வு துறை உயர் அதிகாரியான Hans-Georg Maassen இது குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ‘ஜேர்மனி மீதும் சான்சலரான ஏஞ்சலா மெ…

  25. ஜேர்மன் தூதரகத்தின் மீது கார் குண்டு தாக்குதல் ஆப்கானிஸ்தானில்,மசார்-இ-ஷரிப் நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் காயமடைந்த 80 பேருக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த குண்டு வெடிப்பை தொடர்ந்து பலமுறை துப்பாக்கிக்சூடும் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13391

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.