உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
வடஆபிரிக்காவிலிருந்து மத்தியதரைகடலை கடக்க முயன்ற 300 ற்கும் மேற்பட்ட சட்ட விரோத குடியேற்றவாசிகள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிய அளவிலான துயரம் நிகழ்ந்துள்ளதாக யுன்எச்சீஆர் தெரிவித்துள்ளது. பாதுகாப்பை தேடிப்புறப்;படுபவர்களுக்கு கடலில் உள்ள ஆபத்தை இது புலப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. வடஆபிரிக்காவிலிருந்து நான்கு சிறிய படகுகளில் பயணம் செய்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். இத்தாலிய கடலோர காவற்படையினர் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஓன்பது பேரை மீட்டுள்ளனர். இவர்கள் 100ற்கும் மேற்பட்டவர்களுடன் பயணித்த இரு படகுகளில் இருந்தாக தெரிவித்துள்ளனர். இரு நாட்களாக உணவு மற்றும் குடிநீர் இன்றி இவர்கள் அவதியுற்றுள்ளனர். குறிப்ப…
-
- 2 replies
- 594 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் குடும்பத்துடன் கொல்லப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். சமீபத்தில் நியூஸ்வீக் பத்திரிக்கையின் டுவிட்டர் தளத்திற்குள் ஹேக் செய்து ஊடுருவியது ஐ.எஸ்.ஐ.எஸ். அதில் "துணிச்சலான முஜாஹிதீன்" என்ற தலைப்பில் மிரட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது - பிரெஞ்ச் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கியது போன்று ஒபாமா குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்துவோம். ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா துவங்கி உள்ள நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் அனுப்பியுள்…
-
- 0 replies
- 478 views
-
-
பெர்லின்: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்வீடன் மற்றும் ஜெர்மனி இளைஞர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து கைப்பற்றப் பட்ட பகுதிகளை இணைத்து தனி நாடு ஒன்றை அமைத்துள்ளனர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள். அந்நாட்டில் தங்களுக்கென்று ராணுவத்தையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த ராணுவத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை அவர்கள் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கத்திய நாடுகளான ஜெர்மனி மற்றும் ஸ்வீடனில் இருந்து 1000 இளைஞர்கள் ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. இதில், ஸ்வீடனில் இருந்து மட்டும் 500க்கும் அதிகமான இளைஞர்கள் சேர்ந்துள்ளனராம். இத்தகவலை ஸ்வீடன் உளவுத்துறை தலைமை அதி…
-
- 6 replies
- 587 views
-
-
ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதியாக சையட் அக்பருதீன் நியமனம் FEB 11, 2015 | 10:26by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக சையட் அக்பருதீன் நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜெனிவாவில் இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பொறுப்பேற்கவுள்ள சையட் அக்பருதீன், இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியாகப் பணியாற்றிய திலிப் சின்கா கடந்த டிசெம்பர் மாதத்துடன் ஓய்வு பெற்றிருந்தார். அதன் பின்னர், அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் வெற்றிடமாகவே இருந்து வந்தது. அடுத்த மாதம் 2ம…
-
- 0 replies
- 314 views
-
-
பிரித்தானியாவைச் சேர்ந்த பிணைக் கைதி ஒருவரின் புதிய வீடியோ ஒன்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த பிணைக்கைதியை வைத்து வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், இந்த முறை கொலை மிரட்டல் விடுப்பதற்கு பதிலாக அந்த பிணைக் கைதி மூலம் தங்கள் அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் ஜான் கேன்ட்லி கடந்த 2012-ம் ஆண்டில் சிரியாவின் அலெப்போ நகரில் செய்தி சேகரித்தபோது ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரை வைத்து தற்போது வெளியிட்டுள்ள 12 நிமிட வீடியோவில், ஜான் கேன்ட்லி ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அப்பகுதி செய்திகளை விவரிக்கிறார். ஷரியத் சட்டங்கள் குறித்தும் தீவிரவாதிகளின் வீரம் குறித்தும் இடைவிடாது வி…
-
- 0 replies
- 2.8k views
-
-
உக்ரைனில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும்நிலையில், உக்ரைன் கிளர்ச்சி படைக்கு ஆதரவாக 1,500 ராணுவ வீரர்கள், தளவாடங்களை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. உக்ரைனின் கிரீமியா பகுதியில் அதிகளவில் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் வசிப்பதால், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது ரஷ்யா. இதற்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டது. உக்ரைன் நாட்டின் 2 பிராந்தியங்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என கிளர்ச்சி படையினர் போராடி வருகின்றனர். உக்ரைன் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை வலுத்து வருகிறது. இதுவரை…
-
- 7 replies
- 1.3k views
-
-
கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலிய நிலப்பரப்புக்கே உரிய பாலூட்டிகளின் எண்ணிக்கையில் பத்து சதவீதம் இழக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அழிவின் விளிம்பிலுள்ள ஒருவகையான அணில் கடந்த இருநூறு ஆண்டுகளில் முன்னர் கருதப்பட்டதைவிட ஆஸ்திரேலியாவுக்கே உரிய பாலூட்டிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது மட்டுமல்லாமல், மேலும் டஜன் கணக்கானவை அபாயகரமான நிலையில் உள்ளன என்று சார்லஸ் டார்வின் பல்கலைகழத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்பட்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காட்டுப்பூனைகள் மற்றும் செந்நரி ஆகியவையும், நிலத்தை நிர்வகிக்கும் நோக்கில் பெருமளவில் காடுகள் தீயிட்டு அழிக்கப்பட்டதுமே இதற்கு காரணம் என அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்வகைய…
-
- 3 replies
- 3.5k views
-
-
டெல்லி: நாங்கள்தான் காந்தியை சுட்டுக் கொன்றோம். அதேபோல கெஜ்ரிவாலையும் சுட்டுத் தள்ளுவோம் என்று பேசி வந்த ஒரு சாமியார் வேட்பாளர் டெல்லி சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியைத் தழுவியுள்ளார். இவருக்கு வெறும் 373 ஓட்டுக்கள்தான் கிடைத்துள்ளன. அகில இந்திய இந்து மகாசபா சார்பில் புது டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிட்டவர் சுவாமி ஓம்ஜி. இவர் யார் என்றே நிறையப் பேருக்குத் தெரியவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தின்போது இவரது பேச்சு எல்லாமே வெறித்தனமாகவே இருந்தது. பாஜக தொப்பியைப் போட்டபடிதான் இவர் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டார். கெஜ்ரிவாலை இவர் தேச விரோதி என்றும் பேசினார். பிரசாரத்தின்போது இந்த ஓம்ஜி பேசுகையில், பாஜகதான் எனது கட்சி. அக்கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்…
-
- 0 replies
- 296 views
-
-
ஜோர்டான் விமானி வலியை உணராத வகையில் கொன்றோம்… ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள் [ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 12:23.32 பி.ப GMT ] ஜோர்டான் விமானியை கொல்வதற்கு முன்பு அவருக்கு மயக்க மருந்து அளித்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் சிறைபிடித்து வைத்திருந்த ஜோர்டான் விமானியை இரும்பு சிறையில் வைத்து உயிருடன் தீயிட்டு கொழுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் ஜோர்டன் மட்டுமின்றி உலக நாடுகளிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. எனவே தீவிரவாதிகளின் இக்கொடூர செயலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தங்கள் நாட்டின் விமானியை கொன்ற தீவிரவாதிகளை பழித்தீர்க்கும் வகையில் ஜோர்ட…
-
- 1 reply
- 398 views
-
-
பிரித்தானியாவை சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகளை ஆபாசமாக படம்பிடித்த நபரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த Devinder Kainth(Age 40) என்ற நபர் ஸ்பெயின் நாட்டிற்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். இவர் அங்குள்ள ஹொட்டல் ஒன்றில் உணவருந்தி கொண்டு இருந்த போது, இவருடைய மகளை நபர் ஒருவர் ஐபேட்டில்(IPad) படம் பிடிப்பதை பார்த்து கோபமடைந்துள்ளார். அப்போது அந்நபரிடமிருந்து ஐபேடை பறித்த Kainth, அதில் தனது மகளை பல கோணங்களில் படம் பிடித்திருப்பதை பார்த்ததும், ஐபேடை கீழே போட்டு உடைத்துள்ளார். இதனால் இருவருக்கும் எழுந்த வாக்குவாதத்தில், அந்நபரின் முகத்தில் Kainth பலமாக அடித்து தாக்கிவிட்டு ஹொட்டலை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து மயங்க…
-
- 2 replies
- 870 views
-
-
இறைதூதரை அவதூறு செய்யும் கேலிச்சித்திரங்களை வெளியிட்ட பிரான்ஸ் சஞ்சிகையான சார்ளி ஹெப்டோவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், லண்டனில் முஸ்லிம்கள் ஒன்று கூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மொன்றை நடத்தியுள்ளனர். டவுணிங் வீதிக்கு அப்பால் கூடிய மேற்படி ஆர்ப்பாட்டக்காரர்கள், 100,000 பிரித்தானிய முஸ்லிம்களின் கையொப்பங்களை உள்ளடக்கிய மகஜர் ஒன்றை பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தில் கையளித்துள்ளனர். மேற்படி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஆண்களும் பெண்களும் இணைந்து பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.அதனால் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் ஊர்வலமாக சென்றனர். அமைதியாக இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில் 1,000 பேருக்கும் அதிகம…
-
- 0 replies
- 267 views
-
-
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவின் பாதுகாப்புக்காக பிரிட்டனின் காவல் துறை ரூ.100 கோடி செலவிட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசு ரகசிய கோப்புகளை தனது விக்கிலீக்ஸ் வலைதளத்தில் அசாஞ்சே வெளியிட்டார். இது தொடர்பாக அமெரிக்கா இவர் மீது நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறது. இந்நிலையில், அவர் லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் கடந்த 2012ம் ஆணஅடு தஞ்சம் புகுந்தார். இதனிடையே, ஸ்வீடனில் 2 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக அவர் மீது அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. தூதரகத்தைவிட்டு அசாஞ்சே வெளியேறினால், பாலியல் வழக்கை சந்திக்க ஸ்வீடனுக்கு அவர் நாடு கடத்தப்படுவது நிச்சயம் என்ற நிலையில் அவர் தூதரகத்திலேயே தொடர்ந்து வசித்து வருகிறார். இதன் கார…
-
- 0 replies
- 195 views
-
-
சிலி நாட்டில் 53 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 34 பயணிகளுடன் ஓசார்னோவில் இருந்து சான்டியாகோவுக்கு சென்ற இந்த விமானம் கடந்த 1961ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி காணாமல் போனது. இந்த விமானத்தில் சிலியின் பிரபல கிரீன் கிராஸ் என்ற கால்பந்து அணியின் வீரர்கள், பயிற்சியாளர் உள்ளிட்டோர் இருந்தனர். இதனிடையில் சான்டியாகோவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மாலே பகுதியில் உள்ள மலையில் இந்த விமானத்தின் பாகங்கள் இருந்ததாக மலையேறும் வீரர்கள் அரசுக்கு தெரிவித்துள்ளனர். மலையில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தின் பாகங்களும், மனித எலும்புகளும், பல்வேறு பொருள்களும் சிதறிக் கிடந்தன. மலையேற்ற வீரர்கள் இதை வீடியோவாக படம் பிடித்து…
-
- 0 replies
- 163 views
-
-
ஏலத்துக்கு வந்தது சதாம் உசைனின் தூக்கு கயிறு: இதுவரை 92கோடி ரூபா ஏலத்தொகை சதாம் உசைனை தூக்கிலிட்ட கயிறு ஏலத்தில் விடப்பட்டதையடுத்து தற்போது வரை 92 கோடியே 96 இலட்சம் ரூபா வரை எட்டியுள்ளதோடு மேலும் ஏலத்தொகை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைன் கடந்த 1979ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டுவரை 24 ஆண்டுகள் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார். கடந்த 2003ஆம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியது. பின்னர் பண்ணை வீட்டில் பதுங்கு குழியில் பதுங்கியிருந்த சதாம் உசைனை அமெரிக்க இராணுவம் கைது செய்தது. 3 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு 2006 டிசம்பர் 30ஆம் திகதி அவர் தூக்கிலிடப்பட்டார். அவரது கழுத்தை இறுக்கிக் கொன்ற தூக்க…
-
- 2 replies
- 993 views
-
-
Posted Date : 17:00 (09/02/2015)Last updated : 17:09 (09/02/2015) மீரட்: ஆண் மரபணு கொண்ட பெண் ஒருவர் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ள மிகப்பெரிய சாதனை உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடந்துள்ளது. ஆண் மரபணு கொண்ட பெண் ஒருவர், மருத்துவர்களின் மருத்துவ உதவியுடன், கருவுறும் ஒர்அரிய வாய்ப்பை பெற்று இரண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள அந்த பெண், தான் தாயாக வேண்டும் என்ற கனவு நனவாக வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிகிச்சை வீண்போகாமல் அவரது கனவு தற்போது நனவாகியுள்ளது. இது ஆண் ஒருவர் இரட்டை குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமமான ஆச்சர்யம் என்று மலட்டுத்தன்மை…
-
- 0 replies
- 505 views
-
-
ஏயர் ஏசியா விமான விபத்தில் பலியான துணை விமானியின் சடலம் ஜாவா கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மலேசியாவுக்கு சொந்தமான ஏயர் ஏசியா விமானம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது ஜாவா கடல் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 162 பயணிகளும் பலியானார்கள். விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் கறுப்பு பெட்டியும் மீட்கப்பட்டிருந்ததுடன் பயணிகள் பலரின் சடலங்களும் மீட்கப்பட்டன. எனினும் மீட்கும் பணி தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இதுவரை 101 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் மீட்பு குழுவினர் விமானத்தில் பைலட்டுகள் அமரும் முன் பகுதியை கண்டுபிடித்தனர். அதற்குள் சென்று தேடிய போது ஒரு சடலம் கிடைத்த…
-
- 0 replies
- 353 views
-
-
சதாமுக்கு 30 நாட்களில் தூக்கு பாக்தாத்: ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை பாக்தாத் அப்பீல் கோர்ட் உறுதி செய்தது. தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அடுத்த 30 நாட்களுக்குள் அவருக்கு துõக்கு தண்டனை நிறைவேற்றப்படும். கடந்த 1982ம் ஆண்டு ஈராக் அதிபராக இருந்த நேரத்தில், துஜெய்ல் பகுதியில் 148 ஷியா பிரிவு முஸ்லிம்களை கொன்றதாக சதாம் <உசேன் மீது பாக்தாத் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வக்கீல்கள் படுகொலை மற்றும் நீதிபதிகள் மாற்றம் என பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி, கடந்த நவம்பர் 5ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சதாம் உசேன், சதாமின் சகோதரர் பர்…
-
- 77 replies
- 13k views
-
-
ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளான போது அதை பிரெஞ்சு துணை விமானியே இயக்கியதாக கருப்புபெட்டியின் ஒலிப்பதிவின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 72 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விமானத்தின் கருப்புப்பெட்டியில் உள்ள ஒலிப்பதிவினை ஆய்வு செய்த இந்தோனேசிய விசாரணை அதிகாரிகள் இந்த வாரம் ஐ.நா.வின் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பில் தங்களின் முதல் அறிக்கையை சமர்பித்துள்ளனர். இது தொடர்பாக நேற்று தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு வெளியிட்ட…
-
- 2 replies
- 1.2k views
-
-
பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் உள்ள வடகொரியா, தொடர்ந்து ஆயுதக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுகுண்டு சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் அந்த நாடு நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது அந்த நாடு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான படங்களும் வெளியாகி உள்ளன. ஒரு சிறிய கடற்படை கப்பலில் இருந்து, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்ட காட்சியை, வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் பார்வையிட்டதைக் காட்டும் படமும் வெளியாகி உள்ளது. இந்த ஏவுகணை, ரஷியாவின் கேஎச்-35 கப்பல் எதிர்ப்பு ஏவுகணையைப்போன்றே இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலம் வடகொரியாவின் கடற்படை பலம் கூடி உள்ளது. வடகொரியா சமீப காலம…
-
- 1 reply
- 443 views
-
-
ராணுவத்துடன் போரிட்டு ஏமன் நாட்டை கைப்பற்றிய தீவிரவாதிகள் பாராளுமன்றத்தையும் கலைத்தனர். ஏமனில் கடந்த 33 ஆண்டுகள் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி செய்தனர். அதனால் அவர் பதவி விலகினார். புதிய அரசு பதவி வகித்தது. அங்கு அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. எனவே அவர்களை அழிக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அவர்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வீச்சு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அல்கொய்தா இயக்கத்தின் தோழமை இயக்கமான ஹூயுதி தீவிரவாதிகள் சன்னி பிரிவு பழங்குடியினர் மற்றும் பொதுமக்களை தாக்கி கொன்று குவித்து வருகின்றனர். இவர்கள் ஈரானை சேர்ந்த ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார். பொதுமக்க…
-
- 0 replies
- 426 views
-
-
'எப்போது என்னைத் திருமணம் செய்துகொள்வாய்?' என்ற இந்த ஓவியம் உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியமாகும். பிரெஞ்சு நாட்டு ஓவியர் கோகென் வரைந்த ஓவியம் ஒன்று 300 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதுவரை விற்கப்பட்ட கலைப்படைப்புகளிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட படைப்பு இதுவாகும். 'எப்போது என்னைத் திருமணம் செய்துகொள்வாய்?' என்ற இந்த ஓவியத்தை 1892ல் கோகென் வரைந்தார். தாகித்தி தீவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அமர்ந்திருப்பது போன்ற இந்த ஓவியம் சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சேகரிப்பாளரிடம் இருந்துவந்தது. தற்போது கத்தாரில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்திற்கு இந்த ஓவியம் விற்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக, பால் செஸன்…
-
- 0 replies
- 372 views
-
-
லண்டன்: டாக்டரினால் கண்டுபிடிக்க முடியாத நோயை கூகுளில் தேடி தனக்கு வந்திருப்பது புற்றுநோய்தான் என்று உறுதி செய்துள்ளார் லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர். இங்கிலாந்தை சேர்ந்த சாதி ரான்ஸ் என்ற அந்த இளம்பெண் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். உறவினர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர் ‘இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம்' (ஐபிஎச்) எனும் குடல் நோய் இருப்பதாக சொல்லி சில மருந்துகளைக் கொடுத்தார். சில மாதங்களாக மருத்துவர் கொடுத்த மருந்தை சாப்பிட்டு வந்த போதும் வயிற்று வலி குறையவேயில்லை. இதனால் சந்தேகமடைந்த சாதி ரான்ஸ், மருத்துவரிடம் திரும்ப சென்றுள்ளார். அவரோ, இது உணவுப்பழக்கத்தால் வரக்கூடிய சாதாரண நோய் தான் என்று கூறி சமாதானம் செ…
-
- 0 replies
- 505 views
-
-
கனடாவில் அரசியல்வாதி ஒருவர் உட்பட ஐந்து பேருக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறொன்ரோவைச் சேர்ந்த 51 வயதான ரூபன் பாலராம்-சிவராம் என்ற நபரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்தனர். நேற்று கனடாவில் வெளியான செய்தி ஒன்றில், குறித்த சந்தேக நபர் மக்களை தொலைபேசி மூலம் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் மின்அஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களை அனுப்பியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த அச்சுறுத்தல்கள் பல வித்தியாசமான தரப்பட்ட மக்களிற்கு விடப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், பொது நபர்கள், அரசாங்கத்தில் உள்ளவர்கள், பிரபல்யங்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த அச…
-
- 0 replies
- 322 views
-
-
பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் வாட்ஸ் அப்பில் ஆபாச படம் பார்த்ததால் சட்டமன்றத்திற்கு வரும் எம்.எல்.ஏ.க்கள் செல்போன்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில், கர்நாடக மாநிலம் பெல்காவியில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் கரும்பு விலை நிர்ணயம் குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் வாட்ஸ் அப்பில் ஆபாசப் படங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அதே கூட்டத்தில் ஹவுரத் தொகுதி எம்.எல்.ஏ பிரபு சவான் பிரியங்கா காந்தியின் போட்டோவை ஜூம் செய்து படத்தை பார்த்துக் கொண்டிருந்ததும் வீடியோவில் பதிவாகியிருந்தது. அதே நாளில், மற்றொரு கட்சியை சேர்ந்த யூ.பி.பனாகர் எம்.எல்.ஏ தனது மொபைலில் 'கேண்டி க்ரஷ் சாகா' கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.…
-
- 2 replies
- 433 views
-
-
உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டை கோபுர தாக்குதல் பின்னணியில் சவூதி அரச குடும்பம் இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஷகாரியாஸ் மொசாய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் இவரும் ஒருவர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் தற்போது அமெரிக்காவின் கொலோரபோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது இவர் நீதி மன்றத்தில் வாக்கு மூலம் அளித்தார். அதில் அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த த…
-
- 1 reply
- 364 views
-