Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள வாட்டர் டவுன் மற்றும் தெற்கு டகோட்டா பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் வீட்டு மேற்கூரைகளில் 3 அடி அளவிற்கு பனி படர்ந்துள்ளது. நாட்டில் கடும் குளிர் நிலவும் பகுதியாக எஸ்ட்கோர்ட் ஸ்டேஷன் உள்ளது. அங்கு வரலாறு காணாத அளவுக்கு வானிலை மோசமடைந்த நிலையில், நேற்று மைனஸ் 39 டிகிரியாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.கடும் பனியின் காரணமாக வாகனங்களில் உள்ள பெட்ரோல் உறைந்து போவதால் போர்ட்லேண்ட், சிகாகோவில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் ரயில் மற்றும் விமானப்போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. http…

  2. ரொறொன்ரோ- பாராளுமன்ற ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அதிகாரி செவின் விக்கெர்ஸ் அயர்லாந்தின் அடுத்த கனடிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபரில் தேசிய போர் நினைவகத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சந்தேக நபரான Michael Zehaf-Bibeau ஐ கொன்றதால் பாராட்டப்பட்டவர். கீழ்ச்சபையில் இவரது துணிகர நடவடிக்கைகளுக்காக உணர்ச்சி பூர்வமாக அனைவராலும் எழுந்து நின்று கைதட்டலுடன் பாராட்டு பெற்றவர். அத்துடன் உலக பிரபலங்கள் ஊடக பிரபலங்கள் அனைவராலும் கூட சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றவர். பாராளுமன்றத்தை விட்டு விலகுவது கவலையாக இருப்பதாக தெரிவித்த கெவின் கடந்த சில மாதங்களாக தனக்கு ஆதரவு தந்ததற்காக கனடிய மக்களிற்து நன்றியை தெரிவித்தார். அயர்லாந்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது நாட…

    • 0 replies
    • 457 views
  3. ஒட்டாவா- பரிசில் இடம்பெற்ற படுகொலைகளிற்கு பதிலளிக்கையில் கனடிய பிரதம மந்திரி Stephen Harper ஜிஹாத் இயக்கம் கனடா மற்றும் பிற ஜனநாயக நாடுகளில் யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளன. இதில் தேர்வுரிமை இல்லை எதிர்கொண்டு சமாளிக்க முகம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர்கள் விரும்பிய வண்ணம் செயற்படாதவர்கள் மற்றும் சிந்திக்காதவர்கள் மீது ஜிஹாதியர்கள் போர் பிரகடனம் செய்வர் என பிரதமர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாங்கள் இதை விரும்பாமல் போகலாம் ஆனால் இது போகப்போவதில்லை யதார்த்தம் என்னவென்றால் நாம் இதனை எதிர்கொள்ள போகின்றோம் என பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற தொழில்பயிற்சி திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்ப…

    • 0 replies
    • 494 views
  4. பிரெஞ்சு நகரங்கள் சிலவற்றின் இணையத் தளங்கள் பயங்கரவாதிகளால் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பரிசுக்கு அண்மையில் உள்ள Goussainville, Ezanville ஆகிய நகரங்களின் இணையத் தளங்கள் பின்வருமாறு காட்டப்படுகிறது. http://www.lefigaro.fr/actualite-france/2015/01/08/01016-20150108LIVWWW00308-en-direct-Charlie-Hebdo-traque-freres-kouachi-attentat.php#235833

  5. ஒவ்வொரு இந்து மதப் பெண்ணும் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி. சாக்சி மகராஜ் பேசியுள்ளது மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எம்.பி. சாக்சி மகராஜ், இந்து மத ஒற்றுமையைப் பலப்படுத்த ஒவ்வொரு இந்து மதப் பெண்ணும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். முந்தைய காலத்தைப் போல ஒரு ஆணுக்கு 4 மனைவிகள் 40 குழந்தைகள் எல்லாம் இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று கூறியுள்ளார். இதனால் மீண்டும் சாக்சி மகராஜ் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பசுவைக் கொல்பவர்களையும், மதம் மாறுபவர்களையும் மரண தண்டனைக்கு ஈடான தண்டனை கொடுத்து தண்டிக்க வேண்டும் என…

  6. பாரிஸ் தாக்குதலில் கொல்லப்படோர்க்கு அஞ்சலி நிகழ்வு பிரான்சில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மானுவெல் வால்ஸ் கூறியிருக்கிறார். நையாண்டி இதழான , " சார்லி எப்தோ" மீது நடத்தப்பட்ட துப்பாக்கித்தாக்குதல் சமப்வம் தொடர்பாக போலிசார் இரண்டு சகோதரர்களைத் தேடிவருகின்றனர். சேட் அண்ட் ஷெரிப் குவாச்சி ஆகிய இரு சந்தேக நபர்களையும் ஏற்கனவே உளவுத்துறையினர் தெரிந்தே வைத்திருந்தார்கள் வால்ஸ் கூறினார். ஷெரிப் குவாச்சி இரக்குக்கு ஜிஹாதி போராளிகளை அனுப்பியது தொடர்பான வழக்கொன்றில் ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தார். பிரான்ஸ் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இந்த இரண்டு பேருடன் தொடர்புடைய ஏழு பேர் தடுத்து வை…

  7. டாக்கா வங்காள தேச கிரிக்கெட் வீர ருபல் ஹூசைன் ( வயது 24) வேகப்பந்து வீச்சாளர். இவர் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வங்காள தேச அணி சார்பில் தேர்வு செய்யபட்டு உள்ளார்.ஹூசைன் வங்காள தேச்சத்துக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். 53 ஒரு நாள் போட்டிகளில் 69 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார் நியூசிலாந்துக்கு எதி போட்டி ஒன்றில் ஹாட்ரிக் எடுத்து உள்ளார். வங்காள தேச நடிகை நஸ்னின் அக்தர் ஹேப்பி( வயது 19) இவர் ஆசா போல பாசா என்ற படத்தில் நடித்து உள்ளார். ஹேப்பியும் - ஹூசைனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ஹூசைன் தன்னை திருமணம் செய்து கொள்…

  8. பிரான்ஸ் நாட்டின் லயான் நகரத்தில் உள்ள உணவகத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில் 2 ஆவது நாளாக தீவிரவாதிகள் 2 இடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் பாரிஸ் நகரத்தில் மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் அதிகாரி இருவர் காயமடைந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள சார்ளி ஹெப்டோ என்ற வாராந்த பத்திரிகை நிறுவனத்தின் மீது நேற்று ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/01/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E…

  9. அமெரிக்காவும் வட கொரியாவும் முட்டிக்கிட்டு இருக்கிற விஷயம் எல்லாருக்கும் தெரியும். அது பத்தி ஒரு சின்ன முன்னோட்டம் பாப்போம். அமெரிக்க நிறுவனமான சோனி, ”தி இண்டர்வியூ” அப்படீங்கிற திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று தடை வித்திச்சுது வட கொரியா. காரணம், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இண்டர்வியூ எடுக்கிற மாதிரி போய் கொலை பன்றது தான் அந்தப் படத்தோட கதை. இந்த படத்தை வெளியாகிறதுக்கு கொஞ்சம் முன்னாடி, சோனியோட கம்பியூடர்ஸ்லாம் ஹேக் செய்யப்பட்டுச்சு. இதுக்கு காரணம், வட கொரியா தான்னு அமெரிக்கா குற்றம் சொல்லுச்சு. இத வட கொரியா மறுத்ததோட அமெரிக்காவோட ரெட்டை கோபுரம் உள்ளிட்ட கட்டிடத்தை எல்லாம் தரைமட்டாமாக்குவோம் அப்படின்னு மிரட்டலும் விட்டுச்சு. ஆனா அதை எல்லாம் கண்டுகாம…

  10. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானைச் சரணடைய வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அமெரிக்கா, அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் முறையே 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9-ல் அணுகுண்டுகளை வீசியது. இந்த இரண்டு கொடூரச் சம்பவங்களிலும் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கதிரியக்கத்தின் காரணமாகக் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தார்கள். அந்தக் குழந்தைகளில் ஒருவர்தான் சடாகோ சசாகி. 1943 ஜனவரி 7-ல் பிறந்தவர் அவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது சகாகிக்கு இரண்டே வயதுதான். ஹிரோஷிமாவின் மிசாசா பாலத்துக்கு அருகில் சசாகியின் வீடு இருந்தது. அதாவது, அணுகுண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 1.7 கி.மீ. தொலைவில். குண்டுவிழுந்த அதிர்ச்சியில் வீட்…

  11. சிங்கப்பூரின் ஒரு பகுதி பல இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் நாடு. ஆனால் அந்த நாட்டுக்குப் பெயர் கொடுத்தது ஒர் இந்திய மொழிதான். `சிங்க நகரம்’ என்ற பொருளைத் தரும் சமஸ்கிருத வார்த்தைதான் சிங்கப்பூர். எல்லாமே இருக்கும் நாடு. எதுவுமே இல்லாத நாடு. இந்த இரண்டுக்கும் உதாரணங்கள் கொடுக்கச் சொன்னால் நீங்கள் ஒரே ஒரு உதாரணம் கொடுத்தால் கூடப் போதும். சிங்கப்பூர் மேற்படி இரண்டு விளக்கங்களுக்குமே பொருந்தக் கூடிய நாடு. எப்படி என்பதைப் பிறகு பார்ப்போமே. ஒரு முக்கியத் தீவு, 63 மிகச் சிறிய தீவுகள் - இவைதான் சிங்கப்பூர். சிறிய தீவுகளில் பெரும்பாலானவை மக்கள் வசிக்காதவை. தொன்மைக் காலத்தைச் சேர்ந்த பிரபல வானியல் நிபுணர் தாலமின் `சபனா’ என்று குறிப்பிட்டிருப்பது சிங்கப…

    • 6 replies
    • 2.4k views
  12. நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு இவ்வாறு செனல்4 ஊடகத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி நாட்டுக்குள் பிரவேசித்த செனல்4 ஊடகம், இலங்கைக்கு விரோதமான ஆவணப்படங்களை தயாரித்துள்ளது என வெளிவிவார அமைச்சு அறிவித்துள்ளது. போலி ஆவணப்படங்களின் மூலம் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்குள் பிரவேசிக்க செனல்4 ஊடகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளைää இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட அதிகளவான இந்திய ஊடகங்கள் அனுமதி …

  13. இந்தியக் கொங்கிரஸ் அரசின் முன்னால் அமைச்சரும், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டினை அடுத்து தனது ஐ. நா வுக்கான ராஜதந்திரி என்கிற பொறுப்பை இராஜினாமாச் செய்தவரும், கேரளத்தை சேர்ந்தவருமான சஷி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் ஒரு வருடத்திற்கு முன்னர் தில்லி நட்சத்திர விடுதியொன்றில் இறந்து கிடக்கக் காணப்பட்டார் என்பது நாம் அறிந்தது. ஆரம்பத்தில் இது அளவுக்கதிகமாக மருந்துகளை உட்கொண்டதால் ஏற்பட்ட மரணம் என்று பொலீஸ் நம்பியிருந்தது.ஆனால் பொலீஸின் இந்த நம்பிக்கைக்கு மத்தியிலும், இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று பலரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், மரணமாவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் டுவிட்டர் தளத்தில் சஷி தரூரும், சுனந்தாவும் ஒருவர் மேல் ஒருவர் குற்…

  14. இந்தியாவின் தென் பகுதியில் காணப்பட்ட அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக, மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த ஏயார் ஏசியா விமானம், கொழும்புக்கு திசைதிருப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை 7.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையவேண்டிய ஏ.கே11 என்ற விமானமே கொழும்புக்கு திசைதிருப்பப்பட்டது. 168 பிரயாணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் முற்பகல் 11.15 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.canadamirror.com/canada/36374.html#sthash.2vOqAZM6.dpuf

  15. சிஞ்ஞார் முற்றுகையை தகர்த்த குர்துக்கள் - காணொளி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகின் மிகப் பழைய மதங்களில் ஒன்றை பின்பற்றும் யஸிடிகளின் வாழ்விடமான சிஞ்ஜாரை, இஸ்லாமிய அரசு அமைப்பு கடந்த ஆகஸ்டில் கைப்பற்றியது. அதனையடுத்து அந்த நகரில் இருந்து துரத்தப்பட்டு, சிஞ்ஜார் மலைகளுக்கு இடம்பெயர்ந்த பல்லாயிரம் மக்கள் அங்கு தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மலையிலும் அவர்கள் இஸ்லாமிய அரசால் துன்புறுத்தப்பட்டனர். நகரம் தொடர்ந்தும் முற்றுகையில் இருந்துவந்தது. அந்த முற்றுகையை முறியடித்த குர்து போராளிகள் அந்த நகரில் கால்வாசியை இப்போது கைப்பற்றியுள்ளார்கள். அதனையடுத்து அங்கு சென்று வர பிபிசி குழு ஒன்றுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அனுப்பிய காணொளி. இணைப்பை அழுத்தி ஒளி நாடாவைப்…

    • 0 replies
    • 398 views
  16. கனடாவில் தாயின் அன்பால் உயிர் பிழைத்த உலகின் மிகச்சிறிய குழந்தை ஒன்று, வெற்றிகரமாக தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. கனடாவின் சர்ரே நகரில் வசித்து வரும் பவுல்- மோரிஸ் தம்பதிக்கு 635 கிராம் எடையுடன், கடந்தாண்டு உலகின் மிகச் சிறிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மோரிஸ் கருவற்று 20 வாரங்களிலேயே வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது கர்ப்பப்பையிலிருந்த தண்ணீர் வெளியேறிவிட்டதாகவும் கருவை கலைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மோரிஸின் அன்பு கொண்ட தாயுள்ளமோ குழந்தையைக் கொல்ல பிடிவாதமாக மறுத்து விட்டது. இதனையடுத்து ஐந்து வாரங்கள் கழித்து குழந்தையைப் பிரசுவித்த போது, கைக்குள் அடங்கும் வகையில் சுமார் 635 எடையுடன் பிறந்துள்ளது. இக்குழ…

  17. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சுவிஸ் தமிழீழ உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் என்ற மாபெரும் நிகழ்வானது கடந்த 1ம் திபதி சூரிச் மாநிலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. 2000 மேற்பட்ட மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடனும் சுவிஸ் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பேராதரவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் 16வது தடவையாக சுவிஸ் தமிழர் நடாத்திய இம் மாபெரும் புத்தாண்டு நிகழ்வானது, நிகழ்வுச்சுடர், பொதுச்சுடரேற்றலுடன், ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட உயிர்களிற்கான பத்தாம் ஆண்டு நினைவாகவும், ஏனைய அனர்த்தங்களினாலும் கொல்லப்பட்டவர்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப…

  18. சர்வதேச அளவில் 2009 ஆண்டுக்கு பிறகு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. எண்ணெய் சந்தைக்கு இந்த ஆண்டு மோசமான தொடக்கமாக அமைந்துள்ளதாக எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில மாதங்களாகவே கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தைகளில் வரலாறு காணாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. சர்வதேச எண்ணெய் நிறுவன கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எண்ணெய் உற்பத்தியை குறைக்காமல் இருப்பதால் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைய நேரிட்டுள்ளது. இந்த வீழ்ச்சி பங்குச்சந்தை மற்றும் தங்கம் வெள்ளி விலைகளை வெகுவாக பாதித்துள்ளது. இந்த விலைச் சரிவால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல எண்ணெய் நிறு…

  19. ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாவா கடலில் 162 பயணிகளுடன் மூழ்கிய ஏர் ஏசியா விமானத்தின் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே இந்தோனேசியா கடற்படை ரோந்து கப்பல் ஒன்று விமானத்தின் பின்பகுதியைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கண்டுபிடிக்கப்பட்ட கறுப்பு பெட்டி ஏர் ஏசியா விமானத்தினுடையதா என உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா என்ற இடத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த குறித்த விமானம் மோசமான வானிலை காரணமாக அது திசை மாறிச் சென்று காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இணைப்பு விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமான…

  20. நியூஸிலாந்தில் பாரிய பூமியதிர்ச்சி 06-01-2015 09:14 AM நியூஸிலாந்தின் தென் தீவு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அதிகாரிகள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளது. கிறிஸ்சேர்ச்சின் மேற்குப்பகுதியிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஆர்தூர் பாஸ் பகுதிக்கு அருகில் இந்த பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. இந்த பூமியதிர்ச்சியில் காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்களோ அல்லது சேத விபரங்கள் பற்றியோ உடனடியாக தெரியவரவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது இவ்வாறிருக்க, 2011ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் இடம்பெற்ற பூ…

  21. யு.எஸ்.-கலிபோர்னியாவில் உள்ள வீடொன்றில் பிறந்து 3-வாரங்களே ஆன குழந்தையொன்றின் பெற்றோர் மற்றும் வேறு ஒருவரையும் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய பின்னர் குழந்தை கடத்திச்செல்லப்பட்டது. கடத்திச் செல்லப்பட்ட சிசு இறந்து கிடந்து கண்டு பிடிக்கப்பட்ட துயர சம்பவம் நடந்துள்ளது. அதிகாரிகள் சந்தேக நபரை தேடிவருகின்றனர். கடத்திச்செல்லப்பட்ட குழந்தை குப்பைத் தொட்டி ஒன்றிற்குள் கிடந்து அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். “இந்த கொடூர குற்றங்களை செய்த சந்தேக நபர” வெளியில் நடமாடுவதாக பொலிசாரின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடொன்றில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக பொலிசாருக்கு கிடைத்த அழைப்பின் பேரில் அங்கு சென்றபோது இரு சகோதரர்களும் குழந்தையின் தாயும் துப்பாக்கி சூட்டு காயங…

    • 0 replies
    • 468 views
  22. சீனாவில் இஸ்லாமியவாத தீவிரவாதம் - காணொளி 7 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் தீவிரவாத இஸ்லாத்தின் அச்சுறுத்தல் அதிகரிப்பதாக சீன அரசாங்கம் கூறுகிறது. 2014இல் பெரும்பாலும் முஸ்லிம்களைக் கொண்ட வீய்கர் இன சிறுபான்மையினரின் மேற்கு மாகாணமான, சின்சியாங்கில் அமைதியீனத்தை கையாள அரசாங்கம் முயற்சித்தது. அங்கு போலிஸ் செலவு இரட்டிப்பாக்கப்பட்டு, பல வீய்கர் இனத்தவர் கைது செய்யப்பட்டும் அங்கு வன்செயல்கள் ஓயவில்லை. அந்த சிறுபான்மை இன மக்களின் மசூதிகள் நிர்மூலம் செய்யப்பட்டதால் அவர்கள் பழிவாங்க முற்படுவதாகவும் கூறப்படுகின்றது. அந்தப் பகுதிக்கு செல்ல பிபிசிக்கு அபூர்வமான ஒரு வாய்ப்பு கிட்டியது. அப்போது தயாரிக்கப்பட்ட காணொளி யைக்காண கீழுள்ள இணைப்பை அழுத்தி காணலாம் http://www.bbc.c…

    • 0 replies
    • 486 views
  23. சவுதி எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் இராக்குடனான எல்லைப் பகுதியில் மிகவும் அபூர்வமான வகையில், சவுதி அரேபியவின் எல்லைப் பாதுகாப்பு ரோந்து படையினரை இலக்குவைத்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியா தனது எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுஇதில் சவுதி அரேபியாவின் எல்லைப்புற ரோந்துப் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் அப்படையின் மூத்த தளபதியும் ஒருவரென உள்துறை அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அந்த எல்லைப்புற ரோந்துப் படையினர் மீது முதலில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டு பின்னர் தற்கொலைத் தாக்குதலும் இடம்பெற்றுள்ளன. தாக்குதலை நடத்திய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சவுதி எல்லையில் இராக்கியப் பாதுகாப்புப் படையினர்இதையடுத்து இ…

  24. ஹைதராபாத்: ஒவ்வொரு இந்தியனும் முஸ்லீமாகவே பிறப்பதாகவும், பின்னரே மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதாகவும் மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லீமன் கட்சி தலைவரான அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். ஹைதராபாத் தொகுதி எம்.பி.யான அசாதுதீன் ஓவைசி அதிரடியான கருத்துக்களை கூறி அவ்வப்போது பரபரப்பை கிளப்புபவர். இந்நிலையில் 'வீடு திரும்புதல்' என்ற பெயரில் இந்து மத அமைப்புகள் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை மதமாற்றம் செய்யும் நிகழ்ச்சிகள் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அசாதுதீன் ஓவைசி, ஒவ்வொருவரும் முஸ்லீமாகவே பிறந்து அதன்பின்னரே பிற மதங்களுக்கு மாற்றப்படுகின்றனர் என்றார். மேலும் "இந்தியா இந்து நாடு" என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதை குறிப்பிட்டுப் பேசிய அசாதுதீன், " …

  25. சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் திருநங்கை மேயராக தேர்வானார்! [Monday 2015-01-05 19:00] சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார்க் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் மது கின்னார் (35) என்ற திருநங்கை போட்டியிட்டார். இவர் பாஜக வேட்பாளர் மகாவீர் குருஜி என்பவரை 4,537 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் நாட்டிலேயே மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையை மது கின்னார் பெற்றுள்ளார். தனது வெற்றி தொடர்பாக மது கின்னார் கூறுகையில், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த வெற்றியை மக்கள் எனக்கு வழங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.