உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
போர்பந்தர்: குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் கடல்பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை தடுத்து நிறுத்தியது. இந்திய கடற்படை நெருங்கிய நிலையில் திடீரென அக் கப்பல் வெடிவைத்து தகர்த்தக்கப்பட்டது. அதில் இருந்த 4 பேரும் தீவிரவாதிகள் என்று தெரியவந்துள்ளது. குஜராத்தின் நீண்ட கடல்பகுதி வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளை நடத்துவதாக உளவுத்துறை பலமுறை தெரிவித்திருந்தது. அத்துடன் கராச்சியில் இருந்து மீன்பிடிக் கப்பல் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கப்பல் ஒன்று குஜராத்தை நோக்கி வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதனால் குஜராத் கடல் பகுதியில் கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. இந்த ந…
-
- 3 replies
- 584 views
-
-
ஒட்டாவா- 2015-ல் கனடிய குடியுரிமை பெறுவதற்கான செலவு மேலும் அதிகரிக்கப்படுகின்றது. ஒரு வருடத்தில் இரண்டாவது தடவையாக கொன்சவேட்டிவ் அரசாங்கம் ஒருவர் குடியுரிமை பெறுவதற்கான கட்டணத்தை அதிகரிக்கின்றது. குடியுரிமை விண்ணப்பங்களை செயலாக்கம் செய்வதற்கான புதிய கட்டணம் ஜனவரி மாதம் 1-ந்திகதியிலிருந்து 530-டொலர்களாக அதிகரிக்கப்படுகின்றது. கடந்த பிப்ரவரி மாதம் இக்கட்டணம் 300-ஆக அதிகரிக்கப்பட்டது. குடிமக்களாக இருப்பதற்கு அதற்கான செயலாக்கம் தொடர்பான செலவின் பெரும் பகுதியை அவர்கள் செலுத்த வேண்டும் என அரசாங்கம் கருதுவதாக தெரியவருகின்றது. புதிய கட்டண பகுப்பாய்வு ஒன்றில் அதிகரித்த கட்டணம் செயலாக்க கட்டண செலவான 555-டொலர்களையும் ஏறக்குறைய ஈடுசெய்யும் என குடியுரிமை மற்றும் குடிவரவு திணைக…
-
- 0 replies
- 497 views
-
-
பெங்களூரு: அணு குண்டு தயாரிப்பதற்காக விடுதலை புலிகள் இயக்கம் வைத்திருந்த சிவப்பு பாதரசம் என்று பொய் சொல்லி சாதாரண கல்லை ரூ.150 கோடிக்கு விலைபேசிய பலே மோசடிக்காரர்கள் மூவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் ஒரு கும்பல், சிவப்பு பாதரசம் என்ற பெயரில் ஒரு பொருளை விற்பனை செய்ய முயலுவதாக நகர குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மோசடி நபர்களை கையும், களவுமாக பிடிக்கும் நோக்கத்தில், மாறுவேடத்தில்,, வாடிக்கையாளரை போல அந்த மூன்று பேரையும் அணுகினர் போலீசார். அப்போது, அந்த நபர்கள் கூறிய தகவல் போலீசாருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கம், அணு குண்டை தயாரிக்க சோவியத் ரஷ்யாவிடமிருந்து குறிப்பிட்ட மூலப்பொருளை வாங்கியதாகவும், இய…
-
- 3 replies
- 872 views
-
-
32 இணையதளங்களை இந்திய அரசு "தடை" செய்தது சரியா? இந்திய அரசின் இணையதளங்கள் மீதான "தடை"யால் சர்ச்சைஇந்தியாவுக்குள் இணைய சேவை வழங்கும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 32 இணையதளங்களை தடை செய்யுமாறு, இந்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக, இணைய சுதந்திரத்திற்கான செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த இணையம் மற்றும் சமூகத்திற்கான மையம் என்கிற இணைய சுதந்திரத்திற்கான தன்னார்வ தொண்டு அமைப்பு இந்திய அரசு தடை செய்திருப்பதாக கூறப்படும் 32 இணையதளங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது. அதில் பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தும் காணொளிகளுக்கான இணையதளங்கள் உள்ளிட்ட பல பிரபல இணையதளங்களின் பெயர்கள் இருக்கின்றன. அவை தவிர, உலக அளவில் இணைய ஆவணப்படுத்தலுக்கு…
-
- 0 replies
- 446 views
-
-
ஆஸ்திரேலியே கடற்கரைகளில் சூரிய குளியல் படுக்கைகளில் படுத்துக்கொண்டு நிறத்தை கறுக்க செய்யும் முறைக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது. புத்தாண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மானியா, குயின்ஸ்லாந்து, சிட்னி ஆகிய கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்பட்டு வந்த செயற்கை சூரிய குளியல் படுக்கைகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை ஆஸ்திரேலிய புற்றுநோய் ஆணையம் வரவேற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் 70 வயதை கடந்த 3-ல் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கபடுகின்றனர். இதனால் சூரிய குளியல் படுக்கைகளுக்கு தடை விதிப்பதன் மூலம் தோல் புற்றுநோயை தடுக்க முடியும் என்று அந்த ஆணையம் ஆஸ்திரேலிய அரசுக்கு அறிவுறுத்தி வந்…
-
- 8 replies
- 3.4k views
-
-
பெய்ரூட்: தாங்கள் பிடித்து வைத்துள்ள ஜோர்டானைச் சேர்ந்த விமானியை எவ்வாறு கொலை செய்வது என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ட்விட்டரில் மக்களிடம் கருத்து கேட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோர்டானைச் சேர்ந்த விமானி முவாத் அல் கசீஸ்பெஹ்(26) என்ற மாவோஸை பிணையக் கைதியாக பிடித்தனர். விமானப் படை விமானியான அவர் தனது விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சிரியாவின் ரக்கா நகரில் தரையிறங்கினார். அப்போது தான் அவர் தீவிரவாதிகளிடம் சிக்கினார். தீவிரவாதிகள் விமானியை பேட்டி கண்டு அதை தங்களின் மாதாந்திர பத்திரிக்கையில் வெளியிட்டனர். அந்த செய்தியை அவர்கள் இணையதளத்தில் ஆங்கிலத்திலும் வெளியிட்டனர். இது குறித்து கருத்து தெர…
-
- 0 replies
- 325 views
-
-
கனடிய மக்கள் நடுஇரவு எதிர்கொள்ளும் 2015-ம் ஆண்டு ஆரம்பத்துடன் காட்டெருமை வேட்டயாடுதல் முதல் புதிய புகைத்தல் தடை சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கனடா முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. சில கனடியர்கள் தங்கள் பொக்கெட்டுகளில் மேலதிக பணத்தை பார்க்க கூடியதாக இருக்கும். வேறு சிலர் தாங்கள் எங்கே புகைப்பிடிக்க முடியும் எப்படி புதிய செல்லப்பிராணிகளை சொந்தமாக்க முடியும் அல்லது எதனை வேட்டையாட முடியும் என்பன வற்றிற்கான புதிய சட்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். 2015-ஜனவரி 1-ந்திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்கள்: ரயில் கப்பல்கள் சம்பந்தமான புதிய சட்டம்: 2013 யூலை மாதம் கியுபெக்கில் இடம்பெற்ற கொடிய ரயில் விபத்து காரணமாக புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் ஜ…
-
- 0 replies
- 329 views
-
-
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர், 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உலகமெங்கும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது, மக்கள் வெகு உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். இதேபோன்று சீனாவில் செங்காய் நகரில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பிரபல்யமான சென்யி சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நேரத்தில் அமெரிக்க டொலர் போன்ற கூப்பன்கள் மாடியில் இருந்து வீசப்பட்டுள்ளது. மக்கள் இதனை எடுப்பதற்காக முந்தி சென்ற போது, கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த துயர சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவருமே மா…
-
- 0 replies
- 351 views
-
-
உக்ரேனிடமிருந்து கிறிமியாவை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கைப்பற்றியது அவர் செய்த பெரிய தவறு என்றும் அந்த வகையில் புட்டின் அப்படியொன்றும் பெரிய புத்திசாலி கிடையாது எனவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். என்.பி.ஆர். வானோலிச் சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.புட்டின் சிறந்த அறிவாளி என்றிருந்த மதிப்பீட்டை ரஷ்யா தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் பொய்யாக்கியுள்ளதாக ஒபாமா குறிப்பிட்டார். ரஷ்யா மீதான சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் மோசமான வீழ்ச்சியாலும் ரஷ்யப் பொருளாதாரம் கடும் பாதிப்புக்குள்…
-
- 2 replies
- 520 views
-
-
ஜகார்தா இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூர் நகருக்கு ஏர் ஏசியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம் கடந்த 28-ந் தேதி காலை புறப்பட்டுச் சென்றது. அதில் விமான ஊழியர்கள் 7 பேரும், 155 பயணிகளும் இருந்தனர். இதில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 149 பேரும், தென்கொரியர்கள் 3 பேரும், இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தலா ஒரு பயணியும் இருந்தனர். இவர்களில் 17 பேர் சிறுவர்-சிறுமிகள். இந்தியாவைச் சேர்ந்த பயணிகள் யாரும் இதில் பயணம் செய்யவில்லை. இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜாவா கடல் பகுதியில் பறந்தபோது விமான கட்டுப்பாட்டு மையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. தொடர்ந்து விமானம் பற்றிய தகவல் எதுவு…
-
- 4 replies
- 832 views
-
-
கனடா- எட்மன்டனில் இரு இளம் பிள்ளைகள் உட்பட்ட ஒன்பது பேர்களின் உயிர்களை குடித்த கொடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை ஒரு முட்டாள் தனமான பாரிய படுகொலை என தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இப்படுகொலைகள் மூன்று இடங்களில் ஒரே நபரால் செய்யப்பட்டுள்ளது. இவை ஒரு குழு சம்பந்தப்பட்டதல்ல எனவும் மாறாக உள்நாட்டு வன்முறையான சோக சம்பவம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு ஒரு பெண் எட்மன்டன் தெற்கில் உள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சில மணித்தியாலங்களின் பின்னர் ஒரு இளம் பெண் மற்றும் பையன் இவர்களுடன் இரு ஆண்களும் 3-பெண்களும் நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப் பட்டனர்.அன்றய தினம் மாலை அதிகாரிகள் ஒரு தற்க…
-
- 0 replies
- 764 views
-
-
கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பிரிட்டன் கடற்கரை பகுதிகளில் வீடுகள் உட்பட சுமார் 7,000 கட்டிடங்கள் வரை கடல் அரிப்பினால் அழிந்து விடும் ஆபத்து உள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் அடுத்த 20 ஆண்டுகளில் 800 கட்டிடங்களை கடல் நீர் முழ்கடித்து விடும் என்றும் அந்த ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டில் மட்டும் சுமார் 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துக்கள் கடலின் ராட்சத அலைகளால் பிரிட்டன் இழக்க நேரிடும். 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் யார்க்ஷயர் முதல் கெண்ட் வரையிலுள்ள கடற்கரைப் பகுதிகளை மிகப்பெரிய ராட்சத அலைகள் தாக்கியதில் சுமார் 1,400 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் பல வீடுகள் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன. இதனையடுத்து இந…
-
- 7 replies
- 616 views
-
-
2015ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது பொன்விழாவை கொண்டாடுவதை குறிக்கும் வகையில் அடுத்த ஆண்டில் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்க அந்நாட்டின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிங்கப்பூர் நகர் அடுத்து ஆண்டு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களின் நாளாந்தத் தேவைக்குப் பயன்படும் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுப்பெட்டி வழங்கப்படும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நான் ஒரு பொன்விழாக் குழந்தை" என்று குறிப்பிடும் குழந்தையின் ஆடைகள் உள்ளிட்ட பரிசுகளும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மறக்கமுடியாத தருணங்களை பதிவு செய்ய ஒரு நோட்டுப் புத்தகமும், நினைவு பதக்கமும் வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் வாழும் அ…
-
- 7 replies
- 731 views
-
-
ஏர் ஏசியாவை குறி வைக்கும் "கருப்புக் கரம்"... முன்கூட்டியே எச்சரித்த சீன பிளாக்கர்! பெய்ஜிங்: இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் கிளம்பி பாதி வழியிலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி 162 பேரின் உயிரைப் பறித்துள்ள ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகும் என்று முன்கூட்டியே தனது பிளாக்கில் எழுதிய சீனரால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. ஏர் ஏசியா விமானத்தை ஒரு "கருப்புக் கரம்" குறி வைத்துள்ளதாக டிசம்பர் 15ம் தேதி தனது பிளாக்கில் எழுதியுள்ளார் இந்த பிளாக்கர். இவரது பெயர் விவரம் தெரியவில்லை. இவரே மர்ம மனிதராகவும் இருக்கிறார். இவரது பிளாக்கில் உள்ள எழுத்துக்கள்தான் இப்போது பெரும் பரபரப்பாகியுள்ளன. ஏர் ஏசியாவை குறி வைக்கும் டிசம்பர் 15ம் தேதி இவர் வெளியிட்ட ஒரு போஸ்ட…
-
- 0 replies
- 756 views
-
-
கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்த 40 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி காணாமல் போன இந்த விமானத்தின் பாகங்கள், ஜாவா கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது. ஏர்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த கியூஇசட் 8501 என்ற எண் கொண்ட ஏர் ஏசியா விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 5.31 மணிக்கு இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த அந்த விமானத்தை முதன்மை விமானி இரியாண்டோ இயக்கினார். அவருடன் இணை விமானி ரெமி இம்மானுவேல் ப்லீசெல் இருந்தார். இந்தோனேசியாவைச் சேர்ந்த 144 பேரும், சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், தென்கொரியா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என காணாமல் போன ஏர் ஏசிய…
-
- 1 reply
- 447 views
-
-
http://youtu.be/mwbgccVxr3s இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு எபோலா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்காவில் இருந்து கிளாஸ்கோ திரும்பிய குறித்த பணியாளருக்கு எபோலா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சியாரா லியோனில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய குறித்த பெண், தற்போது கிளாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். வட லண்டனில் உள்ள எபோலா தாக்கத்திற்கு சிகிச்சையளிக்கக்கூடிய வசதிகொண்ட மருத்துவமனை ஒன்றுக்கு விரைவில் அவர் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இங்கிலாந்தினை எபோலா தாக்கத்திலிருந்த…
-
- 0 replies
- 277 views
-
-
போக்கோ ஹராம் மீது கேமரூன் வான்படைகள் தாக்குதல் நைஜீரியத் தீவிரவாத இஸ்லாமியக் குழுவான போக்கோ ஹராம் மீது முதல் முறையாக கேமரூன் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தயார் நிலையில் கேமரூனின் படைகள்கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில், சுமார் ஆயிரம் தீவிரவாதிகள் நைஜீரியாவிலிருந்து, தமது நாட்டின் வடபகுதிக்குள் புகுந்து, ஐந்து கிராமங்களைத் தாக்கியுள்ளனர் என்று கேமரூனின் இராணுவம் கூறுகிறது. கேமரூனின் வான் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருதரப்புக்குமான கடும் சண்டை காரணமாக, கேமரூனின் படைகள் கைவிட்ட ஒரு இராணுவ தளத்தை, சிறிது நேரம் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் ஆக்கிரமித்திருந்தனர். கேமரூனுக்குள் நுழைந்துள்ள போக்கோ ஹராம் தீவிரவாதி…
-
- 5 replies
- 761 views
-
-
இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயம்? இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாயமான ஏர் ஏசியா விமானத்தில் 155 பயணிகள் பயணம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. காலை 8 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைய வேண்டிய விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானம் வழக்கமான பாதையில் இருந்து விலகிச் சென்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். http://www.dailyjaffna.com/2014/12/blog-post_308.html
-
- 14 replies
- 1.7k views
-
-
கனடா- ஞாயிற்றுகிழமை ரொறொன்ரோவில் இருந்து புறப்பட்ட போட்டர் விமானநிறுவனத்தின் இரண்டு விமானங்கள் மற்றும் கல்கரியில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்ட எயர் கனடா விமானம் ஆகிய மூன்றும் புகை மற்றும் மின்சார பிரச்சனைகள் காரணமாக திருப்ப பட்டுள்ளன. போட்டர் விமான நிறுவனத்தின் ரொறொன்ரோவில் இருந்து சட்பெறி நோக்கி புறப்பட்ட PD539-விமானம் ஞாயிற்றுகிழமை இரவு ரொறொன்ரோ பியர்சன் விமானநிலையத்தில் ஒரு அவசர தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டது என ரொறொன்ரோ பெரும்பாக விமானநிலையங்களின் ஆணையகம் தெரிவித்துள்ளது. பில்லி பிசொப் நகர விமானநிலையத்தில் இருந்து இரவு 7;30-மணிக்கு புறப்பட்ட விமானம் என விமானநிறுவனத்தின் இணையத்தள செய்தி மூலம் தெரியவந்துள்ளது. விமானத்தில் புகை காண…
-
- 0 replies
- 596 views
-
-
466 பேருடன் சென்ற இத்தாலிய பயணிகள் கப்பல் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கிரேக்கத்தில் இருந்து இத்தாலிக்கு பயணித்துக் கொண்டிருந்த கப்பலே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/35986.html#sthash.lpQHzSh2.dpuf
-
- 2 replies
- 496 views
-
-
நிலம் கையகப்படுத்துதல்: அவசர திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் தனியார் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்வவது தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை திங்களன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிமத்திய அமைச்சரவையின் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இந்த தகவலை தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய தலைநகர் டில்லி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கைப்பட்டுள்ள குடியிருப்புகளை ஒழுங்குப்பட்டுதுதல் மற்றும் நாட்டில் நிலம் கையகப்படுத்துதல் முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் என்று இந்த இரண்டு விவகாரங்களுக்காகவும் அ…
-
- 0 replies
- 378 views
-
-
சீனாவில் கூகிளின் 'ஜி மெயில்' முற்றாக முடக்கப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான 'ஜி மெயிலை' பயன்படுத்துவதற்கு எஞ்சியிருந்த அனைத்து வழிகளையும் கிட்டத்தட்ட சீனா முடக்கி விட்டதாக கணினி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் கூகிளின் சேவைகளை முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்மூன்றாம் தரப்பு மூலமாக அங்கு ஜி மெயில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த வேளையில், அதை முடக்குவதற்கான நடவடிக்கைளை அதிகாரிகள் எடுத்தார்கள் என்று கூறப்படும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சீனாவில் 'ஜி மெயிலின்' பயன்பாடு முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு மிகமிகச் சொற்ப அளவிலான மின்னஞ்சல்கள் ஜி மெயில் மூலமாக சீனாவுக்குள் சென்றுள்ளன. கடந்த ஜூன் மாதம்…
-
- 0 replies
- 362 views
-
-
கனடாவில் இந்த வருடத்தில் மிகவும் அதிகமான எண்ணிக்கையானனோரை தாம் புதிதாக கனேடியர்களாக வரவேற்றுள்ளதாக கனேடிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து அறுபது ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக கனேடிய குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக மத்திய குடிவரவு மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சான்டர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் கனேடிய குடியுரிமையை பெற்றுக்கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருட எண்ணிக்கை இரண்டு மடங்கினை விடவும் அதிகம் எனவும், கனேடிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வருடத்திலேயே இவ்வளவு அதிகளவானோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியுரிமைக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறைகளில்…
-
- 0 replies
- 265 views
-
-
பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பிராந்தியத் தில் இடம்பெற்ற பாரிய பனிப்பொழிவால் 15000 வாகனங்கள் நகர முடியாது ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதன் காரணமாக அந்த வாகனங்களின் சாரதிகள் சனிக்கிழமை இரவை தமது வாகனங்களிலேயே கழிக்க நேர்ந்துள்ளது. அல்ப்ஸ் பிராந்தியத்திலுள்ள பனிச் சறு க்கு தளங்களுக்கு விடுமுறையை கழிக்க பெருந்தொகையா னோர் பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையிலேயே இந்த பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மேற்படி பிராந்தியத்தில் இரண்டாவது உயர்மட்ட செம்மஞ்சள் காலநிலை எச்சரிக்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இஸெரி பிராந்தியத்திலுள்ள மலைச்சரிவில் வாகனமொன்று வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதில் நபரொருவர் …
-
- 0 replies
- 382 views
-
-
மும்பையின் தானே நகரைச் சேர்ந்த கிளிபோர்டு மைனேஜ் என்ற 27 வயது இளைஞர் ஹாலந்து அமெரிக்க லைன் கப்பலில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், புளோரிடா கடற்கரையில் உடல் ஒன்று கரை ஒதுங்கியதாக, கடற்கரை வழியாக நடந்து சென்ற சிலர் கொடுத்த தகவலின் படி உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது கிளிபோர்டு மைனேஜின் உடல் என்பது தெரியவந்தது ”ரைண்டாம்” என்ற பெயர் கொண்ட அந்த கரிபியன் கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாம்பா துறைமுகத்துக்கு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மைனேஜ் கடலில் விழுந்து பலியாகி இருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர். எனினும் இந்த மைனேஜ் மாயமானது குறித்து கப்பல் கேப்டன், சம்பம் நடைபெற்ற நாளின் காலை வரை எந்த அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. கப்பலில…
-
- 1 reply
- 369 views
-