உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26720 topics in this forum
-
ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக... பொலிஸ் அதிகாரி டெரெக்கு 22.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை! கறுப்பின அமெரிக்கரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக, பொலிஸ் அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், இனவெறி மற்றும் பொலிஸாரின் அடக்குமுறைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களுக்கான வெற்றியாகவும் பார்க்கப்படுகின்றது. இதனிடையே, இந்த தீர்ப்பை ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் குடும்பத்தினரும் அவரின் ஆதரவாளர்களும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து ஃப்ளாய்டின் சகோதரி பிரிட்ஜெட் ஃப்ளாய்ட் கூறுகையில், ‘பொலிஸாரின் அட்டூழியம் தீவிரமாக கருத்தில் கொள்ளப்ப…
-
- 0 replies
- 218 views
-
-
டெஹ்ரான்: ஈரானில் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் கடந்த 15 நாட்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டுமெனில் 1 மில்லியன் ஜாமீன் தொகை கோருகிறது ஈரான். ஈராக்கின் பஸ்ராவில் கச்சாஎண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவின் விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டு வந்தது இந்திய அரசுக்கு சொந்தமானது எம்.டி. தேஷ் சாந்தி எண்ணெய் கப்பல். இந்தக் கப்பலை ஈரான் கடற்பரப்பில் வழிமறித்த அந்நாட்டு கடற்படை பந்தார் அப்பாஸ் துறைமுகத்துக்கு கொண்டு சென்று சிறை பிடித்து வைத்திருக்கிறது. இது இந்திய அரசுக்கு பேரிடியாக விழுந்துள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் தடையை மீறி ஈரானிடம் தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா மேற்கொண்டு வரக் கூடிய நட்புநாடு. ஆனால் ஈரானே, இந்திய…
-
- 3 replies
- 711 views
-
-
கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா? இறையாண்மை மிக்க அரபு நாடான கத்தார், செளதி அரேபியா தலைமையில் அதன் வளைகுடா கூட்டாளி நாடுகளால் முன்னுதாரணமற்ற பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES தொடர்ச்சியாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்து வருவது , பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக கத்தார் மீது பொருளாதார மற்றும் இராசதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கத்தார் இந்த இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறது. இதனால் தற்போது, வான்பரப்பு அதற்கு மூடப்பட்டுள்ளது, இறக்குமதிகள் எல்லைப் பகுதியில் நிற…
-
- 0 replies
- 447 views
-
-
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவியிற்கு ஏற்பட்ட கொடூரம் ; வைத்தியசாலை வளாகம் போர்களமானது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் கான்பூரில் உள்ள ஜகிரிதி வைத்தியசாலையில் அகன்ஷா என்ற 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குறித்த மாணவியிற்கு வைத்தியசாலையில் உள்ள ஐசியூ வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வைத்தியசாலையில் உள்ள உதவியாளர் ஒருவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த அகன்ஷாவை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி, வைத்தியசாலை வளாகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் போர…
-
- 0 replies
- 284 views
-
-
தென் சீனக்கடலில் அமெரிக்க போர்க் கப்பல்: போர் விமானம், கப்பலை அனுப்பி சீனா பதிலடி தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தீவிற்கு அருகில் ஒரு அமெரிக்க போர்க்கப்பல் இருப்பது "தீவிரமான அரசியல் மற்றும் ராணுவரீதியான ஆத்திரமூட்டல்" என்று பெய்ஜிங் கண்டித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image caption2015 ஆம் ஆண்டு டிரைடன் தீவிற்கு அருகே வந்த அமெரிக்காவின் ஸ்டெதெம் போர்க்கப்பல் சீனா மற்றும் பிற நாடுகளால் உரிமை கொண்டாடப்படும் பராசெல் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான டிரைடன் தீவுக்கு அருகே, அமெரிக்காவின் போர்க்கப்பல் சென்றிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, தனது ராணுவ கப்பல்களையும் போர் விமானங்களையும் அங்கு அனுப்பியு…
-
- 0 replies
- 330 views
-
-
ஏக்வடோர் சிறைச்சாலையில் கலவரம்: 68 பேர் உயிரிழப்பு தென் அமெரிக்க நாடான ஏக்வடோர் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் குறைந்தது 68 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டெம்பர் மாதம் முதல் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் சிறைக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கலவரம் தொடங்கிய நிலையில் அதனை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் தமது சொந்தங்களை இழந்த குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி, மோதலினால் இலாபம் …
-
- 0 replies
- 239 views
-
-
இடித்ததழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பு பகுதியை தமிழக அரசு அமைத்துக் கொடுக்க வலியுறுத்தியும் உலத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் உள்ளிட்ட 82 மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை மீளப் பெறக்கோரியும், சேலம் சிறையில் தேசியப்பாதுகாப்பு சட்டதத்pன் கீழ் தடுத்துவைக்கப்ட்டுள்ள தமிழின உணர்வாளர் கொளத்தூர் மணி உள்ளிட்டவர்களை விடுதலைசெய்யக் கோரியும் இன்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் நடத்திய போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். அண்ணா மேம்பாலத்தை சுற்றி வளைத்து சுமார் இருபத நிமிடங்கள் வரை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
-
- 5 replies
- 567 views
-
-
மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினுக்கு சட்டவிரோதமாக வரும் குடியேறிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு; ஐரோப்பாவில் இருக்கும் ஐ எஸ் அமைப்பின் முன்னாள் சிறார் போராளிகளின் எதிர்காலம் என்ன? அவர்களிடம் பேசியது பிபிசி! மற்றும் மகப்பேற்றின் போதான மரணம் இன்றுவரை பல நாடுகளில் பெரும் பிரச்சினை! ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவும் புதிய முயற்சி ஒன்று குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 265 views
-
-
OHEA எனும் ஸ்பெயின் நிறுவனம் இந்த மின் கட்டிலை உருவாக்கியுள்ளது. நித்திரையின் பின்னர் மறுநாள் காலை இக்கட்டிலின் போர்வைகள் எப்படி கசங்கியிருந்தாலும், தானாக சரிசய்துவிடுகிறது. 50 செக்கன்களுக்குள் வேலை முடிந்துவிடுகிறது. தானாக இயங்குவதற்கும், மெனுவலாக இயங்குவதற்கும் இரண்டு பட்டன்கள் உள்ளன. Automatic ஐ அழுத்திவிட்டீர்கள் என்றால் படுக்கையை விட்டு நீங்கள் எழுந்த 3 செக்கனில் தானாக சரிசெய்ய ஆரம்பித்துவிடும். இன்னமும் இக்கட்டிலுக்கு விலை நிர்ணயிக்கபப்டவில்லை. விரைவில் சந்தைக்கு வரும் என்கிறார்கள். அங்கு கைவைத்து, இங்கு கைவைத்து, இப்போது படுக்கை வரை மின் இயந்திரங்கள் ஆக்கிரமித்துவிட்டன. நீங்கள் மகா சோம்பேறியாவதற்கு இந்த புதிய தொழில்நுட்பத்தை விட வேறென்ன தேவை? http://ww…
-
- 0 replies
- 674 views
-
-
மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிலிருந்து மீண்டும் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா? நவீன்சிங் கட்கா சுற்றுச்சூழல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூங்காக்களில் இருக்கும் கொரில்லாக்களிடம் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஹாங்காங்கில் ஒரு செல்லப் பிராணிக்கடை தொழிலாளி வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வெள்ளை எலிகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வெள்ளை எலியிடமிருந்து கடையில் வேலை பார்த்த நபருக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என ஹாங்காங் அதிகாரிக…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
என் தந்தையை கொன்றால் உலக அளவில் பேரழிவு ஏற்படும்: ஒமர் என் தந்தையை கொன்றால், உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பேரழிவை ஏற்படுத்துவார்கள் என்று பின்லேடனின் மகன் ஒமர் எச்சரித்து இருக்கிறார். மேலும் அவர், 2000-ம் ஆண்டு புஷ் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டபோது என் தந்தை ரொம்பவும் சந்தோஷப்பட்டார். ஏனெனில், புஷ் தான் அமெரிக்காவுக்கு அப்போது தேவைப்பட்ட தலைவர் என்று அவர் கூறினார். பிறநாடுகளின் மீது தாக்குதல் நடத்தி, அதற்காக பணத்தை செலவிட்டு நாட்டை அழித்து விடுவார் என்று என் தந்தை கணித்து இருந்தார் என்றும் ஒமர் பின்லேடன் கூறினார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=25117
-
- 0 replies
- 540 views
-
-
கிறிஸ்மஸ் தினம்- வருடா வருடம் டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்தவர்களால் மாத்திரம் அல்லாமல் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாலும் கூட மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்ற ஒரு தினம். (கிறிஸ்மஸ் என்கின்ற பதத்தை தமிழில் நத்தார் தினம் என்று சிலர் மொழி பெயர்ப்பதுண்டு. ஆனால் நத்தார் என்பது போர்த்துக்கீச மொழியில் கிறிஸ்மஸ் தினத்தைக் குறிப்பிடுகின்ற ஒரு சொல். அது தமிழ் அல்ல). நீண்ட விடுமுறை, கிறிஸ்மஸ் மரம் சோடிப்பது. பரிசுகள் பரிமாறிக் கொள்வது. கிறிஸ்மஸ் தாத்தாவிடம் பரிசுகளை வாங்குவது… கிறிஸ்மஸ் என்றவுடன் எங்களுக்கு நினைவில் வருகின்ற உபரியான விடயங்கள் இவை. கடவுள் பூமியில் மனிதனாகப் பிறந்தார். அவரின் பெயர் இயேசுக் கிறிஸ்த்து. அந்த இயேசுக் கிறிஸ்து பூமியில் அவதரித்த தினம்தான் டிசம்பர் 25. அந்தத் தி…
-
- 4 replies
- 1.7k views
-
-
டெல்லியில் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை நிராகரித்தார். இந்தநிலையில் ஆம் ஆத்மியின் தலைமை அலுவலகம் மீது இந்து ரக்ஷா தள அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி அனூப் அஸ்வதி என்ற வழக்கறிஞர் டெல்லி ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தார். பாதுகாப்பு வழங்க மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசாருக்கும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. http://www.dailythanthi.com/2014-01-08-Plea-in-Delhi-HC-for-security-to-Arvind-Kejriwal
-
- 0 replies
- 350 views
-
-
ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர அரசு ஊழியர் சங்கம், ஒருங்கிணைந்த ஆந்திரா போராட்டம் குழு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. சீமாந்திரா பகுதியில் வருகிற 17, 18 ஆகிய 2 நாட்கள் மட்டும் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மேலும் அன்றைய தினங்களில் மத்திய – மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுகிறது. பேருந்துகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. http://www.dinamani.com/latest_news/2014/01/12/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%…
-
- 0 replies
- 370 views
-
-
ஹரித்வார்: நடிகை ரஞ்சிதா தனக்கு 'சேவைகள்' செய்த சமயத்தில் நான் பிரக்ஞையற்று சமாதி நிலையில் இருந்தேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் நித்தியானந்தா. ஹரித்வாரில் கும்பமேளாவில் இருப்பதாகக் கூறப்படும் நித்தியானந்தா ஆங்கில மற்றும் தெலுங்கு சேனல்களுக்கு ஒரு புதுப் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டி: கேள்வி: கடந்த 2 வாரங்களாக தங்களைப் பற்றிய முரண்பாடான விவகாரங்கள் வெளியாகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நித்தியானந்தா: தற்போதைய விவகாரத்துக்கு முன்னரும், பின்னரும் யூ டியூப் தேடலில் நான்தான் உச்சத்தில் இருந்துள்ளேன். முன்பு ஆன்மிக குரு என்ற அடிப்படையிலும், தற்போது மோசடி என்ற பெயரிலும் அதிகளவில் வீடியோவில் காட்டப்படுகிறேன். எனது 33 ஆண்டுகள் பொது…
-
- 31 replies
- 6.1k views
-
-
கிழக்கு நகரங்கள் மீது... மிகப்பெரிய தாக்குதல் நடத்த, ரஷ்யா திட்டம்: உக்ரைன்! கிழக்கு பகுதியில் உள்ள நகரங்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த, ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கிழக்கு நகரங்களான கார்கீவ், நிப்ரோவ், டொனெட்ஸ்-மகிவ்கா, ஷப்ரிஷிஷியா, மரியுபோல், லுஹன்ஸ், ஹர்லிவ்கா, கமின்ஸ்கி ஆகிய நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக உக்ரைன் எச்சரித்துள்ளது. ஏற்கனவே கைப்பற்றிய சில பகுதிகளில் இருந்து ரஷ்ய படையினர் பின்வாங்கி வருகின்ற நிலையில், இந்த செய்தி வெளிவந்துள்ளது. இந்தநிலையில், உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த 18,300 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக…
-
- 0 replies
- 300 views
-
-
பென்னாகரம் இடை தேர்தலில் தமிழர்கள் 85 % வாக்களித்து இருப்பது தமிழர்கள் ஜனநாயகத்தை மதிப்பது தெரிகிறது . மேலும் தமது திராவிடர் முன்னேற்ற கழகம் அடுத்த தேர்தலில் 100 % வாக்களிக்க மக்களிடம் வேண்டுகோள் விடப்போவதாகவும் முத்தமிழ் தலைவர் கருணாநிதி அவர்கள் அறிவித்து உள்ளார் . கற்பனை கருத்துக்கள் உண்மையான கருத்துக்கள் அல்ல
-
- 0 replies
- 460 views
-
-
அணுசக்தி திறன்களை அதிகரிக்க... ஏவுகணை சோதனையை கண்காணிக்கும், கிம் ஜோங் உன்! நாட்டின் அணுசக்தித் திறன்களை உயர்த்தும் நோக்கில் புதிய வகை ஏவுகணை சோதனையை வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன், கண்காணித்ததாக வட கொரிய மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, வட கொரியா விரைவில் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கும் அறிகுறிகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது தென் கொரியாவின் இராணுவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வடக்கின் கிழக்கு கடற்கரையிலிருந்து கடலை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதைக் கண்டறிந்ததாகக் கூறியது. ஏவுகணைகள் சுமார் 110 கிமீ (70 மைல்கள்) 25 கிமீ அபோஜி மற்றும் அதிகபட்ச வேகம் மேக் 4க்குக் க…
-
- 0 replies
- 148 views
-
-
ஹிட்லர் வரைந்த ஓவியம் கிழிப்பு பகிர்க படத்தின் காப்புரிமைMUSEO DELLA FOLLIA Image captionநவம்பர் 19 வரை நடக்கும் கண்காட்சியில் இந்த ஓவியம் இடம்பெற்றுள்ளது. இத்தாலி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த, ஹிட்லர் வரைந்த ஓவியத்தை ஸ்குரூடிரைவர் மூலம் ஒருவர் கிழித்தார். நாசி தலைவரின் ஓவியம், பொதுமக்களுக்கான இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் கோபமடைந்த 40 வயதுடைய ஒருவர் இந்த தலைப்பிடப்படாத ஓவியத்தை கிழித்தார் என்று, கொரியாரே டெல்லா சேரா என்னும் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. "பைத்தியக்காரத்தனத்திற்கான அருங்காட்சியகம்" என்று பெரியரிப்பட்ட கண்காட்சி நிகழ்ச்சிக்காக, கர்டா ஏரிக்கரையின் அருகில் உள…
-
- 0 replies
- 712 views
-
-
உக்ரைன்.... வெள்ளைக் கொடியை, ஏற்றுவதன் மூலம்.... சண்டை நிறுத்தத்தை, தொடக்கிவைக்க வேண்டும்: ரஷ்யா! உக்ரைனின் மரியுபோல் நகரில் தங்களால் முற்றுகையிடப்பட்டுள்ள, அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கியுள்ள உக்ரைன் படையினார், வெள்ளைக் கொடியை ஏற்றுவதன் மூலம் சண்டை நிறுத்தத்தை தொடக்கிவைக்க வேண்டும் என ரஷ்யா கூறியுள்ளது. ஆலையிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறியுள்ள ரஷ்யா, இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சக தேசியக் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகயீல் மிஸின்ட்ஸெவ் கூறுகையில், ‘முற்றுகையிடப்பட்டுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைய…
-
- 4 replies
- 537 views
-
-
மனைவி, இரு குழந்தைகளுடன் இறந்து கிடந்த றோ அதிகாரி! – டெல்லியில் பெரும் பரபரப்பு. [sunday, 2014-03-02 17:45:12] டெல்லியில் றோ உளவுத்துறை அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. றோ உளவுத்துறை அதிகாரியான அனன்யா சக்ரவர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அனன்யா சக்ரவர்த்தி என்ற அந்த அதிகாரி, றோ அமைப்பில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்தார். டெல்லி சதீக் நகரில் உள்ள அவரது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்கப்பட்டது. அதேபோல் அவரது குடும்பத்தினரும் மர்மமாக இறந்து கிடந்தனர். அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் உடலில் காயங்கள் இருப்…
-
- 7 replies
- 691 views
-
-
இப்போதெல்லாம் படத்துக்குப் படம் புதுப் புது ஹீரோயின்கள் வேண்டும் என்கிறார்கள் ஹீரோக்கள். முன்பு அப்படியில்லை. நான் பல வருடங்கள் ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்துள்ளேன், என்கிறார் நடிகை குஷ்பு. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: "தமிழ் திரைப்படங்களில் தற்போது ஒரு நடிகை நிலைத்து நிற்பது கடினமாக உள்ளது. எனது காலத்தில் நிறைய ஹீரோக்களுடன் நான் தொடர்ந்து பல ஆண்டுகள் நடித்தேன். ஆனால் இப்போதைய ஹீரோக்கள் ஒரு படத்துக்கு ஒரு கதாநாயகி தங்களுடன் நடிப்பதை விரும்புகின்றனர். அடுத்த படத்தில் அதே நாயகியை நடிக்க வைப்பதில்லை. சில ஹீரோக்கள் 3 சீன்களுக்கு மட்டுமே ஹீரோயின்களை பயன்படுத்துவதும் உள்ளது..." என்றார். சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற குஷ்பு, இயக்குநர்கள் வட இந்தி…
-
- 6 replies
- 1.9k views
-
-
தமிழ் உணர்வாளர்களே... நடிகர் கமல் அவசர அறிக்கை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவிற்கு வணிக ஆதரவு அளித்துள்ள இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக் கூட்டமைப்பு (FICCI) பொறுப்பிலிருந்து நடிகர் கமல்ஹாசன் விலக வேண்டும் என்று மே 17 இயக்கம் இன்று கமல் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ் உணர்வாளர்களே... மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால், கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஃபிக்கி …
-
- 1 reply
- 669 views
-
-
சூரியனைப்பார்த்து இரண்டு மாதங்களாகிவிட்டது: ஈழத்தமிழர்கள் வேதனை இலங்கையில் இருந்து அகதிகளாக தப்பிச்சென்று மலேசிய முகாம்களில் கடந்த இரண்டு மாதங்களாக 75 ஈழத்தமிழர்கள் அடைபட்டுக்கிடக்கிறார்கள். அவர்களில் கண்ணன், ராஜூ என்ற இருவர் நக்கீரன் இணையதளத்தை தொடர்பு கொண்டார்கள். ‘’இலங்கையில் இருந்து அகதிகளாக தப்பித்து வந்து ஏப்ரல் மாதம் 24ம் தேதி நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த எங்களை மலேசிய அரசு காப்பாற்றுகிறோம் என்று அழைத்து வந்தார்கள். கரைக்கு வந்ததும் கைது செய்வோம் என்றார்கள். நாடு கடத்தப்போகிறோம் என்றார்கள். இதனால் நாங்கள் 75 பேரும் கப்பலில் இருந்து இறங்க மறுத்தோம். எங்களை நெங்கினால் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று எச்சரித்து 2 நாட…
-
- 0 replies
- 758 views
-
-
தென் ஆப்ரிக்காவின் குப்தா சகோதரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது – யார் இவர்கள்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதூல் குப்தா ஜேக்கப் சூமாவுடன் தென் ஆப்ரிக்காவில் கோலோச்சி வந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்களான குப்தா சகோதரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் ஆப்ரிக்க அரசு தெரிவித்துள்ளது. அதூல் மற்றும் ராஜேஷ் குப்தா ஆகிய இருவரும் தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் சூமாவுடன் இருந்த நெருக்கமான தொடர்பை பயன்படுத்தி லாபமடைந்தனர் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்களை தென் ஆப்ரிக்காவுக்கு அழைத்து செல்வதற்கான பேச்சுவார…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-