உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26720 topics in this forum
-
முன் எப்போதும் இல்லாத அளவில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளது. திங்கள்கிழமை மட்டும் மிக அதிகபட்சமாக ரூ.984 குறைந்து ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 72-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே சரிந்து வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ. 2 ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளது. காரணம் என்ன? சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் இந்திய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் நிலவி வந்த பொருளாதார ஏற்ற இறக்கங்கள் கடந்த வாரத்தில் இந்தியச் சந்தையில் எதிரொ…
-
- 0 replies
- 1.6k views
-
-
அ.தி.மு.க-வுடன் நடிகர் கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி கூட்டணி வைத்ததில், அவரது கட்சிக்காரர்களைவிட அ.தி.மு.க-வினருக்கு ரொம்ப சந்தோஷம். காரணம், சிவகாசியில் கார்த்திக்கின் பொதுக் கூட்டத்துக்கு திரண்ட கூட்டம்! 'வழக்கமாக நடிகர் கார்த்திக் குறிப்பிட்ட நேரத்துக்கு மீட்டிங்குக்கு வர மாட்டார். வந்தாலும், திடீரென்று கிளம்பிவிடுவார்...’ என்று அவர் மீது ஏகப்பட்ட காமெடிப் புகார்கள் உண்டு. சிவகாசியிலும் இந்தக் கூத்துதான் நடக்கும் என்று அ.தி.மு.க-வினர் முதல் உளவுத் துறை போலீஸார் வரை நினைத்தார்கள். ஆனால், அந்தப் பொதுக்கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் மைக் பிடித்துப் பேசி எல்லோரையும் மலைக்க வைத்துவிட்டார். கூட்டத்தைக் கண்டு உற்சாகமான கார்த்திக், ''கன்னியாகுமரி …
-
- 2 replies
- 759 views
-
-
தங்களது ஜேர்மனிய உறவினர்களுடன் தற்காலிகமாக தங்க பேரழிவால் பாதிக்கப்பட்ட துருக்கி- சிரிய மக்களுக்கு அனுமதி! துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜேர்மனியில் உள்ள உறவினர்களுடன் தற்காலிகமாக தங்க அனுமதிக்கப்படுவார்கள் என ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது. இது அவசர உதவி என்று ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவித்துள்ளார். துருக்கிய அல்லது சிரிய குடும்பங்கள் பேரழிவு பகுதியில் இருந்து தங்கள் நெருங்கிய உறவினர்களை அதிகாரத்துவம் இல்லாமல் ஜேர்மனியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதனிடையே, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காயம் அடைந…
-
- 0 replies
- 469 views
-
-
கோவை: தமிழீழ விடுதலைப் புலிகளை திமுக தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவில்லை. அதேபோல எங்களை விடுதலைப் புலிகளும் ஆதரிக்கவில்லை. திமுக கொடுத்த பணத்தைக் கூட வாங்காமல் எம்.ஜி.ஆரிடம் பணத்தை வாங்கியவர்கள் புலிகள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் அன்பழகன் பேசியதாவது: ஜெ.க்கு கேள்வி! இலங்கையில் போர் நடைபெற்ற போது, பொதுமக்கள் பலபேர் இந்தப் போரில் கொல்லப்படுகிறார்கள் என்று செய்தி வந்தது. அப்போது மக்கள் அழிக்கப்படுகிறார்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கூக்குரல் எழுப்புகிறார்கள். அப்போது இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா எந்த நாட்டிலே போர் நடைபெறும்போதும் மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள் என்று …
-
- 1 reply
- 725 views
-
-
தங்களின் வர்த்தகத்தடை பட்டியலில் உள்ள ரஷிய நிறுவனத்திடமிருந்து வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா பெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நியூயார்க்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமலும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வைரஸ் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வந்தது. இதையடுத்து, கொரோனா தொடர்பாக ரஷிய அதிபர் விளாடி…
-
- 7 replies
- 786 views
-
-
தங்கள் தூதர்களின் காது கோளாறுக்காக கியூபா தூதர்களை வெளியேற்றிய அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கியூபாவுக்கான அமெரிக்கத் தூதர்களுக்கு மர்மமான முறையில் ஏற்பட்ட காது கோளாறுகளைத் தொடர்ந்து, தமது நாட்டில் இருந்து இரண்டு கியூபா தூதர்களை அமெரிக்கா வெளியேற்றியது என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅமெரிக்காவை வி…
-
- 0 replies
- 405 views
-
-
தங்கள் மீதான கட்டுப்பாடுகளை தவிர்க்க ஒமான் வழியாக கப்பல் போக்குவரத்தை தொடங்கியது கத்தார் தங்கள் நாட்டின் மீது மற்ற வளைகுடா நாடுகள் விதித்த கட்டுப்பாடுகளை தவிர்க்க, ஒமான் நாட்டு வழியாக மாற்று வழியில் தாங்கள் சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கியுள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionஒமானில் இருந்து கத்தாருக்கு செல்லும் கப்பல்களில் பதிவுகள் தொடக்கம் வாரம் மும்முறை ஸோஹார் மற்றும் சலாலாவுக்கு நேரடி சேவைகள் இயக்கப்படும் என்று கத்தார் துறைமுகங்கள் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக கத்தார் நாட்டுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துறைமுகங்களில்…
-
- 0 replies
- 454 views
-
-
தங்கள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க தென்னாபிரிக்க ஜனாதிபதி வலியுறுத்தல்! தங்கள் மற்றும் அதன் அண்டை நாடுகள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டுமென தென்னாபிரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தென்னாபிரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள இந்த தடை நியாயமற்றது. பாகுபாடானது. இதனால் பெரும் அதிருப்தியடைந்துள்ளோம். பயணத் தடை அறிவியல் ரீதியிலானதல்ல. இந்த தடையினால் தென்னாபிரிக்காவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை கொரோனா திரிபு அடைவதை நிறுத்த முடியாது. பயணத் தடையினால் பயன் இல்லை’ என கூறியுள்ளார். பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்டவை பயணத் தடை வ…
-
- 0 replies
- 463 views
-
-
இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலையில் உள்ளூர் அரசியல்வாதியொருவர் சம்பந்தப்பட்ட தகராற்றில் பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குராம் ஸமான் ஷேய்க் என்ற இஸ்ரேல் வம்சாவழி பிரிட்டிஷ் பிரஜையே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். அவருடனிருந்த விக்டோரியா அலெக்ஷாந்துவானா என்ற ரஷ்ய பெண்மணி படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மெடில்ல என்ற இடத்தில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இசை நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த உள்ளூர்வாசிகளுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் இடையில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது. கூரிய ஆயுதமொன்றால் குத்திக் கொல்லப்பட்டுள்ள நபரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக…
-
- 1 reply
- 751 views
-
-
தங்கையை பொலிட்பீரோ உறுப்பினராக்கினார் கிம் ஜாங்-உன் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionவட கொரிய தலைவரின் தங்கை கிம் யோ-ஜாங் (வட்டமிடப்பட்டுள்ளவர்) வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது சகோதரி, கிம் யோ-ஜோங்கை, நாட்டின் அதி உயர் முடிவெடுக்கும் குழுவான, தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக நியமித்துள்ளார். விளம்பரம் மறைந்த தலைவர் கிம் ஜாங்-இல்லின் இளைய மகளான கிம் யோ-ஜாங், தொழிலாளர் கட்சியின் கொள்கைகளை வகுக்கும் குழுவில் உறுப்பினர் ஆக்கப்பட்டுள்ளார். அவர், தனது அத்தை வகித்து வந்த பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். 30 வயதாகும் கிம், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, க…
-
- 0 replies
- 460 views
-
-
முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து அகற்றுகிறேன் என்று கோடரியை வைத்துக் கொண்டு உடைக்கத் தொடங்கினானாம் அந்தக் கிழவன். “அட முட்டாளே ஒண்டி ஆளாய் மலையை யாராவது உடைக்க முடியுமா?” என்று அவனைக் கேலி செய்தானாம் அந்த ஊரிலிருந்த ஒரு புத்திசாலிக் கிழவன். முட்டாள் கிழவன் சொன்னானாம், “நான் உடைப்பேன், நான் செத்த பிறகு என் பிள்ளைகள் உடைப்பார்கள், பிறகு பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரன்கள் என்று உடைத்துக் கொண்டே இருப்போம். என் சந்ததி வளரும், ஆனால் இந்த மலை வளராது. எனவே நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறி உடைக்கத் தொடங்கினானாம். அவனுடைய விடாமுயற்சிய…
-
- 7 replies
- 1.6k views
-
-
பாட்னா: பாட்னாவில் காந்தி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலியானார்கள். 15 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரியவந்துள்ளது. பீகார் தலைநகர் பாட்னா காந்தி சவுக் பகுதியில் உள்ள காந்தி மைதானத்தில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடைசி நாளான இன்று ராவண வதம் நிகழ்ச்சியை காண ஏராளமானோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சியை முடித்து விட்டு மக்கள் வீடுகளுக்கு திரும்பும் போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 32 பேர் பலியாகியுள்ளனர். இந்த தகவலை பீகார் உள்துறை செயலாளர் அமீர் சுபானி உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த …
-
- 0 replies
- 457 views
-
-
தஜிகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: டெல்லி, காஷ்மீரிலும் தாக்கம் படம்: யு.எஸ்.ஜி.எஸ். மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது, இதன் தாக்கத்தினால் தலைநகர் புதுடெல்லியில் கட்டிடங்கள் குலுங்கின. காஷ்மீரிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. திங்கள் மதியம் இந்திய நேரம் 1.20-க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.2 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 28கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முர்கோப் நகருக்கு மேற்கே 109 கிமீ தொலைவில் இதன் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக தலைநகர் …
-
- 0 replies
- 807 views
-
-
தஜிகிஸ்தான் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் சோவியத் யூனியன் நாடான தஜிகிஸ்தானின் கர்னோ-பதாக் ஷான் மாகாணத்திலேயே இம்மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலின் போது பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் , அப்பாவி மக்கள் என 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் மற்ற மாகாணங்களுக்கும் இந்த சம்பவம் கலவரமாக பரவியதால் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தஜிகி்ஸ்தான் நாட்டின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் பயங்கரவாதி…
-
- 0 replies
- 432 views
-
-
தஜிக்கிஸ்தான் எல்லையில் தலிபான்களிற்கும் தஜிக்கிஸ்தான் படையினருக்கும் இடையில் மோதல் ஆப்கானிஸ்தான் தஜிக்கிஸ்தான் எல்லையில் தலிபான்களிற்கும் தஜிக்கிஸ்தான் படையினருக்கும் இடையில் மோதல் இடைபெற்றுள்ளது. குண்டுஸ் பிராந்திய தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் வசிப்பவரின் கூற்றுப்படி ஷெர்கான் பந்தர் அருகே மோதல் ஏற்பட்டது மேலும் நான்கு மணி நேரம் நீடித்தது தலிபான்கள் முதல் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து வாய்மொழி மோதலுக்குப் பிறகு எல்லைக் காவலர் மோதல்கள் தொடங்கியதாக அவர் தொடர்ந்து கூறினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் தாஜிக் அதி…
-
- 2 replies
- 235 views
-
-
தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் வெளியேற்றவேண்டும்- ஜெர்மன் மாகாண அமைச்சர் ஜெர்மனிக்கு வந்து தஞ்சம் கோரி, அக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், விண்ணப்பித்த குடியேறிகள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படவேண்டும் என்று ஜெர்மனியின் மாகாணமான, பவேரியாவின் உள்துறை அமைச்சர், ஜோச்சிம் ஹெர்மான் கூறியிருக்கிறார். தஞ்சம் கோரிகளின் சொந்த நாடுகளில் போர் நடந்து கொண்டிருந்தால் கூட , அவர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்று அவர் கூறினார். தனது பவேரியா மாகாணத்தில் நடந்த பல இஸ்லாமியவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் பேசிய ஹெர்மன், தேவைப்பட்டால், இதைச் செய்ய ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை மாற்ற வேண்டும் என்றார். இந்த சட்டங்கள் ஒரு சில அகதிகளை நாட்டிலிருந்து வெள…
-
- 0 replies
- 303 views
-
-
தஞ்சம் கோருபவர்கள் ஆஸ்திரேலியாவை அடைவதை தடுக்கும் விதமாக புதிய சட்டம் அமல்? தஞ்சம் கோருபவர்கள் படகு மூலம் பயணம் செய்து ஆஸ்திரேலியாவை அடைவதை தடுக்கும் விதமாக அந்நாட்டு அரசு ஒரு கடுமையான புதிய சட்டத்தினை முன்மொழிந்துள்ளது. நருவில் உள்ள தடுப்பு மையம் ( கோப்புப் படம்) இதன் மூலம் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் வருகை புரியவோ அல்லது குடியேறுவதற்கு அனுமதிப்பதை தடுக்கவோ வழிவகையுள்ளது. ஆஸ்திரேலியாவில் நுழையும் முயற்சிகள் இறுதியில் வீணாகி விடும் என்று ஆள் கடத்தல் செய்யப்படுவார்களால் அனுப்பப்படுபவர்கள் தெரிந்து கொண்டதால், ஆள் கடத்தல் செய்யும் குற்றவியல் வர்த்தகத்தை இந்த புதிய சட்டம் தடுத்து நிறுத்தும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் …
-
- 0 replies
- 247 views
-
-
தனது வாழ்விலோ அல்லது செய்யும் தொழிலிலோ தான் கடைபிடித்துவந்த, கட்டிக் காத்துவந்த கொள்கையை ஒரு மனிதன் விட்டுவிட்டுப் பாதை மாறிடும் போது, அதனால் ஏற்படும் (தீய) விளைவுகள், அவனுடைய வாழ்வையும், தொழிலையும் மட்டுமே பாதிப்பதில்லை. அப்படிப்பட்ட மனிதனை அல்லது நிறுவனத்தைச் சார்ந்துள்ள மக்கள் அல்லது சமூகத்தை அந்தத் தடுமாற்றம் எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதை ஒரு நிகழ்வும், அந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகமும் விளக்கியது. நாட்டு நடப்பையும், அது சார்ந்த அரசியலையும் செய்தியாக அளிப்பதோடு நிற்காமல், நிகழ்வுகளுக்கான காரணத்தையும், பிரச்சனைகளின் ஆழத்தையும் தெளிவாக எடுத்துரைத்து வாசகர்களை விவரப்படுத்தும் சமூகக் கடமையுள்ள ஊடகங்கள், தடம் புரண்டு, நிகழ்வின் காரணத்தை மறைத்தும், உண்மை…
-
- 7 replies
- 808 views
-
-
தடுக்க முடியுமா தகவல் நுட்பக் கிளர்ச்சியை? காங்கிரஸ் கட்சிக்கென ஒரு கலாச்சாரப் பெருமை உண்டு. கட்சிக்கு உள்ளே ஒரு பொதுக்கருத்து என்றில்லாமல் ஆளுக்காள் அவரவர் கருத்தை வெளியே பேசுவார்கள், அதை உட்கட்சி ஜனநாயகம் என்பார்கள்; ஆனால் கட்சிக்கு வெளியே மாறுபட்ட கருத்துகள் வந்தால் அந்த ஜனநாயக உரிமையை ஒடுக்கிவிட முயல்வார்கள். இந்த மரபின் புதிய பதிப்பாகத்தான் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் மூலமாக ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இணையத்தின் மூலமாக இன்று பரவலாகி வரும் சமூகவலைத்தளங்களை, அந்த நிறுவனங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறார். அந்த சமூக வலைத்தளங்களில் ச…
-
- 0 replies
- 464 views
-
-
தடுத்து வைக்கப்பட்டுள்ள.. டுபாய் இளவரசி – ஐ.நா விசாரணை! தடுத்து வைக்கப்பட்டுள்ள டுபாய் இளவரசி குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் தெரிவித்துள்ளது. டுபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் இளவரசி ஷேய்க்கா லதீஃபா தாம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் காணொளியில் தெரிவித்துள்ளார். 2018 மார்ச்சில், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து அவர் கடல் மார்க்கமாய்த் தப்ப முயன்றார். அதன் பிறகு அவர் பொது வெளியில் காணப்படவில்லை. அவர் சிறைப்பிடிக்கப்பட்டு சுமார் ஓராண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட காணொளிகளை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது. சிறையாக மாற்றப்பட்டுள்…
-
- 1 reply
- 999 views
-
-
சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு இறப்பது தொடர் நிகழ்வாகிப் போய்விட்டது. இதற்கு விசாரணை செய்வது குறித்து காவல்துறையினருக்கு போதிய பயிற்சி தராததும் ஒரு காரணம் என்று மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். வழக்கறிஞர் மன்றத்தின் குற்றவியல் சட்டப் பிரிவின் துணைத் தலைவரான வி.சிதம்பரம் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நடந்த குகன் வழக்கை மேற்கோள் காட்டிக் கருத்துரைக்கையில், “நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்கப்படுவதில்லை.” “காரணம் அதன் மேல் பல புகார்கள் எழுந்தன மற்றும் விசாரணையில் வழக்கறிஞர்கள் அது குறித்து கேள்வி கேட்கும் போது அந்த வாக்குமூலங்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் காரணமாக நீதிமன்றம் அது …
-
- 0 replies
- 578 views
-
-
தடுப்பூசி ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம் தடுப்பூசி ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. நாடுகளுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தவறியதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளன. அதன்படி இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வியாழக்கிழமை ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த திட்டங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவுக்கு 250,000 டோஸ் கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை இத்தாலிய அரசாங்கம் தடுத்திருந்தது. இந்த நடவடிக்கைக்கு சில வாரங்களுக்குப் பின்னர் மில்…
-
- 0 replies
- 337 views
-
-
தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இயல்பு நிலை திரும்பாது - ஸ்பெயின் பிரதமர் ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் சுமார் 5,100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். எனினும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதுவரை ஸ்பெயினில் 1,77,633 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 18,500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இத்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, வாழக்கை இயல்பு நிலைக்கு திரும்பாது என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்தார். இந்த வாரத் தொடக்கத்தில் அங்கு தொழிற்சாலைகள், கட…
-
- 2 replies
- 556 views
-
-
தடுப்பூசி செலுத்திக் கொள்ள வெளிநாட்டினருக்கு ரஷ்சியா அழைப்பு 23 Views வெளிநாட்டினர் ரஷ்யாவுக்கு வந்து தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பொருளாதாரக் கூட்டம் ஒன்றில் ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, “ரஷ்யாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. வைரஸிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக அனைத்து ரஷ்யர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.கொரோனாதடுப்பூசி செலுத்திக்கொண்ட எவரும் உயிரிழக்கவில்லை. ரஷ்யாவின்கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளி…
-
- 0 replies
- 553 views
-
-
சென்னை: சென்னை அருகே இரு கிராமங்களில் நடந்த அரசினர் தட்டம்மை தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ளது பென்னலூர்ப்பேட்டை மற்றும் வெங்கடாபுரம் கிராமங்கள். இரண்டும் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் உள்ளன. புதன்கிழமை இந்த கிராமங்களில் தட்டம்மை தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது. தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு ஏராளமான பேர் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டனர். இதில் நந்தினி, பூஜா, மோகனபிரியா, லோகேஷ் ஆகிய நான்கு குழந்தைகள் ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுதவிர மேலும் 15 குழந்தைகளுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அந்தக் குழந்த…
-
- 1 reply
- 1k views
-