Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாரிஸ் நகர் அருகே தென்பட்ட புலி பிரான்சில், தலைநகர் பாரிஸ் அருகே சூப்பர் மார்க்கெட் அருகே பொதுமக்களால் காணப்பட்ட புலி ஒன்றைப் பிடிக்க போலிஸ், தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர். பாரிஸ் நகரின் அருகே உள்ள மாண்டிவ்ரேய்ன் என்ற நகர் அருகே உள்ள பெருவணிக வளாகம் ஒன்றின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தப் புலி தென்பட்டதாக ஒரு பெண் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். இதனை அடுத்து, போலிசாரும் தீயணைப்பு வீரர்களும் அப்பகுதியில் இந்தப் புலியைத் தேட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்களும் இந்தத் தேடல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த விலங்கின் கால் தடங்களைப் பார்வையிட்ட வல்லுநர்கள், இது ஒரு இளம் புலியின் கால் தட…

  2. மேற்கத்திய நாடுகளின் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு இளம் வயதில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்காதவர்கள். அந்த வரிசையில் சேர்ந்து இருக்கிறார், கனடா நாட்டின் முன்னாள் பெண் துணை பிரதமர் ஷெய்லா காப்ஸ். தற்போது இவருக்கு 61 வயதாகிறது. அண்மையில் அவர் ஒரு பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில், ’நான் அரசியலுக்குள் புதுமுகமாக நுழைந்தபோது என்னை கட்சியின் 2 தலைவர்கள் பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டனர். இதில் ஒரு சம்பவம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பான ஆய்வுக்கான பயணத்தின்போது நிகழ்ந்தது என்று தடாலடியாக போட்டு உடைத்தார். அது என்னுடைய 28 வயது வயதில் நடந்தது. , என்னை பின்னே தள்ளி என்னை கட்டாயப்படுத்…

  3. போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர், இலவசமாக பெட்ரோல் வழங்கி வருகின்றனர். குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் காவல்துறையினர், இந்த வித்தியாசமான விழிப்புணர்வுத் திட்டத்தை தொடங்கியுள்ளனர். ராமோல் என்ற பகுதியில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், வாகன பதிவுச் சான்றிதழ், லைசென்ஸ், காப்பீடு, சீட் பெல்ட், தலைக்கவசம் அணிதல் ஆகியவற்றின் அடிப்படையில் 58 பேரை தேர்வு செய்தனர். சாலைப் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றிய காரணத்திற்காக அவர்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கினர். காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு அகமதாபாத் நகர பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இருவர் உதவியுள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=120713&ca…

  4. பாக்தாத்: ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி உயிருடன் தான் உள்ளார். அவர் பேசிய ஆடியோ டேப் வெளியிடப்பட்டுள்ளது. ஈராக்கின் மொசுல் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்நாட்டு படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி படுகாயம் அடைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் காலித் அல் ஒபைதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் சனிக்கிழமை அல் கைம் நகரில் நடந்த தாக்குதலில் தான் பாக்தாதி படுகாயம் அடைந்தார் என்று ஈராக் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. பாக்தாதி இறந்துவிட்டதாகவும், அவரது உடலை அவரது ஆதரவாளர்கள் அடக்கம் செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பாக்தாதி உயிருடன் உள்ளாரா இல்லையா என…

  5. 12-வது ஆசியான்-இந்தியா மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக மியான்மர் நாட்டுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி நே பி தா நகரில் உள்ள பார்க் ராயல் ஓட்டலில் தங்கி உள்ளார். நேற்று பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசிய மோடி, மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவியும், அந்த நாட்டில் ஜனநாயகத்துக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக குரல் கொடுத்து வருபவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியையும் சந்தித்தார். இந்த சந்திப்பு மோடி தங்கியிருந்த ஓட்டல் அறையில் நடந்தது. அப்போது இந்தியாவை தனது 2-வது தாய்நாடு என்று ஆங் சான் சூகி தெரிவித்தார். சூகியை மோடி சந்தித்து பேசியது இதுவே முதல் முறை ஆகும். சூகியின் தாயார் தா கின் யி 19…

  6. இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று முன்பு வர்ணிக்கப்பட்டது. மிகையான அழகும் வளமும் பொருந்திய இத்தீவு ஶ்ரீலங்கா மற்றும் தமிழீழம் ஆகிய இரு நாடுகளை கொண்டது. இதில் தமிழீழம் வளம் மிகுந்த பெரிய கடற்பரப்பையும் நிலவளங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்ட நாடாகும். தமிழ் தேசமெங்கும் சிங்கள இனவெறியர்களின் பயங்கரவாத கால்கள் ஊன்றியுள்ளன. தமிழ் மக்கள் ஒரு பெரும் திறந்த வெளிச்சிறைச்சாலையில் அதாவது உலகில் உள்ள மிகப் பிரமாண்டமான சிறையில் அடைபட்டுள்ளார்கள். இந்த மக்களின் விடிவுக்காக உலகில் வாழும் தமிழர்கள் யாவரும் மாபெரும் போராட்டங்களை செய்துவருகின்றார்கள். இதில் தமிழ்நாட்டு சொந்தங்களின் தியாகங்கள் அளப்பெரியது. தமிழ் மக்களின் இவ்வாறான ஶ்ரீலங்கா எதிர்ப்பு நடவடிக்கைகள் சிங்களம் உலக…

  7. ஜேர்மனியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் இருந்து சுமார் 450 பேர், சிரியாவிற்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களில் 150 பேர் நாடு திரும்பி விட்டதாகவும் உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தது. இந்நிலையில், மக்கள் நெரிசல் மிகுந்த வடக்கு ரினே வெஸ்ட்பாலியா மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை தேடும் வேட்டையில் 240 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கைதானவர்களுக்கு சொந்தமான எண்ணற்ற கட்டிடங்களில் அதிரடி சோதனைகளையு…

  8. காங்கிரஸ் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து, இதுவரை இல்லாத அளவுக்கு வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் காங்கிரஸ் கட்சி, மாநில கட்சிகளை அரவணைத்து செல்ல விரும்புகிறது. அதற்கு, நேருவின் பிறந்த நாளை பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது. இந்திய நாட்டின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்த நாளையொட்டி, டெல்லியில் வருகின்ற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் காங்கிரஸ் கட்சி சர்வதேச மாநாடு ஒன்றை நடத்துகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும்படி அந்த கட்சி, மாநில கட்சிகளின் தலைவர்களை அழைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, திரிணாமுல்…

  9. உலகளவில் சைபர் குற்றங்கள் தடுப்பது குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதுடெல்லியில் சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது மாணவன் சைபர் பாதுகாப்பு குறித்து பேச இருக்கிறார்.உலகளவில் இன்டர்நெட் மூலம் பல்வேறு குற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. நவீன யுக்திகளின் மூலம் வங்கிகளில் பணம் திருடப்படுகிறது. உலக நாடுகளின் முக்கிய ரகசியங்கள் ஹேக்கிங் மூலம் திருடப்பட்டு வருகிறது. இத்தகைய சைபர் குற்றங்களை தடுக்கும் நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்கான சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு புதுடெல்லியில் இன்று துவங்கியது. இம்மாநாட்டை மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் வி.கே.சிங் துவங…

  10. பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் வீதிகளில் துடைப்பம் ஏந்த பிரபல இந்தி நடிகர் ஷாரூக் கான் மறுத்துள்ளார். 'ஸ்வச் பாரத்' என்ற தூய்மை இந்தியா திட்டத்தை அக்டோபர் 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் இதுவரை திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டு குறிப்பிட்ட பகுதிகளை சுத்தம் செய்து, இந்தத் திட்டத்துக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தில் நேரடியாக இணைய முடியாது என்று ஷாரூக் கான் தெரிவித்துள்ளார். முதலில் தனிப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரும் தமக்கு தாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், தன் உள்ளத்தையும் …

  11. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு மற்றும் தமிழீழ விடுதலை போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடை பெறுகிறது. http://www.pathivu.com/news/35305/57//d,article_full.aspx

  12. அகதிகளின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது; அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அகதிகளின் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என தென்னிந்தியாவிலுள்ள அவுஸ்திரேலியா தூதரக பிரதிநிதி சீன்கெலி தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. கடந்த சில வருடங்களில் சுமார் 1200 பேர் கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையானது என நிரூபிக்கப்பட்டால், அவர்களை நாவுரு தீவில் குடியேற…

  13. மலேசிய விமானம் எம்.எச். 370 மாயமாகியுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனதலைநகர் பெய்ஜிங்ம் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசியன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் மாயமாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் காணாமல் போன மலேசிய விமானம் எம்.எச். 370 கடத்தப்பட்டிருக்கலாம் என்றும், குறித்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும். அதில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிரிழந்திருக்கலாமென பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த விபத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்தது. விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை இந்திய பெருங்கடலில் தேடும் பணி தீவிரமாக நடந்தது. இப்பணியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெர…

  14. நாடாளுமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் கொடுத்து வரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய்க்கு கவிஞர் வைரமுத்து தலைவராக உள்ள "வெற்றித் தமிழர் பேரவை' சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் தருண் விஜய் ஏற்புரை ஆற்றினார். விழாவில் முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா, தமிழறிஞர் அவ்வை நடராசன், முன்னாள் துணைவேந்தர்கள் க.ப.அறவாணன், ம.ராசேந்திரன், "அமெட்' பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், துரைமுருகன், ப…

  15. அதிக உற்பத்தி, டாலர் பலமடைந்து வருவது ஆகிய காரணங்களால் கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு பிரென்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று சரிந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இடையே 81.83 டாலருக்கு சரிந்தது. கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபருக்கு பிறகு இவ்வளவு அதிகமாக சரிவது இப்போதுதான். ஆனால் ஐரோப்பிய சந்தைகள் செயல்பட ஆரம்பித்தவுடன் கச்சா எண்ணெய் சிறிதளவு உயர்ந்தது. எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடியாது என்று குவைத் நாட்டின் எண்ணெய் அமைச்சர் அலி அல் ஓமியார் கடந்த மாதம் வியன்னாவில் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை 30 சதவீத அளவுக்கு கச்சா எண்ணெய் சரிந்தது. எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைத்தால் மட்டுமே சரிந்து வரும் விலையினை கட்டுப்படுத்த முடியும் …

  16. டெல்லி: வரும் 24ம் தேதி இலங்கைக்கு செல்கிறேன். திரும்பி வருகையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களுடன் வருவேன் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொழும்பு உயர் நீதிமன்றம் அந்த 5 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர்களை இந்திய சிறைக்கு மாற்ற ராஜபக்சே ஒப்புக் கொண்ட…

  17. மாநாட்டில் பேசும் அதிபர் ஒபாமா | படம்: ஏஎப்பி ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள தங்கள் நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேச மாட்டார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில், கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. 7,8-ம் தேதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின் உட்பட ஜப்பான், தென்கொரியா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பெய்ஜிங் வந்தடைந்தார். விமான நிலையத்தில் …

  18. Started by Athavan CH,

    ஹா – ஹாங்காங் -1 பொருளாதாரத்தில் அப்படி யோர் அப்பப்பா வளர்ச்சி! எனவே அந்த நான்கு பகுதிகளையும் ‘ஆசியப் புலிகள்’ என்று கூறுகிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதத்துக்கும் அதிகம் என்கிற அளவில் பொரு ளாதார வளர்ச்சி. வெகு வேகமான தொழில் முன்னேற்றம். சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகியவற்றுடன் கைகோத்து கர்வம் பொங்க இப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பகுதி ஹாங்காங்.ஹாங்காங் என்றால் சீன மொழியில் ‘‘நறுமணம் வீசும் துறைமுகம்’’ என்று பொருள். ஆனால் இன்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் ‘’எங்கள் மூச்சுக் காற்றே தடை பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நறுமணத்தை எங்கே சுவாசிப்பது?’’ என்கிறார்கள் விரக்தியோடு. அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பதுதான் இப்போதை க்கு அவர்களுக்கான சுவாசம். …

  19. துபாய் மாநகரில் புதுசு - ட்ராம் சேவை மிக வேகமாக வளர்ந்து வரும் துபாய் நகரின் நவீன நகர் பகுதியான துபாய் மெரீனா - ஜுமைரா பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 10.6 கிமீ தூரத்திற்கு துபாய் ட்ராம் சேவையை இன்று மாலை துபாய் அமீரகத்தின் அரசர் 'ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும்' கொடியசைத்து திறந்து வைக்கிறார். நாளை புதன் கிழமை(12-11-2014) காலை 6.30 மணி முதல் பொது மக்களுக்கான ட்ராம் சேவை ஆரம்பமாகிறது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான அல் சுஃபா முதல் ஜுமைரா பீச் ரெசிடென்ஸ் வரைக்குமான 10.6 கி.மீ தூர பாதையில் 11 நிலையங்களை கொண்டுள்ளது. ஒரு பயணத்தில் 405 பயணிகளை ஏற்றிச் செல்ல ஏழு பெட்டிகளைக் கொண்டது இந்த ட்ராம். இதில் சிறப்பம்சம் என்னவெனில் இந்த ட்ராம் சேவைக்கான பின் கம்பி…

  20. 2ஜி வழக்கில் கனிமொழிக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் பிறப்பிக்கப்படவிருந்த பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஆஜராகாத திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி கூறினார். இதைத் தொடர்ந்து கனிமொழி சார்பில் அவரது வழக்கறிஞர் நேரில் ஆஜரானார். அப்போது, கனிமொழி ஆஜராகாததற்கான காரணம் குறித்து வழக்கறிஞர் கூறினார். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கனிமொழிக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பதைக் கைவிட்டார். http://seithy.com/breifNews.php?newsID=120489&category=IndianNews&language=tamil

  21. விருதுநகரில் பெண் போலீஸ்காரர் யாருக்குச் சொந்தம் என்ற சண்டையில் அந்தப் பெண் போலீஸ்காரர் வீட்டு முன்பு கூடி நடு ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர் இரண்டு தலைமைக் காவலர்கள். இதையடுத்து இருவரையும் இடமாற்றம் செய்துள்ளார் மாவட்ட எஸ்.பி. விருதுநகர் காவல்நிலையம் ஒன்றில் பணிபுரியும் பெண் போலீஸ்காரர் ராசாத்தி (நிஜப் பெயர் அல்ல). இவருக்குத் திருமணமாகி விட்டது. லட்சுமி நகரத்தில் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் பணியாற்றும் ஒரு ஏட்டு மற்றும் எஸ்பி ஆபீஸில் வேலை பார்க்கும் இன்னொரு ஏட்டு என ஒரே நேரத்தில் இரண்டு பேருடனும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஆனால் இந்த இரண்டு ஏட்டுக்களுக்கும் ராசாத்தி எனக்குத்தான் சொந்தம் என்று அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 3 நாட்களுக்கு …

  22. டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மொத்தமே 7 பேர்தான் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதுவும் அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்த போது தமிழகத்தைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் மட்டுமே இணை அமைச்சரானார். அப்போது லோக்சபா தேர்தலில் வெற்றி பெறாத நிலையிலும் கூட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோரும் கூட அமைச்சர்களாகக் கூடும் என்று பேசப்பட்டது. அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணிக்கும் கூட அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதனால் தேமுதிக, மதிமுக, பாமக ஆகியவை கடும…

  23. போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக பா.ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொடர்புகொண்டு பேசியதை தொடர்ந்து இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளதாக சுவாமி தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ராஜபக்சேவுடன் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதமிழக மீனவர்கள் 5 பேரை இந்திய சிறைக்கு மாற்றவும், அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கவும் ராஜபக்சே சம்மதித்தார்" என அதில் சுவாமி கூறியுள்ளார். இதனிடையே இலங்கை அதிபர் ராஜ…

  24. முத்த போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி மாணவ-மாணவிகள் கட்டிப்பிடி போராட்டம் நடத்தினர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இளம் பெண்களும் வாலிபர்களும் நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் நமது கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதில் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க. இளைஞர் அணியினர், அந்த ஓட்டலை அடித்து சூறையாடினார்கள். இதற்கு குறும்பட இயக்குனர் தலைமையில் சுதந்திர சிந்தனையாளர்கள் என்ற இணைய தள அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து தாக்குதல் நடந்த ஓட்டல் அருகே பொது இடத்தில் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்க்க ஏராளமானோர் கூடியதால் அங்கு மோதல் ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்தினர். மேலும்…

  25. இறந்தவர்களின் ஆவி பேய் ஆக அலைந்து திரிவதாக கதைகள் வெளிவருகின்றன. பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற சர்ச்சை நிலவி வருகிறது. ஆனால் இதற்கிடையே ஆய்வகத்தில் செயற்கையாக பேயை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஓலாப் பிளாங்கி தலைமையிலான குழு பரிசோதனை கூடத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேயை போன்ற மாயதோற்றத்தை உருவாக்கினர். நரம்புதளர்ச்சி மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு பேய் போன்ற மாயத்தோற்றம் தோன்றும். அதையே பேய் என நம்புகின்றனர் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நரம்பு தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட 12 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. http://www.maalaimalar.com/2014/11/08133051/scientists-made-artificial-…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.