உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
உக்ரேனில் டொனெட்ஸ்க் விமான நிலையத்துக்கு அருகில் ஷெல் தாக்குதல்கள் - 36 மணி நேர யுத்த நிறுத்தம் முறிவடையும் அபாயம் கிழக்கு உக்ரேனில் டொனெட்ஸ்க் விமான நிலையத்துக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. மேற்படி தாக்குதல்களானது பிராந்தியத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள 36 மணி நேர யுத்த நிறுத்தம் முறிவடையக்கூடும் என்ற அச்சத்தை தோற்றுவிக்கவுள்ளது. சனிக்கிழமை இரவு மரியுபோல் நகரில் இடம்பெற்ற தொடர் ஷெல் தாக்குதல்களையடுத்தே டொனெட்ஸ்க் விமான நிலையத்துக்கு அருகிலான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. உக்ரேன் ரஷ்யா கிளர்ச்சியாளர்கள் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பின் பேச்சுவார்த்தைகளையடுத்து 12 அம்ச சமாதான உடன்படிக்கையொன்…
-
- 0 replies
- 282 views
-
-
எரிபொருள் தயாரிக்கும் கருவியை வடிவமைத்த மாணவி! Video News [saturday 2014-09-06 19:00] சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சித்ரா தியாகராஜன் என்பவர் பிளாஸ்டிக் கழிவிலிருந்து எரிபொருள் தயாரிப்பதற்கான கருவியை வடிவமைத்துள்ளார். 10 கிலோ பிளாஸ்டிக்கிலிருந்து 8 லிட்டர் டீசல் எரிபொருளைத் தயாரிக்கும் விதத்தில் இவரது கருவி உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு முயற்சியில் உருவான இந்தக் கருவிக்கு காப்புரிமை கோரியுள்ளார் சித்ரா. இதுகுறித்து சித்ரா கூறும்போது..பெட் பாட்டில்கள் தவிர மற்ற எல்லாவிதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் இந்தக் கருவிக்குள் போட்டு குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடுபடுத்தும்போது கிடைக்கும் எரிபொருளை டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்கிறார் சித்ரா....! www.seithy.c…
-
- 0 replies
- 537 views
-
-
Scientific Tamil Workshop தமிழ் மேடைகளுக்கு அறுவை சிகிச்சை தமிழ் மேடைகள் என்றால்…. நிறைய நிறைய தற்புகழ்ச்சி இருக்கும் சுய இகழ்ச்சி கூறும் நகைச்சுவை இருக்கும் என்கிற குறைவான நிலையை மாற்றுவோம் இப்படியானவர்களை விரட்டியடிக்க வேண்டும் நம் இனத்தை இந்த வேடிக்கை மனிதர்களிடம் இருந்து காக்க வேண்டும் உலகத்தரமான அறிவியல் தமிழ் மேடைகளை உருவாக்குவோம். நாளைய தலைமுறையை தமிழின் பக்கம் அழைத்து வர வேண்டும். முதல் அறிவியல் தமிழ் பயிலரங்கம் செப்டம்பர் 20 ஆம் தேதி பாண்டிச்சேரியில் அரியாங்குப்பம் பகுதியில் அறிவியல் தமிழ் மன்றத்தால் நிகழவிருக்கிறது. மேடையில் உள்ளவர் பேச்சிலிருந்து கேள்விகள் வினாத்தாளில் கொடுக்கப்படும். கவனித்து - சரியான பதில் எழுதி அதிக புள்ளிகளை பெறு…
-
- 2 replies
- 462 views
-
-
காஷ்மீரில் வெள்ளம் சூழந்த கிராமங்களில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியில் மீட்புப் படையினர் தீவிரம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். ஜம்மு - காஷ்மீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. காஷ்மீரில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் 10 மாவட்டங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளன. சுமார் 2500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ரஜோரி மாவட்டத்தில் வியாழக்கிழமை 63 பேர…
-
- 0 replies
- 500 views
-
-
செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்கர்களுக்கு ஒரு கறுப்பு தினம். கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திததி தீவிரவாதிகளால் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் விமானம் மூலம் தாக்குதலுக்குள்ளானது. இந்நிலையில் இம் மாதம் 11ஆம் திகதி அதே போன்று ஒரு கறுப்பு தினமாக மாறலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள விமான நிலையத்தின் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்திய போராளிகள் அங்குள்ள விமானங்களின் இறக்கைகள் மீது தாம் ஏறி நிற்கும் காட்சிகளை இணையத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் அந்த விமான நிலையத்திலிருந்து 11 விமானங்கள் காணாமல் போயுள்ளமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. திரிபோலி விமான நிலையத்தின் மீது தாக்குதலை நடத்திய போராளிகள் அங்கிரு…
-
- 5 replies
- 898 views
-
-
புதுடெல்லி: அல் கய்தா பயங்கரவாத அமைப்பின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். ஜிஹாதிஸ்டுகளுக்கான இணையதளத்தில் இது தொடர்பான விடியோ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியும், ஜிகாத் கொடியும் ஏற்றிவைக்கப்படும் என தெரிவித்துள்ள அல்கய்தா தலைவர், இஸ்லாமியர்களை பிரித்து வைத்துள்ள எல்லைகளை அல் கய்தா அமைப்பு ஒன்றிணைக்கும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் செயல்படும் தங்கள் இயக்கம், இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்தும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று ஜவஹிரி கூறியுள்ளார். மேலும், மியான்மர் மற்றும் வங்கதேசத்திலும் தாங்கள் போர் தொடுப்போம் என தெரிவித்துள்ள அவர், தலிபான் இயக்க தலைவர…
-
- 2 replies
- 595 views
-
-
சென்னை: பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. கர்நாடக மாநில எல்லையில் வசித்த தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் கடந்த 1 ஆம் தேதி ஓசூர் மெயின் ரோட்டில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் கெங்கேரியில் உள்ள பி.ஜி.எஸ். குளோபல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் அவரது உடல் நிலை மோசமாகி மூளைச்சாவு அடைந்தார். இந்த தகவல் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டத…
-
- 0 replies
- 271 views
-
-
ராகுல் சஹாரனின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத் தொகுப்பில் இருந்து. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 5 பெண்களின் புகைப்படத் தொகுப்பு வெளியாகி, இந்தியாவில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. ‘திராவகத் தாக்குதலை நிறுத்துங்கள்’ அறக்கட்டளை சார்பில் ராகுல் சஹாரன் என்பவர், திராவகத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 5 பெண்களை வைத்து 41 புகைப்படங்களைக் கொண்ட ஆவணத் தொகுப்பை உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள், பேஸ்புக் தளத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்பட்டன. அப்போதிருந்து பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளன. இவற்றைப் பலரும் சமூக இணைய தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தொலைக்காட்சிகளும் நாளிதழ்க ளும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. பெண்களுக்கு எதிராக நடக்கும் திராவகத் தாக…
-
- 0 replies
- 829 views
-
-
அமெரிக்க பத்திரிக்கையாளர் ஸ்டீவன் சட்லாப் ஐஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு தான் கடத்தி பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த அமெரிக்க பத்திரிக்கையாளர் ஸ்டீவன் சட்லாபின் தலையை வெட்டிக்கொல்லும் காட்சியை காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அந்த காணொளியில் சட்லாப் நீளமான முழு உடலுக்குமான ஆடை அணிந்த நிலையில் முட்டிக்கால் போட்டு இருப்பது போலவும், அவருக்கு அருகில் இஸ்லாமிய அரசு அமைப்பைச் சேர்ந்தவர் கத்தியுடன் இருப்பது போலவும் காட்டப்படுகிறது. முகமூடியணிந்த நபர் ஒருவர் தாம் பிடித்துவைத்திருக்கும் மற்றும் ஒரு பணயக்கைதி குறித்து எச்சரிக்கை விடுப்பதோடு இஸ்லாமிய அரசுக்கு எதிராக கூட்டணி அமைத்திருக்கும் நாடுகளின் அரசுகள் தங்களின் கூட்டணியை …
-
- 5 replies
- 751 views
-
-
நவாஸ் ஷெரீப்புடன் ராணுவ தளபதி திடீர் சந்திப்பு- பதவி விலக வலியுறுத்தல்? பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் பதவி விலகும்படி பாகிஸ்தான் ராணுவ தளபதி நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை பாகிஸ்தான் அரசும் ராணுவமும் மறுத்துள்ளன. நவாஸ் ஷெரீப் பதவி விலகக் கோரி இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், மதகுரு தாஹிர் உல் காத்ரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியும் இணைந்து தீவிர போராட்டத்த்தை நடத்தி வருகின்றன. இதனால் தலைநகர் இஸ்லாமாபாத் போர்க்களமாக காட்சி தருகிறது. இந்த கலவரம் லாகூர், கராச்சி நகரங்களுக்கும் பரவி உள்ளது. ஆனால் நவாஸ் ஷெரீப் பதவி விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். கிளர்ச்சியாளர்களுக்கும் போலீசா…
-
- 2 replies
- 452 views
-
-
ஹைதராபாத்தில் தானமாக அரிசி வழங்கும் மஞ்சுலதா| கோப்புப் படம். ரைஸ் பக்கெட் சேலஞ்சை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஐஸ் பக்கெட் சாலஞ்ச்' இணையத்தில், மெகா ஹிட்டாக இந்தியாவில் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரச்சாரம் தொடங்கியது. ஒரு வாலி நிறைய ஐஸ் கட்டிகள் கலந்த தண்ணீரை எடுத்து அதை அப்படியே தலையில் கொட்டிக் கொள்வது தான் ஐஸ் பக்கெட் சாலஞ்ச். ஏ.எல்.எஸ் (Amyotrophic lateral sclerosis) எனப்படும் நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேர்க்கவும் இந்த ஐஸ் பக்கெட் சவாலை பிரபலங்கள் பலர் மேற்கொண்டனர். இது இணையத்தில், மெகா ஹிட்டாக இ…
-
- 0 replies
- 570 views
-
-
'ரஷ்ய ஆதரவு ஆயுதக்குழுவினருடன் யுக்ரெய்ன் நேரடியாகப் பேசவேண்டும் என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடு' கிழக்கு யுக்ரெய்னுக்குரிய 'தேச அந்தஸ்து' தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தப் பிராந்தியத்தில் தொடரும் மோதல்களுக்கு முடிவு காண்பதற்கான முயற்சிகளின் அங்கமாக இந்த பேச்சுக்கள் அமையவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ரஷ்ய ஆதரவு ஆயுததாரிகளுடன் யுக்ரெய்ன் நேரடி அமைதிப் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும் என்று ரஷ்யாவிடமிருந்து அழுத்தம் அதிகரித்துவருவதையே இந்த கோரிக்கை காட்டுவதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.கிழக்கு யுக்ரெய்னில் வாழும் மக்களின் 'சட்டபூர்வ நலன்களை' பாதுகாக்க வேண்டும் என்றும் ரஷ்ய அ…
-
- 3 replies
- 520 views
-
-
ஆஸ்திரேலியாவில் ஓர் அதிசய சிவன் கோவில் - குகையினுள் அதிசய பெட்டகம்! [Monday 2014-09-01 22:00] ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியின் புறநகர் பகுதியான மிண்ட்டோவில் உலகிலேயே முதன்முதலாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட குகைக் கோயிலினுள் 4.5 மீட்டர் உயரமுள்ள பளிங்குக்கல்லினால் ஆன சிவபெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 'முக்தி குப்தேஸ்வரர் கோயில்' என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபெருமானின் சிலை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரனாசியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. ஒற்றை பளிங்குக்கல்லில் வடிக்கப்பட்ட இந்த அழகிய சிலை, சிவபெருமான் நான்கு கரங்களுடன் அமர்ந்திருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் பின்புறத்தில் நிமிடத…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஏழை குடும்பத்தில் ஒரு பேருந்து ஓட்டுநரின் மகளாகப் பிறந்த நவநீதம் பிள்ளை! ஓயாது ஓடி ஓய்வு பெறுகிறார். [Monday 2014-09-01 22:00] 1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பிறந்த ஒரு தமிழரான நவநீதம் பிள்ளை ஓர் இந்திய வம்சாவளிப் பெண். தென்னாப்பிரிக்காவின் இன வெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பிறகு அந்நாட்டின் உயர் நீதி மன்றத்து க்கு தேர்வுசெய்யப்பட்ட வெள்ளையினத்தவரல்லாத முதல் நீதிபதி என்ற பெருமைக்குரியவர். இவர் நிறவெறி மிகுந்த தென் ஆப்பிரிக்கா வில், நீதிபதியாக உயர்ந்ததே மாபெரும் சாதனைதான். இப்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளராக அகில உலகமும் வியப்புடன் பார்க்கும் உயரத்தில் ஜொலிக்கிறார். இந்த நீதி தேவதை. சமீபத்தில், தன் முன்னோர்கள் பிறந்த பூமியான இந்தியாவுக்கு …
-
- 0 replies
- 888 views
-
-
அலிகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்து மதத்துக்கு மீண்டும் திரும்பிய பொதுமக்கள். படம்: மனோஜ் அலிகடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மதம் மாறிய சுமார் 4 ஆயிரம் பேர் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பியுள்ளதாக பஜ்ரங் தளம் தெரிவித்துள்ளது. டெல்லியை ஒட்டியுள்ள உபியின் மேற்குப் பகுதி சுமார் 20 ஆண்டுகளாக மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்தது. மேலும் அப்பகுதியைச் சேர்ந்த உயர் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு பொது இடங்களில் சம உரிமையும் கல்வியும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலிலிருந்து விடுதலை பெறும் பொருட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இந்து மதத்திலிருந்து…
-
- 0 replies
- 531 views
-
-
தனிக்கட்சி தொடங்குகிறார்.... நடிகர் ரஜினிகாந்த்! பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு!! சென்னை: தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார்.. என்ற பேச்சு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.. ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி ரசிகர்களும் அவருக்கு நெருக்கடி கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மோடி சந்திப்பு. லோக்சபா தேர்தலின் போது சென்னைக்கு பிரசாரத்துக்கு வந்த நரேந்திர மோடி, ரஜினி வீட்டுக்கே சென்று சந்திக்க அரசியல் அரங்கில் ப…
-
- 14 replies
- 1.2k views
-
-
ஒரு அப்பாவியை, ஒரு கோமாளியை, ஒரு மனநோயாளியை.. கண்டுபிடித்து தனது எதிரியாகவும் மக்கள் தலைவனாகவும் மாற்றி ஏகாதிபத்தியங்கள் சமூகத்தை அழிப்பதை நாங்கள் கண்முன்னால் காண்கிறோம். இவ்வாறான நடைமுறைகள் நூற்றாண்டுகளுக்கு முன்னமே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. மோகன் தாஸ் கரம்சாண்ட் காந்தி என்ற குஜராத்தில் பிறந்த குரூரம் மிக்க மனநோயாளியை பிரித்தானிய காலனியாத்திக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பி இந்திய மக்களின் விடுதலை வீரனாக்கிய அவமானம் இன்று வரை இந்தியாவைத் தின்று தொலைக்கிறது. நிறவாதி, ஆதிக்க சாதி வெறியன், நாசிகளின் ஆதரவளான், பாலியல் நோயாளி போன்ற குரூரமான மனோவியாதி படைத்த காந்தி மகாத்மா காந்தியான கதை தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கிறது. தேசிய அரசியல் என்ற அடிப்படையில் கூட குறைந்தபட்ச அரசியலைக்கூட …
-
- 0 replies
- 837 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா.| படம்:ஏ.பி முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது அமெரிக்காவின் தலைமை உலக நாடுகளுக்குத் தேவைப்படுகிறது என்றும், தமது நாட்டுக்கு சீனாவோ ரஷ்யாவோ போட்டியாக இல்லை என்றும் அந்நாட்டின் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசும்போது, "உண்மையை கூற வேண்டும் என்றால், உலகில் தற்போது ஒழுங்கில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. சமூக வலைதளங்களும் சில வசதிகளும் இந்த விஷயங்கள் குறித்து அவ்வப்போது தெரிந்துகொள்ள உதவுகின்றன. முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது அமெரிக்காவின் தலைமை இந்த உலகிற்கு தேவைப்படுகிறது. நமக்கு சீனாவோ அல்லது ரஷ்யாவோ ஒரு போட்டியே இல்லை. நாம் கொண்டுள்ள கருத்…
-
- 1 reply
- 532 views
-
-
ஐநா என்பது அவசியமில்லை. அது அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு மட்டும் சார்ப்பாக இருப்பது என்றால். இந்த நிலையில்.. ஐநா அமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. உக்ரைன் அங்கு வாழும் ரஷ்சிய மொழி பேசும் மக்கள் மீது நடத்தும் தாக்குதல் ஜேர்மனியின் ஹிட்லர் லெனின்கிராட்டை குண்டுகளால் தாக்கியதையே நினைவு படுத்துகிறது.. என்றும் கூறியுள்ளார்.. புட்டின். இதே ரஷ்சியாவும்.. உக்ரைனும் தான் சிறீலங்கா சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகளும் செய்து.. போர்வீரர்களையும் அனுப்பி.. ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களையும் திசைதிருப்பி தமிழ் மக்கள் மீது பேரழிவை கொண்டு வந்தவர்களில்... இந்தியா சீனா பாகிஸ்தானுக்கு அடுத்தப்படியாக இருந்து செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'Anything U…
-
- 3 replies
- 627 views
-
-
சீன-இந்திய எல்லை வட கிழக்கு பகுதியில் சீன ஜெட் விமானங்கள் , ஹெலிகாப்டர்கள் ஆளில்லா விமானங்களுக்கு எதிராக இந்தியா 6 ஆகாஷ் ஏவுகணைகளை அங்கு நிறுவ தொடங்கி உள்ளது இந்திய விமானப்படை அங்குள்ள படைப்பிரிவுகளுக்கு 6 ஆகாஷ் ஏவுகணைகளை வழங்கி உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.இது எல்லா காலநிலைகளிலும் செயல்பட கூடிய 25 கிலோமீட்டர் தூரத்தில் எதிரி நாட்டு விமானத்தை வானத்திலேயே தாக்கி அழிக்க கூடிய திறன் கொண்டதாகும். ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் தொடங்கி, முழு பணிகள் 1997 இல் முடிந்தன. புனேவில் உள்ள குவாலியர் சுகோய் மிரஜ் -2000 தளத்தில் 2 ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய விமானப்படை நிறுவி உள்ளது. வடக்கு எல்லைகளில் அச்சுறுத்தல்களுக்கு எதிரா…
-
- 14 replies
- 1k views
-
-
இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவதற்காக போராடிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. வடக்கு ஈராக்கில் நிலைகொண்டு நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இந்த அமைப்பினர் அங்கு வசிக்கும் யசீதி இன பெண்களை கடத்திச் சென்று பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் இஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஈராக்கின் வட பகுதியிலுள்ள பாரிய சிறைச்சாலையிலிருந்து தப்பி வந்த பெண்கள் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். நாளொன்றுக்கு 25 முதல் 150 டொலர்களுக்கு அப்பெண்கள் பாலியல் தொழிலுக்கா…
-
- 0 replies
- 593 views
-
-
பிரதமர் மோடி பங்கேற்கும் விருந்துகளில் வைன், அசைவ உணவுக்கு தடை! டெல்லி: 'பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விருந்துகளில், அசைவ உணவுகள் தயார் செய்யவோ, பரிமாறவோ கூடாது' என, பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. பிரதமர் அலுவலகம் சார்பில், அனைத்து அமைச்சகங்கள், உயர்அலுவலகங்கள், வெளிநாடுகளில்உள்ள இந்திய துாதரக அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு, ஒரு குறிப்பு அனுப்பப்பட்டு உள்ளது. அசைவ உணவுக்குத் தடை. அதில்,எந்த காரணத்தாலும், பிரதமர் பங்கேற்கும் விருந்துகளில், அசைவ உணவுகளை பரிமாறக் கூடாது. அதேபோல், ஒயின் பரிமாறுவதையும் தவிர்க்க வேண்டும். இந்திய தூதரகங்கள். பிரதமர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது, ஏதாவது விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டால், இந்த உத்தரவை செ…
-
- 4 replies
- 508 views
-
-
இன்று முதல் அனைவருக்கும் வங்கிக் கணக்கு- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் டெல்லி: அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னையில் நடைபெறும் இதற்கான விழாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ (பிரதமர் மக்கள்-நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். இத்திட்டம் நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை நோக்கமாக கொண்டது. இன்று முதல் அனைவருக்கும் வங்கிக் கணக்கு- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் இந்த திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7.5 கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதியுடன் வங்கிக்…
-
- 0 replies
- 541 views
-
-
பிரிட்டிஷ் அதிகார கட்டமைப்பு என்பது இன்னமும் பெருமளவு மேட்டுக்குடி செல்வந்தர்கள் நிரம்பிய ஒன்றாக இருப்பதாக பிரிட்டிஷ் அரசுக்கு ஆலோசனை சொல்லும் அமைப்பு எச்சரித்திருக்கிறது. பிரிட்டிஷ் பொதுச்சேவைகளில் இன்னமும் தனியார் பள்ளிகளிலும், ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும் கல்விகற்றவர்களின் ஆதிக்கமே அதிக அளவு மேலோங்கி இருப்பதாக பிட்டனின் சமூக முன்னேற்றம் மற்றும் சிறார் மத்தியில் நிலவும் ஏழ்மை குறித்த ஆணையம் விமர்சித்திருக்கிறது. ஒட்டுமொத்த பிரிட்டனில் வெறும் ஏழு சதவீதம் பேர்தான் தனியார் பள்ளிகளில் கல்வி கற்றவர்கள். ஆனால் இந்த ஏழு சதவீதம் பேரில் நாட்டின் மூத்த நீதிபதிகளாக 71 சதவீதம் பேர் பணிபுரிகிறார்கள். ராணுவ உயர் அதிகாரிகளாக 62 சதவீதம் பேர் பணியி…
-
- 0 replies
- 529 views
-
-
பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி சுதாகரன் ஆகியோர் மீது 1997ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 1998ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிந்து ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இந்த நிலையில் சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் நேற்று தனது இறுதி வாதத்தை ந…
-
- 0 replies
- 337 views
-