Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆளில்லாத சிறு விமானங்களை (டிரோன்) பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு, பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை, அமேசான் நிறுவனம், பெங்களூரில் செயல்படுத்த உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சிறு விமானங்கள் மூலம், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக, அமெரிக்க ஆன் லைன் விற்பனை நிறுவனமான அமேசான், கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. திட்டத்தை, முதன்முதலில் செயல்படுத்த அமெரிக்காவை தேர்வு செய்திருந்தது. ஆனால், இப்போது பெங்களூரில் திட்டத்தை செயல்படுத்த, ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. பெங்களூரு உள்ள, பிலிப்கார்ட் நிறுவனத்தால், இந்தியாவில் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ள, அமேசான் நிறுவனம், பெங்களூரில், தொழிலை விரிவுபடுத்த ஆர்வம் காட…

  2. ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான அக்னுார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து சுரங்கப்பாதை அமைத்துள்ளதை இந்திய ராணுவம் கண்டுபிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,நாங்கள் எல்லைப்பகுதியில் உள்ள சாக்லா ராணுவ முகாம் சுற்றுவட்டாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக குகை பள்ளத்தாக்கு போன்று ஓரு பகுதி வளைந்து சென்றது. அங்கு சென்று பார்த்தபோது, இச்சதிவேலையில் பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்திருப்பாதாக உணர்ந்தோம். கடந்த ஜூலை 22ல் இவ்வழியாக வந்துதான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=115485&category=IndianNe…

  3. சீன-இந்திய எல்லை வட கிழக்கு பகுதியில் சீன ஜெட் விமானங்கள் , ஹெலிகாப்டர்கள் ஆளில்லா விமானங்களுக்கு எதிராக இந்தியா 6 ஆகாஷ் ஏவுகணைகளை அங்கு நிறுவ தொடங்கி உள்ளது இந்திய விமானப்படை அங்குள்ள படைப்பிரிவுகளுக்கு 6 ஆகாஷ் ஏவுகணைகளை வழங்கி உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.இது எல்லா காலநிலைகளிலும் செயல்பட கூடிய 25 கிலோமீட்டர் தூரத்தில் எதிரி நாட்டு விமானத்தை வானத்திலேயே தாக்கி அழிக்க கூடிய திறன் கொண்டதாகும். ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் தொடங்கி, முழு பணிகள் 1997 இல் முடிந்தன. புனேவில் உள்ள குவாலியர் சுகோய் மிரஜ் -2000 தளத்தில் 2 ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய விமானப்படை நிறுவி உள்ளது. வடக்கு எல்லைகளில் அச்சுறுத்தல்களுக்கு எதிரா…

  4. கடந்த மார்ச் 8ல் எம்.எச்.370 என்ற போயிங் விமானம் அதன் 239 பயணிகளுடன் மாயமானது. மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ல் பயணம் செய்த பயணிகள் பிராண வாயு இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியிருக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்புக்குள்ளாகியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அந்த விமானத்தின் பைலட் அகமது ஷா வேண்டுமென்றே பிராண வாயு தொடர்பைத் துண்டித்திருக்கலாம் என்ற பீதி எழுந்துள்ளது. இந்த புதிய தகவலை நியூசிலாந்தில் உள்ள விமான விபத்துக்கள் பற்றிய ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிகையில் இது பற்றிய கட்டுரை வெளிவந்திருக்கிறது. ஆனால் அது பற்றி இன்னமும் தெளிவாக ஒன்றும் கூற முடியவில்லை. நியூசிலாந்தின் கிவி ஏர்லை…

  5. 5 பேரின் தலையையும் கொண்டுவந்தால் 30 மில்லியன் டொலர் பரிசு news பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தலீபான் ஆதரவு தீவிரவாத இயக்கமாக ஹக்கானி தீவிரவாத இயக்கம் செயற்பட்டு வருகின்றது. இதன் முக்கிய தலைவர்களாக செயற்பட்டு வரும் 5 பேரின் தலைக்கு அமெரிக்கா 30 மில்லியன் டொலர் (சுமார் 183 கோடி இந்திய ரூபா) விலை அறிவித்துள்ளது. இவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதுடன் வேறு பல தாக்குதல்களையும் அரங்கேற்றியவர்கள் ஆவார்கள். இதுதொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிவிக்கையில், ஹக்கானி இயக்கத்தின் முன்னணி தலைவர்களான அஜிஸ் ஹக்கானி, கலில் அல் ரகுமான் ஹக்கானி, யாஹ்யா ஹக்கானி, அப்துல் ராவுப் ஹக்கானி ஆகிய 4 பேரின் தலைகளுக்கு தலை 5 மில்ல…

  6. சில ஆபிரிக்க நாடுகளுக்கான ஒன் அரைவில் வீசா இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நான்கு ஆபிரிக்க நாடுகளினது ஒன் அரைவில் வீசா இவ்வாறு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எபோலா வைரஸ் தாக்கம் காரணமாக இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நைஜீரியா, கானா, சியரே லியோன் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளினது பிரஜைகளக்கு வழங்கப்பட்டு வந்த ஒன் அரைவல் வீசா முறைமையே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110798/language/ta-IN/article.aspx

  7. ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய எரிமலையான பர்டர்புங்கா எரிமலை அமைந்துள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து புவியியலாளர்கள் 300க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களைக் கணக்கிட்டுள்ளனர். இந்த நிலை அதிர்வு நடவடிக்கை ஒரு எரிமலை வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டில் அங்குள்ள எய்ஜப்ஜள்ளஜோகுல் எரிமலை வெடித்தபோது அதிலிருந்து சிதறப்பட்ட சாம்பல் துகள்களால் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பெரும்பாலான ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்து மூடப்பட்டது. இப்போதும் எச்சரிக்கைக் குறியீட்டின் நான்காவது தர நிலையான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதால் இதுபோன்றதொரு பாதிப்பு நிகழக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது. தலைந…

  8. இந்தியர்களின் விருப்பமான வெளிநாட்டு சுற்றுலா தளங்களில் முதலிடத்தை துபாய் நகரம் பிடித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக முதலிடத்தை பிடித்திச்ருந்த பாங்காக்கை பின்னுக்கு தள்ளி துபாய் முதலிடத்துக்கு வந்துள்ளதாக ஹோட்டல்.காம் என்ற இணையதளம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங் , பட்டையா போன்ற தென்கிழக்கு ஆசிய நகரங்களும் இந்தியர்களின் முக்கிய வரிசையில் உள்ளது. நியூயார்க்கும் லண்டனும் இந்தியர்களின் 4ம் மற்றும் 5ம் இடத்தில் உள்ளன. சென்ற வருடம் 10 இடத்தில் இருந்த பாரிஸ் தற்பொழுது 8 ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. லாஸ்வேகஸ் 9ம் இடத்திலும் கோலாலம்பூர் 10 இடத்திலும் உள்ளது.அதே சமயம் வெளிநாட்டவருக்கு பிடித்த இந்திய நகரங்களில் டெல்லி, மும்பை, கோவா, பெங்களூரு,…

  9. ராஜஸ்தானின் பிர்லா தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவன மாணவர்களுக்கு (BITS) ஆண்டுக்கு ரூ1.40 கோடி ஊதியம் தர கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது. ராஜஸ்தானின் பிலானி பி.ஐ.டி.எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கடந்த ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனமானது ஆண்டுக்கு ரூ 1.44 கோடி ஊதியம் அளித்து பணியில் அமர்த்தியது. போட்டா போட்டி தற்போதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூக வலைதளங்கள், இ காமர்ஸ் நிறுவனங்கள் பி.ஐ.டி.எஸ். மாணவகளுக்காக கேம்பஸ் இண்டர்வியூ நடத்துகின்றன. கடந்த ஆண்டு வழங்க முன்வந்த ஊதியத்தை விட 5 முதல் 25% வரை கூடுதலாக வழங்க இந்த நிறுவனங்கள் முன்வந்துள்ளன. கூகுள் நிறுவனமானது ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ1.40 கோடி தர முன்வந்துள்ளது. அதே நேரத்தில் பி.…

  10. கங்கையை சுத்தபப்டுத்தும் திட்டத்தில் இணைய தெற்கு ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்துள்ளது. கங்கையை சுத்தப்படுத்தி அந்த நதியின் நிலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மோடி அரசு முனைப்புடன் இருக்கின்றது. இது குறித்து ஆலோசனைகளை அரசு இணையதளத்தின் மூலம் மோடி கேட்டிருந்தார். இந்த நிலையில் தெற்கு ஆஸ்திரேலியப் பிரதமரான ஜே வெதர்ஹில் பெருமை வாய்ந்த கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை தங்களது அரசு தெரிவிக்கும் என்று நேற்று கூறியுள்ளார். ஆறுகளை சுத்தம் செய்யும் நிபுணத்துவம் எங்களிடம் உண்டு என்பதால் கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தினை மேற்கொள்ள விருப்பம் தெரிவிக்கின்றோம். இந்திய நீர்வளத்துறை அமைச்சகத்துடனும், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்துடனும் தொடர்பு கொண்டு…

  11. ரஷ்யாவில் 4 மெக்டொனால்டு உணவகங்களை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மெக்டொனால்டு உணவகம் 1940ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 119 நாடுகளில் மொத்தம் 35 ஆயிரம் கிளைகளைக் கொண்டுள்ளது. ரஷியாவில் மட்டும் 424 மெக்டொனால்டு உணவகத்தின் கிளைகள் இருக்கின்றன. இவற்றில் மாஸ்கோவில் உள்ள 4 கிளைகளில் ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவகங்களை முறையாக பராமரிக்கவில்லை என்று கூறி இந்த 4 கிளைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு ரஷ்யா அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மெக்டொனால்டு நிறுவனத்தின் இதர கிளைகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதி…

  12. அமெரிக்காவில் கருப்பர்களின் போராட்டம் தொடர்கிறது: ஊரடங்கு உத்தரவையும் மீறி கலவர பூமியானது பெர்குசன் கருப்பின இளைஞர் ஒருவர் போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் போராட்டம் பெரிய அளவில் வெடித்துள்ளது. பெர்குசன் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள போதும், போராட்டம் நீடிக்கிறது. இதனிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் மைக்கேல் பிரவுன் உடலில் 6 துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளன என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. செயின்ட் லூயிஸ் மாகாணம் பெர்குசன் நகரில், கருப்பர் இனத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மைக்கேல் பிரவுன் ஒரு கடையிலிருந்து சுருட்டுகளை திருடிக் கொண்டு ஓடி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வெள்ளை இன போலீஸ் அ…

  13. மும்பை: திருமணம் ஆன மகளும் அவளது பெற்றோர் குடும்பத்தில் ஒரு அங்கம்தான் என்று மும்பை உயர் நீதிமன்றம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. மும்பையை சேர்ந்தவர் ரஞ்சனா அனேராவ். இவரது தாயாரின் பெயருக்கு மாநில அரசின் உரிமம் பெற்ற ரேஷன் கடை ஒன்று இருந்தது. இந்நிலையில் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அந்த உரிமத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு ரஞ்சனா அரசிடம் கோரிக்கை மனு அளித்தார். ஆனால் ரஞ்சனாவுக்கு திருமணம் ஆகிவிட்டதால், திருமணமாகி சென்றுவிட்ட மகள் பெற்றோரின் குடும்பத்தில் ஒரு அங்கமாக கருதப்பட மாட்டார் என்ற அரசின் விதி இருப்பதாக கூறி அவருக்கு உரிமம் அளிக்க மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து ரஞ்சனா மும்பை…

    • 3 replies
    • 474 views
  14. பூமியை மிகத்துல்லியமாக கலர் மற்றும் கிளாரிட்டியுடன் படம் பிடிக்கும் அதி நவீன துல்லியம் மிக்க செயற்கைக்கோளை சீனா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. காவோபெஃன்-2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் வடக்கு சீனாவின் ஷான்ஷி மாகாணத்தில் உள்ள தையூன் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் உள்ள சிறிய பாகத்தை கூட மிகத் தெளிவாக துல்லியமான வண்ணத்துடன் படம் பிடித்து அனுப்பும் திறன் வாய்ந்தது இந்த செயற்கைகோள். இதற்காகவே தனியாக லாங் மார்ச்-4பி என்ற ராக்கெட் கேரியரும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து மிக அருகில் அதாவது வெறும் 1 மீட்டர் தொலைவிலுள்ள பொருட்களையும் கூட அதே வண்ணத்துடன் வி்ண்ணில் இருந்தே படம் பிடிக்கும். புதிதாக விண்ணி…

  15. கச்சத்தீவு குறித்த வழக்கு விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானம் 19 ஆகஸ்ட் 2014 கச்சத்தீவு குறித்த வழக்கை விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் கச்சத்தீவு தொடர்பில் உச்ச நீதிமன்றில் தனித்தனியாக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவு மீளப்பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களையும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை உச்ச நீதிமன்றம் இணங்கியுள்ளது. 1974ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்ச…

  16. பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி எதற்காக இலங்கை சென்றார். எந்த அதிகாரித்தின் பேரில், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார் என விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பாஜக அரசு இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கும் என கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி எதற்காக இலங்கை சென்றார். எந்த அதிகாரித்தின் பேரில், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார் என்பது குறித்து மத்திய …

  17. புதுடெல்லி: மக்களவையில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க இயலாது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அரசியல் சட்டத்தின்படி எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க ஒரு கட்சிக்கு நாட்டிலுள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகளில் 10 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதன்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 55 இடங்களில் வெற்றி பெற்ற கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும். ஆனால், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அந்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க.வை அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 44 இடங்களே கிடைத்தன. இருப்பின…

  18. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது விடுமுறையை ரத்து செய்து விட்டு வாஷிங்டனுக்கு விரைந்துள்ளார். அமெரிக்காவில் இனக்கலவரம் வெடித்துள்ளதாலும், ஈராக் விவகாரத்தாலும் அவர் தனது விடுமுறையைக் கழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கோடை விடுமுறையை தற்காலிகமாக ரத்து செய்து விட்டு தலைநகருக்கு வந்து விட்டார். கோல்ப் ஆடுவது, சைக்கிளிங் செய்வது, கடற்கரைக்குப் போய் ஜாலியாக குடும்பத்துடன் செலவிடுவது என பல திட்டங்களை வைத்திருந்தார் ஒபாமா. ஆனால் எல்லாம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இனக் கலவரம் வெடித்துள்ள நிலையில் ஈராக்கில் அமெரிக்கப் படையினர் வான்வெளித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில் அதிபர் ஒபாமா, கோடை விடுமுறைக்குப் போனது குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சித்…

  19. நான் இன்னும் சில காலம் மாத்திரமே அதாவது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மாத்திரமே உயிருடன் இருப்பேன். அதுவரை மாத்திரமே கடவுள் எனக்கு ஆயுள் வழங்கியுள்ளார் என பாப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 77 வயதுடைய பாப்பாண்டவர் பிரான்சிஸ் 5 நாள் விஜயம் மேற்கொண்டு தென்கொரியா சென்றிருந்தார். தனது விஜயத்தை முடித்து கொண்டு அவர் வத்திகான் திரும்பினார். செல்லும் வழியில் அவர் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் எனது பாவங்கள், தவறுகள் குறித்து அறிய முயன்றேன். அதற்காக பெருமைப்படவில்லை. ஏனெனில் நான் இன்னும் சில காலம் மாத்திரமே அதாவது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மாத்திரமே உயிருடன் இருப்பேன். அதுவரை மாத்திரமே கடவுள் எனக்கு ஆயுள் வழங்கியுள்ளார். அதற…

  20. ஆயுதம் தரித்திருந்தவர்கள் 'ரகசிய ஆவணங்களையும்' கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் பிரான்ஸில் சவுதி இளவரசரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கார்-தொடரணி ஒன்றை ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். அவர்கள் மூன்று லட்சம் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பிரான்ஸ் காவல்துறை கூறுகின்றது. 'இரகசியமான ஆவணங்கள்' என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களையும் அவர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். சவுதி தூதரகத்திலிருந்து பாரிஸுக்கு வடக்காக அமைந்துள்ள விமானநிலையம் ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்தபோதே நேற்று ஞாயிறு இரவு இந்த வாகனத் தொடரணி இலக்குவைக்கப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/global/2014/08/140818_france_saudi.shtml

  21. மத்திய லண்டனில் சொத்து வாங்கும் வெளிநாட்டுக் காரர்களில் இந்தியர்களே முதலிடம் பெறுவதாக CBRE என்னும் ரியல் எஸ்டேட் துறை ஆய்வு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய லண்டனில் கிட்டத்தட்ட 40 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு இந்தியர்கள் முதலீடு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டாவது காலாண்டில் இந்தியர்கள் 55 சதவீதம் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள். பெரிய வணிக வளாகங்கள் வாங்குவதிலும் இந்திய நிறுவனங்களின் கையே ஓங்கி இருப்பதாக அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மத்திய லண்டனின் முக்கியப் பகுதியான மேஃபேர் பகுதியில் ஹேஙோவர் ஸ்கொயரில் இந்திய நிறுவனமான இண்டியா புல்ஸ் சொத்து வாங்கியுள்ளது. இது ஆக்ஸ்ஃபோர்டு சர்கஸுக்கு அருகில் உள்ள பகுதி. இந்தன் விலை 26 கோடி அமெரிக்க டாலர் என C…

  22. ஜேசி சான் போதை மருந்து வைத்திருந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மகன் ஜேசி சான் (32) கைது செய்யப்பட்டுள்ளார். ஜேசி சானும் அவரது நண்பரும் தைவான் நடிகருமான கே கோவும் சீனத் தலைநகர் பெய்ஜிங் சென்றிருந்தனர். அங்கு சீன போலீஸார் நடத்திய சோதனையில் ஜேசி சானும் அவரது நண்பரும் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சீன போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி பெய்ஜிங்கில் உள்ள ஜேசி சானின் வீட்டில் சீன போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு ள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2012-ல் வெளியான “டபுள் டிரபிள்” என்ற …

  23. நைஜீரியாவைச் சேர்ந்த பெண், புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தியா வரும் வழியில் அபுதாபி விமான நிலையத்தில் உயிரிழந்தார், அவருக்கு எபோலா நோய் பாதிப்புக்கான அறிகுறி இருந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக நைஜீரியாவில் இருந்து இந்தியா வரவிருவந்த 35 வயதான பெண்மணி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரணம் அடைந்தார். புற்று நோய் சிகிச்சைக்காக, 35 வயதான நைஜீரிய பெண் இந்தியாவுக்கு வர திட்ட மிட்டிருந்தார். இந்நிலையில், இந்தியாவுக்கு வரும் வழியில் அபுதாபி விமான நிலையத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது இருப்பினும் அது பலனளிக்காமல் உயரிழந்துள்ளார். எபோலா வைரஸ் தாக்கியதற்கா…

  24. கடந்த 2 ஆண்டுகளாக ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த விக்கிலிக்ஸ் அதிபர் ஜுலியன் அசாஞ்சே அங்கிருந்து வெளியேற தயாராக இருப்பதாக கூறியுள்ளார். ஈக்வடோர் தூதரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தம் மீதான அமெரிக்க விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். எனினும் தமக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் நிருபிக்கபடவில்லை என்று அவர் கூறியுள்ளார். விரைவில் தூதரகத்தை விட்டு வெளியேற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதால் இங்கேயே தங்குவது இயலாது என்று தெரிவித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள அசாஞ்சேக்கு இருதயம் மற்றும் நுரையீரல் கோளாறுகளுடன் பார்வை குறைபாடும் உள்ளதாக …

  25. 24 மணி நேரத்தில்... 20 இந்திய நிலைகள் மீது, தாக்குதல் நடத்திய பாக். ராணுவம்! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 20 இந்திய நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவோம் என்று கூறிக் கொள்ளும் பாகிஸ்தான் இடைவிடாது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தகைய எல்லை தாண்டிய தாக்குதல்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளன. ஆர்.எஸ் புரா, ஆர்னியா எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் 20 இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.