உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
வாடிகனில் பாப்பரசரை சந்தித்தார் டிரம்ப்..! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக பாப்பரசர் பிரான்சிசை இன்று வாடிகனில் சந்தித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபின் முதன் முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதன்படி சவுதி அரேபியா, இஸ்ரேல், சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இத்தாலி வருகை தந்திருந்த அவர், அங்கு வாடிகன் சென்று பாப்பரசரை இன்று சந்தித்தார். தேர்தல் பிரசாரத்தின் போது மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தார். அதற்கு பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. http://www.vi…
-
- 6 replies
- 531 views
-
-
அமெரிக்காவில் மலைச் சிங்கத்திடம் போராடி குழந்தையைக் காத்த கலிஃபோர்னியா தாய் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மலைச் சிங்கம். (கோப்புப்படம்) தமது ஐந்து வயது மகனைத் தாக்கிய மலைச் சிங்கத்திடம் போராடி குழந்தையை மீட்டுள்ளார் அமெரிக்கத் தாய் ஒருவர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இது நிகழ்ந்துள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேற்கே உள்ள சாண்டா மோனிகா மலைப் பகுதியில் உள்ள கலாபசஸ் எனுமிடத்தில் தமது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அந்த ஐந்து வயது சிறுவனை மலைச் சிங்கம் தாக்கியது. பின்னர் அந்தச் சிறுவனைப் பிடித்து புல்வெளியில் தரத…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக "சோ" அறிவித்த மெகா திட்டத்திற்கு ஜெயலலிதா இன்னும் பாஸிட்டாவ்வான பதில் கொடுக்காத நிலையில் ரஜினிகாந்த் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மோடியிடம் டெலிபோனில் பேச்சு நடத்திய ரஜினிகாந்த், அவருடைய பாஸிட்டிவ்வான பதிலை கேட்டு பெரும் திருப்தியில் இருக்கின்றாராம். விஜயகாந்த் போல தனிக்கட்சி ஆரம்பித்தால் பணமும் பெருமளவில் செலவாகும், அதே நேரத்தில் அரசியல்வாதிகள் தனிமனித அறிக்கை தாக்குதல் நடத்தினால் பெரும் சங்கடத்தில் தவிக்க வேண்டும் என எண்ணிதான் இவ்வளவு நாளாக அரசியல் பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்தார் ரஜினி. ஆனால் தற்போது ஒரு பாதுகாப்பான தேசிய கட்சியில் இணைவதால், பணப்பிர…
-
- 16 replies
- 2.2k views
-
-
"உங்களை மக்கள் ஏன் வெறுக் கிறார்கள்?'' என 9 வயது சிறுவனொருவன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்டான்.அவர் அவனை ஆரத்தழுவி அவனின் துணிச்சலைப் பாராட்டினார். அமெரிக்காவில் புயலால் பாதிக்கப் பட்ட நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தை ஜனாதிபதி பராக் ஒபாமா பார்வையிட் டார். அங்கு பொதுமக்களை அவர் சந் தித்துப் பேசினார். அப்போது அவரை டைரன் ஸ்காட் என்ற 9 வயதுச் சிறுவன் சந்தித்தான். அவன் ஒபாவைப் பார்த்து, "ஏன் உங்களை மக்கள் வெறுக்கிறார்கள்?'' என துணிச்சலாகக் கேட்டான். அவனது கேள்வியால் தடுமாற்றமடைந்த ஒபாமா, சமாளித்துக்கொண்டே பதில் அளித்தார். "நான் ஜனாதிபதித் தேர்தலில் ஏராளமான வாக்குகளைப் பெற்றுள்ளேன். அதனால் என்னை எல்லோருமே வெறுக்கிறார்கள் எனக் கூறமுடியாது'' என அவ…
-
- 0 replies
- 989 views
-
-
ஆக்கஸ்: தென்கிழக்கு ஆசியாவில் வல்லரசுகளின் போட்டி அதிகரிக்கக்கூடுமென இந்தோனேசியா- மலேசியா கவலை! ஆக்கஸ் முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியால், தென்கிழக்கு ஆசியாவில் வல்லரசுகளின் போட்டியை அதிகரிக்கக்கூடும் என இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் கவலை கொண்டுள்ளன. மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லாவை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்துப் பேசிய பின்னர், இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அண்டைய நாடான அவுஸ்ரேலியா உருவாக்குவது தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்குள் பிற நாடுகள் அடிக்கடி வருவதற்குத் தூண்டும். இதன்மூலம் வல்லரசு போட்டி அதிகரிக்கக…
-
- 0 replies
- 384 views
-
-
அமெரிக்கா விலகினாலும் பருவநிலை மாற்றம் உடன்படிக்கையை செயல்படுத்த ஜி-20 மாநாட்டில் முடிவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபருவநிலை மாற்றத்திற்கு எதிராக டிரம்பின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் நடைபெற்ற ஆர்பாட்டம் பருவநிலை மாற்றம் தொடர்பாக எட்டப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா பின்வாங்குவதை ஜி-20 குழுவில் உள்ள பிற 19 நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதே நேரத்தில், தாங்கள் பாரிஸ் உடன்பாட்டை செயல்படுத்துவதை முன்னெடுத்துச்செல்வது என்ற உறுதிமொழியை புதுப்பித்துக் கொண்டனர். ஹாம்பர்க்கில் முந்தைய நாளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது முட்டுக்கட்டையான இந்த விவகாரம், இறுதியில்…
-
- 0 replies
- 333 views
-
-
குஷ்பு பேசியும் அழியாத தமிழ்..!' சென்னை, டிச.9,2009 : மாநில அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை குஷ்பு, தமிழ் சொற்களை பிழைகளுடன் உச்சரித்து, பார்வையாளர்களை குரலெழுப்பச் செய்துவிட்டார். அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார், முதலமைச்சர் கருணாநிதி. 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான மாநில அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை குஷ்பு, 'வள்ளுவர்' என்று சொல்வதற்கு பதிலாக 'வலுவர்' என்றும், 'குத்தகைதாரர்' என்பதற்கு பதிலாக 'குத்துகைகாரர்'' என்றும் கூறினார். 'உளியின் ஓசை' என்பதற்கு 'ஒளியின் ஓசை' என்றார்.…
-
- 1 reply
- 796 views
-
-
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சட்டப்பட்ட பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்தியதாகக் கூறிய சிபிஐ முன்னாள் அதிகாரி தியாகராஜனிடம் விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனிடம் விசாரணை காலத்தின் பாது வாக்குமூலம் பெற்ற தியாராஜன், அந்த வாக்குமூலத்தை திருத்தியதாக சமீபத்தில் கூறியிருந்தார். இதையடுத்து வழக்குரைஞர் துரை செல்வம் இன்று தடா சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பேரறிவாளனின் வாக்குமூலத்தில், குண்டு வெடிக்கப் பயன்படுத்தப்பட்ட பேட்டரியை ஏன் வாங்கி வரச் சொன்னார்கள் என்று தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறினார். ஆனால், தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை தி…
-
- 0 replies
- 278 views
-
-
இந்தியாவைச் சேர்ந்த மாணவர் மீது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் அந்த மாணவர் கோமாவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மாணவரின் பெயர் மன்ரியாஜ்விந்தர் சிங். 20 வயதாகும் இவர் தனது இரண்டு நண்பர்களுடன் போய்க் கொண்டிருந்தபோது, எட்டு ஆண்கள், இரண்டு பெண்கள் அடங்கிய 10 பேர் கொண்ட கும்பலால் வெறித்தனமாக தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அந்த மாணவரை குத்தியும், மிதித்தும், தரையில் தள்ளி சரமாரியாகத் தாக்கியும் காயப்படுத்தியுள்ளது அந்த இனவெறிக் கும்பல். மேலும் அவரை கட்டையாலும் தாக்கியுள்ளனர். இதில் அவர் நினைவிழந்து கோமாவில் விழுந்து விட்டார். மெல்போ…
-
- 1 reply
- 399 views
-
-
கட்டாய COVID-19 தடுப்பூசி மற்றும் பிற பொது சுகாதார நடவடிக்கைகளை நிறுத்தக் கோரும் எதிர்ப்பாளர்கள் கனடா முழுவதும் பல்வேறு இடங்களில் மூன்றாவது வார இறுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிற்கு ஆதரவாக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. Freedom Convoy போராட்டம் ஜனவரி பிற்பகுதியில் ஒட்டாவாவிற்குள் நுழைந்தது. இதை தொடர்ந்து முக்கிய எல்லைக் கடப்புகளில் முற்றுகையிடப்பட்டதுடன், கனடா முழுவதும் இதேபோன்ற போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்கள் கனடா மக்களிற்கு பரவலான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளன. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை விடுத்த அறிவிப்பில், ஆர்ப்பாட்டக்காரர்கள் நிறுத்தாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எட…
-
- 0 replies
- 300 views
-
-
ரஷ்யா – உக்ரைன் போர் : இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம், உக்ரைன் – பெலரஸ் எல்லையில் இடம்பெற்றன. இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில், முதற்கட்ட பேச்சவார்த்தை நிறைவடைந்திருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. எவ்வாறிருப்பினும், கிவ் இல் உள்ள தொழில்நுட்ப மையங்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாகவும் ஆகவே பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறும், ரஷ்யா தெரிவித்திருந்தது. இதனை அடுத்து தலைநகரில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு கோ…
-
- 1 reply
- 274 views
-
-
நாம் இப்போது வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் கடன் அட்டையை பயன்படுத்தி காசு கொடுக்கும் வசதி சிறு தெருக்களில் கூட வந்துவிட்டது இதற்காக அவர்கள் ஒரு பின் சிஸ்டம் உள்ள இயந்திரம் வாங்கி வைத்து நம் ஏடிஎம் அட்டையில் உள்ளதகவல்களை பயன்படுத்தி காசு எடுக்கின்றனர். ஆனால் ஒரு சில ஹக்கர்கள் நாம் பயன்படுத்தும் இந்த பின் சிஸ்டத்தின் தகவல்களை உலோகத்தில் ஏற்படும் பிழை மூலம் பின் சிஸ்டத்தின் தகவல்களை மாற்றியமைக்கப்பட்ட அட்டை மூலம் எளிதாக எடுத்து விடுகின்றனர் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்ததில் சரியாக சில மொடல் பின் சிஸ்டம் உள்ள இயந்திரத்தில் இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் அட்டையுடன் வயர் இணைத்து கையடக்க ஹக்கிங் இயந்திரத்தில் சேர்த்துள்ளனர். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால் நாம…
-
- 11 replies
- 1.3k views
-
-
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியின் எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இருந்துவருகிறார். இந்நிலையில் ராகுல் காந்தியின் போட்டி வேட்பாளராக களமிறங்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான குமார் விஷ்வாஸ், இன்று அமேதி தொகுதி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது இளவரசன் ராகுல் காந்தி குடிசைக்குள் சென்று சாப்பிடுகிறார். ஆனால், குடிசைவாசிகளுக்காக இதுவரை அவர் ஒரு குரலும் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:- அமேதி தொகுதி மக்களுக்கு காந்தி குடும்பத்தினர் நிறைய செய்து இருக்கின்றனர். அத்தொகுதி மக்களின் ஆசிர்வாதம் என்றென்றும் காந்தி குடும்பத்திற்கு உண்டு. ஆகையால் அவர்களை இங்கு எம்.பி.யாக தேர்வ…
-
- 0 replies
- 319 views
-
-
பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் பலி மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபரான அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட், இரண்டு மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறுவை சிகிச்சை செய்த வைத்தியசாலை புதன்கிழமை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள வைத்தியசாலையில் 57 வயதான பென்னட் செவ்வாய்க்கிழமை இறந்தார், மேலும் இறப்புக்கான சரியான காரணத்தையும் வைத்தியர்கள் வழங்கியுள்ளனர். பென்னட், மனித இதயத்திற்குத் தகுதி பெற முடியாத அளவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால் அவருக்கு பன்றியின் மரபணு மாற்றப்பட்ட இதயம் பொருத்தும் "இரக்கமுள்ள நோய்த்தடுப்பு சிகிச்சை" கடந்த …
-
- 5 replies
- 366 views
-
-
வடக்கு கிழக்கில் மட்டும் 1000பேர் போட்டி ;மக்களின் ஜனநாயக ஆர்வத்தைக் காட்டுகிறது - ஜனாதிபதியைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் கருத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவது ஜனநாயக நடைமுறையின் மீது மக்கள் வைத்துள்ள ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது. சமாதானம் மீண்டும் உருவாக்கப்பட்டதையடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தான் சென்ற இடங்களில் எல்லாம் மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் கூடிய நிலையை காண முடிந்தது என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் கூறியுள்ளார்.இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜன…
-
- 2 replies
- 401 views
-
-
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து ஆங் சாங் சூகி படம் அகற்றம்! மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரத்தில் ஆங் சாங் சூகி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அவரது புகைப்படத்தை அகற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் தாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் வருகிறார்கள். இதற்கு உலக நாடுகளிலிருந்து, ஐ.நா சபை வரை அனைவரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகராக இருப்பவர் ஆங் சாங் சூகி. இவர் தனது பட்டப்படிப்பை 1967-ம் ஆண்டு லண்டனில் உள்ள செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியில் நிறைவு செய்தார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் அமைந்திருக்கும் இக்கல்லூரியில் தத…
-
- 4 replies
- 646 views
-
-
அணு ஆயுதங்களுக்கு எதிரான ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இந்த (2017) ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம் நடத்திவரும் ‘ஐகேன்’ அமைப்புக்கு வழங்கப்படுகிறது. ஓஸ்லோ: அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது உலகில் உள்ள 101 நாடுகளை சேர்ந்த 468 அமைப்புகள் இணைந்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு செயல…
-
- 3 replies
- 412 views
-
-
கென்னடியின் மரணம் தொடர்பான கோப்புகளை வெளியிட டிரம்ப் திட்டம்: புதிய தகவல்கள் வெளியாகுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜான் எஃப் கென்னடியின் இறுதி ஊர்வலம் மறைந்த அதிபர் ஜான் எஃப் கென்னடியின் கொலை தொடர்பான கோப்புகளை வெளியிட அனுமதிக்கும் திட்டமுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். விளம்பரம் இது குறித்து டுவிட்ட…
-
- 0 replies
- 423 views
-
-
மணமகள் வீட்டில் வரதட்சணையாக மாருதி கார் தராததால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மணமகன் குடும்பம், அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்தி வைத்த கொடுமை குடியாத்ததில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பாஸ்கரின் மகள் லாவண்யா (21). பி.சி.ஏ. பட்டதாரியான இவருக்கும் குடியாத்தத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரி்ன் மகன் வில்வநாதன் (29) என்ற சாப்ட்வேர் என்ஜீனியருக்கும் கடந்த 11ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் இன்று குடியாத்தம் காமாட்சி பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. மணமகன் வீட்டார் திருமணத்தின்போது ஒரு காரும், கூடுதலாக 15 சவரன் நகையும் கேட்டுள்ளனர். திருமணம் முடிந்த பின் இது குறித்துப் பேசி கொள்ளலாம் என்று மணம…
-
- 8 replies
- 1k views
-
-
"சிவெரோடோனெட்ஸ்க்" நகரின்... மையப் பகுதியை, நெருங்கிய ரஷ்ய படைகள் ! ரஷ்யப் படைகள் உக்ரைனின் சிவெரோடோனெட்ஸ்க் நகரின் மையப் பகுதியை நெருங்கி விட்டதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தீவிர மோதலை அடுத்து அவர்கள் முன்னேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகரத்தின் பாதிக்கு மேல் இப்போது செச்சென் போராளிகள் உட்பட ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை உக்ரைனுக்கு பொருளாதார, மனிதாபிமான மற்றும் தற்காப்பு இராணுவ உதவிகளை பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் ரஷ்யா மற்றும் பெலரஸ் மீது பிரி…
-
- 0 replies
- 206 views
-
-
சின்னஞ் சிறு இலங்கைக்காரன் விரட்டுகிறானே !- பெரியார் பக்கத்திலே இருக்கிற சிலோன், இலங்கைக்காரன் நம்மை உதைத்து விரட்டுகிறானே. அதை ஏன் என்று கேட்க நாதியில்லை.. ஆனால் வட நாட்டில் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு ஓடி வந்த வடநாட்டுப்பசங்களுக்கெல்லாம் ‘அகதிகள்’ என்ற பெயரில் கோடி கோடியாய் பணம்செலவழித்துக் கொண்டிருக்கிறார்களே ! அவர்களுக்கு வீடு ; வியாபாரத்திற்குப் பணம் உதவியெல்லாம்! நம்மவன் கதி? கஞ்சிக்கு இல்லாமல் சாகும் நிலை. தற்கொலை பண்ணிக் கொள்ளூம் அவல நிலை. இதற்கெல்லாம் நமது நாடு நம்மிடம் இருந்தால் நடக்குமா? சிலோனுக்கு இங்கிருந்து கள்ளத்தோணி ஏறிப்போகிறான். அவன் நம்மைப் பார்த்துக் கள்ளத்தோணி என்கிறான்…
-
- 3 replies
- 1.1k views
-
-
செளதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று முதல் வாட் வரி அமல்! செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல் முறையாக வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இருநாடுகளிலும் விற்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. வளைகுடா நாடுகள் நீண்ட காலமாக வரியில்லா வாழ்க்கை என்ற வாக்குறுதியின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்த்து வந்துள்ளது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் வருவாயை அதிகரிக்க அரசாங்கங்கள் முடிவெடுத்துள்ளன. இந்த வரிவிதிப்பு முறை இன்று (ஜனவரி 1) முதல் இருநாடுகளிலும் அமலாகிறது. வாட் வரி காரண…
-
- 0 replies
- 321 views
-
-
ஜெய்ப்பூர் :ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், 'அட்சய பாத்திரா' என்ற அரசு சார்பற்ற அமைப்பால் நடத்தப்படும், பிரமாண்ட சமையலறைக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், நேற்று வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, எப்படி உணவு தயாரிக்கப்படுகிறது என்பதை கேட்டறிந்தார். பின், மாணவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன். இவர், 'கிளின்டன் அறக்கட்டளை' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் கிளைகள், பல நாடுகளில் உள்ளன. அவற்றின் செயல்பாடுகளை கண்டறிவதற்காக, ஆசிய, பசிபிக் நாடுகளுக்கு, தற்போது பில் கிளின்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, தற்போது, இந்தியா வந்துள்ளார். பின், வியட்நாம், இந்தோனேச…
-
- 0 replies
- 323 views
-
-
ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பிரிட்டிஷார் இருவர் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஐஎஸ் அமைப்பின் பிரிவைச், சேர்ந்த பிரிட்டிஷார் இருவரை சிரிய குர்திஷ் போராளிகள் பிடித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட 34 வயது அலெக்ஸாண்டா கோட்டே மற்றும் 29 வயது எல் ஷஃபி ஆகிய இருவரும் அக்குழுவில் நீண்ட நாட்கள் பிடிப்படாமல…
-
- 0 replies
- 286 views
-