உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
டெல்லி: யுபி குழுமத் தலைவர் விஜய் மல்லையாவின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியுள்ளனர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள். கடந்த 18 மாதங்களாக சம்பளமே தராமல் தன் இஷ்டத்திற்கு தாறுமாறாக வாழ்க்கை நடத்தி வரும், ஐபிஎல் கிரிக்கெட்டில் பணத்தைக் கொட்டி வரும், கவர்ச்சிப் பெண்களின் படத்தை வைத்து காலண்டர் போட்டு வரும் மல்லையாவின் முகம் இந்தப் பெண்களின் பகிரங்க கடிதத்தால் மேலும் மோசமாக சிதைந்துள்ளது. நாளை மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்தப் பெண் ஊழியர்கள் மல்லையாவின் மறுபக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். பகிரங்க கடிதம்: தாங்கள் எந்த அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறோம் என்பதை மல்லையாவுக்கே பகிரங்க கடிதம் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந…
-
- 2 replies
- 832 views
-
-
மும்பை: மும்பையில் கடற்படைக்கு கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். மும்பையில் உள்ள மாஸ்கோனில் கடற்படைக்காக கப்பல் கட்டும் தளம் இயங்கி வருகிறது. இங்கு கடற்படைக்காக கப்பல் கட்டும் பணி இன்று நடந்து வந்தது. இந்நிலையில் அந்த கப்பலில் திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கப்பலில் வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், வாயு கசிவு ஏற்பட்டதால் சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் கடந்த 26ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. http://news.vikatan.com/article.php?module=news&aid=25432
-
- 5 replies
- 544 views
-
-
சென்னை: விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அக்கட்சியின் அவசர கூட்டம் திருமாவளவன் தலைமையில் நாளை சென்னையில் நடைபெறுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார். ஆனால் விழுப்புரம் தொகுதியில் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே விடுதலை சிறுத்தை கட்சி தோல்வி அடைந்தது. இதனிடையே, தி.மு.க. கூட்டணியில் இருந்த பல கட்சிகள் வெளியேறிய நிலையில், விடுதலை சிறுத்தை மட்டுமே நிலைத்திருந்தது. ஆனால், தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.…
-
- 0 replies
- 628 views
-
-
மீரட்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் 67 பேரை மீரட் தனியார் பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், அவர்கள் மீது பிரிவினை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், மீரட்டில் உள்ள ஒரு (தனியார்) சுவாமி விவேகனந்தா சுப்ராதி பல்கலைக்கழகத்தில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் 67 பேர் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினர். பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து காஷ்மீர் மாணவர்கள், விடுதியிலும் வளாகத்திலும் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடை…
-
- 2 replies
- 573 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா நேற்று முதல் புதிய honey blonde சிகையலங்காரத்திற்கு மாறியுள்ளார். இவருடைய புதிய தோற்றத்தை அமெரிக்க ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படங்கள் எடுத்து தங்கள் பத்திரிகைகளில் வெளியிட்டு வருகின்றன. மிச்சேல் ஒபாமா நேற்று மியாமியில் உள்ள Jessie Trice Community Health Care Center என்ற தனியார் நிறுவன அழகு நிலையத்திற்கு சென்று தன்னுடைய முகத்தின் வடிவத்திற்கு ஏற்றப்டி எவ்வாறு சிகையலங்காரத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று ஆலோசித்து honey blonde ஸ்டைலை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. புதன்கிழமை மாலையில் தனது சிகையலங்காரத்தை மாற்றிய மிச்சேல் ஒபாமா மாலையில் தனது புதிய ஹேர்ஸ்டைலுடன் வெளியே வந்தார். அவருடைய புதிய ஹேர்ஸ்டைலை வித்தியாசமாக கவனித்…
-
- 1 reply
- 534 views
-
-
இங்கிலாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள Northumberland என்ற பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது சுமார் 7000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த விலங்குகளின் பாதச்சுவடு கிடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனுடன் மனிதனின் காலடியும் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. Northumberland என்ற பகுதியில் உள்ள Druridge Bay என்ற கடல்பகுதிஅருகேதான் இந்த கால்தடங்கள் கிடைத்துள்ளன. இதன் காலம் கண்டிப்பாக 7000 வருடங்களுக்கு முந்தையது என்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.கடந்த வருடம் இங்கிலாந்து நாட்டின் Low Hauxley என்ற பகுதியில் கிடைத்த காலடித்தடங்களுக்கும், தற்போது கிடைத்த காலடித்தடங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதால், இரு குழுவினர்களும் ஒரே…
-
- 0 replies
- 396 views
-
-
கிரீமியா: உக்ரைனின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீமியா ரஷியாவுடன் ஓர் மாகாணமாக இணைய திடீர் முடிவு செய்துள்ளது. ரஷியாவுடன் இணைப்பது குறித்து வரும் 16-ந் தேதி வாக்கெடுப்பு நடத்த கிரீமியா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தார் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச். இதனால் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் ரஷியாவில் அடைக்கலமானார். இதையடுத்து உக்ரைனில் புதிய அரசு அமைந்தது. ஆனால் ரஷியாவோ உக்ரைனின் கிரீமியா என்ற சுயாட்சி பிராந்தியத்தை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச மோதலாக உருவெடுத்தது. கிரீமியா மீதான தமது மேலாதிக்கத்தை ரஷியா விட்டுக் கொடுப்பதாக இல்லை. ஆனால் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ரஷியாவ…
-
- 5 replies
- 698 views
-
-
திராவக வீச்சால் பாதித்தவர்களுக்காக போராடிய லட்சுமிக்கு அமெரிக்காவில் வீரப்பெண் விருது! [Thursday, 2014-03-06 12:26:56] உலக அளவில் துணிச்சலான செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு, ஆண்டுதோறும் சர்வதேச வீரப்பெண்மணி என்ற விருதை அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு, இந்த விருதுக்காக இந்தியாவில் தலைநகர் டெல்லியை சேர்ந்த லட்சுமி என்ற 25 வயதுப் பெண் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.லட்சுமிக்கு 16 வயதாக இருந்தபோது, காதலிக்க மறுத்ததால் 32 வயது வாலிபர் ஒருவர் (லட்சுமியின் தோழியின் சகோதரர்) அவர் மீது திராவகம் வீசினார். இதனால் அவருடைய முகம் உருக்குலைந்து போனாலும் மனம் தளராத அவர், இதுபோன்ற திராவகம் வீச்சு சம்பவத்துக்கு முடிவு கட்ட இயக்கம் ஒ…
-
- 0 replies
- 228 views
-
-
ஸ்னோடனை அமெரிக்காவுக்கு அழைத்துவருகிறது, தொழில்நுட்பம்! [Thursday, 2014-03-06 12:49:28] அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோடன் அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைக்க முடியாது (வைக்கலாம், கைது செய்யப்படுவார்) என்ற நிலையில், அவரை அமெரிக்காவுக்கு அழைத்துவருகிறது, தொழில்நுட்பம்! அமெரிக்காவில் பிரைவசி, மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடைய மாநாடு ஒன்றின் இந்த ஆண்டு பேச்சாளர்கள் பட்டியலில், எட்வார்ட் ஸ்னோடனின் பெயர் உள்ளது. அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் நடைபெறவுள்ள Southwest Interactive Festival-ல், இந்த பிரைவசி, மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடைய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஸ்னோடன் இங்கு உரையாற்றுவார் எனவ…
-
- 0 replies
- 238 views
-
-
இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மீது தேசதுரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் ஆட்டம் ஒன்றின்போது பகையாளி நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதற்காக இவர்கள் மீது இக்குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்ற வாரக் கடைசியில் ஆசியக் கோப்பை ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் அணியினர் இந்தியாவைத் தோற்கடித்ததை அடுத்து உத்தரப் பிரதேசத்தின் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வந்த அறுபதுக்கும் அதிகமான மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தனர். தேசத்துக்கு எதிரான செயலில் அம்மாணவர்கள் ஈடுபட்டனர் என்று கூறி அப்படியான ஒரு குற்றச்சாட்டு அவர்கள் மீது கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். இந்தக் குற்…
-
- 2 replies
- 622 views
-
-
இந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகதி வேட்பு மனுத் தாக்கல் 81 கோடி பேர் வாக்களிக்க தகுதி 9 கட்டங்களாக நடத்த முடிவு 2014ஆம் ஆண்டிற்கான இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி முதல் மே 12ஆம் திகதி வரை நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித் துள்ளது. இந்த தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்படும் என்பதுடன், தமிழகத்தின் புதுவை மாவட்ட உட்பட தமிழகமெங்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மே மாதம் 16ம் திகதி நடைபெறும் என்பதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 5ஆம் திகதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்றும் இந்திய பிரதம தேர்தல் ஆணையாளர் வீ. எஸ். சம்பத் அ…
-
- 0 replies
- 359 views
-
-
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை மீறி மீண்டும் தலிபான் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ரத்தம் தோய்ந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவரும் தலிபான் தீவிரவாதிகளின் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும்விதமாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் அவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் போராளிகள் தாங்கள் கடத்திச் சென்ற துணை ராணுவத்தினர் 23 பேர் கொல்லப்பட்ட விபரத்தை வெளியிட்டபோது பேச்சுவார்த்தை பாதியில் முறிந்துபோனது. கடந்த வார இறுதியில் போராளிகள் இயக்கமான டெஹ்ரிக்-இ-தலிபான் ஒரு மாத போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பு பிரதிநிதிகளும் நேற்று அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெஷாவரிலிருந்து 50 கி.மீ தொலைவ…
-
- 0 replies
- 278 views
-
-
மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளுமே தங்கள் கூட்டணியை ஏறத்தாழ முடிவு செய்துவிட்ட நிலையில், காங்கிரஸ் தனித்துவிடப்படுகிறது. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு கதவுகள் மூடப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு முக்கிய கட்சிகள் அனைத்துமே ஆரம்பத்தில் இருந்தே தயக்கம் காட்டி வந்தன. பாஜக கூட்டணியில் மதிமுக மட்டும் உறுதியாக இணைந்துள்ளது. தேமுதிக, பாமக கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடிக்கிறது. எனினும், தேமுதிகவோ அல்லது பாமகவோ காங்கிரஸிடம் பேசுவதற்கே வாய்ப்பிலாத நிலை இருக்கிறது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால், தங்களுக்கு உள்ள மக்கள் ஆதரவும் கிடைத்திடாமல் போய்விடும் என தமிழக கட்சிகள் முடிவு செய்ததால்தான் அக்கட்சிக்கு இந்த நி…
-
- 6 replies
- 734 views
-
-
அமெரிக்காவில் பொதுமக்களை விட இராணுவத்தினருக்கே மனநோய் அதிகம்! - ஆய்வில் அதிர்ச்சித் தகவல். [Tuesday, 2014-03-04 18:59:44] அமெரிக்காவில் மனநலம் குறித்த மிகப்பெரிய ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளின் மூலம் பொதுமக்களைவிட அந்நாட்டின் ராணுவத்தினர் பல வகையான மன நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்கொலை முயற்சிகள் மற்றும் இறப்புகள் தொடர்பான ஆய்வு கண்டுபிடிப்புகள் தொடர்ச்சியான மூன்று அறிக்கைகளில் ஜமா மனநல இதழில் இந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கைகளில் இரு பிரிவினருக்கும் இடையே காணப்படும் நோய் விகிதங்கள் குறிப்பிடத்தக்கதாக இருப்பதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூத்த எழுத்தாளரும், ஹார்வர்ட் மருத்த…
-
- 0 replies
- 428 views
-
-
ரஷ்யாவுக்கு பதிலடி தர மேற்கு பகுதியில் உக்ரைனும் ராணுவம் குவிப்பு! [Monday, 2014-03-03 10:36:54] ரஷ்யாவுக்கு பதிலடி தர உக்ரைனும் தனது ராணுவ படைகளை குவித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனில் சேர்க்க அந்நாட்டு அதிபராக இருந்த விக்டர் யனுகோவிச் மறுப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கலவரம் வெடித்தது. அதிபர் பதவியிலிருந்து விக்டர் யனுகோவிச் நீக்கப்பட்டு, இடைக்கால அதிபராக துர்ஷிநோவ் பதவியேற்றார். பதவி பறிக்கப்பட்ட விக்டர் யனுகோவிச் தலைமறைவானார். ரஷ்யாவின் தீவிர ஆதரவாளரான இவரை காப்பாற்றுவதற்காக, ரஷ்ய அதிபர் புடின் தனது ராணுவத்தை உக்ரைனுக்கு அனுப்பி வைத்ததா…
-
- 26 replies
- 2.1k views
-
-
உக்ரைனுக்கு ராணுவத்தை அனுப்புவது குறித்து ஒபாமா அவசர ஆலோசனை! [Monday, 2014-03-03 20:25:17] ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க உக்ரைனுக்கு அமெரிக்க ராணுவம் அனுப்புவது குறித்து ஓபாமா அவசர ஆலோசனை நடத்தினார்.ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக 3 மாதமாக கடும் போராட்டம் நடந்தது. அதன் பின்னர் அவர் பதவி விலகி ரஷியாவுக்கு தப்பி ஓடிவிட்டார்.தற்போது அங்கு இடைக்கால அரசு பதவி வகிக்கிறது. இந்த நிலையில் முன்னாள் அதிபர் யனுகோவிச்சுக்கு ஆதரவாக ரஷியா களம் இறங்கியுள்ளது.உக்ரைனின் கிரீமியா சுயாட்சி பிரதேசத்தில் 2 விமான நிலையங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை ரஷியா ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. அங்கு ரஷிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மேலும், உக்ரை…
-
- 0 replies
- 541 views
-
-
எவரெஸ்ட் மலைச்சிகரத்துக்கு இம்முறை வசந்த காலத்தில் செல்லும் மலையேறிகளும் அவர்களின் ஆதரவு அணியினரும் திரும்பிவரும்போது, ஆளாளுக்கு குறைந்தது 8 கிலோகிராம் குப்பைகளை அள்ளிவருவார்கள் என்று நேபாள அரசாங்கம் கூறியுள்ளது. மௌன்ட் எவரெஸ்ட் பேஸ் கேம்ப்- என்ற 5,300 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள தளத்துக்கு மேல் செல்லும் எல்லோருக்கும் இந்தப் புதிய சட்டவிதி பொருந்தும் என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். மலைச் சிகரங்களில் கழிவுப் பொருட்கள் குவிந்துவருகின்றமை தொடர்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர் உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்டின் மீதும் அதனைச் சூழவும் கழிவுப் பொருட்கள் குவிந்துவருகின்றமை தொடர்பான கவலைகளை அடுத்தே அரசு இ…
-
- 2 replies
- 434 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, நதிநீர்ப் பங்கீடு என காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா பட்டியலிட்டார். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியது: "2011-ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில், தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கை விடுத்தேன். அதனை நீங்கள் நிறைவேற்றினீர்கள். என்னை தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆக்கினீர்கள். அதே போல், தற்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர…
-
- 0 replies
- 455 views
-
-
ஏ.கே.கான் கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவை ஒட்டிய மிக முக்கிய தேசம் உக்ரைன். அங்கே ஒரு உக்கிரமான மோதலுக்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் தயாராகி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 603,628 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த தேசம் ஐரோப்பிய யூனியனில் இணைந்தால் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய தேசமாக இருக்கும். 15ம் நூற்றாண்டு முதலே இந்த நாட்டின் பல்வேறு பகுதிகள் பல்வேறு குழுவினரால், நிர்வாகங்களால் ஆளப்பட்டு வந்தன. இந்த நாட்டின் முக்கிய அம்சமே அதன் மண் வளம் தான். இந்த நாட்டின் பெரும்பாலான பகுதி விளை நிலமாக உள்ளதால் உலகிலேயே விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியில் 3வது இடத்தில் உள்ளது இந்த நாடு. மேலும் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இருந்தபோது தொழில்துறையிலும் பெரும் வளர்ச்சி …
-
- 0 replies
- 4.5k views
-
-
முதலில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. மழை பெய்திருப்பதை பல முறை பார்த்து ரசித்திருப்பீர்கள். மழைத்துளியின் அளவை உங்களால் சொல்ல முடியுமா? பதில் துல்லியமாக இருக்க வேண்டும் என்றில்லை. சும்மா முயன்று பாருங்கள். சரி இப்போது உங்கள் பதிலை சரியான இந்த பதிலோடு பொருத்துப்பார்த்துக்கொள்ளுங்கள்; ஒரு மழைத்துளியின் அளவு உண்மையில் ஒரு செண்டிமீட்டருக்கும் குறைவானது. மழைத்துளியின் சுற்றளவு ஒரு இன்ச்சில் நூறில் ஒரு பங்கில் இருந்து அதாவது .0254 செண்டி மீட்டரில் இருந்து ஒரு இன்ச்சில் நான்கில் ஒரு பகுதியாக ( .635 செண்டி மீட்டர்) இருக்கலாம். சரி இன்னொரு கேள்வி , மழைத்துளி எவ்வளவு வேகத்தில் வந்து விழுகிறது தெரியுமா? மணிக்கு 7 முதல் 18 மைல் வேகத்தில் மழைத்துளி பூமிக்கு வந்து சேர்கிறது. அதாவது விநாடிக்…
-
- 0 replies
- 525 views
-
-
குறும்பதிவு சேவையான டிவிட்டரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த கேத்லீன் கோமியன்ஸ் என்பவர் 34 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட தனது சகோதரரின் மரணத்திற்கு டிவிட்டர் மூலம் நியாயம் கேட்டு வருகிறார். இறந்து போன தம்பி இப்போது டிவிட்டர் செய்வது போலவே அமைதுள்ள அந்த குறும்பதிவுகள் 1980 ல் கொல்லப்பட்ட பில் கோமியன்ஸ் மீது பரிவை உண்டாக்குகிறது. யார் இந்த பில் கோமியன்ஸ்? அமெரிக்காவின் ஓஹியோவை சேர்ந்தவர் பில். அவருக்கு 14 வயது இருந்த போது ஓஹியோவின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் கொல்லப்பட்டார். பில் அணிந்திருந்த ஸ்கார்ப்பாலேயே அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் யார் ? என்பதும் தெரியவில்லை. கொலைக்கான காரணமும் தெர…
-
- 0 replies
- 609 views
-
-
யுக்ரெய்னில் ரஷ்யா மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையை "நம்பமுடியாத ஒரு ஆக்கிரமிப்பு" என்று கூறி அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கண்டித்துள்ளார். "ஒரு நாட்டின் மீது படையெடுப்பது என்பது 19ஆம் நூற்றாண்டில் வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருந்திருக்கலாம், ஆனால் 21 நூற்றாண்டில் அப்படியொன்றை ஏற்றுக்கொள்ளவே முடியாது" என்று அவர் கூறினார். அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி சர்வதேச அரங்கில் ரஷ்யாவை ஓரங்கட்ட அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் தயாராகவே இருப்பதாக அவர் குறிபிட்டார். ரஷ்யர்கள் தமது நாடுகளுக்கு வர தடை விதிப்பது, ரஷ்யர்களது சொத்துக்களை முடக்குவது, வர்த்தக உறவுகளை துண்டித்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார். உ…
-
- 5 replies
- 865 views
-
-
மனைவி, இரு குழந்தைகளுடன் இறந்து கிடந்த றோ அதிகாரி! – டெல்லியில் பெரும் பரபரப்பு. [sunday, 2014-03-02 17:45:12] டெல்லியில் றோ உளவுத்துறை அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. றோ உளவுத்துறை அதிகாரியான அனன்யா சக்ரவர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அனன்யா சக்ரவர்த்தி என்ற அந்த அதிகாரி, றோ அமைப்பில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்தார். டெல்லி சதீக் நகரில் உள்ள அவரது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்கப்பட்டது. அதேபோல் அவரது குடும்பத்தினரும் மர்மமாக இறந்து கிடந்தனர். அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் உடலில் காயங்கள் இருப்…
-
- 7 replies
- 691 views
-
-
உக்ரைனுக்கு ரஷ்யப் படைகளை அனுப்ப அதிபர் புடினுக்கு அனுமதி வழங்கியது நாடாளுமன்றம்! [sunday, 2014-03-02 17:55:59] உக்ரைனுக்கு ரஷ்ய படை களை அனுப்புவதற்கு அதிபர் புடினுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சோவியத் யூனியனில் இருந்த பிரிந்து தனி நாடான உக்ரைனில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாகவும் இருதரப்பினர் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப ரஷ்ய அதிபர் புடின் திட்டமிட்டுள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு ரஷ்ய ராணுவ படைகளை அனுப்புவதற்கு ரஷ்ய நாடாளுமன்ற …
-
- 1 reply
- 283 views
-
-
கனடாவில். போலீஸ் நாயை கொன்றவருக்கு 26 மாத சிறை. டொராண்டோ, மார்ச் 2- கனடா நாட்டின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள எட்மொண்டன் பகுதியை சேர்ந்தவர், பால் ஜோசப் உக்மனிச்(27). மிதமிஞ்சிய போதையில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு திருட்டுக் காரை ஓட்டிச்சென்ற இவரை போலீசார் வழி மறித்து தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் போதையில் இருந்த அவர் காரை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றார். அவரை பிடிப்பதற்காக தாங்கள் வைத்திருந்த நாயை போலீசார் ஏவி விட்ட்னர். ஜெர்மென் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த அந்த நாய் ஆக்ரோஷத்துடன் பால் ஜோசப்பை விரட்டியபடி ஓடியது. திடீரென்று தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தியை உருவிய அவர் நாயை வெறித்தனமாக குத்திக் கொன்றார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அளவுக்கு …
-
- 1 reply
- 421 views
-