உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் . அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத…
-
- 3 replies
- 1.3k views
-
-
டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 19-ம் தேதி அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் இந்நிலையில், அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் மறைந்த வி.என்.சொக்கலிங்கம் - வைரம் தம்பதியினரின் மகனாக 4.10.1951 நாகப்பன் பிறந்தார். கரூரில் பள்…
-
- 0 replies
- 423 views
-
-
இந்தியா, அகர்தலா அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த அக்னி 5 ஏவுகணையை இன்று 2வது முறையாக வெற்றிகரமாக ஏவி பரிசோதித்துள்ளது. முற்றிலும் இந்தியத் தொலைநுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணை இது. இந்த ஏவுகணையானது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையும் கூட. கிட்டத்தட்ட 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாகக் கூடிய வல்லமை படைத்தது. அதாவது சீனாவின் பெரும் பகுதியை இந்த ஏவுகணைத் தாக்கக் கூடிய திறன் கொண்டது. இந்த ஏவுகணை ஏற்கனவே ஒரு முறை ஏவிப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 2வது முறையாக ஏவப்பட்டது. ஒடிஷாவின் வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 3 நிலைகளைக் கொண்ட இந்த ஏவுகணையானது, இன்று காலை 8.50 மணிக்கு ஏவிப் பரிசோதிக்கப்பட்டத…
-
- 16 replies
- 1.3k views
-
-
சேதுக்கால்வாய் உருவாக்கப்படும் கடற்பகுதி சேதுக்கால்வாய் திட்டத்தை தற்போது நிறைவேற்றிவரும் வழியிலேயே நிறைவேற்ற விரும்புவதாக இந்திய நடுவணரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்க சுப்பிரமணியசுவாமிக்கும் தமிழக அரசுக்கும் நவம்பர் வரை அவசகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் உருவாக்கப்படும் சேதுக்கால்வாய் திட்டம், ஆதம் பாலம் என்று அறிவியலாளர்களாலும், ராமர் பாலம் என்று சில இந்து மத அமைப்புக்களாலும் அழைக்கப்படும் மணல்திட்டுக்களை குறுக்குவெட்டாக கடந்து செல்கிறது. இப்படி சேதுக்கால்வாய் செல்லும் வழியில் தடையாக இருக்கும் மணல் திட்டுக்களை அகற்றுவது, ராமர் பாலத்தை அகற்றி அழிப்பதாகவும், இது இந்துக்களின் மத உணர்வுகளை புண…
-
- 0 replies
- 612 views
-
-
சீனாவுக்கு எதிரான அடுத்த ஆயுதத்தை அமெரிக்கா தயார்படுத்தியுள்ளது சீனாவுடன் நாம் நட்புடனே உள்ளோம் என அமெரிக்க அதிகாரிகள் அடிக்கடி தெரிவித்துவரும் போதும், சீனாவின் படைத்துறை வளர்ச்சியை ஈடுகட்டும் அடுத்தகட்ட நகர்வுகளில் அமெரிக்கா வெற்றியடைந்துள்ளது. சீனாவின் எல்லைகளின் இருந்து 900 மைல் தூரத்திற்கு அப்பால் அமெரிக்க கடற்படைக் கப்பல்களை விரட்டும் டிஎஃப் 21டி (DF21D) எனப்படும் நீண்டதூர ஏவுகணைகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கான முயற்சிகளின் ஓரு அங்கமாக கடல் நடவடிக்கைகளை தளமாகக் கொண்ட ஆளில்லாத தாக்குதல் மற்றும் வேவு விமானங்களை (Drones) தயாரிக்கும் பணிகளை அமெரிக்காவின் கடற்படை கடந்த சில வருடங்களில் முடுக்கிவிட்டிருந்தது. தரையை தளமாகக் கொண்டியங்கும் ஆளில்லாத தாக்குதல் மற்ற…
-
- 0 replies
- 679 views
-
-
பங்களாதேஷ், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற 1971ல் நடத்திய போரின் போது , ஒட்டுமொத்தமாகப் பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இஸ்லாமிய அரசியல்வாதி ஒருவர் செய்த மேல் முறையீட்டில், பங்களாதேஷ் உச்ச நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. பிப்ரவரியில், சிறப்பு போர்க்குற்ற நீதிமன்றம் ஒன்று, அப்துல் குவாதர் மொல்லா என்ற இந்த ஜமாத் இ இஸ்லாமி கட்சித் தலைவருக்கு, ஆயுள் தண்டனை விதித்திருந்தது. ஆயுள்தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டது ஒருவருக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மேல்முறையீட்டில், மரண தண்டனையாக உயர்த்தப்படுவது இதுவே முதன் முறை என்று அவருக்காக வாதிட்ட வழக்குரைஞர் தாஜுல் இஸ்லாம் கூறினார். இந்தத் தீர்ப்பு அ…
-
- 0 replies
- 417 views
-
-
இலங்கையர்கள் தொடர்பில் கனடா புதிய சட்டங்களை அமுல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் பிரஜைகள் தொடாபில் பயோமெற்றிக் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, கனடா வீசா கோரும் குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைவிரல் அடையாளங்களையும் புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் வீசா அல்லது ஏனைய வீசாக்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் இலங்கையர்கள் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் வீசா விண்ணப்பிக்கும் போது கைவிரல் அடையாளங்களையும் விண்ணப்பித்தில் உள்ளடக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/article…
-
- 0 replies
- 380 views
-
-
கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில், 200 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மீதான புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விசாரணையை துவக்கி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை துரிதப்படுத்தவும், புகாரில் முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யவும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், பி.ரமேஷ் பாபு, தாக்கல் செய்த மனு: கோவையில் 2010 ஜூன், 23ம் தேதி செம்மொழி மாநாடு நடந்தது.இந்த மாநாட்டை, உலக தமிழ் அமைப்பு அங்கீகரிக்கவில்லை. மாநாட்டுக்காக, முன்னாள் முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது; 386 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்…
-
- 2 replies
- 1.8k views
-
-
பிரான்சில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் பிரான்சில் செப்டெம்பேர் 13,14,15 ஆகிய நாட்களில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் அமைப்புகள், மக்கள் போராட்டத்தை பிரதிபடுத்தி, 600,000 மக்கள் கலந்து கொண்ட "Fete de la Humanité" நிகழ்வில் தமிழ் ஈழத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை கலந்து கொண்டு தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை வலியுறுத்தி தமது செயல்பாடுகளை ஏனைய போராட்ட அமைப்புகளுடன் கலந்து கொண்டு ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் சுயநிர்ணய உரிமைகளை வலியுறுத்தி போராடும் போர்ராட்ட அமைப்புகளின் இன்றைய போராட்ட சூழல் பற்றி நடந்த கலந்துரையாடல், மக்களிடையே ஆனா விவாதத்த்தில் சஹாரவி ஓரியென்டல், தமிழீழம், குர்திஸ்தான்,பாலஸ்தீன மக்கள் பி…
-
- 0 replies
- 432 views
-
-
டெல்லி: பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் நரேந்திர மோடியும், அத்வானியும் ராம் ஜெத்மலானி வீட்டில் நேற்று சந்தித்துக் கொண்டனர். ஆனால் மோடியிடம் அதிகம் பேசாமல் இறுகிய முகத்துடன் காணப்பட்டார் அத்வானி. ராம்ஜேத்மலானியின் 90வது பிறந்த நாளையொட்டி அவரது வீட்டுக்கு அத்வானி வாழ்த்துச் சொல்ல வந்திருந்தார். அதேபோல மோடியும் வந்திருந்தார். அத்வானியைப் பார்த்த மோடி, அவரது காலைத் தொட்டு வணங்க குணிந்தார். ஆனால் அத்வானி அமைதியாக நின்றிருந்தார். பின்னர் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மோடி சிரித்த முகத்துடன் காணப்பட்டார். ஆனால் அத்வானி இறுகிய முகத்துடன் கம்மென்றிருந்தார். மோடியிடம் அவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மேலும் மோடிக்கு அருகிலும் அமரவில்லை. பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில்…
-
- 0 replies
- 420 views
-
-
லண்டன்: இங்கிலாந்து இளவரசி டயானாவை அரச குடும்பத்தில் உள்ள முக்கியப்புள்ளிகள் தான் திட்டமிட்டு கொன்றதாக இங்கிலாந்து ராணுவ வீரர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ராஜ குடும்பத்தில் உள்ள சில முக்கியப்புள்ளிகள் தான் இளவரசி டயானாவை திட்டம் போட்டு கொன்றுவிட்டதாக இங்கிலாந்து விமானப்படை வீரர் ஒருவர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து பெற்றுவிட்டனர். இது குறித்து அந்த பெண் கூறுகையில், என் முன்னாள் கணவர் கடந்த 2008ம் ஆண்டில் இளவரசர் வில்லியமுக்கு விமானப் படையில் சில பயிற்சி அளித்தார். அப்போது வில்லியம் கார்களில் சில பயிற்சி பெற்றார். என் முன்னாள் கணவரும் சில கார் ஸ்டண்ட்டுகள் செய்தார். ஜன்னல் வழியாக சுடுவது உள்ளிட்டவற்றை வில்லியமு…
-
- 0 replies
- 676 views
-
-
லண்டனில் நீதிமன்ற வழக்கு ஒன்றை எதிர்கொள்ளும் ஒரு முஸ்லிம் பெண்மணி, வழக்கு விசாரணைகளின் போது தனது முகத்திரையை நீக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் முழுமையாக முகம் தெரிய வேண்டும் என்று உத்தரவு அச்சுறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இருபத்து இரண்டு வயதான அந்தப் பெண்மணி தன் மீது தவறில்லை என்று வாதிடுவதற்காக நீதிமன்றம் வந்தபோது, முகத்தை மறைக்கும் நிக்காபை அணிந்து வந்திருந்தார். ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் சமயத்தில், சாட்சியமளிக்கும் போது அவர் முகத்திரையை நீக்கினால்தான் அவரது பிரதிபலிப்புகளை கவனிக்க முடியும் என்று நீதிபதி முடிவு செய்து உத்தரவிட்டார்.முகத்திரையை நீக்கச் சொல்வது அவரது மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்று அவரது…
-
- 0 replies
- 391 views
-
-
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் கடற்படையின் தலைமையகம் அமைந்துள்ளது. இன்று அங்கு மர்ம நபர்கள் 3 பேர் தீடீரென நுழைந்தனர். துப்பாக்கியுடன் உட்புகுந்த அவர்கள் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கியுடன் நுழைந்துள்ள 3 பேரையும் பிடிக்க அந்நாட்டு போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். அவர்கள் யார் என்பதையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கி சூட்டை அடுத்து வாஷிங்டனில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், ரீகன் சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலைநகரில் இந்த துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதால் இதுகுறித…
-
- 1 reply
- 310 views
-
-
முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் மூத்த பத்திரிகையாளர் சோ நேற்று சந்தித்துப் பேசினார். காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் வரை நீடித்தது. பாஜகவில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை மூத்த பத்திரிகையாளர் சோ சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்ற விழாவில் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.இதேபோன்று, குஜராத் முதல்வராக மோடி மீண்டும் பதவியேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றார். பாஜக பிரசார குழுத் தலைவராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டபோது, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் ஜெயலல…
-
- 1 reply
- 661 views
-
-
வணக்கம் AUSTRALIA உறவுகளே....... நாம் ஆவலுடன் எதிர்பாத்திருந்த பொது தேர்தல் வருகின்ற சனிக்கிழமை நடைபெற இருக்கின்றது......... ஆறு வருடங்கள் ஆட்சியில் இருந்த தொழில் கட்சியும் 2007 இல் ஆட்சியை பறி கொடுத்த லிபரல் கட்சியும் பிரதான கட்சிகளாக மோது கின்றன..... 2007 இல் பதவியில் அமர்ந்த தொழில் கட்சியானது பல குளறுபடிகள் இருந்த ஆட்சியாக அமைந்து மக்களின் தீர்ப்பிற்காக காத்து இருகின்றது...... இரண்டு கட்சிகளுமே ஒருவரை ஒரு குற்றம் சாட்டியும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கியும் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வண்ணம் இருகின்றார்கள் ஏகப்பட்ட கடன் சுமை கட்டுகடங்காத அகதிகளின் வருகை என்று அடுத்து ஆட்சி அமைக்க போகின்றவர்கள் முன்னாள் பாரிய பணி இருகின்றது......... அகதிகளின் …
-
- 50 replies
- 4.3k views
-
-
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும், மூடப்பட்டது. டோக்கியோ: ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை, பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை. ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து அணுகதிர் வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜப்பான் நாட்டு மக்கள் அணுஉலையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். மக்கள் போராட்டம் காரணமாக அணு உலைகளை மூட தேவையான நடவடிக்கைகளை ஜப்பான் தொடங்கியது. அங்கு 50க்கும் மேற்பட்ட அணுமின் ந…
-
- 2 replies
- 508 views
-
-
டெல்லி: டெல்லியில் பாஜகவின் தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் வரும் 2014ம் ஆண்டுக்கான பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூத்த தலைவரான எல்.கே. அத்வானி இக் கூட்டத்தை புறக்கணித்தபோதும், அவரை புறக்கணித்துவிட்டு இந்த அறிவிப்பை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த அறிவிப்பையடுத்து நரேந்திர மோடிக்கு ராஜ்நாத் சிங், பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி, வெங்கைய்யா நாயுடு, அனந்த் குமார், முதலில் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது ஜோஷியின் காலி…
-
- 4 replies
- 469 views
-
-
டெல்லி: பாஜகவிலிருந்து தூக்கப்பட்டு விட்டமூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி நரேந்திர மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் மோடியே வெல்வார் என்றும் அத்வானியால் தனக்குத் தேவையான ஆதரவைத் திரட்ட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஜெத்மலானி கூறுகையில், பிரதமர் வேட்பாளருக்கு மோடிதான் பொருத்தமானவர், சரியானவர். அவர் ஒரு அவதாரம் போன்றவர். நிதர்சனம் புரிந்து நடக்க அத்வானி முன்வர வேண்டும்.அவரால் தேவையான ஆதரவைப் பெற முடியாது. பிரதமர் வேட்பாளர் போட்டியில் மோடியே வெல்வார். அத்வானியால் வெல்ல முடியாது. http://tamil.oneindia.in/news/india/modi-is-the-best-option-bjp-s-pm-cadidate-advani-183336.html
-
- 2 replies
- 676 views
-
-
வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீதான விசா கொள்கையில் மாற்றம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி முறைப்படி நேற்று அறிவிக்கப்பட்டார். எனினும் மோடிக்கு விசா கொள்கையில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க மாநில துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ப், அமெரிக்காவின் நீண்ட கால விசா கொள்கையில் எவ்வித மாற்றமும் இருக்காது. மோடி மற்ற விண்ணப்பதாரர் போன்று விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். அதனை நாங்கள் வரவேற்கிறோம். அவரது விண்ணப்பம் ஆய்வு செய்யப்படும் என மேலும், ஆய்வு முடிவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து தற்போது நான் எதுவும் பேச…
-
- 4 replies
- 561 views
-
-
வளைகுடா நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் படுகையில் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இந்த எண்ணெய் படுகை சோவியத் யூனியனில் இருந்து தனி நாடான கஜாகிஸ்தானின் அருகே கேஸ்பியன் கடலில் உள்ளது. கஸாகான் ஆயில் பீல்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியில் 13 பில்லியன் பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பதாகத் தெரிகிறது. உலகிலேயே தரைப்பகுதிக்குள் அமைந்துள்ள மாபெரும் தண்ணீர் மண்டலம் (371,000 சதுர கி.மீ. பரப்பளவு) தான் கேஸ்பியன் கடல். இதை கடல் என்றும் அழைக்கிறார்கள். உலகின் மாபெரும் ஏரி என்றும் சொல்கிறார்கள். இந்த நீரின் உப்புத் தன்மை கடல் நீரின் உப்புத் தன்மையை விட 3ல் ஒரு மடங்கு குறைவாகவே உள்ளது. 30 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மாபெர…
-
- 2 replies
- 1.2k views
-
-
டெல்லி பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு: கொந்தளிக்கும் குற்றவாளிகளின் வக்கீல் Friday, September 13, 2013, 16:23 [iST] டெல்லி: டெல்லி பாலியல் வல்லுறவு வழக்கின் தீர்ப்பு நியாயமானது இல்லை என்றும், அரசியல் தலையீட்டால் வழங்கப்பட்ட பாராபட்சமான தீர்ப்பு என்றும் 4 குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் மைனர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மீதமுள்ள 4 பேரில் பேருந்து டிரைவர் ராம் சிங் கடந்த மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதையடுத்து மீதமுள்ள நான்கு ப…
-
- 4 replies
- 498 views
-
-
தாய்லாந்தின் மன்னரை, ஒரு தனிப்பட்ட உரையாடலில் அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை நீதிமன்றம் ஒருவழியாக விடுதலை செய்திருக்கிறது. அரச குடும்பத்துக்கெதிரான அவதூறு-- தாய்லாந்து தேவையற்ற தீவிரம் ? இந்த குறிப்பிட்ட நபர் இவ்வாறு தனிப்பட்ட உரையாடல் ஒன்றில் அரசரைத் தவறாகப் பேசினார் என்று அவரது சகோதரர் புகார் செய்தாராம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த இரு சகோதரர்களுக்கிடையேயும் நீண்ட காலமாக பெரிய சச்சரவுகள் இருந்திருக்கின்றன, எனவே இந்த சாட்சியம் நம்பத்தகுந்ததாக இருக்காது என்று கூறினார். இதற்கு முன்பு, அவரை ஜாமீனில் விடுதலை செய்ய சமர்ப்பிக்கப்பட்ட பல மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அரச குடும்பத்தினரை அவதூறு …
-
- 0 replies
- 289 views
-
-
இந்தோனேஷியத் தலைநகர் ஜாகர்த்தாவில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போயிருக்கும் நான்கு புராதன, தங்கக் கலைப்பொருட்களைக் கண்டுபிடிக்க சர்வதேச ஏல நிறுவனங்களிடம் இந்தோனேசிய போலிசார் உதவி கோரியிருக்கின்றனர். அருங்காட்சியகத்தின் பிரதான காட்சி அறைகளில் ஒன்றில் இருந்த கண்ணாடிப் பேழையில் இருந்த இந்தப் பொருட்களை அருங்காட்சியக ஊழியர்கள் திருடியிருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். புராதன கலைப்பொருட்கள் திருட்டு மூன்று தங்கப் பலகைகளும், ஒரு தங்கப் பானையும் ஆன இந்தப் பொருட்கள் , இந்துக் கடவுள்களின் சக்தியைக் குறிப்பவையாகக் கருதப்படுகின்றன. இந்தப் பொருட்கள் ஜாவாவில் 11ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் நிலவிய இஸ்லாத்துக்கு முந்தைய நாகரிகத்தைச் சேர்ந்தவையாகும…
-
- 0 replies
- 458 views
-
-
பெங்களூர்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் அனுப்பப்படும் விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்பட இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நேற்று பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) செயற்கைகோள் மைய இயக்குனர் சிவகுமார், இந்திய தொலை உணர்வு செயற்கைகோள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை, ‘மார்ஸ்' திட்ட இயக்குனர் அருணன் ஆகியோர் கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், இந்தியா சார்பில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப் படும் விண்கலம், விண்ணில் ஏவப்படும் மாதம் குறித்து அறிவித்தனர். மேலும், இது குறித்து அவர்கள் கூறியதாவது.... ‘முதல்முறையாக இந்தியா வேற்ற…
-
- 2 replies
- 841 views
-
-
லண்டன்: ஆண்டுதோரும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால், உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள், தேவையான அளவு மட்டுமே சாப்பிடுங்கள் என எவ்வளவோ பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்ற போதும், தயாரிக்கப்படுகின்ற உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாவதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அப்படி வீணாகின்ற உணவின் காரணமாக, தினமும் 87 கோடி உலகமக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். http://tamil.oneindia.in/news/international/one-third-food-produced-globally-wasted-annually-183294.html
-
- 0 replies
- 428 views
-