உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
பிரெஞ்சு அரச பள்ளிகளில் புதிய மதச்சார்பின்மை பிரகடனம் பிரெஞ்சு அரசு பள்ளிகளில் புதிய " மதச்சார்பின்மை பிரகடனம்" ஒன்று கட்டாயமாக எல்லோருக்கும் தெரியும் வண்ணம் இன்றிலிருந்து வைக்கப்படவேண்டும் என்று பிரான்ஸின் கல்வி அமைச்சர் அறிவித்திருக்கிறார். பள்ளியின் கல்வித்திட்டத்தை மதக் காரணங்கள் காட்டி மாணவர்கள் ஆட்சேபிக்க முடியாது என்பதை அவர்களுக்கு நினைவூட்டவே இந்தப் பிரகடனம் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த புதிய பிரகடனத்தில் 15 ஷரத்துக்கள் இருக்கின்றன. முதல் பிரகடனம் பிரெஞ்சுக் குடியரசு ஒரு பிரிக்கமுடியாத, ஜனநாயக, சமூக, மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது. பாடத்திட்டத்தில் சில பகுதிகளை ஆசிரியர் நடத்துவதை மாணவர்கள் தங்களது மத மற்றும் அரசியல் கொள்கைகளைப் பயன்படுத்தி …
-
- 3 replies
- 409 views
-
-
தடை செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியது சட்டவிரோதமானது என கூறி அந்நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவு செய்தது. அதில் ஜனாதிபதி ஒபாமா உறுதியாக இருக்கிறார். சிரியா மீது குறைந்தபட்ச தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் கூறி வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சு, துருக்கி, ஜெர்மனி நாடுகள் ஆதரவு கொடுத்தன. சிரியா விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை திரட்ட அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜேன் கெர்ரி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஐரோப்பிய யூனியன் மந்திரிகளை சந்தித்து பேசினார். இதற்கிடையில் ஐரோப்பிய யூனியனில் இடமபெற்றுள்ள 28 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதில் சிரியா அரசாங்கம் கடந்த 21ந் தே…
-
- 0 replies
- 545 views
-
-
புகலிட கோரிக்கையாளர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பேன் என்று அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள டொனி அபோட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியை ஒப்புக்கொள்வதாக அக்கட்சியின் தலைவரான பிரதமர் கெவின் ரூட் அறிவித்துள்ளதையடுத்து புதிய பிரதமராக டொனி அபோட் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், தனது தலையாய கடமைகள் இரண்டு எனவும், ஒன்று முந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கார்பன் வரியை நீக்குவதா, இல்லையா என்று முடிவெடுக்கவேண்டும். மற்றது ஆசியாவின் மற்ற பகுதிகளிலிருந்து புகலிடம் தேடி படகில் வருவோரின் பிரச்சினை. படகுகளில் வருவோரை கடல் என்லையிலேயே மறித்து திருப்பி அனுப்புவதுதான் சிறந்த முறையென்றும் கிறிஸ்மஸ் தீவு போன்ற மற…
-
- 0 replies
- 390 views
-
-
தமிழை ஏன் இன்னும் கெளரவிக்கவில்லை மத்திய அரசு.. ? ராஜ்யசபாவில் சீறிய 'இந்தி' எம்.பி! சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் சிலரே தமிழின் பெருமையை மதிக்காமல் இருக்கும் நிலையில், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட, அதுவும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி. ஒருவர் தமிழை நாட்டின் 2வது தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும், நாடு முழுவதும் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முழங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கோரிக்கையுடன் நில்லாமல் தமிழின் பெருமைகளையும் அவர் விளக்கி விரிவாகப் பேசியதும் தமிழர்களை பெரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறப்புமிகு எம்.பி.யின் பெயர் தருண் விஜய். பாஜகவைச் சேர்ந்தவர். உத்தரகாண்ட் ம…
-
- 4 replies
- 1.2k views
-
-
அதிக தேர்தல் நிதி திரட்டி கொடுத்த இந்திய பெண்ணுக்கு உயர் பதவி அளித்து கௌரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவுக்கு 3 மில்லியன் டொலர் தேர்தல் நிதி திரட்டியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜிதா ராஜி.நிதி ஆலோசகரான இவர் பெர்னார்டு கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பும், கொலம்பியா வர்த்தக பள்ளியில் எம்.பி.ஏ. பட்டப் படிப்பும் படித்துள்ளார்.2012 ஆம் ஆண்டு இவர் ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவராக பதவி வகித்தார். கொலம்பியா வர்த்தக பள்ளியில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் அஜிதா ராஜிவை ஒபாமா, அமெரிக்கா அதிபரின் ஆணைய உறுப்பினராக நியமித்துள்ளார். இவரைப் போல மேலும் 9 பேருக்கும் …
-
- 3 replies
- 488 views
-
-
கேரள கோயில்களில் உள்ள தங்கம் குறித்த விவரங்களை உடனடியாக தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களில் குவிந்து கிடக்கும் தங்கம் குறித்த கணக்குகளை ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கேரளாவில் உள்ள கோயில்களில் வைக்கப்பட்டுள்ள தங்கம் குறித்த விவரங்களை சேகரிக்க ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக, திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து அனைத்து தேவசம் போர்டுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கேரளா வில் முக்கியமாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு, குருவாயூர், மலபார் தேவசம் போர்…
-
- 1 reply
- 381 views
-
-
கனடாவில் west of Port Perry என்ற இடத்தில் ஜீப் மோதி மோட்டார்சைக்கிள் மோதி ஒருவர் பலி. கனடாவில் உள்ள west of Port Perry என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவர் திடீரென எதிரே வந்த ஜீப் ஒன்றில் மோதியதால் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சையின் பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் southbound on Highway 7-12 என்ற இடத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஜீப் ஒன்றில் மோதி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டும் அவருடைய உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் மீது மோதிய ஜீப்பை ஓட்டி …
-
- 0 replies
- 405 views
-
-
சிரியா மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கை பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு! செயின்ட்பீட்டர்ஸ்பர்க்: சிரியா மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கையை இந்தியா ஆதரிக்காது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி 20 உச்சி மாநாட்டில் சிரியா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங், சிரியா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதற்கான அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. எந்த ஒரு நாட்டின் மீதுமான ராணுவ நடவடிக்கையால் மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியாது. சிரியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் ஐக்கிய நாட…
-
- 1 reply
- 467 views
-
-
லண்டன்: இங்கிலாந்தில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்குள், 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்துகளில் சிக்கி கிட்டத்தட்ட 200 பேர் காய்மடைந்ததாகத் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து, கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி நிலவுகிறது. எனவே, பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடிக் காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கின்றன. அணிவகுத்த வாகனங்கள்.... இந்நிலையில் நேற்று காலை, ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் பனி மூட்டத்தால் வழித்தடம் தெரியாமல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. மோதிக் கொண்ட வாகனங்கள்... திடீரென பனி மூடியதால் சாலையில் நகர முற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன…
-
- 0 replies
- 479 views
-
-
போபால்: மத்தியப் பிரதேசத்தில் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக ஸ்டைலில் களம் இறங்கியுள்ளது காங்கிரஸ். இந்த பார்முலாவுக்காக அது தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ஜால்ரா அடித்தும், ஐஸ் வைத்தபடியும் இருக்கும் திக்விஜய் சிங்கைக் கூட ஓரம் கட்டி வைத்துள்ளது. அவருக்குப் பதில் இளைஞரான ஜோதிராதித்யா சிந்தியாவை முன்னிறுத்தியுள்ளது. இது கிட்டத்தட்ட மோடியை எப்படி பாஜக பிரசாரக் குழுத் தலைராக அக்கட்சி அறிவித்ததோ அதே ஸ்டைல்தான். மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தல் வர இன்னும் 3 மாதங்களே உள்ளது. இந்தத் தேர்தலை சிந்தியா தலைமையில் காங்கிரஸ் சந்திக்கும் என்று மேலிடம் அறிவித்துள்ளது.சி்ந்தியா தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். மறைந்த காங்கி…
-
- 0 replies
- 402 views
-
-
ஷிமோகா: சிறுவயதில் படிக்காமல் மாடு மேய்த்த தன்னை மீண்டும் பள்ளியில் சேர்த்து சிறந்த மனிதனாக மாற்றியது தனது ஆசிரியர் தான் என ஆசிரியர் தின விழாவில் தெரிவித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. நேற்று, கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தனது சிறு வயது பள்ளி நாட்களையும், ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்தார். ‘என்னுடைய சிறிய வயதில் ஒழுங்காக பள்ளிக்கூடம் சென்றதில்லை. குறிப்பாக 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் எருமைகளை மேய்ப்பதற்காக சென்று விடுவேன்.அப்போது பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பீடி, சிகரெட் வாங்க காசு கிடைக்கவில்லை என்றால், பேப்பரை…
-
- 4 replies
- 866 views
-
-
மலப்புரம்: சென்னையில் இருந்து கேரளாவிற்கு ரூ.1.25 கோடி ரூபாய் பணத்தை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து கேரள மாநிலம் மலப்புரத்திற்கு வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் வாலிபர்கள் சிலர் கட்டு கட்டாக பணத்துடன் பயணம் செய்வதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் கேரள மாநிலம் ஒற்றபாலம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் 4 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் அமர்ந்திருந்தனர். அவர்களை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர். அப்போது 4 வாலிப…
-
- 0 replies
- 436 views
-
-
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் சீனத் துருப்புகள் அத்துமீறி நுழைந்து 640 சதுர கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தவறானவை என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி மறுத்துள்ளார். சமீப காலமாக இந்திய சீனத் எல்லையில் பதட்டம் அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆராய்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் ஷாம் சரண், லடாக் பகுதிகளுக்கு சென்று திரும்பிய பிறகு மத்திய அரசிடம் ஒரு அறிக்கையை அளித்தார். இந்த ரகசிய அறிக்கையில், சீனா பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இந்தியத் துருப்புக்கள் எல்லையில் ரோந்து சுற்றுவதை தடுக்கும் வகையில் சீனாவில் நடவடிக்கைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பா…
-
- 1 reply
- 422 views
-
-
சீனாவில் 40 கோடி பேருக்கு அந்நாட்டின் அதிகாரபூர்வ மொழியான மேன்டரினை சரியாகப் பேசத் தெரியவில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் அந்த மொழியை மோசமாகப் பேசுகின்றனர். அந்நாட்டில் பேசப்படும் ஆயிரக்கணக்கான வட்டார மொழிகளுக்கு இடையே தொடர்பாடல்களை மேற்கொள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட மேன்டரின் உருவாக்கப்பட்டது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் பேசப்படும் மேன்டரினே உலகில் அதிகம் பேர் பேசும் மொழியாக உள்ளது. மேன்டரினை பல ஆண்டுகளாக சீனாவையாளும் கம்யூனிஸ்டுகள் முன்னிலைப்படுத்தி வருகின்றனர். மெண்டரின் எழுத்துக்கள் எதிர்ப்பு ஆனால் நாடு முழுதிலும் மேன்டரின் பேசப்படும் நிலை என்றுமே தோன்றாமல் போகலாம் என்று அதிகாரிகள் ஒப்புக் கொள்கின்றனர். குறிப்பாக சிறுபான…
-
- 0 replies
- 888 views
-
-
அகமதாபாத்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி வன்சாராவின் கடிதத்திற்குப் பொறுப்பற்று முதல்வர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பந்த் நடத்த குஜராத் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இன்று இந்த பந்த் நடக்கிறது. இருப்பினும் பந்த்திற்கு ஆதரவு கிடைத்திருப்பதாக தெரியவில்லை. வன்சாரா கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மோடி பொறுப்பேற்க வேண்டும். தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து மாநில எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா நேற்று கூறுகையில், இந்த அரசு ஒரு நாள் கூட பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது. மக்களையும், வியாபாரிகளையும் பந்த்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று அரசு மிரட்டி வருகிறது. இந…
-
- 1 reply
- 403 views
-
-
சென்னை: தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்த வைகைச் செல்வன் திடீரென நேற்று நீக்கப்பட்டார். இவரின் பதவி பறிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதிமுகவின் இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறையின் செயலாளராக பதவி வகித்த அருப்புக்கோட்டை எம்எல்ஏ வைகைச் செல்வன் கடந்த பிப்ரவரி 27ம் தேதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆறு மாத காலம் அமைச்சராக இருந்த வைகைச் செல்வனின் பதவி ஆசிரியர் தினத்தன்று பறிக்கப்பட்டது. அதோடு அவர் வகித்து வந்த அ.தி.மு.க. இளைஞர் பாசறைச் செயலாளர் பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது. சபீதா உடன் மோதல் இவரது நீக்கத்திற்கு பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் சபீதாவுடன் ஏற்பட்ட மோதலே முக்கிய காரணம் எனக் கூறப்படுகி…
-
- 0 replies
- 637 views
-
-
இந்தியன் பேட்மிண்டன் லீக் தொடரின்போது டெல்லி ஸ்மாஷர்ஸ் வீராங்கனைகளை ஒரு போட்டியி்ல விளையாட விடாமல் தடுத்தது தொடர்பாக முன்னணி வீராங்கனை ஜுவாலா கட்டாவிடம் விசாரணை நடத்த ஐபிஎல் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஐபிஎல் அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தவுள்ளது. பெங்களூரில் ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த போட்டியில் விளையாட விடாமல் டெல்லி வீரர்களை ஜுவாலா தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பங்கா பீட்ஸ் அணிக்கு எதிரான போட்டி இது. இதில், காயமடைந்த வீரர் ஹூ யூன்-க்குப் பதில், ஜான் ஓ ஜோர்ஜென்சனை சேர்க்க அந்த அணி முயன்றது. இதற்கு ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் இந்த மாற்றத்தை ஜுவாலா விரும்பவில்லை. மாற்றக் கூடாது என்று கோரிக்கை வைத்தார். மேலும் நமது கோரிக்கை…
-
- 0 replies
- 515 views
-
-
இங்கிலாந்தில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்குள், 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்துகளில் சிக்கி கிட்டத்தட்ட 200 பேர் காய்மடைந்ததாகத் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து, கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி நிலவுகிறது. எனவே, பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடிக் காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று காலை, ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் பனி மூட்டத்தால் வழித்தடம் தெரியாமல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.திடீரென பனி மூடியதால் சாலையில் நகர முற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. வாகன ஓட்டிகள் என்ன நடக்கிறது என்பதை யூகிப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
Worldtamils Win மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தில் சுவிஸ் (வீடியோ இணைப்பு) உலக பொருளாதார அடிப்படையில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி சுவிட்சர்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடம் வகிக்கிறது. பொருளாதார வரிசையில் நாடுகளின் வளர்ச்சி குறித்து ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிங்கப்பூர், பின்லாந்து, ஜேர்மனி, அமெரிக்கா, சுவிஸ் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் நெதர்லாந்து எட்டாவது இடத்திலும், ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom) 10வது இடத்திலும் உள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்து பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நிறுவனங்கள், தொழில்வளர்ச்சி மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் மேலோங்கி காணப்படுவதாக W…
-
- 0 replies
- 514 views
-
-
அவுஸ்திரேலியாவில் இருக்கும் Liberal Party நீண்ட காலமாக பாதுகபப்பை தேடிவரும் அகதிகளுக்கும், எங்களின் தூய்மையான விடுதலைப்போராட்டத்திற்கும் வெவ்வேறு வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். எதிர்கட்சியின் துணைத் தலைவர் Julie Bishop அவர்கள் சிறிலங்காவிற்கு சென்று வந்ததும் அங்கே தமிழர்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திவரும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் சிறிலங்காவை பாராட்டினார். ஆனால் எங்கள் மக்களுக்கு சிறிலங்கா அரசு தொடர்ந்தும் கொடுத்து வரும் பெரும் துயரங்களை நாங்கள் யாவரும் அறிவோம். பாதுகாப்பை தேடிவரும் தமிழீழ அகதிகளின் வரவை எதிர்ப்பவர்களின் வாக்கை தம் பக்கம் திருப்புவதற்காகவும். அவுஸ்திரேலிய பாராள…
-
- 0 replies
- 583 views
-
-
கருணாநிதியின் சொத்து மதிப்பு. 1967-ல் ரூ.1.08 லட்சம். தற்போது ரூ.92.88 கோடி. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கிடைத்த அதிர்ச்சி தகவல். தமிழக முதல்வர்’ பதவி என்பது, எத்தனை சக்தி வாய்ந்தது; அதை வைத்து ஏழை - எளிய மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்யலாம் என்பதை ஒருநாள் முதல்வராக செயல்பட்டு உணர்த்துவார் சாமான்யரான 'முதல்வன்’ அர்ஜுன்! வில்லனால் பழிவாங்கப்பட்டு சொத்துக்கள் அனைத்தையும் இழந்த 'சிவாஜி’ ரஜினி, ஒற்றை ரூபாயைச் சுண்டி, இழந்ததைவிடவும் அதிகப்படியான சொத்துக்களைச் சம்பாதிப்பார். இந்த இரண்டும் ரீலில் சாத்தியம். ரியலில்? 'இதுவும் சாத்தியம்... இதற்கு மேலும் சாத்தியம்’ என்பதை தனிநபராக நிரூபித்திருக்கிறார் கருணாநிதி. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மூர்க்கமாகப் பங்கெடுத்தது, …
-
- 3 replies
- 2.6k views
-
-
வைரக்கம்மலை விழுங்கிய கோழி. கொல்ல மனமில்லாமல் 8 வருடங்கள் காத்திருக்க இங்கிலாந்து பெண் முடிவு. இங்கிலாந்தில் ஒரு பெண் கோழி ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். அவர் ஆசையாக வளர்த்த கோழி அவரது விலைமதிப்புள்ள வைரத்தோடு ஒன்று தெரியாமல் விழுங்கிவிட்டது. ஆனாலும் கோழியை கொல்ல மனமில்லாமல் அது இயற்கையாக சாகும் வரை காத்திருந்து பின்னர் வைரக்கம்மலை எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார். இதே நம்மூரில் என்றால் உடனடியாக கோழியை கொன்று சிக்கன் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டு வைரக்கம்மலையும் கைப்பற்றிவிடுவார்கள். அந்த இங்கிலாந்து பெண்ணின் இரக்க குணத்தை அவர்கள் உறவினர்கள் பெரிதும் பாராட்டினார்கள். இங்கிலாந்தின் பெர்க்ஷயர் பகுதியில் வசிப்பவர் Claire Lennon, (38). இவர் வீட்டில் கோழி ஒன்ற…
-
- 0 replies
- 491 views
-
-
தீயினால் பாதிக்கப்பட்ட St. Jacobs Market-ல் உள்ள ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சென்ற வாரம் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மார்கெட் பகுதி மறுசீரமைப்புக்கு பிறகு குறிப்பிட்ட ஒரு சில பகுதிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. St. Jacobs Market என்ற பகுதியில் சென்ற வாரம் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான கடைகள் பெரும் பாதிப்படைந்தன. பின்னர் பாதிக்கப்பட்ட கடைகள் மராமத்து பணிகள் வேகமாக நடைபெற்று நேற்று வியாழக்கிழமை ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒண்டோரியோ பிரிமியர் Kathleen Wynne இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். 2200 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மிகப்பெரிய கட்டிடத்தின் பாதிக்கப்பட்ட பிற பகுதிகள் மிக வேகமாக மராமத்து பண…
-
- 0 replies
- 279 views
-
-
டொரண்டோவில் ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம். டொரண்டோவில் 17 மாத குழந்தை ஒன்று ஏழாவது மாடியின் பால்கனியில் இருந்து கீழே விழுந்தும் அதிசயமாக காயங்களுடன் உயிர் பிழைத்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டொரண்டோவின் Thorncliffe Park Dr., near Don Mills Road and Overlea Boulevard,என்ற இடத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய கட்டிடடத்தின் ஏழாவது மாடியின் பால்கனியில் இருந்து நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் ஒரு குழந்தை தவறி விழுந்தது. ஆனால் அந்த குழந்தை விழுந்த இடம் அடர்ந்த புல்வெளிப்பகுதியாக இருந்ததால் குழந்தை பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தது. போலீஸ் விசாரணையில் குழந்தை பால்கனியில் இருந்த ஒரு நாற்காலியின் மீது ஏ…
-
- 0 replies
- 475 views
-
-
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: சிரியா நாட்டின் மீது அமெரிக்கா தலைமையில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் சர்வதேச பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிப்படையும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்காக ரஷ்யா சென்றுள்ள சீனாவின் துணை நிதி அமைச்சர் ஜூ குயாங்யோ செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிரியா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபைதான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அதைவிடுத்து சர்வதேச நாடுகள் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் நிச்சயமாக சர்வதேச பொருளாதாரத்தில் குறிப்பாக எண்ணெய் விலையில் பெரும் எதிர்விளைவுகளே உருவாகும் என்றார். http://tamil.oneindia.in/news/2013/09/05/world-china-…
-
- 0 replies
- 392 views
-