Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மனிதக் கணினி சகுந்தலா தேவி காலமானார் உலகின் வேகமான மனிதக் கணினி என்று புகழ்பெற்ற கணிதப் புலமையாளர் சகுந்தலா தேவி காலமானார். அவருக்கு வயது 83. ஆரம்பத்தில் சுவாச நோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் இதய மற்றும் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர் இலக்கங்களைக் கொண்ட மிகச் சிக்கலான கணக்குகளுக்கு கூட மிகக்குறுகிய நேரத்தில் மனக்கண்ணிலேயே தீர்வுகாண்பதில் வல்லவர் என்று சகுந்தலா தேவி புகழ்பெற்றவர். அவர் சிறுவயதில் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆனால் தானாக வந்த அறிவைக் கொண்டே அவர் இந்தக் கணக்குகளைத் தீர்க்கப் பழகிக்கொண்டுள்ளார். பழைய நூற்றாண்டொன்றின் திகதியைக் கூறினால் மறுநொடியிலேயே அதன் நாளை (கிழமையை) சொல்லுமளவுக்கு அவர் திறமைகொண்டவர். …

  2. 22 பேருக்கு தொற்றை பரப்பிய சந்தேகத்தின் பேரில் ஸ்பெயினில் ஒருவர் கைது! கொரோனா தொற்று இருப்பதை மறைந்தது 22 பேருக்கு தொற்றை பரப்பிய சந்தேகத்தின் பேரில் ஸ்பெயினில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான அவர் இருமல் மற்றும் 40 செல்ஸியசிற்கும் அதிகமான உடல் வெப்பநிலை இருந்தபோதிலும் தொடர்ந்து வேலை மற்றும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் பணிபுரியும் இடத்தில் ஐந்து பேருக்கும் மூன்று வயது குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 14 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குறித்த நபர் பல நாட்களாக அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக ஸ்பெயினின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ள முன்ன…

  3. எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனை; வடகொரியாவின் நான்காவது தொடர் தோல்வி அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வட கொரியா ஏவுகணை பரிசோதனையொன்றை உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை நடத்தியுள்ளது. அணுவாயுதம் மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளை வடகொரியா கைவிடாவிட்டால், பேரழிவுகளைச் சந்திக்க நேரும் என, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் எச்சரிக்கை விடுத்த சிறிது நேரத்திலேயே இந்த ஏவுகணைப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கின் வட பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணையும் தோல்வியிலேயே முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் முதல் வடகொரியா சந்தித்திருக்கும் தொடர்ச்சியான நான்காவது தோல்வி …

  4. மும்பை: அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வருகிறது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு இணையான மதிப்பு 65.50 ஆக சரிந்தது. கடந்த சில வாரங்களாக ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டு வருகிறது. 62, 63 என சரிந்த ரூபாய் மதிப்புஇன்றைய காலை வர்த்தகத்தின் போது இதுவரை இல்லாத வகையில் 64.90 ஆக தொடங்கியது. பின்னர் இது 65.13யை தொட்டியது. தொடர்ந்து 65.50 என்ற மதிப்பை அடைந்தது. இதுவரை இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்பு 65.50 ஆக அதிகரிப்பதால் பங்குச் சந்தைகள் கடும் சரிவை எதிர்கொள்ளக் கூடும். http://tamil.oneindia.in/news/2013/08/22/business-rupee-opens-at-64-90-per-us-dollar-hits-65-181757.html

    • 1 reply
    • 367 views
  5. அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வடகொரியா தயார் நிபந்தனைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாக தென் கொரிய ஊடகங்கள் கூறியுள்ளன. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES வட கொரியாவை சேர்ந்த ஒரு மூத்த ராஜிய அதிகாரி, நார்வேயில் முன்னாள் அமெரிக்க அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திய பிறகு, அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவது சாத்தியம் எனத் தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில், கிம் ஜோங் உன்னை சந்திப்பதை பெருமையாக கருதுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். வட கொரியாவின் பேலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டம் குறித்து பதற்றம் அதிகரித்து வரும்…

  6. காபூல் விமான நிலையத்தை இலக்கு வைத்த... ஐந்து ரொக்கெட் குண்டுகளையும், இடைமறித்தது அமெரிக்கா! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஐந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதல்களை, அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் முறியடித்துள்ளதாக அவர் மேலும் கூறினார். உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) இந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆனால், இந்த நேரத்தில் உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த ரொக்கெட்டுகளை ஏவியது யார் என்பது தெரியவில்லை என்ற போதிலும், ஐஎஸ்.ஐஎஸ்-கே மூலம் இது ஏவப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரி சந்தேகம் வெளியிட்டுள்ளார். பெயர் தெ…

  7. கென்யாவின் தலைநகர் நைரோபியில் பொதுமக்கள் பலரை இஸ்லாமியவாத ஆயுததாரிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள அங்காடி வளாகத்தில், மறுபடியும் மறுபடியும் துப்பாக்கிகள் வெடித்தபடி உள்ளன, பல தடவை பெரிய வெடிச் சத்தங்களும் கேட்டுள்ளன. நிறைய பேருடைய கதி பற்றி இன்னும் விவரம் இல்லை. இந்த கடை வளாகத்தில் நடந்த வன்முறையில் குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், வேறு 63 பேர் இன்னும் கணக்கில் வராமல் உள்ளனர் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும், அம்முயற்சிகளின்போது பணயக் கைதிகளின் உயிகளைப் பாதுகாக்க மிக அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் கென்யாவின் இராணுவம் முன்னதாகக் கூறியிருந்தது. சொமாலியா…

  8. தலிபான்களின் பிடியிலிருந்து... தப்பிய, ஆப்கான் பெண்கள் கால்பந்து அணிக்கு பிரித்தானியா அடைக்கலம்! ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து தப்பித்த பெண்கள் கால்பந்து அணியின் வீராங்கனை மற்றும் அவர்களது குடும்பம் தங்கள் நாட்டில் குடியேறலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரித்தானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘நாங்கள் ஆப்கானிஸ்தான் மகளிர் மேம்பாட்டுக் குழுவுடன் பேசி விசாக்களை இறுதி செய்து, விரைவில் பிரித்தானியாவுக்கு அவர்களை வரவேற்க காத்திருக்கிறோம்’ என கூறினார். 13 முதல் 19 வயதுடைய 35 பெண்களைக் கொண்ட குழு கடந்த மாதம் காபூலை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சில வாரங்களாகத் தங்கியிருந்தனர். அவர்களது தற்காலிக விசா இன்று…

  9. லிபியா கடற்பகுதியில் படகு விபத்து: 75 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! இந்த வார தொடக்கத்தில் லிபியாவிற்கு வடக்கே மத்தியதரைக் கடலில் படகு மூலம் இத்தாலியை அடைய முயன்ற 75 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் குடியேற்ற முகவரகம் தெரிவித்துள்ளது. உயிர் பிழைத்த 15பேர், மீனவர்களால் மீட்கப்பட்டு வடமேற்கு லிபியாவில் உள்ள ஜுவாரா துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இத்தாலிய கடலோர காவல்படை மத்தியதரைக் கடலில் சிரமப்பட்ட படகுகளில் இருந்து டஸன் கணக்கான சிறார்கள் உட்பட 420க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை மீட்டது. சிசிலிக்கு தெற்கே உள்ள சிறிய இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்கு 70பேர் தங்கள்…

  10. நியூயார்க் டைம்ஸில் இருந்து விலகினார் ’கறார் விமர்சகர்’ மிச்சிக்கோ காக்குடானி! ஆங்கில நாவலாசிரியர்களுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. ஆம் 'மிச்சிக்கோ காக்குடானி நியூயார்க் டைம்ஸில் இருந்து விலகியுள்ளார்' என்பதே அது. 1955-ம் ஆண்டில் அமெரிக்காவின் கனெக்ட்டிகெட் நகரில் பிறந்த மிச்சி கல்லூரி முடித்தவுடன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் செய்தியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின்னர் 1977-ல் 'டைம்' பத்திரிக்கையில் சேர்ந்தார். இரண்டாண்டுகள் அங்கு இருந்த மிச்சி 79ல் நியுயார்க் டைம்ஸில் சேர்கிறார். அதன் பின் நேற்று இரவு வரை அதில்தான் வேலை செய்தார். 83-ம் ஆண்டுவரை செய்தியாளராக இருந்த அவர் அதன் பின் புத்தக விமர்சகராக பதவியளிக்கப்பட்டார். நிறைய வ…

  11. அமெரிக்க எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் ரே நியமனம்: செனட் சபையில் ஒப்புதல் கிறிஸ்டோபர் ரே - REUTERS அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் நியமிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ.யின் இயக்குநராக ஜேம்ஸ் கோமி பதவி வகித்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யாவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜேம்ஸ் கோமி தீவிர விசாரணையில் இறங்கினார். …

  12. ஆப்கானிஸ்தானில் அண்மையில் நடந்த மோதலில் பிரிட்டன் இராணுவத்தைச் சேர்ந்த 18 வயதான ஒருவரும் உயிரிழந்துள்ளார். உலகெங்கும் சிறுவர் படையணி தொடர்பில் கண்டனங்களைக் கொட்டி தலையீடுகளை மேற்கொண்டு வரும் பிரிட்டன் இன்றைய நாளில் 18 வயதான ஒருவரை எத்தனை வயதில் பயிற்சிக்கு எடுத்து எத்தனை மாதங்கள் பயிற்சி அளித்து அதிதீவிர சண்டைக் களத்திற்கு அனுப்பியது என்பது இப்போ.. புரியாத புதிராக இருக்கிறது. 18 வயதிற்கும் குறைந்தோரை இராணுவத்தில் இணைப்பதை.. சிறுவர் படையணியாக, போராளிகளாக இனங்கண்டு பிரச்சாரம் செய்து வரும் மேற்குலம்.. இந்த பிரிட்டிஷ் சிறுவர்கள் போரில் பலியிடப்பட்டு வருவதை பற்றி எதுவும் பேசாது ஊமையாக இருந்து வருகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இது தொடர்பில் மெளனம் காத்து வரு…

  13. துனிசியாவில்... நாடாளுமன்றத்தைக் கலைக்க, ஜனாதிபதி உத்தரவு! வடமேற்கு ஆபிரிக்க நாடான துனிசியாவில் நாடாளுமன்றத்தைக் கலைக்க, ஜனாதிபதி காய்ஸ் சயீது உத்தரவிட்டுள்ளார். அவருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை செல்லாததாக அறிவிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்ததைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். துனீசியாவில் பொதுமக்களின் கடுமையான போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்ட ஜனநாயக அரசாங்கம் அமைக்கப்பட்டது. எனினும், பொருளாதார நெருக்கடியையும் போராட்டங்களையும் காரணம் காட்டி, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி காய்ஸ் சயீது முடக்கினார். மேலும், அவருக்கு கூடுதல் அதிகாரம் அளிக…

  14. தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து நித்யானந்தன் விலகல்! Tuesday, March 30, 2010 at 10:48 am | 614 views தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து நித்யானந்தன் விலகல்! பெங்களூர்: பலமான ஆதாரங்களுடன் தொடர்ச்சியான செக்ஸ் குற்றச்சாட்டுகள் மற்றும் நெருக்கும் மோசடி வழக்குகள் காரணமாக தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நித்யானந்தன். நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தன் காமலீலை நடத்தியதன் வீடியோ காட்சிகள் மீடியாவில் அம்பலமாகின. அதைத்தொடர்ந்து முதலில் இது கிராபிக்ஸ் என்றார். இரு தினங்களுக்குப் பிறகு ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருந்தது உண்மைதான் , ஆனால் சுயநினைவில் இல்லை என்றார். அடுத்த நாளே ரஞ்சிதாவுடன் தாம செக்ஸ் ஆராய்ச்சி நடத்தியதாகவும், தான் ஒரு சமூக ஆராய…

  15. என்னை பலாத்காரம் செய்த முதல்வர் உள்பட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: - சரிதா நாயர் [Friday 2017-10-20 07:00] ‘கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உம்மன்சாண்டி உட்பட தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு சரிதா நாயர் கடிதம் அனுப்பியுள்ளார். கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சரிதா நாயர். கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உம்மன்சாண்டி தலைமையிலான கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ெபரும்பாலான அமைச்சர்கள் என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தினர். அவர்கள் பெண்களை ஒர…

    • 0 replies
    • 507 views
  16. உக்ரைன் மீதான... ரஷ்யாவின் படையெடுப்பு, உலக உணவு நெருக்கடியை... விரைவில் ஏற்படுத்தக்கூடும்: ஐ.நா. எச்சரிக்கை! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலக உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நியூயோர்க்கில் நேற்று (புதன்கிழமை) பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், “விலைவாசி உயர்வு காரணமாக ஏழை நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மையை போர் மோசமாக்கியுள்ளது. உக்ரைனின் ஏற்றுமதிகள் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்றால், சில நாடுகள் நீண்டகாலப் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும்” என கூறினார். போரால் உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து விநியோகம் நிறுத்தப்பட்டது. இது ஒரு காலத்தில் அதிக அளவு…

  17. அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய பாதுகாப்பு சபையும், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து நடத்தும் பாதுகாப்பு பயிற்சி பட்டறை நாளை ஆரம்பமாகிறது. http://www.colombopage.com/archive_14A/Mar31_1396286257CH.php

  18. சீனா - தைவான் பிரச்னை வரலாறு என்ன? தைவானுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பது ஏன்? டேவிட் ப்ரவுன் பிபிசி நியூஸ் 25 மே 2022 தைவானை பாதுகாக்க ராணுவ பலத்தைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஆனால், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா ராணுவரீதியாகத் தலையிடுமா என்பது குறித்து அமெரிக்க அரசு நீண்டகாலமாக உத்திசார்ந்த குழப்பமான கொள்கையையே கொண்டுள்ளது. சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங், "தைவானுடனான 'மறு ஒருங்கிணைப்பு' நிறைவேற்றப்பட வேண்ட…

  19. மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியது வடகொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைPRESS EYE Image captionவடகொரியா இந்த ஆண்டு ஜூலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் முதல் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியது வடகொரியா புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தியை அமெரிக்க …

  20. 17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கிய கடன் குறித்து சீனாவின் ஆச்சரிய முடிவு 17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடனை முற்றாக கைவிட சீனா தீர்மானித்துள்ளதாக சீன இராஜாங்க அமைச்சர் சாங் யீ அறிவித்துள்ளார். அண்மையில் செனகலில் நடைபெற்ற சீன-ஆபிரிக்கா ஒத்துழைப்பு மன்றத்தின் 8வது அமைச்சர்கள் மாநாட்டில் சீன இராஜாங்க அமைச்சர் இந்த முடிவை அறிவித்துள்ளார். சீனாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலான பொதுவான அபிவிருத்திக்கான புதிய சகாப்தத்திற்கான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். 2021 நவம்பரில் செனகலின் டாக்கரில் நடைபெற்ற சீனா-ஆபிரிக்க ஒத்துழ…

    • 23 replies
    • 1.2k views
  21. சிரியா அரசுடன் ஒப்பந்தம் செய்த அந்நாட்டு குர்து போராளிகள்: துருக்கியை எதிர்கொள்ள இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய முக்கிய நிகழ்வுகளை பிபிசி நேயர்களுக்காக 'உலகப் பார்வை' பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியா அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அந்நாட்டுப் போராளிகள் படத்தின் காப்புரிமைAFP Image captionஆஃப்ரின் பகுதியில் இர…

  22. சீனா ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? - சமூக ஊடகங்களில் பரவும் தகவலால் பரபரப்பு By RAJEEBAN 25 SEP, 2022 | 10:23 AM சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. சமீபத்தில் சங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சமீபத்தில் சமர்ஹன்டிற்கு சென்றிருந்த சீன ஜனாதிபதி சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.எனினும் இது குறித்து சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சியோ அரச ஊடகங்களோ இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்திய அரசியல்வாதி சுப்பிரமணியன் சுவாமியும் ச…

  23. கனடா பிரதமரின் விருந்தினர் பட்டியலை பரிசீலிப்பதற்குஇந்தியாவுக்கு அனுமதி மறுப்பு: ஊடகத் தகவலால் பரபரப்பு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விருந்தினர் பட்டியலை பரிசீலிப்பதற்கு இந்திய அரசுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகத்தில் செய்திகள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அண்மையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். முன்னதாக, டெல்லி வந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்க செல்லவில்லை. இது, இரு நாட்டு ஊகடகங்களிலும் முக்கியச் செய்திகளாக வெளியாகின. கனடாவில் இயங்கும் காலிஸ்தான் பிரிவினைவாத …

  24. தாக்குதலுக்கு பின் முதன்முறையாக பாகிஸ்தான் சென்ற மலாலா தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பிறகு, முதன்முறையாக பாகிஸ்தான் வந்துள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய். படத்தின் காப்புரிமைGETTY IMAGES மனித உரிமை ஆர்வலராக இருக்கும் மலாலாவுக்கு தற்போது 20 வயதாகிறது. பெண் கல்வி குறித்து பேசியதற்காக 2012ஆம் ஆண்டு தாலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். அவர் பிரதமர் ஷாஹித் சாகான் அப்பாஸியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணம் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள பெனாசி…

  25. தென்னாபிரிக்காவில் எரிவாயு கொள்கலன் லொறி வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு : பலர் காயம் 25 DEC, 2022 | 03:15 PM தென்னாபிரிக்காவில் எரிவாயு கொள்கலன் லொறி வெடித்துச் சிதறிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். அரச அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் சென்று கொண்டிருந்த எரிவாயு கொள்கலன் லொறி ஒன்று, பாலம் ஒன்றின் அடியில் சிக்கிக் கொண்டது. அந்த லொறியை நகர்த்த முயன்றபோது அது பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் பலியானோர் எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.