உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
மும்பையிலிருந்து, ரயில் மூலம், குஜராத்துக்கு கடத்தப்படவிருந்த, கோடிக்கணக்கான ரூபாயையும், நகைகள் மற்றும் விலை மதிப்புமிக்க கற்களையும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், வருமான வரித்துறையினரும் பறிமுதல் செய்தனர். பைகளில் வைக்கப்பட்டிருந்த, ரூபாய் நோட்டுக்கள் மற்றும் தங்க நகைகளின் மதிப்பு, 250 கோடி ரூபாய் இருக்கலாம் என, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இவை யாருக்கு சொந்தமானவை என்ற மர்மம் விலகவில்லை. வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவினரும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, நேற்று முன் தினம் இரவு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், ரயில் நிலையத்திற்கு வெளியே நிறு…
-
- 0 replies
- 437 views
-
-
கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம் இன்று முதல் சுவிட்சர்லாந்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு ஆகக்குறைந்தது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சுவிட்சர்லாந்தின் சமஷ்டி அரசு அறிவித்துள்ளது. கட்டாய திருமணத்தை செய்து வைப்பதில் சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் ஈடுபடுவதாக சுவிசர்லாந்தின் பிரபல பத்திரிகையான சொண்டாக் பிளிக் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் சராசரி 400 கட்டாய திருமணங்கள் நடப்பதாகவும் இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளை சேர்ந்த பெற்றோரே தமது பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணங்களை செய்து வைக்கின்றனர் என்றும் சு…
-
- 1 reply
- 734 views
-
-
அமெரிக்க அதிபருக்கு உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்த ஆலோசனை வழங்கும் முக்கிய பதவிக்கு சூசன் ரைசை ஒபாமா கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி தேர்ந்தெடுத்தார். இன்று சூசன் ரைஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுக் கொண்டார். ‘கடந்த 4.5 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதராக இருந்து அதிபருக்கு சேவை செய்தது பெருமையாக உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக வெள்ளை மாளிகையில் பணியை தொடங்கப் போவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்‘, என்று ரைஸ் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார். இவர் அமெரிக்கா, இந்தியாவுடன் உறுதியான உறவை ஏற்படுத்திக்கொள்ள பெரும் பங்காற்றினார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த போது, இந்தியாவின் தேசிய பாதுக…
-
- 0 replies
- 428 views
-
-
பீஜிங்: பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் சீனாவில் அமலுக்கு வந்துள்ளது. சீனாவில் ஒரு குழந்தை திட்டம் 1970ம் ஆண்டுகளில் அமலுக்கு வந்தது. இதனால், பெரும்பாலான குடும்பங்களில் ஒரேயொரு வாரிசு மட்டுமே உள்ளார்கள். அவர்களும் இப்போது வேலைவாய்ப்பு தேடி வேறு நகரங்களுக்கு சென்று விடுகின்றனர். இளையவர்கள் இல்லாத காரணத்தால் பெரும்பாலான வீடுகளில் வயதான பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 100ல் 14 பெற்றோர்கள் இதுபோன்று கவனிப்பாரின்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் உள்ளனர். 2050ம் ஆண்டு மூன்றில் ஒருவர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் …
-
- 0 replies
- 291 views
-
-
சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு இறப்பது தொடர் நிகழ்வாகிப் போய்விட்டது. இதற்கு விசாரணை செய்வது குறித்து காவல்துறையினருக்கு போதிய பயிற்சி தராததும் ஒரு காரணம் என்று மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். வழக்கறிஞர் மன்றத்தின் குற்றவியல் சட்டப் பிரிவின் துணைத் தலைவரான வி.சிதம்பரம் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நடந்த குகன் வழக்கை மேற்கோள் காட்டிக் கருத்துரைக்கையில், “நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்கப்படுவதில்லை.” “காரணம் அதன் மேல் பல புகார்கள் எழுந்தன மற்றும் விசாரணையில் வழக்கறிஞர்கள் அது குறித்து கேள்வி கேட்கும் போது அந்த வாக்குமூலங்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் காரணமாக நீதிமன்றம் அது …
-
- 0 replies
- 578 views
-
-
ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடமாடிய சீனாவைச் சேர்ந்த 3 பேரை ராணுவத்தினர் கைது செய்தனர். இந்தியப் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய சுல்தான்கு என்ற பகுதிக்கு அருகில் ஜூன் 12ஆம் தேதி 3 நபர்கள் சுற்றித் திரிந்தனர். அவர்களை ராணுவ வீரர்கள் கைது செய்து விசாரணை நடத்தினர். சீனாவைச் சேர்ந்த அவர்களுக்கு ராணுவத்தினர் கேட்ட கேள்விகள் புரியவில்லை. அவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளவே 10 தினங்களானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களின் பெயர் அடில், சலாமோ மற்றும் அப்துல் காலிக் என்றும், அவர்கள் சீனாவைச் சேர்ந்த சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. அராபிய மொழியில் அச்சடிக்கப்பட்ட அரசியல் வரைபடங்களையும் அவர்கள் வை…
-
- 2 replies
- 474 views
-
-
அமெரிக்கக் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பலி தொடர்ந்தும் 200 தீயணைப்புப் படைவீரர்கள் தீயை அணைக்க போராடிவருகின்றனர் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 19 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் பரவிய இந்தத் தீ, அருகே யார்னெல் நகரை அண்டாமல் தீயணைப்புப் படைவீரர்கள் போராடினார்கள். கடந்த வெள்ளியன்று மின்னல் தாக்குதலினால் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ, கடுமையான காற்று, காற்றில் குறைந்தளவு ஈரலிப்பு மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வேகமாக பரவத் தொடங்கியது.செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், ஒரே சம்பவத்தில் அதிகளவில் தீயணைப்பு…
-
- 0 replies
- 491 views
-
-
மணிப்பூர் மாநிலம் மற்றும் மியான்மர் நாட்டிற்கும் இடையேயான எல்லைப் பிரச்னையில், தமிழர்களின் கோவிலை, மியான்மருக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என, மணிப்பூர் அரசு உறுதியாக தெரிவித்துஉள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூருக்கும், அதன் எல்லையில் உள்ள, மியான்மர் நாட்டிற்கும் இடையே, நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவுகிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து, 100 கி.மீ., தொலைவில் உள்ள மோரே என்ற இடத்தில், தமிழர்களுக்கு சொந்தமான கோவில் உள்ளது. மணிப்பூர் மாநிலத்திற்குள் அமைந்துள்ள அந்த கோவிலைச் சுற்றி, 17 ஆயிரம் தமிழர்களும் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை, மியான்மர் அரசு, தன் பகுதி எனக் கோரி வருகிறது. அதை மணிப்பூர் அரசு மறுத்து வருகிறது.""மோரே பகுதி, மணிப்பூர…
-
- 0 replies
- 584 views
-
-
நான் தான் நெல்சன் மண்டேலாவின் காதலிக்கு பிறந்த மகள் என உரிமை கோரியுள்ளார் 65 வயது பெண் ஒருவர். தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8ம் திகதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது மண்டேலாவுக்கு செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அவருக்கு எந்த நேரத்திலும் உயிர் பிரியலாம் என்பதால், அவருடைய உறவினர்கள் அனைவரும் பிரிட்டோரியாவில் குவிந்துள்ளனர். இந்நிலையில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. மண்டேலாவுக்கு மூன்று மனைவிகள், முதல் மனைவி இறந்துவிட்டார். இரண்டாவது மனைவி வின்னி, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதால், அவரை மண்டேலா விவாகரத்து செய்து விட்டார். மூன்றாவது மனைவி கிரேகா மிச்சேல், இவர் மொசாம்பிக் நாட்டு மு…
-
- 1 reply
- 495 views
-
-
ஆந்திராவில் தனி தெலுக்கானா கோரி போராட்டம் நடந்து வருகிறது. இதேபோல் ஆந்திராவை பிரிக்க கூடாது. ஒன்றுபட்ட ஐக்கிய ஆந்திராவாக இருக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலிறுயுத்தி வருகிறார்கள். இரு தரப்பை சேர்ந்த காங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் திக்விஜய்சிங் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல் முறையாக விசாகபட்டினம் வந்தார். விமான நிலையத்தில் அவரை ஐக்கிய ஆந்திராவை ஆதரிக்கும் 4 மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் ஆந்திராவை பிரிக்ககூடாது ஐக்கிய அந்திராவாகதான் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். மனுவை பெற்று கொண்…
-
- 0 replies
- 309 views
-
-
மழையை கண்ட ஆனந்தத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் போல 'தந்தான தந்தான தந்தான தனனே..' என்று துள்ளி ஆடிய சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் சுட்டுக்கொன்ற வெறிச்செயல், பெண்ணியக்க வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மெலிதான தூரல் மழைக்கு இடையில் பாகிஸ்தானின் சிலாஸ் பகுதியை சேர்ந்த நூர் ஷேசா(16), நூர் பஸ்ரா(15) ஆகிய சகோதரிகள் சில சிறுவர் - சிறுமிகளுடன் துள்ளி நடனமாடும் காட்சி சமீபத்தில் இணையதளங்களில் உலா வந்தன. உலகெங்கிலும் வாழும் ஆயிரக்கணக்கானோர் இந்த படப்பதிவை கண்டு மகிழ்ந்தனர். இந்நிலையில், இவர்களின் வீட்டுக்கு வந்த 5 பேர் காட்டு மிராண்டித் தனமாக அந்த பெண்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். அவர்களின் தாயார் நோஷரா என்பவரையும் ஈவிரக்கமற்ற அந்த பழமைவாத கும்பல் சுட்டுக்கொன்றது. …
-
- 0 replies
- 476 views
-
-
ஆஸ்பத்திரியில் மண்டேலா... புதைக்கும் இடம் குறித்த சண்டையில், கோர்ட் சென்ற குடும்பத்தினர். ஜோகன்ஸ்பர்க்: மருத்துவமனையில் இருக்கும் மண்டேலா நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என உலக மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அதே வேளையில், மண்டேலா குடும்பத்தினர் மண்டேலா இறந்த பிறகு எங்கே புதைப்பது என்ற சச்சரவில் கோர்ட் படியேறியுள்ளனர். கறுப்பர் இன விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையிலேயே தன் வாழ்க்கையைக் கழித்த ,தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக பிரேடோரிகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதான மண்டேலா, கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மண்டேலா மிகவும் கவலைக்க…
-
- 0 replies
- 402 views
-
-
அவுஸ்ரேலியாவில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தொழிலாளர் கட்சியின் வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் கெவின் ரூட்டும் , ஜீலியா கிலாட்டும் போட்டியிட்டனர் , வாக்கெடுப்பின் முடிவில் கெவின் ரூட் கட்சியின் தலைமைப்பதவியையும் , பிரதமர் பதவியையும் பெற்றுக் கொண்டார் , அத்துடன் தனது உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்தும் அவர் வெளியேறியுள்ளார் , மேலும் ஜீலியா கிலாட் , மகிந்த இராஜபக்ஸ தலைமையிலான இலங்கை அரசுடன் நெருங்கிய உறவைப் பேணியவர் என்பது குறிப்பிடத்தக்கது... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=7730:2013-06-26-10-28-15&catid=1:latest-news&Itemid=18
-
- 34 replies
- 1.9k views
-
-
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உடல் நலக்குறைவு காரணமாக பிரேடோரிகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார். ஆனால் மரணம் அடைந்ததும் அவரது உடலை எங்கு புதைப்பது என்பதில் அவரது குடும்பத்தினர் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மண்டேலா மரணம் அடைந்ததும் அவரது இறுதி சடங்கை நடத்திவிட்டு உடலை மவெஷா என்ற இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது பேரன் மாண்ட்லா தெரிவித்துள்ளார். அங்குதான் மண்டேலாவின் 3 குழந்தைகள் உடல் அடக்கம் நடந்தள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு மண்டேலாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரது மகள்கள் ம…
-
- 4 replies
- 367 views
-
-
அமெரிக்காவின் பதில் துணைச் சட்ட மா அதிபர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க பதில் துணைச் சட்ட மா அதிபராக மைதிலி ராமன் என்பவர் கடமையாற்றி வருகின்றார். உலக வங்கியின் நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வரும் ஏ.தர்மரட்னம் என்பவரின் புதல்வியான மைதிலி ராமன் துணைச் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மைத்லி ராமன், இலங்கை வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் சீ.லோகநாதனின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது. மைதிலி ரமானின் பெற்றோர் வடமாராட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க நீதித் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவின் பதில் துணைச் சட்ட மா அதிபராக மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tab…
-
- 0 replies
- 411 views
-
-
நெல்சன் மண்டேலா உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழ்கின்றார் – ஒபாமா 30 ஜூன் 2013 தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டலோ முழு உலகத்திற்குமே முன்னுதாரணமாக திகழ்கின்றார் என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். கொள்கைகளை முன்னெடுப்பதில் மண்டேலா காட்டிய ஸ்திரத்தன்மை அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஜொஹனர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் உரிமைகளுக்காக மண்டேலா தொடர்ந்தும் குரல் கொடுத்துள்ளார். இதேவேளை, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. பரக் ஒபாமா, மண்டேலாவின் குடும்பத்தாரை சந்தித்து பேசியுள்ளார். மண்டேலா…
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கை ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் போர் பயிற்சிகளை தொடர்ந்து அளிக்கவும் மேம்படுத்தவும் பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கயானி, இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யாவிடம் இது தொடர்பாக உறுதி அளித்ததாக இலங்கை ராணுவம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளது. பாகிஸ்தான் - இலங்கை ராணுவ உயரதிகாரிகளிடையே நடைபெற்ற கூட்டத்தில் பாகிஸ்தானில் மேலும் பல இலங்கை ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.http://www.dinaithal.com/tamilnadu/world/16578-we-will-continue-to-exercise-the-sri-lankan-army-pakistan-confirmed.html
-
- 0 replies
- 408 views
-
-
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜூன் 25-ம் தேதி வரை 4 ஆயிரத்து 825 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக டெல்லியில் மட்டும் ஆயிரத்து 507 பேர் பாதிக்கப்பட்டனர். அதிகமான மக்கள் நெருக்கம் கொண்ட டெல்லி நகரில் நோய்த்தொற்று எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளதால் இந்நோயின் தாக்கம் அதிகம் என்று கூறப்படுகிறது. அதிகமான நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டாலும் டெல்லியில் பன்றிக் காய்ச்சலுக்கு 16 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர். குஜராத்தில் ஆயிரத்து 29 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டதில் 195 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் பன்றிக் காய்ச்சலுக்கு 600 பேர் பலியாகியுள்ளனர். மேற்கண்டவாறு மத்திய சுகாதார அம…
-
- 0 replies
- 207 views
-
-
குஜாராத் முதல் மந்திரி நரேந்திர மோடியின் வளர்ச்சியையும் புகழையும் கண்டு காங்கிரஸ் பயப்படுகிறது என்று மாஹாராஷ்டிரா பாரதீய ஜனதா தலைவர் தேவேந்திர பதான்விஸ் தெரிவித்துள்ளார்.மேலும் மோடியின் உத்திரகாண்ட் பயணம் பற்றிய விமர்சனத்துக்கு பதிலளித்த அவர்,உத்திரகாண்டிற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களை மட்டுமே காப்பாற்ற சென்றார் என்பது தவறானது. அவர் முதலில் அம்மாநில முதல் மந்திரி விஜய் பகுணானாவை சந்தித்து உத்திரகாண்ட் மாநிலத்திற்கு உதவ தயாராக இருப்பதாகத்தான் அவர் தெரிவித்து இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.http://www.dinaithal.com/tamilnadu/india/16569-congress-is-scared-of-modi-s-popularity-devendra-patanvis.html
-
- 0 replies
- 387 views
-
-
மண்டேலா இறந்து விட்டதாக பேசிய ஆஸி. அமைச்சர் மன்னிப்பு கோரினார் நெல்சன் மண்டேலா உயிரிழந்துவிட்டதாக தவறாக பேசிய அவுஸ்திரேலிய அமைச்சர் மன்னிப்புக் கோரியுள்ளார். தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது. இந்த நிலையில், இவர் உயிரிழந்து விட்டதாக, அவுஸ்திரேலிய மேம்பாட்டு துறை அமைச்சர் கேரிகிரே தவறாக பேசினார். ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பிரதமர் பதவியில் இருந்து ஜீலியா கிலார்ட் விலகியதை அடுத்து, கான் பெர்ராவில் உ…
-
- 0 replies
- 534 views
-
-
கனடாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மீது வெறுப்புகொண்ட சிலர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே லட்சுமி நாராயணர் இந்து கோவிலின் ஜன்னல்களை கடந்த 23-ம் நாள் அடித்து உடைத்து சென்றனர். இது கனடாவில் வாழும் இந்துக்களை வெறுப்பூட்ட செய்தது. இந்நிலையில் அங்குள்ள இரகசிய கமராவில் இருவர் பேஸ்பால் பேட்டை வைத்துக் கொண்டு கோவிலின் ஜன்னல்களை உடைத்து விட்டு பேட்டை தூக்கி எறிந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது இன ரீதியிலான வெறுப்புணர்விலேயே நடந்து இருக்கலாம் என்று அங்குள்ள இந்துக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், சர்ரே காவல்துறையினர் இன ரீதியிலான வெறுப்பு உணர்வாக தோன்றவில்லை, இது தனிப்பட்ட முறையிலான ஒரு தாக்குதலாக தெரிவதாக அவர்கள் கூறியுள்ளன…
-
- 4 replies
- 904 views
-
-
சனநாயகத்தின் கோமாளித்தனங்களில் இதுவும் ஒன்று. கட்சி விட்டு கட்சி தாவும் தொற்று நோய். காசிற்கு பதவிற்கு சுகபோகத்திற்கு மனிதர்களை இலகுவில் விலைக்கு வாங்கும் தன்மை சனநாயகத்தின் சாபக்கேடுகளில் ஒன்று. போராளி அமைப்புக்களைப் பலவீனப்படுத்தவும் அதிகார வர்க்கங்கள் இதே வழிமுறைகளைக் கையாள்வதுண்டு. அப்போதெல்லாம் அதிகார வர்க்கங்கள் அதற்கு வழங்கும் முக்கியத்துவமும் அடைமொழிகளும் மக்கள் மத்தியில் பாரிய உளவியல் தாக்கங்களைச் செய்யவல்லனவாக அமைந்து விடும். ஆனால்.. இங்கே ஒரு தாவல்... சகோதர யுத்தம்.. காதும் காதும் வைத்தாற்போல் நடந்து முடிந்துள்ளது. நாளை பருதி இளம்வழுதி லொறி மோதி இறந்தால் கூட அது.. விபத்தாக இருக்கும். சகோதர யுத்தத்தின் விளைவாக இருக்காது. ஈழத்தமிழர்கள் மீது சகோதர யுத்…
-
- 4 replies
- 1.4k views
-
-
எட். ஸ்நோவ்டன் ரஷ்யாவிலிருந்து ஈக்வடோர் செல்கிறார் அமெரிக்க முன்னாள் புலனாய்வு கணினி நிபுணர் ஈக்வடோரில் தஞ்சம் கோருவதற்காக அடுத்த சில மணிநேரத்தில் ரஷ்யாவிலிருந்து வெளியேறுகிறார். மாஸ்கோவிலிருந்து கியூபத் தலைநகர் ஹவானாவுக்குச் செல்லும் விமானத்தில் அவர் ஏறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் ஹவானாவிலிருந்து ஈக்வடோர் செல்வது அவரது திட்டம்.அவரை மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான சகலவிதமான வழிகளையும் சிந்திக்குமாறு ரஷ்யாவிடம் அமெரிக்கா கேட்டுவருகிறது. இணையதளங்களை உளவுபார்க்கும் மற்றும் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் கண்காணிப்புத் திட்டம் தொடர்பான திட்டங்களை கசியவிட்டு ஸ்நோவ்டன் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அவர் ம…
-
- 3 replies
- 538 views
-
-
காஷ்மீர் எல்லையில் இந்தியா , பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ராணுவம் அரை மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பூஞ்ச் மாவட்ட எல்லையில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்நிலையில், இதே மாவட்டத்தில் சைதன் , தோடா இடையிலான எல்லைப் பகுதியில் நேற்று காலை 10.45க்கு இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கியது. இதற்கு, இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். அரை மணி நேரம் நடந்த சண்டைக்குப் பிறகு அமைதி ஏ…
-
- 3 replies
- 556 views
-
-
டேராடூன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தின் முக்கிய புனித தலங்களில் ஒன்றான கேதர்நாத்தில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேதர்நாத்தில் சிக்கி தவித்த அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், இனிமேல் இடிபாடுகளை அகற்றுவது மற்றும் இறந்தவர்களின் சடலங்களை தேடும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. கேதர்நாத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் இன்று மதியத்துடன் தங்களது மீட்பு பணிகளை முடித்துக்கொண்டனர்.அதே சமயம் பத்ரிநாத், தரசு மற்றும் ஹர்சில் ஆகிய இடங்களில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் ஏராளமானோர் இன்னமும் சிக்கி தவித்து வருவதாக தகவல்கள் தெரிவ…
-
- 1 reply
- 396 views
-