உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
இங்கிலாந்து நாட்டில் Tunbridge Wells, Kent என்ற பகுதியை சேர்ந்த முன்னாள் பெண் குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் தனது உடலில் விதவிதமான டாட்டூஸ் வரைவதற்காக தனது தாயாரின் £20,000 மதிப்புள்ள நகைகளை திருடியதற்காக கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை 23 வயது Kirsty Foord என்பவர், விதவிதமான டாட்டூஸ் வரைந்து கொள்வதில் மிகவும் விருப்பம் உள்ளவர். தனது உடலில் டாட்டூஸ் வரைவதற்காக தனது தாயார் பாதுகாத்து வந்த £20,000 மதிப்புள்ள நகைகளை திருடியதாக தாயாரால் புகார் கொடுக்கப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, குத்துசண்டை வீராங்கனைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவருக்கு 18 வாரங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர…
-
- 5 replies
- 447 views
-
-
மலேசியாவில் போலீஸ் துன்புறுத்தலின் காரணமாகத்தான் காவலில் வைக்கப்பட்டிருந்த என்.தமீந்திரன் (32) உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தமீந்திரன் கடந்த 21-ம் தேதி கோலாலம்பூரில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீஸார் அடித்து துன்புறுத்தியதால்தான் தமீந்திரன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அவரது மனைவி எம்.மேரி கூறுகையில், எனது கணவரின் மரணம் குறித்து விசாரிக்காமல், போலீஸார் எங்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். எங்கள் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை ஒரு போலீஸார் கூட கைது செய்…
-
- 0 replies
- 279 views
-
-
நைல் நதியில் அணை கட்டும் எத்தியோப்பியா! எதிர்ப்பு தெரிவித்து சூயஸ் கால்வாயை மூடும் எகிப்து! கெய்ரோ: உலகின் மிக நீளமான நதியான நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியா நாடு அணை கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூயஸ் கால்வாய் வழியே போக்குவரத்தை தடை செய்ய முடிவெடுத்திருக்கிறது எகிப்து. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் பாயும் சர்வதேச நதியான நைல், 11 நாடுகளுக்கு பயனளிக்கிறது. குறிப்பாக எகிப்தும் சூடானும் நைல் நதியால் பெரும் பயனடைகின்றன. அதே நேரத்தில் எத்தியோப்பியாவோ மின் உற்பத்திக்காக புதிய அணை ஒன்றை கட்டப் போவதாக அறிவித்து நீரின் போக்கை திசை திருப்பவும் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எகிப்தும் சூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இத்தாலி மற…
-
- 0 replies
- 1.5k views
-
-
தனது வருங்கால கணவன் எப்படி இருக்கவேண்டும் என கற்பனை செய்து ஓவியம் தீட்டிய ஒரு பெண்ணுக்கு அவர் கற்பனை செய்தவாறே அச்சு அசலாக கணவர் கிடைத்துள்ள அதிசயம் இங்கிலாந்து நாட்டில் உள்ள 31 வயது பெண் ஒருவரது வாழ்வில் நடந்துள்ளது. இங்கிலாந்தின் சூர்ரி நகரில் அசிக்கும் ஹலோயிமாயோ என்ற 31 வயது பெண், தனது வருங்கால கணவன் குறித்து கற்பனையாக ஓவியம் ஒன்றை வரைந்தார். முகத்தில் தாடி வைத்திருக்கும் அழகிய கணவருடன் தானும் நிற்பது போல ஒரு ஓவியம் வரைந்து தனது படுக்கையறையில் பாதுகாத்து வந்தார். இந்ந்நிலையில் அவருக்கு மைக்கேல் என்பவர் இணையதளத்தில் அறிமுகமாகி இருவரும் நேரில் சந்தித்தபோது அவருடைய கற்பனை கணவரையே நேரில் கண்டு அதிசயித்தார். ஓவியம் வரைந்து நான்கு ஆண்டுகள் காத்திருந்த ஹலோயிமாயோவுக்கு கற்…
-
- 1 reply
- 720 views
-
-
பிரிட்டனில் உள்ள ஒரு தம்பதிக்கு இரண்டு இரட்டை குழந்தைகள், அதாவது ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என நான்கு குழந்தைகள் Sharon and Julian, என்ற தம்பதிகளுக்கு பிறந்துள்ளன. இந்த நான்கு குழந்தைகளும் 11 வாரங்களுக்கு முன்பே குறைபிரசவத்தில் பிறந்ததால், மருத்துவர்களின் கண்காணிப்பில் இதுவரை பாதுகாப்பாக இருந்தனர். James,Joshua,Lauren and Emily என்று நான்கு குழந்தைகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நான்கு குழந்தைகளும் பூரண நலத்துடன் இருப்பதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நான்கு குழந்தைகளையும் மருத்துவமனையில் 11 வாரங்கள் கண்காணிக்க இந்த தம்பத…
-
- 0 replies
- 451 views
-
-
கடந்த டிசம்பர் மாதம் 17–ந்தேதி டெல்லியில் பிசியோதெரபி மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி ராமன்சிங், திகார் ஜெயில் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தான். மேலும் வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ்சிங் ஆகிய 3 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று இந்த வழக்கு டெல்லி கூடுதல் செசன்சு நீதிபதி யோகேஷ் கன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகளை பெண் போலீஸ் அதிகாரி அடையாளம் காட்டி விளக்கினார். இந்த வழக்கு விசாரணை இன்றும் (சனிக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15105:medical-student-killed-in-delhi-the-culprit…
-
- 1 reply
- 473 views
-
-
ஆளுங்கட்சிக்கு சிம்மசொப்பனமான எதிர்கட்சி தலைவர் இந்தியாவில் நடப்பதுபோல் தேர்தல் என்பது திருவிழா அல்ல மலேசியாவில். அது ஒரு நிகழ்வு. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட உடனே தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்படும். இத்தனையும் ஒரு மாத காலத்தில் நடந்துவிடும். வாக்குப்பதிவு நடந்த அன்றே வாக்குகளும் எண்ணப்பட்டு சுடச்சுட முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும் கடந்த வாரம் மலேசியாவில் நடந்த 13-வது பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான பாரிசான் நேஷனல் 133 இடங்களையும், எதிர்கட்சி கூட்டணியான பி.ஆர்., 89 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. கடந்த 2008 தேர்தலோடு ஒப்பிடுகையில் ஆளும் கட்சிக்கு 7 இடங்கள் குறைந்து, எதிர்கட்சிக்கு 7 இடங்கள் அதிகரித்துள்ளது. ஆன…
-
- 0 replies
- 419 views
-
-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2012-2013 நிதியாண்டில் மிகமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வீழ்ச்சி இதுவென்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாகவே இருந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் இது 4.8 வீதமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாகவே தக்கவைத்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த பல மாதங்களாகவே பொருளாதாரத்தில் இந்த இறங்குமுகம் தென்படுகிறது. '8 வீதமாக உயரும்': பிரதமர் மன்மோகன் நம்பிக்கை கட்டுமான, சேவைத் தொழிற்துறைகளில் ஏற்பட்ட மந்தகதியே இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்தின…
-
- 0 replies
- 635 views
-
-
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி அடைந்ததையொட்டி எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்க்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதனை பாரதீய ஜனதா மறுத்துள்ளது. எடியூரப்பாவை கட்சியில் சேர்க்கும் முயற்சி எதுவும் நடக்கவில்லை என்று முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார். இந்த நிலையில் கர்நாடக ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தல் மிக அருகில் இருந்த போது நாங்கள் கட்சியை தொடங்கினோம். கட்சி சின்னம், பெயர், வேட்பாளர்கள் போன்ற அனைத்தும் புதியதாக இருந்தன. பிரசாரம் செய்யவும் காலம் குறைவாக இருந்தது. இந்த காரணங்களால் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடிய வில்லை. எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள …
-
- 1 reply
- 349 views
-
-
ஒண்டோரியாவில் உள்ள Peel Region பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது, அந்நகரையே பரபரப்பாக்கியுள்ளது. 23 வயது இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, உயிருக்கு ஆபத்தான காயங்களை உண்டாக்கிய Peel Region பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி Abel Gomes என்பவரை நேற்று காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யும்போதுகூட அவர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பாலியல் பலாத்கார சம்பவம் டிசம்பர் 14, 2012 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு நேற்று ஒண்டோரியோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கையுடன், மீண்டும் ஜூன் 24ஆம் தே…
-
- 0 replies
- 452 views
-
-
டொரண்டோவில் 38 வயது தமிழர் ஒருவர் அவருடைய வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் டொரண்டோ தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (டொரண்டோ தமிழர் சுரேந்திரா வைத்திலிங்கம் கொலையை விசாரணை செய்யும் அதிகாரி) டொரண்டோவில் Mantis Road, in the Morningside and Finch avenues area, என்ற பகுதியில் உள்ள தன் வீட்டில் சுரேந்திர வைத்திலிங்கம் என்ற தமிழர் மாலை 3 மணியளவில் தனது வீட்டு தோட்டத்தில் நின்றுகொண்டு, இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும், 4 வயது மகனும் இருக்கின்றனர். அவர் தன்னுடைய மகனின் பிறந்தநாளை நேற்றுதான் சந்தோஷம…
-
- 0 replies
- 635 views
-
-
பாரதீய ஜனதா துணைத் தலைவரும் டெல்லி மேல் சபை எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத் தலைமையில் 3 பேர் கொண்ட குழு இலங்கை செல்கிறது. வருகிற ஜூன் 4-ந்தேதி அவர்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு கொழும்பு செல்கிறார்கள். அங்கு அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே, ராணுவ செயலாளர் கோத்தபய ராஜபக்சே மற்றும் இலங்கை மந்திரிகள் அதிகாரிகளை சந்திக்கிறார்கள். இலங்கையின் வடக்கில் உள்ள தமிழர் பகுதிகளுக்கும் சென்று பார்வையிடுகிறார்கள். தமிழர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகளையும் பார்வையிட திட்டமிட்டுள்ளனர். இது பற்றி வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் கேட்டபோது, பாரதீய ஜனதா குழு வருகை பற்றி தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றார். இதே போல் இந்திய தூதரக அதிகா…
-
- 0 replies
- 355 views
-
-
பழங்குடி மக்கள் மீதான சல்வா ஜூதுமின் வன்முறைகளுக்குப் பழிவாங்கவே மே 25-ந் தேதி தாக்குதல் நடத்தப்பட்டதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மே 25-ந் தேதியன்று சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர். இதில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், முன்னாள் மாநில அமைச்சர் மகேந்திர கர்மா, முன்னாள் எம்.எல்.ஏ. உதய் முதியார் உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்ளிட்ட 36 பேர் படுகாயமடைந்தனர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதான மாவோயிஸ்டுகளின் இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்நிலையில் மாவோயிஸ்டுகளின் தண்டகாருண்யா செய்தி…
-
- 4 replies
- 900 views
-
-
இலங்கை வீரர்கள் பங்குபற்றும் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசு நடத்தாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை அடுத்து, இந்தப் போட்டிகள் சென்னை நகரில் இருந்து புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தடகளக் கூட்டமைப்பின் தலைவர் அடில் சுமரிவாலா, ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரிலிருந்து புனே நகருக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்தார். வரும் ஜூலை 3-ம் தேதி முதல் முதல் 7-ம் தேதி வரை புனே நகரில் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன என்றார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15074:asian-athletic-competition-and-from-chennai-to-pune&a…
-
- 0 replies
- 446 views
-
-
அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் அமைப்பின் தலைவர் வாலி-உர்-ரஹ்மான் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின் ஆட்சியை இழந்த தலிபான்கள் பாகிஸ்தானின் பழங்குடி பகுதியான வாஜிரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்க அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தலைவர் வாலி-உர்-ரஹ்மான் அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் மூலம் நேற்று கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/a…
-
- 2 replies
- 417 views
-
-
ஜப்பானை சேர்ந்த தமிழ் மொழி அறிஞர் நோபுரு கரஷிமா என்பவருக்கு இலக்கியம் மற்றும் கல்விக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலம் சரிஇல்லாததால் அவரால் டெல்லியில் நடந்த விழாவுக்கு வரமுடியவில்லை. எனவே தற்போது ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் டோக்கியோவில் நடந்த ஒரு விழாவில் கரஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கினார். கரஷிமா தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர் பல ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்து தென் இந்திய வரலாறு குறித்து ஆய்வு செய்துள்ளார். அப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வெட்டுகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். கரஷிமாவுக்கு நன்றாக தமிழ் பேசவும் தெரியும்.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=art…
-
- 9 replies
- 726 views
-
-
ஸ்ரீனிவாசன் ஒதுங்க வேண்டும் என்று கோரிக்கை கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 மே, 2013 - 08:39 ஜிஎம்டி ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான பிரச்சினைகளில் சிக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தலைவர் என்.ஸ்ரீனிவாசன், இப்பிரச்சினையில் கைதாகியிருக்கும் அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் மீதான புகார்கள் குறித்த விசாரணை முடிவடையும் வரை வாரியத்தலைவராகப் பணியாற்றாமல் ஒதுங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். கேரள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இன்னும் வேறிருவர் சூதாட்டக்காரர்களுக்கு உதவியாக பந்து வீசினர் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் முதலில் கைதாக, பின்னர் பிரபல ஐபிஎல் அணியான் சென்னை சூப்பர் கிங்சின் உரிமையாளர் என அண்மைக் காலம்வரை வர்ணிக்கப்பட்ட ஸ்ரீனிவ…
-
- 1 reply
- 389 views
-
-
டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இன்று காலை 9.05 மணி அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு 56 புள்ளிகள் குறைந்து, ஒரு டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 56.13 ரூபாயாக இருந்தது. இதன் மூலம் 17 பைசா வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஜூன் 2012க்குப் பிறகு, டொலருக்கு எதிரான இந்த வீழ்ச்சி மிகப் பெரிய வீழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2 வாரங்களாகவே டொலருக்கு எதிரான மதிப்பு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. தங்கத்தின் விலை குறைந்து வருவதினால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்வதும் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதிகமாக தங்கத்தை இறக்குமதி செய்யு…
-
- 0 replies
- 634 views
-
-
புதுடெல்லி: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்க கடற்படையை சேர்ந்த வீரர்கள் சுட்டுக்கொல்லவில்லை என்றும், பின்லேடன் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவரது முன்னாள் பாதுகாவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள அப்போட்டாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதியன்று, தங்கள் நாட்டின் கடற்படை ( 'சீல்' ) வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் கடலில் வீசிவிட்டதாகவும் அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில் ஒசாமாவின் முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் இதனை தற்போது மறுத்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள வளைகுடா நாட்டின் ஊடகம் ஒன்றுக…
-
- 0 replies
- 529 views
-
-
மியன்மாரின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோவில் முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. பெளத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பெற்றோல் ஊற்றி முஸ்லிம் ஒருவர் எரித்ததாக வந்த செய்தியை அடுத்து இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவதுடன் அவரை எரித்த நபர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் முஸ்லிம்களின் பள்ளிகள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் கலவரம் நடைபெற்ற பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மியன்மாரில் இடம்பெற்ற மதக்கலவரத்தில் 200-கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக…
-
- 0 replies
- 685 views
-
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஜூன் 5ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ)க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று புதன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜிவ் கொலை வழக்கின் விசாரணை பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தங்கள் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மதுரை மேலூரைச் ச…
-
- 0 replies
- 391 views
-
-
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பாரதீய ஜனதாவின் தலைமையை விமர்சித்ததற்காக மூத்த வழக்கறிஞரும், பாரதீய ஜனதா எம்பியுமான ராம் ஜெத்மலானி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராம்ஜெத்மலானி கூறியதாவது:- சமூக விரோதிகளிடம் உள்ள கருப்பு பணம் குறித்து பேசுவதற்கோ, அதை திரும்ப பெறுவதற்கோ பாரதீய ஜனதா கட்சியில் சிலர் விரும்பவில்லை. கட்சிக்குள்ளே சில விரும்பத்தகாத சக்திகள் இருக்கின்றன. அவர்கள் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள். அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றவே நான் விரும்புகிறேன். அந்த விரும்பத்தகாத சக்திகள் தான் நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம். அவர்களை வெளிக்காட்டும் வரை நான் ஓயப்போவதில்லை. நான் தொடங்கிய கருப்பு பண விவக…
-
- 0 replies
- 362 views
-
-
பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் ஜெத்மலானி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குனர் நியமனம் குறித்த பாஜகவின் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்தது மற்றும் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியை விமர்சித்தது ஆகியவற்றுக்காக அக்கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் ஜெத்மலானி கடந்த நவம்பர் மாதம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்படி இருந்தும் அவர் இந்த மாத துவக்கத்தில் நடந்த பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்கு வந்து ஊழல் விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வன்மையாக ஏன் எதிர்க்காமல் உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவரை கட்சியில் நீக்கிவிட தலைவர்கள் நினைத்தனர். கட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் காரணத்தைக் …
-
- 0 replies
- 423 views
-
-
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் லெபனான், துருக்கி போன்ற அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். சிரியாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டி விரிவாக விவாதம் நடத்த வேண்டும் என அமெரிக்கா, துருக்கி, கத்தார் உள்ளிட்ட நாடுகள் கடந்த 24ம் தேதி கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து, ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டம் ஜெனீவாவில் நாளை (29ம் தேதி) கூடுகிறது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் உயர் ஆணையாளர் நவி பிள்ளை கூறியதாவது:- சிரியாவில் அரசு தரப்பில் இருந்து மட்டுமல்ல... போராளிகள் தரப்பிலும் மனித உரிமைக…
-
- 2 replies
- 488 views
-
-
இந்தியாவில் சத்தீஷ்கார் (Chhattisgarh) மாநிலத்தில் மாவேஸ்டுக்கள் நடத்திய தாக்குதல் ஒன்றில் அந்த மாநில காங்கிரஸ் உள்ளூர் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளதோடு.. மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் மகன் கடத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இது இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரடி என்று காங்கிரஸ் தலைவர் சோனியா இத்தாக்குதலை கண்டித்துள்ளார். காங்கிரஸார் இச்செய்தி கேட்டு இடிந்து போயுள்ளார்களாம். http://www.bbc.co.uk/news/world-asia-india-22667020
-
- 8 replies
- 1.4k views
-