Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரின் புறநகர்ப் பகுதிகளின் ஊடாக மாபெரும் டொர்னேடோ சுழற்காற்று வீசியதில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல குடியிருப்புப் பகுதிகள் மொத்தமாகவே தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. தொடர்புடைய பக்கங்கள் படங்களில்: டொர்னேடோவின் கோரத் தாண்டவம் உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 51 என்றாலும், அதற்கும் மேற்பட்டு 40 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்படுள்ளதாக மாநில மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. இந்த டொர்னேடோவில் சிக்கி அழிந்த ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றின் பிள்ளைகள் இருபது பேரும் இறந்தவர்களில் அடங்குவர். மூன்று அடி உயரத்துக்கு கிடக்கும் இடிபாட்டுக் குவியல்களின் அடியில் வேறு பல மாணவர்களும் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்கள் சக…

  2. அமெரிக்காவில் வீசிய கடுமையான புயலினால் பல மாகாணங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் புயலினால் இதுவரை 51 பேர் பலியாகியுள்ளனர். வீடியோ, படங்கள்

  3. புதுடெல்லி: ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் ( புக்கிகள்) இடையே நடைபெற்ற உரையாடல்களின் தொகுப்பை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. அந்த உரையாடல்களில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு: சந்திலா: யெஸ்...சொல்லு பிரதர்.நான் (மைதானத்திற்கு) போய் சிக்னல் கொடுக்கிறேன். முதல் ஓவர் முடியட்டும், நான் பார்க்கிறேன். அமித் ( புக்கி): முதல் ஓவரை நம்பிக்கையோடு வீசுங்கள்...அப்புறம் அதே நம்பிக்கையோடு இரண்டாவது ஓவரை எங்களுக்காக வீசுங்கள். சந்திலா: ஓ.கே.,ஓ.கே. அப்படியே செய்கிறேன். அமித்: உங்களது சிக்னல் என்னவாக இருக்கும்? சந்திலா: நான் என்னுடைய இரண்டு டி சர்ட்டுகளையும் மேலேயும்,…

  4. உலகில் இனவெறி கொண்ட நாடுகள் குறித்த ஒரு சர்வே எடுக்கப்பட்டது. இந்த சர்வேயில், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இனவெறி என்பது மிகவும் குறைவாக காணப்படுகிறது. கறுப்பர்கள், வெள்ளையர்கள் என்ற இனவெறி அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தாலும், தற்போது எடுக்கப்பட்ட சர்வேயில் அது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் இன்னும் அதிகளவில் இனவெறித்தன்மை காணப்படுவதாக அந்த சர்வே கவலையுடன் தெரிவித்துள்ளது. இனவெறி கொண்ட உலகின் முதல் பத்து நாடுகள்: 1. ஹாங்காங் 2.பங்களாதேசம் 3.ஜோர்டான் 4.இந்தியா 5.எகிப்து 6. சவுதி அரேபியா 7.ஈரான…

  5. கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா அணுகுண்டு சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தியது. இதையடுத்து அமெரிக்காவும், தென் கொரியாவும் போர் பயிற்சியில் ஒத்திகையில் ஈடுபட்டன. இதனால் கொரியா தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் ஐ.நா. தலையீட்டின் பேரில் பதட்டம் தணிந்தது. இருந்தும் அமெரிக்கா- தென் கொரியாவின் போர் பயிற்சி ஒத்திகை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு பகுதியில் உள்ள ஐப்பான் கடலில் வடகொரியா நேற்று 3 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது. இவற்றில் 2 ஏவுகணைகள் காலையிலும், மாலையில் மற்றொரு ஏவுகணையும் பரிசோதித்து பார்க்கப்பட்டன. இவை குறைந்த தூரம் சென்று தாக்க கூடியவை. இதற்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பகத்தில் மீண்…

    • 2 replies
    • 519 views
  6. 'அந்த' இடத்தில் சுட்டு, ஹிலாரியை கொல்ல வேண்டும்: கிறுக்கு பிடித்த ரேடியோ ஜாக்கி! வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனை பிறப்பிறுப்பில் சுட்டு சித்ரவதை செய்து கொல்ல வேண்டும் என ஆபாசமாக விமர்சித்ததன் மூலம் பிரச்சனையில் சிக்கியுள்ளார் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர். அமெரிக்க வானொலி ஒன்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றி வருபவர் பிட்டே சாண்டில்லி. இவர் ஒரு நிகழ்ச்சியின் போது ஹிலாரி கிளிண்டனை குறித்து தவறான கருத்துக்களைக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட லிபியாவின் பென்காசியில் உள்ள அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு காரணம் ஹிலாரி கிளிண்டனின் தவறான அணுகுமுறை தான் என தன்னிலை விளக்கம் வேறு கூறியுள்ளார் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் …

    • 3 replies
    • 820 views
  7. பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டுக்காக ராணுவப் பணியாளர் பி.கே.சின்ஹா (43) கைது செய்யப்பட்டார். சின்ஹா, தென்மேற்குப் பகுதி படைப்பிரிவில் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் சப்ளை செய்யும் பிரிவில் எழுத்தராகப் பணி புரிந்து வருகிறார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சின்ஹா, இந்திய ராணுவத்தின் நடமாட்டம் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் மற்றும் ஆவணங்களை நேபாளத்தில் செயல்படும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பிரிவிடம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி அலுவலக ரகசியச் சட்டத்தின் கீழ் சின்ஹா கைது செய்யப்பட்டார். இப்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ்…

  8. பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை 1.5 கோடி டாலருக்கு இணையதளத்தில் விற்று விடப்போவதாக அமெரிக்கர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். சுவை மாறாமல் 1943ம் ஆண்டிலிருந்து ஒரே மாதிரி கோக்க-கோலா தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தயாரிப்புக்கான ரகசிய குறிப்புகள் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள டவுன்ட்டவுன் நகரில் உள்ள பழங்கால பேழை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக இதுவரை கூறப்பட்டு வந்தது. தற்போது அமெரிக்காவில் பழங்கால பொருட்களை விலைக்கு வாங்கி விற்கும் கிளிஃப் க்ளூக் என்பவர் ' கோக்க-கோலாவின் தயாரிப்பு ரகசியம் என்னிடம் உள்ளது' என்று பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து கிளிஃப் கூறுகையில், சமீபத்தில் ஒரு எஸ்டேட்டில் உள்ள பழங்கால பொருட்களை…

  9. பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட ஒண்டோரியோவை சேர்ந்த ஒரு நபர், அந்த நோயை பிறருக்கு பரவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு பெண்களிடம் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Gary Beckford என்ற ஒண்டோரியோவை சேர்ந்த 44 வயது நபர் ஒருவருக்கு கடந்த ஓரு ஆண்டாக பாலியல் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருந்துள்ளார். இதனால் மனம் வெறுத்த அவர், தன்னுடைய நோயை பிறருக்கு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த மார்ச் மற்றும் மே மாதத்தில் இரு பெண்களோடு வேண்டுமென்றே பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி உடலுறவு கொண்டுள்ளார். இதை மிகவும் தாமதமாக அறிந்த அந்த இரண்டு பெண்களும் கொடுத்த புக…

  10. கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். New Brunswick என்ற பகுதியை சேர்ந்த பெண், கடந்த 2009 ஆம் ஆண்டில் தன்னுடைய குழந்தையை snowbank என்ற இடத்தில் உயிரோடு புதைத்ததாக வந்த தகவலை அடுத்து, அந்த இடத்தை தோண்டி, குழந்தையின் பிணத்தை கைப்பற்றி சோதனை செய்யப்பட்டது. பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் தன்னுடைய குழந்தையை உயிரோடு புதைத்ததை ஒப்புக்கொண்டார். அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரை Moncton provincial court என்ற நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். மீண்டும் ம…

    • 0 replies
    • 485 views
  11. கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன 14 வயது டொரண்டோ பள்ளி மாணவி ஒருவர் எவ்வித ஆபத்தும் இன்றி சனிக்கிழமை மீட்கப்பட்டதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்க்ழமை இரவு 8.30 மணியளவில், Islington and Finch avenues அருகிலுள்ள Moneterrey Drive என்ற இடத்தில் Roshelle Sookram என்பவர் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் அவரது பெற்றோர்களால் புகார் கொடுக்கப்பட்டது.அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த டொரண்டோ போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் பயனாக சனிக்கிழமை மாலை 3 மணியளவில் Roshelle Sookram கண்டுபிடிக்கப்பட்டார். அவர் எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டார், இரவு முழுவதும் அவருக்கு என்ன ஆனது என்பதை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். கண்டுபிடிக்கப்பட்ட…

    • 0 replies
    • 458 views
  12. பிரிட்டிஷ் வங்கியாளர்கள் (bankers)முகங்களில் கவலை தோன்றியுள்ளது. காரணம், இவர்களுக்கு கிடைத்துவரும் ‘வானை தொடும்’ போனஸ்களுக்கு ஒரு கூரை வரப்போகிறது. கூரையை தாண்டிச் செல்ல முடியாது! ஐரோப்பிய ஒன்றிய வங்கி அதிகாரசபை (European Banking Authority) வங்கியாளர்களின் போனஸ்களுக்கு உச்சவரம்பு கொண்டு வருகிறது. ஆண்டுக்கு அரை மில்லியன் யூரோவுக்கு மேல் சம்பாதித்து வந்த பிரிட்டிஷ் பேங்கர்கள் பலர் (இவர்கள் பெரும்பாலும் லண்டனில் இருந்து இயங்குபவர்கள்” இதனால் பாதிக்கப்படவுள்ளனர். சரி. லண்டனில் அப்படி எத்தனை பேர் வங்கிகளில் ஆண்டுக்கு அரை மில்லியன் யூரோவுக்கு (£420,000) மேல் சம்பாதிக்கிறார்கள்? ஒரு சிறிய கணக்கு சொல்கிறோம், பாருங்கள். லண்டனில் உள்ள Barclays வங்கியின் தலைமையகத்தில் மட்டும், க…

  13. ஓடுபாதையில் இருந்து விலகி நேபாள விமானம் ஆற்றில் இறங்கியது: விமானிகள் உள்பட 9 பேர் காயம் நேபாள நாட்டில் பசுமைமிக்க மலைகள் சூழ்ந்த ஏராளமான சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக அன்னபூர்னா பகுதியில் மலை ஏறும் பயிற்சி அளிக்கப் படுகிறது. இதனால் அங்கு வெளிநாட்டு பயணிகள் குவிகிறார்கள். இந்நிலையில் நேபாள நாட்டிலுள்ள சுற்றுலா தலமான பொக்காரா என்ற இடத்திலிருந்து நேபாள ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 3 விமானிகள், 8 ஜப்பான் நாட்டினர் உள்பட 21 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் காலை 8.30 மணி அளவில் ஜோம்சோம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானம் எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று அருகேயுள்ள காளி-கண்டகி ஆற்றில் இறங்கியது. இந்த விபத்தில…

    • 0 replies
    • 379 views
  14. துபாய் - உலகின் அதிக மக்கள் புழங்கும் விமான நிலையம் உலகிலேயே அதிக மக்கள் பாவிக்கும் விமான நிலையமாக, "துபாய் சர்வதேச விமான நிலையம்" என்ற முதலிட சிறப்புத் தகுதியை முதல் முறையாக துபாய் விமான நிலையம் பெற்றுள்ளது. சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் (Airports Council International) கடந்த மாதம் வெளியிட்ட புள்ளிவிவர தகவல்களின்படி, 2013 ஜனவரி மாத நிலவரப்படி, துபாய் சர்வதேச விமான நிலையம் 5.53 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. அதே சமயம் லண்டனின் ஹீத்துரு சர்வதேச விமான நிலையம் 4.86 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. இதுவரை கடந்த காலங்களில் லண்டனின் ஹீத்துரு சர்வதேச விமான நிலையமே இந்த விடயத்தில் முதலிடத்தில் நிலைத்திருந்தது. இந்த வருட ஆரம்பத்திலிருந்தே துபாய் சர்வதேச விம…

    • 31 replies
    • 2.5k views
  15. சி.பி.ஐ. விசாரணையில் யாரும் குறுக்கிடாமல் இருப்பது உறுதி செய்யப்படும்: ப. சிதம்பரம் Written by tharsan // May 17, 2013 // பிரதமர் மன்மோகன் சிங் சி.பி.ஐ. க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க பாதுகாக்கும் வழிமுறைகளை கண்டறிய, நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளார். இது மூன்று வார காலத்திற்குள் புதிய சட்ட வரைவை தயாரிக்க உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ப.சிதம்பரம் இது குறித்து கூறியதாவது:- சி.பி.ஐ அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்குவோம். அது விசாரணையில் முழு சுதந்திரத்துடன் செயல்படும் என்பதற்கு உறுதி அளிக்கிறோம். ஆனால் உலகில் உள்ள அனைத்து அமைப்புகளும் யாரோ ஒருவருக்கு பதில் சொல்ல பொறுப்புடையவர்கள…

  16. இந்திய பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு உருவாகியுள்ளது. அதனால், இந்திய விமானப் படையின், புதிய விமான தளம், தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா, வரும், 27ம் தேதி நடைபெறுகிறது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமான தளங்கள், தமிழகத்தில், கோவை அருகே சூலூரிலும், சென்னையை அடுத்த தாம்பரத்திலும் ஏற்கனவே உள்ளன. தற்போது, மூன்றாவதாக, தஞ்சாவூரில், புதிய விமானத் தளம், 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வரும், 27ம் தேதி நடக்கிறது. ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, புதிய விமான தளத்தை திறந்து வைக்கிறார். இப்போது திறக்கப்பட்டாலும், இந்த விமான தளம் முழு அளவில் தயாராக, 5 ஆண்டுகளா…

  17. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவில் உரிமைகளுக்கான மக் கள் யூனியன் பொதுச்செயலாளர் ஜெயா விந்தயாள், சமீபத்தில் 'பேஸ் புக்' சமூக வலைத்தளத்தில், தமிழக கவர்னர் ரோசய்யா, ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமாஞ்சி கிருஷ்ணமோகன் ஆகியோர் மீது சர்ச்சைக்கிடமான வகையில் கருத்துக்கள் வெளியிட்டார். இது தொடர்பான புகாரின்பேரில், பிரகாசம் மாவட்ட போலீசார் அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-ஏயின்படி வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். ஏற்கனவே மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்தபோது, அவருக்கு எதிரான கருத்தினை இதே 'பேஸ் புக்' சமூக வலைத்தளத்தில் ஷஹீன் ததா என்ற பெண் கருத்து வெளியிட்டதாலும், அந்த கருத்துக்கு அவரது தோழி ரேணு சீனி…

    • 0 replies
    • 580 views
  18. அசாம்: பிரதமர் மன்மோகன் சிங்கின் கைவசம் எந்த ஒரு பணமும் இல்லையாம். அவரது அமைச்சரவை சகாக்களுடன் ஒப்பிடும் போது 1996ம் ஆண்டு வாங்கிய மாருதி கார் மட்டுமே மன்மோகனிடம் உள்ளதாம். ராஜ்சபா எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இந்த இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அசாம் மாநில அதிகாரியிடம் வேட்புமனுவை சமர்ப்பித்தார். அதில், அளிக்கப்பட்ட உறுதி சான்றில் மன்மோகன் சிங்கிற்கு சொந்தமாக பணம் ஏதும் இல்லை எனவும், ஒரு பழைய கார் மட்டுமே அவருக்கு சொந்தமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் தனது வேட்புமனுவில், தனது மொத்த ஆண்டு வருமானம் ரூ.40,51,964 என குறிப்பிட்…

    • 1 reply
    • 580 views
  19. தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் ராம்சிங், வினய் சர்மா, 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 17 வயது சிறுவன் குறித்து தனியாக விசாரணை நடந்து வருகிறது. மற்றவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த மார்ச் மாதம் ஜெயிலில் இருந்த முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம்சிங் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வினய்சர்மாவை, சக கைதிகள் பயங்கரமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் ரத்த வாந்தி எடுத்தார். கடுமையான காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருகிறார். கவலைக்…

    • 0 replies
    • 478 views
  20. புதுடெல்லி: சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள், தங்களது கைக்கடிகாரத்தை சுற்றியும், டவலை பாக்கெட்டில் திணித்தும் புக்கிகளுக்கு சிக்னல் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் 7 பேர், டெல்லி காவல்துறையினரால் மும்பையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், புக்கிகளுக்கும் இடையே எவ்வாறு தகவல் சமிக்ஞைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பது குறித்த தகவலை டெல்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். முதல் சூதாட்டம் கடந்த 5 ஆம் தேதியன்று புனே வாரியர்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு…

  21. பாகிஸ்தான் - சீனாவுடன் இந்தியா போருக்கு தயாரகிறது: சீன சிந்தனையாளர்கள் குழு தகவல் சீனா அரசுக்கு அறிவுரைகள் வழங்கி வரும் சிந்தனையாளர்கள் வெளியிட்டுள்ள புளூ புக்கில் இந்தியா குறித்து எழுதியுள்ளனர். அதில் இந்தியா பற்றி கூறியிருப்பதாவது:- நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவுள்ள பாகிஸ்தானை கண்காணிக்கவும், ஆயத்தமாக இருக்கவும் இந்தியா அதிகபட்ச அக்கறை எடுத்துகொள்கிறது. மேலும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து, அதி நவீன ஆயுதங்களையும் தளவாடங்களையும் மேம்படுத்தி படைகளை வலுவூட்டி ஒரு வரையறுக்கப்பட்ட போருக்காக பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு மிரட்டல் விடுத்து வருகிறது.மேலும் சமீப காலமாக இந்தியா கப்பற்படையை விரிவுபடுத்தி, சீனாவிற்கு மிகப்பெரிய கவலையை கொடுக்கிறது. இந்தியாவின் பக்கத்து …

  22. சீரமைக்குப்பின் லெனின் நினைவிடம் திறக்கப்பட்டது உடல் வைக்கப்பட்டுள்ள நினைவிடம் இதுவரையில்லாத அளவுக்கு பெரிய அளவில் மீள் சீரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.செஞ்சதுக்கத்தில் உள்ள கிரனைட் சமாதியின் அடித்தளத்தில் நீர் கசிந்தமையால் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அடித்தளத்தில் கான்கிரீட் கலவை செலுத்தப்பட்டு அது பலப்படுத்தப்பட்டுள்ளது.ரஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திய லெனின் 1924 இல் இறந்தார். அதன் பிறகு அவரின் உடல் பாடம் செய்யப்பட்டது. கடந்த 1930ம் ஆண்டில் இருந்து அவரின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் லெனினின் உடலை அங்கிருந்த அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதை புதைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் அங்கே அடிக…

    • 0 replies
    • 361 views
  23. புது டில்லியில் கடந்த ஆண்டு ஒடும் பேருந்தில் மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டுத்தப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறையில் தாக்கப்பட்டதாகவும் அவருக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டதாகவும் அவரின் வழக்கறிஞர் குற்றம் சாட்டுகிறார். ஆனால், இக்குற்றச்சாட்டை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. தொடர்புடைய விடயங்கள் பெண்கள், வன்முறை இந்தியா முழுவதும் கோப அலைகளைத் தோற்றுவித்த டில்லி பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 20 வயதான வினய் சர்மா சக கைதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் தற்போது அவர் லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் வழக்கறிஞர் ஏ பி சிங் கூறியுள்ளார். திகா…

  24. பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஷ் ஷெரீப், பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விடுத்த அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவேன் என்ற உங்களது கருத்துக்கு, இந்திய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்களுடனும், உங்களது அரசுடனும் இணைந்து பணியாற்ற தாம் ஆர்வமாக உள்ளதாக கூறியிருந்தார். மேலும் நவாஸ்ஷெரீப் இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார், இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு இந்தியா வர பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளது குற…

  25. மும்பை: தமது உயிருக்கு ஆபத்து இருப்பதால் புனே சிறையில் சரணடைய அனுமதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ள சஞ்சய் தத், நாளை தடா கோர்ட்டில் சரணடைகிறார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஆயுதங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததற்காக, சஞ்சய் தத்திற்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து கடந்த மார்ச் 21 ஆம் தேதியன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. இவ்வழக்கில் ஏற்கனவே அவர் 18 மாதங்களை சிறையில் கழித்துவிட்டதால், இன்னும் மூன்றரை ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியது உள்ளது. இந்நிலையில் தாம் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படப்பிடிப்புகள் பாக்கி இருப்பதால், த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.