உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26726 topics in this forum
-
டொரண்டோவில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் குடியிருப்பில் நேற்று திங்கட்கிழமை இரவில் 15 வயது மாணவன் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. Jane Street and Finch Avenue area என்ற பகுதியில் நடந்த இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவல் கிடைத்தவுடன் டொரண்டோ காவல்துறையினர் இரவு 10.30 மணியளவில் விரைந்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். டொரண்டோ அவசர சிகிச்சை மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டு, உடனடியாக துப்பாக்கியால் சுடப்பட்ட மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவனை பரிசோதித்த மருத்துவர், மாணவன் இறந்துவிட்டதாக அறிவித்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போன மாணவனின் குடியிருப்பு கட்ட…
-
- 1 reply
- 503 views
-
-
இரகசியமாக பாதிக்கப்பட்டவர்கள் --வடகொரியா
-
- 2 replies
- 576 views
-
-
கேரளா மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து துரத்தப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளை நாட்டிலிருந்தே துரத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். திரிபுரா மாநில சட்டசபைக்கு வரும் 14ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி அங்குதேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் ஈடுபட்டு வருகிறார். அகர்தலாவில் இன்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக, ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பதவியிலிருந்து வேரோடு பிடுங்குவதே எங்களது நோக்கம். அவர்களை கேரளா மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றினோம். தற்போது இந்தியாவிலிருந்தே வெளியேற்ற வேண்டும். மக்களுக்கு நெருக்க…
-
- 1 reply
- 570 views
-
-
இங்கிலாந்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 17 இந்தியர்கள் கைது மேற்கு லண்டனில் உள்ள சவுத் ஆல் மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 1 பெண் உள்பட 17 இந்தியர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்களில் 10 பேர் விசா காலம் முடிந்த பின்னரும், 5 பேர் கள்ளத்தனமாக இங்கிலாந்திற்குள் நுழைந்தும் வாடகை வீடுகளில் தங்கியுள்ளது விசாரணையின் போது தெரிய வந்தது.இவர்கள் தங்குவதற்கு வீடுகளை வாடகைக்கு விட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வசிக்க வீடுகளின்றி மாடிப்படிகளின் அடிப்பகுதி, பஸ் நிலையம், பூங்கா, நடைபாதை ஆகிய இடங்களில் படுத்து தூங்கும் நூற்றில் 6 பேர் ஆசியா கண்டத்தை சேர்ந்தவர்கள் என்று குடியுரிமை துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மூலம்/ஆக்கம் : இணை…
-
- 1 reply
- 378 views
-
-
டெல்லி: இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ரூ. 470 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ள நிலையில் இந்தியாவில் இந்த லஞ்சம் யாருக்குத் தரப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயணத்துக்காக 12 ஹெலிகாப்டர்களை இத்தாலியிடமிருந்து விமானப் படை வாங்கியது. இந்த ஆர்டரை பெற லஞ்சம் கொடுத்ததாக இத்தாலிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான பின்மெக்கானிகாவின் (Finmeccanica) தலைவர் கிஸ்பி ஓர்சி, இதன் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டின் (Agusta Westland) தலைவர் பர்னோ ஸ்பங்னோலினி ஆகியோரை அந் நாட்டு அரசு இன்று கைது செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் இத்தாலிய அரசுக்கும் 30 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சேர்ந்…
-
- 10 replies
- 941 views
-
-
சர்வாதிகாரி ஹிட்லர், சைவ உணவு பழக்கம் கொண்டவர்' என, அவரிடம், "உணவு பரிசோதகராக' பணி புரிந்த பெண் தெரிவித்திருக்கிறார்.இரண்டாம் உலகப்போருக்கு காரணமானவரான ஜெர்மன் அதிபர் ஹிட்லர், ஒரு கொடுங்கோலராக, பரவலாக அறியப்பட்டவர். கோடிக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த அவர், "சைவ உணவுகளையே விரும்பி சாப்பிட்டார்' என, அவரது உணவை பரிசோதித்த குழுவில் பணிபுரிந்த, மாகோட் வோயெல்க், 95, என்ற பெண் தெரிவித்துள்ளார். ஹிட்லரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அவர் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, அந்த உணவை முதலில் சுவை பார்க்க, தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஹிட்லர் பயன்படுத்திய, "உல்ப்ஸ் லேர்' என்ற ராணுவ தலைமையகம் ஒன்றில், "உணவு …
-
- 0 replies
- 487 views
-
-
சர்வதேச எதிர்ப்புகளை மீறி வடகொரியா வெற்றிகரமாக அணுப் பரிசோதனையொன்றை நடத்தி முடித்துள்ளது. நிலத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இப்பரிசோதனையானது சிறிய செயற்கை பூகம்பமொன்றை ஏற்படுத்தியதாக பியங்யொங்கிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பூகம்பமானது ரிச்சட்ர் அளவில் 4.9 ஆக பதிவாகியதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு மையம் குறிப்பிடுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் கட்டளை மற்றும் உலக நாடுகள் பலவற்றின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா இச்சோதனையை நடத்தியுள்ளது. இதனையடுத்து ஐ.நா. பாதுகாப்பு அவை அவசரமாக கூடியுள்ளது. இந்நிலையில் வடகொரியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது. வடகொரிய இதுவரை நடத்தியவற்றிலேயே மிகச்…
-
- 5 replies
- 761 views
-
-
மூவரின் தூக்குத்தண்டனை வழக்கு பற்றி உள்துறை அமைச்சர் விளக்கம் View Email history பு வவுனியா நிருபர் திங்கட்கிழமை, பெப்ரவரி 11, 2013 அப்சல் குரு வழக்கில் இருந்து ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் வழக்கு வேறுபட்டது என்று தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, தூக்குத் தண்டனை நிறைவேற்றம் பாதிக்கப்படும் என்பதால் தகவல் ரகசியமாக வைக்கப்படுகிறது என்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்குத் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூக்குத் தண்டனைக்கு எதிரான அவர் தாக்கல் செய்த வழக்கு…
-
- 1 reply
- 539 views
-
-
கடந்த சில நாட்களில், "சீன இணையத் தாக்குதல்", "சீனர்கள் கள்ளத்தனமாக பிறரது இணைய இணைப்புகளில் நுழையும் தாக்குதல்" தொடர்பான செய்தி அறிக்கையை வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகிறன. சீனத் தேசிய கணிணி இணையத்துக்கான நெருக்கடி தொழில் நுட்ப கையாளுதல் மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புள்ளி விபரங்களின் படி, மேலை நாட்டின் சில செய்தி ஊடகங்களின் செய்தி அறிவிப்புக்கு மாறாக, சீனா, இணையத் தாக்குதலுக்குள்ளான நாடாகும். இணையத்தின் விரைவான வளர்ச்சியுடன், சீனப் பெருநிலப்பகுதியில் இணையப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து வருகிறது. ஆனால், மேலை நாடுகளில் இணையம் பயன்படுத்துவோருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சீனாவில் இணையப் பயன்படுத்தும் சீன மக்களின் பாதுகாப்ப…
-
- 2 replies
- 558 views
-
-
பொன் நாகப்பாம்பு எனும் பன்னாட்டு கூட்டு இராணுவப் பயிற்சி பிப்ரவரி திங்கள் 11ஆம் நாள் தாய்லாந்தில் துவங்கியது. ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் நடைபெறும் மிக பெரிய அளவுடைய பன்னாட்டுக் கூட்டு இராணுவப் பயிற்சி இதுவாகும். அமெரிக்கா முக்கியமாக அதனை ஏற்பாடு செய்துள்ளது. பிரதேசத்தில் நிகழும் திடீர் நிகழ்ச்சிகளைச் சமாளிக்க பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பு ஆற்றலுக்குப் பயிற்சி அளிப்பது இப்பயிற்சியின் இலக்காகும் என்று அமெரிக்கத் தரப்பு வலியுறுத்தியது. இப்பயிற்சி மூலம் தாய்லாந்துடன் பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் ஒத்துழைத்து ஆசியான் அமைப்பை மேலும் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக சீன இராணுவ நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்தார். இப்பயிற்சி 11 நாட்கள் நீடிக்கும். …
-
- 0 replies
- 537 views
-
-
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால், அவரை கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினராக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு, லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் பதவிக்கு தகுதியான நபர்கள் தங்கள் கட்சியில் நிறையப் பேர் உள்ளனர் என, பா.ஜ., மூத்த தலைவர்கள் எல்லாம் பேட்டியளித்து வருகின்றனர். ஆனாலும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க, பா.ஜ.,வில் மட்டுமின்றி, சங்பரிவார் அமைப்புகள் மத்தியிலும் ஆதரவு உள்ளது. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க, யஷ்வந்த் சின்கா, ராம் ஜெத்மலானி …
-
- 6 replies
- 672 views
-
-
உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளை நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரக் கோரிய பொதுநல மனு தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை, புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளை நாடாளுமன்றம் மற்றும் இதர அரசியல் சாசன அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் எனக்கோரி பொதுநல வழக்குகளுக்கான மையம் சார்பில் கடந்த 2-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அனில் திவான் மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அரசியல் காரணங்களுக்காக இந்த அமைப்புகள் தவறாக வழி நடத்தப்படுவதை…
-
- 0 replies
- 409 views
-
-
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், தண்டனை அளிக்கப் போவதாக குறிப்பிடப்பட்ட கடிதம் அப்சல் குருவின் மனைவிக்கு, இன்று கிடைத்துள்ளது. டெல்லி தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்ட இந்த கடிதம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் தலைமை தபால் அலுவலகத்திற்கு கடந்த 9ம் தேதி கிடைத்துள்ளது. அன்று தான் அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டார். அந்த கடிதம் இன்று காலையில் தான், அவரிடம் கொடுக்கப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் தலைமை தபால் அதிகாரி ஜான் சாமுவேல் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அந்த கடிதத்தை ஒப்படைக்க இயலவில்லை என அவர் கூறியுள்ளார். அப்சல் குருவை தூக்கிலிடப்போவது குறித்த செய்தியை…
-
- 6 replies
- 630 views
-
-
சுதந்திரத் தமிழ் ஈழ விடியலை நோக்கி வீரத் தியாகி முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 ஆம் நாள் இலண்டன் மாநகரில் இருந்து மானமும் தியாக உணர்வும் கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப தியாகப் பயணம் தொடங்குகின்றனர். நெஞ்சைப் பிளக்கும் ஈழத் தமிழர் படுகொலை அவலக் காட்சிகள் காணொளிகளாக உள்ளத்தை உருக்கும் புகைப்படங்களாக மக்கள் விழிகளையும் உள்ளங்களையும் கண்ணீரோடு ஈர்க்கும் வகையில் பரப்புரை செய்கின்றனர். பிரெஞ்சு தேசம் பெல்ஜியம் ஜெர்மனி நெதர்லாந்து நாடுகளின் 54 நகரங்களில் ஈழ விடியலுக்கான கருத்துப் பரப்புரை செய்தவாறு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவுக்குச் செல்கின்றனர். இனப் படுகொலை செய்த ராஜபக்சே கொடியோர் கூட்டத்தைஇ அனைத்துலக நீதிமன்றக் …
-
- 0 replies
- 362 views
-
-
பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம் : அசத்திய மும்பை போலீசார் பேஸ்புக் சமூக வலைதளம் மூலமாக, ரூ. இரண்டரை லட்சம் திருடி தலைமறைவாக இருந்த வாலிபரை மும்பை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் விஜய் சவுத்ரி.மும்பையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி, வங்கியில் கட்டுவதற்காக கம்பெனி கொடுத்த பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்துடன் தலைமறைவானார் விஜய் சவுத்ரி. அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, மொபைல் போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. பணம் கட்டக்கொடுத்த நாள் முதல் சவுத்ரி வேலைக்கு வருவதையும் நிறுத்தி விட்டான். இதையடுத்து பணத்தை சவுத்ரி கையாடல் செய்து விட்டதை உணர்ந்த தனியார் நிற…
-
- 0 replies
- 421 views
-
-
பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் ஊழல் புகாரை விசாரிக்க சுவிஸ் அரசு மறுப்பு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது சுவிட்சர்லாந்து வங்கியில் பணம் முதலீடு செய்தது தொடர்பாக ஊழல் புகார் இருந்தது. இதை முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் கடந்த 2007-ம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இது போன்று ஆயிரக்கணக்கான ஊழல் புகார்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவர் பதவி விலகி 2 ஆண்டுகள் கழித்து இப்புகாரை நீக்கியது தவறு.எனவே, இவற்றை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், அதிபர் சர்தாரியின் ஊழல் பணம் சுவிட்சர்லாந்து பாங்கிகளில் முதலீடு செய்தது குறித்து அந்நாட்டு அரசிடம் இருந்து அறிக்கை பெற வேண்டும் என பிரதமருக்கும் உத்தரவிட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த முன்னாள்…
-
- 0 replies
- 510 views
-
-
ஒருபோதும் எதிர்பாராத வகையில் பாப்பாண்டவர் இந்த மாத இறுதியில் இராஜினாமாச் செய்யவுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாப்பாண்டவர் ஜோன் போல் II மரணமடைந்ததைத் தொடர்ந்து 85 வயதான இவர் பாப்பாண்டவர் பெனடிக்ற் XVI ஆகினார். கத்தோலிக்க திருச்சபை தலைவரின் எதிர்பாராத இப்பதவி விலகலுக்கான காரணங்கள் எதுவெனத் தெரியவரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. பாப்பாண்டவர்கள் பதவி விலகுவது ஒன்றும் புதிதான விடயமல்ல. ஆனால் பதவியிலிருக்கும்போதே பாப்பாண்டவர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல்த் தடவையாகும். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/58703-2013-02-11-11-35-43.html Pope Benedict XVI announces he is to resign Pope Benedict XVI annou…
-
- 22 replies
- 1.3k views
-
-
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக கசாப்பும், தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்ட சம்பவங்களை ஒப்பிடும் போது, தூக்குத்தண்டனைகளை காங்கிரஸ் தனது அரசியல் லாபத்திற்காக நிறைவேற்றுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. வரும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. கடந்த 2004ம் ஆண்டு முதல் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. எதிர்வரும் லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் விதமாக தற்போது அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. மறுபுறம் கடந்த 9 ஆண்டு…
-
- 1 reply
- 393 views
-
-
சொந்த மக்களைக் கொல்ல உத்தரவிட்டுள்ளார் ஒபாமா: அசாஞ்ஜே குற்றச்சாட்டு சொந்த நாட்டு மக்களையே கொல்ல அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார் என்று விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜூலியன் அசாஞ்ஜே குற்றம்சாட்டியுள்ளார். அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் அமெரிக்கர்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்களை எதிரிகளாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துக்குரிய அமெரிக்கர்களைக் கொன்றுவிட ஒபாமா அளித்துள்ள உத்தரவாகவே இது கருதப்படுகிறது. இந்த உத்தரவு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தங்கியுள்ள அசாஞ்ஜே…
-
- 0 replies
- 378 views
-
-
இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குருவுக்கு தில்லியில் சனிக்கிழமை திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதை எதிர்த்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹூரியத் அமைப்புகளும் அதன் சார்பு இயக்கங்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ- முகம்மது ஆகிய இயக்கங்களின் தளபதிகள் கூட்டம் கடந்த சனிக்கிழமை இரவு பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்றதாக இந்திய உளவுத் துறைக்கு…
-
- 2 replies
- 331 views
-
-
ஸ்ரீநகர் : ""அப்சல் குரு, தூக்கிலிடப்பட்டது, இயல்பாக நடந்ததா அல்லது அதற்கு பின்னணி உள்ளதா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது,'' என, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், உமர் அப்துல்லா, கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் முதல்வரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும், தேசிய மாநாட்டு கட்சியின், தலைவர்களில் ஒருவருமான, உமர் அப்துல்லா கூறியதாவது: தூக்கிலிடப்பட்ட, அப்சல் குரு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். எனவே, இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவும், கேள்விகளை எழுப்பவும், எனக்கு உரிமை உள்ளது. மும்பை தாக்குதல் சம்பவ குற்றவாளி, அஜ்மல் கசாபை தூக்கிலிட்டபோதே, அடுத்ததாக, அப்சல் குருவுக்கும், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சந்தேகம் எனக்கு இருந்த…
-
- 8 replies
- 819 views
-
-
கொழும்பு: தரம் குறைவாக இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து இந்தியா அனுப்பி வைக்கவிருந்த 5 ஆயிரம் டன் டீசலை இலங்கை நிராகரித்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.சி.யிடமிருந்து டீசலை, கப்பல் வழியாக இலங்கை, இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில் இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேசன் (சி.பி.எஸ்.டி.எல்) எண்ணெய் சேமிப்பு நிறுவனத்திற்கு 5ஆயிரம் டன் டீசலை கப்பல் வாயிலாக ஐ.ஓ.சி. ஏற்றுமதி செய்தது. இது அந்நாட்டு எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்க திட்டமிருந்தது. இவ்வாறு இறக்குமதி செயயப்பட்ட டீசல் தரம் குறைந்ததாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் டீசலை சப்ளை செய்ததால் இழப்பீடு கேட்டு சிலோன் எண்ணெய் நிறுவனம் மீதும், அந்நாட்டு மூத்த பெட்ரோலியத்…
-
- 1 reply
- 460 views
-
-
பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரூன், ஸ்காட்லாந்தை வலியுறுத்தி உள்ளார். பிரிட்டனில் ஸ்காட்லாந்தின் பங்கு குறித்த ஆய்வறிக்கையை பிரிட்டன் அரசு திங்கள்கிழமை வெளியிட உள்ளது. இந்நிலையில், கேமரூன் கூறுகையில், ""300 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்திருந்த நாம் பிரிந்தால் சர்வதேச அரங்கில் பிரிட்டனின் பலம் குறைந்து விடும். பிரிட்டன் இப்போது நன்றாக செயல்படுகிறது. இதை ஏன் உடைக்க வேண்டும்?'' என்றார். பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்ல ஸ்காட்லாந்து திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த ஆண்டு மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதே நேரம், கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 23 சதவீத ஸ்காட்லாந்து மக்கள் மட…
-
- 14 replies
- 1.1k views
-
-
இதுவரை ரகசியமாக கணக்குகளைப் பராமரித்து வந்த சுவிஸ் வங்கிகள் மற்ற சாதாரண வங்கிகளைப் போல செயல்படத் திட்டமிட்டுள்ளன. இவ்வகையில் 2 வங்கிகள் தங்கள் கணக்கு விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளன. சுவிட்ஸர்லாந்து வங்கிகளின் கணக்கு விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படுவதில்லை. அவ்வங்கிகள், பங்குச் சந்தைகளில் கூட பட்டியலிடப்படுவதில்லை. ஆனால், தற்போது இந்நிலையில் சிறிது மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. 200 ஆண்டு பழமையான பிக்டெட் மற்றும் லொம்பார்டு ஒடியர் என்ற இரு வங்கிகள் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக (லிமிடெட்) செயல்பட முடிவு செய்துள்ளன. தங்களின் கணக்கு விவரங்களை வெளியிட முடிவு செய்துள்ளன. பிக்டெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "வங்கியின் பெயர் பங்குச் சந்தைப் ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசோடு மத்திய அரசும் உறவைத் துண்டித்து விட்டால், ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்க ஆள் இருக்காது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்தது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அதேசமயம், இலங்கை அரசோடு மத்திய அரசும் உறவைத் துண்டித்து விட்டால், ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்க ஆள் இருக்காது என்று அவர் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை திருப்பதி கோவிலுக்கு வந்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தின. டெல்லி, திருப்பதி உள்ளிட்ட இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. http://puthiyathalaimurai.tv/narayanasamy-on-srilankan-…
-
- 3 replies
- 585 views
-