உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26729 topics in this forum
-
இந்திய பிரதமர் மீது வழக்கு போடப்போவதாக மிரட்டும் 11 வயது சிறுமி லக்னோ :"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டிய பிரதமர், மன்மோகன் சிங், அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, 11 வயது பள்ளி மாணவி, பிரதமருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார். "காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தகவல்கள் வெளியாகின."அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள், கேள…
-
- 0 replies
- 510 views
-
-
கொங்கோவின் முன்னாள் சிவில் இராணுவ தலைவரான மத்தியூ நுட்ஜோலோ சூய் இழைத்ததாகக் கூறப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றிலிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். கொங்கோ குடியரசின் ரிஷ் இற்றுறி மாகாணத்தில் பொகொறோ எனும் கிராமவாசிகள் 200பேரை 2003இல் கொலை செய்ததாக இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சாட்சியம் அளித்தவர்கள், பொதுமக்கள் உயிரோடு எரிக்கப்பட்டதாகவும் பெண்கள் மீது பலாத்காரம் புரியப்பட்டதாகவும் குழந்தைகள் சுவரில் அடித்துக் கொல்லப்பட்டனர் எனவும் கூறியிருந்தனர். இருப்பினும் நுட்ஜோலோ, தான் இந்த தாக்குதலுக்கு கட்டளையிடவில்லை எனவும் சில நாட்களின் பின் தான் இதுபற்றி கேள்விப்பட்டதாகவும…
-
- 0 replies
- 278 views
-
-
பாலியல் வல்லுறவுத் தலைநகராகும் டெல்லி! Posted Date : 15:18 (18/12/2012)Last updated : 16:20 (18/12/2012) டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்,ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ள நிலையில் 'டெல்லி-பாலியல் வல்லுறவுக்கு' தலைநகர்'என்ற நிலையை நோக்கி செல்வதாக சொல்லி அதிரவைக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் புள்ளிவிவரம் ஒன்று! டெல்லியில் கடந்த ஞாயிறன்று இரவில், 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் நண்பரை தாக்கிவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது.பின்…
-
- 33 replies
- 2.3k views
-
-
கனடாவின் கியூபெக் மற்றும் நியூ பிரன்ஸ்விக் எல்லைப்பகுதியில் இந்த வாரம் வானிலிருந்து வீழ்ந்த இரண்டு உலோகப் பொருட்கள் என்ன என்பதைக் கண்டறிவதில் கனடிய இராணுவம் தீவரமாக உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு உலோகப் பொருட்களும், ஒரே பொருளாக வீழ்ந்து விசையின் தாக்கத்தினால் இரண்டாக உடைந்தனவா என்பதும் ஆராயப்படுகிறது. கியூபெக் மற்றும் நியூபிரன்வீக் மாகாண எல்லைப் பகுதியலுள்ள பெகன்மூக் பிரதேசத்திற்கு அண்மையில் காணப்பட்ட இந்த உலோகப் பொருட்கள் எவ்வாறு பூமியை வந்தடைந்தன என்பது பற்றியும் இது விமானமொன்றின் உதிரிப்பாகமா அல்லது செய்மதியையொத்த காலநிலைக் கண்காணிப்புக் கருவியா என்பது குறித்தே ஆராயப்படுகிறது. கனடிய இராணுவமும் கனடிய மத்திய பொலிசாரும் இந்த பொருள் வீழ்ந…
-
- 1 reply
- 691 views
-
-
சீன அரசு தன்னுடைய வீட்டை திருடிக்கொண்டதாக குற்றம் சுமத்தி, தனது வீட்டை ஒப்படைக்கும்படி 50 அடி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண்ணை அதிரடிப்படையினர் காப்பாற்றி, விசாரணை செய்து வருகின்றனர். சீனாவின் Lia Sun என்ற 31 வயது பெண்மணி, நேற்று Zhujiang என்ற ஆற்றின் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது Guagzhou நகர் போலீஸார் அதிரடியாக காப்பாற்றினர். அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய சீன அரசு ஆக்கிரமித்து கொண்டதாகவும், அதற்கான உண்மையான மதிப்பீட்டு தொகையைக் கொடுக்காமல், மிகவும் குறைவாக கொடுத்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது. மேலும் …
-
- 0 replies
- 410 views
-
-
மாயன் காலண்டரின் கூற்றுப்படி உலகம் அழிந்தால், அதிலிருந்து தப்பிக்க கலிபோர்னியாவை சேர்ந்த Ron Hubbard என்பவர் முழுக்க முழுக்க பாதுகாப்புடைய, லெதர் சோபா, பிளாஸ்மா டிவி அடங்கிய உருண்டை வடிவ ஆடம்பர வீடு ஒன்றை கட்டி விற்பனை செய்து வருகிறார். மிகப்பெரிய குண்டுவெடிப்பையும் தாங்கக்கூடிய வகையில் செய்யப்பட்டுள்ள இந்த வீட்டின் உள்ளே, ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் உள்ளது போன்ற ஆடம்பர வசதிகள் கொண்டது. இந்த வீட்டை ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரை வாடகைக்கோ அல்லது முழு விலை கொடுத்து விலைக்கோ வாங்கிக்கொள்ளலாம் என Ron Hubbard அறிவிப்பு செய்துள்ளார். மாயன் காலண்டரின் பட உலகம் அழிய நான்கே நாட்கள் இருப்பதாக எண்ணி, உலக அழிவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்பவர் இந்த வீட்டை பயன்படுத்திக் கொள்ளல…
-
- 7 replies
- 2.2k views
-
-
அமெரிக்காவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பள்ளி துப்பாக்கி சூடு நடத்திய Adam Lanza என்பவனின் வீட்டிற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். அதோடு, அந்த வீடு இருக்கும் சாலையில் போக்குவரத்தை தடை செய்து, வீட்டின் அருகில் இரண்டு காவலர்கள் காவல் காத்து வருகின்றனர். 20 பள்ளிக் குழந்தைகள் உள்பட 27 பேரை சுட்டு கொன்ற அமெரிக்காவை சேர்ந்த Adam Lanza என்பவன், தன்னுடைய தாயார் நான்ஸியுடன் வசித்து வந்த வீடு, Sandy Hook, நகரில் உள்ள Yogananda Road என்ற இடத்தில் உள்ளது. இந்த வீட்டை அதிரடியாக சோதனையிட்ட காவல்துறையினர், வீட்டை சுற்றிலும் டேப் சுற்றி, காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் முதற்கட்ட விசாரணை முடியும்வரை அந்த வீடு இருக்கும் சாலையில் போக்குவரத்தை தடை செய்துள்ளனர். …
-
- 0 replies
- 792 views
-
-
கனடா பிராம்டனில் - Steeles Ave & Airport Rd சந்திப்புக்கு அருகில் இரசாயணவாயு புகை பரவல் - அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவிப்பு: [Monday, 2012-12-17 21:59:36] Steeles Ave & Airport Rd சந்திப்பு பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற திடீர் விபத்தால் அப்பகுதியில் இரசாயணவாயு புகை பரவியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதிக்கு மக்கள் செல்வதை தற்காலீகமாக தவிர்க்குமாறு அவசர சேவை பிரிவினர் கேட்டுக்கொள்கிறார்கள். பிற்பகல் 2 மணியளவில் அப்பகுதியிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இருந்து வெளியான விசவாயுபுகை அந்த பகுதியில் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. தீயை கட்டுப்படுத்துவதற்கு 50க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்களுடன் படையினர் தீவிர முய…
-
- 2 replies
- 501 views
-
-
தனது உடலை அழகுபடுத்துவதற்காக ஹாலிவுட் நடிகை முதல் உள்ளூர் நடிகைகள் வரை பலவிதமான அறுவை சிகிச்சை செய்திருப்பதை நாம் அறிவோம். ஆனால், ஒரு இளைஞன் தன்னை அழகுபடுத்துவதற்காக கிட்டத்தட்ட 100 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என்பதே தற்போது ஆச்சரியப்படும் செய்தி ஆகும். இதற்காக இந்த இளைஞர் $100,000 செலவு செய்துள்ளார். இங்கிலாந்தில் 32 வயதான Justin Jedlica என்ற இளைஞர் தன்னை எப்போதும் அழகுபடுத்திக் கொள்வதில் மிகுந்த பிரியம் உள்ளவர். இதற்காக இவர் $100,000 டாலர்கள் வரை செலவு செய்து, 90 முதல் 100 அறுவை சிகிச்சைகள் செய்து தற்போது ஒரு அழகு பொம்மையாக காட்சியளிக்கின்றார். அழகாக இருப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அதற்காக நான் எத்தனை தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கும்…
-
- 0 replies
- 614 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இறந்த குழந்தைகளுக்கு கன்ணீர் அஞ்சலி செலுத்தினார். அமெரிக்காவில் இதுபோன்ற கொடுமையான நிகழ்ச்சி இனிமேலும் நடக்காதவாறு, துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றும்போது உறுதிகூறினார். பின்னர் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டனர். அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து, குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்து, அந்த இடத்தை சிறிது நேரத்தில் கலகலப்பான இடமாக மாற்றினார் ஒபாமா. San…
-
- 0 replies
- 469 views
-
-
ஆஸ்திரேலிய வானொலி நிலைய அறிவிப்பாளர்களின் விளையாட்டுத்தனமான காரியத்தால், தற்கொலை செய்த நர்ஸ், உடல் இன்று இந்தியாவில் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிர்வா என்ற இடத்தில் உள்ள Our Lady of Health Church அருகிலுள்ள கல்லறையில் நர்ஸ் ஜெசிந்தாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான உறவினர்கள் இந்த இறுதிச்சடங்கில் கண்ணீருடன் கலந்து கொண்டனர். முன்னதாக உறவினர்கள் மற்றும் கத்தோலிக்க சர்ச் பாதிரியார் ஆகியோர் சேர்ந்து, ஜெசிந்தாவிற்காக, அவரது வீட்டில் வழிபாடு நடத்தினர். இதில் ஜெசிந்தாவின் கணவர் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். நர்ஸ் ஜெசிந்தாவின் இற…
-
- 0 replies
- 2.3k views
-
-
அகமதாபாத்: குஜராத்தில் 3-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று முதலமைச்சர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள 95 சட்டசபை தொகுதிகளில்,இன்று 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.பிற்பல 3 மணி நிலவரப்படி சராசரியாக 54 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக காணப்படுவதால், பா.ஜ.வுக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ள்தாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில்,குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மணி நகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடியில் இன்று வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மோடி,"இந்த தேர்தலின் மூலம், 3வது முறையாக ஆட்சி அமைக்கும் உரிமையை எங்களுக்கு வழங்கும் குஜரா…
-
- 0 replies
- 456 views
-
-
புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் ஓடும் பேருந்து ஒன்றில் 23 வயது மாணவியின் நண்பரை அடித்துத் தூக்கி வெளியே வீசி விட்டு, ஒரு கும்பல் அம்மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுள்ளனர்.அப்பெண் தற்போது அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் நண்பர் கூறுகையில்,"இரவு 11 மணிக்கு முனிர்கா என்ற இடத்தில் ஒயிட்லைன் பேருந்தில் ஏறினோம்.அந்தப் பேருந்து புறப்பட்டு பத்து நிமிடமான நிலையில், பேருந்தில் இருந்த சிலர் எனது தோழியிடம் சில்மிஷம் செய்யத் தொடங்கினர். இதை நான் ஆட்சேபித்ததையடுத்து அவர்கள் என்னைத் தாக்கத் தொடங்கினர்.பின்னர் என்…
-
- 2 replies
- 743 views
-
-
கனடாவில் இருந்து சமீபத்தில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த குடும்பத்தில் உள்ள 6 வயது சிறுமி Ana Marquez-Greene என்பவர் அமெரிக்க பள்ளி துப்பாக்கி சூடு சம்பத்தில் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது. கனடாவில் உள்ள University of Manitoba என்ற இடத்தில் பணிபுரிந்த Jimmy Greene என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவிற்கு பணிமாற்றம் காரணமாக குடிபெயர்ந்தார். அவர் தன் இரண்டு குழந்தைகளை சமீபத்தில் துப்பாக்கி சூடு நடந்த Sandy Hook Elementary பள்ளியில் சேர்த்தார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பயங்கரமான துப்பாக்கி சூடு சம்பத்தில், இவருடை 6 வயது மகள் Ana Marquez-Greene பலியானார் என்ற சோகச்செய்தி கனடிய ஊடகங்களுக்கு தற்போது தெரியவந்துள்ளது. பலியான Ana Marquez-Greene சகோதரரும் இதே பள்…
-
- 1 reply
- 509 views
-
-
அமெரிக்காவில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான 20 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு போப்பாண்டவர் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சம்பவத்தை அறிந்து தான் மிகவும் அதிர்ச்சியுற்றதாகவும், பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். போப்பாண்டவர் வருத்தம் தெரிவித்த செய்தியின் வீடியோ பார்க்க....
-
- 0 replies
- 431 views
-
-
முன்னாள் இத்தாலிய பிரதமரும், 76 வயது கோடீஸ்வரருமான Silvio Berlusconi, தன்னை விட 50 வயது குறைவாக உள்ள தனது காதலியை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இரண்டுமுறை இத்தாலி நாட்டின் பிரதமராக பணியாற்றிய Silvio Berlusconi ஒரு கோடீஸ்வர தொழிலதிபரும் ஆவார். மனைவியை இழந்த இவருக்கு தற்போது வயது 76. இவர் தன்னை விட 50 வயது குறைவான, அதாவது 27 வயதுள்ள Francesca Pascale என்ற இளம்பெண்ணை காதல் புரிந்து வருகிறார். இந்த பெண்ணும் இவர் மீது தீவிர காதல் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் Silvio Berlusconi தனது திருமணத்தை திடீரென அறிவித்துள்ளார். 26 வயது Francesca Pascale ஐ தான் மிகவும் நேசிப்பதாகவும், அதுபோலவே அவரும் தன் மீது மிகுந்த காதல் வைத்திருப்பதால், இருவரும் திருமணம் செய்…
-
- 0 replies
- 740 views
-
-
அமெரிக்காவில் உள்ள நியூட்டன் கத்தோலிக்க சர்ச் ஒன்றில், இரண்டு நாட்களுக்கு முன் பள்ளியில் சுட்டுக் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கானோர் கூடினர். அதிபர் ஒபாமாவும் அந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக வருவதாக இருந்தார். இந்த வேளையில் அந்த சர்ச்சில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தவுடன், அமெரிக்காவே பரபரப்புடன் காணப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள், St Rose of Lima என்ற சர்ச்சின் உள்ளே அஞ்சலி நிகழ்ச்சிக்காக கூடியிருந்தபோது, வெடிகுண்டு மிரட்டல் வந்தவுடன் போலீஸார் அதிர்ந்தனர். உடனடியாக மாநில அதிரடிப்படையினர் அடங்கிய ஒரு குழு சர்ச்சில் அதிரடியாக நுழைந்து வெடிகுண்டு சோதனை நடத்தினர். அவர…
-
- 1 reply
- 451 views
-
-
நர்ஸ் ஜெசிந்தா சல்தான்ஹா, தற்கொலை செய்துக் கொண்டதற்கு, தான் காரணமாகி விட்டதை எண்ணி இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் வேதனைப்படுவதாக இங்கிலாந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அரண்மனை பணியாளர் ஒருவர் கூறிய கருத்தை மேற்கோள் காட்டி டெல்லி ஸ்டார் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது- ஜெசிந்தாவின் மரணத்தைப் பற்றி அறிந்த கேட், ஆற்றவொண்ணா வேதனையில் ஆழ்ந்துள்ளார். இந்த தற்கொலை மரணத்திற்கு நான் காரணமாகி விட்டேன். என்னை அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்திருக்காவிட்டால், இதைப் போன்றதொரு துயரச்சம்பவம் நடந்திருக்காதே என்று அவர் வேதனைப்படுகிறார். ஜெசிந்தா, நர்சாக வேலைசெய்யும் குறிப்பிட்ட அந்த யூனிட்ட…
-
- 0 replies
- 595 views
-
-
2012ஆம் ஆண்டு நடந்த சிறப்பான மற்றும் மோசமான நிகழ்ச்சிகளாக சிலவற்றை ஊடகங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்த பரபரப்பான செய்தி ஒன்றை பார்ப்போம்., பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் பாலிவுட் மறுப்பிரவேசம், பாலிவுட்டில் சிறப்பான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் மறுபடியும் நடிப்புத்துறைக்கு வந்துள்ள அவர், இனியும் தொடர்ந்து நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என பாலிவுட் ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதே நேரத்தில் ஆபாச படங்களில் நடித்து கனடாவில் புகழ்பெற்ற சன்னி லியோன் என்ற கவர்ச்சி நடிகையின் புதுவரவுக்கு போதுமான ஆதரவு இல்லை. அவர் நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட JISM 2படம் சரியாக ஓடாததால், அவர் அடுத்து புதுப்படங்களில் நடிப்பாரா? அல்லது நடித…
-
- 0 replies
- 774 views
-
-
அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு துடிப்பான இளைஞர், பீகாரில் உள்ள குடிசைப்பகுதிகளுக்கு சென்று, காசநோய்க்கும் இலவச மருத்துவ சேவை செய்யும் நிகழ்ச்சி அனைவரும் பாராட்டும் நிலையைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் Massachusetts Institute of Technology (MIT) என்ற கல்லூரியில் PhD படித்த மணிஷ் பரத்வாஜ் என்ற இளைஞர், Innovators in Health (IIH) என்ற அமைப்பின் CEO ஆக உள்ளார். அவர், தன் குழுவினர்களுடன் பீகார் மாநிலத்தின் சமாஸ்டிபூர் மாவட்டத்தில் உள்ள டால்சிங்சாரை என்ற இடத்திற்கு சென்று, அங்குள்ள ஏழை எளிய குடிசையில் வாழும் மக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, அந்நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தேவைப்படும் அதிநவீன சிகிச்சைக்கு வழிவகை செய்துள்ளார். டால்சிங்காரை பக…
-
- 0 replies
- 544 views
-
-
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன் சுகயீனமடைந்துள்ளதாக அவரின் செயலாளர் தெரிவித்துள்ளார். வயிற்றில் ஏற்பட்ட இன்பெக்ஸ்சன் காரணமாக தலைச்சுற்று ஏற்பட்டு மயக்கமடைந்து மூளை உதறல் ஏற்பட்டுள்ளது. தலையில் ஏற்பட்ட பாதிப்பு பாரதூரமானதல்ல என்று பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வயிற்றில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக தனது அரசுமுறை பயணங்களை அவர் நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தேறிவருவதாக தெரிவித்த தொடர்பாளர் அவர் வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை செய்வார் என்றும் தெரிவித்துள்ளார். இவருடைய பயணங்கள் கட்டாயமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளை தனது பதவியில் களைப்படைந்துவிட்ட கிளரி அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியி…
-
- 0 replies
- 768 views
-
-
கனடாவின் GTA பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அதிரடி அறிக்கை ஒன்றை இன்று காலை வெளியிட்டுள்ளனர். பள்ளி கல்வித்துறைக்கு அவர்கள் விடுத்த நோட்டீஸ் ஒன்றில், வரும் செவ்வாய்க்கிழமை, GTA பகுதிகளில் பணிபுரியும் சுமார் 10,000 ஆசிரியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. The Elementary Teachers' Federation of Ontario இன்று விடுத்துள்ள 72 மணிநேர முன்னெச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை பள்ளிக்கல்வி துறைக்கு முறைப்படி அனுப்பியுள்ளது. எனவே அன்றைய தினம் மாணவர்கள் அனைவரும் தங்களுடைய வீட்டிலேயே இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் ஏறத்தாழ 10,000 ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என த…
-
- 1 reply
- 451 views
-
-
சென்னையில் இருந்து, மதுரை மற்றும் திருவனந்தபுரத்திற்கு, அதிவேக, "துரந்தோ' ரயில் சேவையை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். இந்த முறை, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக, மத்திய அரசு விழாவில் முதல்வர் பங்கேற்றது, அரசியல் வட்டாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவை, டில்லி - நிஜாமுதீன் உள்ளிட்ட பகுதிகளுக்கு, இடை நிற்காமல் செல்லும், துரந்தோ ரயில்கள், ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை சென்ட்ரலிலிருந்து, மதுரை மற்றும் திருவனந்தபுரம் இடையே, துரந்தோ ரயில் சேவை துவக்க, தெற்கு ரயில்வே முடிவெடுத்தது.இந்த ரயில் சேவையை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று மாலை, சென்னை சென்ட்ரலில் இருந்து துவக்கி வைத்தார். முதலி…
-
- 0 replies
- 565 views
-
-
நேட்டோ படையில் பெட்ரோல் டேங்க் வாகனம் ஒன்று நேற்று தலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கொழுந்துவிட்டு எரிந்த வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுப்பதற்காக உள்ளூர் மக்கள் பெரும் ஆர்வம் காட்டியதால், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ வாகனங்களின் தேவைகளுக்காக பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று ஆப்கானிஸ்தான் எல்லையில் வந்து கொண்டிருந்தபோது, தலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தி, அந்த டேங்கர் லாரியை தீவைத்து எரித்தனர். தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தபோது, நிலைமையின் விபரீதத்தை உணராத உள்ளூர் பொதுமக்கள், அந்த லாரியில் உள்ள பெட்ரோலை கைப்பற்றுவதற்காக பிளாஸ்டிக் கேனுடன் முண்டியடித்த காட்சியை பத்திரிகையாளர் ஒருவர் படமெடுத்துள…
-
- 0 replies
- 500 views
-
-
அமெரிக்க பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான குழந்தைகள், மற்றும் ஆசிரியைகளின் பெயர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 12 மாணவிகளும், 8 மாணவர்களும் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவருமே 6 முதல் 7 வரை உள்ள பச்சிளம் பாலகர்கள் என்பதே மிகவும் அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். இந்த குழந்தைகளின் உடலில் இருந்து 11 குண்டுகள் வரை சுடப்பட்டு இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்திய Adam Lanza என்பவனுக்கும் ஆசிரியைகளுக்கும் கடும் போராட்டமே நடந்துள்ளதாக தெரிகிறது. குழந்தைகளின் உயிர்களை காப்பதற்காக ஆசிரியைகள் நான்கு பேர் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். ஆசிரியை விக்டோரியா என்பவர் Adam Lanza துப்பாக்கியால் சுடும்போது குழந்தைகளுக்கு முன்னாள் தான…
-
- 2 replies
- 486 views
-