உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
தென்னாப்பிரிக்கா மரிக்கானாவில் 37 சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை! சென்ற வாரம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16, 2012) வேலை நிறுத்தம் செய்த 34 சுரங்கத் தொழிலாளர்களை தென்னாப்பிரிக்காவின் போலீஸ் படையினர் கொடூரமாக படுகொலை செய்தனர். மேலும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 78 பேர் படுகாயமடைந்தனர். 259 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1919-ல் இந்தியாவின் ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொலையை நினைவூட்டும் வகையில், சுற்றி அரண்களை ஏற்படுத்தி தப்பி ஓட முடியாத படி சூழ்ந்து கொண்ட பிறகு கூடியிருந்த சுரங்கத் தொழிலாளர்களை இரக்கமில்லாமல் துப்பாக்கியால் சுட்டு இந்த பச்சைப் படுகொலையை நடத்தியிருக்கிறது போலீஸ் படை. மரிக்கானாவில் இருக்கும் சுரங்கத்தின் தொழிலாளர்கள் அதன் உரிமை…
-
- 0 replies
- 331 views
-
-
“சத்தியமா தமிழனை யாரும் ஏமாற்றலாம்!” அதே மோசடி! அதே இடம்! உயிர், பொருள், உரிமையாளர்கள் மட்டும் மாறியிருக்கின்றனர். ஈமு கோழிப் பண்ணை மோசடிக்குப் பிறகு நாட்டுக் கோழிப் பண்ணைகள்! ஈரோடில் செயல்படும் “ஸ்ரீநித்யா நாட்டுக் கோழிப் பண்ணை”யை முருகவேல் என்ற முனியன் நடத்தி வருகிறார். பொதுமக்கள் 1.5 இலட்சம் ரூபாய் கொடுத்தால் ஷெட் அமைத்துக் கொடுத்து 600 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்குவார். தீவனம், மருத்துவம் செலவுகளுக்காக மாதம் ரூ.15 ஆயிரம் கொடுப்பார். ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் பத்தாயிரம் ரூபாய் அளிப்பார். இப்படி 700 அப்பாவிகள் முதலீடு செய்திருக்கின்றனர். கடந்த 14-ம் தேதிக்குப் பிறகு புதிய அப்பாவிகள் ஏமாந்து புகார் கொடுக்க இப்போது பழைய அப்பாவிகளும் திண்டாடுகின்றன…
-
- 0 replies
- 727 views
-
-
செப்டம்பர் க்கு முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம்? செப்டம்பர் இறுதிக்குள் ஈரான் மீது முதலில் வான் தாக்குதலும் தேவை ஏற்பட்டால் இராணுவத்தாக்குதலையும் Israel நடத்த இருப்பதாக இன்றைய கொரியர் மெயில் செய்தி வெளியிட்டு இருக்கு. அப்பிடி தாக்குதல் நடத்த பட்டால் யாழ் உறவுகளுக்கு நேரடி வர்ணனை வழங்கப்படும் யாழுடன் இணைந்திருங்கள்
-
- 1 reply
- 699 views
-
-
வாஷிங்டன்: தென்னிந்திய நகரங்களில் இருந்து வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேற காரணமாக இருந்த வதந்திகள் குறித்து விசாரணை நடத்தையில் அடிப்படை சுதந்திரங்களுக்கு மதிப்பளிக்குமாறு இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. தென்னிந்திய நகரங்களில் இருந்து வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேற காரணமாக இருந்த வதந்திகள் இணையதளம், எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். ஆகியவை மூலம் தான் காட்டுத்தீ போன்று பரவியது. இதையடுத்து மொத்தமாக எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் உள்ள வதந்தி செய்திகளை நீக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தவிர வன்முறை மற்றும் வெறுப்பை உண்டாக்கும் தகவல்களை வெளியிட்டதாகக் கூறி 250 இணையதளங்களை அரசு முடக்…
-
- 1 reply
- 504 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டபடி ஆகஸ்ட் 28ம் தேதி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார். இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படத்தை வெளியிட்டுப் பேசிய சத்யராஜ் 'இந்த ஆவணப்படம் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவு' என பாராட்டினார். காஞ்சிபுரம் மக்கள் மன்றம் அமைப்பைச் சேர்ந்த 21 வயதான செங்கொடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டபடி அவர் இறந்து போனார். செங்கொடியின் இறுதி ஊர்வலத்தில் எழ…
-
- 0 replies
- 1.2k views
-
-
மெலோரா ஷகாபுதீன் (Melora Shahabudin) வயது 16 எழுதிய கதைகளும் கவிதைகளும் அடங்கிய 120 பக்க நூல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தகத்தின் தலைப்பு நாங்கள் கிளம்பும் போது (When we take off) நூலின் உப –தலைப்பு எல்லைகளைக் கடந்த பார்வைகள் (Insights beyond boundaries) மலேசியாவில் வாழும் அகதிகளின் துயரம் பற்றி இவர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் சர்வதேச மட்டத்தில் அதன் சிந்தனைத் திறத்திற்காகவும் உரை நடைச் சிறப்பிற்காகவும் பெரும் வரவேற்புப் பெற்றுள்ளது. பெயர்வியூ ((Fairview International School) சர்வதேச மாணவர் பள்ளியில் படிக்கும் போது மெலோரா இதை எழுத தொடங்கினார். ஒரு வருடத்தில் (2011) புத்தகம் நிறைவு பெற்றது. மெலோராவின் தாய் றொசிமா அலி (Rozima Ali) மலேசியாவின் அகதிகள்…
-
- 1 reply
- 729 views
-
-
இட ஒதுக்கீடும் தினமணி வைத்தி மாமாவின் மனுதர்ம விஷமும்! இட ஒதுக்கீடு தொடர்பான ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநில வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினருக்கு பதவி உயர்வில் சலுகைகள், விதித்தளர்வுகள் செய்யலாம் என்று 82வது சட்டதிருத்தம் கொண்டு வந்ததை மன்மோகன்சிங் சுட்டிக்காட்டினாராம். தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு மீண்டும் ஒரு சட்டதிருத்தம் தேவை என்ற கோரிக்கை எழுந்திருப்பதைக் கண்டுதான் தினமணிக்கு கவலை. வைத்தி மாமா சாராமாகக் கூறுவதனைப் பார்க்கலாம். அதாவது கல்வி, வ…
-
- 0 replies
- 652 views
-
-
சென்னை:பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று பா.ஜனதா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில்,இதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதாவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் முற்றிலும் முடங்கிப்போனது. இந்நிலையில், இப்பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று பா.ஜனதா தலைவர்கள் ஆலோசித்தனர். [size="2"] [/size] இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் பதவி விலகும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்தவு…
-
- 0 replies
- 349 views
-
-
நிலக்கரி ஊழல்-பாராளுமன்ற அமளி: யாரும் யோக்கியனில்லை! அதே காட்சி. அதே வசனங்கள். அதே பாத்திரங்கள். அதே சவடால்கள். வரலாறு ஒரு முறை நடந்தால் பரவாயில்லை, திரும்பத் திரும்ப நடந்தால்? 2005-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்க உரிமைகளை ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் 1,86,00,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை கணக்கு அதிகாரி தெரிவித்த அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விடுமுறைக்குப் பிறகு நேற்று கூடிய நாடாளுமன்றத்தில் பா.ஜ.க, தெலுங்கு தேசம், இடதுசாரிகள், அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணி உறுப்பினர்கள் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரசு கூட்டணி அரசு பதவி விலகுமாறு கோஷமிட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இருஅவ…
-
- 0 replies
- 929 views
-
-
பாகிஸ்தானில் குரானை அவமானப் படுத்தியதாக சிறுமி கைது! [size=3] பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதின் ஏழைகள் வசிக்கும் புறநகர் பகுதியிலிருந்து குரானை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு சிறுமி கைது செய்யப்பட்டிருக்கிறாள். கிருத்தவ மதத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி குரானின் பக்கங்களை எரித்ததாக சொல்லி பக்கத்து வீட்டுக் காரர்கள் அவளது வீட்டை சூழ்ந்து கொண்டதை தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று 14 நாட்கள் காவலில் வைத்திருக்கிறார்கள்.[/size][size=3] அந்த சிறுமியை பாதுகாக்கத்தான் காவலில் வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தார்கள். ‘சுமார் 500, 600 பேர் கொண்ட கும்பல் அவளது வீட்டை சூழ்ந்திருந்தது. நாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்திருக்கா விட்டால் அ…
-
- 4 replies
- 757 views
-
-
இந்திய இராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு தமிழ் வீரனது போராட்டம்! போராட்டத்தில் இராணுவ வீரர் முத்து புது தில்லி - இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த 35 வயது கே. முத்து வேலை பார்த்து வருபவர். அவரைக் கொடுமைப்படுத்திய உயர் அதிகாரிகளைக் கண்டித்தும், 5 ஆண்டுகளில் 5 முறை இடமாற்றம் செய்துள்ள அநீதிக்கு எதிராகவும், டெல்லி அஜ்மீரி கேட் பகுதியில் உள்ள 200 அடி செல்பேசி கோபுரத்தில் ஏறி தனது போராட்டத்தை கடந்த 17.8.12 அன்று துவக்கினார் முத்து. அவரை கீழே இறக்க இராணுவம், போலீசு, தீயணைப்பு படையினர் முயற்சி செய்தாலும் அதை நிராகரித்து கடந்த ஐந்து நாட்களாக சாப்பிடாமலும் போராட்டம் நடத்தினார். இதனால் அவரது உடல்நிலை பாதிப…
-
- 0 replies
- 492 views
-
-
இன்று, தனது 373 வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னை மாநகருக்கு இப்பதிவு சமர்ப்பணம்... [size=5]நினைவு கூரல்...[/size] http://youtu.be/vQuK4A7tZIc மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்...மெட்ராஸ்..நல்ல மெட்ராஸ்... மெதுவாப் போறவுக யாருமில்லே... இங்கே சரியா தமிழ் பேச ஆளுமில்லே..! ஆம்பிள்ளைக்கும், பொம்பிள்ளைக்கும் வித்தியாசம் தோணலே..!! இந்தப் பாடல், 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த 'அனுபவி ராஜா அனுபவி' படத்தில், நாகேஷ் 'சென்னை'யின் புகழை பாடுவதாக இருக்கும். "கெட்டும் பட்டணம் சேர்" என்னும் சொலவடை கேள்விபட்டிருப்பீர்கள். கிராமங்களில் படித்துவிட்டு சீக்கிரம் பணம் சேர்கும் ஆசையில் வேலை வாய்ப்பு தேடி சென்னை வருவோரும், தொழிற்கல்வி முடித்த பண்டிதர்களும், சினிம…
-
- 65 replies
- 15.7k views
-
-
இந்தியாவின் அணு ஆயுதம்: சிவசங்கர் மேனனின் கெத்துக்கு ஒரு குத்து! புதுதில்லியில் 21.8.12 அன்று நடந்த அணு ஆயுத ஒழிப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பேசும் போது, “1998-ம் ஆண்டுக்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில நாடுகள் மிரட்டி, அரசியல் ரீதியாக அவர்களுக்கு உடன்படச் செய்ய முயற்சித்தன. ஆனால் இந்திய அரசியல் தலைமை உறுதியுடன் இருந்ததால், அந்த நாடுகளின் நோக்கம் நிறைவேறவில்லை. 1998-ம் ஆண்டு நாம் அணு ஆயுதம் வைத்துள்ள நாடாக பகிரங்கமாக அறிவித்ததும் நமக்கெதிராக வந்து கொண்டிருந்த மறைமுக மிரட்டல்கள் நின்றுவிட்டன. நிச்சயத்தன்மையற்ற, குழப்பம் நிறைந்த உலக அர…
-
- 3 replies
- 2.3k views
-
-
இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட் ராஜ் தாக்கரே! “நான் இந்துமத வெறியைக் கிளப்பவில்லை, மராட்டிய மக்களின், காவல்துறையினரின் மற்றும் பத்திரிகையாளர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறேன்” என்று செவ்வாயன்று (21.8.12) மும்பையில் ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் மற்றும் இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட்டான ராஜ் தாக்கரே கூறியுள்ளார். ஆகஸ்டு 11 ஆம் தேதி மும்பையில் ராஸா அகாதெமி என்ற முசுலீம் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த அனுமதி தந்தது தவறு என்றும், (அந்த ஊர்வலத்தில் 2 பேர் கொல்லப்பட்டும் மற்றும் 44 பேர் படுகாயம் அடைந்தனர்) கலவரத்திற்கு காரணமான கலவரக்காரர்களை அடக்கத் தவறியதற்கு பொறுப்பேற்று மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.…
-
- 1 reply
- 486 views
-
-
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் ரைஸ் இந்தியா அவசர பயணம் 22 ஆகஸ்ட் 2012 அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான ஆலோசகரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவருமாகிய சூசன் ரைஸ் அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று இந்தியா செல்ல உள்ளார். பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்துப் பேசுவதற்காக இந்தியா செல்லும் சூசன் ரைஸ் புது டில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரஞ்சன் மாத்தாய் உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். முக்கியமானதாகக் கடந்த வருடம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா ஜெனிவாவில் கொண்டு வந்தபோது…
-
- 5 replies
- 732 views
-
-
[size=3] [size=4]பிரணாப் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க கோரி, அவரை எதிர்த்து போட்டயிட்ட பி.ஏ.,சங்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். [/size][/size] [size=3] [size=4]ஆதாயம் பெற்றார் : கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் காங்., வேட்பாளராக போட்டியிட்டு அமோக வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து பா.ஜ., மற்றும் அ.தி.மு.க, ஆதரவுடன் போட்டியிட்டவர் பி.ஏ., சங்மா. தேர்தல் நடந்த போது அவர் அரசு பதவியில் ( புள்ளிஇயல் நிறுவன தலைவர் ) இருந்து சில ஆதாயங்கள் பெற்றுள்ளார். எனவே இது சட்ட மீறல் ஆகும் என்று தேர்தல் கமிஷனிடம் மனு அளித்தார். ஆனால் இது ஏற்கப்படவில்லை. இந்நிலையில் சங்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். [/s…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கையின் புகழ் பூத்த பேராசிரியர் கைலாசபதியின் புதல்வி சுமங்களா கைலாசபதி அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள ஆன்ஆபர் நகர சபை உறுப்பினராக தெரிவாகி உள்ளார். ஜனநாயக கட்சியின் வேட் பாளராக போட்டியிட்ட இவர் கடந்த 7 ஆம் திகதி சக வேட்பாளரை வாக்கெடுப்பில் தோற்கடித்தார். சுமிக்கு வயது 45. இவர் கடந்த 19 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றார். ஆன்ஆபரில் கடந்த 19 வருங்களாக வாழ்கின்றார். இவர் பொருளியலிலும், அரசியல் விஞ்ஞானத்திலும் தனித் தனியாக இளமாணி பட்டங்கள் பெற்றவர். அரசியல் விஞ்ஞானத்தில் பட்டப் பின் படிப்புக்கள் படித்தவர். கிழக்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராக 10 வருடங்கள் கடமை ஆற்றி உள்ளார். அங்கீகாரம் பெற்ற கணக்காளராக நிறுவனம் ஒன்றில் கடமை ஆற்றி வருகின்ற…
-
- 0 replies
- 639 views
-
-
சிரிய அரசுப் படைகள் சிரிய அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அது இரசாயன ஆயுதங்களை கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக பாவித்த ஆதாரம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா... சிரியா மீது அமெரிக்கா இராணுவ ரீதியில் தலையீடு செய்ய இது வழிவகுக்கும் என்று நேற்று எச்சரித்திருந்தார். இன்று இது தொடர்பில்.. சிரிய அரசிற்கு ஆயுதமும் இராணுவ ஆலோசனையும் வழங்கும் ரஷ்சியா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒருதலைப்பட்சமான அமெரிக்க இராணுவத் தலையீட்டை நிராகரித்துள்ள அதேவேளை குண்டுகள் மூலம் சனநாயகத்தை நிறவுவதாகச் சொல்லிக் கொண்டு அமெரிக்காவும் அதன் சார்பு மேற்கு நாடுகளும் ஒரு தலைப்பட்சமாக மற்றைய நாடுகளை தாக்குவதை ஏற்றுக் கொள்ள முடிய…
-
- 6 replies
- 607 views
-
-
[size=4]எதியோப்பியாவின் பிரதமர் மெலஸ் ஸெனவி தனது 57ஆவது வயதில் காலமாகியுள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் கடந்த ஒருவார காலமாக கடும் சுகவீனமடைந்திருந்த நிலையிலேயே காலமானார். கடந்த ஜுலை மாதம் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது தேக ஆரோக்கியம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. கடந்த மாதம் அடிஸ் அபாபாவில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றியத்தின் உச்சி மாநாட்டிற்கு சமுகமளிக்கத் தவறியபோது இவரது தேக ஆரோக்கியம் குறித்து பல ஊகங்கள் எழுந்திருந்தன. 1991ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தலைவர் மெங்ஸ்ட்டு ஹெய்லி மரியம் என்பவரை பதவி விலக்கிய பின்னர் மெலஸ் ஸெனவி பதவிக்கு வந்தார்.[/size] [size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-0…
-
- 0 replies
- 487 views
-
-
இந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால், மற்ற நாடுகளில் இருந்து, நமக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்தல்கள் வருவது, தடுக்கப்பட்டுள்ளது, என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறினார். டில்லியில் நடந்த தேசிய அணு ஆயுத குறைப்பு தொடர்பான மாநாட்டில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பேசியதாவது: முன்பெல்லாம், உலகில் வல்லரசாக உள்ள சில நாடுகள், நமக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், அச்சுறுத்தல்களை விடுத்தன. நம்மை மிரட்ட முயற்சித்தன. தைரியமான தலைவர்கள் இருந்ததால், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. கடந்த 1998ல், இந்தியா, அணு ஆயுத நாடாக அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து, வல்லரசுகளிடம் இருந்து, நமக்கு மிரட்டல் வருவது நின்று போனது. அணு ஆயுதங்கள், நாட்டின் பாதுகாப…
-
- 9 replies
- 796 views
-
-
மாருதி சிறைச்சா(ஆ)லை திறப்பு! புது டில்லி - ஒரு மாதமாக மூடியிருந்த மாருதி நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலை இன்று (ஆகஸ்டு 21, 2012) திறக்கப்பட உள்ளது. “2,500 தொழிலாளர்கள் பணி புரிந்த தொழிற்சாலையில் இப்போது 300 தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு வருவார்கள் என்றும் ஒரு ஷிப்ட் மட்டும் உற்பத்தி நடக்கும்” என்றும் நிறுவனம் சொல்லியுள்ளது. ஏற்கனவே 500 தொழிலாளிகள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். தொழிற்சாலைக்கு பாதுகாப்பாக போலீஸ் படையினரையும் தனியார் குண்டர் படையினரையும் ஏற்பாடு செய்துள்ளது நிர்வாகம். முன்னாள் தேசிய பாதுகாப்பு படையினரையும், டில்லியை சேர்ந்த பெரிய மனிதர்களுக்கான பாதுகாப்பு அளிப்பதில் புகழ் பெற்ற ஹோலிஸ்டிக் செக்யூரிட்டி நிறுவனத்தின் 50 ஆயுதம் தாங்கிய காவலர்…
-
- 0 replies
- 856 views
-
-
[size=3][/size] [size=3][size=4]சிரியாவின் யுத்த களத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஜப்பானிய பெண் ஊடகவியலாளர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா,[/size][/size] [size=3][size=4]சிரிய அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்களை ஊக்குவித்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சுலைமான் அல் ஹலாபி மாவட்டத்தின் அலிப்போ எனும் நகரில் கிளர்ச்சியாளர்களுக்கும், சிரிய இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அகப்பட்டுக்கொண்ட ஜப்பானிய நிருபர் கொல்லப்பட்டார். அவருடன் சென்றிருந்த மூன்று நிருபர்கள் காணாமல் போனார்கள். கொல்லப்பட்டவர் 45 வயதான மிகா யமமொடோ என…
-
- 3 replies
- 709 views
-
-
“விலைவாசி உயர்வு மகிழ்ச்சி” – மத்திய அமைச்சர் அறிவும் எதிர்ப்பவர்களின் அறமும்! இன்றைய நாளிதழ்கள் அனைத்திலும் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது. மத்திய அரசில் உருக்குத் துறை அமைச்சராக இருக்கும் பெனிபிரசாத் வர்மா விழா ஒன்றில் பேசும் போது, ” பருப்பு, ஆட்டா, அரிசி மற்றும் காய்கறி விலைகள் அதிகரித்து வருகின்றன. விலையேற்றத்தால் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைத்து வருகிறது. எனவே இந்த விலை உயர்வால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். ‘பொருளாதார மேதை’ மன்மோகன் சிங்கின் அமைச்சர் ஒருவரது பொது அறிவு உண்மையில் யாரையும் மெய்சிலிர்க்க வைக்கும். டீசல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, உரங்கள் – பூச்சி கொல்லிகள் விலை உயர்வு, கொள்முதல் விலையை உயர்த்தாத அரசு என்று எல்லா …
-
- 1 reply
- 474 views
-
-
[size=1][/size] [size=1][size=4]அரசியல் வட்டாரத்தில் இப்போது அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தை அவதூறு! பொது வாழ்க்கையில் இருக்கும் நபர்கள் குறித்தோ அல்லது உங்கள் நண்பர்கள், உறவினர்கள் குறித்தோ டீக்கடைகளில் உட்கார்ந்து கொண்டு ’வல்கர்’ வார்த்தைகளில் பேசினால், அது காற்றோடு கலந்து கலைந்துவிடும்! ஆனால், அதையே பொதுக்கூட்டத்திலோ அல்லது பத்திரிகைகளிலோ வெளிப்படுத்தினால் அதற்கு உமக்குப் பரிசு அவதூறு வழக்கு! அவர் இவர் மேல் அவதூறு சொல்வதும், இவர் அவர் மேல் அவதூறு சொல்வதும்.... இருவர் மேலும் எதுவுமே சொல்லமுடியாமல் இருப்பதும்தான் இன்றைய அரசியல். செய்தித் தாளைத் திறந்தால் இன்று யார் மேல் அவதூறு வழக்கு என்று கண்கள் துருதுருவென தேடுகின்றன. விஜயகாந்த், ஸ்டாலின், …
-
- 0 replies
- 451 views
-
-
காலில் விழும்போது மார்பை ஏன் பிளக்க வேண்டும்? ஜெயா காலடியில் செங்க்ஸ் ஜெயாவின் 91-96ஆம் ஆண்டு ஆட்சியின்போது போக்குவரத்துத் துறையில் பெரும் கோடிகளைச் சுருட்டிய செங்கோட்டையன் தற்போதைய மூன்றாவது ஆட்சியில் அமைச்சராக இருந்து சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ’அம்மா’ யாரை நீக்குவார், சேர்ப்பார் என்பது அவரது அடிமைகளுக்கே இன்னும், இனியும் பிடிபடாத விசயம். செங்கோட்டையன் விசயத்தில் அவரது சின்ன வீடும், அந்தச் சின்ன வீட்டின் சொத்துச் சேர்ப்பும் ஜெ வை ஆத்திரமூட்டி நீக்கச் செய்திருப்பதாக எல்லா ஊடகங்களும் பகிரங்கமாகவே எழுதுகின்றன. பதவி நீக்கத்திற்குப் பின் கோபிச்செட்டிபாளையம் கம்பன் விழாவில் செங்கோட்டையன் பேசும்போது சீதையிடம் தான்…
-
- 0 replies
- 693 views
-