Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிறீலங்கா அரசாங்கம் தமக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரபல பாப் இசை பாடகி எம்.ஐ.ஏ எனப்படும் மாயா அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார். கடந்த எட்டு மாதங்களாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் தங்கியிருந்த எம்.ஐ.ஏ, லண்டனுக்கு செல்ல முற்பட்ட போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த கால யுத்த நிலைமை குறித்து தாம் விமர்சனப் பாங்கான கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://meenakam.com/?p=12601

    • 0 replies
    • 562 views
  2. புதுடெல்லி: டெல்லியில் 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியான தேவிந்தர் பால் சிங் புல்லரை தூக்கிலிட மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த புல்லரின் தூக்குத்தண்டனையை எதிர்த்து அவரது மனைவி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரியும், அவரது மருத்துவ அறிக்கையை வழங்கக் கோரியும் கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புல்லருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தடைவிதித்து கடந்த ஜனவரி 31 ஆம் தேதியன்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இம்மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, புல்லரின் மனைவி அளித்துள்ள கருணை மனு பரிசீலனையில் உள்ளதாகவும், டெ…

  3. உக்ரைனுக்கு... அதிக தற்காப்பு இராணுவ உதவியை, வழங்குகிறது பிரித்தானியா உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை பிரித்தானியா வழங்கும் என உக்ரேனிய பிரதமருடன் தொலைபேசி அழைப்பில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளார். அதன்படி பாதுகாப்பு வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் டாங்கிகளை அளிக்கும் ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த வாரம் கியூவ்வில் உள்ள தனது தூதரகத்தை பிரித்தானியா மீண்டும் திறக்கும் என்றும் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். மேலும் இதன்போது உக்ரேனிய இராணுவ வீரர்கள் பிரித்தானியாவில் பெறும் பயிற்சிக்காக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஜோன்சனுக்கு நன்றி தெரிவித்தார். https://athavannews.com/2022/1278199

  4. பசுபிக் தெற்குக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பசுபிக் கடலின் தெற்குப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூகலிடோனியா தீவின் டைடனில் இன்று மாலை இலங்கை நேரப்படி 3.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 6.6 ஆகப் பதிவாகியுள்ளது. டடைனுக்கு 324 கிலோமீற்றர் தொலைவில் சுமார் 89 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் காணப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான மேலதிக சேத விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்று பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. …

  5. பிரெக்ஸிட் விவகாரம் தொடர் பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே தோல்வியடைந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள பிரிட்டன் அந்த கூட்டமைப்பில் இருந்து வரும் 2019 மார்ச் 29-ம் தேதி வெளியேற உள்ளது. பிரெக்ஸிட் என்றழைக்கப்படும் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை யில் 18 மாத இழுபறிக்குப் பிறகு அண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் பிரிட்டனில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்களில் ஒருவரான டொம்னிக் கிரீவ் நாடாளுமன்ற மக்களவையில் அண்…

  6. ஆதிமனிதன் இறந்தது எவ்வாறு? பொதுவாக மனிதர்கள் தான் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொன் றார்கள் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த குரங்கு மனிதன், பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப் பட்டான் என்பதை நிரூபித்துள்ளார் லீருபர்ஜர் என்ற ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர். டவுங் குழந்தை, எனப்படும் மனித மூதாதையரின் தொல் படிவுகள் 1924ல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த மனிதன் எவ்வாறு இறந்திருப்பான் என்ற விவாதம் நடை பெற்றுவந்தது. ஒரு புலியோ, ஈட்டி போன்ற கூர்மையான பற்களை உடைய பூனை போன்ற விலங்கோ தான் ஆதிமனிதனைக் கொன்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் யூகித்து வந்தனர். ஆனால், ஆதிமனிதனை புலி அடித்துக் கொல்லவில்லை. ஒரு ப…

  7. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஜெருசலேத்தில் 'டிரம்ப்' பெயரில் புதிய ரயில் நிலையம் படத்தின் காப்புரிமைEPA பழைய ஜெருசலேம் நகரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையை தோண்டி, யூதர்களுக்கான புகழ்பெற்ற ஆலயத்துக்கு அருகில் அமையவுள்ள ரயில் நிலையத்துக்கு அ…

  8. கைதான நிலையில் கியென் (கோப்புப் படம்) கோடிக்கணக்கான டாலர்கள் மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, வியட்நாமின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரும், ஆடம்பரம் மிக்க தொழிலதிபர்களில் ஒருவருமான ங்யுயென் டுக் கியெனுக்கு (Nguyen Duc Kien) முப்பது ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹனோய் நகரின் தலைசிறந்த கால்பந்தாட்ட அணியின் உரிமையாளராக இருக்கின்ற கியென் வரி ஏய்ப்பு செய்ததாகவும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் குற்றங்காணப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு கியென் கைதுசெய்யப்பட்டபோது அவர் ஆரம்பித்திருந்த ஏசியா கமர்ஷியல் பேங்க் என்ற பெரிய வங்கியின் பங்கு விலைகள் சரிவைக் கண்டிருந்தன. முன்பு இவர் வியட்நாம் பிரதமர் ங்யுயென் டன் ஸுங்க்கு (Nguyen Tan Dung) நெருக்கமாக இருந்தவர்…

    • 0 replies
    • 410 views
  9. ஜப்பானில் இதெல்லாம் உண்மையாகவே நடக்கிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஜப்பானைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு நன்றாகத் தெரியும்? ஜப்பானில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஒரே சம்பளமா? கடந்த வருடம் ஜப்பான் முழுவதும் ரயில்களின் தாமத காலம் வெறும் 6 நொடிகள் மட்டும் தானா? படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த கேள்விகளுக்கு அரபு நாட்டு வலைத்தளங்களில் ''…

  10. மாண்புமிகு மனிதர் விமானப்படை விமானியாக வேண்டும் என்பது அவரது கனவு; மகன் கலெக்டராக வேண்டும் என்பது தந்தையின் கனவு; ஆனால், இறைவனின் எண்ணம் வேறாக இருந்தது. இவன் நல்லவன்; அறிவுத்திறன் நிறைந்த வல்லவன்! என்றுணர்ந்த வல்லான் இறைவன், அந்த மனிதரை ராக்கெட் பொறிஞராக அருள்புரிந்தான். இதோ, அந்த மாண்புமிகு மனிதர் _ இந்தியத் தலைக்குடிமகனாகி, இந்திய இளைய தலைமுறை இதயங்களில் க்ரியா ஊக்கியாக நிறைந்து கிடக்கிறார். இளைய தலைமுறையே... கனவு காணுங்கள் என்று மேடைக்கு மேடை முழங்கும் அப்துல்கலாம், சிறுவயதில் மிகப் பெரும் கனவு ரசிகன். பறவைகளைப் பார்க்கும்போது, தன்னால் அப்படிப் பறக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் சிறகுகளற்ற தோள்பட்டை வெறுமையைத் தொட்டுப்பார்த்துக் கொள்வான். சிறகுகள் இல்லாவிட்…

    • 5 replies
    • 2.4k views
  11. பெங்களூரு: பெங்களூருவில் ஒன்றாம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமி 2 பேரால் பள்ளியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவின் கிழக்குப்பகுதியில் விப்கியார் என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் நிஷா ( பெயர் மாற்றம்) என்ற சிறுமியை அப்பள்ளியில் பணிபுரியும் உடற் பயிற்சியாளரும், காவலாளியும் சேர்ந்து பள்ளியின் மறைவான இடத்திற்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளியில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அச்சிறுமி கழிப்பறைக்கு சென்றபோதே அவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர். கடந்த ஜுலை 2 ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரிவிக்…

  12. இந்தியா வந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா? கொந்தளிக்கும் விமர்சகர்கள் குடும்பத்துடன் இந்தியா வந்த கனடா பிரதமர் இந்தியப் பிரதமரால் வரவேற்கப்படாமல் விவசாயத்துறை அமைச்சர் ஒருவரால் வரவேற்கப்பட்டதற்கு பலத்த விமர்சனம் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் UAE இளவரசர் ஆகியோர் இந்தியா வந்தபோது மட்டும் மணிக்கணக்கில் அவர்களுக்காக காத்திருந்த பிரதமர் கனடா பிரதமரை வரவேற்க மட்டும் ஏன் வரவில்லை என்னும் கேள்வி எழுந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்காக கனடா பிரதமர் வந்துள்ள நிலையில் இந்தியப் பிரதமர் அவரை வரவேற்கச் செல்லாததற்கு வேறு சில முரண்ப…

    • 21 replies
    • 2.3k views
  13. இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கு: பங்கேற்க அழைக்கப்படாத நாடுகள் எவை தெரியுமா? இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சில நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இங்கிலாந்தின் முன்னாள் அரசத் தலைவரும், கொமன்வெல்த் நாடுகளின் தலைவருமான இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96வது வயதில் செப்டம்பர் 8 ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பல்மோரல் கோட்டையின் கோடைகால இல்லத்தில் காலமானார். அவரது உடல் செப்டம்பர் 19ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப…

  14. இந்தியா: போரை நிறுத்துக; இலங்கை ஏற்க மறுப்பு. ____________________________________________________ இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் வன் முறைகளுக்கும் போருக் கும் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு உடனடி யாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தி யாவும் அனைத்துலக சமூகமும் இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால் இலங்கை அரசோ மறுப்புத் தெரிவித்து வருகிறது. திருகோணமலையை மீண் டும் தங்கள் கட்டுப் பாட் டுக்கொண்டு வரும்வரை தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கப் போவதாக அது தெரி வித்துள்ளது. இந்தியாவும் அமெரிக் காவும் இணைந்து இலங்கை அரசிடம் நேரடியாகவும் மறைமுக மாகவும் பேச்சு வார்த்தை நடத்தி விட்டன. இலங்கையில் நடை பெற்று வரும் ரத்…

  15. மூன்று நாள் அரசு முறைப் பயணமாக, சீன பிரதமர் வென் ஜியாபோ நேற்று டில்லி வந்தார். பாலம் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, மத்திய தொழில்துறை இணையமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் வெளியுறவு செயலர் நிருபமா ராவ் ஆகியோர் வரவேற்றனர். ஜியாபோவின் இந்தப் பயணத்தின் போது, 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த நவம்பரில் இந்திய பயணம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து, இம்மாதத் துவக்கத்தில் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி வந்தார். தற்போது சீன பிரதமர் வென் ஜியாபோ வருகை தந்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தவர்களுக்கு சீனா தனி விசா வழங்குவது, எல்லைப் பிரச்னை, வர்த்தக சமச்சீரற்ற தன்மை ஆகிய பிரச்னைகளுக்கிடையே ஜியா…

    • 0 replies
    • 456 views
  16. பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வா வெற்றி By T. Saranya 31 Oct, 2022 | 10:29 AM பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவை முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தோற்கடித்துள்ளார். கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், 2 ஆவது சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவும், முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவும் இத்தேர்தலில் போட்டியிட்டனர். லூலா டா சில்வா …

  17. காங்கிரஸ் போட்டியிட பாதுகாப்பான 70 தொகுதிகளின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு பேரம் பேசத் தயாராகிக் கொண்டிருக்கிறார் சோனியா காந்தி. ‘70 தொகுதி ஃபார்முலா’வை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி இறுதி செய்யப்படும் என்பதால் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அதிர்ச்சி அடைந்துள்ளன. டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாட்டில், தமிழகத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சோனியா விரிவான ஆலோசனை நடத் தியுள்ளார். ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உட்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் ‘தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம்’ என்ற நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், ‘நாம் யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம். அதற்கு ம…

  18. பாராளுமன்றத்தில் திருவள்ளுவர் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்! உத்தரகாண்ட் எம்.பி. வேண்டுகோள்! மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ்வரும் அலுவலக மொழி மீதான உயர்மட்ட பாராளுமன்ற குழுவின் முதல் கூட்டம் 09.09.2014 திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்றது. மொத்தம் 30 பேர் கொண்ட இக்குழுவில் மக்களவையில் இருந்து 20 பேரும் மாநிலங்களவையில் இருந்து 10 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் தலைவராக உள்ளார். முதலாவது கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குழுவின் தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். இக்குழுவில் இடம் பெற்றுள்ள உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் பேசுகையில், "அலுவல் மொழியாக நாம் …

  19. இலங்கை அரசை இந்திய அரசு கடுமையாக எச்சரிக்காததே இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் அவலநிலை தொடர்வதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் பாண்டியனை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்ற சூடு தணிவதற்குள் மீண்டுமொரு தாக்குதலை இலங்கை கடற்படை நடத்தியுள்ளது. இது மிகுந்த மன வேதனையளிப்பதோடு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தையும் எற்படுத்தியுள்ளது. 22.1.2011 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், புஷ்பவனம் கிராமம், மீனவர் காலனியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்களான ஜெயக்குமார், ராஜேந்திரன் மற்றும் செந்தில் ஆகிய மீனவர்கள் கடலுக்க…

    • 0 replies
    • 470 views
  20. ஆப்கானில் இளவரசர் ஹரி 25 பேரைக் கொன்றதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல்! இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் அப்பாச்சி ஹெலிகொப்டர் விமானியாக இருந்த காலத்தில் 25 பேரைக் கொன்றதை ஒப்புக்கொண்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் வெளியிடப்படவிருக்கும் ‘ஸ்பேர்’ என்ற அவரது சுயசரிதையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2007-2008 வரையிலான வான்வழித் தாக்குதல்களில் முதலில் ஆப்கானிஸ்தானில் முன்னோக்கி விமானக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய அவர், 2012-2013ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாக்குதல் ஹெலிகொப்டரை ஓட்டினார். 38 வயதான அவர் விமானியாக ஆறு பயணங்களை மேற்கொண்டார், அது மனித உயிர்களை எடுக்க வழிவகுத்தது என்று டெய்லி டெல…

  21. ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்,ரூ.1.10கோடி விலை கொண்ட ஜி-55ஏஎம்ஜி மாடல் எஸ்யூவீ காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ் பென்சின் சொகுசு கார்கள் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மெர்சிடிஸ் கார்களுக்கு இந்திய சந்தையில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஐரோப்பிய சந்தையில் கலக்கிய பல மாடல்களை மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. மெர்சிடிஸ் நிறுவனம் ஏற்கனவே சி-கிளால்,இ-கிளாஸ்,எஸ்-கிளாஸ்,எம்-கிளாஸ் சொகுசு கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வரிசையில் தனது ஜி-55ஏஎம்ஜி மாடல் எஸ்யூவீ காரை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள…

  22. ஆங்கிலேயர் பார்த்த தமிழர்கள் தமிழர்களே அல்ல !! அப்பொழுது தெலுங்கரும், மலையாளியும், மராத்தியனும் தான் அப்பொழுது தமிழர்களாக அவர்கள் கண்ணில்.தென்பட்டான்.. ஏன்னெனில் தமிழர்கள் அப்பொழுது#கூலித்தொழிலாளர்களாகவும்,#அடிமைகளாகவும் தான் அப்பொழுது இருந்தான். கடலியல் #ஆய்வறிஞர் ஒரிசா பாலு அவர்கள் தமிழர்களின் கடல்சார்தொன்மை தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து செய்து வருபவர். தமிழர்கள் கடல் சார் மரபு மற்றும் சுற்று சூழலை காக்க வேண்டு என்பதில் உறுதியாக இருந்து தமிழகம் முழுவதும் காணொளி காட்சிகள் நடத்தி வருபவர். முகநூல் மூலமாகவும் விழிப்புணர்வு செய்து வருகிறார். இவரிடம் நாம் அறிந்து கொள்ளவேண்டிய செய்திகள் அதிகம் இருக்கின்றன . ஆர்வமுள்ள இளைஞர்கள் இவரை பின்தொடரவேண்டும். நன்றி : அண்ணன் சீமான் …

  23. பிரதமர் மே-ஐ நிராகரிக்கின்றனர் பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான, தற்போதைய ஐ.இராச்சிய அரசாங்கத்தினதும் அதன் பிரதமரதும் திட்டங்களை, பெரும்பாலான பிரித்தானிய மக்கள் நிராகரிக்கின்றனர் என, கருத்துக்கணிப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது. சண்டே டைம்ஸ் பத்திரிகை சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பே, பிரதமர் தெரேசா மே மீது, அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள திருப்தியின்மையை வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, அடுத்தாண்டு மே 29ஆம் திகதி, ஐ.இராச்சியம் வெளியேற வேண்டியுள்ள நிலையில், அதற்கான பேரம்பேசல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், இத…

  24. இங்கிலாந்து இளவரசர் திருமணத்திற்கு ஆடம்பர செலவு செய்து வீணப்படிதாக குற்றச்சாட்டு! இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கு ஆடம்பர செலவு செய்து வீணடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் கதே மிடில்டன் ஆகியோரது திருமணம் ஏப்ரல் 29ம் தேதி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி) லண்டனில் உள்ள பாரம்பரிய வெஸ்ட்மின்ஸ்டர் அபே எனும் தேவாலயத்தில் விமரிசையாக நடக்கிறது. திருமணத்தன்று லண்டனில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் "டிவி' மற்றும் இணையதளத்திலும் ஒளிபரப்பப்படுகிறது. இந்த திருமணத்தை படம் பிடிக்க சர்வதேச ஊடங்கள் அங்கு குவிந்துள்ளன. திருமணத்தையொட்டி மாநகரமே விழா கோலமாக காணப்படுகிறது. இந்த திருமணத்தில் கலந்து கொ…

    • 4 replies
    • 1.2k views
  25. நேபாளத்தில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் மதமாற்றம் குறித்த தேவையில்லாதக் கருத்துக்களைக் கூறியதற்காக காட்மாண்டுவிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை நேபாள அரசு எச்சரித்துள்ளது. மதம் மாறுவதற்கு சுதந்திரம் வேண்டும் என்று பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்திருந்ததற்கே இந்தக் கண்டனம் வந்துள்ளது. இப்படியான கருத்துக்கள் நாட்டின் சமூகத் ஸ்திரத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் என்று நேபாள அரசு கூறுகிறது. நேபாளத்தில் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் சாசனத்தில், மதம் மாறுவதற்கான உரிமை உள்வாங்கப்பட வேண்டும் என்று நேபாளத்துக்கான பிரிட்டிஷ் தூதர் அண்மையில் ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். அதற்கு நேபாளிய அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் அக்கட்டுரையில் கோரியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.