உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் - நால்வர் பலி Published By: RAJEEBAN 16 JAN, 2024 | 12:49 PM ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தினை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்திலுள்ள இஸ்ரேலின் இரகசியபுலனாய்வு பிரிவின் தலைமையகத்தை இலக்கு வைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரை இதனை உறுதி செய்ய முடியவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது. எனினும் குறிப்பிட்ட பகுதியில் வெடிப்பு சத்தங்களை கேட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெ…
-
-
- 61 replies
- 4.3k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 27 JAN, 2024 | 08:31 AM ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவான்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது என கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலின் எண்ணெய் தாங்கியொன்று தாக்கப்பட்டுள்ளதால் கப்பல் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணை எண்ணெய் கப்பலை தாக்கியுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் கடற்படை கப்பலொன்று உதவிக்கு விரைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். காயங்…
-
- 1 reply
- 574 views
- 1 follower
-
-
24 JAN, 2024 | 07:40 PM உலக சுகாதார அமைப்பு (WHO) வரையறுத்துள்ளபடி, 'சட்டவிரோத சிகரெட் வர்த்தகம்' என்பது சிகரெட்டுகளின் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, உடைமை, விநியோகம், விற்பனை, கொள்முதல் மற்றும் எளிதாக்குதல் போன்ற சட்டவிரோத முயற்சிகளை குறிக்கிறது. சட்டவிரோத வர்த்தகம் மூன்று தயாரிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. கடத்தல் (smuggled), போலித் தயாரிப்புகள் (counterfeits) மற்றும் மலிவான / சட்டவிரோத சிகரட்டுக்கள் (வெள்ளை சிகரட்டுகள் cheap / elicits white) போன்றவையாகும். புதிய ஆதாரங்களுடன், புகையிலை நிறுவனங்கள் சிகரெட் கடத்தலில் சிக்கலாக ஈடுபட்டுள்ளன என்பதும் இது உலக அளவில் புகையிலை நிறுவனங்களால் பின்பற்றப்படும் ஒரு விரிவான உத்தி (தந்திரோபாயம்) என்பதும்…
-
- 1 reply
- 377 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ALABAMA DEPARTMENT OF CORRECTIONS படக்குறிப்பு, 1988இல் செய்த கொலைக்காக மரணதண்டனையை எதிர்கொள்கிறார் ஸ்மித் கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன் பதவி, பிபிசி நியூஸ் 24 ஜனவரி 2024, 04:45 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் மரணதண்டனை முறைகளின் கிராஃபிக் விளக்கங்கள் உள்ளன, இது சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அமெரிக்காவின் அலபாமா சிறையில் தனது இறுதி நாட்களைக் கழித்து வருகிறார் கென்னத் யூஜின் ஸ்மித், நைட்ரஜன் வாயு மூலம் மரணம் அடையப் போகும் அமெரிக்காவின் முதல் மரணதண்டனைக் கைதி. இதுவரை பரிசோதனை செய்ய…
-
-
- 17 replies
- 1.4k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்சிஸ் மாவோ பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வடகொரியா குறித்து ஆய்வு செய்யும் பகுப்பாய்வர்களும், அதனை கூர்ந்து கவனித்து வரும் நிபுணர்களும் இயல்பாகவே, பதற்றத்தை உருவாக்கும் கருத்துகளை எளிதில் கூறாதவர்கள். ஆனால் அண்மையில், அவர்களில் இரண்டு பேர் வழக்கத்துக்கு மாறாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளனர். வட கொரிய நாட்டின் தலைவர் போருக்குத் தயாராகி வருகிறார் என்று தாங்கள் நம்புவதாக ஒரு குண்டு வீசியுள்ளனர். கிம் ஜாங்-உன் தென் கொரியாவுடன் இணங்குவது, மீண்டும் இணைவது என்ற வட கொரியாவின் அடிப்பட…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி உள்ளன. அந்நாட்டு அதிபராக ஜோ பைடன் செயல்பட்டு வருகிறார். அவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார். இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஈடுபட்டு வருகின்றன. அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கவும் அந்நாட்டில் தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, அந்நாட்டில் உள்ள மாகாணங்களில் தங்கள் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க தனித்தனியே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நியூ ஹம்ப்ஷர் …
-
-
- 7 replies
- 797 views
- 1 follower
-
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம் 2012 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புடின். இவரது ஆண்டு வருமானம் 1.4 இலட்சம் டொலர் என்றும் 800 சதுர அடியில் வீடு, 3 மகிழுந்துகள் மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும் முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புடினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. விளாடிமிர் புடினின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவலின் அடிப்படையில், அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலர் என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், கருங்கடலை ஒட்டி அவருக்கு 1.9 இலட்சம் சதுர அடியில் மிகப் பெரிய மாளிகை உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் குறித்த மாளிகையை ப…
-
-
- 40 replies
- 3.7k views
-
-
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தங்க சுரங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. அந்த நாட்டில் தென்மேற்கில் கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். திடீரென தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து சிக்கி கொண்டனர். உடனே மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தேசிய புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
சீன ஆய்வுக் கப்பலுக்கு மாலைதீவு பச்சைக் கொடி! இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் உருவாகியுள்ள நிலையில், சீன ஆய்வுக் கப்பலை தமது துறைமுகத்தில் நிறுத்துவதற்கு மாலைத்தீவு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை உலகரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவத்தை திரும்பப் பெறுமாறு இந்தியாவிற்கு மாலைதீவு அரசாங்கம் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் சீனாவிற்கு சொந்தமான சியாங் யாங் ஹோங் 3 என்ற சீன கப்பலை மாலத்தீவில் நிறுத்த சீன அரசாங்கம் அனுமதி கோரியிருந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் சீன ஆய்வுக் கப்பல் மாலத்தீவு கடற்பகுதியில் எ…
-
- 2 replies
- 653 views
-
-
உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த ரஸ்ஸிய விமானம் விபத்திற்குள்ளானது சுமார் 65 உக்ரேனிய போர்க் கைதிகளை, கைதிகள் பரிமாற்றத்திற்காக பொல்க்ரொட் நகருக்கு அழைத்துவரும் வேளையில் ரஸ்ஸிய இராணுவ விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது. விமானம் விபத்திற்குள்ளானபோது 75 பேர் விமானத்தினுள் இருந்திருக்கிறார்கள். இன்னும் 80 உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த இரண்டாவது விமானம், திருப்பியனுப்பபட்டிருக்கிறது. வீழ்ந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த விமானத்தை எஸ் 300 ரக ஏவுகணைகளை எடுத்துவர ரஸ்ஸியா பாவித்டதாக உக்ரேன் தரப்புச் செய்திகள் கூறுகின்றன. Live updates: Russian military plane crashes near Ukraine border (cnn.com)
-
-
- 13 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பனிப்புயல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப்பணிகள் முன்னெடுப்பு இந்நிலையில், அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயலில் சிக்கி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. https://tamilwin.com/article/death-toll-from-cold-storm-in-us-reaches-1705846071 இந்த ரென்னிசி மாநிலத்திலேயே சகோதரி @nilmini வசிக்கிறா.
-
-
- 2 replies
- 619 views
- 2 followers
-
-
படக்குறிப்பு, அணு ஆயுதங்கள் மற்றும் பல்வேறு காரணிகளால் உலகம் அழிவின் விளிம்புக்குச் செல்லும் என்பதை அடையாளமாகக் காட்டும் எச்சரிக்கைக் கடிகாரமாக டூம்ஸ்டே கடிகாரம் அமைந்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜேன் கார்பின் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் டூம்ஸ்டே கடிகாரம்: அணுசக்தி அழிவுக்கு உலகம் இன்னும் எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் காட்டும் ஓர் அடையாளமாக இது உள்ளது. இந்தக் கடிகாரம் நள்ளிரவை நெருங்க இன்னும் தற்போது 90 விநாடிகள் மட்டுமே தேவை. விஞ்ஞானிகள் அந்தக் கடிகாரத்தின் முட்களை "டூம்ஸ்டே"க்கு (அழிவு ஏற்படும் நாள்) மிக அருகில் நகர்த்தியிருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளனர். ஆன…
-
- 0 replies
- 456 views
- 1 follower
-
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்! ”ஈரான் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானைக் குறிவைத்து பாலோசிஸ்தான் பகுதியில் ஈரான் அரசு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ள நிலையிலேயே பாகிஸ்தான் அரசு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஈரான் எமது மீது மேற்கொண்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது எங்கள் வான்வெளியில் நடத்தப்பட்ட அத்துமீறல். இத் தாக்குதலினால் அப்பாவிக் குழந்தைகள் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் சிறுமிகள் சிலரும் காயமடைந்துள்ளனர். இத…
-
-
- 32 replies
- 3.1k views
-
-
Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 04:59 PM ஆபிரிக்க நாடான கமரூனில் மலேரியாவுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்களன்று கமரூனின் தலைநகாரான யவுண்டே அருகே உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா என்ற பெண் குழந்தைக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 600,000 பேர் மலேரியாவால் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 80 சதவீதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கமரூன் அரசாங்கம், ஆறு மாதங்கள் நிறைவடைந்த அனைத்து குழந்தைகளுக்கும் RTS,S தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது. மலேரியா நோயால் பாதிக்க…
-
- 0 replies
- 397 views
- 1 follower
-
-
22 JAN, 2024 | 03:02 PM ஜேர்மனியில் பிரஜாவுரிமையைப் பெறுவதற்கான விதிகளை தளர்த்தும் புதிய சட்டத்திருத்தங்கள் அந்நாட்டுப் பாராளுமன்றத்தினால் கடந்தவாரம் அங்கீகரிக்கப்பட்டன. புதிய சட்டத்திருத்தத்தின்படி, ஜேர்மனியில் சட்டபூர்வமாக 5 வருடங்கள் வசிப்போர் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இதுவரை 8 வருடங்களின் பின்னரே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியுமாக இருந்தது. அதேவேளை, விசேட ஒருங்கிணைப்பு அடைவுமட்டங்களை பூர்த்தி செய்வோர் இதுவரை 6 வருடங்களில் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர். இக்காலவரம்பு தற்போது 3 வருடங்களாக குறைக்கப்பட்டுள…
-
-
- 11 replies
- 928 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லெனின் மூளையை அவரது மரணத்திற்குப் பிறகு பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அகற்றினர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு மேதை பிறக்கிறாரா அல்லது உருவாக்கப்படுகிறாரா? இந்த மர்மம் பல நூற்றாண்டுகளாக தத்துவவாதிகளையும் விஞ்ஞானிகளையும் கவர்ந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியத்தில் இருந்து இந்த மர்மத்தை அவிழ்க்க ஆய்வாளர்கள் முயன்றனர். சோவியத் ஒன்றியத்தின் நிறுவனரான லெனின் என்று அழைக்கப்படும் விளாடிமிர் இலிச் உல்யனோவின் மரணம் வாயிலாக ஆய்வாளர்கள் அக்கேள்விக்கு விடை தேட மு…
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஜாவோடோங் நகரில் உள்ள லியாங்சுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான வீடுகள் மண்ணில் புதைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. புதைந்த வீடுகளில் சிக்கியிருந்த 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், 18 குடும்பங்களைச் சேர்ந்த 47க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் 200 மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரி…
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் லோவென் ஜெருசலேமிலிருந்து மற்றும் சான் செடோன் பதவி, பிபிசி 21 ஜனவரி 2024 பாலத்தீன தனி நாட்டை உருவாக்கும் யோசனையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் நிராகரித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசிய சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனி பாலத்தீன நாட்டை உருவாக்கும் யோசனையை பெஞ்சமின் ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுட்டிக்காட்டியிருந்தார். நெதன்யாகுவின் இக்கருத்துகள் அமெரிக்காவுடனான பிளவை ஆழப்படுத்துவதாகத் தோன்றுகிறது. பாலத்தீன பிரச்னையில் இரு ந…
-
- 0 replies
- 447 views
- 1 follower
-
-
காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் மீதான காசா யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை பதினாறு மயானங்களை இஸ்ரேலிய இராணுவ அழித்து நாசம் செய்திருப்பதாகத் தெரியந்திருக்கிறது. இவ்வாறு அழிக்கப்பட்டுள்ள மயானங்களின் நினைவுக் கற்கள் புரட்டப்பட்டு, குழிகள் தோண்டப்பட்டு, மனித எச்சங்களும் வெளியே எடுத்து விச்சப்பட்டிருப்பதை அமெரிக்காவின் சி.என்.என் செய்திச்சேவை ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருக்கிறது. இறுதியாகக் கான் யூனிஸ் பகுதியில் அமைந்திருந்த மயானத்தை அழித்து, புதைகுழிகளைத் தோண்டிய இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேலியர்களை ஹமாஸ் இங்கு ஒளித்து வைத்திருக்கலாம் என்பதனால் மயானத்தை அழிக்கவேண்டி வந்ததாகக் கூறியிருக்கிறது. ய…
-
-
- 5 replies
- 994 views
-
-
பட மூலாதாரம்,IRANIAN ARMY/WANA/REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், லீஸ் டூசெட் பதவி, சர்வதேச தலைமை செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது நாம் இருக்கும் காலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் காலம். கடந்த வாரம், இதுவரை நடந்திராத வகையில், இரான் தனது அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லையில் உள்ள சில பகுதிகளில் திடீரென ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு, பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. அப்போது, அது ஏற்கெனவே பதற்றமாக உள்ள எல்லை வழியாக இரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவம், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் ஏற்கெனவே பதற்றத்தால் சூழப்பட்டுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில…
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
சிரியாவில் தாக்குதலொன்றில் நான்கு ஈரான் இராணுவ அதிகாரிகள் பலி - இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு சிரியாவில் இடம்பெற்ற தாக்குதலொன்றில் ஈரானின் நான்கு சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய தலைநகரில் இடம்பெற்ற விமானதாக்குதல் ஒன்றிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் இஸ்ரேலே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஈரான் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. சிரிய தலைநகருக்கு தென்மேற்கில் உள்ள மசே பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதியில் இராணுவத்தினர் பயன்படுத்தும் விமானநிலையமொன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கியநாடுகள் அலுவலகமும் தூதரகங்களும் இந்த பகுதியிலேயே …
-
-
- 5 replies
- 783 views
-
-
பட மூலாதாரம்,RODONG SHINMUN கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்செஸ் மாவோ பதவி, பிபிசி செய்திகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சிகளுக்கு பதிலடியாக, வடகொரியா நீருக்கடியில் தனது அணு ஆயுத அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. நீருக்கடியில் அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய டிரோன் ஒன்று, கிழக்கு கடற்கரை பகுதியில் சோதனை செய்யப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சோதனைகள் நடத்தப்பட்டதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை மற்றும் டிரோன்களின் திறன் பற்றிய வடகொரியாவின் விளக்கங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று…
-
- 4 replies
- 669 views
- 1 follower
-
-
மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், வடக்கு கடல், ஆங்கில கால்வாய், அட்லான்டிக் கடல் மற்றும் மத்திய தரை கடலால் சூழப்பட்டுள்ளது. சில வருடங்களாக அட்லான்டிக் கடற்கரை பகுதியில் பல டொல்பின்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவது வழக்கமான நிகழ்வாக இருந்தது. மீன் பிடிக்க செல்பவர்களின் படகுகளின் எஞ்சின் கியர்களிலும், சிறு ரக கப்பல்களின் அடியிலும், வலைகளிலும், கயிறுகளிலும் டொல்பின்கள் சிக்கி உயிரிழப்பதாக நீண்ட காலமாக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், அரசு இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அழிந்து வரும் டொல்பின்களின் இனத்தை காக்க அவர்கள் அந்நாட்டின் நீதிமன்றத்தை அணுகினர். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம்…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, கிரிசெல்டா பிளாங்கோவாக சோஃபியா வெர்கரா நடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், யாஸ்மின் ரூஃபோ பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "நான் பயந்த ஒரேயொருவர் கிரிசெல்டா பிளாங்கோ என்ற பெண்மணி." இது வரலாற்றில் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் பாப்லோ எஸ்கோபர் கூறியதாகச் சொல்லப்படும் சொற்றொடர். தன்னை மற்றவர்கள் பார்க்கும் விதம் பிடிக்கவில்லை என்பதற்காக, மக்களைக் கொன்ற இரக்கமற்ற ஒருவராக கிரிசெல்டா பிளாங்கோ அறியப்படுகிறார். 1970கள் மற்றும் 80களில் மியாமியில் மிகவும் அஞ்சப்படும் பெயர்களில் ஒருவராக பிளாங்கோ விளங்கினார். புக…
-
- 0 replies
- 377 views
- 1 follower
-
-
20 JAN, 2024 | 11:15 AM சீனாவில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஹனான் மாகாணத்தின் யன்சான்பு கிராமத்தில் சிறுவர் பாடசாலையில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் பாடசாலையொன்றில் இந்த தீபத்து ஏற்பட்டது பாடசாலையின் முகாமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. ஒரு மணிநேரத்தின் பின்னர் தீயணைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/174375
-
- 0 replies
- 612 views
- 1 follower
-