உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26670 topics in this forum
-
முன் ஜாமின் நிராகரிப்பு - எடியூரப்பா சரணடைந்தார் எடியூரப்பாவுக்கு எதிராக இரண்டு நில ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்விரு வழக்குகளிலும் தமக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அவற்றை இன்று விசாரித்த லோக் ஆயுக்தா நீதிபதி என்.கே. சுதிந்தீர ராவ், இரு ஜாமீன் மனுக்களையும் நிராகரித்ததோடு, எடியூரப்பாவை கைது செய்யும் உத்தரவையும் பிறப்பித்தார். இதை தொடர்ந்து கைது வாரண்டுடன் போலீஸார் எடியூரப்பா வீட்டிற்கு சென்றனர் , அங்கு அவர் இல்லாத காரணத்தால் அங்கேயே காத்திருந்தனர். எடியூரப்பா பெங்களுரில் இல்லை என்று செய்திகள் வெளிவர தொடங்கின. இந்நிலையில், எடியூரப்பா சிறப்பு செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில்…
-
- 1 reply
- 607 views
-
-
கடந்த ஒரு வார காலமாக பாதுகாப்பு செயலாளருக்கும், அவரின் தனிப்பட்ட ஆலோசகர் அடம் வெரிற்றிக்கும் உள்ள தொடர்பு குறித்து சர்வதேச ஊடகங்கள் சர்ச்சையினைக் கிளப்பியிருந்தன. இதனைத் தொடர்ந்து பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் தமது பதவியில் இருந்து விலகினார். ராஜதந்திர முறையிலான பல்வேறு சந்திப்புக்களின் போது, லியம் பொக்ஸ், அடம் வெரிற்றியையும் தன்னுடன் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.ராஜதந்திர அந்தஸ்து இல்லாத நிலையிலும், அடம் வெரிற்றி, பாதுகாப்பு செயலாளருடன் 18 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லியம் வொக்ஸ் அண்மையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரை இலங்கையில் சந்தித்த போதும்…
-
- 0 replies
- 625 views
-
-
மூவர் தூக்கு மத்திய கேபினெட்டில் ஏற்கப்பட்டதா? அம்பலப்படுத்தும் ஆதாரக் கடிதம் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்குமான தூக்கு தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த எட்டு வார இடைக்காலத் தடை சீக்கிரமே முடியப்போகிறது. மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிமுக்கிய விவகாரத்துக்கு விடை கண்டு இருக்கிறார் காங்கிரஸ் புள்ளியான திருச்சி வேலுசாமி. 'இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தது ஏன்? மத்திய அமைச்சர்கள் யார் யார் கலந்து பேசி கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்தார்கள்?’ எனப் பல கேள்விகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் வேலுசாமி. பலத்த இழு…
-
- 3 replies
- 806 views
-
-
லியாம் பொக்ஸ் அமைச்சு ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டாரா? விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் 14 அக்டோபர் 2011 பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸ் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக லியாம் பொக்ஸ் மீது அதிகளவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் நலன்கள் எது தனது தனிப்பட்ட நலன்கள் எது என்பதும் தெளிவற்றதாகிப்போக தான் தவறுதலாக அனுமதித்து விட்டதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். லியாம் பொக்ஸ் தமது நெருங்கிய நண்பர் ஒருவரை உத்தியோகபூர்வ கடமைகளின் போது தொடர்புபடுத்திக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான மின்னஞ்சல் மற்றும் வீட…
-
- 0 replies
- 421 views
-
-
கூடங்குளம் போராட்டக் குழுவினருக்குத் துணையாக தமிழகம் திரண்டெழ வேண்டும்! - பழ. நெடுமாறன் வேண்டுகோள். மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் குறிப்பிட்டபடி நிறைவேற்றப்படும் என பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். பிரதமரின் இந்தப் போக்கு மக்களின் உணர்வுகளையும் தமிழக அரசின் வேண்டுகோளையும் மதிக்காதப் போக்காகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத் தூதுக்குழுவினர் பிரதமரைச் சந்தித்தபோது அணுமின் நிலைய திட்டம் குறித்து நிபுணர்குழு ஒன்றை அமைப்பதாக பிரதமர் அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மக்களின் அச்சம் போக…
-
- 0 replies
- 597 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களின் பிரதிநதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தப் பிறகும், முடிவு எட்டப்படாததால் இரண்டாம் கட்டமாக தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 09.10.2011 அன்று தொடங்கினர். உண்ணாவிரதம் ஒரு பக்கம் நடைபெற்றாலும், அதோடு தொடர்புடைய தங்களது எதிர்ப்பை மற்றொரு வழியில் தெரிவிப்பதற்காக தீவிரம் ஆனார்கள். அதன் ஒரு அங்கமாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எந்த ஒரு பணியும் நடக்கக் கூடாது என்பதற்காக முற்றுகை போராட்டத்தில் இறங்கினார்கள். ஒரு பக்கம் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், போராட்டக் குழுவின் மற்றொரு பிரிவினர், அணுமின் நிலையம் செல்லும் ஒப்பந்த தொழிலாளர் மற்றும் தினக்கூலி தொழிலார்களை கூடங்குளம் எஸ்எஸ்.புரத்…
-
- 1 reply
- 757 views
-
-
மூன்று பெண்கள் இம்முறை நோபள் சமாதான விருதினை பகிர்ந்து கொள்கின்றனர். லைபீரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களும், யேமனைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இம்முறை நோபள் சமாதான விருதினை பெற்றுக் கொள்கின்றனர். லைபீரிய ஜனாதிபதி இலன் ஜோன்சன் செர்லீப், லைபீரியாவின் லெய்மா குபோவீ மற்றும் யேமனின் தவாகுல் கார்மான் ஆகியோருக்கு இம்முறை நோபள் சாமாதான விருதினை பகிர்ந்து கொள்கின்றனர். பெண்கள் உரிமை, வன்முறைகளற்ற போராட்டத்தின் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்காக குறித்த பெண்கள் ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. செர்லீப் லைபீரியாவின் ஜனாதிபதியாகவும், குபோவீ சமாதான செயற்பாட்டாளராகவும் கடமையாற்றி வரும் அதேவேளை, கார்மான் …
-
- 12 replies
- 1.2k views
-
-
13 October 2011 Last updated at 12:49 ET Raj Rajaratnam jailed for 11 years for insider trading Rajaratnam has been under house arrest in his Manhattan residence A former hedge-fund manager has been sentenced to 11 years in jail in New York for one of the biggest insider trading cases in American history. Raj Rajaratnam, 54, was also fined $10m (£6.4m). The Galleon Group founder made well over $50m from illegal trades, said the judge at the Manhattan federal court. Sri Lankan-born Rajaratnam was convicted of 14 counts of securities fraud and conspiracy charges in May after a two-month trial. The judge denied Rajaratnam bail and he must report…
-
- 1 reply
- 743 views
-
-
முருகன்,சாந்தன்,பேரறிவாளன் சார்பில் 8000 கருணை மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மேற்கூறிய மூவரின் சார்பிலும் 8000 க்கும் அதிகமான கருணை மனுக்கள் உள்துறை அமைச்சகத்திற்கும், இந்திய குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன்,இலங்கையில் உள்ள 801 அரசியல் கைதிகளின் சார்பிலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள், தமிழர் அமைப்புகள், அனைத்துலக மன்னிப்புச்சபை உறுப்பினர்கள் சார்பில் ஏராளமான கருணை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட பிரமுகர்களான முன்னாள்…
-
- 0 replies
- 394 views
-
-
கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் உங்களில் ஒருவராக இருப்பேன் என்றும் உள்ளூர் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு செயல்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். தூத்துக்குடியில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்த அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை தேடித்தந்தீர்கள். அது போல் இந்த தேர்தலிலும் மகத்தான வெற்றியை தருவீர்கள் என்றுநம்புவதாக கூறினார். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறிய ஜெயலலிதா,நில அபகரிப்பு செய்யப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார். கூடங்குளம் பிரச்சனையில் உங்களில் ஒருவராக இருப்பேன். உள்ளூர் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் அ…
-
- 1 reply
- 1k views
-
-
புதுடில்லி: "ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமின் மனுவை எதிர்க்க மாட்டோம் என சொல்வதா' என்று சி.பி.ஐ.,யிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டமாகக் கேட்டனர். மேலும் இது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அறிவுறுத்தப்பட்டுள்ளதா என, கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டனர். ஆனால், சி.பி.ஐ., தரப்பில் வாதாடியவர்கள், கனிமொழியின் ஜாமின் மனுவை எதிர்க்கும் முடிவில் தொடர்ந்து இருப்பதாக விளக்கம் அளித்தனர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கனிமொழி கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ., கோர்ட், தொடர்ந்து மறுத்து விட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகருவதால், கனிமொழிக…
-
- 1 reply
- 589 views
-
-
16.10.11 ஹாட் டாபிக் ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் மரண தண்டனை வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் பொதுமக்கள் கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர். தூக்கை தற்காலிகமாக நிறுத்த உதவிய இந்த மக்கள் ஆதரவு தான், இப்போது மூவருக்கும் சிக்கலையும் ஏற்படுத்தி இருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரி த்தது முதலே தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்சிப் பாகுபாடு இன்றி தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில், மூவருக்குமான மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று போராட்டங்களை நடத்…
-
- 1 reply
- 651 views
-
-
ஈரான் அமெரிக்காவில் சவூதி அதிகாரிகள் / தூதுவராலயம் மீது நடாத்த இருந்த பயங்கரவாத தாக்குதல்கள் - அமெரிக்கா சவூதி தூதுவரை கொள்ள, மற்றும் தூதுவராலயத்தை தாக்க திட்டமிட்டனர் என ஈரானை அமேரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
-
- 4 replies
- 1.1k views
-
-
- 16.10.11 கவர் ஸ்டோரி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கருணாநிதி குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசு சிக்கிக் கொண்டிருக்கிறார். இதோ அதோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களின் வீடுகளில் ஒரு வழியாக ரெய்டு நடந்தே விட்டது. 2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவும், கனிமொழியும் கைது செய்யப்பட்டதில் இருந்தே, தயாநிதி மாறன் சிக்குவாரா? மாட்டாரா? என்று ஊடகங்கள் பல்வேறு ஊகங்களை எ ழுப்பிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனர் அனந்தகிருஷ்ணன் மற்றும் ஆஸ்ட்ரோ நிறுவன சி.இ…
-
- 0 replies
- 730 views
-
-
Oct 12, 2011 / பகுதி: உலக வலம் / இத்தாலியின் சரக்குக் கப்பல் மீது தாக்குதல் ! இத்தாலியின் சரக்குக் கப்பல் ஒன்று சோமாலியாவின் கடற்பிராந்தியத்தில் வைத்து ஆயுததாரிகளால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கப்பலில் 23 பணியாளர்கள் இருந்துள்ளதுடன், அவர்களில் 10 பேர் இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்தக் கப்பலில் உள்ளவர்கள் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக விபரங்களை பெறுவதற்கான முயற்சிகளை குறித்த கப்பல் நிறுவனம் தொடர்ந்தும் மேற்கொண்டுவருகின்றது. சோமாலியக் கடற்கொள்ளையர்களால் அடிக்கடி கப்பல்கள் கடத்தப்பட்டு இலஞ்சம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 499 views
-
-
சென்னை: தனது மகன், மகளை ஆசிட் டேங்கரில் போட்டு உருத் தெரியாமல் அழித்துவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாக, கொலை செய்யப்பட்ட காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனின் மனைவி பத்மா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் தந்துள்ளார். காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு கோவில் வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலை விசாரணை புதுச்சேரியில் நடந்து வருகிறது. இந் நிலையில் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்று பேரம் பேசியதாக ஜெயேந்திரருக்கு எதிராக ஒரு தொலைபேசி உரையாடல்…
-
- 0 replies
- 526 views
-
-
நியூயார்க்: ஐ.நா. ஏற்பாட்டின் பேரில், இந்தியப் பெருங்கடல் நாடுகளில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகள் பங்கேற்றன. 2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் கடல் பகுதியில் 9.2 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து வரலாறு காணாத சுனாமி தாக்குதலை இந்தியப் பெருங்கடல் நாடுகள் சந்தித்தன. இரண்டரை லட்சம் பேர் இதில் சிக்கி உயிரிழந்தனர். பல லட்சம் பேர் வீடுகள், சொத்துக்களை இழந்தனர். இந்தத் தாக்குததலுக்குப் பிறகு சமீபத்தில் ஜப்பானிலும் சுனாமி தாக்கி பல ஆயிரம் பேர்களின் உயிரைப் பறித்தது. இந்த நிலையில், அதே 9.2 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கினால் அதிலிருந்து எப்படி மக்களைக் காப்பது என்பதற்காக ஒரு சுனாமி ஒத்திகை நிகழ்…
-
- 0 replies
- 680 views
-
-
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகத் தலையிட்டு இலங்கையிடம் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கவேண்டும். மேலும் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதை, இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலாக மத்திய அரசு கருதவேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் அவர் தெரிவித்திருப்பவை வருமாறு பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையாலும், சிங்கள மீனவர்களாலும் தொடர்ந்து தாக்கப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழக மீனவர்களுக்கு பாக் ஜலசந்தி பகுதிதான் …
-
- 0 replies
- 485 views
-
-
இடிந்தகரை, அக். 11- கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூட வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக இடிந்தகரையில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். முன்னதாக, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்மீது செவ்வாய்க் கிழமைக்குள் மத்திய அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டிருந்தது. அக்கெடு முடிவடைந்ததையடுத்து கூடங்குளம் அணுமின்நிலையத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். http://www.koodal.co...s-as-talks-fail
-
- 0 replies
- 456 views
-
-
வேலூர் சிறையை முற்றுகையிடுவோம் - தேசிய லீக் அறிவிப்பு. முஸ்லீம் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் தேசிய லீக் கட்சி திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறது. நேற்று வாணியம்பாடியில் செய்தியாளர்களிடையே பேசிய அதன் தலைவர் அப்துல்காதர் ‘’சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி 1 கோடி மக்களின் ஒத்துழைப்போடு வேலூர் மத்திய சிறையை முற்றுகையிட்டு சிறையை சிறைப்படுத்தும் போராட்டம் விரைவில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68483/language/ta-IN/article.aspx டிஸ்கி: இவனுங்கள் மண்டையன ஆதரித்து பிரச்சாரம் செய்வது ஒருபக்கம் இருக்…
-
- 1 reply
- 854 views
-
-
அமெரிக்கர்கள் இருவருக்கு பொருளியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார நிபுணர்களான தோமஸ் சார்ஜன்ட் மற்றும் கிறிஸ்டோபர் சிம்ஸ் ஆகிய இருவருக்கும், இந்தாண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 'நிவ்யோர்க்' பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக சார்ஜன்ட் (68) பணியாற்றி வருகிறார்.சிம்ஸ் (68) இயங்கி வரும், 'பிரின்ஸ்டொன்' பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் இவர்கள் விரிநிலைப் பொருளாதாரம் (Macro Economics) தொடர்பில் விரிவாக ஆராய்ந்தமைக்காகவே இருவர்களுக்கு இப் பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும் வட்டி வீதத்தில் திடீரென ஏற்படுகின்ற அதிகரிப்பானது பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தில் எவ்வாறான தாக்கத்தினை ஏ…
-
- 0 replies
- 490 views
-
-
தயாநிதி மாறன் வீட்டில் போராடி நுழைந்த சி பி ஐ! மாறன் குடுபத்தினர் வீடுகள், மற்றும் அலுவலகங்களில் இன்று காலை திடீரென நுழைந்த சி.பி.ஐ பல சோதனைகளை நடத்தியது தெரிந்ததே. இச்சோதணைக்காக மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டில் சி.பி.ஐ. நுழைவதற்கு மிகவும் போராட வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது, பல முறை எச்சரித்தும் தயாநிதி மாறன் வீட்டின் காவலாளி சி.பி.ஐ. அதிகாரிகளை, உள்ளே விட அனுபம்திக்கவில்லை என கூறப்படுகிறது, இதனால் சுமார் முக்கால் மணி நேரம் தாமதமானதாகவும், இந்த இடைபட்ட நேரத்தில் தயாநிதி மாறன், சி பி ஐ வீட்டில் நுழைவதை தடுக்க பல வழிகளில் முயன்றுள்ளார், ஆனால் அதற்க்கு பயனளிக்கவில்லை, மேலும்,சி.பி.ஐ. உள்ளே நுழய போராடிக்கொண்டிருந்த நேரத்தில், வீட்டின் பின் வ…
-
- 1 reply
- 700 views
-
-
திருவண்ணாமலை நகரை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் வெளிநாட்டு நிதி உதவியுடன் நடத்தப்படும் ரங்கம்மாள் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் வசதி உள்ளது. வெளிநோயாளிகள் பிரிவு, அவசர பிரிவு என செயல்படும் இம்மருத்துவமனையை ரஞ்சிதா புகழ் நித்யானந்தா சொந்தமாக வாங்க விலைபேசிவருவதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் புதியதாக மருத்துவமனை துவங்க ஆலோசனை நடத்தினார். இதற்காக வெளிநாடுகளில் நிதி பெறவும் முயற்சி செய்துகொண்டிருந்தார். அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது. இதிலிருந்து தப்பினால் போதும் என அத்த…
-
- 4 replies
- 819 views
-
-
தனது எதிர்பாளர்களையும் எதிர்க் கட்சிகளையும் கொன்று குவித்து காட்டுமிராண்டித்தனத்தை ஏவிவிட்ட சிரியாவுக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வந்த கண்டன தீர்மானத்தை சீனாவும் ரஷ்யாவும் தம் வீட்டோ அதிகாரத்தால் முறியடித்தன China and Russia veto UN resolution condemning Syria China and Russia have vetoed a UN Security Council resolution condemning Syria over its crackdown on anti-government protesters. The European-drafted resolution had been watered down to try to avoid the vetoes, dropping a direct reference to sanctions against Damascus. But Moscow and Beijing said the draft contained no provision against outside military intervention in Syria. The US envoy to the…
-
- 4 replies
- 633 views
-
-
ரியாத்: அக்டோபர் 09,2011,10:12 IST எகிப்து நாட்டு செக்யூரிட்டி கார்டு ஒருவரை கொன்றதாக , 8 வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் தலையை துண்டித்து கொடூர தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கின் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஹூசைன் சையீத் முகமது அப்துல்காலித் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை தடுத்த போது இவர் கொலைசெய்யப்பட்டதாக தெரியவந்தது.இது தொடர்பாக வங்கதேச நாட்டைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு, கோர்…
-
- 5 replies
- 1.3k views
-