உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26673 topics in this forum
-
ஈழப் படுகொலைகள் உண்டாக்கிய துயரமே தமிழக மனங்களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரையும் காப்பாற்றக் கோரி கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன்…
-
- 2 replies
- 620 views
-
-
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எந்த விஷயத்தையும் நிதானித்துப் பேசுவதில் வல்லவர் என்றால், அவரது மகன் கார்த்தி சொல்ல வரும் விஷயத்தை பரபரப்பு குறையாமல் வேகமாகப் பேசுவதில் கில்லாடி. ‘அன்னா ஹசாரேவின் போராட்டம், தமிழ் மாநில காங்கிரஸ் பதவி கலாட்டா, ஈழப் போராட்டம்’ என எந்தக் கேள்வி கேட் டாலும் வேகமாக வந்து விழுகிறது வார்த்தைகள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருக்கும் கார்த்தி ப.சிதம்பரத்தைச் சந்தித்தோம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை தங்கபாலு ராஜினாமா செய்துவிட்டார். வேறு தலைவரை இன்னமும் நியமிக்கவில்லை. உங்கள் கட்சியில் வேறு தலைவர்களே இல்லையா? “தங்கபாலு ராஜினாமா செய்துவிட்டதாகக் கேள்விப்பட்டேனே தவிர, அதிகாரபூர்வமாக எனக்கு எந்தத்…
-
- 3 replies
- 1k views
-
-
http://www.yarl.com/files/110823_kavitha_tamilnadu.mp3
-
- 0 replies
- 511 views
-
-
மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சிறப்பாகப் பணியாற்றிய போதும், தாம் தேர்தலில் தோற்றுப் போனதாக திராவிட முன்னேற்றக்கழகம் ஆதங்கம் வெளியிட்டுள்ளது. தோல்வி ஏற்பட்டதாக யாரும் உணரவில்லை என்று முன்னாள் துணை முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சமச்சீர் கல்வி தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். எனவே சட்டசபை தேர்தலில் தாம் தோற்றாலும், தற்போது வெற்றிகளைப் பெற ஆரம்பித்துள்ளதாக ஸ்டாலின் கூறினார்.அடுத்ததாக புதிய தலைமைச் செயலக வெற்றிக்கு தயாராகிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், 2016ல், கலைஞர் கருணாநிதி தலைமையில் மீண்டும் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி அமை…
-
- 3 replies
- 758 views
-
-
இந்திய காஷ்மீரில் மனிதப் புதைகுழிகள் இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் கடந்த 20 ஆண்டுகளில் 2000க்கும் அதிகமான அடையாளம் காணப்படாத சடலங்கள், புதைகுழிகள் என்ற சுவடுகளே தெரியாத இடங்களில் புதைக்கப்பட்டிருப்பதாக அரசினால் நியமிக்கப்பட்ட ஆணையமொன்று கண்டறிந்துள்ளது. இதுவரை சுயாதீனமான மனித உரிமைக்குழுக்கள் தெரிவித்துவந்த குற்றச்சாட்டுக்களை முதற்தடவையாக அரசினால் நியமிக்கப்பட்ட ஆணையமொன்று முதற்தடவையாக உறுதிப்படுத்தியுள்ளது. ஐம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது அறிக்கையை இதுவரை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கவில்லை. ஆனால், அதனால் கண்டறியப்பட்ட சில முக்கியமான தகவல்கள் இந்திய ஊடகங்களில் கசிந்துள்ளன. 2,150 சடலங்கள் பெரும்பாலும் துப்பாக்கிச் சூட்டுக…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீது 9/11 தாக்குதல் நடத்தப்பட்டு 10ஆவது ஆண்டு ஞாபகார்த்த தினம் அனுஷ்டிக்கப் படவுள்ள நிலையில், இத்தாக்குதலை நடத் துவதற்கு அல் கொய்தா போராளிகளுக்கு சவூதி அரேபியாவும் ஈரானும் உதவியதாக புதிய புத்தகமொன்று உரிமை கோருகிறது. மேற்படி இரட்டைக் கோபுரத் தாக்குதல் களுக்கு இந்த இரு நாடுகளும் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்திருந்ததுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஆரம் பிக்கப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அந்தோனி சமர்ஸ் மற்றும் ரொபின் ஸ்வான் ஆகியோரால் எழுதப்ப ட்ட "தி லெவன்த் டே' புத்தகமானது மேற் படி இரு நாடுகளுக்கும் குறிப்பிட்ட தாக்கு தலுடன் தொடர்புள்ளதாக வாதிடுகிறது. இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குத லுடன் ஈரானுக்கும் சவூதி அரேப…
-
- 0 replies
- 652 views
-
-
சென்னைக்கு இன்று வயது 372 வணக்கம் சென்னை. இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான சென்னைக்கு இன்று (ஆக.22) வயது 372 ஆகும். இன்று 372 வது பிறந்தநாள் காணும் சென்னைக்கு சென்னைஆன்லைன்னின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் நான்காவது பெரிய நகரான டெட்ராய்ட் சென்னை, வந்தாரை வாழவைக்கும் சென்னை, எத்தனை லட்சம் பேருக்கு வாழ்க்கை கொடுத்த, கொடுக்கப்போகும் சென்னை. 1639ஆம் ஆண்டு இதே நாளில் சென்னப்ப நாயக்கரிடமிருந்து இந்த இடத்தை கிழக்கிந்திய கம்பனியின் வணிகர்கள் பிரான்ஸிஸ் டே மற்றும் ஆன்ட்ரூ கோகன் வணிகம் செய்வதற்காக வாங்கியதாகவும், கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் 'சென்னப்பட்டினம்' என்று அழைக்கப்பட்டது என்பதும், சென்னப்பட்டினத்துக்கு தெற்கே அமைந்திருந்த ஊர் மதராஸ் என்…
-
- 2 replies
- 785 views
-
-
மேற்கு வங்கம் பெயர் மாறுகிறது! மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் விரைவில் 'பஷிம் பங்கா' என மாற்றம் செய்யப்படவிருக்கிறது. பங்களா, பங்களா பூமி, பஷிம் பங்கா உள்ளிட்ட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் 'பசிம் பங்கா' (Pashchimbanga) எனும் பெயரை மாநில அரசும், எதிர்க்கட்சிகளும் ஏகமனதாக தெரிவு செய்தன. இதையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு விடப்படவுள்ள இப்பெயர் மாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. ஆங்கில அகர வரிசையில் மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் கடைசியாக (West Bengal) உள்ளது. இது மாநிலட்திற்கு மிகவும் பின்னடைவாக உள்ளது. எனவே நிர்வாக காரணங்களுக்காக மாநிலத்தின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளோம் என மேற்கு …
-
- 7 replies
- 1.1k views
-
-
அணு மின் நிலையங்களை இழுத்து மூடும் ஜெர்மனி! அடுத்த 11 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் இழுத்து மூட ஜெர்மனி முடிவு செய்துள்ளது. மேலும் இனிமேல் புதிதாக எந்த அணு மின் நிலையத்தையும் அமைப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளது. இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தையும் 2022க்குள் மூடி விட முடிவு செய்துள்ள அந் நாட்டுப் பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எதிர்காலத்தில் மின்சாரம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொருளாதாரரீதியில் கட்டுப்படியானதாகவும் இருக்க வேண்டும். ஜப்பானில் சுனாமிக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் கண்களைத் திறந்துவிட்டன என்றார். அந் நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நார்ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
நாகை அருகே நடுக்கடலில் மீனவர்களை அரிவாளால் வெட்டி மீன்கள் கொள்ளை: இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Nagapattinam சனிக்கிழமை, ஆகஸ்ட் 20, 3:33 PM IST நாகை, ஆக. 20- நாகை அருகே உள்ள அக்கரை பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுமார் 200 விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். நேற்று இரவு தமிழக எல்லை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது 7 படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் நாகை மீனவர்களை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்கினர். அதோடு மீனவர்களை அரிவாளால் வெட்டினர். பின்னர் மீன்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் மீனவர்கள் வெங்கடேஷ், பாலையா, ரவி ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.வெட்டுப்பட்ட அவர்கள் படகில் ரத்த வெள்ள…
-
- 3 replies
- 931 views
-
-
வரலாறு படிப்பதற்கு மட்டும் அல்ல; படைப்பதற்கும்தான்!'' - என்று மாணவர் படைக்கு அழைப்பு விடுத்து, மாணவர்கள் படையைத் திரட்டத் தயாராகிவிட்டார் சீமான். 'நாம் தமிழர் கட்சி’யின் மாணவர் பாசறையின் முதல் கலந்தாய்வுக் கூட்டம், கடந்த 15-ம் தேதி, சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்தது. பேராசிரியர் தீரன், சாகுல் ஹமீது, தடா சந்திரசேகர், கலைக்கோட்டுதயம் ஆகியோருடன் சீமான் மேடையேற... மாணவர்கள் மத்தியில் பலத்த ஆரவாரம்! நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கு எப்படி இருக்க வேண்டும்? அடுத்த இலக்கு என்ன என்பவைபற்றி விரிவாக அலசப்பட்டது. இதில் பேசிய இளைஞர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர்களான இளமாறன், ராஜீவ்காந்தி ஆகியோரின் பேச்சுதான், வந்திருந்தவர்களை முறுக்கேறச் செய்தது. …
-
- 3 replies
- 904 views
-
-
பிரிட்டனில் சமூகம் சீரழியவில்லை என முன்னாள் பிரதமர் டோனி பிளேர் கூறினார். இந்த மாத துவக்கத்தில் ஏற்பட்ட வன்முறை நிகழ்வுகளுக்கு நடத்தை சீரழிவு என கூறக்கூடாது என அவர் தெரிவித்தார். பிரிட்டனில் சமூக சீரழிவு ஏற்பட்டு விட்டது. அதனால் வன்முறை தாக்குதல்கள் நடந்துள்ளன என சிலர் விமர்சனம் செய்தனர். இதனை டோனி பிளேர் திட்டவட்டமாக மறுத்தார். தற்போதைய தாக்குதலை சமூக சீரழிவு என கூறக்கூடாது. இதனால் உலக அளவில் பிரிட்டனின் புகழ் பாதிக்கப்படும் என்ற கவலை தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பதவியில் இருந்து விலகிய பின்னர் அவர் உள்ளூர் அரசியலில் மிக அரிதாகவே ஈடுபட்டார். தற்போது வெளியாகி உள்ள கருத்து பிரிட்டனின் மதிப்பை குறைப்பதாக உள்ளது என அவர் உடனடியாக பதிலடி தந்துள்ளார்.…
-
- 6 replies
- 858 views
-
-
இஸ்லாமாபாத்: கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் பின்லேடனின் குடும்பத்தை சீரழித்ததற்காக பாகிஸ்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று லேடனின் மைத்துனர் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்திய அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த மே மாதம் 2-ம் தேதி அப்போத்தாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு பாதுகாப்பு வளையமாக இருந்த அவரது மனைவி அமால் அல் சதா (28) மற்றும் 5 குழந்தைகளை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த 6 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அமால் அல் சதாவின் சகோதரர் சகாரியா அல் சதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, எனது சகோதரி பின் லேடனின் மனைவிய…
-
- 1 reply
- 745 views
-
-
திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவில் பொக்கிஷங்களை, அதன் 6வது ரகசிய அறையிலிருந்தவற்றில் பலமுறை திருவிதாங்கூர் மன்னர் உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கடத்தி சென்றுள்ளார் என்று கேரள முதல்வர் முதல்வர் அச்சுதானந்தன் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார். மொத்தம் உள்ள 6 அறைகளில் 5 அறைகளைத் திறந்து பார்த்து விட்டனர். அவற்றில் பதுங்கிக் கிடந்த பல லட்சம் கோடி பொக்கிஷங்கள் உலகையே அதிர வைத்துள்ளன. இந்த நிலையில் 6வது அறையைத் திறக்க மட்டும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து தேவ பிரஸ்னம் பார்க்க மன்னர் மார்த்தாண்ட வர்மா உத்தரவிட்டார். அப்போது இந்த அறையைத் திறந்தால், திறப்பவரின் வம்சமே அழிந்து போய் விடும் என ஜோதிடர்கள் எச்சரித்தனர். இந்த நிலையில் 6வது அறையில் இருந்த பொக்க…
-
- 0 replies
- 615 views
-
-
நில அபகரிப்புப் புகார் என்ற பெயரில் தி.மு.க-வினரைக் கைது செய்து பழி தீர்த்து வருகிறார் ஜெயலலிதா’ என்று கருணாநிதி ஒரு பக்கம் வெடித்துக்கொண்டு இருக்க... 'அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும்...’ என்று பதில் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தமிழகம் முழுக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், நில அபகரிப்புப் புகார் சிறப்புக் காவல் பிரிவும் தொடங்க உத்தரவு இட்டு இருக்கிறார். ''உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது, யார் மீதெல்லாம் புகார் இருக்கிறதோ அவர்கள் அத்தனை பேரும் உள்ளே இருக்கணும்'' என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக …
-
- 0 replies
- 458 views
-
-
இந்தியாவில் மரண தண்டனையை நிறுத்துமாறு சர்வதேசம் வேண்டுகோள் வீரகேசரி இணையம் 8/21/2011 12:06:31 PM பிரிட்டன், அமெரிக்கா, கனடா, இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர்களும் கல்விமான்களும் மற்றும் தத்துவஞானியான நோம் சொம்ஸ்கியும் மரண தண்டனையை நிறுத்துமாறு கோரி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இது இவ்விதமிருக்க மகேஸ்டட்டானி, மகாஸ்வெட்டாதேவி போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இந்தியாவில் மரண தண்டனை அமுல்படுத்துவதை எதிர்த்து பத்திரிகைக்கு அறிக்கை விட்டுள்ளதாக இந்த தீர்மானத்தை முன்னெடுக்கும் குழுவின் ஒருவரான மங்களூர் சென்ட் அலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சாள்ஸ் அந்தோனி கூறுகி றார். மூன்று பேரின் மரண தண்டனையை நிறுத்தி அவர்களின் உயிரைக் காக்குமாறு பிரபல சட்டவல்லுநரான ஜி.ஆ…
-
- 0 replies
- 488 views
-
-
http://www.youtube.com/watch?v=kb7cH_XY5k8&feature=player_embedded#!
-
- 1 reply
- 1.1k views
-
-
பர்தாவை அகற்ற மறுத்தால் சிறை.. ஆஸ்திரேலியா புதிய சட்டம் போலீசார் சோதனையிட வந்தால், பர்தாவை அகற்றி முகத்தைக் காட்ட வேண்டும். அதைச் செய்ய மறுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அடுத்த வாரம் புதிய சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த சட்டத்தின்படி போலீஸ் சோதனையின்போது வாகனம் ஓட்டுபவர்கள் பர்தா, ஹெல்மட்கள், முகமூடிகள், முகத்தை மூடி இருக்கும் திரை சீலைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும். இவை தவிர போலீசாரின் சோதனையின் போது தேவைப்பட்டால் உடலில் அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கூட கழற்ற வேண்டும். சோதனையின்போது, அவற்றை அகற்ற மறுத்தால் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும். சோதனையின…
-
- 0 replies
- 497 views
-
-
- perarivalan
- shanthan
- murugan
- rajiv
-
Tagged with:
முழுமையாக விசாரணை நிறைவுறாத இராஜீவ் கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, செய்யாத குற்றத்திற்காக சகோதரர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிர் மத்திய அரசால் பறிக்கப்பட இருக்கிறது. இது மரண தண்டனை அல்ல, மிகக் கவனமாய் திட்டமிடப்பட்டு, நடத்தப்பட இருக்கிற படுகொலை. நம் கண்முன்னே நமது சகோதரர்கள் எவ்வித முகாந்திரமுமின்றி படுகொலை செய்யப்பட 21 வருடங்களாய் காக்க வைக்கப்பட்டு, விடுதலை கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கப்பட்டு, இறுதியில் தூ க்குக் கயிறை தழுவப்போகிறார்கள். தமிழர்கள் எந்த ஒரு சமயத்திலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய வலிமை உள்ளவர்கள் அல்ல என்று நம்பும் இந்த இந்திய அரசை தமிழர்களாகிய நாம் வெல்லவேண்டும். பேரறிவாளன், முருகன், சாந்த…
-
- 4 replies
- 1.3k views
-
என் மகன் குற்றமற்றவன். அவனை விடுதலை செய்யுங்கள்’’ என்ற குரலோடு நீதி கேட்டு அற்புதம்மாள் நடக்கத் தொடங்கி, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. மகனின் தூக்குத்தண்டனை மீதான கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்னமும் வேகத்தோடும், நம்பிக்கையோடும் அதிகாரத்தின் கதவுகளை தட்டத் தொடங்கியிருக்கிறார் அற்புதம்மாள். அற்புதம்மாள்? முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தாயார். பத்தொன்பது வயதில் இவர் மகன் அறிவை விசாரணைக்கென அழைத்துச் சென்றது சி.பி.ஐ.! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவனுக்குத் தொடர்பு இருப்பதாக அவர்கள் சொன்னதும் அதிர்ந்து போனார் அற்புதம்மாள். தன் மகன் நிரபராதி என நிரூபிக்க இவர் மேற்கொண்ட போராட்டங்கள் யா…
-
- 1 reply
- 720 views
-
-
ரஷ்யா முதல் முறையாக தனது 'ஸ்டெல்த்' போர் விமானத்தினை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது. சுகோயி டி-50 எனப் பெயரிடப்பட்டுள்ள இப் போர் விமானமானது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுத்தயாரிப்பாகும். ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்றுவரும் மாக்ஸ் 2011 விமானக் கண்காட்சியொன்றிலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எப் 22 ரக விமானங்களுக்கு சிறந்ததும் விலைகுறைந்ததுமான மாற்றீடாக இது இருக்குமென ரஷ்யா தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் சுமார் 1000 சுகோயி விமானங்களை உருவாக்கவுள்ளதுடன் அவற்றில் 200 ஐ இந்தியா வாங்கவுள்ளது. இவ்விமானங்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இருந்தபோதிலும் தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக அது பிற்போடப்ப…
-
- 1 reply
- 680 views
-
-
சமூக பாரம்பரிய முறைமைகள், சமய வழக்காறுகள் ஆகியன தொன்று தொட்டு நின்று நீடித்து நிலைத்து வருகின்ற ஒரு நாடு இந்தியா ஆகும். இங்கு மிகவும் பழைமையான சமய நடைமுறைகளில் ஒன்றுதான தேவதாசி முறைமை. தேவதாசி என்பதற்கு கடவுளின் அடிமை என்று அர்த்தம். கடவுள் அல்லது உள்ளூர் தெய்வத்த்துக்கு மணப் பெண்ணாக தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் அமையப் பெற்று உள்ளது தார்வாட் நகரம். இந்நகரத்தில் Saundatti என்று ஒரு கிராமம் உண்டு. இங்கு ஜெல்லம்மா என்கிற தெய்வத்துக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்றும் தேவதாசி முறை உயிரோடு உள்ளது. சிறுமிகள் காலம் காலமாக ஆனால் இரகசியமாக ஜெல்லம்மா தெய்வத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர். இச்சிறுமிகள் வேறு யாரையும் திருமண…
-
- 2 replies
- 5k views
-
-
பாகிஸ்தான் பள்ளிவாசலில் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 48 பேர் பலி பாகிஸ்தானின், ஜமுர் மாவட்டத்தின் பள்ளிவாசல் ஒன்றில், இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் 48 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சுமார் 400 க்கு மேற்பட்டோர் இங்கு கூடிய போதே இக்குண்டு தாக்குல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலின் போது காயமடைந்த 50 க்கு மேற்பட்டோர் பேஷ்வாரில் உள்ள லெடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒசாமா பின்லாடன் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்குவோம் என அல் கைதாவினர் சபதம் எடுத்திருந்த நிலையில் அல் கைதாவுடன் சேர்ந்தியங்கும் குழுவினரே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. http://www.4tamilmed...-48-i…
-
- 5 replies
- 716 views
-
-
ராஜீவ் கொலைக்குற்றவாளிகளின் கருனை மனு நிராகரிப்பை வரவேற்கிறேன் : தங்கபாலு ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். அவர், ’’முருகன், பேரறிவாளன், சாந்தன் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது. இவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நியாயமானதே. …
-
- 6 replies
- 1.3k views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. சென்னை மெமோரியல் ஹால் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். கவிஞர்கள் அறிவுமதி, காசிமுத்து மாணிக்கம், இயக்குனர் சுசிசந்திரன், பார்வேந்தன், ஆகியோர் முன்னிலை வகித்து உறையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, ’’ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் மரண தண்டனை பெறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்திலும் உலக நாடுகளிலும் உள்…
-
- 0 replies
- 315 views
-