உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26663 topics in this forum
-
தமிழகத் தமிழர்கள் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும் - பெ.மணியரசன் பேச்சு! தமிழ்நாட்டுத் தமிழர்கள் விழிப்பணர்வுடன் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும்" என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேசினார். கவிவீச்சு சிதம்பரத்தில் நேற்று(16.07.2010) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் "தமிழர் தொழில், வணிக, கல்வி பாதுகாப்பு மாநாடு" நடந்தது. சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் நடந்த இம்மாநாட்டிற்கு, தோழர் பெ.சவுந்திரராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர்கள் கவிபாஸ்கர், இராசா இரகுநாதன், கோ.கவித்துவன், புலவர் நாகேந்திரன் உள்ளிட்டோர் கவிவீச்சு நிகழ்த்தினர். மலர் அரங்கம் தமிழ்நாட்டுத் தமிழர…
-
- 1 reply
- 515 views
-
-
தலைவர் பதவியைக் கோரும் ஸ்டாலின்-எதிர்க்கும் அழகிரி-கருணாநிதி குடும்பச் சண்டையின் பின்னணி ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 17, 2011, 14:48 சென்னை: தலைவர் பதவியை இப்போதே தனக்குத் தர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோருகிறாராம். ஆனால் தலைவர் பதவியை யாருக்கும் தரக் கூடாது. கடைசி வரை கருணாநிதிதான் தலைவராக நீடிக்க வேண்டும் என்று மு.க.அழகிரி கோரி வருகிறாராம். இதுதொடர்பாகத்தான் தற்போது கருணாநிதி குடும்பத்தில் சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற கதையாக தனது இரு மகன்களை வளர்த்து வந்த திமுக தலைவர் கருணாநிதி அதற்குரிய பலனை தற்போது அனுபவித்து வருவதாக திமுகவின் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள் வேதனையுடன் சொல்கிறார்கள். கருணாநிதி ப…
-
- 5 replies
- 415 views
-
-
பத்மநாபசாமி கோவில் பொக்கிஷ ரகசியத்தை வெளிக் கொணர்ந்த வக்கீல் சுந்தரராஜன் மரணம் திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளைத் திறந்து அதில் குவித்து வைக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி அரிய வகை பொக்கிஷங்கள் வெளியுலகுக்குத் தெரிய வர காரணமாக இருந்த வழக்கறிஞர் சுந்தரராஜன் மரணமடைந்தார். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இதுவரை ரூ. 1லட்சம் கோடி அளவிலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு அறையைத் திறக்காமல் உள்ளனர். அதில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மதிப்பை விடஅதிக அளவிலான நகைகள் இருக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக கருதப்படும் திருப்பதியை மிஞ்சியுள்ளது பத்ம…
-
- 0 replies
- 855 views
-
-
மும்பை தொடர் குண்டுவெடிப்பு-போலீஸ் விசாரணைக்குச் சென்றவர் மர்ம மரணம் ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 17, 2011, 12:30 மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக போலீஸாரால் விசாரிக்கப்பட்டவர் திடீரென மரணம் அடைந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பயஸ் உஸ்மானி என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் நிஸார் தம்போலி கூறுகையில், பயஸ் உஸ்மானியை போலீஸார் விசாரணைக்காக அழைத்திருந்தனர். அப்போது அவர் தனக்கு உடல் நலம் சரியில்லை என்றார். இதையடுத்து போலீஸார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை போலீஸார் சித்திரவதை செய்யவில்லை. அடிக்கவும் இல்லை. ஒரு மணி நேரம் மட்டுமே அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டா…
-
- 0 replies
- 316 views
-
-
கருப்புப் பணம் எங்கே இருக்கிறது? இந்தியா ஒரு ஏழை நாடு என்று நீண்ட நாட்களாகச் சொல்லப்படுகிறது.இனிமேல் அப்படிச் சொல்லாதீர்கள்.வேண்டுமானால் இப்படிச் சொல்லிக் கொள்ளுங்கள்.”இந்தியா ஏழைகள் அதிகம் வாழும் பணக்கார நாடு”. பணக்காரர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால்,அதே நேரம் ஏழைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.இங்கே பரம்பரை பணக்காரர்கள் மட்டுமல்ல,புதிய தொழில் அதிபர்கள்,சாமியார்கள்,அரசியல்வாதிகள்;ஏன் சாமிகளும்கூட பணக்காரர்கள்தான்.பின் எப்படி இது ஏழை நாடு.எனவேதான் சொல்லுங்கள் இந்தியா ஏழைகள் வாழும் பணக்கார நாடு. எல்லோரும் ஒருவரே என்ற சரிநிகர் சமமான நிலையை எட்டவேண்டும் என்பது குறித்துக் கவலைப்பாடாதவர்கள்,கல்வி,வேலை வாய்ப்பில் சமூகநீதி கிடைக்கவேண்டும் என்பது அ…
-
- 0 replies
- 526 views
-
-
ஸ்ராலினுடன் மோதல்! வீட்டைவிட்டு வெளியேறினார் கலைஞர்! Sunday, July 17, 2011, 10:24 இந்தியா 02 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரம், தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி என்பனவற்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்ப உறுப்பினர்கள்மத்தியில் பிளவு ஏற்பட்டிருப்பதுடன், தி.மு.க.வை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றும் நிர்வகிப்பது தொடர்பாக கட்சியின் தலைவர் கருணாநிதி தனது வழிமுறையை மாற்றிக் கொள்ளவேண்டிய அழுத்தங்கள் தீவிரமாக அதிகரித்து வருகின்றன. இந்த வார இறுதியில் கருணாநிதியின் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டிருந்த கடுமையான முரண்பாடுகளையடுத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடற்கரையோரமிருந்த வீடு ஒன்றிக்கு சடுதியாக புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்ப…
-
- 1 reply
- 2.2k views
-
-
பத்மநாபசுவாமி கோயில் உள்ள பாதாளஅறை குறித்து பொது நல வழக்கு தொடர்ந்த வக்கீல் சுந்தரராஜன் உடல்நலகுறைவு காரணமாக இறந்தார்.திருவனந்தபுரத்தில் உள்ள பத்பநாபசுவாமி கோயிலில் பாதாள அறைகள் இருப்பதாகவும் அவை நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளதால் அதில் பொக்கிஷங்கள் இருக்ககூடும் எனவே அவற்றை திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என வக்கீல் சுந்தரராஜன் பொது நல வழக்கு தொடர்ந்தார். மேலும் சுப்ரீம் கோர்ட் நியமித்த உறுப்பினர்கள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் சனிக்கிழமை உடல்நல குறைவு காரணமாக இறந்தாR.. dinamalar
-
- 1 reply
- 573 views
-
-
அமெரிக்காவிற்கான இந்திய தூதுவராக நிருபமா ராவ் நியமனம்! Published on July 17, 2011-7:07 am இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான அடுத்த இந்தியத் தூதுவராக நியமிக் கப்பட்டுள்ளதாக “த இந்து’ நாளிதழ் உத்தியோகபூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கான அடுத்த தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. நிருபமா ராவ் விரைவில் தமது பொறுப்புகளை ஏற்கவுள்ள தாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் புதுடில்லியில் தெவித்தார். அமெரிக்காவுக்கான இந்திய தூதுவரான மீரா சங்கன் இடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளிநாட்டுச் சேவையில் 1973 இல் இணைந்துகொண்ட அவர் 2009 ஓகஸ்ட் முதலாம் திகதி வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதுடன், கோகிலா ஐயருக்குப் பின்னர் அப்பதவியை …
-
- 0 replies
- 323 views
-
-
ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருக்கும் பிரெஞ்சு இராணு வத்தினரிடம் ஒரு மின்னல் விஜயம் ஒன்றைத் திடீரென பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மேற்கொண்டுள்ளார். 5 மணிநேரம் அங்கு பலரையும் சந்தித்து விட்டுத் திரும்பியுள்ளார்.இந்த விஜயம் பாதுகாப்புக் காரணங்களிற்காக மிகவும் இரகசியமாகவே ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பிரான்ஸ் இந்த ஆப்கான் நடவடிக்கையில் 2001ம் ஆண்டிலிருந்து ஈடுபட்டு வருகின்றது. இந்த நடவடிக்கை Jaques Chirac காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நிக்கோலா சாச்க்கோசி உடனடியாக பிரெஞ்சுப் படைகளின் முண்ணனி நிலைகளான கிழக்குக் காபூலின் நகரமான Tora நோக்கிச் சென்றார். அங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி 2012 முடிவிற்குள் ஆப்கானில் நடவடிக்கையிலிருக்கும் படையினரின் கால்…
-
- 0 replies
- 518 views
-
-
முன்னைநாள் உள்ளகப் புலனாய்வுத்துறை அதிகாரியும் Bourgoin-Jallieu (Isère)ற்குரிய தற்போதைய படைத்துறை அதிகாரியும் (brigadier-chef de Bourgoin-Jallieu ) பிராந்தியப் புலனாய்வு அதிகாரியுமான ஒருவர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப் பட்டுள்ளார்.முறையான வதிவிட அனுமதி இல்லாது (étrangers en situation irrégulière) பிரான்சில் தங்கியிருப்போரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சட்டவிரேதமாக வதிவிட அனுமதி பெற்றுக் கொடுத்ததாக் குற்றம் சாட்டப்பட்டே இவர் கைது செய்யபப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய் அன்று வதிவிட அனுமதியற்ற துருக்கியைச் சேர்ந்த ஒரு நபர் காவற்துறையினரிடம் முறையிடச் சென்றுள்ளார். அவர் பெருங் கோபத்திலிருந்தார். தனக்கு விசா பெற்றுத் தருவதாகக் கூறி Bourgoin-Jallieu வில் இருக…
-
- 0 replies
- 426 views
-
-
டெல்லி: வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் இந்த புதிய பதவியை ஏற்றுக்கொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று டெல்லியில் தெரிவித்தார். மீரா சங்கரை அடுத்து நிருபமா ராவை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமிக்க அரசு கடந்த மாதமே ஒப்புதல் அளித்துவிட்டது. நிருபமா ராவ் 1973-ம் ஆண்டு ஐஎப்எஸ் பேட்சை சேர்ந்தவர். அவர் 1-8-2009 அன்று வெளியுறவுத் துறைச் செயலாளராக ஆனார். இந்த பதவியை வகிக்கும் 2-வது பெண் என்ற பெருமையைப் பெற்றார். சோகிலா ஐயர் தான் இந்தியாவின்…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரதமர் பதவியை ஏற்கும் முழுத் தகுதியும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு- சரத்குமார் சென்னை: இந்திய நாட்டின் பிரதமராகும் முழுத் தகுதியும் படைத்த ஒரே தலைவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உணர்ச்சிவசப்பட்டுக் கூறியுள்ளார். சரத்குமார் இன்று தனது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடினார். ஈழத் தமிழர்களுக்காக தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்திருந்த அவர், தனது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் ஏழை எளியோருக்கு இன்று உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். சரத் பிறந்த நாள் இளைஞர் தினம் பிறந்த நாளையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் சரத்குமார். அப்போது அவர் பேசுகையில், …
-
- 1 reply
- 586 views
-
-
வெள்ளையும் சொள்ளையுமாக கதர் அணிந்தவர் கள் குறுக்கும் நெடுக்கு மாக நடக்க, குல்லா அணிந்த தியாகிகள் கையில் கத்தையான காகிதங்களோடு காத்திருக்கிறார்கள். தேர்தலில் தோற்றாலும் பரபரப்பாகவே இருக்கிறது சத்தியமூர்த்தி பவன். ட்ரேட் மார்க் சிரிப்போடு கும்பிடு போட்டு அமர்கிறார் தங்கபாலு. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி! (ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகும், இந்த இதழ் அச்சுக்குப் போகும் வரையிலும்!) ''தேர்தல் தோல்வியை எப்படி எடுத்துக்கிட்டீங்க?'' (சிரிக்கிறார்) ''ஒண்ணு மட்டும் நிச்சயம். கேரளா மாதிரி தமிழ்நாட்டு மக்களும் ஆட்சி அதிகாரத்தை மாத்தி மாத்திக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்களுக்கு விஜயகாந்த்தோட மூன்றாவது அணி அமைக்க வாய்ப்பு இருந்தது. அ.தி.மு.க-வோட கூட்டணி அமைச்சு, இப…
-
- 1 reply
- 562 views
-
-
பாகிஸ்தானின் மறைமுகப் போர்: அத்வானி மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், பாகிஸ்தான் நடத்தும் மறைமுகப் போர் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குற்றம்சாட்டினார். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் சமரசம் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மும்பையில் மூன்று இடங்களில் புதன்கிழமை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களை எல்.கே.அத்வானி வியாழக்கிழமை பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தனது மென்மையான போக்கை கைவிட வேண்டும். புதன்கிழமை மும்பையில் நடந்த சம்பவத்துக்குப் பிறகாவது, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் சமரசம் இல்லை என்ற நிலையை இந்தியா எடுக்க வேண்டும். பயங்கரவாத்தின் வேர்களை களைய…
-
- 2 replies
- 340 views
-
-
2ஜி விவகாரம்: ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐயிடம் பாஜக நேரில் வலியுறுத்தல் டெல்லி: 2ஜி ஊழல் விவகாரத்தில் முன்பு நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ இயக்குனர்ர் ஏ.பி.சிங்கை நேரில் சந்தித்து பாஜக குழு வலியுறுத்தியது. வழக்கமாக சிபிஐ இயக்குனர்கள் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பதில்லை. ஆனால், தற்போது பாஜக எம்பி பிரகாஷ் ஜாவதேகர் தலைமையில் 5 எம்பிக்கள் அவரை சந்தித்த அனுமதி கோரியதையடுத்து, சிங் அவர்களை அனுமதித்தார். இதையடுத்து ஜாவேத்கர், மாயா சிங், சிவகுமார் உதாசி, பூபேந்திர யாதவ் மற்றும் ஜகத் பிரசாத் நடா ஆகியோர் அடங்கிய குழு ஏ.பி.சிங்கை இன்று சந்தித்து ஸ்பெக்ரம் லைசென்ஸ் விற்பனைக் கொள்கைக்கு ப.சிதம்பரம…
-
- 2 replies
- 368 views
-
-
கனிமொழிக்கு காட்டிய சென்டிமெண்டை கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! சென்னை: கனிமொழிக்குக் காட்டிய சென்டிமென்டை கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும். அன்று அவர் பாரபட்சமாக நடந்து கொண்டதால் அவர் மகளே பாதிக்கப்பட்டுள்ளார் என்றார் நடிகை ரஞ்சிதா. நித்யானந்தாவுடன் ரஞ்சிதா தோன்றிய செக்ஸ் வீடியோ பொய்யானது என கூறி வருகின்றனர். அந்த வீடியோவை ஒளிபரப்பு செய்த சன் டி.வி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் ரஞ்சிதா புகார் அளித்துள்ளார். இப்போது முன்னணிப் பத்திரிகைகளின் நிருபர்கள் சிலரை அழைத்து தனியாக பேட்டி கொடுத்து வருகிறார் ரஞ்சிதா. அப்படி சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில், "முன்பை விட நான் இப்போது அழகாக இருப்பதாக கூ…
-
- 8 replies
- 775 views
-
-
9 ஜூலை 2011, தெற்கு சூடான் என்ற புதிய தேசம் உதயமாகியது. அன்று முதல் ஆப்பிரிக்க கண்டத்தின் 54 வது நாடாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் 193 வது நாடாகவும் இணைந்துள்ளது. இந்தப் புதிய தேசத்தை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் அங்கீகரித்துள்ளன. தெற்கு சூடானின் எண்ணை வளத்தை நுகரும் சீனாவும் இராஜதந்திர உறவுகளைப் பேண முன்வந்துள்ளது. இதற்கிடையே, தமிழ்த் தேசியவாதிகள் வழமை போலவே தெற்கு சூடானுடன், தமிழீழத்தை தொடர்பு படுத்தி பேச ஆரம்பித்து விட்டனர். இவ்விரண்டு தேசியப் பிரச்சினைகளுக்கு இடையில் சில ஒற்றுமைகள் காணப்பட்டாலும், இறுதிக் கட்ட தீர்மானம் தொடர்பாக பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. சூடான் நாட்டின் மொத்த எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தெற்கு சூடானில் உள்ளது. ஒரு துளி எண்ணெய…
-
- 0 replies
- 363 views
-
-
இந்தோனேஷியாவில் எரிமலை குமுறுகிறது _ வீரகேசரி இணையம் 7/15/2011 4:56:33 PM Share இந்தோனேஷியாவில் சுலாவெஸி மாகாணத்தில் எரிமலையொன்று வெடித்துச் சிதறி வருவதால் அப்பகுதியில் வாழ்ந்துவரும் மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேஷியாவின் சுலாவெஸிமாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள லோகொன் எனும் எரிமலை நேற்று இரவு வெடித்துச் சிதறியது. புகையுடன் கூடிய தீச்சுவாலையுடன் எரிமலைக் குழம்பையும் (லாவா) கக்குகின்றது. இதன்போது சுமார் 4800 அடி உயரத்திற்கு தூசு மற்றும் சிறுகற்களும் தெறிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு நிலவும் அசாதாரண சூழலைக் கருத்திற் கொண்டு அப்பகுதியில் வசி்ப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாற…
-
- 0 replies
- 331 views
-
-
சன் டிவி சக்சேனா - அய்யப்பன் மீண்டும் கைது திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களான செல்வராஜ், சண்முகவேல், ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது கூட்டாளி ஐயப்பனை, போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சில வழக்குளில் சக்சேனாவையும், அவரது கூட்டாளி ஐயப்பனையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 15ம் தேதி, சக்சேனா மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராஜா, வல்லக்கோட்டை என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தின் வினியோகம் தொடர்பான விவகாரத்தில், 50 லட்சம் ரூபாயை சக்சேனா மோசடி செய்து விட்டதாக, ராஜா, விருகம…
-
- 0 replies
- 770 views
-
-
மும்பையில் குண்டு வெடித்தபோது சிதறிய ரூ.25 கோடி வைரங்கள்! Posted by இரும்பொறை on 15/07/2011 in உலகம், செய்தி மும்பையின் ஓபரா ஹவுஸ் பகுதியில் நேற்று முன் தினம் வெடிகுண்டு வெடித்தபோது குண்டுகளின் பாகங்கள், சேதமடைந்த கட்டிடங்களின் பாகங்களுடன் கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரங்களும் சிதறின. ஓபரா ஹவுஸ் பகுதியின் கஹூ கல்லி எனப்படும் சிறிய தெரு வைர விற்பனைக்குப் பேர் போனது. பெரும்பாலும் குஜராத்திகளால் நடத்தப்படும் இந்தக் கடைகளில் ஒரு நாளைக்கு பல கோடி மதிப்புள்ள வைரங்கள் விற்பனையாவது வழக்கம். கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணிக்கு இந்தப் பகுதியில் வெடிகுண்டு வெடித்தபோது கடைகளை மூடத் தயாராகிக் கொண்டிருந்தனர் பெரும்பாலான வியாபாரிகள். வைரங்களை பட்டர் பேப்பரில் வைத்து மடித்து, வெல…
-
- 5 replies
- 762 views
-
-
குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் ஒன்றரை மணி நேரமாக பேசிய நால்வர்- வீடியோவில் சிக்கினர் Posted by இரும்பொறை on 15/07/2011 in செய்தி மும்பையில் குண்டுவெடிப்பு நடந்த ஓபரா ஹவுஸ் பகுதியில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நான்கு பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். கண்காணிப்பு கேமராவில் அவர்கள் பதிவாகியுள்ளனர். அவர்கள் யார், என்ன பேசிக் கொண்டிருந்தனர் என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும், என்ஐஏ குழுவினரும் விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் குண்டுவெடிப்பு நடந்த ஓபஹா ஹவுஸ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு ரகசியக் க…
-
- 0 replies
- 478 views
-
-
ஒயின் ஷாப் ஊழியர் தயாரிப்பாளரான கதை - வெளிவராத பகீர் பின்னணி நமது அடிமைச் சங்கிலியை அறுத்தெறிவதற்கான காலம் இன்று இல்லாமல் போகலாம். நாளை... நாளை மறுநாள்...’ நீக்ரோ இன மக்கள் தங்கள் விடுதலைக்காகப் பாடிய இந்தப் பாடல் தான், தற்போது தமிழக திரையுலகினருக்கு சுதந்திர கீதமாகியிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தான் பட்ட வேதனைகளை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார் செல்வராஜ். இதன்பிறகு பதிவு செய்யப்பட்ட புகாரில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா கைது செய்யப்பட்டார். சக்சேனா கைது செய்யப்பட்டதை விட, அவருக்கு ‘ஆல் இன் ஆலாக’ இருந்த ஐயப்பன் கைது செய்யப்பட்டதுதான் திரையுலகினருக்கு இனிப்பூட்டும் செய்தி. இந்நிலையில்…
-
- 0 replies
- 721 views
-
-
சன் பிக்சர்ஸ் தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா கைது செய்யப்பட்டதை திரையுலகமே கொண்டாடி வருகிறது. தி.மு.க. ஆதரவாளராகவே பல ஆண்டுகள் இருந்த நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூட, விஜய்க்கு அப்போது கொடுக்கப்பட்ட நெருக்கடிகளைப் பார்த்து கொதித்து எழுந்தார். கடந்த சில நாட்களாக சன்பிக்சர்ஸ் மீது வழக்குகள் பாயும் நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து கேள்விகளைத் தொடுத்தோம்... சன் பிக்சர்ஸால் விஜய்க்கு எந்த வகையில் பாதிப்பு இருந்தது? ‘‘ஈரோட்டில் விஜய்யின் மக்கள் இயக்க நற்பணி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜய்யின் காலடி அந்த ஊரில் படக்கூடாது என்று அப்போதைய தி.மு.க. மந் திரியின் மகன் போலீஸுக்கு உத்தரவு போடுகிறார்... போலீஸாரும் நெருக…
-
- 0 replies
- 705 views
-
-
வெள்ளிக்கிழமை, 15, ஜூலை 2011 (9:6 IST) அணுசக்தி மூலம் மின்சார உற்பத்தியை கைவிட ஜப்பான் முடிவு ஜப்பானில் புகுஷிமா அணுஉலைக்கூடத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கதிரியக்க கசிவு ஏற்பட்டது. விபத்து 4 ஆண்டுகளான பிறகும், கதிரியக்க கசிவு நின்றபாடில்லை. இதனால் சுவாசிக்கும் காற்றிலும் தண்ணீரிலும் கூட கதிரியக்கம் கலந்து உள்ளது. இதனால் அணுமின் நிலையங்களை மூடுவது என்ற முடிவுக்கு ஜப்பான் பிரதமர் கான் வந்து விட்டார். இதை அவர் புகுஷிமா அணுஉலைக்கூடத்துக்கு சென்றபோது தெரிவித்தார். அணுமின் உற்பத்தியை ஜப்பான் கைவிடுவது என்று தீர்மானித்து உள்ளது. இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் அணுஉலைக்கூடங்களே இருக்காது என்று அவர் தெரிவித்தார். ஜப்பானில் மொத்தம் உள்ள 54…
-
- 0 replies
- 350 views
-
-
நவீன பிச்சைக்காரிகள் கைது July 14, 2011 மஹாராஷ்டிர மாநிலம் லத்தூரில் படு நாகரீகமாக உடை அணிந்து, லாட்ஜில் தங்கியிருந்து கொண்டு, ஆண்களைக் குறி வைத்து பிச்சை கேட்டு தொல்லை செய்த 43 ராஜஸ்தான் பெண்களை போலீஸார் கைது செய்தனர்.லத்தூர் நகர வீதிகளில் ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்து படு நாகரீகமான கோலத்தில் 43 பெண்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். எந்தக் காலேஜீல் படிக்கிறீங்க என்று கேட்கக் கூடிய அளவுக்கு அவர்கள் படு நாகரீகமாகவும் காணப்பட்டனர். ஆனால் அப்படி ஆச்சரியத்துடன் பார்த்தவர்களிடம் நெருங்கி வந்து, அம்மா, தாயே என்று கையை தூக்கியபோதுதான் அவர்கள் பிச்சை எடுப்பவர்கள் என்று தெரிந்தது.அந்தப் பெண்கள் ஆண்களை மட்டுமே குறி வைத்து அணுகினார்கள். தாங்கள் கஷ்டப்படுவதாகவும், பசிக் கொடுமையால் அவதி…
-
- 3 replies
- 1.3k views
-