Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [Wednesday, 2011-06-22 19:48:55] யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் ஓய்வு நிலையில் உள்ள படையினர் தமது நேரங்களை பயிற்ச்செய்கை போன்ற பணிகளுக்கு பயன்படுத்துவது பெருமை அளிக்கின்றது என்று கமநலசேவைகள் அமைச்சர் தெரிவித்தார். அண்மையில் வடக்கிற்கு வருகை தந்த கமநலசேவைகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன படையினரால் மேற்கொள்ளப்படும் பயிற்ச்செய்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு பெருமிதம் அடைந்தார். வடக்கில் போர் நடைபெற்ற பகுதிகளில் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் நிலை கொண்டுள்ள படையினர் பயிர்ச்செய்கைளில் ஈடுபட்டு வருகிறார்கள். தக்காளி, கத்தரி, மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்செய்கைகளை மேற்கொள்கிறார்கள். கிளிநொச்சியில் 400 ஏக்கர் நிலப்பகுதியிலும் கணேசபுரத்தில் 300 ஏக்கர் நிலப்பகுதியிலும் துண…

  2. [ புதன்கிழமை, 22 யூன் 2011, 10:19 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டமையானது தமிழ்நாடு அரசியலில் புதியதொரு திருப்பம் மாத்திரமன்று. மாறாக, 'உலகத் தமிழர்களின் தலைவர்' தான்தான் எனக் கூறிக்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத்தினது தலைவர் எம். கருணாநிதி தனது அந்த நிலையினை இழப்பதையே காட்டுகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகத் தமிழர்களின் ஒரேயொரு தலைவர் தான்தான் என அங்கீகரிக்கப்படவேண்டும் என எப்போதும் விரும்பிய ஒருவர்தான் கருணாநிதி. யூன் 2010ம் ஆண்டு தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இடம்பெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் க.சிவத்தம்பி உள்ளிட்ட மூத்த தமிழ் அறிஞர்கள் 'உலகத் தமிழரின் தலைவ…

  3. விமர்சனம் செய்வது என முடிவு செய்துவிட்டால், அது கருணா​நிதியோ... ஜெயலலிதா​வோ... பிரித்து மேய்ந்துவிடுவார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இப்போது கருணா​நிதியையும் அவர் குடும்பத்​தாரையும், உண்டு... இல்லை என ஆக்கிக்கொண்டு இருக்கிறார்! ''ஊழலுக்கு எதிராக உண்ணாவிரம் இருக்கும்பாபா ராம்தேவை கடுமையாக விமர்சனம் செய்கி றீர்களே?'' ''ஒரு விஷயத்தை நல்லாப் புரிஞ்சுக்கோங்க. ஊழல், திருட்டுத்தனம், சமூக விரோதச் செயல்கள் போன்றவற்றைக் குறைக்கலாமே தவிர, முழுமையாக ஒழிக்க முடியாது. மனித குலம் இருக்கும் வரை இது எல்லாமே நிச்சயமாக இருக்கும். எந்த விஷயத்தைப்பற்றி நாம் பேசுறோமோ... அதுல முதலில் நாம யோக்கியனா இருக்கணும். கறுப்புப் பணத்தைப்பத்தி வாய் கிழியப் பேசும் பாபா ராம்தேவ், தன்னை சந்திக்க வரும் …

  4. "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி, டில்லி திகார் சிறையில் உள்ள தன் மகள் கனிமொழியை நேற்று சந்தித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, "அப்செட்' ஆனார். டில்லியில் இருந்த போதும், நேற்று மாலை நடந்த, ஐ.மு., கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். கனிமொழி, கடைசி முயற்சியாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமின் மனுவும், நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது. சிறப்பு கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவான பிறகே, மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்ய முடியும் என்பதால், அவர், மேலும், 45 நாட்களுக்கு சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க., தலைவரான கருணாநிதி, தன் மகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடிவு செய்தார். நேற்று காலை, சென்னையிலிருந்து, …

  5. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில், ஈழ மக்களின் துயர் நீக்கும் வழி தென்படாத நிலையில், ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்காக ஈரமனம் கொண்ட இளைஞர்கள் மெரினாவில் அஞ்சலி செலுத்தத் தயாராகி வருகிறார்கள்! 'மே 17 இயக்கத்தின்’ உறுப்பினர்களில் ஒருவரான திருமுருகன் :. ''ஈழத்தில் நடந்த படுகொலைகள், இந்திய அரசின் துணை இல்லாமல் சிங்கள அரசாங்கம் மட்டுமே செய்தது அல்ல. அங்கே 'எத்தனை பேர் செத்தார்கள், எத்தனை பேர் முகாம்களில் இருக்கிறார்கள்’ என்ற விவரங்களை இன்னும் அரசு சொல்லவில்லை. 'சக தமிழனாக, தோழனாக ஈழத்தில் என்ன நடக்கிறது?’ என்கிற கேள்வியை ஒரு குடிமகனாக நான் முன் நின்று கேட்கும்போது, இந்த அரசாங்கம் என்னிடம் நேர்மையற்றதாக நடந்து கொள்கிறது. நான் ஏமாற்றப்பட்டதன் வலியை உணர்ந்து இந்த அரசு பதில் ச…

  6. கூடா நட்பு கேடாய் முடியும்’ என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சொன்னது யாருக்கு பொருந்துகிறதோ,இல்லையோ திகார் சிறையில் இருக்கும் ஷரத்குமாருக்கு மிகச்சரியாக பொருந்தும். ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கனிமொழி, ஆ.ராசா இருவருக்கும் ஊழலில் என்ன பங்கு இருக்கிறது என்பதை சி.பி.ஐ. சொல்லி விட்டது. கனிமொழியோடு கைது செய்யப்பட்ட, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் ஷரத்குமாருக்கு என்ன தொடர்பு? யார் இந்த ஷரத்குமார்? பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷரத். இவரது தந்தை தொழிலதிபர். பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் செட்டிலாகி விட்டார்கள். சன் டி.வி. குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுடன் டான்பாஸ்கோ பள்ளி, லயோலா கல்லூரியில் படித்தவர் ஷரத்குமார். பிறகு, கலாநிதியுடன் …

  7. வீரகேசரி இணையம் 6/21/2011 9:53:44 PM டுனீசிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜி‌னி-அல்-அபிடின் பென்அலி மற்றும் அவரது மனைவிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக அதிகாரத்தை பயன்படுத்தி சொத்துக்கள் சேர்த்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது டுனீசியாவில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி காரணமாக அந்நாட்டு அதிபராக 23 ஆண்டுகள் பதவியில் இருந்த ஜி‌னி-அல்-அபிடின் பென்அலி கடந்த ஜனவரி மாதம் பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ளர். ‌ இவர்களுக்கு சிறை தண்டனைக்கு மேலதிகமாக 90 மில்லியன் டுனீசியன் தினார் (65.5 மில்லியன் டொலர்) அபராதமும் விதிக்கப்பட்டது. வர…

  8. Jun 22, 2011 / பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த 747-8 இன்டர்கான்டினன்டல் ஜம்போ விமானம் முதல் முறையாக இடம் பெற்றுள்ளது.இதில் மொத்தம் 467 இருக்கைகள் உள்ளன. ஏர் பஸ் நிறுவனத்தின் ஏ380 ரக விமானத்துக்கு போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானத்துக்கு இப்போதே ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. பயணிகள் விமானத்துக்கு 33 ஆர்டர்களும், சரக்கு விமானத்துக்கு 76 ஆர்டர்களும் கிடைத்துள்ளது. http://www.pathivu.com/news/17017/57/.aspx ஜேர்மனியின் லுப்தான்சா நிறுவனம் 20 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் போயிங் 747-8…

  9. எப்போது பேசினாலும் பரபரப்பான விஷயங்களை அள்ளிக் கொட்டுவதில் வல்லவர் ம.நடராஜன். இப்போது அவரிடம் சிக்கியிருப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் பங்கு. அவரிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைச் சொல்லி மலைக்க வைக்கிறார். இனி அவரிடம் பேசியதிலிருந்து... ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுகிறதே...? ‘‘இந்த மாறன்கள் ஆசியாவின் பெரிய பணக்காரர்களான கதை அவர்களது தந்தை முரசொலி மாறனில் இருந்தே தொடங்குகிறது. திருவாரூரில் இருந்து சென்னைக்கு கல்லூரிப் படிப்புக்காக வந்த மாறன், முரசொலி அலுவலகப் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கினார்.ஒரே ஒரு கதை எழுதி எழுத்தாளரானார். ‘மேகலா பிக்சர்ஸ்’ என்ற படக் கம்பெனியை ஆரம்பித்து ஊரெல்லாம் கடன் வாங்கினார்.அவரின்…

  10. குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இப்போதுதான் சந்திக்கிறது'' - 'மனோகரா’ படத்துக்காக கருணாநிதியின் பேனா தீட்டிய அதே வசனத்தை, இப்போது கோபாலபுரம், பாட்டியாலா கோர்ட், சி.ஐ.டி. காலனி வீடு, திஹார் ஜெயில் காட்சிகள் நினைவூட்டுகின்றன! ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுப் புகார் படிப்படி யாக முன்னேறி, கனிமொழி வரையில் சிறைக் கதவுகள் திறந்துகொண்டபோது, தி.மு.க. தொண்டன் துடித்தான். அடுத்தபடியாக, தயாநிதி மாறனை மையம்கொண்டு 'தெகல்ஹா' இதழ் கிளப்பிய புயல் வேகம் பெறும் நேரம் இது! படிப்படியாக திசை மாறி மையம் கொள்ளும் இந்தப் புயலை, ஒரே கட்சியின் வெவ்வேறு முகாம்களில் இருப்பவர்கள் பரஸ்பரம் ரசிக்கும் விதத்தை சாதாரண கோஷ்டி அரசியலாகவோ, குடும்ப அரசியலாகவோ மட்டுமே சொல…

  11. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கைதாகி சிறையில் இருக்கும் தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது இதுகுறித்து விளக்கம் கேட்டு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் விசாரிக்க மறுத்ததையடுத்து நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் கொண்ட புதிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. 20.06.2011 அன்று மனு மீதான விசாரணையின் போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். http://www.nakk…

  12. ஊர்க் குசும்பன் கலைஞரும் உலகக் குசும்பன் தயாநிதி மாறனும் எம்.ஜி.ஆர் சிகிச்சை முடிந்து திரும்பி வரும்வரை என்னை முதல்வராக்குங்கள், அவர் திரும்பியதும் ராஜினாமா செய்து அவரையே முதல்வர் ஆக்குவேன்’ என்பதில் ஆரம்பித்து ‘சிறுத்தைகளுக்கு இடம் உண்டு, சிங்கங்களுக்குக் கிடையாதா’ என்ற தேர்தல் பிரச்சாரம் வரை தனது குசும்புத் தனத்தால் ராஜ தந்திரி என்றும் அரசியல் சாணக்கியன் என்றும் பெயர் வாங்கியவர் கலைஞர். அவரது பேரப்பிள்ளையான தயாநிதி மாறன் தாத்தாவுக்கே ஆப்பு வைத்த உலகக் குசும்பன் என்பது இப்போது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. முரசொலி மாறன் இருந்தவரை, கலைஞரே ஒருமுறை சொன்னது போல் ‘கலைஞரின் மனசாட்சி’யாகவே வாழ்ந்தார். திமுகவிற்கோ கலைஞருக்கோ கேடு நினைப்பது என்ற எண்ணமே …

    • 0 replies
    • 659 views
  13. திங்கட்கிழமை, 20 ஜூன் 2011 13:23 | இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்ட கச்சதீவை மீளப்பெற வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள்விடுத்து வரும் நிலையில் இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீளப் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதேவேளை கச்சதீவை மீளப்பெற வேண்டுமென்று இந்திய மத்திய அரசிடம் தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பது குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் அண்மையில் உத்தியோகபூர்வமாக தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் அறிவித்துள்ளார். மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய மத்திய அரசுக்கு கச்சதீவை திரும்ப பெற்றுக் கொள்வது குறித்து எந்த விதமான நோக்கங்கள…

  14. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை இனக்குற்றவாளியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கூறினார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஐக்கிய நாடுகள் சபை குழு வெளியிட்ட அறிக்கையில இலங்கை அதிபரை மட்டும் போர்க்குற்றவாளியாகக் கூறவில்லை. இருதரப்பையும் குற்றம் சாட்டிதான் அவர்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபை திரும்பப் பெற வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களுக்காக, மக்களின் விடுதலைக்காகப் போராடிய இயக்கமாகும். ஐக்கிய நாட…

  15. [ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 08:58 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்கா கடற்படையின் உதவியுடன் இந்தியக் கடற்பகுதியில் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் மீண்டும் நடமாடத் தொடங்கியுள்ளதாக இந்திய இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல் சேவைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. கேரள கடற்பகுதியில் திருவனந்தபுரத்துக்கு அப்பால் சென்று கொண்டிருந்த கப்பல்களை கடத்த சோமாலிய கடற்கொள்ளையர்கள் மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் தொடர்பாக இந்திய கடற்படையும், கடலோரக் காவல்படையும் கவலையடைந்துள்ளன. கடந்த சனிக்கிழமை காலை 8.11 மணியளவில் திருவனந்தபுரத்துக்கு மேற்கே 28 கி.மீ தொலைவில் கப்பல் ஒன்றை கடத்தும் முதலாவது …

  16. சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தில் பெரும்பகுதி காங்கிரசாருடையது என்று மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும், ‘’போபர்ஸ் விவகாரத்தில் பெறப்பட்ட பணம் இத்தாலி வங்கியில் போடப்பட்டுள்ளது. காங்கிரசார் பணம் என்பதாலேயே கறுப்புப் பணத்தை மீட்க தயக்கம் காட்டுகிறது அரசு. கறுப்புப் பணத்தை மீட்பதில் அனைத்து தரப்பும் குரல் கொடுப்பது அவசியம்’’ என்று தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் இது குறித்து, ’’சி.பி.ஐ. அமைப்பை காங்கிரஸ் தனது கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. இந்த அமைப்பை தனது லாக்கரில் காங்கிரஸ் பூட்டி வைத்துள்ளது. தேவைப்படும் போது அதை எடுத்து பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ. ஏவி விட…

  17. போரை நிறுத்தக் கோரி உண்ணாவிரத நாடகமாடினார் முன்னாள் முதல்வர் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை நாடகம் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக சாடியுள்ளார். சிலர் காலை உணவு சாப்பிட்டு விட்டு கடற்கரை ரோட்டில் உண்ணாவிரதம் இருந்துவிட்டு மதிய சாப்பாடு வேளை வந்ததும் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்ட சம்பவமும் உண்டு. அது போல் இந்த உண்ணாவிரதம் கிடையாது. என்று ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ்வின் உண்ணாவிரதம் அரசியல் ஆக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தவேளையில் இளங்கோவன் பேசினார். மேலும் அவர் தேர்தல…

    • 4 replies
    • 790 views
  18. ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கிறது. எந்த தமிழன் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டுமென்று கேட்டான். வீம்பிற்காக காங்கிரஸ் அரசு சில காலத்திற்கு அந்த கப்பலை ஓட்டுவிட்டு பின்னர் நிறுத்திவிடும். தொடர்ந்து இந்த கப்பலை ஒரு ஆறு மாதத்திற்கு காங்கிரஸ் அ…

  19. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மிஸ்ட்ரல் போர்க்கப்பலை வாங்க பிரான்சுடன் ரஷ்யா ஒப்பந்தம் செய்தது.இந்த ஒப்பந்தத்தால் ஆயிரம் பேருக்கு 4 ஆண்டுகளுக்கு வேலை கிடைக்கும் என பிரான்ஸ் அரசு தெரிவித்தது. ரஷ்யா மேற்கொண்ட இந்த ஒப்பந்தம் காரணமாக முன்னாள் சோவியத் நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை உஷார் அடைந்துள்ளன. ரஷ்யாவின் ரோசோபோரன் எக்ஸ்போர்ட் மிலிட்டரி கொர்ப்பரேஷன் மற்றும் பிரான்ஸ் போர்க்கப்பல் தயாரிக்கும் டி.சி.என்.எஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. செயின்ட் பீட்ஸ்பர்க் பொருளாதார அமைப்பு கூட்டத்தின் இடையே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 112 கோடி யூரோ மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் போது பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பியரே லெலோசே மற்றும் ரஷ்ய ஜனாதிப…

  20. ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், பேராசிரியர் தீரன், அற்புதம்மாள், கலைக்கோட்டுதயம், அன்புதென்னரசு, கோட்டைகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அய்யநாதன் தீர்மானங்களை வாசித்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குனர் மணிவண்ணன், இலங்கை தமிழர்களுக்காக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க…

  21. ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில், இலங்கையில் ஈழத் தமிழர்கள் அரை நூற்றாண்டு காலமாக விடியலுக்காக போராடி வருகிறார்கள். இலங்கையில் குடியேற சென்றவர்கள் எப்படி அந்த நாட்டு மண்ணுக்கு சொந்தம் கொண்டாட முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஈழம் தமிழர்களின் தமிழ் மடி அவர்கள்தான் அம்மண்ணின் மை…

  22. மதுரையில் மத்திய அதிவிரைவு அதிரடிப் படையினர் 95 பேர் திடீர் முகாமிட்டுள்ளனர். மீனாட்சி அம்மன் கோயில் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு நிலவரம் குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அதிரடிப் படையினர் திடீரென மதுரையில் முகாமிட்டுள்ளது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்பட்டுள்ளது. http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=56238

  23. ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ், இலங்கையில் ஈழத் தமிழர்களின் நலனை காக்கும் வகையில் தமிழக சட்ட மன்றத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கவும் ஜெயலலிதா தொடர்ந்து குரல் கொடுப்பார். யாருக்கும் அவர் பயப்படமாட்டார். அவரது துணிச்சல் பாராட்டுக்குறியது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீராங்கனை வேலு நாச்சியார் போன்…

  24. முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த முதல் கோரிக்கையே இலங்கைப் பிரச்சனை பற்றித்தான் என்று சீமான் பேசினார். ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், பேராசிரியர் தீரன், அற்புதம்மாள், கலைக்கோட்டுதயம், அன்புதென்னரசு, கோட்டைகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அய்யநாதன் தீர்மானங்களை வாசித்தார்.…

  25. ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம் :சீமான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம் என்று டைரக்டரும், நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் சீரியஸாக பேசி காமெடி செய்துள்ளார். பெப்ஸி விஜயன் மகன் நடிக்கும் மார்க்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் விஜய் மற்றும் சல்மான்கான், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் சீமான் பேசும்போது, ‘’தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே வழி வகுத்தது’’ என்றார். http://www.nakkheeeran.com…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.