Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மே. வங்கத்திற்கு மட்டும் மத்திய அரசு அள்ளித் தருவதால்தான் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது-ஜெ. சென்னை: தமிழகம் கோரிய நிதியில் ஒரு துளியைக் கூட மத்திய அரசு தரவில்லை. ஆனால் தனது அரசுக்கு ஆதரவு தரும் திரினமூல் காங்கிரஸ் ஆட்சி புரியும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அள்ளிக் கொடுத்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. இதன் காரணமாகவே தமிழகத்தில் பால், பஸ் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். பஸ் கட்டணம், பால் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்து ஜெயா டிவியில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவர் பேசும்போது, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு தற்போது திவாலாகும…

  2. மேகனுக்கு... இங்கிலாந்து நாளிதழ் நஸ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டது தொடர்பாக மேகனுக்கு இங்கிலாந்து நாளிதழ் நஸ்டஈடு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹரி – மேகன் மேர்க்கல் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர். வின்ட்சர் கோட்டை தேவாலயத்தில் இவர்களது திருமணம், கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடிகை மேகன், இளவரசி மேகன் ஆக மாறினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஹரி – மேகன் தம்பதி இங்கிலாந்து அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்து அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் குடியேறினர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மேகன் மீண…

  3. மேகன் கார் விபத்தில் உயிரிழக்கக்கூடும் என்கிறார் அமெரிக்க ராப் பாடகி by : Benitlas ஹரியின் மனைவி மேகன் 2022 இல் கார் விபத்தில் உயிரிழப்பார் என பிரபல பாடகி ஒருவர் கணித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ராப் பாடகியான Azealia Banks, 2020 முதல் 2030 வரை, அதாவது அடுத்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் நடக்கும் எனக் கணித்துள்ளார். அவற்றில் 2022இல் மேகன் கார் விபத்தில் உயிரிழப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரபல மொடலும் ஊடகவியலாளருமான கிம் கதர்ஷியன் அவரது கணவரை 2026இல் விவாகரத்துச் செய்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2024இல் பிரபல பாடகி பியோன்ஸும் அவரது கணவரும் பகிரங்க திருமண உ…

  4. மேகாலயா-நாகலாந்து தேர்தல் ஆட்சி அமைப்பதில் இழுபறி; காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை திகதி : Sunday, 09 Mar 2008, [sindhu] திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து 4-வது முறை யாக ஆட்சியை பிடித்துள்ளது. புதிய அரசு பதவி ஏற்பு விழா நாளை அகர்தலாவில் நடைபெறுகிறது. முதல்-மந்திரியாக மாணிக் சர்க்கார் 3-வது முறையாக பதவி ஏற்கிறார். முன்னதாக புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் சட்டசபை கட்சி தலைவராக மாணிக் சர்க்கார் தேர்ந்து எடுக்கப்படுகிறார். திரிபுராவில் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் மேகாலயா, நாகலாந்து மாநி லங்களில் காங்கிரஸ் கட்சி…

    • 0 replies
    • 635 views
  5. மேகி நூடுல்ஸூக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான நிறுவனம், பதஞ்சலி நூடுல்ஸை அறிமுகம் செய்துள்ளது.நெஸ்லே இந்தியா நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் காரீயமும், ரசாயன உப்பும் அதிகம் கலக்கப்பட்டுள்ளதாக கூறி அதன் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்திருந்தது. இந்த தடையை மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்ததை அடுத்து 5 மாதங்களுக்கு பிறகு மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.இந்த நிலையில், மேகிக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம் நூடுல்ஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகளையும் தயாரித்து வருகிறது. …

  6. மேகி நூடுல்ஸை விற்பனையிலிருந்து இருந்து திரும்பப்பெறுவதாக நெஸ்லே இந்தியா நிறுவனம் இன்று அதிகாலை (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் டெல்லி அரசு மேகிக்கு 15 நாள் தடை விதித்தது. தொடர்ந்து நேற்று உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர், குஜராத் மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெறும் ஆய்வுகளைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸை விற்பனையிலிரு…

    • 0 replies
    • 481 views
  7. மேசைக்கு கீழே பொறிஸ்ஜோன்சனின் கை சில்மிசம் செய்தது- பல வருடங்களிற்கு முன்னர் பாதிக்கப்பட்ட பெண் பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இருபது வருடங்களிற்கு முன்னர் இரு பெண்களுடன் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார். சார்லொட் எட்வேர்டஸ் என்ற பத்தி எழுத்தாளர் 20 வருடத்திற்கு முன்னர் பொறிஸ்ஜோன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என சண்டேடைம்ஸில் எழுதியுள்ளார். 1999 இல் நான் ஸ்பெக்டேட்டர் சஞ்சிகையின் ஆசிரியராகயிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். மதிய உணவின் பின்னர் நான் இதனை எனது சக ஊழியரிடம் தெரிவித்துள்ளேன்,அதற்கு பொறிஸ்ஜோன்சன் தன்னிடமும் அவ்வாறு நடந்துகொண்டார் என …

  8. மேடையிலிருந்து திடீரென பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்ட டிரம்ப் : அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் (காணொளி இணைப்பு) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் நெவடா நகரில் இடம்பெற்ற பிரசாரத்தில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது, கூட்டத்திலிருந்த மர்ம நபர் ஒருவர், டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளார். உடனே சுதாரித்த அவரது பாதுகாவலர்கள் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. தனது ஒரு கையெழுத்தால் ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றும் வலிமை கொண்டது அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்து. அந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு எப்போ…

  9. மேடையிலிருந்து விழுந்தார் இந்திய அமைச்சர் இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமதுக்கு சனிக்கிழமை இரவு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பஹ்ரைனில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கும்போது 5 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக பஹ்ரைன் இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அந்த முருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலிஃபா ஞாயிறுக்கிழமை அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். thinakkural.com

    • 3 replies
    • 1.3k views
  10. (தினத்தந்தி) பெனாசிர் பேசிய பொதுக்கூட்ட மேடையில் நின்ற அவரது உதவியாளர் வினோதமான சைகைகளை செய்ததாக இப்போது தெரிய வந்து உள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். இதனால் பெனாசிர் கொலையில் அவருக்கு தொடர்பு உண்டா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. புதுப்புது தகவல்கள் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் கடந்த டிசம்பர் 27-ந் தேதி ராவல்பிண்டி நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். பொதுக்கூட்ட மேடையில் பேசிவிட்டு காரில் ஏறி அமர்ந்த அவர் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது மனித வெடிகுண்டும் வெடித்தது. இதுவரை பாகிஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பெனாசிரை கொன்றது யார்? என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல் எத…

    • 2 replies
    • 1.7k views
  11. உத்திர பிரதேச மாநில அமைச்சர் மேடையில் மாவட்ட பெண் நீதிபதியின் அழகை வர்ணித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தின் காதி மற்றும் கிராமோத்யோக் துறை அமைச்சரான ராஜாராம் பாண்டே அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் சுல்தான்பூரின் மாவட்ட பெண் நீதிபதி தனலட்சுமியின் அழகை வர்ணித்தார். ராஜாராமின் இச்செயல் சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. சுல்தான்பூரில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ராஜாராம் பாண்டே, மாவட்ட நீதிபதி தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் ராஜாராம், இந்த மாவட்டத்திற்கு ஏற்கனவே ஒரு பெண் மாவட்ட நீதிபதியாக (முன்னாள் மாவட்ட நீதிபதி காமினி சௌஹன்) இருந்தது இம்மாவட்டத்தில் அதிர்ஷ்டம், ஆனால் தற்போதைய மாவட்ட நீதிபதி (தனலட்…

    • 9 replies
    • 864 views
  12. சென்னை, திருச்சி நகரங்களில் இருக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளின் பார்களில் 24 மணி நேரமும் மது பரிமாறப்படலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் பன்னாட்டு விமான நிலையங்கள் இருப்பதால் இந்த சிறப்பு சலுகை தரப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. பன்னாட்டு விமான நிலையங்கள் இல்லாத மதுரை, கோயம்புத்தூர் நகரங்களில் இரண்டு மடங்கு சிறப்புக் கட்டணம் செலுத்தும் ஐந்து நட்சத்திர விடுதிகள் 24 மணி நேரமும் கடை விரிக்கலாம். மற்ற ஓட்டல் பார்களிலும் கிளப்புகளிலும் மது பரிமாறும் நேரம் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை என்று இருந்தது நள்ளிரவு 12 மணி வரை என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. "தமிழ்நாட்டுக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இரவு…

  13. இனிமேல் ''மேதகு" என்ற வார்த்தையே கூடாது.. மாண்புமிகு, ஸ்ரீ, ஸ்ரீமதிக்கு ஓகே: பிரணாப் முகர்ஜி. டெல்லி: ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை ஆய்வு செய்து அவற்றைக் கைவிட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டிருக்கிறார். குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்போரை `மேதகு' என்ற வார்த்தையால் அழைப்பது வழக்கம். இனி இந்த வார்த்தையை உள்நாட்டு நிகழ்ச்சிகளிலோ, உள்நாட்டு தலைவர்களுடனான சந்திப்புகளின்போதோ பயன்படுத்தக்கூடாது. இத்தகைய நிகழ்ச்சிகளில், இந்தியில், `மகாமகின்' என்ற வார்த்தைக்கு பதிலாக `ராஷ்டிரபதி மகோதாய்' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். இருப்பினும், `மேதகு' என்பதை வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின்போது மட்டும் பயன்படுத்தலாம…

  14. மேத்யூ சூறாவளியின் தாக்கம்: ஹெய்ட்டியில் இறந்தவர்கள் எண்ணிக்கை 800ஐ தாண்டியது ஹெய்ட்டியில் மேத்யூ சூறாவளியால் குறைந்தது 800 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளன. பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம் மிகக் கடுமையான அச்சூறாவளி கடந்த செவ்வாய்கிழமை ஹெய்ட்டியைத் தாக்கியது. அதன் தாக்கம் முழுமையாகத் தெரிய பல நாட்கள் ஆகலாம் என்று ஐ நா உதவி அமைப்பின் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். மேத்யூ சூறாவளி ஹெய்ட்டியின் தென்மேற்கு பகுதியை கடுமையாகத் தாக்கியது. இதில் அப்பகுதியிலுள்ள முக்கிய நகரான ஜெரேமே முற்றாக அழிந்துபோனது. தென்பகுதி கரையோரப் பிரதேசங்களில் பல்லாயிரக்க…

  15. யு.எஸ்.-வாசிங்டன் நெடுஞ்சாலையில் இருந்து விழுந்த கான்கிரீட் பலகையால் இளம் தம்பதியர் மற்றும் அவர்களது எட்டுமாத குழந்தை மூவரும் கொல்லப்பட்ட துயர சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் அண்மையில் தங்கள் ஐந்தாவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இவர்கள் இருவரும் கிறிஸ்தவ சமய இளைஞர்கள் பாதிரியார்களாவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜோஷ் மற்றும் வனெஸ்சா ஆகிய இருவரும் தங்கள் 20-ன் மத்திய வயதுடையவர்கள். தங்கள் பிக்அப் டிரக்கில் சென்றுகொண்டிருந்த போது ராக்கோமா பகுதியில் பொனி லேக் வழியாக பயணித்துக் கொண்டிருந்த போது பாரிய கான்கிரீட் பலகை டிரக் மீது விழுந்து இவர்களை நெரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களது எட்டுமாத மகன் ஹட்சனும் பின் இருக்கையில் இருந்துள்ளான். மூவரும் கொல்லப்பட்டனர். - S…

    • 0 replies
    • 229 views
  16. ஏசுநாதரின் தாயாரான மேரி மாதாவை இஸ்லாமிய இறை தூதரான முகமது நபிகள் சொர்க்கத்தில் திருமணம் செய்வார் என எகிப்து நாட்டை சேர்ந்த இஸ்லாமிய பேராசிரியரின் கருத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் சலேம் அப்தெல் கலிலி என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சில தினங்களளுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சலேம் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். அப்போது, ஏசுநாதரின் தாயாரான மேரி மாதாவை இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபிகள் சொர்க்கத்தில் திருமணம் செய்வார்.இந்த உலகில் பரிசுத்தமான, பூரண குணநலன்களை கொண்ட 4 பெண்கள் மட்டுமே உள்ளனர். ஒன்று, ஏசுநாதரின் தாயா…

    • 0 replies
    • 547 views
  17. ஜேர்மனியின் சான்செலராக அங்கெலா மேர்க்கலை அனெகிரெட் கிராம்ப்-கரென்போர் பிரதியிடுவதானது கடந்தாண்டு டிசெம்பர் மாதத்தில் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயகச் சங்கக் கட்சியின் தலைவராக அவர் அங்கெலா மேர்க்கலை பிரதிட்டபோது தெளிவாக இருந்தது. ஆனால், தற்போது 10 மாதங்களின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் பலம் வாய்ந்த, மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜேர்மனியை வழிநடத்த தற்போது பாதுகாப்பமைச்சராக இருக்கும் அனெகிரெட் கிராம்ப்-கரென்போர் தகுதியானவரா என அவரது கட்சியின் உறுப்பினர்கள் விவாதிக்கின்றனர். சமபாலின மக்கள் மீதான வேடிக்கையான கருத்துத் தெரிவித்தது உள்ளடங்கலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பொதுவெளியில் பின்னடைவுகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து அனெகிரெட் கிராம்ப்-கரென்போரின் ஆதரவு மட்ட…

    • 0 replies
    • 696 views
  18. மேற்கத்திய ...ஆயுதங்களை ஏந்திய, விமானத்தை... சுட்டு வீழ்த்தியதாக, ரஷ்யா கூறுகிறது மேற்கத்திய நாடுகளால் அனுப்பப்பட்ட ஆயுதங்களை ஏற்றிச் சென்ற உக்ரைன் இராணுவ விமானத்தை வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தென்மேற்கு உக்ரைனில் உள்ள ஒடெசா நகருக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்ததாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் கூறியுள்ளார். ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS வெளியிட்ட இந்த செய்தியின் உண்மைத்தன்மை மற்றும் ஏதேனும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை செய்திகள் வெளியாகவில்லை. கடந்த 24 மணி நேரத்தில், ரஷ்ய விமானப் பிரிவுகள் உக்ரேனிய இராணுவத் துருப்புக்கள் மற்றும் பல இடங்களைத் தாக்கியதாகவு…

  19. தி சிடிசன்' தான்சானியா நாளிதழ் லிபியாவின் அந்நாள் அதிபர் முகம்மது கடாஃபியை வீழ்த்துவதற்காக விரைந் தோடி வந்த மேற்கத்திய நாடுகள், இன்று தோல்வியை நோக்கிச் சென்றுகொண் டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகளைக் கைவிட்டுச் சென்றிருப்பது மிகுந்த ஆயாசம் தருகிறது. நேட்டோ தலைமையிலான மேற்கத்திய நாடு களின் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் கடாஃபி கொல்லப்பட்ட பின்னர், கொண்டாட்டங்களுடன் எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன. கொடூர ஆட்சியிலிருந்து லிபிய மக்கள் விடுவிக்கப்பட்டதாகவே பேசப்பட்டது. ஆனால், தான்சானியா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகள், லிபியாவில் நடந்துவந்த விஷயங்களைக் கவனமாகவே அணுகின. புதிதாக அமைந்த லிபிய அரசை ஏற்றுக்கொள்ளவும் அவை மறுத்துவிட்டன. கடாஃபிக்குப் பிறகு, அமைந்த புதிய அரசை வரவேற…

    • 0 replies
    • 565 views
  20. மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் நாடுகளுடன் நட்புறவு : தென் அமெரிக்கா செல்கின்றார் ஈரான் ஜனாதிபதி மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் நட்பு நாடுகளுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தென் அமெரிக்காவில் மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அறிவித்துள்ளார். இன்று அதிகாலையில் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி, வெனிசுவேலா, கியூபா மற்றும் நிகரகுவா மற்றும் அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிக்கப்பட்ட நாடுகளுக்கும் அரசமுறைப் பயணத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்ராஹிம் ரைசி ஜனாதிபதியாக பதவியேற்று 21 மாதங்களில் மேற்கொள்ளும் 13வது வெளிநாட்டுப் பயணம் இது என்றும்…

  21. மேற்கத்திய பொருளாதாரத் தடைகளிலிருந்து... தப்பிச் செல்லும், பணக்கார ரஷ்யர்களுக்கு... புகலிடம் வழங்கும் டுபாய்! உக்ரைனில் நடந்த போரில் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் தாக்கத்திலிருந்து தப்பிச் செல்லும் பணக்கார ரஷ்யர்களுக்கு டுபாய் புகலிடமாக உருவெடுத்துள்ளது. ரஷ்ய கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில்முனைவோர் முன்னோடியில்லாத எண்ணிக்கையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துள்ளனர் என்று வணிகத் தலைவர்கள் தெரிவித்தனர். 2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ரஷ்யர்களால் டுபாயில் சொத்து வாங்குதல் 67 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை அல்லது உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்பை விமர்சிக்…

  22. மேற்கத்தைய நாடுகளின்... தடைகளுக்கு மத்தியில், ரஷ்யாவுடனான வர்த்தக உறவை... அதிகரித்தது சீனா. ரஷ்யாவுடனான சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் கடந்த மாதம் கடுமையாக அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது மார்ச் மாதத்தில் ரஷ்யாவுடனான ஒட்டுமொத்தமாக 11.67 பில்லியன் டொலர் வர்த்தகத்தை சீனா மேற்கொண்டுள்ளதாக சீன சுங்கத் திணைக்கள தரவு காட்டுகிறது. சீனாவிற்கு எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் விவசாயப் பொருட்களின் முக்கிய ஆதாரமாக ரஷ்யா உள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான மேற்குலக நாடுகளின் தடைகளை பலமுறை தொடர்ந்தும் சீனா விமர்சித்து வருகின்றது. மேலும் குறித்த படையெடுப்பு தொடங்குவதற்கு முன்னர், சீனாவும் ரஷ்யாவு…

  23. மேற்கு ஆசியாவில் ஒபாமா செய்ததென்ன? ஏழரை ஆண்டுகளுக்கு முன்னர், கெய்ரோ பல்கலைக்கழகத்தில் மூவாயிரம் பார்வையாளர்களின் முன்பாக உரை நிகழ்த்திய பராக் ஒபாமா, இஸ்லாமிய உலகத்துக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தரவிருப்பதாகச் சொன்னார். அவநம்பிக்கை மிகுந்த ஆண்டுகளைக் கடக்க முயற்சி செய்த அவர், இஸ்ரேல் - பாலஸ்தீன அமைதி முயற்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். அது தொடர்பாக நிலையான கொள்கை எதையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும், அமெரிக்காவின் புதிய அதிபர், முந்தைய அதிபர்களின் தவறுகளைச் சரிசெய்வதுடன், மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவுடனான அமெரிக்காவின் உறவில் புதிய அத்தியாயத்தைத் திறந்துவைப்பார் என்று பெரிதும் நம்பப்பட்டது. வெள்ளை மாளிகையைவிட்ட…

  24. மேற்கு எத்தியோப்பியாவில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 80 க்கும் மேற்பட்டோர் பலி மேற்கு எத்தியோப்பியாவை பாதிக்கும் சமீபத்திய தாக்குதலில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட 80 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந் நாட்டு தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. சூடான் மற்றும் தெற்கு சூடானின் எல்லையான பெனிஷங்குல்-குமுஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை இந்த படுகொலை நடந்ததாக எத்தியோப்பியன் மனித உரிமைகள் ஆணையத்தின் (ஈ.எச்.ஆர்.சி) செய்தித் தொடர்பாளரும் சிரேஷ்ட ஆலோசகருமான ஆரோன் மாஷோ குறிப்பிட்டுள்ளார். 2 முதல் 45 வயது வரையிலான 80 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் தலைநகர் அட…

  25. மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்! -டொனால் ட்ரம்ப் உறுதி. மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேற்கு கரையில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன். இஸ்ரேல் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கமுடியாது. இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். காசா முனை மற்றும் மேற்கு கரை எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.