உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
பிரிட்டன் ராணுவ வீரர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக, 4000 ராணுவ வீரர்களை இந்தியாவிற்கு அனுப்பி தியானம் போன்றவற்றில் பயிற்சி கொடுக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து இடைவிடாது போரில் ஈடுபட்ட இங்கிலாந்து ராணுவ வீரர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு விடுமுறை கொடுத்து, அவர்களை 100 வீரர்கள் கொண்ட பல பிரிவுகளாக பிரித்து, அவர்களை இந்தியாவில் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயா என்ற இடத்திற்கு அனுப்ப ராணுவம் முடிவு செய்துள்ளது. அங்கு அவர்களுக்கு முறையான தியானப்பயிற்சி புனித போதி மரத்தடியில் கொடுக்க பீகார் மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 470 views
-
-
அமெரிக்காவில் நியூயார்க்கில் ரெயில் முன் தள்ளி இந்தியரை கொன்ற மர்ம பெண்ணை போலீசார் தேடுகிறார்கள். அந்த கொலைகார பெண், பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு புத்தகம் படித்ததும், இரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்ற காட்சியும் இரயில்வே காமிராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை வைத்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்தியர் பிணம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சுரங்கப்பாதையில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அங்குள்ள குயின்ஸ் ரெயில் நிலையத்தில் ஒரு ஆண் ரெயிலில் அடிபட்டு இறந்தார். அவர் யார்? எப்படி செத்தார்? என்பது மர்மமாக இருந்தது. இதனை அடுத்து நியூயார்க் நகர போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த நபரிடம் இருந்த செல்போன் மற்றும் மருந்த…
-
- 0 replies
- 598 views
-
-
சிவகாசி: சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நல்ல வேளையாக இதில் யாரும் உயிர் இழக்கவில்லை. சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மட்டுமின்றி ஏராளமான அச்சகங்களும் உள்ளன. அங்கு டைரி, காலண்டர், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவை தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக தமிழக அரசு வழங்கும் பள்ளி புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் பெரும்பாலும் சிவகாசியில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகாசி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள ஒரு அச்சகத்தில் நேற்று காலை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சக விரிவாக்கப் பணியின் ஒரு கட்டமாக வெல்டிங் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. வெல்டிங் செய்யும்போது சிதறிய தீப்பொறி அங்கிருந்த குடோனில் பட…
-
- 0 replies
- 291 views
-
-
பெல்ஜியம் தாக்குதலில் ஈடுபட்டவர் அடையாளம் வெளியீடு பெல்ஜியத்தில் கடந்த சனிக்கிழமையன்று, இரண்டு பெண் போலிசார் மீது வெட்டுக்கத்தி தாக்குதல் நடத்தியவர், ஒரு அல்ஜீரியா பிரஜை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை கே.பி என வழக்கறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 2012ல் இருந்து அவர் பெல்ஜியத்தில் வாழ்ந்ததாகவும், அவர் மீது குற்றவியல் பதிவுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். போலிஸாரால் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னதாக, சார்லர்வாவில் உள்ள முக்கிய காவல் நிலையத்திற்கு வெளியே தாக்குதலின் போது அந்த தாக்குதல்தாரி 'அல்லாஹூ அக்பர்' ( கடவுள் பெரியவர்) என சத்தமிட்டார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமை…
-
- 0 replies
- 456 views
-
-
'சித்தூர்: 'எனக்கு எய்ட்ஸ்...விட்டுருங்கடா!'என்று கூறியதால், இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பினார். ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜா ரெட்டியும், அதே ஊரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு,பைக்கிலேயே திருப்பதி சென்று விட்டு, இரவு வேளையில், பாகராபேட்டை எனும் வனப்பகுதி வழியே வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் வழியில் மரத்தடியில் நின்று பேசியபோது,இரண்டு பைக்குகளில் நான்கு மர்ம ஆசாமிகள் அங்கே வந்தனர். காதல் ஜோடியைப் பார்த்ததும் பைக்கை நிறுத்தினார்கள்.ராஜாரெட்டியை சரமாரியாகத் தாக்கினார்கள்.பிறகு அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்கள். இதனையடுத்து பதறி…
-
- 1 reply
- 613 views
-
-
காஸா பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை காஸாவில் உள்ள பொதுமக்கள் ஹமாஸ் பயன்படுத்தும் கட்டிடங்கள் அருகே செல்ல வேண்டாம் என இஸ்ரேல் துண்டுச்சீட்டுகள் மற்றும் தொலைபேசி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் புதிய சண்டை யுக்தியை பயன்படுத்தலாம் என்ற பலத்த யூகம் நிலவுவதாக ஜெருசேலத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார். இதற்கிடையே, வடக்கு காஸாவில் ஜபல்யா வீதியில் இஸ்ரேலின் எறிகணை தாக்குதலில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரமாக நடைபெறும் மோதலில் எண்ணூறுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதில் பதிமூன்று இஸ்ரேலியர்கள…
-
- 0 replies
- 810 views
-
-
தைவான் தொழிலதிபர் ஒருவர் நோபல் பரிசுக்கு நிகராக ஆசிய நோபல் பரிசு வழங்க நிதி உதவி அளித்துள்ளார். உலக அளவில் மிகுந்த மதிப்புள்ள பரிசாக நோபல் பரிசு விளங்குகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் ஆல்ஃபிரட் நோபல் அளித்த நிதியில் இந்தப் பரிசு நிறுவப்பட்டது. இதற்கு நிகராக ஆசிய அளவில் ஒரு பரிசை நிறுவ தைவான் தொழிலதிபர் சாமுவல் யின் என்பவர் திட்டமிட்டிருக்கிறார். நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள ருயன்டெக்ஸ் குழுமத்தின் நிறுவனர் சாமுவல் யின் இது குறித்த அறிவிப்பை தைவானின் தைபே நகரில் திங்கள்கிழமை இதனை அறிவித்தார். டாங் பரிசு எனப் பெயரிடப்பட்ட இந்த விருது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் டாங் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், சட்டம், சீனா தொடர்…
-
- 0 replies
- 457 views
-
-
'கர்நாடகாவுக்கு இறுதி எச்சரிக்கை..!' காவிரி வழக்கில் கொதித்த உச்சநீதிமன்றம் காவிரி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத கர்நாடகாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள உச்ச நீதிமன்றம், நாளை முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி காவிரி விவகாரம் தொடர்பான கூட்டம் டெல்லியில் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. மாறாக,…
-
- 1 reply
- 609 views
-
-
இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பெருவாரியான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே சில காய்கறி கடைகள், உணவு விடுதிகள் மட்டுமே திறந்திருந்தன. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று நடத்தப்பட்டு வரும் பொது வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை காண முடிந்தது. சென்னையில் முக்கிய வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள தியாகராய நகர், புரசைவாக்கம், பாரிமுனை, பாண்டிபஜார் உள்பட பல்வேறு இடங்களிலும் ஒருசில சிறிய கடைகளைத் தவிர்த…
-
- 0 replies
- 794 views
-
-
அரியலூர்: இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருவர் தீக்காயத்திற்குப் பலியாகினர். அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவிழியைச் சேர்ந்த பாமக தொண்டர் ராஜசேகர் (30). இலங்கைத் தமிழர்கள் படுகொலையை நினைத்து பெரும் வேதனையில் இருந்து வ்நதார். ஈழத் தமிழர்களுக்காக தீக்குளிப்பேன் என்றும் அவரது வீட்டில் கூறி வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார், ராஜசேகரனை சமாதானப்படுத்தி சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார். ஆனால் திடீரென ஞாயிற்றுக்கிழமை மாலையில் தனது வீட்டு வாசல் முன்பாக ராஜசேகர் தீக்குளித்து விட்டார். உடல் முழுவதும் கருகிய நிலையில் தஞ்சை அரசினர் சரபோஜி மன்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமன…
-
- 1 reply
- 705 views
-
-
பாதசாரிகள் மீது காரை மோதி தாக்குதல்: ஜேர்மனியில் கைக்குழந்தை உட்பட நால்வர் பலி! 30 பேர் காயம்!! ஜேர்மனியில் காரை பாதசாரிகள் மீது வேகமாகச் செலுத்தி நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.30 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர். உயிரிழந்தவர்களில் ஒன்பது மாத கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாகப் பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை உயரக் கூடும் என்று முதலில் வெளியாகிய செய்திகள் தெரிவித்தன. ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் ட்ரையர் (Trier) என்னும் நகரில் இந்தத் தாக்குதலை நடத்திய 51 வயதான சாரதி ஒருவரைப் பொலீஸார் கைதுசெய் திருக்கின்றனர். காரும் கைப்பற்றப்பட்டுள்ளது. நகரில் பாதசாரிகள் நடமாடும் …
-
- 0 replies
- 477 views
-
-
தூதர் கொலை சம்பவம் ரஷ்யா, துருக்கி இடையிலான ஒத்துழைப்பை பாதிக்காது: அதிபர் எர்டோகன் ரஷிய தூதர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை பாதிக்காது என்பதில் துருக்கி மற்றும் ரஷ்யா உறுதியாக உள்ளது என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். அங்காரா: துருக்கிக்கான ரஷிய தூதராக பதவி வகித்து வந்தவர் ஆண்ட்ரே கார்வேஸ். அங்காரவில் நடந்த ஓவிய கண்காட்சியை பார்வையிட வந்த ஆண்ட்ரேவை மெவ்லட்மெர்ட் அய்டின் டாஸ் (22) என்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். சிரியாவின் காலப்போ நக…
-
- 0 replies
- 262 views
-
-
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு அடி உயரத்திற்கு பனிக் கட்டிகள் உருவாகியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டென்வர், கொலின்ஸ் உள்ளிட்ட சில பகுதிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராக்கி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கொலராடோவில் பனிப்பொழிவு ஏற்படுவது வாடிக்கைதான் என்றாலும், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு தற்போது ஏற்பட்டுள்ளது. http://puthiyathalaimurai.tv/heavy-snowfall-in-colarado
-
- 0 replies
- 323 views
-
-
சதித்திட்டத்தின் பின்னாலுள்ள மியான்மர் இராணுவத் தலைவர்கள் மீது பைடன் பொருளாதாரத் தடைகள் விதிப்பு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மியன்மாரில் நடந்த இராணுவ சதித் தலைவர்களுக்கு பொருளாதாரத் தடை விதிக்கும் நிறைவேற்று ஆணையில் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார். இது ஆட்சி கவிழ்ப்பை வழிநடத்திய இராணுவத் தலைவர்கள், அவர்களின் வணிக நலன்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீது நேரடியாக தாக்கம் செலத்துகிறது. இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் உரையாற்றிய பைடன், இன்று, சதித்திட்டத்தின் தலைவர்கள் மீது விளைவுகளை சுமத்தத் தொடங்குவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை நான் அறிவிக்கிறேன். பர்மிய (மியான்மர்) அரசாங்கத்தில் ஒரு பில்லியன் டொலர்களை ஜெனரல்கள் முறையற்ற முறையில…
-
- 0 replies
- 548 views
-
-
சீனாவில் பறவை விரும்பிகள் மிக அதிகம் மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் எனும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்த ஆண் புறா ஒரு சீன தொழிலதிபருக்கு நான்கு லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு வயதாகும் அந்தப் புறா பெல்ஜியம் நாட்டில் வளர்க்கப்பட்டது. பெல்ஜியத்தில் போட்டிகளில் பறக்கும் வேகமான பறவைகள் ஏலம் விடப்பட்ட போதே இந்தப் புறாவை அந்த சீன தொழிலதிபர் வாங்கியுள்ளார். இந்த ஏலத்தில் பெரும்பாலான பறவைகளை சீனா மற்றும் தாய்வான் நாட்டிலிருந்தவர்களே வாங்கியுள்ளனர். இந்தப் புறாவை வளர்த்த லியோ ஹெரிமன்ஸ் பெல்ஜியப் புறாக்களை வளர்ப்பதில் பிரபலமானவர். வேகத்தின் விலை நான்கு லட்சம் தற்போது நடைபெற்ற ஏலத்தில் அவர் தன்னிடம் இருந்த மொத்த பறவைகளையும் ஐம்பது…
-
- 4 replies
- 678 views
-
-
இந்திய எல்லைப் பகுதிக்குள் மீண்டும் சீனப்படைகள் அத்துமீறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லடாக் பகுதியில் முகாம் அமைத்தது தொடர்பாக எழுந்த சர்ச்சை இந்திய சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டது. அதே நேரத்தில் உதம்பூர் அருகே உள்ள சிரி ஜாப் பகுதியில் தற்போதைய எல்லைக்கோடு பகுதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் செல்லும் போது சீன ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனப்பிரதமரின் இந்திய வருகைக்கு இரு நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் லடாக் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் 14 கம்பெனிகள் உத்தேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தங்கள் பணிகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப…
-
- 5 replies
- 679 views
-
-
முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையும், 1940ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட்டின் கவர்ச்சிக்கன்னியாகவும் திகழ்ந்த Esther Williams நேற்று லண்டனில் காலமானார். அவருக்கு வயது 91 1940 ஆம் ஆண்டு நீச்சல் போட்டியின் சாம்பியனாக திகழ்ந்த Esther Williams, பின்னர் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். கறுப்பு வெள்ளை படங்கள் எடுக்கும் காலத்திலேயே திரையில் நீச்சலுடையில் தோன்றி ரசிகர்களை தனது கவர்ச்சியால் கவர்ந்து இழுத்துவர். இவருடைய கவர்ச்சியை நம்பி தயாரிப்பாளர்கள் பெரும் பணத்தை முதலீடு செய்து மிகப்பெரிய லாபத்தையும் அடைந்தனர். Gene Kelly and Frank Sinatr போன்ற புகழ்பெற்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெரும் புகழை பெற்றார். 1962 ஆம் ஆண்டு Fernando Lamas என்பவருடன் இவருக்கு திருமணம் ஆனது. அதன…
-
- 0 replies
- 391 views
-
-
அவுஸ்ரேலியாவில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தொழிலாளர் கட்சியின் வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் கெவின் ரூட்டும் , ஜீலியா கிலாட்டும் போட்டியிட்டனர் , வாக்கெடுப்பின் முடிவில் கெவின் ரூட் கட்சியின் தலைமைப்பதவியையும் , பிரதமர் பதவியையும் பெற்றுக் கொண்டார் , அத்துடன் தனது உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்தும் அவர் வெளியேறியுள்ளார் , மேலும் ஜீலியா கிலாட் , மகிந்த இராஜபக்ஸ தலைமையிலான இலங்கை அரசுடன் நெருங்கிய உறவைப் பேணியவர் என்பது குறிப்பிடத்தக்கது... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=7730:2013-06-26-10-28-15&catid=1:latest-news&Itemid=18
-
- 34 replies
- 1.9k views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், இராக்கில் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள மோசூல் நகரின் மேற்கு பகுதியை நோக்கி இராக்கிய படைகள் முன்னேற்றம். அங்கு படைகளுடன் களத்தில் பிபிசி செய்தியாளர். வடகொரிய தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரரின் கொலையை அடுத்து மலேசிய - வடகொரிய உறவில் உரசல். வடகொரியாவுக்கான தனது தூதரை மலேசியா திரும்ப அழைத்துள்ளது. நீங்கள் இறக்கும்போது உங்கள் மூளையை மருத்துவ பரிசோதனைக்கு தானமாக வழங்வீர்களா? எதிர்கால சிகிச்சைகளுக்காக அதிகமான மூளைகள் மருத்துவர்களுக்கு தேவைப்படுகின்றது.
-
- 0 replies
- 266 views
-
-
மணிப்பூர் மாநிலம் மற்றும் மியான்மர் நாட்டிற்கும் இடையேயான எல்லைப் பிரச்னையில், தமிழர்களின் கோவிலை, மியான்மருக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என, மணிப்பூர் அரசு உறுதியாக தெரிவித்துஉள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூருக்கும், அதன் எல்லையில் உள்ள, மியான்மர் நாட்டிற்கும் இடையே, நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவுகிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து, 100 கி.மீ., தொலைவில் உள்ள மோரே என்ற இடத்தில், தமிழர்களுக்கு சொந்தமான கோவில் உள்ளது. மணிப்பூர் மாநிலத்திற்குள் அமைந்துள்ள அந்த கோவிலைச் சுற்றி, 17 ஆயிரம் தமிழர்களும் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை, மியான்மர் அரசு, தன் பகுதி எனக் கோரி வருகிறது. அதை மணிப்பூர் அரசு மறுத்து வருகிறது.""மோரே பகுதி, மணிப்பூர…
-
- 0 replies
- 589 views
-
-
சென்னை: லண்டனில் நடக்கும் சர்வதேச பட விழாவில் பாலா இயக்கிய பரதேசி படம் எட்டு பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ‘சேது' துவங்கி ‘பரதேசி' வரை ஆறு படங்களை இயக்கியுள்ள பாலா, ‘நான் கடவுள்' படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும், மற்ற படங்களுக்காக நான்கு தேசிய விருதுகளையும், ஆறு சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பி.எச். டேனியல் எழுதிய ‘ரெட் டீ' என்ற ஆங்கில நாவலை மொழிபெயர்த்து தமிழில் வெளிவந்த ‘எரியும் பனிக்காடு' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு ‘பரதேசி' படத்தை பாலா உருவாக்கினார். கடந்த மார்ச் மாதம் உலகெங்கிலும் வெளியான பரதேசியின் சிறப்பைப் பார்த்து பிரமித்த இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் வடஇந்தியா முழ…
-
- 0 replies
- 435 views
-
-
தலிபான்களின் புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை: தலிபான் அமைப்பு! ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள், புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிய அரசாங்கத்துடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் தலிபான்கள் பேசியதற்கு முரண்பட்டதாக உள்ளது. முன்னதாக, ஜனாதிபதி, பிரதமர் தவிர மற்ற அனைத்துப் பதவிகளிலும் பெண்கள் இருப்பார்கள் என்றும் நிறுவனத் தலைவர்களாக இருக்கலாம் என்றும் அப்போது தலிபன்கள் கூறியிருந்தார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் அமையும் என்று கட்டாரில் உள்ள அந்த அமைப்பின் அரசியல் பிரிவு துணைத் தலைவர் அப்பா…
-
- 0 replies
- 388 views
-
-
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த இந்தியா முஜாகிதீன் இயக்க தலைவர் யாசின் பட்கல் திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த யாசின் பட்கல் மற்றும் அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகிய இருவரும் இந்திய நேபாள எல்லையில் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட வந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தற்போது அல்கொய்தா இயக்கத்தை வழிநடத்த வரும் ஜவாகிரியுடன் யாசின் பட்கல் தொடர்பில் இருந்தது வந்தது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அமைதியை குலைக்க அல்கொய்தாவின் உதவியை யாசின் பட்கல் நாடியதை…
-
- 0 replies
- 258 views
-
-
பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல்: அதிபர் மெக்ரான் கட்சி வெற்றி பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத் தேர்தலில் முழுப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றுள்ளது அதிபர் மெக்ரான் கட்சி. பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக 39 வயதான இமானுவேல் மெக்ரான் கடந்த மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டின் எம்பி-க்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதற்கான பாராளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. மொத்தம் 577 எம்பி., எண்ணிக்கைகள். அதிபர் மேக்ரானின் கட்சி மொத்தம் உள்ள 577 இடங்களில் 355-ல் இருந்து 425 இடங்கள் வரை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் அதிபரின் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், மேக்ரான் முன்வைத்த பொருளா…
-
- 0 replies
- 287 views
-
-
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தின் மேல் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது வடிவமைப்பை (Design) அனுமதியின்றி பயன்படுத்துவதாக வழக்கு தொடுத்திருந்தது. ஓரங்களில் வளைவுகளோடு கூடிய செவ்வக வடிவம் மற்றும் தொடு திரையில் விரல் தீற்றல் மூலம் கைபேசியை அன்லாக் செய்வது உள்ளிட்டவை தனது சொந்தக் கண்டுபிடிப்பு என்று உரிமை கோரியிருந்தது ஆப்பிள் நிறுவனம். செவ்வக வடிவத்திற்குக் கூட உரிமை கோரிய இந்த கேலிக்கூத்தான வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. மைக்ரோசாப்ட், வால்மார்ட், கோக் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களோடு ஆப்பிள் நிறுவனமும் அமெரிக்கப் பெருமிதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேற்படி நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் சந்தை அணுகுமுறை என…
-
- 0 replies
- 1.1k views
-