உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26650 topics in this forum
-
ரஷ்யா விமானத்தில் திடீர் தீ – குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாப உயிரிழப்பு! ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற விமான தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து மேர்மான்ஸ்க் நோக்கி பயணித்த எரோபுளொற் ஜேட் (Aeroflot Flight SU1492) விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக திரும்ப தரையிறக்கப்பட்டது. இதன்போது விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய வேளை திடீரென புகை மூட்டத்துடன் தீ வேகமாக பரவியது. இதையடுத்து அவசரமாக விமான ஓடுதளத்தில் நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசரகால வழியினூடான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். எனினும் குறித்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 78 …
-
- 1 reply
- 994 views
-
-
ரஷ்யா விமானப்படை தாக்குதலில் 53 சிரியர்கள் பலி கிழக்கு சிரியாவில் உள்ள அல்-ஷஃபா கிராமத்தில் ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு கண்காணிப்பு குழு தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று காலை நடைபெற்ற இத்தாக்குதலில் பலியானவர்களில் 21 குழந்தைகள் உள்ளடங்குவதாக சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. "சிதைந்த கட்டிடங்களின் எஞ்சிய பாகங்களை அகற்றிய பின்னர் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என கண்காணிப்பு குழுவின் தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் கூறினார். ஆறு நீண்ட தூர குண்டு வீசும் விமானங்கள் மூலம் இப்பகுதியில் தாக்குதல் நிகழ்த்தியதாகவும், மேலும் தீவிரவ…
-
- 0 replies
- 310 views
-
-
ரஷ்யா- உக்ரைனுக்கிடையிலான மூன்றாவது கட்ட அமைதிப் பேச்சுவார்தையும் தோல்வியில் முடிந்தது! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது கட்டப் அமைதிப் பேச்சுவார்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவுக்கும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுக்கும் இடையே துருக்கியின் துறைமுக நகரான ஆன்டால்யாவில் நேற்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற்றது. உக்ரைனில் போர் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது, அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக விவாதிப்பதற்காக அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், முக்கிய விவகாரங்க…
-
- 0 replies
- 150 views
-
-
ரஷ்யா- உக்ரைனுக்கு இடையில் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்காக இரு நாடுகளின் பிரதிநிதிகளும் ஆயத்தமாகி வருகின்றனர். நேற்று (திங்கட்கிழமை) நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், துருக்கியில் இன்று ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை தொடரும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அத்துடன், முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், பேச்சுவார்த்தை நன்றாக நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். உக்ரைனிய பேச்சுவார்த்தையாளர் மைக்கைலோ போடோலியாக், வார இறுதி பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவை என்று கூறியதையடுத்து, …
-
- 0 replies
- 163 views
-
-
ரஷ்யா- உக்ரைனுக்கு இடையேயான நான்காவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நான்காவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ரஷ்யாவின் பேச்சுவார்த்தையாளரும், ஜனாதிபதி புடினின் செய்தித் தொடர்பாளருமான டிமிட்ரி பெஸ்கோவ், காணொளி அழைப்பு மூலம் பேச்சுவார்த்தை நடைபெறும் என உறுதிப்படுத்தினார். உக்ரைனின் பேச்சுவார்த்தையாளரும், ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் ஆலோசகருமான மைகைலோ பொடோலியாக் ரஷ்யாவின் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். மைகைலோ பொடோலியாக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியில், ‘ரஷ்யா ஆக்கப்பூர்வமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது. ரஷ்யா இப்போது தன்னைச் சுற்றி நடப்பதை போதுமான அளவு உணரத் தொடங்கியுள…
-
- 0 replies
- 223 views
-
-
ரஷ்யா- ஜேர்மனிக்கு இடையே எரிவாயு குழாய் திட்டம்: பைடனின் முடிவுக்கு சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு ரஷ்யா- ஜேர்மனிக்கு இடையே சர்ச்சைக்குரிய எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிரான தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது. இந்தநிலையில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முடிவுக்கு அவரது சொந்தக்கட்சியான ஜனநாயகக்கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து செனட் சபையின் வெளியுறவு குழு தலைவரான பாப் மெனண்டெஸ் கூறுகையில், ‘இந்த பொருளாதார தடை இரத்தை திரும்பப்பெற வேண்டும். நாடாளுமன்றத்தினால் கட்டாயப்படுத்தப்பட்ட பொருளாதார தடைகளை ஜோ பைடன் நிர்வாகம் தொடர வேண்டும். இந்த முடிவு, ஐரோப்பாவில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை எவ்வாறு முன்னேற்றும்…
-
- 0 replies
- 900 views
-
-
ரஷ்யா- பெலராஸ் மீது... பிரித்தானியா, பொருளாதார வர்த்தக தடை! ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது மொத்தம் 1.7 பில்லியன் பவுண்டுகள் (2 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) மதிப்பிலான வர்த்தகத்தை இலக்காகக் கொண்டு ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது புதிய பொருளாதாரத் தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து முழு அல்லது பகுதி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடைகளுக்கு உட்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பை 4 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் கொண்டு வரும். புதிய இறக்குமதி வரிகள் பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் உட்பட 1.4 பில்லி…
-
- 1 reply
- 273 views
-
-
ரஷ்யா-செர்பியா இடையில் எரிபொருள் குழாய்பாதை ஒப்பந்தம் 26.02.2008 / நிருபர் குளக்கோட்டன் ரஷ்யாவிலிருந்து மேற்கு ஐரோப்பாவுக்குச் செல்லும் எரிபொருள் குழாய்ப்பாதை அமைப்பது தொடர்பில் ரஷ்யாவும் செர்பியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அடுத்த ரஷ்ய அதிபர் என்று கருதப்படும் திமித்ரி மெத்வதெவ் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு உயர்மட்ட ரஷ்ய பிரதிநிதிகள் குழ பெல்கிரேட் வந்த நேரத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ரஷ்யாவின் எரிசக்தித்துறை பெருநிறுவனம் காஸ்ப்ரோமின் தலைவராக இருக்கும் மெத்வதெவ், கொசோவோ செர்பியாவிலிருந்து பிரிந்து சுதந்திரப் பிரகடனம் செய்திருப்பதை ரஷ்யா வலுவாக எதிர்க்கிறது என்றும் கூறியிருக்கிறார். sankathi.com
-
- 2 replies
- 1k views
-
-
ரஷ்யா–பெலருஸ் இணைந்து மாபெரும் இராணுவப் பயிற்சி! ரஷ்யா மற்றும் பெலருஸ் நாடுகள் இணைந்து நடத்தும் ‘Zapad‑2025‘ என்ற மாபெரும் இராணுவப் பயிற்சி, ஐரோப்பிய நாடுகளுக்கான நேரடி எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. செப்டம்பர் 12 முதல் 16 வரை நடைபெறும் இப் பயிற்சியில் ஹைபர்சோனிக் ஏவுகணைகள், Su‑34 போர் விமானங்கள், கனரக ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. மேலும், ரஷ்யா வெலருஸ் நிலப்பரப்பில் இடைத் தூர ஏவுகணைகள் (intermediate-range missiles) அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா–பெலருஸ் கூட்டணி இந்த இராணுவப் பயிற்சி “பாதுகாப்பு நோக்கத்துக்காக மட்டுமே” எனத் தெரிவிக்கின்ற …
-
- 5 replies
- 578 views
-
-
ரஷ்யா, அமெரிக்க நாடுகள் மீது புனிதப்போர்: ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடி! டமாஸ்கஸ்: சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய, அமெரிக்க நாடுகள் மீது நம் இனத்தினர் புனிதப்போர் நடத்த வேண்டும் என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அழைப்பு விடுத்து உள்ளது. மேற்கு ஆசிய நாடான சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் கிளர்ச்சி தொடங்கியது. அதிபர் ஆதரவு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான சண்டையில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஐ.எஸ். தீவிரவாதிகள், அதிபர் ஆதரவு படைகளுக்கு எதிராக சண்டையிட்டு முக்கிய நகரங்களை தங்கள் கட…
-
- 1 reply
- 1.5k views
-
-
ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஜோ பைடன் எச்சரிக்கை! அடுத்த மாதம் ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசியின் ஊடாக உக்ரைன் ஜனாதிபதியுடன் உரையாடிய போதே இந்த தகவலை வெளியிட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மேலும் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டால் உடனடியாக அமெரிக்காவும் நட்பு நாடுகளும் முழு ஆதரவினை உக்ரைனுக்கு வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரேனைஇணைத்துக்கொள்ள கூடாது என்ற ரஷ்யாவிம் முக்கிய கோரிக்கை அமெரிக்காவினால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், உக்ரைன் பிரச்சனைக்கு தீர்வொன்றை எட்டும் முயற்சி …
-
- 0 replies
- 176 views
-
-
ரஷ்யா, உறுதி அளித்தது போல்.... படைக் குறைப்பில் ஈடுபடவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு! இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யா உறுதி அளித்ததுபோல் படைக் குறைப்பில் ஈடுபடவில்லை என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. துருக்கியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கையை குறைத்துக்கொள்வதாக ரஷ்யா உறுதியளித்தது. ஆனால், எந்தப் படை குறைப்பிலும் ரஷ்யா ஈடுப்படவில்லை என்று செர்னிஹிவ் நகர மேயர் வியாசெஸ்லாவ் சாஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வாக்குறுதியை நம்ப தயாராக இல்லை எனவும் ரஷ்யா தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்திவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். உக்ரைனில் ரஷ…
-
- 6 replies
- 367 views
-
-
ரஷ்யா, டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை! உக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரேன் படையினர் வெளியேற வேண்டும், இல்லையெனில் மொஸ்கோ குறித்த பகுதியை கைப்பற்றும் என்று என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீண்டும் எச்சரித்துள்ளார். அதேநேரம், உக்ரேனில் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்த எந்தவொரு சமரசத்தையும் அவர் நிராகரித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், குறித்த பகுதிகளை வலுக்கட்டாயமாக விடுவிப்போம், இல்லையெனில் உக்ரேனிய படைகள் இந்தப் பகுதிகளை விட்டு வெளியேறும் – என்றார். டான்பாஸின் 85% பகுதியை மொஸ்கோ கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. அதேநேரம், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, டான்பாஸ் பகுதியை விட…
-
- 0 replies
- 83 views
-
-
[size=3][size=5]ரஷ்யா, வடஜப்பானில் கடும் நிலநடுக்கம் -ரிக்டரில் 7.3 அலகுகளாக பதிவு[/size][/size] [size=3][size=3]Published: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 14, 2012, 10:30[/size][/size] [size=3][/size] [size=3][size=3]மாஸ்கோ: கிழக்கு ரஷ்யா மற்றும் வடக்கு ஜப்பான் ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.[/size][/size] [size=3]ரஷியாவின் கிழக்குப் பகுதியில் பூமிக்கு அடியில் 625 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வடக்கு ஜப்பானிலும் உணரப்பட்டது. இருப்பினும் சுனாமி தொடர்பான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.[/size] [size=3]ரஷியா மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெ…
-
- 0 replies
- 322 views
-
-
ரஷ்யா: '30 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தயார்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES வாஷிங்டனின் தடைகளுக்கு பதிலடியாக, 30 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தயார் என்று கூறும் ரஷ்ய அதிகாரிகள், அமெரிக்க அரசின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் தயராக இருப்பதாக அறிவித்துள்ளனர். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி, இந்த செய்தியை லெஸ்வெஸ்டா (Izvestia) நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. அண்மையில் இதேபோன்ற அச்சுறுத்தல்களை வேறு ரஷ்ய அதிகாரிகளும் வெளியிட்டிருந்தனர். டிசம்பர் மாதத்தில் 35 ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய ஒபாமா நிர்வாகம், ரஷ்யாவின் இரண்டு புலனாய்வு அமைப்புக்களையும் மூடியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் த…
-
- 1 reply
- 728 views
-
-
பட மூலாதாரம்,SPUTNIK/SERGEI BOBYLEV/KREMLIN VIA REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பர்க் பதவி, ஆசிரியர், பிபிசி ரஷ்ய சேவை 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபர் பதவியேற்பதற்கு விளாதிமிர் புதின் கிரெம்ளின் அரண்மனை வழியாக செயின்ட் ஆண்ட்ரூ சிம்மாசன மண்டபத்திற்கு நடந்து சென்றார். அவர் அந்தப் பாதையில் கண்களைக் கட்டிக்கொண்டே நடந்திருக்கலாம். அங்கு அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டு, அடுத்த 6 ஆண்டு காலத்திற்கு ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றார். "நாம் ஒன்றுபட்ட, சிறந்த மக்கள். ஒன்றாக நாம் அனைத்து தடைகளையும் சமாளிப்போம். நமது திட்டங்களை நிறைவேற்றுவோம். ஒன்றாக வெற்றி பெறுவோம்," என…
-
- 1 reply
- 409 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஹென்ரி ஆஸ்டியர்&ஸ்டீவ் ரோசென்பெர்க் பதவி, பிபிசி நியூஸ், லண்டன்&மாஸ்கோ 4 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் வடக்கு காகசஸ் தாகெஸ்தான் குடியரசில் (Republic of Dagestan) காவல் துறையினர் மீதும், தேவாலயங்கள், யூத வழிபாட்டுத் தலங்களிலும் (synagogues) நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள், ரஷ்ய மரபுவழித் திருச்சபையின் (Orthodox church) பெந்தகொஸ்ட் திருவிழாவின்போது, டெர்பென்ட் மற்றும் மகச்கலா ஆகிய நகரங்களைக் குறிவைத்தனர். இத்தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த குறைந்தது 15 பேர், ஒரு பாதிரியார், மற்றும் ஒரு பாதுகாவலர் ஆகியோர் உயிரி…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
ரஷ்யா: புதின் அறிவித்த கட்டாய ராணுவ சேவையில் இருந்து தப்பிக்க காட்டுக்குள் ஒளிந்துகொண்ட ஐ.டி இளைஞர் கட்டுரை தகவல் எழுதியவர்,பென் டொபையாஸ் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ADAM KALININ கடந்த ஆண்டு செப்டம்பரில் அணி திரட்டல் குறித்த அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்ட போது, ஒரு வாரம் சிந்தித்த ஆடம் கலினின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காட்டிற்குள் குடிபெயர்ந்துவிடலாம் என முடிவெடுத்தார். தகவல் தொழில்நுட்ப வல்லுநரான ஆடம் கலினின், தொடக்கத்தில் இருந்தே போருக்கு எதிராக உள்ளார். தன்னுடைய குடியிருப்பு சுவரில் போர் வேண்டாம் என்ற சுவரொட்டியை ஒட்டியத…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
ரஷ்யா: வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயில் 37 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் சைபீரியாவில், கெம்ரொவா நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 37 பேர் பலியாகி உள்ளனர். குறைந்தது 64 பேரை காணவில்லை என்றும் அதில் 41 பேர், 2 முதல் 17 வயதுடைய குழந்தைகள் என்றும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வின்டர் செர்ரி கட்டட வளாகத்தின் மேல் மாடியில் இந…
-
- 0 replies
- 252 views
-
-
ரஷ்யா... உண்மையான முன்னேற்றத்தை கண்டுள்ளது - மேற்கத்திய அதிகாரிகள் பாராட்டு. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களின் நிலைத்தன்மை சவாலானது எனினும், அவர்களின் ஆயுதங்கள் மற்றும் மன உறுதியின் மீதான தாக்கம் குறிப்பிடத்தக்கது என்று மேற்கத்திய அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வார இறுதியில், ரஷ்ய துருப்புக்கள் உக்ரேனிய பிராந்தியமான லிசிசான்ஸ்க்கைக் கைப்பற்றினர். இதன் பொருள் ரஷ்யா உண்மையான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இந்த ஆண்டு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் எல்லைகளை ரஷ்யா பாதுகாக்குமா என்பது மிகவும் நிச்சயமற்றதாகவே உள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகளிடையே சிறந்த ஒத்துழைப்பு டான்பாஸ் எனப்பட…
-
- 1 reply
- 262 views
-
-
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இராணுவச் சட்டம்: புடின் அறிவிப்பு! ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) முதல் அந்தப் பகுதிகளில் அவசரக் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புடின் கூறுகையில், ‘4 பிராந்தியங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் ரஷ்யாவின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய மிகவும் சிக்கலான மற்றும் பிரம்மாண்டமான பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த இக்…
-
- 0 replies
- 180 views
-
-
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதியில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் - குழந்தை உட்பட 24 பேர் பலி 02 Jan, 2026 | 12:56 PM ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் வியாழக்கிழமை (1) புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஹோட்டல் ஒன்றை நோக்கி உக்ரைன் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடலோர கிராமமான கோர்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற இடத்தில் 3 உக்ரைன் நாட்டு ட்ரோன்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 24 பேர் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. “இது பொதுமக்களுக்கு எதிராக வேண்டுமென்றே உக்ரைன் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்” ரஷ…
-
- 0 replies
- 106 views
-
-
ரஷ்யாவிடமிருந்து ஆயுத கொள்வனவு – துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை! துருக்கி மீது பொருளதார தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு கவன்களை துருக்கி கொள்வனவு செய்ததை அடுத்தே ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். துருக்கியின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து அதி நவீன எஸ்-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்வனவு செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால் எப்-35 ரக போர் விமான தயாரிப்பில் துருக்கிக்கு அளித்துவரும் முன்னுரிமையை ரத்து செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்…
-
- 3 replies
- 945 views
-
-
ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்? – ட்ரம்ப் கேள்வி ஜேர்மனியிலிருந்து 11,000 அமெரிக்கப் படையினரை மீளப் பெறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ஆண்டொன்றுக்கு எரிசக்தி தொடர்பாக ரஷ்யாவுக்கு பில்லியன் டொலர்கள் கணக்கில் அள்ளிக்கொடுக்கிறது ஜேர்மனி. ஆனால் நாம் ஜேர்மனியை ரஷ்யாவிடமிருந்து காக்க வேண்டும் இல்லையா! இதெல்லாம் என்ன? நேட்டோவுக்கு 2% கட்டணம் செலுத்துவதில்கூட ஜேர்மனி ஒரு குற்றவாளியாக நடந்துகொள்கிறது. எனவேதான் ஜேர்மனியிலிருந்து படைகளை மீளப் பெறுகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார். …
-
- 1 reply
- 699 views
-
-
டெல்லி: ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் இந்தியா [^] வரும்போது இரு நாடுகளுக்கும் இடையே 4 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு [^]த்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா, கூடுதலாக 29 மிக்-29கே போர் விமானங்களை வாங்கவுள்ளது. இதுதவிர ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தமும் இதில் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அட்மிரல் கோர்ஷ்கோவ் விமானம் தாங்கி போர்க் கப்பலை இந்தியாவுக்கு அளிக்கும் இறுதி ஒப்பந்தமும் கையெழுத்தாகவுள்ளது. இந்த பழைய கப்பலை புதுப்பிக்கவும், சீரமைக்கவும் இந்தியா கூடுதலாக 2.35 பில்லியன் டாலரை ரஷ்யாவிடம் வழங்கும். மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் புடின் இ…
-
- 0 replies
- 413 views
-