உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26602 topics in this forum
-
நவம்பர் 25 இல் “ ஆனந்த விகடனின் சாதி வெறி ” கட்டுரையை வலையேற்றம் செய்தோம். அடுத்த இரண்டு நாட்கள் ஏராளமானவர்கள் பார்வையிட்டதோடு ஆதரித்தும், எதிர்த்தும் நிறைய மறுமொழிகள் வந்திருந்தன. இந்த விவாதத்தைத் தொடரலாமென்றும், இல்லை ஒரு இடைவெளி விட்டு வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாமென்றும் இருமனதாய் இருந்த போது பிடித்தது மழை. நிஷா என்று பெயர் சூட்டப்பட்ட புயல் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தபோது, தொடர்ச்சியாகப் பெய்த மழையால் வடக்கு, வடமேற்கு, மத்திய தமிழகம் மற்றும் சென்னையும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை விரித்த வலையில் நாங்களும் சிக்கிக் கொண்டோம்.புயல் தாக்கிய நேரத்தில் மும்பையில் புகுந்த தீவிரவாதிகளும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். இருப்பினும் இதை தெரிந்து …
-
- 0 replies
- 624 views
-
-
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.3k views
-
-
மும்பை வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இந்திய அரசுக்கும் அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவிப்போம். மின்னஞ்சல்: http://pmindia.nic.in/write.htm இந்திய ஜனாதிபதி: presidentofindia@rb.nic.in
-
- 3 replies
- 857 views
-
-
இயக்குனர் சீமான் வீட்டில் நடந்த பிரபாகரனின் பிறந்த நாள் விழா விருந்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நேற்று காலை சில வக்கீல்கள் கொண்டாடினர். பட்டாசுகளை வெடித்து, இனிப்புகள் வழங்கினர். பிரபாகரனை வாழ்த்தி கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் வக்கீல் சங்கரன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு வக்கீல் குமணன் ராஜா, இன்று காலை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அறிவழகன் என…
-
- 0 replies
- 1k views
-
-
மைசூர்: சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல வீரப்பனின் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக போலீசார் நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்தனர். மாதேஸ்வரன் மலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் இன்று அவரை மைசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். முத்துலட்சுமி மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் ஆர்.சி. பிளாண்ட் பகுதியில் வசித்து வருகிறார். மேட்டூர் கொளத்தூர் அருகே புதைக்கப்பட்டுள்ள வீரப்பனுக்கு அங்கு நினைவிடம் கட்ட சில நாட்களுக்கு முன் பூமி பூஜை நடத்தினார் முத்துலட்சுமி. இந் நிலையில் நேற்றிரவு தனது தந்தை அய்யண்ணனுடன் இருந்த முத்துலட்சுமியை கர்நாடகா போலீசார் திடீரென கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்றனர். பழைய வழக்குகளில் மைசூர் கோர்ட்ட பிறப்பித்த பிடி…
-
- 4 replies
- 1.3k views
-
-
கேள்வி:பெரும்பாலான பிராமணர்களும் தமிழரல்லாத பெரும்பாலான பிற இந்தியர்களும் ஏன் எப்போதும் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறார்கள? சுபவீ பதில்:அதாவது இந்தியாவிலேயே தமிழகத்தின் நிலை ஒரு மாதிரியான வினோதமானது என்று தான் சொல்ல வேண்டும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள் அவர்கள் எந்த ஒரு தேசிய இனமாகவும் இல்லாமல் எல்லா தேசிய இனங்களுக்குள்ளும் ஊடுறுவி எல்லா தேசிய இனங்களையும் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு இனமாக இருக்கிறார்கள் ஆனால் கர்நாடகத்திலோ வங்காளத்திலோ மராட்டியத்திலோ பார்ப்பனர்கள் அந்த நாட்டு மக்களினை சார்ந்திருக்கும் அந்த மாநில மக்களின் மொழிக்கு எதிராக செயல்படுவதில்லை, தமிழ்நாட்டிலே மட்டும்தான் இப்படி ஒரு நிலையை நாம் பார்க்கிறோம், அதற…
-
- 0 replies
- 903 views
-
-
”பாசிசம் முதலில் கைப்பற்றுவது ஊடகங்களை. அதனூடாக உருவாக்கப்படும் பொதுக்கருத்தே மக்களை பாசிச நடவடிக்கையில் ஈடுபடச் செய்யும்” ”நீங்க எந்த ஊரு தம்பி?” மதுர….. மதுரையில…. எதைச் சொல்ல. சொன்னால் தெரிந்து விடுவோ..என்கிற அச்சம். மதுர டவுணு சார். டவுணேதானா? இல்ல பக்கத்துல கிராமமா? நீங்க கும்புடுற சாமி என்ன சாமி? டவுணல எங்க இருக்கீங்க? சட்டைக்குள் நெளியும் பூணூல் என்னையும் சேர்த்து வளைக்கிறது நான் நெளிகிறேன் கூச்சமாக இருக்கிறது. ஒருவர் சாதியை இன்னொருவர் கேட்பது அநாகரிகம் என்பதனால் கூச்சம் ஏற்படுவதுண்டு. என் உண்மையான சாதி உனக்குத் தெரிந்தால் இந்த உறவு இத்தோடு முறிந்து விடும் என்ற அச்சத்தினால் ஏற்படும் கூச்சமே நடப்பில் அதிகம். சட்டக் கல்லூ…
-
- 2 replies
- 3.6k views
-
-
தமிழ் எம்.பிக்கள் மாநாடு-லண்டன் செல்லும் வைகோ சனிக்கிழமை, நவம்பர் 22, 2008 சென்னை: லண்டனில் தமிழ் பேசும் நாடாளுமன்ற எம்.பிக்களின் கூட்டமைப்பின் மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார். இதற்காக அவர் 24ம் தேதி லண்டன் செல்கிறார். லண்டனில், தமிழ் பேசும் நாடாறுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் எம்.பிக்கள் பலர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் வருகிற 26ம் தேதி லண்டனில் மாநாடு நடைபெறுகிறது. இதில் வைகோவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார். இதற்காக அவர் பொடா நீதிமன்றத்தின் அனுமதியை கோரியிருந்தார். பொடா கோ…
-
- 13 replies
- 3.7k views
-
-
கணணி அல்லது மொபைல் போன் பாவிக்கும் அனைவரும் எதோ ஒரு வகையில் கொங்கோவில் நடக்கும் இனப்படுகொலை யுத்தத்துடன் தொடர்புபட்டவர்கள் தான். யாராவது ஒரு திருடன், சொத்துக்கு உரிமையாளரை கொலை செய்துவிட்டு, கொள்ளையடித்த பொருட்களை குறைந்த விலை கொடுத்து வாங்கினால், நாமும் அந்த கொலைக்கும், கொள்ளைக்கும் உடந்தையாக இருந்ததாக குற்ற உணர்ச்சி எழுவதில்லையா? ஆனால் அந்த பாவத்தை நாம் எல்லோரும் தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டு தான் இருக்கிறோம். இன்று உலகில் கணணி, மற்றும் மொபைல் தொலைபேசி போன்ற இலத்திரனியல் பொருட்களின் விலை குறைந்து பாவனை அதிகரித்து இருக்கின்றதென்றால், அதற்கு முக்கிய காரணம், அவற்றிற்கான மூலப்பொருட்கள் கொங்கோவில் இருந்து பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவது தான். இது வெறும் கொள்ளை சம்பந்தமான ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
லாஸ் ஏஞ்செலஸ்: பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டார். தனது பெயரையும் மிகயீல் எனவும் அவர் மாற்றி விட்டார். பனோராமா என்ற இதழின் இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தான் இஸ்லாமின் ஐந்து கடமைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், பெயரை மிகயீல் என மாற்றிக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக தனது மத மாற்றத்தை அறிவிப்பேன் எனவும் ஜாக்சன் இந்த இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். பஹ்ரைனில் செட்டில் ஆகிறார்: மேலம் விரைவில் பஹ்ரைனுக்குப் போய் ஜாக்சன் செட்டிலாகப் போவதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே அவர் செயற்கைத் தீவு ஒன்றில் இடம் வாங்கிப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மத மாற்றம் குறித்…
-
- 15 replies
- 3.2k views
-
-
போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன. எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக
-
- 16 replies
- 5.7k views
-
-
“இன்னொரு பிறவி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு சொல்லுங்கள், அடுத்த பிறவியில் என்னவாக இருக்க விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு, மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன் என்று மார்க்ஸ் பதிலளித்தார்” என்று உயிர் ஓசை இணைய இதழில் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் கவிஞர் சுகுமாரன். “மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன்!” – வாழ்க்கையின் துன்பங்களால் நைந்து போன ஒரு மனிதன், களைத்துத் துவண்ட ஒரு தருணத்தில் சொல்லியிருக்கக் கூடிய வார்த்தைகள்! எனினும் மார்க்ஸ் இங்ஙனம் சொல்லியிருக்கக் கூடுமா? “இதுநாள் வரை தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் செய்தார்கள். நமது பணி அதனை மாற்றியமைப்பதுதான்” என்று பிரகடனம் செய்த ஒரு மேதை, “இயற்கையின் நடத்தையை ஆளும் இயக்க விதிகளை மனிதன் கண்டு பிடித்துவிடல…
-
- 0 replies
- 661 views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய கடற்படைக்கு அனுமதி சோமாலியாவுக்கு அருகான கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல்கள் மீது கடற்கொள்ளையர்களால் நடத்தப்படும் தாக்குதல்களை கையாளும் நடவடிக்கைகளுக்காக அங்கு செல்வதற்கு இந்திய கடற்படைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோமாலிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களை துரத்தியடிப்பதற்கு இந்திய கடற்படைக்கு ஐக்கிய நாடுகள் சபை அனுமதி வழங்கியுள்ளதாக டெல்லியை தளமாகக் கொண்ட கடற்படை வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன. ஆபிரிக்க முனையிலும், ஏடன் வளைகுடாவிலும், ரோந்து நடவடிக்கையில் கப்பல்களை ஈடுபடுத்தியுள்ள ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த வார முற்பகுதியில் கடற்கொள்ளையர் கப…
-
- 5 replies
- 1.3k views
-
-
சர்வதேச நிதி நெருக்கடி தமிழ் சினிமா கோலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்க பெரும் கனவுகளோடு சென்னை வந்த கார்பரேட் நிறுவனங்களின் திரையுலக முதலீடுகள் கணிசமாகக் குறைந்துவிட்டன. பல நிறுவனங்கள் இப்போதைக்கு புதிய முதலீடுகளே வேண்டாம் என தங்கள் திரைப்படப் பிரிவை மூடிவிட்டன. 40 கோடி, 50 கோடி என டாப் கியரில் போய்க் கொண்டிருந்த பல இந்தி நடிகர்களின் சம்பளத்தை தடாலடியாகக் குறைத்துள்ளன கார்ப்பரேட் நிறுவனங்கள். ரூ.70 கோடி வாங்குவதாகக் கூறப்பட்ட அக்ஷய் குமாரின் சம்பளத்தை 10 கோடியாகக் குறைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். மற்ற நடிகர்களின் தம்பளமும் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது. இதே நிலை கோலிவுட்டியிலும் நடைமுறைக்கு வருகிறது. உச்ச நடி…
-
- 0 replies
- 693 views
-
-
மியாமி: அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், இதயம் இல்லாமல் 118 நாட்கள் வாழ்ந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இதயத்திற்குப் பதில் அவருக்கு செயற்கையாக ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த சாதனத்துடன் அவர் 118 நாட்கள் (4 மாதங்கள்) வாழ்ந்துள்ளார். அந்த சாதனைச் சிறுமியின் பெயர் டிஸானா சிம்மன்ஸ் ( D'Zhana Simmons) . இதற்கு முன்பு, ஜெர்மனியில் ஒரு நபர், செயற்கை ரத்த சுத்திகரிப்பு சாதனத்துடன் 9 மாதங்கள் வாழ்ந்துள்ளார். ஆனால் ஒரு சிறுமி இயற்கையான இதயம் இல்லாமல், இத்தனை நாட்கள் வாழ்ந்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. தெற்கு கரோலினாவைச் சேர்ந்தவர் சிம்மன்ஸ். தனது இதயமற்ற இந்த அனுபவம் குறித்து சிம்மன்ஸ் கூறுகையில், மிக…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கைத் தமிழர் அறப்போர் இலங்கையில் நடக்கும் அறப்போரை ஆதரித்தும், இலங்கை அரசின் அடக்குமறைகளை கண்டித்தும் நடத்தப்படும் முதல் கூட்டம் இதுதான். திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலாக இப்படிப்பட்ட கூட்டத்தை இன்றயதினம் கூட்டியிருக்கிறதென்றால் இதை அரசியல் வரலாற்றில் எங்கோ ஒரு மூலையில் தள்ளிவிடும் சாதாரண பிரச்சனையாக இது இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையும், அவர்கள் மீது வீசப்படும் பழிச்சொற்களும், இழிச் சொற்களும், தமிழர் கடை சூரையாடப்படுவதையும், ஆடவர், பெண்டிர், முதியவர், குழந்தைகள் உட்பட அனைவரும் ஓட ஓட விரட்டியடிக்கப்படுவதும், துடிக்கத் துடிக்க வெட்டப்படுவதும் கேட்டு நமக்கெல்லாம் மனம் பதறச் செய்கிறது. இதை எண்ணும்போது எனக்கு தமிழ் …
-
- 0 replies
- 695 views
-
-
திண்டுக்கல்: மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (41). பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ரமேஷ்-க்கு ஆண் குழந்தை மீது ஆசை வந்தது. இதனால் வளர்மதி மீண்டும் கர்ப்பம் ஆனார். வளர்மதிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என காத்திருந்த ரமேஷ்-வளர்மதி தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் வருத்தம் அடைந்த ரமேஷ் தனது பல சரக்கு கடையை கூட கவனிக்காமல் சுற்றித்திரிந்துள்ளார். இந்த நிலையில் அவர் ஆர்.எம். காலனி அருகே விஷம் அருந்திய நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அவரை …
-
- 0 replies
- 1.4k views
-
-
நாற்பத்து நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காகக் களை கட்டியிருக்கும் அமெரிக்காவில் இந்த முறை சுவாரசியம் தருபவர் பாரக் ஒபாமா. குடியரசுக் கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாதான் வேட்பாளர் என்ற முடிவு தற்போது வந்துவிட்டது. கருப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற வகையில் ஒபாமா வென்றால் வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று கூறுகிறார்கள். சற்றே முன்னிலையில் இருப்பதாக மதிப்பிடப்படும் ஒபாமாவை வெள்ளை நிறவெறி அமைப்புகள் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஹவானாத் தீவைப் பின்புலமாகக் கொண்ட அவர் அமெரிக்கரே இல்லை என்றும், அவரது உறவினர்களில் சிலர் முசுலீம்களாக இருப்பதால் அவரும் முசுலீம் என்றும் பிரச்சாரங்கள…
-
- 0 replies
- 926 views
-
-
பண்ணைப்புரம் என்ற கிராமத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. இளையராஜா வாழ்ந்த பண்ணைப்புரத்தை வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அவருடைய உறவினர்களும், இளமைக்கால நண்பர்களும் இன்னமும் வாழ்கின்ற பண்ணைப்புரத்தை வாசகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மதுரை மாவட்டத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பண்ணைப்புரம் கிராமத்தில் பண்ணையாரும் உண்டு; பண்ணையடிமைகளும் உண்டு. செத்துப் போன வடிவேல் கவுண்டர் எனும் கொடுங்கோல் நிலப்பிரபுவின் மகன் பிரசாத் என்பவர்தான் இப்போது பண்ணைப்புரத்தின் பண்ணை. ஒக்கலிக கவுண்டர்கள் — 400 குடும்பங்கள், பறையர் சமூகத்தினர் - 400 குடும்பங்கள், சக்கிலியர் சமூகத்தினர் - 150 குடும்பங்கள், செட்டியார், கள்ளர் போன்ற பிற ‘மேல் சாதி’யினர் சில …
-
- 1 reply
- 2.7k views
-
-
கர்கான்: கர்கானில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் மதிய உணவு இடைவேளையின்போது, ஊழியர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கேக் சாப்பிடும் போட்டியின்போது ஏராளமான கேக்குகளை சாப்பிட்டு மூச்சுத் திணறி, தொண்டை அடைத்து ஒரு என்ஜீனியர் பலியானார். கர்கானில் உள்ள நோக்கியா சீமன்ஸ் நெட்ஒர்க்கிங் நிறுவனத்தில் சொல்யூஷன்ஸ் என்ஜீனியராக பணியாற்றஇ வந்தவர் 22 வயதாகும் செளரவ் சபர்வால். கிழக்கு டெல்லியின், பத்பர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர். இவர், தனது அலுவலகத்தின் காபி கிளப்பில், மதிய உணவு இடைவேளையின்போது நடத்தப்பட்ட கேக் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது ஏராளமான கேக்குகள் போட்டிக்கு வைக்கப்பட்டன. அவற்றை போட்டியில் கலந்து கொண்ட ஊழியர்கள் வேகம் வேகமாக சாப்பிட்டனர். சபர்வால் ஜெயி…
-
- 3 replies
- 1.4k views
-
-
சென்னை: மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தால் தாங்கள் பாதிப்புக்குள்ளானது குறித்து புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் தினம், குழந்தைகள் தினத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல, ஆண்கள் தினத்தை ஆண்கள் நலனை காக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னையில், இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு முழுக்க, முழுக்க ஆண்களின் நலனுக்காக செயல்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா முழுவதும் 50 ஆயிரம் …
-
- 0 replies
- 909 views
-
-
கொச்சி: கொழும்பு கிளம்பிய ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் முன் சக்கரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் கொச்சி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. கொச்சி நெடும்பசேரி விமான நிலையத்திலிருந்து இன்று காலை யுஎல் 165 என்ற அந்த விமானம் 97 பயணிகளுடன் கிளம்பியது. ஆனால், அதன் முன் சக்கரம் முழுவதும் உள்ளே செல்லவில்லை. பாதியில் நின்றது. இதையடுத்து விமானத்தை மீண்டும் கொச்சிக்கே திருப்பினார் விமானி. சரியாக இயங்காத முன் சக்கரத்துடன் அந்த விமானம் தரையிறங்க இருந்ததால் விமான நிலையம் முழு அவசர கால நிலைக்குக் கொண்டு வரப்பட்டன. ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுவினர், தீயணைப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். ஆனாலும் அந்த விமானம் காலை 8.45 மணிக்…
-
- 0 replies
- 927 views
-
-
சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை தொலைக்காட்சியில் பார்த்தீர்களா? ஐயோ என்ன கொடுமை? அதைப் பார்த்த அன்று முழுவதும் என்னால் சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை. -எஸ். சௌமியா அது சென்னை சட்டக் கல்லூரி அல்ல. சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி. அந்தக் காட்சியை நானும் பார்த்தேன். நிஜமாகவே நடக்கிற எந்த சண்டையையும் இப்படி காட்சியாக்கி திட்மிட்டு தொகுத்து, பின்னுரைகளோடு ஒளிப்பரப்பினால், பார்ப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும். நானும் அதைப் பார்த்த மாத்திரத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். அந்தக் காட்சி என்னை பதட்டப்படவைத்தது. மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது. கட்டையாலும், தடியாலும், குச்சியாலும் தாக்குகிற இந்தக் காட்சி…
-
- 5 replies
- 1.2k views
-
-
மீனவர் மாநாடு, மிரளும் அரசியல் வட்டாரங்கள் நாடாளுமன்றத் தேர்தல் அதோ இதோ என்று நெருங்கிவரும் நிலையில், குமரி மாவட்டத்தில் நடைபெறப்போகும் ஒரு மாநாடு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த மாநாட்டின் பெயர் `மீனவர் வாழ்வுரிமை மாநில மாநாடு.' ஓட்டு வங்கியை எதிர்பார்த்துத்தான் இந்த மாநாடோ? என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களை இப்போது உலுக்கத் தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் வரும் 21-ம்தேதி நடக்க இருக்கும் இந்த மாநாட்டை `மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்' என்ற அமைப்பு நடத்துகிறது. இது மீனவர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் முதல்முறையாக ஒன்றிணைக்கும் மாநாடு. இதில் பங்கேற்கப்போகும் தலைவர்கள் பழ. நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், கோ.க.மணி, திருமாவளவன் உள்பட இன்னும் பலர். …
-
- 0 replies
- 776 views
-
-
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் நேற்று சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார். பின்னர், அவர் கூறுகையில், ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு உள்ளது’’ என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தேசிய துணைத் தலைவர் சுதாகர் ரெட்டி, மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை சந்தித்து பேசினர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. பின்னர், நிருபர்களுக்கு பரதன் அளித்த பேட்டி: ஜெயலலிதாவுடன் என்ன பேசினீர்கள்? கூட்டணி குறித்து பேசினீர்களா? …
-
- 0 replies
- 1.2k views
-