Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. துபாய்: ஈரான் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அது உலகப் போராக மாறும் என்று ஈரான் ராணுவ துணைத் தளபதி சயீத் மசூத் ஜஸாயரி எச்சரித்துள்ளார். இதுகுறித்து டெஹ்ரானில் அவர் கூறுகையில், அமெரிக்க நிர்வாகத்தின் அராஜகமும், ஜியோனிசத்தின் ஆதிக்க மனப்பான்மையும் சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான் என பரவி இப்போது ஈரானைக் குறி வைத்து நிற்கின்றன. இதன் மூலம் உலகம் பிளவுபடும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகநாடுகள் அணி திரளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஈரானை யாராவது தொட்டால் அது உலக போராக மூளும் என்று எச்சரிக்க விரும்புகிறோம். அது மாதிரியான போரின்போது ஏகாதிபத்திய அரசுகள் அகற்றப்படும் என்று கூறியுள்ளார் ஜஸாயரி. நன்றி தற்ஸ் தமிழ்

    • 3 replies
    • 1.1k views
  2. சென்னை: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ரூ.1க்கு விற்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாக, நியாய விலைக் கடைகளில் தற்போது வழங்கப்படும் உளுந்து, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை தொடர்ந்து குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. அதேபோல, தமிழக…

  3. ரஷ்யாவினால் ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பத்தை முறியடித்து தாக்கும் ஏவுகணை பரிசோதனை ஜோர்ஜியா நாட்டின் ரஷ்யாவின் நடவடிக்கைகளை அடுத்து ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள விரிசல் நிலையில், ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் சென்று தாங்கக்கூடிய அதி நவீன ஏவுகணை ஒன்றைப் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. டோபோல்- ஆர்.எஸ்-12 எம் (Topol - RS - 12M) என்ற அதி நவீன கண்டம் விட்டு கண்டம் சென்ற தாக்கக்கூடிய ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை நடத்தி முடித்துள்ளது. இந்த ஏவுகணை ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பத்தை முறியடித்து குறித்த இலக்கைச் சென்று 6000 கிலோ மீற்றரில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை பொருந்தியது. வெற்றிகரமாண பரிசோதனையை அடுத்து இது தொடர்பில் …

  4. சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரை விடுதலை செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்தது. ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியும், அதேபோல ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் தங்களை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்து வருகிறார். இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாநில அரசின் உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆகியோர் தாக்கல் செ…

  5. 28 இலங்கை மீனவர்களுக்கு சிறை தண்டனை வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 29, 2008 இராமநாதபுரம்: இலங்கையைச் சேர்ந்த 28 மீனவர்களுக்கு ராமநாதபுரம் கோர்ட் 12 வார சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஜூன் 20ம் தேதி கன்னியாகுமரி கடல் பகுதியில், 6 விசைப் படகுகளுடன் இந்த 28 மீனவர்களும் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இந்திய கடலோரக் காவல் படை பிடித்தது. பின்னர் அனைவரும் ராமநாதபுரம் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, 28 மீனவர்களுக்கும் 12 வார கால சிறை தண்டனை, தலா ரூ. 2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பைத் தொடர்ந்து அனைவரும் மதுரை மத்திய சிறை…

    • 2 replies
    • 919 views
  6. சென்னை: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை மிகக் கடுமையாக தாக்கி முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியுள்ளார். சமீப காலமாக முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜனை மறைமுகமாக சாடி கவிதை பாடியிருந்தார் கருணாநிதி. இந்த நிலையில் பழ. நெடுமாறனை மிகக் கடுமையாக சாடி கவிதை எழுதியுள்ளார் கருணாநிதி. நெடுமாறன் எழுதிய ஒரு கட்டுரையில், முதல்வர் குறித்து விமர்சித்திருந்தார். காதோரம் ஒரு முடி நரைத்ததற்கே தசரதன் ராமனை மன்னராக்கினான். ஆனால் கருணாநிதியோ இன்னும் முதல்வர் பதவியை விடாமல் பிடித்திருக்கிறார் என்று அதில் நெடுமாறன் தாக்கியிருந்தார். அதற்குப் பதிலடியாக இந்தக் கவிதையைப் புணை…

    • 13 replies
    • 3.8k views
  7. புயலை எழுப்பும் 'புதிய பைபிள்' - கொந்தளிக்கும் கிறிஸ்தவ அமைப்புக்கள் கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போப்பாண்டவரின் ஆசியோடு வெளியிடப்பட்டிருக்கும் புதிய பைபிள் ஒன்று. இந்த ஒரு புத்தகத்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மதக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக, அவர்கள் அபயக் குரல் எழுப்புவது ஒட்டுமொத்த அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது. புதிய பைபிள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ரபேலை சந்தித்துப் பேசினோம். "இந்து, முஸ்லிம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு, நமது சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரோமாபுரியி…

  8. சூடானிய போயிங் 737 ரக விமானம் ஒன்று 95 பேருடன் கடந்தப்பட்டுள்ளது. குறித்த விமான சூடானின் Nyala இல் இருந்து Khartoum நோக்கிப் பறந்து கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளது. அது தற்போது சூடான் - லிபிய எல்லையில் லிபியாவின் விமான நிலையமொன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தீரும் நிலை தோன்றியதால் குறித்த விமானம் தரையிறங்க மனிதாபிமான அடிப்படையில் லிபியா அனுமதி அளித்ததுள்ளது. எனினும் கத்தியைக் காட்டி விமானத்தைக் கடத்திய கடத்தல்காரர்/கள் அதைப் பாரீஸ் நோக்கிக் கொண்டு செல்ல எரிபொருள் தருமாறு கோரி வருகின்றனர்..! http://news.bbc.co.uk/1/hi/world/africa/7582975.stm

    • 4 replies
    • 1.1k views
  9. சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வது கூடாது. அவருடைய வழக்கறிஞர் பல உண்மைகளை மறைத்து விட்டார் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். தன்னை விரைவில் விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என்று கோரி சுப்ரமணியன் சுவாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த நிலையில், இன்று நளினி மனு நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது திடீரென அங்கு சுப்ரமணியன் சுவாமி ஆஜரானார். பின்னர் அவர் நீதிபதியிடம் கூறுகையில், இந்த வழக்…

  10. புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திமுக உட்கட்சி தேர்தலில் மு.க. அழகிரி, ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடும் மோதலுக்கிடையே கீரனூர் பேரூராட்சி செயலாளராக ஸ்டாலின் ஆதரவாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. கிராமப் பகுதிகளுக்கான கிளைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. அதனைத் தொடர்ந்து பேரூராட்சி செயலாளர் மற்றும் மாவட்ட பிரதிநிதி தேர்தல் நடைபெறுவதாக திமுக தலைமை அறிவித்தது. அரிமழம், கீரமங்கலம், ஆலங்குடி பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கீரனூர் பேரூராட்சியில் அமைச்சர் ஸ்டாலின் ஆதரவாளராக அரசு வக்கீல் செல்லப் பாண்டிய…

  11. மாஸ்கோ: கிர்கிஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி 70 பயணிகள் பலியாயினர். 20 பேர் உயிர் தப்பிவிட்டனர். முன்னாள் சோவியத் குடியரசு நாடான கிர்கி்ஸ்தான் தலைநகர் பிஷேக் அருகே உள்ள மனாஸ் விமான நிலையத்தில் இருந்து ஈரான் நாட்டின் மஷாத் நகருக்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. போயிங்௭37 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை விமானிகள் மனாஸ் விமான நிலையத்துக்கு திரப்பினர். ஆனால், விமான நிலையத்துக்கு 2 கி.மீ. தூரத்தில் வந்து கொண்டிருந்தபோதே அந்த விமானத்தில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 70 பேர் பலியாயினர். விமானி உள்பட சுமா…

  12. சென்னை: ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பினால் கூட்டணி வலுப்பெறும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் திமுக அணிக்கு பாமக திரும்பவுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸுடன் பேசப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது பாமக. திமுகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம் என பாமக அறிவித்தது. அதன்படி அமைச்சரவையில் பங்கு கேட்காமல் இருந்து வந்தது. ஆனால் திமுக ஆட்சி பதவியேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு பிரச்சின…

  13. தாய்மையுள்ளம் கொண்ட நாய் La China 14 வயதேயான ஒரு மனிதப் பெண்ணுக்கு பிறந்தது ஒரு ஆண் குழந்தை. சமுதாயத்துக்குப் பயந்தோ என்னவோ பிறந்த குழந்தையை வயல் வெளியில் குப்பை மேட்டில் போட்டுவிட்டு போய்விட்டாள் பெற்ற தாய். ஆனால் சில குட்டிகளிற்கு தாயான நாய் ஒன்றோ.. தன் குட்டிகளோடு குட்டியாய் அந்த மனிதக் குழந்தையையும் காப்பாற்றி பராமரித்திருப்பது மனித வர்க்கத்தையே ஒரு கணம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மனிதக் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் இருந்து, குறித்த பெண் நாயால் 50 மீற்றர்கள் தொலைவில் இருந்த தனது குட்டிகளின் பராமரிப்பிடத்துக்கு காவிச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் நடந்தது இந்தியாவில் அல்ல தென் அமெரிக்க நாடான அஜென்ரீனாவில்…

  14. பாவத்துக்கு பரிகாரம் கொல்கத்தா: இரு ஆண்டுகளுக்கு முன் தன்னால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் காலில் மன்னிப்பு கேட்கிறான் மிது ஜாதவ் என்ற கயவன். இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த கொடூரம் நடந்தது. இப்போது தான் தவறை உணர்ந்துவிட்டதாகவும் தன்னை மன்னிக்குமாறும் அந்த சிறுமியின் காலில் பூ தூவி மன்னிப்பு கேட்டான் மிது ஜாதவ'. கொல்கத்தாவில் உள்ள ஹவுரா நீதிமன்றத்தில்தான் இந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சி அரங்கேறியது.

  15. ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியான நகுமான் என்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பெண்களின் உடல்களை போலீசார் மீட்டனர். 20 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அவர்களின் உடல்கள் அருகே பெண்கள் தவறாக நடந்தால் இதே தண்டனை வழங்கப்படும் என்று எழுதப்பட்ட அட்டை ஒன்று கிடந்தது. இதன் மூலம் அவர்கள் விபசார அழகிகள் என்று தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பஜாரூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களை ஜெய்ஸ்-இ- இஸ்லாமி என்ற இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் விபசாரம் செய்யும் பெண்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. http://www.newsonews.com http://puspaviji13.net84.net

  16. ஸ்பெயின் தலைநகரில் இருந்து 172 பேருடன் புறப்பட்ட விமானம்.. ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிலர் எரிகாயங்களோடு மீட்கப்பட்டுள்ளனர். http://news.bbc.co.uk/1/hi/world/europe/7572643.stm

  17. (தற்ஸ தமிழ் இணையம்) டெல்லி: மூத்த அதிகாரியால் பாலியல் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இந்தியாவின் அன்னிய உளவுப் பிரிவான 'ரோ'வின் பெண் அதிகாரி பிரதமர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இணை செயலாளர் நிலையில் உள்ளவரான நிஷா பிரியா பாட்டியா (49)ரோ அமைப்பில் இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியாவார். இப்போது குர்காவ்ன் நகரில் உள்ள ரோவின் பயிற்சி மையத்தில் இயக்குனராக உள்ளார். இவர் நேற்று பிற்பகலில் பிரதமர் அலுவலகத்துக்கு வந்தார். பிரதமர் அலுவலகத்தில் உள்ள மூத்த ரோ அதிகாரியை சந்திக்க முயன்றார். ஆனால் அதற்கு அனுமதி தரப்படவில்லை. இதையடுத்து தனக்கு பாலியல் தொல்லை தந்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதத…

  18. தேனி மாவட்டத்தில் நூதனமான முறையில் கழுதைகள் மூலம் கடத்திய ரேஷன் அரிசி கடத்தப்பட்டது. அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து அரிசியை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரூ.2க்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை சிலர் சட்ட விரோதமாக வெளி மாநிலங்களுக்கு கடத்தி வருகின்றனர். பஸ் மற்றும் ரயில்களில் கடத்தப்படும் ரேஷன் அரிசியை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர். என்றாலும் அரிசி கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. பஸ், லாரி, ரயில் என்று எதில் கடத்தினாலும் போலீஸார் பிடித்து விடுவதால், புதிய முறையை கையாண்டுள்ளனர் தேனி மாவட்ட அரிசி கடத்தல்காரர்கள். அழுக்கு மூட்டைகளை சுமக்கும் கழுதையின் (!) மீது வைத்து அரிசியை கடத்த முயன்றுள்ளனர் கடத்தல்காரர்கள், அது…

  19. சென்னை: அரசியலில் நுழைந்துள்ள தமிழக நடிகர்கள் வியாதிக்காரர்கள் என்றால் ஜெயலலிதா பெரு வியாதிக்காரரா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் காட்டமாக கேட்டுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் குறித்து கூறுகையில், தமிழகத்தை பீடித்துள்ள வியாதி (நடிகர்கள் அரசியலுக்கு வருவதை அப்படிக் குறிப்பிட்டார்) இப்போது ஆந்திராவுக்கும் பரவி விட்டது என்று கூறியிருந்தார். இதற்கு விஜயகாந்த் படு காட்டமாக பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அரசியலில் நுழைவது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெய லலிதா, தமிழகத்திற்கு பிடித்திருந்த வியாதி ஆந்திராவுக்கும் பரவியுள்ளது என்று கு…

    • 3 replies
    • 1.2k views
  20. வீரகேசரி நாளேடு - இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு வைத்தியசாலையின் குளிரூட்டப்பட்ட பிணவறையில் வைக்கப்பட்ட பெண் குழந்தையொன்று, 6 மணித்தியாலங்களின் பின் உயிருடன் மீண்ட அதிசயம் இஸ்ரேலில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பமடைந்து 23 ஆவது வாரத்தில் (சுமார் ஐந்தரை மாதத்தில்) மேற்படி குழந்தையின் தாயாரான பாயிஸா (26 வயது), கடுமையான இரத்தப்போக்கு மற்றும் வலி என்பவற்றுக்கு உள்ளாகிய நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெஸ்டர்ன் கலிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பிறந்த குழந்தை இறந்து விட்டதாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டு 6 மணித்தியாலங்களின் பின்னர், அக்குழந்தையின் தாயாரான பாயிஸா இறந்த குழந்தையின் முகத்தை கடைசியாக பார்க்க ஆசைப்படவே குழந்தை தாயிடம் எடுத்து வரப்பட்டது. …

  21. யோர்ஜியா சொல்லித் தரும் அரசியல் பாடம் வலியோர்முன் தன்னை நினைக்க, தான் தன்னிலின் மெலியார்மேல் செல்லும் இடத்து. (அருளுடமை அதி. 25 – குறள் 250) இதன் பொருள் - தன்னைவிட மெலிந்தவரைத் துன்புறுத்தச் செல்லும்போது தன்னிலும் வலியவர் தன்னைத் துன்புறுத்த வரும்போது அவர் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை நினைக்க வேண்டும். கெட்ட காலத்துக்கு யோர்ஜியாவின் ஆட்சித்தலைவர் மிக்கேல் சாகாஷ்விலி (ஆiமாநடை ளுயயமயளாஎடைi) க்கு பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தெரிநிதிருக்கவில்லை. “மெலியாரை வலியார் ஒறுத்தால் வலியாரை தெய்வம் ஒறுக்கும்” என்ற பழமொழி கூட சாகாஷ்விலிக்குத் தெரிந்திருக்கவில்லை. யோர்ஜியாவின் ஆட்சித்தலைவர் சாகாஷ்விலி ஒரு மெலிய மாகாணமான தென் ஒசெச்சியா…

  22. ஜோர்ஜியாவின் கோரி மற்றும் ஏனைய பகுதிகளில் நிலைகொண்டுள்ள ரஷ்யப் படைகள் தாம் அளித்த வாக்குறுதியின்படி இன்று திங்கட்கிழமை வெளியேறுவார்களென ஜோர்ஜிய மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்ப

  23. பழனி: பழனியில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டின் வாயில் சிக்கிய வெடி வெடித்ததில் மாட்டின் வாய் கிழிந்து படுகாயம் அடைந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் பழனியப்பன். அவர் வையாபுரி குளத்தில் தனக்குச் சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். குளத்துக்கு அருகில் இவரது மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பயங்கர வெடிசத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து மாட்டின் அலறல் சத்தமும் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியப்பன் மாடு இருந்து திசை நோக்கி ஓடினார். அப்போது மாட்டின் வாய்பகுதி கிழிந்து ரத்தம் சொட்டியது. மாடு வலியால் துடிதுடித்து. மாட்டின் தாடைப்பகுதி மற்றும் நாக்கு முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து மாட்டை மருத்துவமனைக்கு பழனியப்பன் கொண்டு சென்றார். …

  24. எகிப்தை சேர்ந்த 27 வயதுடைய ஒரு பெண் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். http://edition.cnn.com/2008/HEALTH/08/16/e...h.ap/index.html ALEXANDRIA, Egypt (AP) -- A 27-year-old Egyptian woman gave birth to septuplets early Saturday in the coastal city of Alexandria, family members and the hospital director said. Nurses attend to the septuplets at a the El-Shatbi Hospital in Alexandria, Egypt. Ghazala Khamis was in good condition after having a blood transfusion during her Caesarean section because of bleeding, said Emad Darwish, director of the El-Shatbi Hospital where she gave birth. The newborns, four boys and three girls, weigh b…

  25. அண்மைய மாதங்களாக லண்டனில் வகை தொகையின்றித் தொடரும் கத்திக் குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் தற்போது லண்டன் வாழ் தமிழர் தரப்பை மீண்டும் பதம் பார்க்க ஆரம்பித்துவிட்டது. தெற்கு லண்டனில் 17 வயதான தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் தெருச் சண்டையொன்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி இன்று மரணமடைந்துள்ளார். இக்கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை மன்ஜெஸ்ரர் நகரில் இன்று 16 வயது வெள்ளையின இளைஞனும் கத்திக் குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். http://news.bbc.co.uk/1/hi/england/london/7565004.stm

    • 6 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.