உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு எதிர்ப்பு கணவர் முருகனுடன் நளினி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி முருகனை விடுதலை செய்யக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனது கணவர் முருகன் மற்றும் இருவருடன், நளினிக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு பெண் குழந்தை பிறந்த பிறகு, அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என ராஜீவ் காந்தியின் மனைவியான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்தார். அந்த அடிப்படையில், அவரது தண்டனை குறைக்கப்பட்டது. இந்த நிலையில், நளினி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர…
-
- 1 reply
- 761 views
-
-
அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்? விவசாயப் பொருளாதார நெருக்கடியும் உணவு நெருக்கடியும் முற்றி, அவற்றின் விளைவாக விவசாயிகளின் எழுச்சியும் உணவுக் கலகங்களும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் படுதோல்விகளைக் கண்டு வருகிறது. இன்னும் பத்து மாதங்களில் கிரமமான கால முறைப்படியே தேர்தல்கள் வந்தால் கூட, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பும் அருகிப் போய்விட்டது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட, மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசுக்கு தாங்கள் அளித்து வரும்…
-
- 0 replies
- 606 views
-
-
சென்னை, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கும் மற்றொரு தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தக்க நேரத்தில் பொலிஸார் தலையிட்டு தடுத்ததை அடுத்து பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிலிம் சேம்பரில் நேற்று நடைபெற்றது. செயலாளர் பதவிக்கு போட்டிடும் கேயார், நடிகை ராதிகா ஆகியோர் அதன் பின்னர் வாக்களித்தனர். நடிகை ராதிகா வாக்களித்து விட்டு வெளியே வந்தபோது, ராம நாராயணன் அணியை சேர்ந்த கே.பி. பிலிம்ஸ் பாலு வாக்களிக்க உள்ளே வந்தார். கடந்த ஒருவார காலமாக தேர்தல் பிரசார மேடைகளில் பாலு…
-
- 9 replies
- 3.5k views
-
-
தமிழக மீனவர் பிரச்னை: முடிவு பிரதமர் கையில்- முதல்வர் கருணாநிதி தமிழக மீனவர் பிரச்னையில் சுமுக முடிவு ஏற்படுவது பிரதமரின் கையில்தான் இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ராமேசுவரத்தில் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதைப் பற்றி தமிழக அரசு அக்கறையோடு பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கும் தெரிவித்து வருகிறது. ஏதாவது ஒரு சுமுகமான முடிவு ஏற்பட்டாக வேண்டும். அது பிரதமர் மன்மோகன் சிங் கையில்தான் இருக்கிறது. இந்தப் பிரச்னை பற்றி செய்தியாளர்களிடம் ஆழமாக விவாதிக்க முடியாது. சில விஷயங்களை நான் இங்கே வெளிப்படையாகச் சொல்ல…
-
- 0 replies
- 909 views
-
-
மீனவர் பிரச்னை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் ஜூலை 13ஆம் தேதி தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் தாக்குவதைக் கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மீனவர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. இதைக் கண்டிக்கும் வகையில் தே.மு.தி.க சார்பில் எனது தலைமையில் ஜூலை 13ஆம் தேதி ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடைபெறும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
- 1 reply
- 930 views
-
-
சேகுவாரா டைரி வெளியீடு . Wednesday, 09 July, 2008 11:37 AM . லா பாஸ், ஜூலை 9: கியூபா புரட்சியில் முக்கிய பங்காற்றிய லத்தீன் அமெரிக்க புரட்சியாளர் சேகுவாராவின் நாட்குறிப்பு பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. . அர்ஜென்டைனாவில் பிறந்து வளர்ந்த சேகுவாரா, கொரில்லா தாக்குதலை முன்வைத்த புரட்சியாளராக கருதப்படுகிறார். காஸ்ட்ரோவோடு இணைந்து கியூபா புரட்சியில் இவர் முக்கிய பங்காற்றி இருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் புரட்சி நாயகனாக சேகுவாரா விளங்கி வருகிறார். சேகுவாரா பொலிவிய காடுகளில் பதுங்கியிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் புரட்சியை ஏற்படுத்த முயற்சி செய்தார். அப்போது அவர் தமது எண்ணங்களை நாட்குறிப்பில் எழுதி வைத்தார். இ…
-
- 0 replies
- 1.8k views
-
-
அணுசக்தி ஒப்பந்தம்:அமெரிக்க அதிபர் புஷ்சுடன் மன்மோகன்சிங் பேச்சு இந்திய அரசியலில் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள டொயாகோவில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி-8 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் ஜப்பான் சென்ற பிரதமர் மன்மோகன்சிங், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து சீனப்பிரதமருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். சர்வதேச அணுசக்தி கழகம் மற்றும் நியூக்ளியர் சப்ளையர் குழுமத்தில் இந்தியாவின் நிலைக்கு சீனாவின் ஆதரவை திரட்டினார். இந்நிலையில் இன்று காலை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை சந்தித்து ஒப்பந்தம் குறித்து பேச…
-
- 0 replies
- 608 views
-
-
‘நாசா’ நடத்திய சர்வதேச அறிவியல் போட்டி:தமிழக மாணவர்கள் சாதனை நாசா விண்வெளி மையம் நடத்திய சர்வதேச போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 2வது பரிசைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் நாசா அமைப்பு ஆண்டுதோறும் அறிவியல் பற்றிய சர்வதேச போட்டியை நடத்துகிறது. வருங்கால சந்ததியினருக்கான பயணிகள் விமானம், போர் விமானம் எப்படி இருக்க வேண்டும் என்ற பிரிவில் சர்வதேச போட்டியை நடத்தியது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவி ஆர்.அனுஷா, ஜியோஇன்பர்மேடிக்ஸ் துறையில் 3ம் ஆண்ட…
-
- 0 replies
- 848 views
-
-
தாம்பரம்: மகாத்மா காந்தி தமிழில் போட்டுக் கொடுத்த கையெழுத்தை 70 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்திருந்தவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்த குரோம்பேட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீத்தாபதி நாயுடு (வயது 84). இவரது மனைவி இறந்து விட்டார். 4 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். இளைய மகன் ஸ்ரீபதி வீட்டில் தங்கி இருந்தார். சீத்தாபதி நாயுடுவின் சொந்த ஊர் நாகப்பட்டினம். அங்கு செல்வந்தராக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 1938-ல் பீகாரில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மகாத்மா காந்தி அடிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டினார். 22.2.1938 அன்று நாகப்பட்டினம் அவுரி திடலுக்கு நிதி திரட்ட வந்த காந்தி அடிகளிடம், அப்போது 13 வயத…
-
- 0 replies
- 853 views
-
-
'யூ டியூபை' கலக்கும் லாலுவின் 'இந்திலீஷ்'
-
- 0 replies
- 1k views
-
-
ஆப்கானிஸ்தானுக்கு இந்திய உயர்மட்டக் குழுவொன்று விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆப்கானில் இந்திய தூதரகத்திற்கருகில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து, அங்குள்ள நிலைமையை ஆராய்வதற்கே இந்த உயர் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். காபூலிலுள்ள இந்தியத் தூதரகம் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இந்திய வெளிவிவகார அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரியும் அடங்குகின்றனர். இந்த தாக்குதலையடுத்து டில்லியில் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி ஆகியோர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றது. இந்த நிலையில் தாக்குதல் இடம்பெற்ற இ…
-
- 0 replies
- 556 views
-
-
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகச் சாமி ஓதுவரை, அங்குள்ள தீட்சிதர்கள் அடித்து, உதைத்ததாக ஓதுவார் போலீஸில் புகார் கூறியுள்ளார். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவ தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என ஓதுவார் ஆறுமுகசாமி நீண்ட காலமாக போராடி வந்தார். அவருடன் பல்வேறு தமிழ் அமைப்புகளும் போராடி வந்தன. இந்தக் கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றமும் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதையடுத்து திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி தேவாரம், திருவாசகம் ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை உத…
-
- 1 reply
- 1.3k views
-
-
வெடிபொருள் நிரப்பிய வாகனம் மூலம் தாக்குதல். தூதரகத்தில் வேலை செய்த 4 இந்தியர்கள் பலி. துதரகத்தின் இராணுவ விவகாரப் பிரதிநிதியும் (military attache) அதில் அடங்குவார்.
-
- 3 replies
- 916 views
-
-
எரிபொருள் விலை அதிகரிப்பால் காலத்திற்கேற்ப தம்மையும் தயார்படுத்தும் விலை மாதர்கள் [06 - July - 2008] லண்டன்: உலகின் தொன்மை வாய்ந்த தொழிலான விபசாரம் பணத்துடன் மட்டுமே சம்பந்தப்பட்ட காலமொன்று இருந்தபோதும் எரிபொருள் விலை ஏற்றம், பணப்புழக்கம் வீழ்ச்சியடைந்தமை போன்ற காரணங்களால் விலைமாதர்களும் காலத்திற்கு ஏற்றமாதிரி தம்மை தயார்ப்படுத்திக் கொண்டுள்ளனர். உலகில் மசகு எண்ணெய் விலை பரலொன்று 145 டொலர்களாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த அஞ்சலினா எவர்சோல் (34 வயது) என்ற பெண் விபசாரத்திற்காக அறவிடும் கட்டணத்துடன் 100 டொலர்களை பெற்றோலுக்கான கட்டணமாக அறவிட்டதாக (இதில் 50 டொலர் முன்கூட்டியே செலுத்தப்பட்டது) குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்டுக்கியைச்…
-
- 1 reply
- 1.5k views
-
-
கொல்லப்பட்ட பிரான்ஸ் மாணவர்கள். வயது தலா 23. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட கத்திக் குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் லண்டனில் அரங்கேறியுள்ளன. அந்த வரிசையில் இறுதியாக பிரித்தானியாவிலேயே சிறந்த பல்கலைக்கழகமான இம்பீரியல் கல்லூரியில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio tech/ bio - engineering) படித்து வந்த இரண்டு பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் தென் கிழக்கு லண்டனில் அவர்களின் வதிவிடத்தில் வைத்து குத்திக் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளனர். இவர்களின் வதிவிடம் முன்னர் ஒரு மடி கணணிக்காக சூறையாடப்பட்டும் இருக்கிறது. அண்மைக்காலமாக கத்திக் குத்துக் கொலைகளும், துப்பாக்கிகள் பயன்படுத்திய கொலைகளும், களவுகளும் லண்டன் மாநகரையே பேரதிர்ச்சிக்கும்…
-
- 48 replies
- 6.6k views
-
-
புலிகள் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக் கும் இடையே, 20 ஆண்டுக்கும் மேலாக சண்டை நடந்து வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலைக்கு பிறகு இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 120க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, வேலூர் கோட்டையில் உள்ள திப்பு மகால், பேகம் மகால் அறை யில் அடைக்கப்பட்டனர். 1995ல், சுதந்திர தினத்தன்று அறையில் இருந்து கோட்டைக்கு வெளியே செல்லும் வகையில் சுரங்கப்பாதை தோண்டி 50 பேர் தப்பி சென்றனர். அவர்களில் பலரை போலீசார் கைது செய்தனர…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆமதாபாத்:குஜராத்தை சேர்ந்த 60 இளைஞர்கள், தங்களை அரவாணியாக மாற்றிக் கொள்ள அனுமதி கோரி, கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள இவர்களுக்கு வேலை கிடைக்காதது தான், அரவாணியாக முடிவு எடுத்ததற்கு காரணம்.குஜராத்தில் அரவாணிகள் ஏராளமாக சம்பாதிக்கின்றனர். அரவாணிகள் குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். 10 அரவாணிகள் கொண்ட குழுவினர், ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். அரவாணிகள் இடையே, ஏரியா பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்படுவது கூட உண்டு.தங்கள் குழுக்களில் இடம் பெறுவதற்காக, இளைஞர்களை கடத்தி, அவர்களை வலுக்கட்டாயமாக அரவாணியாக மாற்றுவதாக பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் குவிந்தன. இதைத் தொடர்ந்து, அரவாணியாக மாற விரும்புவோர், கோர்ட்டில் அ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இஸ்ரேல், அமெரிக்கா மீது ஈரான் எந்த நேரமும் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம்' [06 - July - 2008] ஜெருசலேம்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது ஈரான் எந்த நேரமும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தலாம். அதனை எதிர் கொள்ள நேட்டோ படையினர் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க கடற்படை அதிகாரி ஜேம்ஸ் கூறியுள்ளார். ஈரானை "கணிக்கமுடியாத எதிரி' என்றும் அவர் வர்ணித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க கடற்படையின் மாதாந்திர அறிக்கையில் அவர் கூறியிருப்பது; இஸ்ரேல் மீது ஈரான், பேலஸ்டிக் ராக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது. இஸ்ரேலைத் தாக்கும் நோக்கத்துடன் 3 ஏவுகணைகளை ஈரான் பரிசோதனையில் ஈடுபடுத்தி வருவதாகவும் தெரிகிறது. இதனை நேட்டோ நாடுகள் கருத்தில் கொண்டு மிகக்கவனமாக ச…
-
- 0 replies
- 900 views
-
-
சிவாஜி பிறந்த நாளில் புதிய கட்சி: நடிகர் பிரபு திங்கள்கிழமை, ஜூன் 23, 2008 சேலம்: நடிகர் திலகம் சிவாஜியின் 80 வது பிறந்த தினமான அக்டோபர் முதல் தேதியன்று அரசியில் பிரவேசம் நடைபெறும் என நடிகர் பிரபு கூறியுள்ளார். சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரபு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறஉகையில், சேலத்திற்கும் எங்களது குடும்பத்திற்கும் நெருங்கிய உறவு உள்ளது. எனது தந்தை ஏழு வயதில் சேலத்தில் தான் முதன் முதலில் நாடக நடிகர் ஆனார். எனது தந்தை மேல் உயிராக உள்ள ரசிகர்களுக்காகவும், ஏழை மக்களுக்காக உதவி செய்யவும் சிவாஜி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு வருடமும் 100 ஏழை மாணவ…
-
- 21 replies
- 3.7k views
-
-
'கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு. அதனைத் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பு' என இந்தியாவின் பொருளாதாரம் தகிடுதத்தோம் ஆகிவருகிறது. ஒன்றுமே நடக்காத மாதிரி நிதியமைச்சர் ப.சிதம்பரம் "இதெல்லாம் சரியாகிவிடும் மக்களுக்கு இது கசப்பு மருந்து தான்" என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பணக்கார முதலாளிக்கு ‘இனிப்பு’ வழங்கிக் கொண்டிருக்கிறார். அமெரிக்க சார்பு உலகமயப் பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கத்திற்கு நன்றிக் கடனாக அமெரிக்க நாட்டிற்கு அணுசக்தி ஒப்பந்தத்தின் பெயரால் அடிமை சாசனத்தை வேறு, இந்த அரசும் அமெரிக்க அடிவருடிகளும் இணைந்து தயாரித்துவிட்டு தற்பொழுது அதனை கையெழுத்திடவும் போனாவைத் தேடிக் கொண்டி…
-
- 0 replies
- 926 views
-
-
வெள்ளிக்கிழமை, ஜூலை 4, 2008 மாஸ்கோ: ரயில் வருவதை கூட கவனிக்காமல், தண்டவாளத்தில் முத்தமிட்டபடி நடந்த காதல் ஜோடி மீது ரயில் மோதியது. இதில், காதலி பரிதாபமாக உயிரிழந்தார். காதலனின் கால் துண்டிக்கப்பட்டது. ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் என்ற ஊரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ரயில் நிலைய தண்டவாளப் பகுதியில் ஒரு இளம் ஜோடி ரொமான்டிக் மூடில் போய்க் கொண்டிருந்தது. அப்போது காதலனும், காதலியும் அழுத்தமாக முத்தமிட்டிபடி நடந்துள்ளனர். அந்த சமயத்தில் ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. அதை காதல் ஜோடி கவனிக்கவில்லை. அந்த மன நிலையிலும் அவர்கள் இல்லை. காதல் ஜோடி தன்னிலை மறந்து நடந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்த ரயில் என்ஜின் டிரைவர் பலமாக ஹாரன் அடித்…
-
- 0 replies
- 972 views
-
-
தமிழகத்தில் மாற்று அணி ; காலத்தின் கட்டாயம் [02 - July - 2008] பழ நெடுமாறன் அண்மையில் தனது கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேற்றி உள்ளது கொள்கை அடிப்படையிலான முடிவல்ல. பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் தி.மு.க. தலைமையைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பா.ம.க.வுடன் உள்ள உறவை தி.மு.க. தன்னிச்சையாகத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடி இம்முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கட்சிகளுக்கு இடையே உள்ள உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளே போதுமானவை என்றால் தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சி…
-
- 0 replies
- 723 views
-
-
வாஷிங்டன் சர்வதேச பயங்கரவாதியும், அல் - காய்தா தீவிரவாத இயக்க தலைவனுமான ஒஸாமா பின்லேடன் உயிருக்குப் போராடுவதாக அமெரிக்க உளவு ஏஜென்சியான சிஐஏ தெரிவித்துள்ளது. சிறுநீரக கோளாறால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லேடன், இன்னும் சில மாதங்களுக்கு உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக சிஐஏ அதிகாரிகள் இருவர் தெரிவித்ததாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்யப்பட்டு வரும் பின்லேடனுக்கு எந்த விதமான மருந்து அளிக்கப்பட்டு வருகிறது என்பது வரை சிஐஏ அதிகாரிகள் மோப்பம் பிடித்துவிட்டதாக கூறிஇ அந்த மருந்துகளின் பெயர்களையும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே இந்த இரண்டு சிஐஏ அ…
-
- 2 replies
- 1.3k views
-
-
கோவை: புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கணவர் படும் துயரத்தை காண சகிக்காமல் அவரை சுத்தியலால் அடித்து கருணைக் கொலை செய்ய முயன்று தற்கொலை செய்து கொண்டார் மனைவி. ஆனால் அவரது கணவர் உயிருக்குப் போராடி வருகிறார். கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை பின்புறம் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பசுபதி (வயது 72). இவரது மனைவி அனுசுயா (68). இவர்களுக்கு மனோன்மணி, ரேணுகா தேவி என இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மனோன்மணி கோவையை அடுத்த காரமடையிலும், ரேணுகாதேவி திருச்செங்கோட்டிலும் வசித்து வருகிறார்கள். பசுபதி கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் கடை நடத்தி வந்தார். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து இரு மகள்களையும் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்தார்…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஜி8 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானியர்கள் ஆர்ப்பாட்டம் ஜப்பானில் நடைபெறும் செல்வந்த நாடுகளின் (ஜி8) மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கியோட்டோ நகரில் வளர்ச்சியடைந்த நாடுகளின் மாநாடு நேற்று முன்தினம் ஆரம்பமானது. இம் மாநாட்டில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். ஆப்கானிஸ்தானில் தலைதூக்கி இருக்கும் தீவிரவாதம், போதைபொருள் கடத்தல், ஊழல் போன்றவற்றை ஒழிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. வடகொரியாவின் அணுவாயுத வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 772 views
-