உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
ரொறன்ரோ நெடுஞ்சாலையில் எரியும் பேருந்திலிருந்து பயணிகள் உயிர் தப்பினர் கனடாவில் எப்போதுமே சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் 401ஆவது நெடுஞ்சாலையில் மொன்றியலுக்கும் ரொறன்ரோவிற்கும் இடையில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் தீடிரெனத் தீப்பற்றிக்கொண்டதில் அதில் பயணித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உயிர்தப்பியிருக்கிறார்கள். ஒன்ராரியோவின் புறூக்வில்லி என்ற குறு நகரத்திற்கு அருகியல் மாலை ஒரு மணியளவில் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. சம்பவம் இடம்பெற்ற வேளையில் 61 பேர் பேருந்தில் இருந்திருக்கிறார்கள். தீவிபத்து தொடர்பாக முறையிடப்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும் அம்புலன்ஸ் வண்டியும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. இந்த விபத்தினைத் தொடர்ந்து ரொறன்ரோ…
-
- 1 reply
- 997 views
-
-
ரொறன்ரோ மருத்துவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு ரொறன்ரோவின் குறிப்பிட்ட மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்குச் சென்ற 26 பெண்களை அந்த மருத்துவமனையின் மயக்கமருத்து ஏற்றும் மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியிருந்தார் எனக் குற்றம் சுமத்ததப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்களுக்கு நட்ட ஈட்டினை வழங்குவதற்கு குறிப்பிட்ட மருத்துவமனை முன்வந்திருக்கிறது. கடந்த மார்ச் 2010இல் தனது மூன்று பெண் நோயாளர்களை 62 வயதுடைய மருத்துவர் ஜொறேச் குட்னகுட் என்பவர் பாலியில் ரீதியாகத் துஸ்பிரயோகப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இந்த மருத்துவரால் தாமும் பாதிக்கப்பட்டதாக மொத்தமாக 26 பெண்கள் முறையிட…
-
- 0 replies
- 603 views
-
-
ரொறன்ரோ மேயர் தேர்தல்: ஒரே நாள் பிரசார நடவடிக்கையில் முன்னணி வேட்பாளர்கள்! ரொறன்ரோ மேயர் வேட்பாளருக்கான தேர்தல் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்களான ஜோன் ரோறி மற்றும் முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். அந்தவகையில் கிழக்கு யோர்க்கிலுள்ள ஜவானி பேக்கர்ஸ் உணவகமொன்றில் ரொறொன்ரோவின் மேயர் ஜோன் ரோறி காலை 9 மணிக்கு தனது பிரசார நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார். அதேவேளை, முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் பழைய நகர மண்டபத்தில் 9:30 மணியளவில் பிரசார நடவடிக்கையை மேற்கொ…
-
- 0 replies
- 475 views
-
-
ரொறன்ரோ விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டவருக்கு எதிராகப் பயங்கரவாதம்சார் குற்றச்சாட்டு! பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் ஒருவரை ரொறன்ரோ பொலிசார் கைதுசெய்திருக்கிறார்கள். செவ்வாயன்று இரவு ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமானத்தில் வைத்து இந்தச் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பிரித்தானியாவின் ஹீத்துறூ விமான நிலையம் ஊடாக எகிப்தின் ஹெய்ரோ நோக்கிப் புறப்படுவதற்குத் தயாராக இருந்த இந்தச் சந்தேகநபர் குறிப்பிட்ட விமானம் ஏறி அமர்ந்த பின்னர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். குறிப்பிட்ட இந்தச் சந்தேக நபரது பெயர் விபரங்கள் மற்றும் அவர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர் என்பது பற்றிய தகவல்கள் எதுவுமே இதுவரை வெளியிடப்படவில்லை. குறிப்பிட்ட இந்தச் சந்தேக நபர்…
-
- 1 reply
- 819 views
-
-
ரொறன்ரோவின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நேரத்தில் இடையூறு விளைக்க காத்திருக்கும் புயல்! ரொறன்ரோவின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நேரத்தில் டிசம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இருந்து இப்பகுதியைச் சூறையாட ஒரு புயல் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிறிஸ்மஸ் நாளன்று நெருங்கி வரும் குளிர் முன் வருவதற்கு முன்பு டிசம்பர் 23ஆம் திகதி ஒரு லேசான மழை பெய்யும். ரொறன்ரோ முன்னறிவிப்பின்படி, டிசம்பர் 25ஆம் திகதிக்குள் வெப்பநிலை -11 சி வரை குளிராக இருக்கும். உறைபனி புயலைக் கொண்டுவரும், அதாவது கிறிஸ்மஸுக்கு சற்று முன் பனியைப் பார்ப்போம். இருப்பினும், தெற்கு ஒன்றாரியோ இந்த ஆண்டு ஒரு அழகிய கிறிஸ்மஸை அனுபவிக்…
-
- 1 reply
- 498 views
-
-
ரொறன்ரோவின் கிழக்கே துப்பாக்கிச் சூடு ஒருவர் மரணம் ரொறன்ரோ நகரின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினைத் தொடர்ந்து ஒருவர் மரணமடைந்திருக்கிறார். திங்களன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள். கிழக்கு குயின் வீதிக்கும் கிங்ஸ்ரன் வீதிக்கும் இடையே இடம்பெற்ற சம்பவத்தினைத் தொடர்ந்து பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர். இருபது வயது மதிக்கத்தக்க ஒருவர் சரமாரியான துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, உயிராபத்தான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று காலையில் மரணமடைந்த…
-
- 0 replies
- 562 views
-
-
ரொறன்ரோவில் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்! ரொறன்ரோவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருவதாக, ரொறன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சௌன்டர்ஸ், தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் ரொறன்ரோவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், 11 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. அவற்றுள்ள 33 சதவீத சம்பவங்கள் ரொறன்ரோ நகரின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், அனேகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரவு வேளைகளிலேயே இடம்பெறுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. http://athavannews.com/…
-
- 0 replies
- 364 views
-
-
உறை பனி மழை மற்றும் ஐஸ் கட்டிகள் பொழிதல், போன்ற திடீர் காலநிலையால் கனடாவின் மத்திய பிரதேசங்கள் செயலிழப்பு. இப்பாதிப்பு காலநிலை கிறிஸ்ட்மஸ் தினம் மட்டும் தொடரலாமெனவும் கருதப்படுகின்றது. ஒன்ராறியோவின் தென்பாகம், கியுபெக் மற்றும் மரிரைம்ஸ் பிரதேசம் ஆகியவை இந்த பாரிய வானிலை மாற்றத்தினால் பெரிதும் பாதிக்கபட்டு நிலப்பரப்பு உறை பனியால் மூடப்பட்டுள்ளடுள்ளது. கியுபெக்கில் 3 பாரிய விபத்துக்களும் ரொறன்ரோ மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பல விபத்தக்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது. பெரும்பாலான விபத்துக்கள் பெருந்தெருக்களில் இடம்பெற்றுள்ளன. ஒன்ராறியோவில் 300,000 பாவனையாளர்கள் மின்சாரம் செயலிழப்பினால் பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 73 replies
- 4.2k views
-
-
ரொறன்ரோவில் எரிபொருளின் விலை தீடீரென அதிகரித்தது: புறக்கணிப்புப் போராட்டம் தொடர்கிறது. கடந்த வெள்ளியன்று காலைமுதல் ரொறன்ரோவின் பல பாகங்களிலும் எரிபொருளின் விலை லீற்றருக்கு 1.32 டொலராக அதிகரித்த நிலையில் கனடாவின் பல பாகங்களிலும் எரிபொருள் புறக்கணிப்பு பரவலாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. வெள்ளியன்று அதிகாலை எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என அறிவித்த நிலையில் குறைந்த விலையில் எரிபொருளைப் பெறுவதற்கான வியாழனன்று பின்னிரவு வரை மக்கள் எரிபொருளைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் இருந்தார்கள். இருப்பினும் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்னமும் லீற்றரொன்றுக்கு 1.20 டொலர்கள் வசூலிக்கப்படுவது மக்களைப் பொறுத்தவரையில் நல்லதொரு செய்தியே. நகரின் சில பக…
-
- 0 replies
- 785 views
-
-
ரொறன்ரோவில் காணாமற்போன இளம் பெண்ணின் உடலம் கண்டெடுக்கப்பட்டது கடந்த தை மாதத்தின் நடுப்பகுதிக்குப் பின்னர் காணாமற்போயிருந்த ரொறன்ரோவினைச் சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணினது உடலம் கடந்த வாரம் கேல்டன் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் கேல்டன் பகுதியில் ஹாட் லேக் வீதியருகேயுள்ள சிறு குழியிலிருந்து எடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடலம் கடந்த தை மாதம் காணாமற்போயிருந்த இளம்பெண்ண கேறா பிறீலாண்டினுடையதுதான் என்பதைப் பொலிசார் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். பிறீலாண்ட் என்ற இந்தப் பெண் கனடாவின் அல்பேட்டா பிராந்தியத்தினைச் சேர்ந்வரென்றாலும் கடந்த சில மாதங்களாக இவர் ரொறன்ரோ பகுதில் தனது நண்பருடன் வசித்து வந்திருக்கிறார். எனவும் கடந்த ஜனவரி மாதத்தின் முதல்பகு…
-
- 0 replies
- 826 views
-
-
கனடா ரொறன்றோ பல்கலைக் கழகம், உலகப் பல்கலைக் கழங்களில் 16 ஆவது இடத்தையும், கனடாவில் முதல் இடத்தையும் பெற்றதென Times Higher Education ஆய்வு குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அனைத்துலக மட்டத்தில் ரொறன்றோ பல்கலைக்கழகம் நான்கு இடங்கள் முன்னேறியது. கனடாவில் இரண்டாவது இடத்தை வகிக்கும் மக்கில் பல்கலைக்கழகம், உலக பல்கலைக்கங்களில் 35 ஆவது இடத்தை வகிக்கின்றது. ஹாவேர்ட் பல்கலைக்கழகம், கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகம், மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியன உலகத் தர வரிசையின் முதல் மூன்று இடங்களையும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.canadamirror.com/canada/39356.html#sthash.aLhbCRu7.dpuf
-
- 0 replies
- 335 views
-
-
ரொறன்ரோ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வெடிபொருள் போன்ற சந்தேகத்திற்கு உரிய பொருள் ஒன்று நேற்று (திங்கட்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்டது.Leslie Street and Eastern Avenue வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் மீள் திருத்த பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து ராணுவத்தினருடன் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வெடிபொருளை பாதுகாப்பாக அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தின் போது பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும்,அதைத் தொடர்ந்து அங்கு அழைக்கப்பட்ட கனேடிய இராணுவத்தினர், குண்டை அகற்றி, கனேடியப் படைத்தளம் ஒன்றுக்கு எடுத்துச் சென்றார்கள் எனவும் சந்தேகத்திற்குரிய வெடி பொருள் தொடர்பில் சோத…
-
- 0 replies
- 213 views
-
-
கனடா-சனிக்கிழமை அதிகாலை ரொறொன்ரோவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கைகலப்பு துப்பாக்கிசூடு வரை இட்டுச்சென்று இருவர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடையும் நிலை ஏற்பட்டது. சனிக்கிழமை அதிகாலை 3-மணியளவில் டன்வோத் அவெனியு மற்றும் கொக்ஸ்வெல் அவெனியுவிற்கு அருகில் அமைந்துள்ள மக்டொனால்ட் உணவகத்தில் நடந்துள்ளது என ரொறொன்ரோ பொலிசார் கூறியுள்ளனர். உணவகத்தின் உள்ளே ஏற்பட்ட ஒரு வித கைகலப்பின் பின்னர் உணவகத்துடன் சம்பந்தப்படாத பாதுகாப்பு காவலர் ஒருவர் மூன்று ஆண்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மூன்றாவது மனிதன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் வயது விபரம் வெளிய…
-
- 0 replies
- 488 views
-
-
கனடா- பனிப்புயலானது தொடர்ந்து கொண்டிருப்பதால் எண்ணிக்கையற்ற விபத்துக்களிற்கு பதிலளித்துக் கொண்டிருப்பதாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுகிழமை இரவு தொடக்கம் காலை 9-மணிக்கிடைப்பட்ட நேரத்தில் ரொறொன்ரோ நகர மத்தியில் 22-சென்ரிமீற்றர்கள் வரையிலான பனி பொழிவு ஏற்பட்டுள்ளது. ஈஸ்ட் யோர்க் மற்றும் தோன்ஹில் பகுதிகளில் 19-சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பொழிந்துள்ளது. மிசிசாகா, பிரம்ரன் மற்றும் ஹமில்ரன் பகுதிகளில் 20-25சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பொழிவு பதியப்பட்டுள்ளது. ஓக்விலில் கிட்டத்தட்ட 30-சென்ரி மீற்றர்கள் பனி பொழிந்துள்ளது. பனி புயல் காரணமாக பீல் மற்றும் ஹல்ரன் பிரதேச பாடசாலைகள் மூடப்பட்டன. ரொறொன்ரோவில் பாடசாலைகள் திறந்திருப்பினும் ரொறொன்ரோ மாவட்ட பாடசால…
-
- 1 reply
- 707 views
-
-
கனடா- மார்க்கம் தொடக்க பள்ளி உட்பட யோர்க்பிராந்தியத்தின் பல பாடசாலைகள் வியாழக்கிழமை காலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பாடசாலைகளிற்கு பொலிசார் அனுப்பி வைக்கப்பட்டதாக யோரக் பிராந்திய பொலிசார் உறுதிப்படுத்திய போதும் சாத்தியமான அச்சுறுத்தல் தன்மை குறித்து எதுவும் வெளியிடவில்லை என கூறப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மதியத்திற்கு சிறிது முன்பாக நீக்கப்பட்டது ஆனால் பாடசாலைகளில் பொலிசாரின் பிரசன்னம் இருந்துள்ளது. இது ஒரு வெடிகுண்டு மிரட்டல் அல்ல என தெரிவித்த கான்ஸ்டபிள் லோறா நிக்கோல் மேலும் விளக்கமளிக்க முடியாத நிலை என கூறியுள்ளார். மிரட்டலில் வெளியிப்பட்ட பாடசாலையின் பெயரை அவர் வெளியிடவில்லை. அதே பெயர் கொண்ட பல பாடசாலைகள் …
-
- 0 replies
- 237 views
-
-
கனமான பனிப் பொழிவு இன்று ஞாயிற்றுக் கிழமை ரொறன்ரோ பெரும் பாகத்தில் இடம்பெறும் என எதிர்வு கூறப்படுகிறது . ஒன்ராறியோவின் தென்பகுதி, ரொறொன்ரோ பெரும்பாகம் உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை தொடக்கம் 10 - 15 சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பெய்யலாம் எனவும் ஞாயிற்று கிழமை இரவிற்குள் 20 சென்ரிமீற்றர்களை எட்டி, நடு இரவிற்குப்பின்னர் தொடங்கி திங்கள் கிழமை உறைபனி மழையாக மாறக்கூடும் எனவும் கனடா சுற்றுச் சூழல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனத்த பனிபொழிவு பிற்பகல் தொடங்குமென எதிர்பார்க்கப் படுவதாகவும் வீதிகளின் போக்குவரவு நிலைமைகள் அபாயகரமானதாகவும், பார்க்க கூடிய நிலை கடினமானதாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதே சமயம் வெள்ளிக்கிழமை இரவு காணப்பட்ட அதிகுறைந்த வெப்பநிலையான -22…
-
- 1 reply
- 305 views
-
-
கனடா- ரொறொன்ரோ பெரும்பாகம் பூராகவும் பொலிசார் நடாத்திய 25 அதிரடி சோதனைகளில் 18 பேர்கள் வரையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எற்றோபிக்கோவில் இருவர் மற்றும் வாகனில் ஒருவரும் அடங்குவர். செவ்வாய்கிழமை காலை இந்த அதிரடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இத்திடீர் சோதனை சிறப்பு அமுலாக்க பிரிவினரின் முயற்சியின் ஒரு பகுதியாக நடாத்தப் பட்டதென்றும், ஆர்சிஎம்பி மற்றும் ஒன்ராறியோ பொலிஸ் சேவையை சேர்ந்த பல அதிகாரிகளும் இதில் ஈடுபட்டனர். யோர்க் பிராந்திய கனரக ஆயுதமேந்திய தந்திரோபாய பிரிவினர் மற்றும் பொலிஸ் நாய்களுடன் அதிகாரிகள் ஆகிய பிரிவினரும் இந்த அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். குறைந்தது ஐந்து பேர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே சமயம் இவான் அவெனியுவில் மிக …
-
- 0 replies
- 351 views
-
-
கனடா- ரொறொன்ரோவின் புதிய பொலிஸ் மா அதிபராக மார்க் சான்டர்ஸ் நியமனம் பெறுகின்றார். இந்த தலைமை பதவியை பெறும் முதல் கறுப்பு இனத்தவர் சான்டர்ஸ் ஆவார். தற்போதைய தலைமை அதிகாரி பில் பிளயர் வெளியேறியதும் சான்டர்ஸ் ரொறொன்ரோ பொலிஸ் தலைமை கடிவாளத்தை தனது கையில் பெறுவார். இந்த பதவி நியமனத்திற்கான அறிவிப்பு திங்கள்கிழமை காலை 10-மணியளவில் செய்தியாளர் மகாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த பதிவிக்கு தற்போதைய பிரதி தலைமை அதிகாரி பீட்டர் ஸ்லோலியை சான்டர்ஸ் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 32-வருடங்களாக பொலிஸ் சேவையில் இருந்தவர் சான்டர்ஸ். 2012-ல் பிரதி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 175-மில்லியன் டொலர்கள் வரவு செலவுத்திட்டம், 1,200 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 164 பொதுமக்கள் உறுப…
-
- 0 replies
- 187 views
-
-
ரொறொன்ரோ பெரும்பாகத்தில் மீண்டும் ஒரு இடி,மின்னல், புயலுடன் கடுமையான மழையும் பெய்ய வாயப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் மிரண்டு போயுள்ளனர். கனடா சுற்றுச்சூழல் பிரிவு புதன்கிழமை விசேட காலநிலை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, பலத்த இடி,மின்னல், புயலுடன் கூடிய பலத்த மழை பெய்யலாமெனவும் கூறப்பட்டுள்ளது. இக்காலநிலை Windsor area north to Sarnia, east through Parry Sound-Muskoka, Hamilton, Niagara and Toronto ஆகிய இடங்களை உள்ளடக்கியதாக இருக்குமெனவும் சொல்லப்படுகின்றது. கடந்த திங்களன்று கொட்டிய பேய்மழையின் பாதிப்பில் இருந்து மீண்டுவரும் ரொறொன்ரோ மக்களை இது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=87279&category=Tam…
-
- 6 replies
- 636 views
-
-
ரொறொன்ரோ பெரும்பாக (Greater Toronto) பிரதேசத்திலும், ரொறொன்ரோ நகரத்தின் பல பாகங்களிலும் நேற்றையதினம் மாலை 5 மணிமுதல் பொழிந்த கனமழையினால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளத்தினால், சுரங்க வழி ரயில் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்க ப்பட்டுள்ளது. மிசிசாகாவின் 80சதவீத பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ரொறொன்ரோ முழுவதும் மூன்று இலட்சம் பேர் மின்சார வசதிகளை இழந்துள்ளனர். மக்களை வீடுகளில் இருக்கும்படியும் சுரங்கப் பாதைகள் தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் ரொறொன்ரோ பொலிசார் கேட்டுள்ளனர். ரோறொன்ரோ நகரம் கடுமையான இடிழுழக்கம், வெள்ளம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.வாகனம் நகராமல் நின்றுவிட்டால் உதவி கிடைக்கும் வரை வாகனத்திற…
-
- 16 replies
- 1.3k views
-
-
கனடா- ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவு அதிகாரிகள் நகரில் தட்டம்மை நோய் கண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 2-வயதிற்குட்பட்ட இரு குழந்தைகள் மற்றும் வேறு வேறு குடும்பத்தை சேர்ந்து இரண்டு பெரியவர்களிற்கு தட்டம்மை கண்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பற்றவர்கள் என கூறப்பட்டுள்ளது. ரொறொன்ரோவில் தட்டம்மை பரவுகின்றதை பொதுமக்கள் தெரிந்திருப்பது அவசியம் என ரொறொன்ரோ பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்நோய் வெளி நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்தியா, துணை-சகாரா ஆபிரிக்க பகுதிகள், பிலிப்பைன்ஸ், தென் அமெரிக்கா உட்பட உலகின் பல பாகங்களில் தட்டம்மை பரவலாக காணப்படுகின்றதென தொற்று நோய் நிபுணர் டாக்டர் நீல் றோ தெரிவித்துள்ளார். இந்நாடுக…
-
- 0 replies
- 291 views
-
-
ரொறொன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்களில் பனிபொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிபருவகாலத்திற்கான முதல் பலத்த பனிபுயல் அடிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. 15-20 சென்ரி மீற்றர்கள் அளவிலான பனி GTA பகுதிகளில் பொழியலாமெனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. இது ஞாயிறு காலை வரை தொடரும் எனவும் இன்று மாலை கடுமையா பனி பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஹமில்ரன், ஓக்வில், பேளிங்ரன் ஆகிய இடங்களிலும் பனிபுயல் எதிர்பார்க்கப்படுகின்றது என கனடா சுற்றுச் சூழல் பிரிவினரின் கூற்றுப்படி தெரியவருகின்றது. காற்று மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசலாமெனவும் இதனால் பனி பறந்து பார்வையை மறைக்க கூடிய சாத்தியக் கூறுகளும் ஏற்படலாம் என எதிர்பார்ககப் படுகின்றது. பனிப்புயலினால…
-
- 5 replies
- 788 views
-
-
ரொறொன்ரோவில் வெள்ளம்! ரொறொன்ரோ டவுன் ரவுன் பகுதியில் பெய்த கடும் மழையினால் டொன் வலி பார்க்வே பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதுடன் டொன் வலி பார்க்வே மூடப்பட்டது. இரவு பூராகவும் மூடப்பட்டிருந்த பாதையின் ஒரு பகுதி இன்று காலை திறக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை 12.35மணிக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரொறொன்ரோவின் பெரும்பாகத்தில் வியாழக்கிழமை மாலை 10மில்லி மீற்றர்கள் அளவிலான மழை பெய்துள்ளது. மழை காரணமாக பனி உருகியதால் நீர் மட்டம் மேலும் உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பல வாகன மற்றும் பாதசாரிகள் மோதல்களும் வி…
-
- 0 replies
- 213 views
-
-
ரொஹிங்கிய அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பும் மற்றொரு புதிய முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதற்காக ஐந்து பஸ்கள் மற்றும் 10 டிரக்குகள் பங்களாதேஷினால் தயார்படுத்தப்பட்டபோதும் எவரும் அதில் செல்வதற்கு வரவில்லை. “நாம் காலை 9 மணியில் இருந்து காத்திருந்தோம் எந்த அகதியும் திரும்பிச் செல்வதற்கு வரவில்லை” என்று தக்னாப் அகதி முகாமுக்கு பொறுப்பான பங்களாதேஷ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு நேற்று தெரிவித்தார். “இதுவரை யாரும் வரவில்லை” என்று அவர் நேற்று பிற்பகல் குறிப்பிட்டார். மின்மாரின் ரகினே மாநிலத்தில் இராணுவ நடவடிக்கையை அடுத்து 2017இல் சுமார் 740,000 முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ரொஹிங்கிய அகதிகள் பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றனர். அவர்கள் …
-
- 0 replies
- 433 views
-
-
ஜப்பான் - டோக்கியோ நகரில் ஏற்பட்ட 8.8 ரிச்டர் அளவான நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜப்பானிய தொலைக்காட்சி ஒன்றின் தகவலின் படி ஏற்பட்ட சுனாமியினால் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான கார்கள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டதனை சற்றலைற் படம் காட்டியதாக கூறப்படுகின்றது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இலங்கை நேரப்படி இன்று காலை அதிகாலை 12.46 அளவில் 8.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 6 மீற்றர் உயரத்திற்கு கடல் நீர் உட்புகுந்துள்ளதாக டோக்கிய நகரிலிருந்து 400 கிலோமீற்றருக்கு அப்பால் 20 ம…
-
- 90 replies
- 9.9k views
-