கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
கிளிநொச்சி உன் பார்வைகாய்........ கவிதை...... கிளிநொச்சி..! கிளிநொச்சி...! வாயில் சொல்லப்பட்ட தடவைகள் அதிகம் எதிரியின் வாயிலல்ல தமிழனே..! இன்று உன் வாயால்.... கிளிநொச்சி போய்விட்டதாம்...! கிளிநொச்சி போய் விட்டதாம்...! அழுதழுது இன்றுடன் ஐந்து நாட்கள்மேல் போக்கிவிட்டாய்...! அழாமல் அடுத்த அடி வைத்திருந்தால் மறுபடியும் ஐந்து அடி முன்னெறியிருப்பாய்....! எம் மனவுறிதி போய்விட்டதா..? சொல்..! உன் கொள்கைதான் தோற்றதா..! சொல்..! தமிழீழமே உன் குறிக்கோள் கிளிநொச்சி அல்லவே...! கிளிநொச்சி எங்களின் தமிழீழத்தின் நகரம் தான் அழகான நகரந்தான் இன்று எதிரியின் வல்வளைப்பில் சிக்கிவிட்ட நகரந்தான்... முழுமையாய் செத…
-
- 23 replies
- 4.7k views
-
-
உரையாட இது நேரமா-தமிழ் உணர்வாலே உளமார கொடுக்கின்ற நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட) கணநேரப் பொழுதோடு கடல் வந்து கரையேறி இன்பத்தை இரை கொண்டு இதயத்தில் சுமை ஏற்றிய நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட) யார் செய்த சதியோ? விதி போட்ட புதிரோ ? மதி கெட்ட அலை வந்து பதில் தருமோ? விடிவொன்று வருமென்று விழியோரம் ஒளி தோன்ற கனவாகி சிதைகின்ற நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட) புலத்தோடு வாழ்கின்ற உறவெல்லாம் ஒன்றாகி பலத்தோடு நிலம் பற்றுவோம். நலத்தோடு அவர் வாழ நிறைவோடு தினம் நல்கி இனம் காக்கும் நேரத்தில் உரையாட இது நேரமா? (உரையாட)
-
- 0 replies
- 556 views
-
-
சென்று வா இரண்டாயிரத்து எட்டே வென்று விட்டதாய் நினைத்தால் வெற்றி உனக்கல்ல என்பேன் பற்றி எரிவது தமிழ் ஈழக் கனவே! பொறுமையை இழந்தோம் தனிமையாய் தொடர்ந்தோம் இனிமையான வாழ்வுக்காய் தனி நாட்டைக் கேட்டோம்! பொறுக்காத நாடுகள் வெறுக்கவே செய்தனர் விடை தர மறுத்து தடையினைப் போட்டனர்! குனிந்ததும் குட்டு வாங்கியதும் வலி பட்டவர்க்கே வலிக்கும் எலி வளையானாலும் எமக்கு தனி வளை வேண்டும் என்றோம்! சிங்களம் வெங்களம் விரும்பியது கங்கணம் கட்டி தமிழினம் அழிக்க விரைந்து படை திரட்டியது உலகிடம் இரைந்து ஆயுத பிச்சை கேட்டது! சர்வமும் மயங்கி சர்வதேசமும் சோரம்போனது ஐ.நா.…
-
- 1 reply
- 611 views
-
-
கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர் தீபச்செல்வன் 01 நமது வாழ்வின் கனவு நகரமே படைகள் உன்னை மிதிக்கும் பொழுது நமது மனம் மிதிபடுகிறது. கிளிநொச்சிக்குளத்தில் கந்தசாமிகோயில் மூழ்கியது. அதிகாரத்தின் கைகளிற்குள் அடங்க முடியாத நகரம் நேற்றிரவு பின்வாங்கியது. ஆழமான கிணறுகள் வசந்தநகரை விட்டு பின்வாங்கின. நமது நகரம் வீழ்ந்தது என்று அறிவிக்கப்படுகையில் பெரும்துயர் சூழ்கிறது. மெல்ல மெல்ல படைகள் கடிக்கத்தொடங்கிய நாட்களில் வீடுகள் எங்கோ போயிருந்தன. கடைகள் கரடிப்போக்கைவிட்டு பின்வாங்கின. எனது வீடு முழுவதையும் தின்றுவிட்டு பெருமிதம் கொள்ளுகிற படைகள் நகரமெங்கும்; நுழைந்து கொடிகளை பறக்க விடுகையில் காயம் ஆறாதிருந்த கட்…
-
- 1 reply
- 1.2k views
-
-
பொங்க வேண்டும் .......... பொங்க வேண்டும் பொங்கல் வயிற்றுக்கு உணவாகும் வெறும் அரிசி பொங்கல் அல்ல .உள்ளத்து உனார்வுடன் , வீர விடுதலை வேட்கையுடன் , பொங்கி எழ வேண்டும் புலம் பெயர் உறவுகள் , உணர்வுகள் பங்களிப்புடன் பொங்கி எழ வேண்டும் வேடுவ சாதி வெடி கொழுத்தி பொங்கி மகிழ்கிறான். என் இனம் வேதனை தீ ,வெறுமை தீ விரக்தி இரத்த ஆற்றில் பொங்கி எழுகிறது. அவனுக்கு ஆயிரம் ஆயிரம் பேர்,உதவிப் பொங்கல் .நம் மானத் தமிழனுக்கு தமிழ் உதவி , உறவுகளின் கை நீட்சி தான் பொங்கல். இன்னும் கரையாத நெஞ்சமுண்டோ , என் சமுதாயமே , பொருளாக பொங்குக உணர்வுகாளால் பொங்்குங்கள் பரப்புரைகளால் போங்குங்கள் கொக்கரிக்கும் கூட்டம் பெட்டி பாம்பாய் ஒரு வேளை அடங்க…
-
- 8 replies
- 1.8k views
-
-
காத்திருக்க வேண்டாமே ! --------------------------------- துவளாத தமிழினமாய் துடிப்புடனே நீ நடந்து உலகத்தை நீ வென்று உயர்வடைய எழுச்சி கொள்வாய் ! புலம்பெயர் தேசமெங்கும் பதியமாய் நீ இருந்தே உதயத்தைக் காண்பதற்கு உறுதியுடன் நீ எழுவாய் கடுகதியாய் ஓடுகின்ற காலமொன்று விரைவாகும் களம் மாறும் வேளை வரை காத்திருக்க வேண்டாமே ! இவ்வண்ணம் நொச்சியான்
-
- 0 replies
- 861 views
-
-
1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா? 2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…) 3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ??? 4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ?? 5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா?? (நாம தான் ஊருக்கு போய்ச்சேரலையே ?? ) 6.…
-
- 1 reply
- 1.2k views
-
-
எமக்கென ஒரு நாடு ! ----------------------------------- புலம் பெயர்ந்த எங்களது உறவுகளே நாடற்று ஓடியோடி வாழ்கின்ற நிலைதானா ! வரலாற்றில் எங்களுக்காய் ஒரு நாடு அமைப்போமா வாழாதிருந்து நாம் அடிமைகளாய் மடிவோமா ! அனாதை இனமாக அடையாளம் இழந்தவராய் அழகற்ற வாழ்வையா எமக்காக விட்டுச் செல்வீர் நாம் நாமாக வாழ்வதற்கு எமக்கென ஓர் நாடு தமிழீழத் தாயகமே ! இவ்வண்ணம் நொச்சியான் 04.01.2009
-
- 1 reply
- 883 views
-
-
ஊமையோ? குருடோ நீ?!!! செத்தொழியட்டும் தமிழ் இரத்தம் என்று கொத்தணிக் குண்டுபோட்டு கொடுமைகள் செய்கின்ற எத்தரின் நிலைகண்டும் கண்மூடி கிடக்கிறாயே உலகமே?!!! தடை செய்த குண்டுகளைத் தமிழர் மீது போடலாம் என்பது தான் உலக நீதியா?!! வேட்டுச்சத்தங்கள் எங்களுக்குப் புதிதல்ல! வெந்து நொந்து வேதனைப்படுவது எமக்கு அழகல்ல சொந்தம் இழந்தாலும் சொத்து சுகம் அத்தனையும் துறந்தாலும் எங்கள் மண் வாழ எம் உயிர் கொடுக்கும் எம்மை அடக்க நினைக்கிறாயே?!! இதுதான் நியாயமா?!! "ஈழம்" என்பது சிங்களத்தின் தேசமாம் வாய் கூசாமல் பொய்யுரைக்கும் புத்தரின் பரம்பரை வரலாறும் தெரியவில்லை தாங்கள் வந்தவழி அறியவில்லை! "பாடம் புகட்டுவோம்" என்ற எங்களின் வீரத்தைக் கண்டு கொதி…
-
- 2 replies
- 897 views
-
-
நெல்லெடுப்பது யார்? என்னவாயிற்று? ஏனிந்தப் புலம்பல்? ஒப்பாரிச் சொற்களை கூட்டிப் பெருக்கிக் குப்பையிலே கொட்டுக. நெல்லெடுத்து மழலையின் ஈறில் கீறிவிட்டாலே பல் வெளிக்கிளம்ப பாதை திறக்கும். வலியும் குறையும். இது இயற்கை மருத்துவம். நெல்லெடுப்பது யார்?
-
- 3 replies
- 1.1k views
-
-
மலரின் சிதைவொன்று காணொலியில்.......... கவிதை...... விடுதலைக்காய் விதையான எங்கள் வீரச் சின்னமொன்றை சிதைத்த காட்சி கன்டதுமே கண்களிலே இரத்தத் துளி...... கருகிய மலரைக்கூட கசக்கிய காட்சிகண்டால் புத்தரும் நடுங்கிடுவார்.. கிட்லரும் ஓடிடுவான்.... ஜேசு நாதர்கூட; மறுபடியும் சிலுவையிலே ஏறிடுவார்..... தன் தாயும் சகோதரியும் பெண்ணென்று நினைக்கவில்லை... அவள் போராளியென்றாலும் பெண்ணென்று நினைக்கவில்லை... கருகிய மலரையும் கற்பழித்த பயங்கரம்..... அதைக் கனவில் கண்டாலும் மனதில் மாறா வடுவாகும் மனதில் அது நிரந்தரம்...... நாயென்றும் சொல்லமாட்டேன் அது நன்றிக்கு வாலாட்டும்.... பேயென்றும் சொல்லமாட்டேன் பெண்ணென…
-
- 6 replies
- 2.6k views
-
-
"கிளி" வீழலாம் புலி வீழுமா?!! வெற்று நிலத்தை பிடித்துவிட்டு வென்று விட்டோமென்று கொட்டம் அடிக்கும்! கூட்டம் ஒன்று!! எட்டி நின்று பார்ப்பவர்க்கு உண்மை புரியாது!! எங்கோ இருந்துகொண்டு தமிழன் வீழ்ந்த செய்திகேட்டு எக்களித்துச்சிரிக்கின்ற பேடியர் இனமொன்று மானத்தை எரித்து விட்டு உயிர்வளர்க்கும் இவர்க்கும் புரியாது!! பாடி விளையாடி பகடி விட்டு கூடிக் களிக்கின்ற வயதில் தன் இனம் வாழ மானமே ஆடையெனக் கட்டிக்கொண்டானே அவனே மாவீரன்! எங்கள் புலிவீரன் வெத்திலை சப்பிச் சிவக்கின்ற உங்கள் வாய்களுக்கு எங்கள் நிலம் சிவக்கும் நீண்ட கதை தெரியாது அதனால் தான் கொக்கரித்துக் கொண்டாடுகின்றீர்கள்! 'கிளிநொச்சி மட்டுமல்ல கிழக்கிலங்கை வடக்கு முழுவதுமே தமிழ…
-
- 10 replies
- 2k views
-
-
புலிகள் எதற்குப் பின்னே இன்றையதினம் படித்ததில் கிடைத்தவை இவை புலிகள் எதற்குப் பின்னே நடந்தார்கள்..? இராவணன் தோல்விக்கு விபீஷணன் காட்டிக் கொடுத்தான்.. கட்டபொம்மன் தோல்விக்குக் எட்டப்பன்..காட்டிக் கொடுத்தான்.. பண்டார வன்னியனுக்கு அவன்சாதி காக்கை வன்னியன் குழிபறித்தான்.. சங்கிலினுக்கு இன்னொரு காக்கை என்கிறது கண்டவர் சரித்திரம்.. ஊமைத்துரை என்பதே கேள்விப்பட்ட பெயர்.. சிவன்பூமி இலங்கையின் செறிந்த வரலாற்றில் இன்னொரு பக்கம்..இது.. தமிழ் மன்னன் தேவநம்பிய தீசனின் தந்தை மூத்தசிவன்.. மூத்தசிவன் மைந்தன் தேவநம்பிய தீசன் மகன் கோத்தபாயா கோத்தபாயா மகன் துட்டகைமுனு.. சோரம்போன தமிழ்ச் சாதியின் சொந்தங்கள்.. …
-
- 1 reply
- 3.9k views
-
-
வெள்ளவத்தை கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் - அதிகமாகத் தமிழ் பேசுவோரே வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06) பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம். வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது! கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு! நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால் ஏனைய வெள்ளவத்தைவாசிகளும் கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து! எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம் பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம் எனினும் பெருமளவு வெளிநாட்டுப் பணமும் உள்நாட்டில் வாழும் தமிழரில் அதிகம் பணம் உழைப்போரின செல்வாக்கையும் பார்த்தால் இது ஒரு குட்டி லண்டன் அல்லது டொரன்டோ(வேறேதாவது வெள…
-
- 0 replies
- 1.5k views
-
-
விஜயனின் வழித்தோன்றல்களே ! ------------------------------------------- சிங்கத்தைப் புணர்ந்து உங்களைப் போட்ட அன்னைக்குக் கூட உங்களது செயலை நினைத்தால் அருவருக்கும் ! அருவருப்பின் வழிவந்த அரியண்டப் புத்திரரே(?) நீவிர் அழிவது உறுதியடா ! நரமுண்ணும் பிசாசுகளே நாலுகால் பிறவிகளே சாக்கடையில் மிதந்துவந்த சண்டாளப் பிறவிகளே உயிரற்ற உடலம் மீது உங்கள் இயலாமையை காட்டுகின்ற கோளைகளே கண்ணியம் புரியாத காட்டுமிராண்டிக் கயவர்களே நாய் கூடப் புரியாத ஈனச் செயல் புரிகின்ற ஊன மனம் கொண்ட ஈனப் பிறவிகளே புரிய வைக்கும் காலம் வரும் ! மனிதம் இல்லாத மானிட உருக்கொண்ட சிங்கத்துக்குப் பிறந்த சீரியமும் இல்லாத வீரியமும் இல்லாத பிணம் தின்னும் கூட்ட…
-
- 3 replies
- 2.2k views
-
-
புத்தாண்டே வா புதுவாழ்வு தா ஒரு வருடம் ஓடி உதிர்ந்தது. குருதிப்புனல்களில் இருந்து துளிர்விடும் புதிய தளிர்கள் புன்னகையோடு எட்டிப் பார்க்கட்டும் முகம் தெரியாத எம் உறவுகளுக்காய் வைகறைப் பொழுதுகள் தவமிருக்கட்டும் உலகத் தேசிய வரைபடத்திலே புதிய நாடாக தமிழீழம் இணையட்டும் எங்கள் வாழ்வே போராட்டமாகவும் போரட்டமே வாழ்வாகவும் மிளிரட்டும் நம்பிக்கை ஏந்திய நமது கைகள் வெற்றிப் பூக்களைப் பறிக்கட்டும் சூரியத் தலைவனின் முதிர்ச்சி விடுதலைப் பாதையில் ஒளிவீசட்டும் தமிழக எழுச்சியும் சிங்கள வீழ்ச்சியும் புலம்பெயர் தமிழர்க்கு பலமாகட்டும் கலைஞரின் கருணை வெள்ளம் எங்கள் தேசத்தை நனைக்கட்டும் கற்பனை வானிலே பறக்கும் கனவுகள் எங்கள் நனவாகட்டும் …
-
- 2 replies
- 758 views
-
-
புத்தாண்டில் உறுதியுடன்.... ------------------------ தேசம் கடந்து வாழ்ந்தாலும் தாய் மண் பாசம் கொண்டு நேசம் கொள்ளும் தமிழினமே நாம் ஓயும் நேரம் இதுவல்ல ! புதிய ஆண்டில் புதுமைகள் படைத்து நிமிரும் தமிழினமாக என்றும் எழுவோம் நீதியைக் காண நிமிர்வோம் நாமே விடியலுக்காக அடிமை விலங்கைத் தகர்த்தே எங்கள் விடியலைப் படைக்கும் புதிய ஆண்டாய் மாற்றிடுவோமே ! அவ்வண்ணம் நொச்சியான்.
-
- 0 replies
- 652 views
-
-
சொல் அப்பா சொல்: வெள்ளை பனி உருகி வீட்டின் முன் வழிகின்றது வளைந்து செல்லும் வீதியெங்கும் பனியின் சிதறல்கள் காற்றின் திசையெங்கும் குளிரின் வாசம் பனி பார்க்க விரும்பும் மகனை கூட்டிச் சென்று காட்டுகிறேன் குவியலாக இருக்கும் பனிக்குள் குளித்தெழும்புகிறான் சறுக்கி வீழ்ந்து சிரித்து எழும்புகிறான் வெண் நுரை அள்ளி வீசி விளையாடுகிறான் இப்படித் தானே அப்பா நீயும் ஊர் முழுதும் மழை நிரம்புகையில் சைக்கிளில் என்னை வைத்து வெள்ளம் காட்டுவதும் மழையில் நனைவதின் சுகமும் வெள்ளத்தை கூறு கிழித்து சைக்கிள் ஓட்டுவதன் பரவசமும் அப்பா நீ காட்டியது தானே எனக்கும் பின்பு பனை வெளிகளினூடு போகையிலும் மலைக் குன்றுகளினூடு நடக்க…
-
- 29 replies
- 5.2k views
- 1 follower
-
-
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி. வழி காட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி. விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி. இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி' கல்லறை முன்நின்று மனிதர்கள் கரையும் மாவீரர் தினம். சுயத்தின் அடியளித்த புனிதர்களைப் போற்றும் நினைவேந்தும் நாளிது. புதைக்கவில்லை விதைத்தோமென்கிற உட்பொருள் உணர்ந்து விளக்கேற்றும் நினைவெழுச்சி நாளிது. தமிழின வீரவரலாற்றின் சாட்சிப் பதிவுகள், கல்லறையாகிக் காட்சிதரும் துயிலுமில்லங்கள். தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த 22 ஆயிரத்திற்கு மேற்பட…
-
- 0 replies
- 658 views
-
-
வலை வீசம்மா வலை வீசு வம்பு வளக்கலாம் வலை வீசு.. கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு காதல் செய்யலாம் கை வீசு கனடா போகலாம் கை வீசு கம்பியூட்டர் முன்னால் கையடிக்கலாம் வலை வீசு கத்தி வெட்டு குத்திப்போடலாம் கைவீசு கருத்துச் சொன்னால் பாவம் கைவீசு களம் என்ன குயவன் செய்யும் பொம்மையோ கை வீசு வெட்டில் வெட்டலாம் கைவீசு வீணில் வெட்டுவதைத் தள்ளிப்போட்டு கைவீசு காரணம் சொல்லலாம் கைவீசு களத்தில் இருப்பவர் புட்டிப்பால் குடிப்பதில்லை கைவீசு காத்திரமான பங்கு வேண்டுமா கைவீசு கோபம் ருத்திரம் மனிதம் உணர்த்துவது கைவீசு சண்டையும் சச்சரவும் இல்லையென்றால் கைவீசு சாதிப்பது என்பது பூச்சியமே கை வீசு ஆங்கிலம் பேசுவது கோமளித்தனமல்ல கைவீசு …
-
- 3 replies
- 1.6k views
-
-
உடைந்த மாதாவும் உடையாத மாடுகளும் கொம்பு முளைத்த எங்கள் மாடுகளோடு கொம்பில்லாத மாடுகள் வந்து மோதிப் பார்க்கின்றன. கொழும்பில் இருந்து தடித்த கொழுப்போடு பறந்து வரும் எருமைகளால் மாதாவின் தலையைத்தான் உடைக்க முடிகிறது. வானத்தில் புல் முளைத்தால் எங்கள் மாடுகளுக்கு சிறகுகள் முளைக்கும் என்பதை மறந்துவிட்டன பறந்து வருகிற எருமைகள். உடையாத மனதோடு உயிர் காக்கும்படி அடைக்கலம் தேடும் கோவில் வாசலில் மாதாவின் தலை தலைகிழாய் கிடக்கிறது. எண்பத்தைந்து மாக்கள் செத்தால் என்ன? எண்பதினாயிரம் மக்கள் செத்தால் என்ன? எந்த நாடும் கேட்காது. மதம் பிடித்த யானைகள் மதம் பிடிக்காத பூனைகளோடு கைகுலுக்கி மகிழ்ந்து மௌனமாகிப் போனது. …
-
- 7 replies
- 1.8k views
-
-
கொண்டாடும் மனசு ............. நாம் பிறந்த மண்ணிலே , நாள்தோறும் குண்டு மழை போதாதென்று மழை வெள்ளம் அழுது ஓடிய கண்ணீர் வெள்ளம் , தசை பிளந்து ரத்த வெள்ளம் , இத்தனைக்கும் பயந்த சன வெள்ளம் எங்கு ,ஓடி அடைக்கலம் தேடும் இவை எல்லாம் நம் சனத்தை ஆட் கொள்ள ,கொண்டாட மனம் வருமா பட்டியல் நீளும் ,பாதை போன்று அப்பாவை காணவில்லை , அண்ணாவை காணவில்லை , பள்ளி சென்ற அக்காவையும் காணவில்லை ,தகவல் இல்லை இந்நிலையில் கொண்டாட மனம் வருமா தினசரியைபார்த்தால் தினம் தோறும் இணைய தளத்திலும் துயர செய்தி தான். இத்தனையும் நடக்கும் போது கொண்டாட மனம் வருமா ? அமைதியின் ஏசுவை ,தரிசிக்க கோவிலிலும் குண்டு மழை , கோவில் சிலை (சொரூபம் )களுக்கும் தான் இந…
-
- 3 replies
- 1.1k views
-
-
கனவான உறக்கங்கள் கலைவதெப்போ? எழுதுங்கள் எம் இதயதாபம் எங்கும் எரிகிறது விடுதலையின் தீபம் எம் இனத்திற்கு யாரிட்டார் சாபம் நாம் ஏதிலிகளாய் அலையும் காலம் நீல வானத்தில் நிர்மலமாய் அமைதி அங்கு கானங்கள் பாடுது பார் குருவி இச் சிலுவைகளோ அடையாளச் சுருதிஅங்கு சிந்துதுபார் செந்தமிழன் குருதி எம் காதாரம் ரீங்காரம் பாடும் சில் வண்டுகளின் ஓங்கார ஓசை அங்கு தூரத்தில் கேட்கும் வெடியோசை எம் துடிக்கின்ற வீரத்தின் பாசை தணலாகக் கொதிக்கிறது நிலவும் தீக் கனலாகச் சுடுகிறது தென்றல் அதி காலையிலே சிந்தும் பனித் தூறல் எம் கல்லறைக்கு அதிகாலை பூசை எம் கனவான உறக்கங்கள் கூட விரைவில் கலைந்து விடும் செய்திவரும் காலை இது கணநேரம் ஓய்வெடுக்கும் வேளை ஈழக் …
-
- 7 replies
- 1.9k views
-
-
26.12.2004 அன்று ஆழிப்பேரலையில் நாம் இழந்த எம் உறவுகளுக்காகவும், உலகெங்கிலும் இந்தப் பூமி இழந்த அற்புத மனிதர்களுக்காகவும் இப் பாடல் காணிக்கை: பாடல்: http://www.imeem.com/vaseeharan/music/kyEb..._kanneeril_kul/ பல்லவி கண்ணீரில் குளிக்கின்ற தேசம்-கடல் தண்ணீரில் மிதந்தது சோகம் அலை கொண்டு வந்த கடல்-மனித தலை கொண்டு போனதே இனம் மதம் மொழி கடந்து-எங்கள் தேசம் சுமந்திடும் சோகமடா! குழு: தேசம் தேசம் எங்கும் சோகம் சோகம் சரணம் 1 போரின் நாக்குகள் தீண்டிய தேசத்தை சுனாமி அலைகள் கிழித்ததே வாழ்வின் ஆசைகள் துளிர்த்திட்ட மக்களை வாழ்வளித்த கடலே அழித்ததே ஆர்ப்பரித்த கடலே ஆள் பறித்தாயே கரையில் நின்று எம்மையே கலங்க வைத்தாயே(2) விழியில் தீமூட்…
-
- 4 replies
- 1.4k views
-
-
கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் ஆழிப்பேரலை நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஆவணப்பதிவு. Documentary -Tsunami 2004 video by TYO Canada
-
- 0 replies
- 700 views
-