கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கவிப்பயணம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 4 replies
- 2k views
-
-
வரமான பூச்சரங்கள் அள்ள அள்ளக் குறையாத அன்புமனம் உனக்கு மட்டும் யார் தந்தது? அதனால் அம்மா நீ மட்டும் அதிசயமானவள் அன்புச் சுரபியை அமுதசுரபியாக இறைவன் இலவசமாக உன் அகத்தில் அர்ப்பணித்து விட்டானா? ஆயிரம் தடவைகள் உன் பெயரை என்அதரங்கள் உச்சரித்தாலும் அலுக்காத ஒருவார்த்தை அகிலத்தில் உண்டென்றால் அது அம்மா என்னும் அமுத மொழிதான் வசை பாடும் இதயங்களையும் வாழ்த்தும்படி உனக்கு வரமளித்தவர் யாரம்மா? உன் கண்களுக்குள் கருணையையும் மனதுக்குள் மென்மையையும் தந்த இறைவன் கோபத்தை மட்டும் குத்தகை எடுத்துக் கொண்டானோ? உன் கண்டிப்பில் கலையாத நாம் உன் கண்ணீரில் கரைந்து போவது நிஜம் நீ ஒரு தேவதை உன் தேன்மோழியோ வான்மழை என் மழலைகளுக்கு நான் அம்மா இருந்தும…
-
- 3 replies
- 1.3k views
-
-
எதைக் கேட்டாலும் வெட்கத்தை தருகிறாய் வெட்கத்தை கேட்டால் விட்டத்தை நோக்குகிறாய் விட்டத்திலா இருக்கிறது என் காதல்? * - * - * - * - * மார்கழி மாசம் வாசலில் கோலம்! நடுவிலே சாணம் சாணத்திலே பூசணிப்பூ! அது பூவல்ல என் இதயம்! உன் இதயத்தை சாணத்தில் தான் வைத்தாளா என்று கேட்காதீர்! சாணம் கூட சந்தனமானது சந்தியாவின் விரல்பட்டு! * - * - * - * - * 'லவ்'டப், ‘லவ்'டப் சிலகாலமாக இதுதான் என் இதயத்தின் ஒலி! சண்டாளி தயவுசெய்து என்னை சாகடிச்சிட்டு போடி!! * - * - * - * - * நீ நெருப்பு நான் பஞ்சு காதல் ஊழிப்பெருந்தீயாய் பற்றியெரிவோம் வாடி! * - * - * - * - * எனக்கு கொடுக்க உன்னிடம் …
-
- 8 replies
- 2k views
-
-
பெயரிடப்படாதது இதோபார் நாம் இப்போ கீழொதிங்கி நிற்கும் இம்மரத்தின் பெயரை நானறியேன் இலைகளிலிருந்து வழிந்தோடும் மழைத்துளிகள் மட்டுமே எனக்குப் பரிச்சயமானவை மழைத்துளிகளுக்குப் பெயரிடாமலே மனம் அவற்றுடன் பரிச்சயமடையவில்லையா வசந்தகாலப் பசுமையைத் தாங்கும் மரங்களின் பெயர்களை அறிந்திருந்த ஒரு காலமமிருந்தது கலவிக்கழைக்கப் பாட்டிசைக்கும் பறவைகளின் நாமங்களும் பரிச்சயமாகவிருந்தன இலையசையும் திசைகொண்டு காற்றிற்கு நாமமிடும் திறனிருந்தது அப்போ பூமி உருண்டையானதென அறிந்திருந்தபோதும் தட்டையான ஒரு நிலத்துண்டம் மாத்திரமே உணர்திறனுக்குள் அகப்பட்:டுக்கிடந்தது தட்டையான உலகம் அர்த்தமுள்ளதாக இருந்தது இதோபார் பின்னர் வலங்கள் பலவற்றைக் கடந்த…
-
- 4 replies
- 1.4k views
-
-
நீ என் நிலவரசி முகில்களைக் கிழித்து வெண்புரவி பறக்கிறது. கைக்கெட்டாத் தூரத்தில் என்று காற்று காதில் கிசுகிசுத்தது. ஆழிக்குமிழிகள் போல் வெளியே தெரியாமல் உள்ளத்ததில் பெரிய பெரிய.. முகில்களைக் கிழித்தாயிற்று அடுத்தென்ன? இன்னுமின்னும் அண்டத்தை நோக்கி பயணம் தொடர்கிறது. தொட்டே தீருவேன் வேட்கை வியாபித்து விரிகிறது. கட்டித் தழுவி நீயிடும் முத்தத்திற்கான அவா ஆவியை உசுப்புகிறது. தீபோல் உன்மேல் நான்கொண்ட காதல். என்னை எரித்தெரித்து என் சுயத்தை சாம்பலாக்கி சரசமிடுகிறது. உருவழிகிறாய் என்று ஓரத்தில் ஒருமனம் விசிக்கிறது. உணர்ந்தும், உயிர்ப்பு உன்னை மட்டுமே யாசிக்கிறது. அடி!, என் நெஞ்சக் கூட்டறையில் குடிகொண்ட நிலவரசி என் மஞ்சச் சாய்கைக்கு நீ மடிதருவதெப்ப…
-
- 6 replies
- 1.7k views
-
-
மீண்டும் பேரிடி மீண்டும் பேரிடி!மூண்டது போரடி! எங்களின் மண்ணிலா பகைவனின் காலடி? பேரினவாதமே இது வேண்டாத தலையிடி! எரிகுழல் கொண்டு எத்தனை குண்டு கொண்டுவந்தாலும் பொடிப்பொடியாகும் மறத் தமிழரின் கால்மண் பட்டு! 'வெட்டியாய்" எம்மை நினைத்தோ வந்தாய்! "கொட்டியா" பலம் கண்டாய் இனி வேண்டாம் அப்பு சுருட்டு உன் வாலை! மகிந்தவுக்கு உது வேண்டாத வேலை கடனைப் பெருக்கி கைகட்டி நின்று வாங்கினாய் ஆயுதம் புலிக்கே என்று! உந்தச் சொல்லு பலித்தது சரிதான் புலிக்கே ஆயுதம் கொண்டு வந்தாய் எம்மண்ணில் எமக்கே வந்து தந்தாய்! இதுதான் இந்த ஆண்டுத் தொடக்கம் இனியும் வெடிக்கும்! தெற்கில் தெறிக்கும்! கிழக்கின் விடியலில் புலிக்கொடி பறக்கும்!
-
- 5 replies
- 2.1k views
-
-
முதன் முதலாய் அம்மாவுக்கு... ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஒங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு எழுதாமாப் போனேனோ? பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே! குலமகளே! என்னைப் புறந்தள்ள இடுப்புல்வலி பொறுத்தவளே! வைரமுத்து பிறப்பான்னு வயித்தில்நீ சுமந்ததில்ல வயித்தில்நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு கண்ணுகாது மூக்கோட கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கெடக்கையில என்னென்ன நெனச்சிருப்ப? கத்தி எடுப்பவனோ? களவாணப் பிறந்தவனோ? தரணிஆள வ…
-
- 1 reply
- 1k views
-
-
கனன்றே எரிவாய் தீக்கனலாக...... காலத்தின் உப்பரிகையில் கை கொட்டிச் சிரிக்கிறான் காலன் இது யாரோ ஒருவரின் கனவுக் கலைப்பல்ல விடுதலை விரும்பும் விதியின் விரல் பிடித்து விளையாடும் மொழியாக தினமும் இழப்புக்கள் அறுவடைக்கு ஆட்களை அசைபோடும் இரைமீட்பில் ஆண்டவனை அர்ச்சிக்கும் வரம் பெற்ற வள்ளலுக்கும் வழங்கிய பரிசு மரணம் குழந்தை இயேசு குடிகொண்ட மண்ணில் நிரந்தரமாய் நீ விடைபெற்ற செய்தி அறிந்ததால் அதிர்ந்தோம் அந்நிய மண்ணில் தடம் பதித்தாலும் மண்ணின் நினைப்பில் மனம் புதைந்தே கிடக்கும் மண்ணின் விழுதுகள் நாம் இறை உணர்வினில் கனல் மணக்கும் ஏழிலான வெண்மலரே மானிட வதையினால் மனம் கனக்க உம்மை கல்லறைக்குள் வைத்தோம் இது காலத்தின் கட்டளை ஈழ விடுதலையில் இதய…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆண்டகை அகதியாக அல்லலுறும் பூமியிலே மாண்ட அடிகளே! மானிடக் கருணையே! நீண்டதொரு சரித்திரத்தின் நிதர்சனச் சான்றென்று நீசர்கள் வைத்தகுறி நேசரும்மைப் பறித்ததுவோ?
-
- 4 replies
- 1.5k views
-
-
ஏனிந்தக் கேள்வி ? ----------------------------------------------------------------------------- எப்படியெனப் புரிகிறது. ஏனெனப் புரியவேயில்லை. எந்தப் பதிலாலும் திருப்திகொள்ளாது ஏந்தச் சாக்குப் போக்குகளாலும் ஏமாற்றுப்படாது நிரந்தர விழிப்பிலிருக்குமொரு ஒற்றனைப்போல் கேள்வி மட்டும் தொடர்நது கொண்டேயிருக்கிறது சொந்தப் பதில்கள் இரவற்பதில்கள் சொத்திப் பதில்கள் சுரணையற்ற பதில்கள் குள்ளப் பதில்கள் கூனற்பதில்கள் குதர்க்கப் பதில்கள் குருட்டுப் பதில்கள் குழந்தைப் பதில்கள் வயோதிபப் பதில்கள் அழகிய பதில்கள் அற்பப் பதில்கள் ஆரவாரப் பதில்கள் ஊமைப்பதில்கள் நூதனப் பதில்கள் நொண்டிப்பதில்கள் ஆயிரமாயிரம் பதில்களெனப் பதில் வெள்ளம் பாயும் போதும்…
-
- 5 replies
- 1.8k views
-
-
தண்ணீர் தேசம் -I கவிஞர் வைரமுத்து கடல்... உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்றுசிரிக்கும் நிஜம். கடல்... ஒருவகையில் நம்பிக்கை. ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்த கலைவண்ணன் மடியில்கிடந்த தமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள் அழகின் நவீனம். சிறகுகளைந்து சுடிதார்கொண்ட சொப்பனதேவதை. ரத்தஓட்டம் பாயும் தங்கம் அவள் தேகம். பொறுக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம். குமரி வயதுகொண்ட குமரி அவள். அவன் அழகன். இளைய அறிஞன். காதலிக்கும்போதும் கம்பீரம் குறையாதவன். என்ன யோசனை? என்றா…
-
- 12 replies
- 2.8k views
-
-
தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு, தழுவும் சேலை முகட்டில் விம்மி விழட்டும் அதுவரை தயங்கு. பருவச் சிலிர்ப்பில் கனியிதழ் கவ்வி உணர்வினைக் கிளறி இயங்கு. குறி நகம் பதித்து குவித்து அணைத்து கொஞ்சிக் கெஞ்சி முயங்கு. உருகிய பனித்துளி உயிருக்குள் இணைந்ததும் இணையின் அணைவில் மயங்கு.
-
- 72 replies
- 13.6k views
-
-
ஒருவருட காதல் வருடப்பிறப்பு அன்று கோயிலில் திருவிழாக் கால மக்கள் திரளுள் கருவிழியாள் உன் பார்வையால் அரும்பியது என்னுள் காதல் தைப்பொங்கல் வரும்வரையில் தையலுன் பின்னால் தினமும் அலைந்த என் காதலுள் தொலைத்தாய் உன் இதயத்தை மாசி வந்ததும் நாமிருவரும் பேசி பேசி காதல் செய்தோம் பங்குனி மாதத்தில் உன் சங்கு கழுத்தில் முத்தமிட்டேன் சித்திரை மாதம் வந்ததும் நித்திரையின்றி புரண்டேன் வைகாசி பூத்ததும் நாமிருவரும் கைராசி பார்த்து சந்தோசப்பட்டு ஆனி வந்ததும் உல்லாசமாக தேனீக்கள்போல பறந்து திரிந்து ஆடி வந்ததும் இருவரும் பாடி மகிழ்ந்தோம் ஒருவருக்கொருவர் ஆவணி உதித்ததும் உனக்கு நான் தாவணி வாங்கி தந்து அழகுபார்க்கையில் புரட்டாதியு…
-
- 30 replies
- 6.3k views
-
-
மாவீரர் நினைவில் கவிஞர் காசி ஆனந்தன்.. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 1.7k views
-
-
என்னைச் சுற்றிப் பெண்கள் அம்மா உயிர் உலுக்கி உலகுக்குள் கொண்டு வந்தாள்.. ஊனை உருக்கிப்பருகத்தந்தாள்.. என்னைச் செதுக்கித் தமிழனாய் செய்தாள்!.. தங்கை எனக்காக அழுவாள்.. என்னையும் அழவைப்பாள்.. என் எச்சம் அருந்தியவள்.. ஆருயிர் நண்பியாயும் அழகிய உறவாயும் வந்த...என் தாய்வீட்டுக் கடமை. நண்பி அவசரமாய் வரும் ஆறுதல் வார்த்தைக்கு சொந்தக்காரி..என் வெற்றிக்கு குதூகலிக்கும் முதல் நலன்விரும்பி.. கல்யாணமான பின்தான் காணாமல் போய்விட்டாள்!! காதலி வற்றாத தமிழ் வார்த்தைககடலில் குதித்தாள்;..கரைந்து போகாத என் காதலை கவிதையாய் கண்டெடுத்தாள்.. தான் மட்டும் படித்து பெரும் சுயநலவாதியானாள்!! மச்சாள் அனுமதி இல்லாமல் என்அறைக…
-
- 39 replies
- 5.2k views
-
-
நேசிப்பின் நிலாவரையல்ல நெருப்பின் உலாமுகமே நிகழ்காலத்தேவை. கொடுங்குலத்தின் கூர்ப்புடைக்கும் மடுத்தலத்தின் மத்தியிலே தடுத்தாட் கொள்ள என்று தமிழருக்கு இருந்த தாய் அடங்காச் சினங் கொண்ட அநியாயச் சிங்களத்தின் நெடுங்காலத் திட்டமதில் மடுத்தல மாதாவும் இப்போது இடப்பெயர்வு அகதி பரம்பொருளே!.... தடுத்தாட் கொள்ள யார் உள்ளர் உலகில்? இருதயநாதரும் இராணுவ ஷெல்வீச்சில் சிதைவுற்று போனாராம். சீர்தூக்கி இறைமகனை காக்க ஒரு கையின்றி, கட்டிட சிதைவுக்குள் கருணைக்கடல் நிற்கிறாராம் கண்கொண்டு பார்த்து கனக்கும் இதயமெங்கே? ஆருக்கும் எம்மினம் அவதியைக் கொடுக்கவில்லை ஆனால் போர் வித்தை கற்கவரும் வல்லாண்மைகளின் மானுட நேசிப்பு எம் மண்ணைக் குதறுகிறது மானுட ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
என் இருப்பும், உன் இருப்பும் அவசியம் பருத்த கலசங்களும், பெருத்த தம்புராவுமே நட்பை நிலைப்படுத்தும் நிர்வாண நிலையென்றால் கரிக்கிறது கண்மணிகள். உறுத்தலின்றி தரித்த விசம்போல் ஒரு பேராற்றில் கலக்கும் துளிகளில் மாள்வது நட்பாகில்.... மானுடம் சிகிலமாகி, நாகரீக வெளிகளெல்லாம் நரகல் புவியாகி சீழ் பிடித்து மணக்கும். என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம். நட்பென்ற உன்னதத்தின் மேன்மையைப் புரிய வைக்க நண்பா! என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம்.
-
- 6 replies
- 1.9k views
-
-
தமிழ் ஈழம் அமைவதை இந்தியா அனுமதிக்காது. இலங்கை பிரதமர் இஸ்ரேலில் பேட்டி. அடப்போங்கப்பா... இஸ்ரேல் தடுத்தாலும் சரி... இலங்கை குதித்தாலும் சரி... இந்தியா குமுறினாலும் சரி.... தமிழ் ஈழம் நிச்சயம் அமையும்டா என் டுபுக்கு தமிழச்சி கவிதைகள் குமுதம்/பாமரன் பக்கம்
-
- 6 replies
- 3.5k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், நட்பு என்று சகீரா அவர்கள் ஒரு கவிதையை எழுதி யாழில் இணைத்து அதுபல நீண்ட விவாதங்களை கண்டது. எமது தரப்பு நியாயத்தை வலுப்படுத்த நானும் ஒரு கவிதையை எழுதி இங்கு இறக்குகின்றேன். தமிழ்கூறும் நல்லுலகம் எனது கவிதையை - கருத்தை வரவேற்கும் என்று நினைக்கின்றேன். எழுத்துப்பிழைகள் ஏதாவது இருந்தால் திருத்தி படிக்கவும். நன்றி! உன்னையெனக்கு பிடிச்சிருக்கு! உடலாலும் மட்டுமல்ல உயிராலும் இணைவதற்கு கரங்கோப்பாய் என்தோழி! பூவே நான் உனக்கு பூச்சூடி மகிழ்வதற்கு தகுதியென்ன கேட்கின்றாய்? தயங்காது சொல்லு! சினேகிதனாய் இருப்பவன் காதலனாய் வருவதில் தடையென்ன கண்டாய்? தயவுசெய்து சொல்லு! அன்புடன் பழகியெந்தன் உள்ளத்தை கொள்ளையிட்ட நண்ப…
-
- 26 replies
- 5.8k views
-
-
*என் கனவு....* என் இரவுகளை நீ சிறை பிடித்ததால் என் கனவுகள் களவாடப்பட்டு விட்டன !!!... விடுதலைக்கு இன்றும் என்விழிகள் சாட்சி கூண்டில் ... *என் ஆசைகள் ...* அழகாய் இருக்கிறதடி உன் வாசல் கோலங்கள்... புள்ளிகளாய் நீயும் என் ஆசைகளை வைப்பதாலோ !!!... நசுங்கித்தான் போனதடி அதுவும் உன் வீட்டு நாய்குட்டி முதல் பால்காரன் வரை பாதங்கள் பட்டு !!!.. *என் நினைவுகள் ....* மறந்துவிடு எனச்சொல்லி நீ எறிந்த கல்லில் உடைந்து விட்டது ... கண்ணாடியாய் !!!... ஓராயிரம் உன் பிம்பங்கள் உடைந்த துண்டுகளில் உட்கார்ந்து கொண்டு இன்றும் கீறுகின்றன... என் இதயத்தை !!!... *என் சிரிப்பு ...* அதை எட…
-
- 1 reply
- 987 views
-
-
அன்னையே! ஆங்கில மோகத்தில் அனைவரும் திளைத்து ஆனந்தப் படுகையில் அன்னைத் தமிழை எண்ணி ஏங்கிட என்னை ஏன் பெற்றாய்?! பெண்ணடிமைத்தனத்தை பெண்களே ஏற்று பெருமைப் படுகையில் பெண்ணின் விடுதலையை நேசிக்கும் ஒருவனாய் என்னை ஏன் பெற்றாய்?! சாதியால் இணைந்து சமூகமாய் முன்னேறும் சந்ததியினர் மத்தியில் சாதியை வெறுக்கும் சமரசப் பித்தனாய் என்னை ஏன் பெற்றாய்?! பொன்னையும் பொருளையும் பொக்கிஷமாய்க் கருதும் பொல்லாத உலகில் பொது நலம் விரும்பும் போக்கிரி மைந்தனாய் என்னை ஏன் பெற்றாய்?!
-
- 4 replies
- 1.6k views
-
-
குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே! உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின் வேர்மடிக்கும் தாய்மடியே! உறுதி குலையாத உரம் அன்றுதந்து, விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே! ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக் காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே! எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ? வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம். ஆர்த்து, அணைத்து, ஆர்ப்பரித்துப் பேசிடவும், பார்த்துப் பசியாறி, பல்லாங்குழி ஆடிடவும், கோர்த்துக் கைகுலுக்கிக், கொவ்வையிதழ் விரித்திடவும், ஈர்ப்பு இருக்கிறது,.... எனினும் இப்போது முடியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க, உப்புக் க…
-
- 2 replies
- 1.3k views
-
-
பைத்தியா் நாமெல்லோ...? சாவீடு வந்த பார்ப்பன் தான் திண்ண கேட்கிறான் பச்சை அரிசி அள்ளியேனோ பைய்யினிலே போடுறான்....? சோம்பேறி பார்பானுக்கு சுக போகம் நல்லாயிருக்கு பெரியாராய் இவரை எண்ணி பெரும் கடன்கள் செய்யிறாங்க.. தன்னை தான் வருத்தி தான் உண்ண மாட்டாங்க குருவாய் இவரை எண்ணி குரு தெட்சனை கொடுப்பாங்க.. மாட்டு சானகத்தை மடையன் சாமியென்றான்- இதை கேட்டு நாமிருந்தால் கேணையா் நாமெல்லோ...? http://www.kalakam.com/forum/viewtopic.php?t=660
-
- 1 reply
- 1.4k views
-
-
புதுமனைப் புகுவிழா. என் செய்தி உனக்கானதென்பதை நீ மட்டும்தான் அறியமுடியும் யாரிடமும் இதுபற்றி எதையும் கூறிவிடாதே நான் மூடிப்போய்விட்ட என் கதவுகளின் முன்னால் நீ சினமுற்றிருக்கக் கூடும் நகர்வற்றுக் கிடந்த ஒரு நத்தையோட்டினுள் நான் குடிபெயர்ந்துகொண்ட செய்தி உனக்கெட்டியிருக்காதென்பதை நானறிவேன் புரியாமை உனக்குள் பிறப்பித்த சூறாவழிக்குக் காரணமானவன் நான் மட்டுமேயென நீ பிரலாபம் செய்துகொண்டிருக்கக்கூடும் என்னை நீ திட்டித்தீர்த்திருக்கவும் கூடும் என்சார்ந்து ஒரு பகையுணர்வை நீயுன்னுள் வளர்த்திருக்கவும் கூடும் இவையெல்லாம் நடைபெறட்டும் என்பதுதான் என்னை மீறிய எனது விருப்பமாகவுமிருந்தது நீ எனக்குப் பொம்மைகள் வாங்கித் தரவில்லை …
-
- 8 replies
- 4.1k views
-
-
உனக்கென்ன சீதனமா...? /தங்க தாலியெடுத்து தமிழா நீ கட்டிக்கடா-உன் சம்பிர..தாயம் இது வென்றால் தமிழா நீ முடிச்சுக்கடா.... ஆயிரம் பவுணில தாலி அட மனைவிக்கு ஏனடா வேலி...? ஆடம்பரம் எல்லாம் போலி அதை உணரலென்னா ..நீயோ..காலி..காலி.. ஏழ்மை வாழ்விலை நிலையில்லடா- இதை புரிஞ்சிட்டா நீயோ..புனிதனடா.... திருமண வாழ்விற்கு சீதனமா நீயென்ன விலை போகும் கேவலமா...? முதுகெலும்பு இல்லாத ஆணினமா- நீ ஊா்வன பட்டியல் சோ்வனவா..? பிச்சை எடுக்கின்ற வாழ்வுனக்கா வாழ்க்கையில் உனக்கென்ன மதிப்பிருக்கா...? வியா்வையால் உழைத்து முன்னேறடா விலை போகும் நிலையை மாற்றிட..டா.. அடிமையாய் வாழ்வது முறையில்லடா..- மொத்த ஆணிற்கும் இதனால் வெட்கமடா...…
-
- 0 replies
- 1.3k views
-