Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. குருவி ஒன்று தான் வாழ தேடியது ஒரு தோப்பு வந்தது மாந்தோப்பு வரவினில் கண்டது ஓர் மலர் மலரிடை மலர்ந்தது வாழ்வெனும் வசந்தம் மலரதும் குருவியதும் படைக்குது ஒரு காவியம் அது... மாநிலத்தில் மானிடர் தாம் கண்டிடாத புனித காவியம். தோப்பருகே ஒரு குடிசை அங்கும் வாழுது ஒரு கூட்டம்..! வஞ்சகமும் பொறாமையும் அவர்தம் மனங்களில் கறுவும் மனதை அடக்க முடியா கலங்கி நிற்குது அவர் சித்தம்..! கற்பனையில் கூட அடுத்தவன் வீழ்ச்சியில் அகம் மகிழவே துடிக்குது..! பாவம் அவர் அறிவிருந்தும் அறியாமையில்...! தோப்பிருந்த குருவியது மனமிரங்கி மலருடனிணைந்து பாவப்பட்டவர் மீது ரட்சிக்கிறது மானிடா.... மனமதில் அமைதி கொள் வாழ்வதில் சிறப்பாய் மாற்றா…

    • 20 replies
    • 4.4k views
  2. மரணம் ! அது உனது முகம் முழுவதும் வியாபித்திருக்கிறது.... சொல்ல எழுகிற சொற்களைக் குற்றித் துளைக்கும் கூர்முனைக் கத்தியிலிருந்து உயிர்க்காற்று மூர்ச்சையுறுகிறது. உதிரும் குருதித் துளிகள் உனக்குள்ளிருந்த பலம் முழுவதையும் உறிஞ்சிக் கொண்டு போகிறது..... கத்தியின் இடுக்கிலிருந்து ஒழுகுகிறது உனது கடைசிக் கனவுகள்..... ஓர் உயிரின் பெறுமதி பற்றிய எந்தவித கவலையுமின்றி உன்னைக் குற்றிக் குருதியில் குளிப்பாட்டி மகிழ்கிறது காடேறிகளின் கர்வம்..... இன்றைய முகப்புச் செய்திகளிலும் தலைப்புச் செய்திகளிலும் நீ நிறைந்து வழிகிறாய்..... வியாபாரிகள் வயிறு முட்ட நீ வலியில் துளித்துளியாய் செத்துப் போகிறாய். எத்தனையோ கொடுமைகள் …

    • 32 replies
    • 4.4k views
  3. நான் தனிய இல்லை தலைநகராம் கொழும்பில் காலையில் குண்டுவெடிப்பு தொலைக்காட்சி பார்த்ததில் மலைத்து போனேன் வலைப்பின்னலில் கண்களை சுழல விட்டதில் கண்டுகொண்டேன் மீண்டும் பல செய்திகளை குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கையை விட தேடிப்பிடித்த தமிழர்களின் தொகையோ பன்மடங்கு என ஒவ்வோர் இடமாக தேடி வெவ்வேறு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை நினைக்கையில் பகலவனுக்கே தாங்க முடியாமல் இருளைக் கக்கினான் வெண்ணிலவும் மங்கலாக உருண்டது வானமதில்.. அடையாள அட்டையை எடுத்து தலையணைக்கடியில் வைத்து ஆடம்பரமின்றி ஆனால் அழகாக ஆடை அணிந்து படுக்கையில் புரண்ட போது உறக்கம் எனக்குள் தூரவாகிப் போனபோதும் உறங்கினேன் என்னையும் மறந…

  4. மாவீரர் அஞ்சலி கவிதை - இளங்கவி உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்..... சரித்திரங்கள் பலபடைத்த சாதனைச் சிகரங்கள்..... மலைகளைப் பிழந்து தமிழன் வீரம் சொன்னவர்கள்.... உலகையே எதிர்த்து நின்று எங்கள் உரிமையைக் கேட்டவர்கள்... உலகச் சதிகளினால் மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்.... இறந்தும் நம் மானம் காக்கும் தமிழினத்தின் வித்துக்கள்.... ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தையாயிரத்துக்கு மேல் தங்கள் மூச்சுக்களைத் திறந்து எங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்.... வியூகம் உடைக்க வாவென்று அழைக்கு முன்னே.. வரிசையில் முதல் சென்ற வரலாற்று நாயகர்கள்.... சுய நலம் நீங்கி பொது நலம் தாங்கி... விடுதலையே மேலோங்கி ; அதற்காய் மரணித்த …

  5. வந்தது கடிதம் முத்தான எழுத்துக்கள் கொண்டு முத்தங்கள் பல இட்டு சுருக்கமாக நீ எழுதிய மடல் சுணக்கமாக கிடைத்தது இன்று விரித்து வாசித்த வேளை சிரித்தது என் உதடு சின்ன சின்ன சொல்லெடுத்து செதுக்கிய அழகிய காதலை உன் கடிதத்தில் கண்டதும் கண்கள் சந்தோசமாக கண்ணீரை உதிர்த்து நன்றி சொன்னேன் மனசுக்குள் நான் உனக்கு எத்தனை தடவைகள் அன்பான உன் மடலை வாசித்தேனோ நானறியேன்... என் மென்மையான நெஞ்சத்தில் அவ்வரிகள் ஆழமாக பதிந்தன "அன்பே என் நிலா உன் காதல் விண்ணப்பத்தை இன்று நான் ஏற்றுக்கொண்ட்டென் உன்னையே என் இதயவீட்டில் குடியேற்றிவிட்டேன் ஆதலால் ஓடி வா என்னிடம் நீ.. முத்தங்கள் பல தந்து முடிக்கின்றேன் இம்மடலை. என்றும் உன்னவன் ...........…

  6. என்றும் நீ எனக்கே...... வீசும் காற்று ஓயும் நேரம் கங்கை நதிகள் காயும் நேரம் நம் காதலை நானும் மறந்து போவேன் பேசும் பேதை ஊமை ஆனால் வீசும் பார்வை ஓய்ந்து போனால் உயிரே நானும் என்ன செய்வேன் கன்னி நீயும் என்னை வெறுந்தால் காரணம் அதை சொல்ல மறுத்தால் பெண்னே நானும் என்ன செய்வேன் விழிகள் தீண்டி காதல் கொண்டேன் வழிகள் மாறி எங்கோ சென்றேன் விதிகள் இது என விட மாட்டேன் கண்கள் கலங்கி கணவுகள் தொலைந்தால் காதல் ரகங்கள் நெஞ்சை எரித்தால் வாழ்க்கை இதுவேன வாட மாட்டேன் வாடும் மலர்கள் பூத்தவை தான் சொட்டும் மழைதுளி மண்ணிற்கே தான் என்னவளே நீ என்றும் எனக்கே தான் வானத்தில் பல நட்சத்திரம் உலா இருதும் ஒரே ஒரு வெண்ணிலா ஏங்…

    • 24 replies
    • 4.4k views
  7. இது கவிதையல்ல...... வாழ விடு!!! நான் நல்லவனாக வாழ்வது உனக்கு பிடிக்கவில்லையா? நான் நிம்மதியில்லாது வாழ்வது உனக்கென்ன இன்பம்? மனிதனை மனிதன் மதிப்பது தப்பா? விடு என்னை வாழ விடு.

  8. ஈழத்தின் இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களில், தமிழக உறவுகள் பலர் முனைப்புடன் உள்ள போதும், அது குறித்த எண்ணமும, செயலும் இல்லாத பலரது நிலை கண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் வடித்துள்ள கவிதையிது. இரத்தம் வெவ்வேறு நிறம் அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்! அங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன நாம் பட்டாசு வெடித்துப் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் வேட்டையாடப்பட்டுக் கதறிக் கொண்டிருக்கிறார்கள் நாம் வெள்ளித் திரைகளுக்கு முன் விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நாம் “கற்பி…

    • 3 replies
    • 4.3k views
  9. யாழ் இணையம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைப்பதையொட்டிய சிறப்பு நிகழ்வு! ***யாழ் கள கவிஞர்கள் வழங்கும் கவியரங்கு 01*** தலைப்பு: "தூ!" வெனத் துரோகிகளின் தலையில் காறித் துப்பிவிடு! கவியரங்கின் நடுவர்கள் விகடகவி நோர்வேஜியன் வன்னிமைந்தன் குறிப்பு1: யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும். ஆனால், மற்றைய யாழ் கள உறவுகளை தாக்காத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கவிதைகளை பாடவும்! குறிப்பு2: கவியரங்கின் நடுவர்களிற்கு கவியரங்கில் இருந்து ஏதாவது பொருத்தமற்ற கவிதைகளை அல்லது கருத்துக்களை அகற்றுவதற்கு அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கு முழு உரிமையும் உண்டு! குறிப்பு3: கவியரங்கம் நிறைவு: மார்ச் 30, 2007 மாண…

    • 29 replies
    • 4.3k views
  10. வணக்கம் நண்பர்களே! இந்த யாழ்க்களத்தில் பொதுவாக பெண்களைப்பற்றியே கவிதைகள் எல்லாம் வர்ணிக்கின்றனவே எப்போதாவது பெண்கள் மனந்திறந்து ஆண்களை நோக்கி தங்கள் கவிதையை வரைவதில்லை என்ற குறைபாடுகள் நிறையவே இருக்கின்றன. இது யாழுக்குள் மட்டுமல்ல எல்லாவிடத்திலும் உண்டு. இந்தக்களத்திற்குள்ளேயே, ஆண்களை வைத்துக் கவிதை எழுதுங்கள் என்று யாரோ கேட்டதாக ஞாபகம். வாசித்துவிட்டு உங்களுடைய உண்மையான விமர்சனத்தை தாருங்கள் நண்பர்களே! பூக்களுக்கு வாசம் உண்டு கண்ணா உன்னைப்போல் - என் பாக்களுக்குள் வாசம் செய்யும் உயிரே நீதானே! கூகிலுக்குள் தேடிப் பார்த்தேன் அன்பே உன்முகத்தை - வந்த கோபத்தாலே சினந்தது உள்ளம் அதுவே உன் இல்லம். கண்ணில் வந்து மின்னல் வெட்டிக் கவனப்படுத்துகிறாய் - என…

  11. நன்றி! என்னை வார்த்தையால் சுட்டு வீசி எறிந்ததற்கு! நன்றி! எனது இங்கிலாந்து இளவரசியை* தலையில் தூக்கி கொண்டாடினேன்..... அவளது வீட்டுக்கு பெயிண்ட் அடித்தேன்... அவளது வீட்டுக்கு பூமரம் நட்டேன்..... அவளது காருக்கு டயர் மாற்றினேன்.... அவளது காருக்கு பெட்ரோல் நிரப்பினேன்..... அவளது படிப்பிற்கு நான் படித்தேன்.... அவளது படிப்பிற்கு காசு கொடுத்தேன்... அவளது வாய்க்கு உணவு சமைத்தேன்.... அவளது வாய்க்கு சங்கீதம் தேடினேன்..... எனது இங்கிலாந்து இளவரசியை தலையில் தூக்கி கொண்டாடினேன்..... காலம் மாறியது...... உன்னை என்னால் மணக்க முடியாது......வார்த்தைகள் சுட்டன! உன்னிடம் வீடு இல்லை..... உன்னிடம் ஜாகுவார் கார் இல்லை.... உன்னிடம் படிப்பு பட்டம் இல்லை.…

    • 32 replies
    • 4.3k views
  12. My paypal is : visjayapalan@gmail,com இதுவே இறுதி வார்த்தை. இனி சொல்ல ஒன்றுமில்லை. நான் தோற்று போய்விட்டேன். 3000 பேர்வரை என்னுடைய நம்பிக்கை அடிப்படையிலான கலை கடனாக பாலை இசைத் தொகுப்பை தரவிறக்கம் செய்துள்ளனர். REMOVED BY POET தரவிறக்கம் செய்த அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். -வ.ஐ.ச.ஜெயபாலன் (நமக்குத் தொழில் கவிதை ******************************************************************************** * இதற்ககுமேல் எழுதி ஆகப்போவதொன்றுமில்லை. எனினும் கலை இரசிகர்கள்மீது நான் வைத்த நம்பிக்கையை இழக்க விருப்பமில்லை. முதலில் கடனாக தரவிறக்கம் செய்யுங்கள் பாடல்கள் பிடித்துப் பதிவுசெய்துகொண்டால் கடனை செலுத்துங்கள் என்கிற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய விரும்பினே…

    • 20 replies
    • 4.3k views
  13. கடல் நீரிலே துள்ளும் மீனினம் போல், என் மனதிலே துள்ளும் உணர்வுகளுக்கு, உயிர் கொடுத்து உலவிட வந்துள்ளேன்.

    • 30 replies
    • 4.3k views
  14. Started by Thulasi_ca,

    • 14 replies
    • 4.3k views
  15. மானுட வேட்டை போலில்லை புலிகளின் வேட்டை. அச்சுறுத்தலின்றி அவை தூக்குவதில்லை தம் நக ஆயுதங்களை. புலிகள் அமைதி விரும்புபவை... தனித்து இருப்பவை... தனக்கென எல்லைகள் வகுத்துக் கொள்பவை... தன் எல்லை தாண்டி வராது புலிகள் எப்போதும்... புலிகளுக்கும் உண்டு எல்லை தாண்டா இறையாண்மை புலி இனம் அழிந்து வருவதாக யாரும் சொன்னால்கூட நம்பாதீர்கள்... காடுகளின் கம்பீரம் புலிகள். புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. சிங்கமும் புலியும் ஒரு வனத்தில் வாழ்வதில்லை. சிங்கமும் புலியும் ஒரு போரில் மோதுவதில்லை. மோதினால்... புலிதான் வெல்லுமென்கிறது வனங்களின் வரலாறு. -தாமிரா http://forwardeded.blogspot.com/2008/11/blog-post.html வலைப்பூவில் படித்தேன்…

  16. Started by கஜந்தி,

    எனக்கும் அவனுக்கும் வாழ்கையென்னும் விடுதலையில்லா சிறைச்சாலைக்குள் புரிந்துகொள்ளா முரண்பாடு விரக்தியான நாட்கள் கண்ணீர் சிந்தும் கோலங்கள் முகமூடியால் மறைத்துக் கொள்ளும் முரண்பாடு போலியான உறவிற்கள் மலர்ந்து நிற்கும் சின்ன மலர்கள் சிக்கித் தவிக்கின்றது பாசமென்னும் முரண்பாட்டுக்குள் யாரோடும் சொல்ல முடியாச் சோகங்கள் எம் முரண்பாட்டால் நாளைய முதியோர் இல்லத்திற்காய் தயார்ராகின்றது

  17. *** வசம்பெனும் குருவி குசும்புகள் பலசெய்து வலையிலே குடும்பமாய் வாழ்ந்தபின் மெளனமாய் ஓய்ந்து போனதென்ன? ஓடிப் போனதென்ன? *** புதிதாய் நண்பர்களை சேர்ப்பதிலும் ஏலவே நட்புறவு கொண்டோரின் இதயத்தில் நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நோக்குடனே நீண்டதூரம் சென்றாயோ? *** நிச்சயம் இன்றென அநித்தியம் நாளையென அன்றெமக்கு அன்புடன் பகர்ந்த அறிவுரையை மெய்ப்பிக்க நினைத்தே நீ பொய்யாகிப் போனாயோ? *** தருக்கங்கள் நிறைந்த கருத்தாடல் தளத்தில் சுடுகின்ற சூரியனல்ல நான் குளிர்விக்கும் நிலவென்று எமக்கு உணர்த்தவே நீ அமரன் ஆகினாயோ? *** குரலறிந்து, முகமறிந்து, முக…

  18. குருவி ஒன்று மரத்திலே கூடு ஒன்றைக் கட்டியே அருமைக் குஞ்சு மூன்றையும் அதில் வளர்த்து வந்தது நித்தம் நித்தம் குருவியும் நீண்ட தூரம் சென்றிடும் கொத்தி வந்த இரைதனை குஞ்சு தின்னக் கொடுத்திடும் குருவி தந்த இரையினால் குஞ்சு மெல்ல வளர்ந்தன சின்ன இறகு இரண்டுமே சிறப்பாய் வளரத் தொடங்கின தனது குஞ்சு பறப்பதை தானும் பார்க்க ஆவலாய் தந்தை குருவி சொன்னது தனயன் பறக்க வேண்டுமாம் இப்ப என்ன அவசரம் இறக்கை நன்கு வளரட்டும் இயல்பாய் குஞ்சு பறப்பதை இரசிக்கும் காலம் வந்திடும் சின்ன இறகு வளர்ந்தபின் சிறப்பாய் பறக்க முடியுமே இன்றே பறக்க விரும்பினால் இறப்பில் முடியக் கூடுமே தாய்க் குருவி சொன்னதை தடுத்தே தந்தை சொன்னது எனக்குப் புத்த…

  19. ஒரு வேளை எனக்கு முன்... என் மனைவி இறந்தால்... அவளுக்காக உலகிலையே ... கோயில் ஒன்றைக்கட்டுவேன் .... .இதுவே மனைவிக்கு கட்டிய .... மனைவி மஹாலாகஇருக்கும்... அந்த கோயிலை நான் தான்... நான் தான் அதன் அமைப்பை வடிவமைப்பேன்...! நான் தான் கல் உடைப்பேன் ... நான் தான் மண் சுமப்பேன் ... நான்தான் கட்டி முடிப்பேன்... நானே அழகு பார்ப்பேன்... அந்த கோவிலில் என்குடும்ப... உறுப்பினரை யாரையும் ... வணங்க விடமாட்டேன் ....!!! அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் ... நான் கடவுளாக பார்க்கிறேன் ... !!!! என் மீதிக்காலத்தை அங்கேயே .. உண்ணா நோன்பிருந்து ...... இறந்து விடுவேன் ... !!! ^ மனைவிக்கு ஒரு கவிதை கவிப்புயல் இனியவன் அன்னையை ....நினைக…

  20. அத்தை மகளோ... அம்மான் மகளோ.... எந்தத் தலைமுறை தாண்டிவந்த உறவோ....... நானறியேன்.....! சிந்தைக்குள் உன் நினைவிருக்கு சிதையாதே என் கனவிற்கு - என கதைகதையாய் பல சொல்லி உன் காலடியில் போட்டவளே..... மடியோடு எனைச் சாய்த்து தலைகோதி தாலாட்டி மனதோடு ஒன்றி போனவளே.... நான் கேட்டா உன் மடி தந்தாய்.... நீதானே என் பதியென்றாய் நீயாக நெருங்கிவந்து - எனை தீயாக்கி போகாதே... அணைத்து முத்தமிட்ட உன் இதழில் பதிக்க மறந்தேன் என் முத்திரை - அதுதான் தேடி அலைகிறேன் உன் முகவரி இன்று உணர்வுகள் தரும் உறவை விட உன் உறவுகள் சொல்லும் உரைகளோ சரி உனக்கு....? மனசுகள் பேசும் வாழ்வை விட உன் மாமன் மகன் மதனா பெரிது உனக்கு.....? காய்வெட்ட நி…

    • 23 replies
    • 4.3k views
  21. அந்நியர் வந்து பாத்திடும்போது அதிசயம் தானே பூத்ததடா! கவி சொன்னவர் பலர் பார்த்திடும் போது ஆகாயம் தானே பார்த்ததடா புலி ஆகாயம் தானே பாய்ந்ததடா வென்றிடும் களம் நாடிச்சென்றதில்லை அங்கே குன்றிடும் மனம் என்றும் இருந்ததில்லை சென்றிடும் வீரர் கொன்றிடும் வரையிலும் ஓய்ந்ததில்லை களம் என்றிடும் வீட்டினில் கண் தூங்கவில்லை வெடித்திடும் குண்டும் பயம் கொடுக்கவில்லை பாயும் துப்பாக்கிச்சன்னமும் கூட துளைக்கவில்லை சாயும் வேங்கைகள் என்றுமே நமைவிட்டுப் போகவில்லை பாயும் கரும்புலிகூட சிரிக்கத் தவறவில்லை சென்றிடும் போதும் சிரித்திடும் முகம் பகை கொன்றிடும் போது கலங்குது மனம் என்றிவர் மனமாறுமோ, களம் தீருமோ …

    • 22 replies
    • 4.3k views
  22. காதலும் நட்பும் என் விரல் நகம் கூட என் காதலியின் உடல் மீது படாமல் எவ்வளவு கண்ணியமாகக் காதலிக்கிறேன் என்பதை என் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தேன் அவளது தோளில் சாய்ந்தபடி.

    • 19 replies
    • 4.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.