Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by Eelanilaa,

    நேற்று நடந்தது நினைவிலிருக்கும், நாளை நடப்பது கனவாக வரும், ஆனால் இந்தக் கணம் மட்டுமே மெய் என்பதை மறந்து விடாதே!

    • 8 replies
    • 1.5k views
  2. இருட்டின் அறையில், விளக்கின் ஒளியில், எனது ஒளிமயமான வாழ்வைத் தேடுகின்றேன்...

    • 7 replies
    • 1.4k views
  3. Started by கஜந்தி,

    என்னைக் கவர்ந்த மலர்களே நான் சண்டை போடுவதும் பொறாமை கொள்வதும் உங்கள் மீது மட்டுமே அதெப்படி ஒர் நாளைக்கூட அழகாய் வாழ்கின்றீர்கள் என்னால் ஒர் மணித்தியாலத்தைகூட வாழ முடியவில்லையே இதனால் நித்தமும் தோற்றுப் போகின்றேன் உங்களிடத்தில் என்றாலும் உங்களின் மென்மையை எனக்குள் சேகரித்து வெற்றி கொண்டேன் இதற்காக என்னை தண்டித்து விட்டதே உங்கள் விதி உங்களைப் போல் நானும் சருகாய் காய்கிறேன் எனை கவர்ந்த மலர்களே உங்களின் மெளனச் சிரிப்பபை எனதாக்கி உங்கள் மென்மைக்குள் இன்னும் வாசம் செய்கிறேன் என்றோ ஒர் நாள் …

  4. றோஜாவே உன்னை பறிக்க எண்ணியபோது புரியவில்லை...... இத்தணை முட்கள் என்னை தீண்டும் என்று!!!

  5. கவலை எதற்கு இவர்களுக்கு? என்றோ ஒரு நாள் கீறிவிட்ட உடலாலும் அன்றே திணிக்கப்பட்ட ஒரு விதையாலும் மனம் கோளாறுகள் நோண்ட வீதியில் திரிகிறேன் என் கண்களுக்குத் தெரிவது ஒரு குழந்தையின் ஐஸ் குச்சியும் அவள் கையிலிருக்கும் பலூனும் என்னைச் சுற்றி மடையர்களாய் நிற்கும் இந்தக் கூட்டங்களைக் கேவலமாக மதிக்கிறேன் இந்த தெருவே என் வீடு சாக்கடைகள் என் குளியலறை குப்பைத் தொட்டி என் சாதஅறை நினைவுகளின் பிணைப்புகளினால் என் மேனியில் படர்ந்து கொண்டிருக்கும் செயற்கைத் தோல்களை அங்கங்கே கிழிக்கிறேன். என் வீட்டில் குழந்தையைத் தவிர கூட்டத்திற்கு குறைவில்லை பெளர்ணமியின் வேதனையை முழுமையாக ரசிக்கிறார்கள் பூலோகக் காவியர்கள் கலைந்து ப…

    • 11 replies
    • 1.6k views
  6. விரிக்கப்பட்ட ஒரு துண்டின் மேல் விழும் எச்சில்களுக்கு இரத்தம் வருத்த ஆடுகிறான் தன் பிஞ்சுகளோடு கனத்த உடலும் கால் தெரியும் அமைப்பும் ரசிக்கத்தான் கூட்டமுண்டு காலணா வீச ஆளில்லை கரணம் அடிக்கும் பூக்களை ரசிக்கத் தெரிகிறது சிந்தும் துளி ரத்தங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை உழைக்கப் பல தொழில்கள் பிழைக்கப் பல தொழில்கள் பிச்சைக்குத் தொழிலுண்டா? வீசுங்கள் உங்கள் சட்டைப்பை காசுகளை. ஆகாயத்தின் மத்தியில் ஆடும் இவர்களின் வாழ்க்கையும் அடிக்கடி கலையும் மேகங்கள் கயிறின் நுனியில் உயிரை வைத்து பூக்கள் வாடும் மஞ்சள் வெயிலில் உதடுகள் வெடிக்க இவர்கள் ஆடுகிறார்கள் இறைவனின் கூத்து இறைவன் ஆடுகிறான் இவர்களின் வாழ்க்கையில் கூத்து.…

    • 5 replies
    • 1k views
  7. அன்னியத்து சிங்களங்கள் அரியாசனம் ஏறி விட்டு எம் தமிழை அழிக்கின்ற இன்னலதை காணலயோ...??? வந்தேறு குடிகளென்று- பகை வாய் விட்டு சொல்லையிலே எங்களது தமிழ் நாடு ஏனென்று கேட்கலயே.... உண்மையதை கண்ட பின்னும் ஊமையாகி நிற்கையிலே தன் மானம் உள்ளயவன் தலை நிமிர்தி கேட்கையிலே... குற்ற வாளி யென்றவனை கூண்டிலேற்ற முனையலாமோ...?? சட்டங்கள் என்று வந்து சங்கடங்கள் கொட்டலாமோ....?? கதிரையது ஏறிவிட கட்சி மாறும் கூட்டங்களே மனு நீதி விற்று விட்டு மன்றிலேறி என்ன செயவீர்....?? கொல்லர்கள் ஆழ்கின்ற கோட்டையது போலும்...??- அங்கு தமிழர்கள் அழிகையிலே தம்பட்டம் அடிக்கின்றீர்.... ''பாரதத்தின் மந்திரிக்கு பாதையிலே அடித்தவனை தூக்கி வைத்து தாளாட…

    • 3 replies
    • 1.4k views
  8. வானம் வசப்பட்ட கதையிது தொடரும் வானத்தை அண்ணாந்து பார்த்து நடுங்கிய நாட்கள் பனை நெஞ்சின் பின்னும் பதுங்குழிகளிலும் பதுங்கிக் கிடந்தோம் இன்று குனிந்த முகங்கள் நிமிர்த்தி கொஞ்சம் சிரிக்கிறோம்! தலைவன் புண்ணியத்தில் தலைநகரில் பெரும் தீயெழ உலகத்தமிழர்களின் உள்ளத்தில் பெருமகிழ்ச்சி எத்தனை ஆண்டுகள்தான் இனவெறி எச்சங்களை எங்கள் தலைகளில் கொண்டு வந்து கொட்டுவீர்கள்? எங்கள் உயிர் வலியின் உச்சங்களை உணரத் தவறியவர்களே உணர்ந்து கொள்ளுங்கள்! வான் ஏறிவந்து இனி உங்கள் தலையிலும் குண்டுகள் கொட்டுவோம்! எங்கள் புலிகளுக்கு பாய்வதற்கு மட்டுமல்ல பறக்கவும் தெரியும் பார்த்ததும் பதைத்தீர்கள்;! இனி என்ன செய்வதாய் உத்தேசம்? வ…

    • 11 replies
    • 1.8k views
  9. பாரோரே பாருங்கள் அவன் பண்பை பயங்கரவாதியென்றே பட்டியலிட முற்ப்பட்ட பாரோரே பாருங்கள் அவன் பண்பை எதிரியெனில் எங்கிருந்தாலும் எதிர்த்தழிக்கும் எம் தமிழன்! ஏதிலியை ஏழைகளை எதிர்கொண்டு அழிப்பானோ? எங்கெனும் ஓர் குண்டை ஏதும் அறியார் மேல் எறிந்தானோ? பாராயோ அவன் பண்பை பாரோரே? பாடாயா அவன் பண்பை பாரெங்கும்! ஓங்கி அரையப்பட்ட இறைஅதுவே ஓங்கிய கரப்பக்கம் ஒடிந்து வீழ்தால் கொள்ளாத வேங்கையென மாவீரம் கொண்டவரோ! கொண்றிடுவர் ஏதிலியை ஏழைகளை! பார்த்தோமே பாரோரே செஞ்சோலை செங்குருதி! என்னற்ற குண்டுகளை எம் தமிழர் வீடுகளில் எடுத்தெரிந்து கொன்றதையும் பார்த்தோமே? தமிழனின் கறியிங்கே தாராளமாய் கிடைக்குமென்றே ஈனப் பிறவிகளின் இழிச் செயலாய் வாசகங்கள் பார்த்திருந்தும் பாரா…

  10. செவ்வந்திப்பூ! பூத்திருக்கும் பூக்களெல்லாம் சந்தோசக் கவிதை சொல்லும்! பார்த்திருக்கும் பொழுதெல்லாம் புன்னகைகள் மின்னலிடும்! இறைவா உன் படைப்பினிலே இத்தனை இனிமைகளா? பூரித்து நிற்கின்றேன் பொன்மனதும் மலர்கிறது! விதியின் முடிவுகள்! மகிழ்ந்து மலர்ந்திருக்கும் வசந்தங்கள் வாழ்வில் இல்லை! என்றாலும்… மனமது மரத்து விடவில்லை! கூடிக் குலாவித் திரிந்து அணைபோட முடியாத அன்பையெல்லாம் அர்ச்சித்து போற்றுதற்கு ஜோடி என்று ஒன்றுமில்லை! என்றாலும்… கண்ணிலும் கருத்திலும் கனிவிற்கு குறைச்சலில்லை! கண்டதும் இருட்டு! காண்பதும் இருட்டு! காணப்போவதும் இருட்டாகலாம்! என்றாலும்… மென்மையான மெளனங்களில் துளியான நிம்மதியில் வாழ்க்கை கழிந்தே தீ…

  11. வெட்டடா வெட்டடா பகைவனே வெட்டடா பதுங்கிட நீயின்று பங்கரை வெட்டடா... நின்மதி தொலைத்து நித்திரை முழியடா- உன் கோட்டைகள் மீதிலே குண்டுகள் விழுமடா... ஆகயம் அதனையே அண்ணாந்து பாரடா புலியது பறவைகள் புயலென வருமடா... எண்ணெய் குதங்கள் எங்கினும் எரியுமே கடற் படை தளங்களும் கடுகதி சரியுமே... சட்டங்கள் போட்டா சாகவே அடித்தாய் வட்டீயும் முதலுமாய் வலிந்தே தருகிறோம்.... எத்தனை இன்னலை எமக்கது அழித்தாய் இந்தோ தருகிறோம் இன்னலை ஏரடா.... வல்ல அரசென்று வாயது அடித்தவா பிடரியில் கால் படா எங்கட ஓடினாய்...??? - வன்னி மைந்தன்

  12. உடல் ஒடிந்து போகையிலும் உள்ளமது உடையலயே எங்கள் தமிழ் நீதிக்கு ஏன் குரல் கொடுக்கலயோ...?? செவிகள் உண்டு உந்தனுக்கு செவிடாக நீயெதற்கு....?? கலைஞர் என்ற மாமனிதா கருணையது காட்டிவிடு... உந்தன் தமிழ் நாட்டினிலே போட்ட தடை எடுத்துவிடு எங்கள் தமிழ் நீயென்றால் இன்றுயதை செய்து விடு... வேங்கைகள் உந்தனுக்கு வேடுவர் இல்லையின்று அச்சமில்லை உந்தனுக்கு அவையினிலே செப்பிவிடு... தொப்பிள் கொடி உறவு நாங்கள் தொல்லையிலே வாழயிலே பந்தியிலே உந்தனுக்கு பாயசம் இன்றெதுக்கு...??? நல்ல மனம் உந்தனக்கு இல்லையென்று சொல்லவில்லை ஆயினும் நெஞ்சத்திலே வடுக்கள் இன்னும் ஆறலயே... உன்னை நம்பி எம்தமிழர் உன்னணியில் நிற்கையிலே எங்கள் ஈழ தேசத்திற்கு …

  13. சொல்வாயா...!!! உனை நான் பார்த்தேன் எனையே உடன் மறந்தேன் காளை உனை நினைத்து காதல் கொண்டு துடித்து நீ செல்லும் வழி மீது நிலா இவள் விழி வைத்து துடிதுடிக்கும் இதயத்தோடும் படபடக்கும் விழிகளோடும் கன்னி நான் காதலோடு உனை எண்ணிக் காத்திருக்கின்றேன் திருமகனே என் மனமகனே ஒருமுறையேனும் உன் உதட்டைக் குவித்து நெத்தியில் அன்பாக முத்தம் ஒன்று இட்டு சத்தமாக சொல் கன்னி இவளே உன் காதலி என்று...! சொல்வாயானால், வெண்ணிலா சிரிக்கும் விண்மீன் ஒளிரும் வானம் பூத்தூவும் வானவில் நிறம்கூடும் மின்னல் மின்னும் முகில்கள் நாணும் இவைக்காக என்றாலும் அவைமுன் காதலை சொல் கன்னி இவளே உன் காதலி என்று...!

    • 15 replies
    • 2.7k views
  14. நீயும் நானும் எதிரியடா- உனை நீண்டு வளர விட மாட்டேண்டா அல்லும் பகலும் அறுப்பேண்டா- உன் அத்தி வாரம் உடைப்பேண்டா... பாட்டன் ஆண்ட தேசமதை பறிக்க நீயும் வந்தாயோ...?? வெட்டி பயல்கள் நாமோட - உன்னை வெட்டி எறியாமல் விடுவேமோ...?? இல்லை நெஞ்சில் துணிவென்றோ எண்ணியே நீயும் வந்தாயோ அன்னியா உன்னை ஆண்டிடவே அகில தமிழர் விடுவாரோ...?? கொள்ளி கட்டை ஏந்தியே- எங்கள் கோட்டையை எரிக்க வந்தாயோ...?? இத்தனை துணிவு உனக்கென்றால் இனியும் உன்னை விடுவோமோ...?? - வன்னி மைந்தன் -

    • 2 replies
    • 1.1k views
  15. சில்லுடைந்து விழுந்த வண்டி சிலுக்காகி ஆடையிலே பல்லெடுத்து சிரிக்காம பார்த்து நானும் நிற்பேனோ...??? வந்த வழி தடுமாறி வழியோரம் கேட்கையிலே என்ன வென்று சொல்லாமால் எடுத்தெறிஞ்சு போவேனோ....?? கட்டழகு மேனி காட்டி கண்னேதிரே நீ வந்தா கண்ணெடுத்து பார்க்காமா கரையொதுங்கி போவேனோ...?? சுத்தி விட்ட துணி நளுவி தொப்பிளது தெரிஞ்சுப் புட்டா கை nவைத்து நுள்ளாம காளை நானும் நிற்பேனோ...??? முற்றத்து வாசலிலே துளசி மரம் முன்னிருந்தா கை யெடுத்து வணங்காமா காலெடுத்து போவேனோ....??? பதில் சொல்லு....! :P :P :P - வன்னி மைந்தன் -

    • 2 replies
    • 1.1k views
  16. ஆணவத்தில் வானமேறி ஆட்டம் போட்டு வந்தவரே காலக்குறி வைத்து புலி கந்தகத்தால் குதறியதே.... கோட்டையிலே வந்தடித்தும் கொட்டமதா அடங்கவில்லை..?? வம்பிழுத்து நீயும் வந்தாய் வாங்கி கட்டி இன்று போனாய்... எத்தனை நாள் பொறுத்திருப்போம் எம்மவரை நீயழிக்க....?? காத்திருந்த நாள் கழித்து கள முனையில் இறங்கிவிட்டோம்... தேற்றம் கொண்ட எம் படைகள் தெருவிறங்கி வந்து விட்டார் கூற்றுவனே இனி உன்னை குழி தோண்டி புதைத்திடுவார்... வண்டு வந்து படம்பிடிக்க பறந்தடித்தா நீயும் வந்தாய்..?? கரணங்கள் அடித்துயின்று காணமலே எங்கு போனாய்...??? கூட்டமதா கூடி வந்து குண்டுகளை எய்ய வந்தாய்...?? சங்கரங்கள் ஆடியுனக்கு சமாதிகள் கட்டி விட்டோம்... தொல்லை தந்த…

    • 2 replies
    • 1.1k views
  17. முன்னை அண்ணன் கொடுத்த இடி கட்டுநாயகாவில் பின்னை கொடுத்த இடி பலாலியிலே இன்று கொடுத்த இடி அடிவயிற்றிலே இன்னும் இறங்கும் இடி எங்கெங்கோ? வானோடிகளின் வல்லமை பாராமல் வாயார வாழ்த்தாமல் வாய்மூடி இன்னும் உறங்குவது ஏன் தமிழா? அன்று நின்று கடலாண்ட இராஜராஜனும் அவன் மகன் இராஜேந்திரனும் மீண்டும் பிறந்திருந்தால் இப்படித்தான் இருப்பாறோ? இணைந்து படைநடத்த இயன்றதெல்லாம் செய்யாறோ? என்னடா கொடுமை இது எங்கள் சகோதரனுக்கு எம் மன்னில் இடமில்லையாம் சொல்வது யார்? கன்னடத்து விஷநாகம் கடும் விஷத்தை கக்குவதும்! கலைஞ்சரின் கட்டுக்கதை கண்ணீர் நாடகமும்? என்னடா கொடுமை இது? - சிவராஜா

  18. Started by கஜந்தி,

    ஆசை அதிகாலை தன்னில் பறவைகளின் இசையில் எழுந்திட ஆசை சூரியன் தீண்ட முதல் பணித்துளிதன்னை-நான் தொட்டு விளையாடி மகிழ்ந்திட ஆசை தென்றலின் வருகையால் அசைந்திடும் மொட்டுக்கள் மலர்ந்திடும் அழகால் சிந்திடும் பனித்துளியில் நான் நனைந்திட ஆசை மென்மையான பூக்களின் இதழ்களில் - என் முகம் புதைத்து கண்முடி -இந்த வாழ்கை தன்னை மறந்திட ஆசை இளங்காற்றின் அசைவில் ஆடிடும் மரங்களின் ஓசை தனை ரசித்தபடி நதிக்கரை ஒரமாய் நடத்திட ஆசை சண்டை இல்லா உலகில் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் மட்டும் வாழ்வதை பார்த்து ரசித்து விட ஆசை நிறைவு பெறுமா இவள் இறுதி ஆசைமட்டும் புரியாது …

  19. சிந்திப்பாயா மனிதா எம்வாழ்கைதான் எத்தனை அழகு ஏன் எம்மை நாமே ரசிப்பதில்லை எதைத்தொலைத்து எதை தேடுகின்றோம் புரியாமல் போகும் வாழ்கைதனை சிந்தித்தால் என்ன இயற்கைதனை ரசிக்கும் எம்மால் மனிதனை ஏன் ரசிக்க முடியவில்லை அன்பு பாசம் காதல் சுயநலமாய் மாறியதோ ஆணும்பென்னும் சேர்த்தால்தானே வாழ்கை _இதனை புரிந்தும் சண்டைபோடுகின்றோம் இங்கே உணர்வுகள் மதிக்கப்பட்டால் பிரிவுக்கு என்னவேலை இதனை சிந்தித்தால் என்ன என்னவேடிக்கை பட்டி மன்றங்கள் போட்டு எம்உணர்வுகளை எமக்கே புரியவைக்கும் முயற்சி அதையும் நாமே செய்கின்றோம் வேதணையாக இல்லை…

  20. திரைகடல் ஓடி திரவியம் தேட மூழ்கிய இடத்தில் நங்கூரம் இட்டு நிற்க்கும் கப்பல்-நாம் தலைமேல் பிரச்சனையும்-பொறுப்பும் சகோதரர்களில் கனவும் சுமந்து வந்தோம்- நாம் மூழ்கியதில் மூச்சுத்தினர வத்தது புலம்பெயர் நாடுமூச்செடுக்க முட்யாது தினறியதை அன்பு உடன்பிறப்புக்கு சொல்லவில்லை-நாம் உயிர் கொடுத்து உடன் பிறப்பை காப்பாற வந்தோம் உயிரின் பிரிவும் உறவின் பிறரிவு சமம் என்று அறியா- நாம் திரைகடல் ஓடி தமிழ்முகம் தேடி ஆறுதல் அடைந்தோம் கடைசியில் -நாம் http://www.tamil.2.ag/

  21. எனக்காக ஒரு பாடல் தாய்மணணே நீ பாடு எனக்காக ஒரு பாடல்-என் தாய்போல நீ பாடு எனக்காக ஒரு பாடல்-உன் சேய்போல நீ தேடு உனக்காக நான் வாடல்-இன்னும் வாழாத வாழ்வோடு உனக்காக நான் வாடல் தாய்மண்ணைப் பிரிந்தாலும் தலைமுடியே உதிர்ந்தாலும் தாயக நினைவோடு... தளராமல் நான் இருப்பேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் பிடிக்காத பிழைப்போடும் பெரும் பாடு பலபட்டும் உயிர்க் காற்றை உறையவிட்டு உனக்காக நான் உழைப்பேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் உயிரை உயர்வாக நினைத்தாலும் உடலை கூடாகச் சுமந்தாலும் உற்றார்கள் உன்னை மறந்தாலும் என் உணர்வுதனை உருக்கிடுவேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் அன்னிய வனவாச அவலத்தோடும் அன்னை மண் உன் நினை…

    • 1 reply
    • 1.1k views
  22. கவிதையைக் கேட்க... +++ அப்பால் தமிழ் இணையத்தளத்தில் "பரதேசிகளின் பாடல்கள்" கவிதைத் தொகுப்பு பற்றி எழுதப்பட்ட கருத்துத்தான் மேற்காண்பது. +++ இக்கவிதைத் தொகுப்பினைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் "அப்பால் தமிழ்" இணையத்தளத்தோடு தொடர்பு கொள்ளலாம். kipian [at] appaal-tamil [dot] com +++ இக்கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை நித்தியா குரல்வடிவில் செய்திருக்கிறார். கேட்டுப்பாருங்கள். இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த கவிதைகளில் இதுவும் ஒன்று. கவிதையைக் கேட்க...

    • 4 replies
    • 1.4k views
  23. Started by Manivasahan,

    விமானக் கிலி காலமும் மாறுது காட்சியும் மாறுது கயவரின் தலைநகர் கதிகலங்குது குண்டுகள் தினமும் கொட்டிய சிங்களம் மண்டுகள் போலவே மருண்டு அலறுது காண்பது அனைத்தும் மஞ்சளாய் தெரிகிற காமாலைக் கண்ணனாய் காவல் புரியுது காகமும் அவர்க்கு காலனாய் தெரிந்திட கயவர் கூட்டம் கத்திக் குளறுது ஒளியினை எங்களின் வாழ்க்கையில் பொசுக்கியோர் ஒளியினை நிறுத்தியே ஒழிந்து மறைகிறார் வெளிச்சம் நிறுத்தியே வெருண்டு கிடக்கிறார் வெற்று வானிலே வெடிகளைச் சுடுகிறார் பகலிலே வந்தால் பார்க்கலாம் என்பதாய் பைத்தியக் காரனாய் பேட்டிகள் கொடுக்கிறரார் வினையினை மண்ணிலே விதைத்தவர் கேளுமே விடுதலை வரும்வரை விண்ணுமக்(கு) எதிரியே!

    • 5 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.