கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5133 topics in this forum
-
தமிழன் புகழ் வானில் உயர்ந்தது வரி உடை அணிபவன் ஆணையில் பறந்தது! திரி சடை சிவனும் திடுக்கிட்டு மூன்றாம் விளி திறந்தான் ... முகமலர்ந்து வாழ்த்தினைப் பகர்ந்தான்... சிங்கங்கள் முகத்தை அஷ்டகோணலாக்கி அ'சிங்கங்கள்' ஆயின! பறந்தது உண்மை குண்டு விழுந்ததும் உண்மை இருந்தது இருந்தபடியே இருப்பதாக அறிக்கை வாந்தி எடுத்தார் அரசாங்க அமைச்சர் அவர் மனசுக்குள் நிறைய எரிச்சல்! உலகம் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே 'அது எப்படி புலி வானில் பறக்கலாம்?' என்று வேதாந்தம் பேசின... வெறும் அறிக்கைகள் வீசின! இறக்கைகள் விரித்து இன்னும் இன்னும் பற என்று தமிழர் வாய்கள் பேசின...! …
-
- 6 replies
- 1.8k views
-
-
தேசியக் கவிதைகளும் விசுவாசமற்ற சொற்களும் யவனிகா ஸ்ரீராம் சங்கம் வளர்த்த தமிழ்க்கவிதை மரபுகள், அதன் இறைச்சி, ரசனை அதனுடன் இயைந்த மொழி விரிவு போன்றவற்றையெல்லாம் பல்கலைக்கழக அடைவுகளுக்குள் தேர்வுகளுக்கான காப்சூல்களாக்கிய பின்பு இன்றைய தமிழனின் வெறும் கவிதா தாகத்தைத் திரைப்படப் பாடல்களே தீர்த்து வைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லலாம். புதிய, பழைய திரைப்பாடல்களை குறுந்தகடுகளில் பெற்றுக்கொண்டு, பேச்சுவழக்கில் அதன் சிலாகிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதில் கவிதைக்கணங்கள் முடிந்துபோய்க் கொண்டிருக்கிறது. இதில் தவறொன்றுமில்லை. ஒரு காலத்தில் சங்க இலக்கியம் தொடர்ந்து தனிப்பாடல்கள், கதைப்பாடல்கள் வழியே உருக்கொண்ட பாரதியின் கவிதைகள் சமூக, அரசியல், பின்னணிகளோடும், புதிய கர…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரிய சிநேகிதி, மன்னிப்பாய்...! மெளனத் தவம் கலைத்துச் சகுனம் பார்க்காது காதலென்னும் மாய வார்த்தை சொன்னேன்! உள்ளம் மூடி வைக்காது... பள்ளம் விழுந்ததடி உன் பார்வை பட்டென்றேன் நீயும் பட்டென பதில் சொன்னாய் என்னைச் சட்டென வெட்டி விட்டாய் சட்டென தேறிவிட்டேன் வெளியில் சிரித்தவாறு ஆனால் உள்ளம் இன்னும் வலியில் அழுதவாறு வெள்ளமென உவகை தோன்றுதடி உன்னோடு இருக்கும்போது! இதற்குப் பெயர் காதலென்று அர்த்தம் செய்தேன்! கடைசிவரை குற்றம் செய்தேன்! உன் கனவுக் கட்டிட வாசலில் கூட நிற்கத் தகுதியிருக்குமா எனக்கு? நீ நுழைவுத் தேர்வு நடத்தவில்லையே சிநேகிதி... ஆனாலு…
-
- 12 replies
- 2.5k views
-
-
பச்சோந்தி கைஃபி ஆஜ்மி ஒரே கழுத்தில் எண்ணற்ற முகங்கள் ஒவ்வொரு முகத்திலும் ஆயிரமாயிரம் தழும்புகள் ஒவ்வொரு தழும்பும் மூடிய கதவுகளாய் அதனின்று வெளிச்சம் வராது அதனின்று வெளிச்சம் போகாது எந்தக் கருப்பை பெற்றெடுத்ததோ இதனை எந்த வீட்டில் வளர்ந்ததோ இது எந்த வீட்டில் திரிந்தோ இது எல்லா மொழியையும் பேசுகிறது ஜன்னலைப் போல் திறக்கிறது காயங்களை இதயத்திடம் சொல்கிறது கதையை உனது மதம்; உனது உன்னத கடவுள் உனது பண்பாட்டின் அடையாளத்தை இவையனைத்தையும் அபாயம் சூழ்ந்துள்ளது இவற்றை பின்தொடர்கிறது பேரிருள் உறைந்து போகிறதென் குருதி முடிக்கொள்கிறதென் திறந்த விழி உலகின் அனைவருமென் எதிரிகள் இப்படியே உணர்கிறேன் தோழர்களாக எவருமில்லை என்னை உயிருடன் வி…
-
- 3 replies
- 1.5k views
-
-
'' குண்டுகள் வெடிக்க வேண்டும்..'' எங்களின் மண்ணிலே ஏறியே வந்து உன் பிள்ளை அனுப்பியே ஊரதை அழித்தாய்... எம்மினம் அழிகையில் ஏனென்று கேட்கல இன்றேன் தாயே வெம்பியே அழுகிறாய்...?? நாளுமே..நாளுமே நரபலி எடுத்தாய் எம் தமிழ் வாழ்விலே இன்னலை அழித்தாய்.. கூடியே வாழ்ந்தவர் கூடதை சிதைத்தாய் எத்தனை அவலத்தை எமக்கன்று திணித்தாய்... இத்தனை மறந்தேன் இன்று நீ அழுதாய்...?? நின்மதி தொலைத்து நித்தமும் அழுதோம்... அத்தனை ரணமும் அனுபவி வேண்டும் உன் உடல் யாவுமே கிழியவே வேண்டும்... அங்க மிழந்து- நீ அலறவே வேண்டும் அது கண்டு அயலவர் கலங்கிட வேண்டும்... பஞ்சம் வந்துன்னை பற்றிட வேண்டும் உணவின்றி நோயினால்- நீ இறந்திட வே…
-
- 6 replies
- 1.6k views
-
-
இளகுமா அந்த கல் நெஞ்சு? சுதந்திரமாய் திரிந்த எனக்கு எங்கிருந்து தான் வந்ததோ இந்த காதல்! உன்னை பார்த்தவுடன் வரவில்லை நிச்சயமாக பழகிய பின்பே வந்தது வயது தான் நமக்கு பிரச்சனையோ? அன்புக்கு வயது ஏது தடை - இல்லை உன் அன்னை தான் நமக்கு எதிரியோ? அன்னையிடம் என்னை பற்றி சொல்லவில்லையா அன்பே! உன் கொள்கை தான் முட்டுக்கட்டையோ? நாம் உருவக்கியது தானே இந்த கொள்கை - விட்டு விடு இல்லை இந்த சமூகம் தான் உன் கவலையோ? - வா நாம் வேறோர் உலகத்துக்கு போவோம் அன்புக்கு இலக்கனமாய் இருந்தாய் நட்புக்கு உதாரணமாய் இருந்தாய் தொழிழுக்கு நாணயமாய் இருந்தாய் காதலுக்கு மட்டும் ஏன் எதிரியானாய்? உன்னை காதலித்ததுக்கு பதிலாக மரணத்தை காதலித்திருக்கலாம் அது நம்பிக்…
-
- 20 replies
- 4k views
-
-
இணைந்தோம்! உலகத் தமிழராய் நாங்கள் இணைந்தோம்! நினைத்தோம்! எங்கள் தமிழ் உயிர் உயிரென நினைத்தோம்! (இணைந்தோம்) தமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும் தாங்கினோம் இன்பம் தாங்கினோம்! அமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ் அன்பினால் உலகை வாங்கினோம்! (இணைந்தோம்) சிரித்த தமிழ் முகம் நிலைத்த வையகம் செய்வோம் என ஆணை ஏந்தினோம்! விரித்த சிறகோடும் தழைத்த புகழோடும் விடுதலை வானில் நீந்தினோம்! (இணைந்தோம்) மானமே வாழ்வாய் நின்றோம் மலைகளை மோதி வென்றோம்! இயற்றியவர்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
-
- 1 reply
- 955 views
-
-
எத்தனை அழகாய் சிரித்துவிட்டுப் போகின்றாய் நீ... இங்கே ஒருவன் சிறைப்பட்டதை அறியாமல்....! உந்தன் நினைவுச் சிலந்தியில் சிக்கிய என்னைக் கொஞ்சம் விடுவி... இரவுகளோடு நான் படும் அவஸ்தை போதும்! சிரிப்பில் கூட போதை இருப்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது! "களுக்" என நீ சிரிக்கின்றபோது மனசுக்குள் எங்கோ உளுக்கிக் கொள்கிறது! புன்னகை கூட இத்தனை அற்புதமாய் இருக்கும் என்று நான் அறிந்ததில்லை மயில்பீலியாற் மனதை வருடுகின்ற மகா சுகம் "ரெடிமேட்" சிரிப்பை உதடுகளில் ஒட்டவைத்துக் கொள்பவர்களும் உண்டு அதற்கு ஒரு சாமர்த்தியம் வேண்டும் நீ, எல்லாம் கடந்து புன்னகையால் உதடுகளில் புதுக்கவிதை எழுதுபவள்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை நாடு திரும்ப முடியலை மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை நாடு திரும்ப முடியலை சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது தாய்கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் தாயாகும் முன்னேயிளம் பிஞ்சுகளை அழிக்கிறான் தாய்கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் தாயா…
-
- 1 reply
- 1.7k views
-
-
சிவனெனும் பெருமான் ஓர்நாள் நகர்வலம் போனார். நடந்து நடந்தே ஊர்உலாப் போனார். தாகம் மேலிட தாகம் மேலிட "தண்ணீர்" "தண்ணீர்" சைகையில் கேட்டார். பெருமான் என்பதை ஊரறிந்தது. பஜனைகள் செய்து பக்தி கொடுத்தது. நாவுலர்ந்து போகப் போக பெருமான் "தண்ணீர்" "தண்ணீர்" நடனம் செய்தார். பக்தி மிகுந்து பக்தி மிகுந்து காணிக்கை அள்ளி ஊர் கொடுத்தது. பொன்னும் மண்ணும் பொருளுமென்று பெருமான் காலில் ஊர் குவித்தது. தாகம் மேலிட தாகம் மேலிட முடியாப்பெருமான் முடிவாய்ச் சொன்னார்... கடவுள் என்றே ஆனபோதும் முதலில் கொடுங்கள் தாகம்தீர குவளையில் தண்ணீர். - தயா ஜிப்ரான் - 03.04…
-
- 7 replies
- 1.4k views
-
-
கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை வையமெல்லாம் பகைவர் நமை மோதும் வேளை-உன் கையிரண்டும் களத்தில் ஏந்தாதா வாளை கையிரண்டும் களத்தில் ஏந்தாதா வாளை கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை ஆட்சி இழந்தாய் திசைதோறும் அலைந்தாய்-வெறும் காட்சிப் பொருளாகி உயிர்வாழ்ந்து தொலைந்தாய் காட்சிப் பொருளாகி உயிர்வாழ்ந்து தொலைந்தாய் கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை என்னடா உனக்கு என்றென்றும் உதையா-உன் முன்னவன் இமையம் வென்றானே கதையா முன்னவன் இமையம் வென்றானே கதையா கைதட்டத்தானா உன் கை-தமிழா கைதட்டத்தானா உன் கை கொடுமை மறந்தா உன் கையோசை வெடிப்பு-அட அடிமை உன் வாழ்வில்…
-
- 7 replies
- 1.3k views
-
-
பட்டென்று நினைத்தே பதறியே போனேன் தொட்டது பட்டறை இரும்பென்ற போது..! அணைக்க நினைத்தே எரிந்தே போனேன் அணைத்தது கொடுந் தீப்பந்தென்ற போது..! கவ்வ நினைத்தே மரணித்துப் போனேன் கடித்தது சயனைட் இதழென்ற போது..! மேகமென்று நினைத்தே சிறைபட்டுப் போனேன் சிக்கியது கூந்தலில் என்ற போது..! இசையென்று நினைத்தே செவிப்பறை இழந்தேன் பேசியது பெண் குரல் என்ற போது..! கலையென்றே நினைத்தே பாடம் படிக்கப் போனேன் படித்தேன் கன்னியவள் கலையெடுத்தாடிய போது..! பஞ்சணை என்று நினைத்தே நிலையிழந்து போனேன் உணர்விழந்தேன் படுக்கையில் அவள் என்ற போது..! வசந்தம் என்று நினைத்தே விவாகத்துள் போனேன் விக்கித்தேன் "வீணாப்போனவனே" என்ற போது..! …
-
- 7 replies
- 1.5k views
-
-
களத்தில் போராட்டம் கையிலே ஆயுதங்கள் புலத்தில் போராட்டம் கையில் உயிருடன் – பெயர்ந்த புலத்தில் போராட்டம் எதில் என்று தேடுகிறேன் எது எது என்று வரைந்து விட்டுப் பார்க்கிறேன் மாமனிதன் ஜெயக்குமார் உருதான் வரைந்துள்ளேன். மாமனிதர் பலர் கண்டோம் - மறைந்தபின் மாமலையாய் எழுந்ததைக் கண்டோம் மறையாது இருப்பதைக் கண்டோம் - எம் உயிரோடு கலந்ததைக் கண்டோம் அரசியலைத் தொழிலாகக் கொண்டவர் பலர் தலைவருக்கு வாழுமிடம் சமைத்தவர் சிலர் சட்ட நுணுக்கங்கள் கொடுத்தவர் சிலர் அம்மாமனிதர் பலருள்ளே தனித்தவர் இவர் ஊரைவிட்டு வேரோடு வந்தவரெல்லாம் ஊதியம் தரும் உழைப்புடனே மகிழ்ந்திடுவர் மண்ணிண் மணத்தின் சுகத்தில் மிதப்போரோ செய்தியைத் தேடி வெறு…
-
- 4 replies
- 1.4k views
-
-
இடமொன்று தருவாயா? ஈர்பத்து ஆண்டுகளாய் இடறாத என்மனதை அசைத்தவளே அகிலத்தை அழகாக்க வந்தவளே வாசமில்லா மலராகி வாடி நிலம்தொட்டு கசங்கிக் கிடந்தவனை கவர்ந்திழுத்த காரிகையே கானல் நீரென்று கனவெல்லாம் களைந்தகற்றிக் கடிமனதைத் திடப்படுத்தும் காலம்வரை காத்தனையோ ஆண்டைந்து பொறுத்(து)அன்னை அகிலத்தில் போட்டிருந்தால் துணையாக வாவென்று துணிவோடு கேட்டிருப்பேன் விதிவந்து விளையாடி விரிசல்கள் செய்யாமல் கற்றவனாய் இருந்திருந்தால் கன்னியுனைக் கேட்டிருப்பேன் எட்டாத கொப்பென்று என்மனது சொன்னாலும் என்னவளே உன்நினைவை எடுத்தெறிய முடியலையே அன்பென்ற வார்த்தைக்கு அழகூட்ட வந்தவளே - உன் இதயத்தில் உட்கார இடமொன்று தருவாயா?
-
- 10 replies
- 1.7k views
-
-
இராமயணத்திற்கு அபிநயம் பிடித்தாடும் புலத்தமிழா ஈழத்தின்னலுக்கு எப்பொழுது அபிநயம் பிடிதாட போகிறாய்? மகாபாரத போருக்கு அபிநயம் பிடித்தாடும் புலத்தமிழா மாவீரர்களின் சாதனைகளை சரித்திரங்களையும் எப்போது அபிநயம் பிடிதாடுவாய்? சீதையின் கற்பு பற்றி விவாதிக்கும் புலத்தமிழா சிதைக்கபட்ட எம் பெண்களுக்காக எப்போ வாதாடபோகிறாய்? கற்பனைக்கதையில்லை எம்மவர் கதை கண்ணேதிரே நடலக்கும் உண்மை கதை புலதமிழா அபிநயம் பிடித்தாடு எம்மவர் கதையும்
-
- 7 replies
- 1.5k views
-
-
-
உன்னுடைய முத்தங்கள் என் முகத்தில் கறுப்பாக உன் ஒளியில் நானும் என் நிழலில் நீயும் என் மூச்சுக்காற்று-உனை அணைக்கத்தூண்டியது கண்களின் காமத்துக்கு நீயும் ஒளியானாய்-அன்று என் ஆற்றல்களுக்கு தீணி போட்டாய் குப்பிவிளக்கே நன்றியடி.....
-
- 7 replies
- 1.5k views
-
-
நண்பா ஒரு நிமிடம்.... சட்டென திரும்பாதே வெட்டி விட வார்த்தைகளை தேடாதே இன்று மட்டும் தோல்வி உனக்கே........ குழப்பத்தில் ஆரம்பித்த நட்பினை.. நேசமாய் நீ மாற்றினாய்.. இல்லை மறைத்தாய்.... இந்த உறவிற்கு என்ன பெயர் வைத்தாயோ அறிந்ததில்லை நான், என்ன நினைத்திருந்தாயோ அதுவும் உணர்ந்ததில்லை... இப்போது உன் வார்த்தைகள் தெளிவுமில்லை..புரியவுமில்லை ஆனால் எங்கோ உனக்கு வலிப்பது புரிகின்றது! எனக்கும் தான்! நாடியில் கை வைத்து அமைதியாய் வாசித்த நீ நிமிர்ந்து உட்காருவாயே இப்போது... ஞாபகங்கள் மீட்கும் பழக்கம் உனக்கு இருக்கின்றதா? இல்லாவிடினும் எனக்காக ஒரு முறை... முயன்று பார் நண்பா! அர்த்தமறியாதது போல் உன…
-
- 7 replies
- 1.6k views
-
-
விட்டகுறை தொட்ட குறை..... நாடும் சொந்தமாயில்லை.. நாமும் நாமாயில்லை....... எங்கோ பிறந்தோம் எங்கோ வாழ்கிறோம்...... உடையாதா மனசு? ஈசல் இறப்பிற்கும் எல்லை .... இருக்குமாம் சொல்வார்........ ஈழத்தமிழன் எமக்கு??? நாடிழந்த பறவைக்கெலாம்.... ஒரு கூடு தந்தீர். சுய நலத்தில் ... பொது நலம் காணுமாம் உலகம்... மாறாய் உம் பொது நலத்தில்... நாம் சுய நலம் கொண்டோம்! எம் முகத்தை நாமறிய... எம் அறிவை நாம் அறிய...! விழுதுவிட்ட ஆலமரமே... குடை தந்தாய் ....! பழங்களை தின்றுவிட்டு ... எச்சம் போட்டாலும்... தாயென தாங்கி நிற்பாய்.... ஆதலால்.......... உம் உடலில்... ஓடி மகிழும் ஒரு அணிலாய்... என்றும் வாழ...... விரும்புகிறே…
-
- 3 replies
- 1.4k views
-
-
கங்காரு மண்ணில் ஒரு கடமை வீரன் விடுதலை நேசித்த வெள்ளைச் சிரிப்பு வீரத் தலைவனின் அன்பின் விரிப்பு இடர்களைச் சந்தித்தும் இயங்கிய நெருப்பு இழந்தோமே உங்களை எங்களில் தவிப்பு. நல்ல மனிதநேயம் தாங்கிய ஜீவன் வல்லமை உழைப்பினை வழங்கிய வடிவன் சொல்லிடும் முன்பே செய்திடும் தீரன் தில்லை ஜெயக்குமார் எங்களின் வீரன். அமைதியான தோற்றத்துள் அக்கினிக் குழம்பு அவுஸ்ரேலிய நாட்டிலே பணிசெய்த முனைப்பு இமைகள் மூடும்வரை ஈழத்தின் உழைப்பு ஏங்குது தமிழீழம் இன்றுமை நினைத்து. தாய்மண்ணின் விடிவிற்கு உங்களைத் தந்தீர் தமிழீழ நிலையினை உலகினில் சொன்னீர் வாய்கதறி அழுகின்றோம் ஏன் எமைப்பிரிந்தீர் வரலாற்றின் நெஞ்சினில் படமென்…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஹைக்கூ இதுவென நம்பி நான் எப்போதோ எழுதிய சில ஹைக்கூக்கள் (?!) -------------------------------------------------------------------------------------------- செருப்பு சகிப்புத் தன்மைக்கு சரியான சாட்சி ----------------------------- சீச்... சீ... வெட்கப்பட்டது குடை! உள்ளே காதலர்கள் ------------------------------- தீக்குச்சி தலைக்கவசம் இருந்தும் தான் தப்ப வழியில்லை! ------------------------------- கறுப்பு மேகத்தை கழுவ இயற்கைச் சேவகன் அள்ளித் தெளிக்கும் நீர் மழை! --------------------------------------- நன்றி -------------------- http://kaviyarankam.blogspot.com/
-
- 8 replies
- 9.1k views
-
-
நிலா முஸ்லீம் பெண்ணா? முகில் பர்தாவுக்குள் அடிக்கடி முகம் மறைக்கிறதே!
-
- 2 replies
- 1.1k views
-
-
மானுடத்தை நேசி உண்ண உணவின்றி உடுக்க உடையின்றிபடுக்கப் பாயின்றி தரிக்க நிழலின்றி சிதைந்த தேகமும் சிந்திய கண்ணீரும் கொண்டலையும் மானுடம் இரண்டு இலட்சத்தை தாண்டுதே தேனாட்டில்! துப்பாக்கி கலாசாரம் காறி உமிழ்ந்த எச்சிலின் காயங்கள் சிதைக்கின்றன இன்னும் எம்மவரின் தேகங்களையும் தடம் பதித்த எம் புனித தேசத்தையும்! காலனாம் பிணந்தின்னிக் கூட்டங்கள் சொந்த இலாபத்துக்காய் கந்தகக் குழாய் ஏந்தியதால் அப்பாவி ஜீவன்கள் அலைகின்றன தெருக்களில்! மௌனித்த உதடுகள் மீண்டும் திறக்க ஜனித்த சிசுக்கள் உரம்பெற சிவந்த எம்மண் சிலிர்க்க தமிழர் உரம்பெறு நாள்தான் எப்போ! துப்பாக்கி வேட்டும் குண்டுத் தாக்குதலும் தமிழர்களின் பசிக்கான தீனியா அழித்தது போதும் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடலால் பிரிந்த தேசத்திலிருந்து - கண்ணீரின் பெயரால் சிதறினோம்........... கடலால் பிரிந்த கண்டத்துள்ளிருந்து........ ....... முடிந்ததெல்லாம் - முடித்துவிட்டு........... முடிந்தது கடமையென்றே ........... முற்றாய் விழி மூடினீரோ? காரிருள் .......... படகுப் பயணம்.............. கஸ்டப்பட்டு கரை நெருங்க துடுப்பு வலித்தோம்- கிட்ட வருகையில்......... துறைமுகமாய் - இருந்த நீர் ........ தொலைந்துபோனது - ஏன் தானோ? உம்மை அறிந்ததில்லை ......... உம் குரல் கேட்டதில்லை........ சுவாசமாய் - ஏதோ ஓரிடத்தில்............ எமக்காய் இருந்தீர்! அப்போ நன்றி சொன்னதில்லை ..... இப்போ சொல்கிறோம்.............! காற்றுக்கு உடனே நன்றி சொல்லி .…
-
- 5 replies
- 1.3k views
-
-
யாழ் இணையம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைப்பதையொட்டிய சிறப்பு நிகழ்வு! ***யாழ் கள கவிஞர்கள் வழங்கும் கவியரங்கு 01*** தலைப்பு: "தூ!" வெனத் துரோகிகளின் தலையில் காறித் துப்பிவிடு! கவியரங்கின் நடுவர்கள் விகடகவி நோர்வேஜியன் வன்னிமைந்தன் குறிப்பு1: யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும். ஆனால், மற்றைய யாழ் கள உறவுகளை தாக்காத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கவிதைகளை பாடவும்! குறிப்பு2: கவியரங்கின் நடுவர்களிற்கு கவியரங்கில் இருந்து ஏதாவது பொருத்தமற்ற கவிதைகளை அல்லது கருத்துக்களை அகற்றுவதற்கு அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கு முழு உரிமையும் உண்டு! குறிப்பு3: கவியரங்கம் நிறைவு: மார்ச் 30, 2007 மாண…
-
- 29 replies
- 4.4k views
-