கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வேதனையின் ஈரம்... தினசரி இப்படித்தான் அழிக்க நினைக்கின்ற உன் நினைவுகள்-என் மனத்தோட்டத்தில் செழித்து கிளைபரப்ப விழியின் ஓரம் வரை வியாபிட்த்து நிக்கிறது வேதனையின் ஈரம்!
-
- 5 replies
- 1.6k views
-
-
வாழ்க்கை என்பது பாசக்கயிறு வாழ்க்கையின் முடிவில் எமனின்கயிறு கோழையே உனக்கு ஏன் இந்தக்கயிறு?
-
- 7 replies
- 1.8k views
-
-
குருவிகளுக்கு கிடைத்த ஒரு தென்னிந்திய திரை இசை மெட்டில் அமைந்த றீமிக்ஸ் வடிவில் வெளிவந்த தாயகப்பாடல் ஒன்றை குருவிகளின் ஒலிப் பெட்டகத்தில் இருந்து கேட்டு மகிழுங்கள்..! இணைப்புக் குறித்த உங்கள் அபிப்பிராயங்களையும் எழுதுங்கள்...! பொப் அப் புளக்கர் உள்ளவர்கள் அதை தற்காலிகமாக நீக்கிக் கேளுங்கள்..! http://www.jukeboxalive.com/player/player....967&method=play
-
- 2 replies
- 1.1k views
-
-
ஒரு நிமிடம் தனித் தனி.... என்னன்பே.. நீயெங்கே.. ஒரு நிமிடம் தனித் தனி.... என்னன்பே.. நீயெங்கே.. அலைகளிலே வலி வலி என்னுயிரே ... நீயெங்கே.. சின்ன அலைகள் கண்டே ஓடிடும் உன் கொலுசுப் பாதமே.. பேரலைகள் வந்தே மூடிய என்னழகே நீயெங்கே.... இந்தக் கடலன்னை -என் தாயென தினம் மணல்மடி து}ங்குவாய்..... அந்த அலைகளில் வரும் நுரை கண்டு - பால் பொங்குதே ஏங்குவாய்...... அள்ளித் தந்த கைகளே.. இன்று அன்பைக் கொல்வதா.... சீற்றம் கொண்டு சீறியே.. - எம் செல்வம் பறிப்பதா.... ஐயோ... நம் விடியலின்னும் து}ரமில்லை -என்ற காதலியை இன்று காணவில்லை ஒரு நிமிடம் தனித் தனி.... என்னன்பே.. நீயெங்கே..
-
- 11 replies
- 1.8k views
-
-
உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள். http://www.kaasi.info/pages/kavithai.htm
-
- 11 replies
- 13.7k views
-
-
இலைகளைந்து மரங்களெல்லாம் நிர்வாணமாகும். வெட்கத்தில் பனித்துளிகள் ஆடைநெய்து போர்க்கும். வெண்பனிகள் ஊர்முகட்டில் சித்திரங்கள் கீறும். சிற்றோடை தானிறுகி சிற்பமெனவாகும். வெள்ளாடை புூண்டதனால் - ஊர் தேவதை போலாகும். அழகழகு இதுவென்றே மனம் சொல்லியாடும். வானுக்கும் மண்ணுக்கும் ஊடல் இது போலும். ஊடலினால் கதிரவனின் முகமழிந்த தாகும். கதிரவனின் முகம் நினைத்து முகிலினங்கள் உருகும். உருகிவிடும் கண்ணீரே பனித்துளியாய் வீழும். மண் வீழ்ந்த பனித்துளியில் மனமுருகிப் போகும். அழகருந்தி மனமுருக உடல் நடுங்கலாகும். உடல் நடுங்க, திடம் ஒடுங்க வாழ்வு வெறுப்பாகும். வாழ்வு வெறுப்பாக - மனம் முகவரியைத் தேடும். வாழ்வு வெறுப்பாக - மனம் …
-
- 3 replies
- 1.3k views
-
-
கூந்தல் நீளம் கொண்டமங்கை - என்னை கா(த்)தல் செய்ய வைத்தாள். காத்து காத்து நின்ற எந்தன் காலம் திருடிக் கொண்டாள் . தொலைவில் இல்லை வானம் என்றே தூரம் நடக்க வைத்தாள். தூரம் நடந்து முடித்த பின்னால் - துன்பப் பாரம் சுமக்க வைத்தாள் . வாழும் வாழ்வில் இனிமையேது வாதம் முடியவில்லை . வாதம் முடிவை அடையும்போது வாழ்வு இருப்பதில்லை. கனவில் தோன்றும் முகங்கள் பழைய நினைவை எனக்குள் தேடும். எனக்குள் தோன்றும் நினைவி லென்ன சுவைகள் இருக்கக் கூடும். பாலை நிலத்து நீரிலெங்கே பாசி முளைக்கக் கூடும். - நான் பார்த்த பெண்ணின் மனதிலென்று பாசம் தோன்றக் கூடும். பள்ளி வாழ்வில் நடந்ததெல்லாம் பழைய கதைகள் ஆச்சு. புதிய வாழ்வை தேட நானும் பாதை தேடல் ஆச…
-
- 2 replies
- 1.2k views
-
-
கட்டோடுவந்த கார்குழலாள் தளிர் நடையில் நெஞ்சம் பட்டோடுகின்றதுவே ! இதை எப்பாடு பட்டும் மட்டோடு வைக்க - மனம் விட்டோடுகின்றதுவே . முக்காலம் உணர்ந்த முனிவனவன் மனதுக்கும் மாறாது இந்தக் குறை. சித்தர் பாட்டுக்கும் முன்னாலே வந்தாச்சு அன்றே மாறாத துன்பக் கதை. தடை தட்டாத முகிலும் மண்ணை எட்டாதே மழையாய் துன்பம் பட்டாகவேண்டும் மனம். காதல் கிட்டாத நிலையில், முட்டாத வரையில், வீணாகும் வாழ்வு தினம். பருவச் சிட்டோடு வாழ கிட்டாதோ அந்த எட்டாத வானவெளி ? இனி .. வற்றாது ஊறும் முற்றாகும் வரையில் திகட்டாத காதல்க் கவி. ----------------------------------------------------- 1997 காலப்பகுதி நடுநிசி ஒன்றில்,சந்தத்தை மட்டுமே…
-
- 1 reply
- 797 views
-
-
கனவிலே வந்தாய் பெண்ணே கனடாவில் நலமா நீதான் கண்மணி என்றே சொன்னேன் கண்களை கொள்ளை கொண்டாய். நெஞ்சத்தை காண வில்லை திருடிநீ என்ன செய்தாய்? வஞ்சத்தை விட்டுச் சொல்லு- என் வஞ்சத்தை விட்டுச் சொல்லு பஞ்சமாம் ஊரி லெல்லாம் - உன் நாணத்துக் கில்லை யாமோ? வெஞ்சமர் ஆடி யுன்னை சிறைமீட்க ராமன் நானோ? பொய்யடி உலக மெல்லாம் - உன் மெய்நெஞ்சை திறந்து காட்டு! அங்கும்நான் இல்லை யென்றால் மெய்யெந்தன், மெய்யைக் கொல்வேன். கவிதைக்கா காத லித்தேன் ?-என் கண்ணுறு நீதான் பெண்ணே! கவிஞனும் உண்மை சொல்வான் காதலீ! நம்பு வாயா? வாழ்வது நீண்ட தில்லை. - வா வாழ்வைச் சுவைத்துப் பார்ப்போம். வருகின்ற தலைமுறைக் கெங்கள் வாழ்வினில் ஏணி வைப்போம்.. கல்நெஞ்ச…
-
- 2 replies
- 875 views
-
-
என் நிலை... ஆயிரம் கனவுகள் என்னுள் ஆயிரம் ஆசைகள் என்னுள் ஆயிரம் எதிர்பார்ப்புகள் என்னுள் ஆயிரம் வேதனைகள் இவைகளால் கனவுகள் பல கண்டேன் என்னவனை அடைவதற்கு கனவுகள் நிஜங்களாகமலே போய்விட்டன...கனவாகவே என்னவனுடன் வாழ ஆசை அதுவும் நிராசையாகவே போய்விட்டது....ஆசைகள் என்னவனுடனான எதிர்காலம் பற்றி எதிர்பார்ப்புகள் வைத்திருந்தேன் அவையும்...எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தருமாயின் அந்த ஏமாற்றத்தை எதிர்பார்க்க கூடாது என்று அவையும் ஏமாற்றங்களாகின இவை அனைத்துக்கும் பதிலாக என்னவன் எனக்கு வேதனை துன்பம்....தூக்கமின்மை... உண்விருந்தும் உண்ணா நிலை இப்படி பலதை பரிசாக தந்து சென்று விட்டான் பல தூரம்...
-
- 4 replies
- 1.2k views
-
-
நெஞ்சிலாடும் பாடல் வரிகள் தங்கமேனி நொந்து ஈழத்தாயழுகின்றாள்.... எந்தன் தலைவனிந்த நிலையைக் கண்டு தானுருகின்றான்.. --------------------------------------------------------------------------------------------- சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா... தமிழ்த்தேசம் எங்கும் பறக்க உனக்கத் தடைகளா... ----------------------------------------------------------------------------- துரோகிகளுக்காக..... தம்பிமாரைக் கொன்றவருக்கு வாழ்த்துப்பாடினாய்-உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சுூடினாய்... நம்பி நின்ற எங்களுக்கு நஞ்சை ஊட்டினாய் நீதியற்ற பகைவரோடு கூட்டம் கூடினாய் அவன் நீட்டுகின்ற பதவியேற்று ஆட்டமாடுறாய். -------------------…
-
- 1 reply
- 1.4k views
-
-
முரண் இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை ~நாயே!பன்றியே!குரங்கே!
-
- 42 replies
- 10.2k views
-
-
-
ஏழையாய்ப் போனேனே.... கோமேதகக் கண்ணிரண்டும் கோடி பெறும் கட்டிவைத்த முத்துக்களாய்.. பற்கள் மின்னும்.. தங்கநிற மேனியோ... கண்கள் கூசும் தாமரை அவள் வார்த்தை.. சங்கீதமாகும் எல்லாமும்.. என் சொத்தே எண்ணி வாழ்ந்தேன்... பொல்லாத செல்க் காலானால் ஏழையானேன்.
-
- 1 reply
- 853 views
-
-
சித்திரமே சித்திரமே சிந்தையை மயக்கும் இந்தக்காதல் கலையை உனக்கும் சொல்லி தந்த கலைஞன் யாரோ?
-
- 7 replies
- 1.5k views
-
-
சின்னச் சின்ன பொன்மணிகள் செல்லச் செல்லக் கண்மணிகள் கனவுகள் சுமந்த வெண்புறாக்கள் இரத்ததில் ஊறைந்தன செல்வங்கள் மலரத்துடித்த இளம் மொட்டுகள் தரணியிலே அநாதைக் குஞ்சுகள் அன்புக்கு ஏங்கிய ஜீவன்கள் இப்படி உறங்கி இருப்பதைப்பாருங்கள் புத்தனின் போதனையும் இதுதானோ? இயலாதவன் வேலை சரிதானோ? உலகத்தின் பார்வைகுருடு தானோ? தமிழனுக்கு சாபம் இது ஏனோ? செஞ்சோலைக் தோட்டத்தில் மலந்தார்கள் உதவும் கரங்களில் தவழ்ந்தார்கள் மக்களுக்கு உதவ ஒன்று கூடினார்கள் இரும்புக் கழுகுக்கு இறையாகினார்கள் இறைவனே இல்லையோ இதைப்பாருங்கள் தமிழிழ்த்தாயும் தாங்குவாளா சொல்லுங்கள் இரத்தமே கொதிக்குது உறுதிகொள்ளுங்கள் இதற்குபாவிகள் விரைவில் பாடம் கற்பார்கள்
-
- 5 replies
- 1.4k views
-
-
காதல் சொல்ல முன்.... கனவுக்கும்....நிஜத்திற்கும்...... கடிவாளம் நானிட்டேன். புூவுக்கும்... காற்றுக்கும்..... வேலி நான் போட்டேன். முகிலையும்... பனியையும்... சிறையிலேதானிட்டேன். முட்டாள்..நான்... வாய் விட்ட ஒரு சொல்லலே... கண்ணே உன் நட்பையும் இழந்துவிட்டேன்.
-
- 8 replies
- 1.7k views
-
-
நண்பர்களே நான்தேடும் பாடல் உங்களிடம் இருக்கிறதா அல்லது எங்கு தரவறக்கம் செய்யலாம். இன்று என்னிடம் ஒரு நண்பர் பாடல்கள் சிலவற்றை போட்டு காட்டினார் அவையனைத்தும் தமிழில் பிரசித்தி பெற்ற சினிமா பாடல்களின் உல்டா மிகவும் நகைச்சுவையாக இருந்தன நாதம்.கொம்மில் தரவிறக்கம் செய்ததாக கூறினார் ஆனால் இப்பாடல்கள் தற்போது அங்கு காணமுடியவில்லை உங்களில்யாருக்காவது தெரியுமா சுறுளியின் குரலில் கேட்கவே மிக நகைச்சுவையாகவிருக்ம்.
-
- 0 replies
- 863 views
-
-
பேய்களுக்குண்டு மனிதாபிமானம் அடிக்கும் கொல்லாது நாய்களுக்குண்டு மனிதாபிமானம் கடிக்கும் கொல்லாது :?: மனிதர்களாம் இவர்கள் :?: மனிதர்களுக்கு உதவ சென்றீர் மணி பொழுதில் உருகி போனீர் பூக்கள்,மொட்டுகள்,காய்,கனி புலிகளெனின், புலிசேனை இவர்களுக்கு :?: பூக்கள் அறுபத்தொன்றும் கருகின புலிகளேன முத்திரை இட்டனர் புண்ணகைத்து சர்வதேசம் அறிக்கையும் விட்டனர் :cry: அரச பயங்கரவாதம் அங்கீகரித்த பயங்கரவாதம் என்றனர் தலைநகரம் விடயம் பெரிதானது முல்லைநகர் விடயம் சிறிதானது :shock: களத்தில் இருக்க பயந்து புலத்திற்கு ஒடி வந்து உங்களுக்காக கண்ணீர் விட என் மணம் கூசுகிறது. :x நாலுபேர் கதைப்பார் நாற்பது பேர் கூடுவோம் சில கண்ணீர் த…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஈழமண்ணே! என்தாயே!! வேற்றுவர் வந்துன்னில் வெந்தணலைக் கொட்டி வேதனை செய்வதெல்லாம்........ விளங்காத பொருளாக வேடிக்கை பார்ப்பதிலும்.... விடமுண்டு மாள்வதே என் விதிக்கு நன்று.
-
- 4 replies
- 1.5k views
-
-
மலருடன் காத்திருந்தான்.... மருத்துவப் பயிற்சியென்றால்... மாலையில் காண்போமென்றாள்.... மலருடன் காத்திருந்தான்.... அவன் கனவுக்காக கண்மூடினான்.. அவள் காடையரால் கண் மூடினாள்... இவர்கள் காதல் காலத்தால்.... விழித்திருக்கும்... காலமெல்லாம் விழித்திருக்கும்....
-
- 5 replies
- 1.6k views
-
-
பாடியவர்: 'தேனிசை" செல்லப்பா இசைத்தட்டு: காலம் எதிர்பார்த்த காலம் பாடலை கேட்க :arrow: சிங்களவன் குண்டுவீச்சிலே சிட்டுக் குருவிக்கூட்டில் மூச்சுப்பேச்சில்லை.. சிங்களவன் குண்டு வீச்சிலே சிட்டுக் குருவிக்கூட்டில் மூச்சுப்பேச்சில்ல.. எங்கள் காட்டில் ஒரு குருவி - அதன் கூட்டில் கண்ணீர் அருவி (2) (சிங்களவன் குண்டு வீச்சிலே) குச்சிகளும் சிறகுகளும் கொண்டு செய்த கூடு குருவிக்கல்லோ தெரியும் அதை கட்டப்பட்ட பாடு.. நாலுபக்கம் எரியுதம்மா நெருப்பு நெருப்பின் நடுவில் அல்லோ குருவிகளின் இருப்பு! (சிங்களவன் குண்டு வீச்சிலே) இன்னும் குஞ்சு பொரிக்கவில்லை இரண்டு மூன்று முட்டை.. இறக்கை கொட்டி ஏங்கி ஏங்கி துடிக்குது பார் பெட்டை..!…
-
- 6 replies
- 2.7k views
-
-
பூக்களும் உம் கண்ணுக்கு புலிகள் ஆகினவோ எங்கள் மலர்களின் முக்கத்தைப் பாருமையா பெற்றோரை இழந்தனர் உற்றோரை இழந்தனர் அணைக்க கரங்கள் இன்றி அலையா அலைந்தனர் அலைந்த உள்ளங்களை அணைத்தது இச்சோலை அன்புக்கு ஏங்கிய உள்ளங்களை அன்புகாட்டிய இச்சோலை அழுத விழிகளை அழகுறச் செய்யது இச்சோலை அன்னையும் தந்தையுமாகி அமுது அளித்தது இச்சோலை துயரம் மறந்து சிட்டாய் பறந்தது இச்சிட்டுக்கள் அன்னையை பறித்தீர் தந்தையும் பறித்தீர் தப்பிய இக்குஞ்சுகளையும் பறித்துவிட்டீர் பூக்களும் உம் கண்ணுக்கு புலிகள் ஆகினவோ துளசி
-
- 8 replies
- 2k views
-
-
விமான தாக்குதலில் உயிர் நீத்த குழந்தை செல்வங்களுக்கு கொடிய காடையர்களே உங்களுக்கு என்ன வேண்டும் அப்பாவி சிறுவர்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்கள் பாவிகளே பாவிகளே கொஞ்சம் நில்லுங்கள் பாலர்கள் மனதை தான் கொஞ்சம் பாருங்கள் இன்று இறப்போம் என்றா சீருடையில் சென்றனர் உங்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றன அல்லாவா இதே நிலை உங்களுக்கு வராதென்ற திமிரா..... பொறுத்திருங்கள் மிருகங்களே உங்களுக்கும் அழிவுகள் நடக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை பாவம் பாலகர்கள் ஆயிரம் கனவோடு பள்ளி செல்ல பாவி நீ இந்த வேலை செய்தாய் உன்னையும் தாய் தானெ பெற்றெடுத்தாள் ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்று நினைப்பா நாயே உனக்கு சிங்களவன…
-
- 9 replies
- 2.1k views
-
-
ஈரவிழி உலர்த்தி இகப்பரப்பை உலுப்பு! பண்பட்டுப் பண்பட்டு புண்பட்டுச் சிதைகிறோமே... பார்த்தெவரும் விழி நனைத்து வேதனைகள் தீர்த்தாரா? மண்பட்டு மரணம் தரும் கந்தக அமிலங்களைக் காட்சிப் படுத்தி எவரேனும் கணக்கெடுத்துக் கொண்டாரா? தாயக புூமியிலே.. பேய் ஏவும் கூர்முனைகள் பிண ஓலம் வளர்க்கிறதே... தீ ஏறி உலவிட - எம் தேச முகம் கருகிறதே.. வாயாறச் சொல்லின்றி விம்மி அழும் குரல் கொண்டு வீணர்களின் வேட்டுக்களால் - எம்மினம் வீதியெங்கும் சாகிறதே.... கணப் பொழுதும் இடைவிடா வேதனையைச் சுமத்தி - எங்கள் இனத்துவாழ் குடிநிலங்கள் பறித்தெடுக்கப் படுகிறதே.. இனவாதக் கோரப் பேய் - எம் இன இரத்தம் பருகத் தினவெடுத்துத் தினவெடுத்துத் திருமலையில்…
-
- 2 replies
- 1.5k views
-