கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மாவிலாற்றுக்காக மரணித்த மாவீரர்களே மகிந்தா சிந்தனையை மழுங்கடித்தவர்களே மகிந்தபுர மந்திகளை மதிகெட்டு ஒடவைதீர்களெ மங்களசமரவீரவை ஒடவைத்தீர் மனமோகன் சிங்கிடம் மனிதாபிமானம் மதித்தான்_தமிழ் மக்கள் தலைவன் மதவு திறக்க அனுமதித்தான் மக்கள் நலன் கருதி மகாவம்சவாரிசுகளோ மதிக்கவில்லை மனிதபிமானத்தை,தம்மக்களையும் மக்கள் விடுதலை முன்னனியாம் மடையர்களுக்கு வேனுமாம் போர் மகிந்த சிந்தனை கவ்வியது மண் ஆனாலும் மண் படவில்லையாம் மீசையில் சமாதானத்துக்கான போர் அன்று சந்திரிகா மதவுக்கான போர் இன்று மகிந்தா பணத்துக்கான போர் நாளை யாருக்கோ -ஆனாலும் உரிமைக்கான போர் எமது வெற்றி நிச்சயம்...
-
- 6 replies
- 1.8k views
-
-
இன்றைய காலையின் விடியலின் வரவினை அறியவிக்க சேவல் கூவவில்லை..! களவாடிப் போனது யார்,,,,? விழித்துப் பார்த்தேன் வெளிச்சத்தையும் காணவில்லை..! போர்-மே(மோ)கம் சூழ்ந்ததால் எமது காலைச் சூரியனும் காணாமல் போய்விட்டான்...! இன்றைய பொழுதுகள் நற் பொழுதுகளின் விடியலுக்கான... தேடல்களாய்-நாளும் தொடர்கிறது..... நமது விடியல் விடிகிறது விடியாப் பொழுதுகளாய்...!
-
- 9 replies
- 1.9k views
-
-
சென்று வாருங்கள்! உமக்காய் எம்மிடம் எதுவும் இரந்ததில்லை........ வாசல் வந்து ஒளிதர.......... வைகறை கலைக்கும் சூரியன் ........ வரி கேட்குமா என்ன? காலம் ஒன்று எமக்காய் விழி திறக்க........... கந்தக அதிர்வில் .......... விழி மூடியவர்களே.... ஊரினைதான் பிரிந்து வந்தோம்... உணர்வினை தொலைத்து அல்ல.......... அலை ஓய்ந்ததென்று கனவாம் பலருக்கு....... அலை ஓய்வதுண்டா...? கடல் இருக்கும்வரை அலை காணாமல் போகுமா? கரிகாலன் படை - இருக்கும்வரை.. கூலிகள் கருத்து தமிழனை ஆளுமா? சாய்ந்துபோன விருட்சங்களே. உம் வேர்களை சுமந்தவர் வாழ . என்றுமே நீர் தருவோம். நிம்மதியாய் - உறங்கும்!! (மூதூரில் - எமக்காய் கனவுகாண- விழிமூடியவர்களிற்கு)
-
- 12 replies
- 2k views
-
-
அன்பே..... என்றும் என்னை மறக்கமாட்டேன் என்றாயே....அது பொய்யா? நான் உன்னை நினைக்கா விட்டாலும் நீ என்னை என்றும் நினைத்திருப்பேன் என்றாயே....அது பொய்யா? நான் உனக்கு மெயில் அனுப்பா விட்டாலும் நீ எனக்கு தொடர்ந்து மெயில் அனுப்புவேன் என்றாயே...... அது பொய்யா? நான் உன்னுடன் கதைக்கா விட்டாலும் நீ என்னுடன் எப்பவும் கதைப்பேன் என்றாயே.... அது பொய்யா? நான் என்ன சொன்னாலும் செய்வேன் என்றாயே ..... அது பொய்யா? உன் வாழ்க்கையில் எப்போதும் என் நட்பு வேண்டும் என்றாயே...அது பொய்யா? சொல்லு எனக்கு........... நான் உனக்கு எத்தனையோ முறை மெயில் அனுப்பியும் நீஎனக்கு மெயில் அனுப்பவில்லை ஏன்? நீ சொன்னதெல்லாம் பொய்யா? ஆனால் என்னால் உன்னைப்போல் எதையும…
-
- 7 replies
- 2.5k views
-
-
தத்துவங்கள் பல தந்தனர் தமிழ் தத்துவ ஞானிகள் தமிழர் நாம் மறந்தோம் தத்துவம் தனை மனதில் பதிக்க சித்திரமாக சுவர்களில் பதித்தோம் சிலையாக வடித்தோம் தெருக்களில் வைத்தோம் குருபூசை-மறந்தோம் வையத்துள் வாழ குரு கூறியவைகளை உலா வந்தோம் உலக மொழி தத்துவங்களில் உணர்தோம் தத்துவம் யாவும் ஒன்றன்று உபதேசங்களை கடை பிடிப்பது கடினமென்று உணர்ந்து மறைத்தோம்,தொலைத்தோம் எம்மை உபதேசித்தவர்களின் பெயர்களிலும் மன்றங்களிலும்
-
- 6 replies
- 1.5k views
-
-
உறவுகட்காய் சிலதுளிகள் மண்மீட்புப் பணியினிலே மாவீரர் ஆகிவிட்ட மாண்புகளை எமக்களித்த மகத்தான பெரியவர்க்காய் எம் மண்ணின் நினைவுடனே எங்கெங்கோ வாழ்ந்திருக்கும் எம்களத்து உறவிடத்தில் என்னுடைய விண்ணப்பம் http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=208806#208806
-
- 1 reply
- 1.1k views
-
-
பொறுமைகாத்த தமிழன் படை பொங்கி எழுந்தது தலைநகரில் வெறியர்படை தலைகள் தெறிக்குது மகிந்தாவின் சிந்தனையாம் மதிகெட்டு ஓடுது தலைவரின் சிந்தனையில் தமிழர்படை முன்னேறுது போர்என்று வந்தபடை போராயுதம் போட்டு ஓடுது கடலிலே கடற்புலிகள் கடல்வீரம் காட்டுது கடற்படை வெறியான் கடற்கலங்கள் வெடித்துசிதறுது தற்காப்புப் போரில் தமிழன்படை வென்றுகுவிக்குது ஓயாதலைகள்5 இல் வெறியர்படை ஓடுதுஅங்கே ஓடுதுவிரைந்து இந்தமீட்புப்போரில் தம் உயிர் ஈந்த இம் மாவிரருக்கு வீரவணக்கம்
-
- 14 replies
- 2.6k views
-
-
சுகம் எதுவோ? திங்கள் முகம் சிரிக்க திக்கெட்டும் ஒளி பொங்க தங்க மண் பரப்பில் தலை சாய்ந்தால் அது சுகமா? தென்றல் தாலாட்ட தென்னங் கீற்றிசைக்க தன்னந் தனியிருந்து தான் இரசித்தால் அது சுகமா? முல்லை முகையவிழ முசுரங்கள் தள்ளாட - அதன் எல்லையில் போயிருந்து எழில் பருகில் அது சுகமா? மெல்ல மினுக்கி - வான் மின்மினிகள் கண்சிமிட்ட காத்திருந்நு அவ்வனப்பில் கரைந்திடின் அது சுகமா? இன்னும் வளரும்....... சுகம் தேடும் ஆதிவாசி
-
- 35 replies
- 4.7k views
-
-
ஏங்கிய காலங்கள் போதும் கன்னம் சிவந்ததோர் காலம் - எழில் கவிகள் படித்ததோர் காலம். சின்ன வரையரைக்குள்ளே - உன் சிந்தை இழந்ததோர் காலம். வண்ணமயில் என்றும் கூறி.. வஞ்சிக் கொடியென்றும் கூறி... எண்ணம் எங்கும் மென்மை தூவி... -உந்தன் வன்மை அடக்குவர் தோழி! அங்கங்கள் அழகுதானடி -அதை அங்கங்கே போற்றுவர் தேடி.. உங்கருத்தைக் கேட்க யாரடி? - அடி உன்னதப்பெண்ணே! நீ கூறடி!! நுண்ணிடை என்றொரு கூட்டம் - உன்னைப் பண்ணிடை கற்பனை பாடும். மண்ணிடம் காட்டு உன் தாகம் - அதுவுன் பெண்ணுடல் நீத்தாலும் வாழும். கங்கை உனக்கென்ன தங்கையா? மங்கை உdக்கின்னும் மருட்சியா? உன்கையை வான் வரை உயர்த்தி -அதில் உலகை ஈர்க்கலாம் முயற்சி! மையல் காட்டும் கண்ணில் மயங்காத் தையலர் மேன்மையை உணர் நீ! உய்யல் வ…
-
- 13 replies
- 2k views
-
-
காதல் பெண்ணே -நீ இல்லை எனின் வானவில் கூட -என் கண்களுக்கு கறுப்பு வெள்ளைதான் :wink:
-
- 7 replies
- 1.6k views
-
-
வெறி பிடித்து திரியுது பார்... சிங்கள இனம்- இங்கே சொறி பிடித்து அலையுது பார்... சில தமிழரினம்! கொள்கை என்று குழு பிரிந்த குரங்குக் கூட்டம்-இப்ப கொப்புத் தாவி போனது பார்... கொள்கை வேஷம்! இருந்தாலும்.... மக்களுக்காய் மடிகின்ற மறவர் கூட்டம்! எதிரி வந்தால்தான்-பதில் அடி கொடுப்போம்.... என்குது பார்..! அன்று தொட்டு இன்றுவரை பேச்சு வார்த்தை இடை..இடையே.... எல்லைச் சண்டை....! எதிரி அழைப்பது.... இப்ப-போருக்கு இன்னும் நாம் சொல்லவில்லை இ....தோடா வாறம் என்று! இன்னும் எதற்காக வெயிற்ரிங்.... அடிக்கின்ற மணிக்கும்.. பாடுகின்ற குருவிக்கும்... செயலால காட்ட வேணும்.... இறுதி போரிங்கு …
-
- 14 replies
- 2.4k views
-
-
மன்னா மாமன்னா! நீ ஒரு மாமா மன்னா! பூமாரி தேன்மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ள மாறி அரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவுக்கி! தேடிவரும் வறியவர்க்கு மூடா! நெடுங்கதவு உன்கதவு என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு! எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு மண்ணோடு மண்ணாக்கு! இந்த அகிலத்தை அடைகாக்கும் அண்டங் காக்கையே!!! - இந்தக் கவிதை மாமன்னர் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியாரைப் போற்றி புலவர் பாலபத்ர ஓணாண்டி அவர்களால் பாடப்பட்டது....
-
- 4 replies
- 6k views
-
-
மாற்றுக்கருத்து! மண்ணுக்குள் மகனை புதைத்துவிட்டு........... மார்பிலடித்து அழுகிறாள் தாய்......... இவன் முன்னே போய் நின்று சொல்கிறான்.......... மகிந்த ராஜபக்சவும் - மனிசனே என்று! கட்டியணைத்து கொஞ்சிய - தன் மகளும் .......... தொலைந்தாள்.......... தங்கமே என்றழுதான் தகப்பன்.......... இவன் சிங்கத்தின் வால்பிடித்து சிரித்துக்கொண்டே - சொல்கிறான்.. தவறென்ன அதிலே.......... கதிர்காமரும் - தமிழனே எங்கிறான்! சேற்றுக்குள் கிடந்தாலும்................ சோற்றுக்காய்............ தாயின் சேலையை கூவிவிற்று . குடல் நிரப்பி கிடக்கிறான்! குருத்துக்கள் எரிந்து போச்சு. கொள்ளி போட............. மயானம் நோக்கி மனிதம் . பயணம் ஆச்சு . கொள்ளிசட்டியின் …
-
- 17 replies
- 3k views
-
-
வளர்ந்து விட்ட தென்னை வாடியது-தன் உடலைப்பார்த்து! தான் இழந்துவிட்ட ஓலைகள் எத்தனை... எண்ணிப் பார்த்தது வடுக்களை... கீழே வீழ்ந்து விட்ட ஓலையொன்று ஆறுதல் சொன்னது! வந்து போகும் சொந்தம் யாவும் நிலைப்பதில்லை எனது வீழ்ச்சியிலும் உனக்கு வளர்ச்சியுண்டு! இழப்பின் வடுவை-நீ பாராதே.... தவித்திருக்கும்-மானிடர்கு இளனீர் கொடு...! உன் பிறப்பின் நோக்கை அறிந்துவிடு... அதனால் வடுவை பாராதே வானை நோக்கி-இன்னும் வளர்ந்து விடு..!
-
- 22 replies
- 3.4k views
-
-
புலம் பெயர் சிட்னி தமிழனே புண்ணியம் தேடி அழைகிறாய் ஆடி கலவரத்தை ஏன் மறந்தாய் ஆடி கலவரத்தை காட்டி அவுஸ்ரேலியா வந்தாய் :x மெழுகாய் உருகிய எம்மவருக்கு மெழுகுவர்த்தி ஏற்ற ஏன் மறந்தாய் அழைக்கவில்லை உன்னை ஆயுதம் ஏந்த, ஆயுதம் ஏந்தும் எம்மவருக்கு குடைபிடிப்பதற்கும் :evil: . சூரசம்சாரத்துக்கு விடுமுறை எடுத்து குடும்பத்துடன் செல்லுகிறாய் தமிழ் தெய்வமான முருகனுக்கு நன்றி சொல்லுகிறாய் அசுரர்களால் அழிக்கபட்ட தமிழனை நினைவு கூற ஏன் மறந்தாய் :?: உலக சமாதானம் வேண்டி யாகம் செய்கிறாய் உன் ஊரே சுடுகாடாய் கிடக்குதே உறவுகள் சமாதான போர்வையில் அழிக்கபடுகிறார்கள் உலக சமாதானம் செய்யதான் முடியுமா உன்னால் :?: புட்டபத்தி செல்கிறாய் விடுமுறையில் புளுகுக…
-
- 20 replies
- 3.4k views
-
-
பத்து வயதில் பார்த்தேன் நண்பனின் பார்வை என்றால் தந்தையிடம்......... பதினாறில் பார்த்தேன் காதல் பார்வை என்றால் சிநேகிதியிடம்........ நாற்பதில் பார்த்தேன் காம பார்வை என்றால் கணவனிடம்........ அறுவதில் பார்த்தேன் கிழவனுக்கு பார்வை தெரியாது என்றால் பேரனிடம்.... அதே கண்கள் பார்வை வேறு அர்த்தம் வேறு பருவம் வேறு........
-
- 16 replies
- 2.8k views
-
-
நண்பனின் நட்பு போலி முகம் காட்டி புன்னகைத்ததும் இல்லை.... இவள் மனதினை என்றும் நோகடித்ததும் இல்லை... நண்பனைப் போல் நடித்ததும் இல்லை... நட்பினுள் புகுந்து சுத்து மாத்து செய்ததும் இல்லை... வாழ்க்கையில் தடம் மாறி போக சொன்னதும் இல்லை.... வீணான கதைகள் என்றும் கதைத்ததும் இல்லை... உன் நட்பெனும் உறவில் நான் பிரிய நினைத்ததும் இல்லை... உன்னை என்றும் நான் நினைத்துப் பார்க்க மறந்ததும் இல்லை... இல்லை இல்லை என்று சொல்ல நல்லவைகள் குறுகியனவும் இல்லை.... நம் நட்பெனும் வட்டம் போலியானதும் இல்லை....!
-
- 14 replies
- 3.1k views
-
-
பணம் மனிதனின் உடலை வருத்தி மனதை திடப்படுத்தி சேகரிக்கத் தூண்டுவது பணம்.... தம் அன்றைய தேவைகளிற்காக எதிர்காலக் கனவுகளின் தேடல்களிற்காக சிறுகச் சிறுக சேர்த்துவைக்க தூண்டுவது பணம்... மனிதர்களின் நல்வழியையும் தீயவழியையும் சந்தோஷத்தையும் துக்கத்தையும் உருவாக்குவது பணம்.... மொத்தத்தில் பணம் தான் வாழ்க்கை என்று வாழ்பவர்களின் நிலை கடலினுள் இறங்கி உப்புத் தண்ணீரை பருகுவது போன்றது.... அடிப்படை வாழ்க்கைக்கு பணம் அளவுடன் தேவை என்று வாழ்பவர்களின் நிலை தெளிந்த நீரோடையில் மீன்கள் வசிப்பது போன்றது....
-
- 24 replies
- 3.3k views
-
-
உனனைத் தொடமாட்டேன் உன்னைத் தொடமாட்டேன் வெண்நிலவே உன்னைத் தொடமாட்டேன் கண்களிலே உன்னை நானும் கொள்ளை இடமாட்டேன் காதல் என்று சொல்லி உன்னை இழுக்கமாட்டேன் உன்னைப்போல நானும் தேய்ந்து வளரமாட்டேன் காதல்கன்னி அவள்போல உன்னை இம்சை செய்யமாட்டேன் எட்டாத உயரத்தில்-நீ ஏனி வைத்தும் உன்னைப் பிடிக்கமாட்டேன் உன்னைப்போல நானும் இங்கே தனிமையில் ஏங்கமாட்டேன் தேன் நிலவு தேவதையே-நான் தேம்பியழமாட்டேன் தேடி நீ என்னை வந்தாலும் உன்னைத் தீண்டிவிடமாட்டேன்
-
- 15 replies
- 2.1k views
-
-
தமிழினி என்னும் வலைப் பதிவாளரின் கவிதை, இது யாழ்க் களத் தமிழினியா என்று தெரியாது? :roll: http://eelavali.blogspot.com/2006/07/blog-post_20.html கனத்த மனதுடன் உங்களைக் கேட்கிறேன் கனிந்த மனதுள்ள உங்களைக் கேட்கிறேன் படித்த மனிதரே உங்களைக் கேட்கிறேன் பாரினில் புகழ்பெற்ற உங்களைக் கேட்கிறேன் இளகிய மனதது உங்களுக்குள்ளது இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது பச்சை இலையதன் காடுகள் காப்பவர் பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர் விலங்கை விடவும் கேவலமாகிய விசயங்கள் ஈழத்தில் விஞ்சிக் கிடக்குது பச்சைக் குழந்தை செத்துக் கிடக்குது பாகம் பாகமாய் வெட்டிக் குவிக்குது நித்தம் நித்தமிங்கு சாவுகள் நடக்குது நினைத்திடாத பல கேவலம் நடக்குது உங்கள்…
-
- 15 replies
- 2.6k views
-
-
நினைவுகள் வருது நினைவுகள் வருது நனவாய் இருந்த நினைவுகள் இன்று கனவாய் வருது கடலின் அலைபோல் மழைபோல் பொழிந்து கவியாய் வருது பிறந்த மண்னில் தவழ்ந்த ஞாபகம் நினைவினில் வருது மயிலின் நடைபோல் நடைபயின்ற செம்மண்வாசம் நறு மணமாய்வருது கிளியின் மொழிபோல் தமிழ் சொன்ன முதல் ஆசான் நினைவுகள் வருது பொழியும் மழையில் ஆடும் மயில்போல் மழையில் நனைந்த நினைவுகள் வருது ஆலமரத்து விழுதில் ஊஞ்சல் ஆடிய நினைவு கடல்அலை போல் அடி வருது நிலாவின் முற்றத்தில் உறவுகள் சேர்ந்து கூழ் குடித்த நினைவுகள் கண்ணீராய் வருது திருவிழாக்காலத்தில் கன்னி அவளைக் காதல் செய்த நினைவுகள் வலியாய் வருது பள்ளி நாட்களில் தோள் தோள் நின்ற …
-
- 14 replies
- 2.3k views
-
-
கடந்த காலமும் எதிர் காலமும் நடந்தவை பற்றி சிந்திக்காதீர்கள் நடக்கபோறவை பற்றி சிந்தியுங்கள் நடந்தவை எல்லாமே கனவுகள் நடக்கபோறவைகள் தான் நிஜங்கள் நடந்த பாதையில் நிழல்கள் அதிகம் நடக்கபோகும் பாதையிலோ நியங்கள் நடந்து வந்துவிட்டேன் என பெருமிதம் கொள்ளாதீர்கள்...இடர் பட்டாலும் நடக்கபோகும் பாதயில் இடர் வராது பாதுக்காத்துக்கொள்ளுங்கள் நடந்தவை நாடகங்கள் ஆகட்டும் நடக்கபோறவை நிஜங்கள் ஆகட்டும் கடந்த கால நினைவுகளில் எதிர்கால கனவுகளில் இந்த நிகழ் காலத்தை தொலைத்துவிடாதீர்கள்
-
- 4 replies
- 1.3k views
-
-
உரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை...! மரணங்கள் மலிந்தமண்ணில் உடலங்கள் எரிந்துபோக அவலங்கள் நிறைந்தவாழ்வாய் தினம்தினம்... தொடர்கிறது கறுப்பு யூலை புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல... துயரங்கள் சுமந்துகொண்டு தொடரும் காயங்களுக்கு நடுவில் நாளைய பொழுதின் விடிவுக்காக ஏங்கும் ஒரு இனமாகத்தான் இன்றும் தமிழ்...! நீதி என்றைக்கோ செத்துப்போனது மனிதனேயம் எப்போதோ தொலைந்துபோனது அன்றில் இருந்து... நியாயத்தின் அர்த்தம் என்னவென்றே தெரியாத ஆட்சியில் இன்றுவரை... தொடர்கிறது கறுப்பு யூலை தொப்புள்கொடி உறவுகளின் தலைகள் அறுபட்டு உடல்வேறு தலைவேறாய் தூக்கி எறியப்படும் பிஞ்சுகளின் உடலங்களில் தோட்டாக்களால்... துளைகள் இட…
-
- 6 replies
- 1.5k views
-
-
உன் நிழல் கூட இனி உனக்கு இல்லை!! வெட்டி வெட்டி எறிந்தாலும் நகம் துளிர்விடும்...! துட்டகைமுனு படை... விட்ட தவறை.... சரி செய்ய.. விளங்காமல் தவிக்கும்! செத்து செத்து பிழைக்கும்... இனத்தின் முகத்தில்-ஒரு சிரிப்பு பூக்கும்...!! யூலை படுகொலை... ஆரம்பம் அவருக்கே-இனி முடித்து வைக்க.... முடியுமா அவராலே? தன் வினை.. தன்னைச் சுடும்... தமிழனை எரித்தவர்.. வாழ்வு........ இனி தலைவர் அனுமதி பெற்றே... தன் நிழலைக்கூட இனி தான் நம்பும்!!
-
- 16 replies
- 2.3k views
-
-
வானுயர் ராட்டினம், ஆளில்லா தார்ச்சாலை நுரையோடு கரைதொடும் அலைகள் பஞ்சு மிட்டாய் - இளநீர் சின்னஞ்சிறு மீன்கள் - வெயில் என் மோதிரம் - என பார்க்கும் பொருளில் எல்லாம் உன்னைப்பார்க்கிறேன் இவை போல் எதுவும் இல்லையா - என் இருப்பினை உனக்குணர்த்த - செந்தில்
-
- 7 replies
- 1.4k views
-