கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
[size=5] இயற்கை அழகி [/size] காட்டுக்குப் போனாலும் அவள் நினைவு கடலுக்குப் போனாலும் அவள் நினைவு தோட்டத்துக்குப் போனாலும் அவள் நினைவு துரத்துதே எப்போதும் அவள் நினைவு துள்ளிவரும் மானில் அவள் கண்கள். தோகைமயில் நடக்கயிலே அவள் சாயல் பேசும் கிளிமொழியில் அவளின் குரல் பேதையாய் அலைக்குதே என மனதை. மூழ்கி முத்தெடுத்தால் அவள் பற்கள் முன் கிடக்கும் சங்கோ அவள் கழுத்து புடர்ந்து நிற்கும் பவளத்தில் அவள் உதடு பார் மோதும் அலைபோலே என் நெஞ்சு. வெண்டைக்காய் தொடுகையிலே அவள் விரல்கள் வெண் புடலங்காய் பார்த்தாலே அவள் உருவம் பூசணியும் செவ்விழநீரும் பின்முன் அழகுசொல்ல பூரிப்பால் துள்ளுதே என் உள்ளம் நான் மட்டும் அவள் நினைவில் மிதக்கின்றேன். அவள…
-
- 0 replies
- 925 views
-
-
தமிழர் இழந்த உரிமையைத் தரணி அதிர கேப்பவனே! தமிழர் தங்கள் வரலாற்றைத் தமிழர் அறியச் செய்தவனே! தமிழர் என்று சொல்வதிலே தனக்குப் பெருமை என்றவனே! தமிழை உலக அரங்கத்தில் தாங்கி நிற்கும் தலைமகனே! ஈழம் என்னும் தமிழ்ச்சொல்லை ஈன்றாய் எனக்குத் தமிழானாய்! வேழம் உனக்கு நிகரில்லை! வேங்கை குலத்து முதல்பிள்ளை! சோழ புலியின் அடையாளம் சூடும் தமிழர் அடையாளம்! வாழும் நாளில் மானத்தை மறவா நீயே மலையாகும்! பிறப்போம் இறப்போம் என்பதற்கே பிறப்போர் பலபேர்! இவ்வுலகில், பிறக்கும் போதே புலிபோலப் பிறந்த பின்னே உன்போலே இறவா திருக்கும்…
-
- 0 replies
- 663 views
-
-
"விண்ணில் வாழும் வீரன் இவன்!" "மொழியில் ஒரு பற்று கொண்டு விழியில் ஒரு ஏக்கம் கவ்வ வழியில் வந்த தடை உடைத்து சுழியில் மூழ்கிய வீரன் இவன்!" "ஒன்று இரண்டு ஆயிரம் கொலை இன்று நேற்று கண்டு துடித்து வென்று ஒரு முடிவு காண சென்று மாண்ட வீரன் இவன்!" "தாயின் தங்கையின் கற்பு காக்க சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி நாயின் வாலை நிமித்த எண்ணி பேயில் சிக்கிய வீரன் இவன்!" "உண்மை வெல்ல களத்தில் போராடி கண்ணை இழந்து கையை முறித்து மண்ணை மீட்க மரணம் தழுவி விண்ணில் வாழும் வீரன் இவன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ…
-
- 0 replies
- 139 views
-
-
ஞாபகத்தில் இருக்கிறது அழகாய் நிழலாய் ஒரு முகம். ம்ம்ம்ம்.... தெளிவாயில்லை. அலையும் நீரில் அலைவதாய் அது. வயது தொலைந்து வாழ்வின் எல்லையின் தனிமையில் இளமையை அசை போட்டபடி. நிறைவாய் ஒரு நீ.........ண்ட ஞாபக உறவு. வாழ்வு இயல்பாய் நகர்ந்தும் அம்முகம் அடிக்கடி வரும்... மறையும். கொல்லைப்புறத்துப் பொட்டு வேலிதான் அவனது போக்கு வரத்து. பனம்பாத்தியடியில் கிளுவங்குச்சி முறித்துக் கொட்டில் கட்டி, குரும்பட்டியில் ஈர்க்கில் குத்தி மரப்பாச்சி பொம்மையும் செய்து, கொட்டாங்குச்சியில் சோறும் காய்ச்சி, தொட்டாச்சிணுங்கி இலையும் தேங்காய்ப்பூக் கீரையும் கறிகளுமாய். அம்மாவின் சோட்டிக்குள் நானும், அப்பாவின் வேட்டிக்குள் அவனுமாய். …
-
- 0 replies
- 691 views
-
-
[size=5] காந்தள்கள் முகம் (ஹைக்கூக்கள் 3)[/size] [size=5] [/size] [size=5] மணி ஒலித்தோய்ந்த்து பனித்தன கண்கள் காத்திகை 27. [/size] [size=5]கலைந்தது மௌனம்[/size] [size=5]மலர்ந்தன தீபங்கள்[/size] [size=5]மாவீரர் நாள்.[/size] [size=5] காந்தள்கள் முகம் சிரித்தது கைகளில் கார்த்திகைத் தீபம்.[/size] [size=5] [/size] [size=5]கோபுரங்கள் இல்லையெனினும் கோயில்கள்[/size] [size=5]கல்லறைத் தெய்வங்கள்[/size] [size=5]துயிலுமில்லங்கள்.[/size] [size=5] [/size] [size=5]எதிரி கிளரியெறிந்ததால் மனதில் கிளர்ந்தெழுந்தது மாவீரர் தியாகங்கள்.…
-
- 0 replies
- 884 views
-
-
பார்வை புணர்ச்சியில் பட்டாம்பூச்சியின் இறகசைப்பாகியது காதல் கைகோர்க்கும் கனவினில் கால் தேய நடந்தோம் வள்ளுவக்குறளாய் ஈரடி பேசி ஈராயிரம் நொடி கடந்தோம் முதுமையின் அயணத்தில் முழுதாய் பருகிட கனவின் இறக்கைகளை இறக்கிவைத்தோம் காலச்சுழற்சியில் நீ மனைவியாயும் நான் கணவனாயும் வெவ்வேறாய் பிரியாது தவிக்கிறது காதல்
-
- 0 replies
- 706 views
-
-
வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்…
-
- 0 replies
- 763 views
-
-
தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்! சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரு நாடகத்தொடக்க விழாவில் பேசிய ஒரு பட்டதாரி சிறு கதாசிரியர், சில்லையூர் செல்வராசனின் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது அவை வெறும் Blank Verse என்று குறிப்பிட்டாராம். இத்தகைய தீர்ப்பை அளிக்க, ஒருவருக்கு யாப்பிலக்கணம், தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் வாயைப் பிளந்தால் அவரது அறியாமையின் நாற்றந்தான் ஊரெல்லாம் பரிமளிக்கும். பட்டதாரிச் சிறு கதாசிரியரின் பேச்சு இதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. நமது நாட்டிலுள்ள 'மரபு'களில் ஒன்று, நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூன சித்தியும் ஐந்தாம் முறை மூன்றாம் வகுப்பில் முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ…
-
- 0 replies
- 805 views
-
-
"நாளைய உலகம்" / "Tomorrow's World" "பொத்தானை அழுத்தி, மறு கரையில் காதலிப்போம் ஜன்னளை திறந்து, புதியவானம் காண்போம் கண்ணே? உலகம் சுருங்குதோ, எண்ணம் அப்படி தோன்றுதோ தொழில் நுட்பம், அப்படி மாற்றுதோ கண்ணே?" "நாளாந்த வாழ்வில், பல பல மாற்றங்கள் ஒன்றாய் அனுபவிப்போம், ஆனால் எந்த இழப்பில் கண்ணே? ஆண்டாண்டு மாசுபடுத்தி, சூழலை கெடுத்து விட்டோம் நெருக்கடி வந்தபின்பே, மாற்றுவழி தேடுகிறோம் கண்ணே?" "மதிநுட்ப சிந்தனையாளனா, நாம் மரத்துப்போனவனா இன்றைய நிலையை எப்போது சிந்திப்போம் கண்ணே? கண்மூடித்தனமாக அழிவை நோக்கி பயணிக்கிறோமா [அல்லது] தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கி…
-
- 0 replies
- 212 views
-
-
எஞ்சியுள்ள நாட்களுக்குள் எங்கள் போராட்டமும் வாழ்வும் பற்றி எழுத உட்க்கார்ந்தால் துக்க தினமாகும். உள்ளமும் உயிரும் சோர்ந்து போகிறது. 2009 மே 19ல் இருந்து முயன்று ஆறு மாதங்களாக எழுத முயன்று இறுதியில் 2009 டிசம்பரில்தான் என்னால் “தோற்றுப் போனவர்களின் பாடல்” அஞ்சலியை எழுத முடிந்தது. மே 19 என்னைபோலவே பல லட்சம் மக்களை ஆழுமைகளை உடைத்து நிரந்தர விரக்தியுள் முடக்கிய கரிநாளாகும். இருக்கிற கொஞ்ச நாட்களில் நான் சில விடயங்களை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லவேண்டும் என நினைக்கும்போதெல்லாம் விரக்தியில் மனசு நொருங்கிப்போகிறது. வெளியில் இருந்து பார்கிறவர்கள் நினைக்கிறதுபோல வன்னியில் விவாதங்களேயற்ற சொல்வதைச் செய் என்கிற சூழல் எல்லா மட்டங்களிலும் நிலவியது என்பது உண்மையில்லை. முஸ்லிம்கள்…
-
- 0 replies
- 770 views
-
-
-
- 0 replies
- 724 views
-
-
காலத்தின் சாட்சியாய் துடிக்கிற கவிதைமனத்துள் செட்டை அடிக்கும் நினைவின் பிரளயம் மாக்ஸ்சின் தத்துவம் கண்முன் விரிவதை கட்டவிழ்த்து சுடுவதெல்லாம் ஒளிப்பதுபோல் எதிர்பார்ப்பற்ற இரங்களில் பேர்ரொன்றிடம் வரம்பெற்ற கைகளை அரிக்கின்றது உயிர்கொண்டு அணைபோட்ட நேரத்தில் அவர்கள் கருக்கிவிட்ட விருப்பங்களின் விதைள் விருட்சமானதில் நிழல் குளித்த தருணங்கள் ஆகாய வெளியைப்போல் இன்னும் நீள ஆணிவேர் போல் நினைவு காவும் உள்ளம் கண்ணீர் பனிக்கும் தருணங்கள் படிமமாய் பரம்பரைக்கு கைமாற தீயாகங்கள் உயிர்பெறும் இலட்சியக் காவிகளாய் நிழள் குளித்தவன் பொய்யில் மறைத்த வாழ்க்கை கோறையாய் உறுமாற ஒரு விளக்கு எரியும் விடுதலையின் ஒளியாய் இரவை …
-
- 0 replies
- 1.2k views
-
-
"அலைமுறியும் கடற்காற்றில்" நான் கவிதைகளை எழுத ஆரம்பித்த காலங்களில் எனக்கு முந்தைய தலைமுறையில் எழுதியவர்களில் நட்சத்திரன் செவ்விந்தியனை மட்டும் தான் முக்கியமானவராக கருதினேன், இன்றும் அப்படித் தான் . சேரன்,வ .ஐ. ச ஜெயபாலன் , ஊர்வசி, சிவரமணி எல்லாம் ஏதோவொரு புள்ளியில் வேறு விதமான அனுபவங்களைத் தருபவர்களாக இருந்தார்கள். நட்சத்திரன் செவ்விந்தியன் செவ்விந்தியனின் "வசந்தம் 91" தமிழில் வந்த முதல் தொகுப்புகளில் முக்கியமானதொன்று. அதன் மொழியமைப்பு மிகவும் சரளமான , நதியின் மேல் எறியும் கல்லைப் போன்று தாவிச் சென்று மறைவது. * ரமணன் அண்ணாவின் வீடு தான் எனக்கு ஏராளம் புத்தகங்களைக் காட்டித் தந்த வீடு . குறைந்தது ஆயிரம் புத்தகங்கள் ,ஆயிரமும் தேர்ந்தெ…
-
- 0 replies
- 1.2k views
-
-
போராளிகளான அப்பாவிகளையும் அடிமைகளான பயங்கரவாதிகளையும் பற்றி பேசுதல் சம்பூர் வதனரூபன் தேசங்கள் பலதும் தேசங்களாயிராத பொழுதுகளில்.. தேசமாக்குவதற்கும் முடியாத போது உருவாக்குவதற்குமென அடிமைகள் எழுவர். அடிமைகள் என்பவர் எப்பொழுதும் அடிப்படையுரிமைகளுமில்லாத அப்பாவிகள் என்பதே உண்மை. ஆட்சியாளர்கள் அடக்குமுறையாளர்களாவதும் அதிகாரமுள்ளவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாவதும் அப்பாவிகளை அடிமைப்படுத்துவதும் அடிமைகள் விடுதலை கேட்பதும் நாளடைவில் அடிமைகள் போராளிகளாவதும் போராளிகளான அப்பாவிகள் பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுவதும் பின்பு பயங்கரவாதிகள் என்றழைக்கப்பட்ட அப்பாவி அடிமைகள் அழிக்கப்படுவதுமென.. இதற்கு நீண்ட வரலாறும் உதாரணங்களுமுண்டு உலகமெங்…
-
- 0 replies
- 849 views
-
-
சாளரத்தில் மோதி விழுகின்ற மழைத்துளிகள்-அட யார் இங்கு தடை போட்டது தூக்கப் பொழுதுகளில் தலை கோதும் என் தாயின் கரங்களுக்கு.
-
- 0 replies
- 1.6k views
-
-
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நான் பிறந்த நாடு ,......இன்று நாதியற்ற நிலையில் பாலும் தேனும் பொழிந்து பார் புகழ்ந்த நாடு ஆண் பெண் பேதமின்றி குஞ்சு என்றும் குழந்தை என்றும் முதியவர் ,உடல் வலு இழந்தோர் என்றும் கிஞ்சித்தும் பாராமல் கொத்துக்கொத்தாய் கொன்று ஒழிக்கையில் தாய்க்கு நிகராம் என் தாய் நாடு தமிழ் ஈழத்திரு நாடு சிக்கி சின்னா பின்ன பட்டு கொடியவன் கோத்தபாயா கூட்டத்துடன் ராஜ பட்சே கூடுச்சேர்ந்து ,பிச்சையெடுத்த உதவிபணம் பீரங்கியாய் மாற , ஆட்லரியாய் மாற எக்காளமிட்டு ,தன் இளைய,சந்ததியை பலி கொடுத்து பலிகடாவாக்கி சீரழியும் தேசம் என்று தான் மாறும் ஆறாது மாறாது அழுதாலும் தீராது ஓயாத துயர் படும் என இனம் …
-
- 0 replies
- 1.8k views
-
-
அளவுகள் தொடர்பான பிரச்னை! - கவிதை செல்வி ராமச்சந்திரன், ஓவியம்: ரமணன் உன்னை எனக்கு எவ்வளவு தெரியுமென்று நம்புகிறேனோ அவ்வளவு தெரியாமலும் இருக்கிறது முதல்முறையாக இன்று உனக்கு ஓர் ஆடை வாங்கச் சென்றபோது உன் அளவு எனக்குத் தெரியாமல் போய்விட்டது எதிர்பாராத ஒரு பரிசுக்கான அளவை உன்னிடமே எப்படிக்கேட்பது என்றும் எனக்குத் தெரியவில்லை இருளில் தழுவிக்கொண்டபோது உன் தோள்கள் எப்படி விரிந்திருந்தன என்றோ உன் மார்புகள் எப்படிப் பரந்திருந்தன என்றோ நான் அறிபவை எல்லாமே உத்தேசமான அளவுகளாக இருந்தன எனது ஒவ்வொரு மனநிலையிலும் அவை வேறு வேறு அளவுகளாக குறுகலாகவோ பரந்ததாகவோ இருக்கின்றன உன்னைப்போலவே இருந்த மாடல் பொம்மையின் முன் நி…
-
- 0 replies
- 879 views
-
-
உயிரடங்கிய சிறு பறவை - நல்ல சமாரியனின் நாட்குறிப்பு - கவிதைகள் உயிரடங்கிய சிறு பறவை கவிதை: பாப்பனப்பட்டு வ.முருகன், ஓவியங்கள்: ரமணன் அதிகாலை நடைப்பயிற்சியில் நெடுஞ்சாலையோரம் காணக்கிடைத்தது விரைந்த வாகனம் மோதி விழுந்துகிடந்த சிறு பறவையொன்று. இதயம் படபடக்க இரு கைகளிலும் அதை ஏந்திக்கொண்டேன். அதற்காகவே காத்திருந்ததைப்போல் அடங்கிப்போனது அதன் உயிர். கனத்த மனதோடு கைவிரல்களால் மண்பறித்து போதுமான அளவில் அகழ்ந்தெடுத்த குழிக்குள் அதைப் புதைத்துவிட்டு வீடு திரும்பினேன். செந்நிறப் பிசுபிசுப்புப் போக கைகளை நீரால் அலசிய பின் மென்சோகத்தையும் நுண்வலியையும் கடந்து வரவென்று சிவப்பு மசிப் பேனாவால் கவிதையொன்றை எழுதி முட…
-
- 0 replies
- 1.3k views
-
-
அந்தப் புத்தகத்தின் பெயர்... ஒரு மிகப்பெரிய எழுத்தாளன் எழுதிய புத்தகத்தை இறுதியாய் எழுத படிக்க தெரிந்த ஒருவன்தான் வாங்க ஒப்புக்கொண்டான் எப்போதும் போல பெரிய நூலகத்தில் பலரும் படித்துப் பயன்பெற விரும்பிய புத்தகம் புத்தக அலமாரிக் கனவுகளுடன் புது மேசையின் மேல் குடியேறுகிறது. புத்தக வாசத்தை உணரும் நுட்பத்தை மறந்து போயிருந்தான்-அநேகமாய் புத்தகத்துடன் உரையாடும் கலையை அறியாதவனாயும்... இருந்தும் கோப்படும்போது தூக்கி எறியவும், மேசையின் மீது வைக்கப்படும் உணவு பண்டங்களின் மீது மூடி வைக்கவும், புழுக்கமான நேரத்தில் விசிறியாகவும், குழந்தை விளையாடிக் கிழித்தெறியும் காகித பொம்மையாகவும், ஏதாவது ஒரு வழியில் அந்த இல்ல உறுப்பினருக்கு புத்தகம் பயன்பட்டுக்கொ…
-
- 0 replies
- 948 views
-
-
-
எழுந்து வாருங்கள் இனியும் ஒதுங்கி நிற்கும் சாபம் வேண்டாம் எழுந்து வாருங்கள்! சந்து, பொந்து எங்கிருந்தாலும் வாண்டு, பெண்டு அனைவரும் சேர்ந்து முந்தி வாருங்கள் முழு மனசாய் வாருங்கள்! அந்திவானச் சிவப்பை அள்ளி விழிகளில் பூசுங்கள்... ஆதவன் வெப்பம் அள்ளி நாக்கினில் தடவுங்கள்... அடி மேல் அடி அடித்தால் அம்மி நகருமெனில் மனசும் மாறும் எனும் மந்திரம் பழகுங்கள்! தலை ஆறு போல் நீவீர் திரண்டு வந்தால் வரலாறு இதனைப் பதிவு செய்யும் வற்றாத வெள்ளம் போல் எங்கு போய் உற்றாலும் வற்றாத ஈழ வேட்கை கண்டு உலகோரும் புரிந்து கொள்வர் உதவிட முன்வருவர்! முற்றாக எம்மினத்தை அழிக்கின்ற முட்டாள்கள் நட்டாற்றில் நிற்கவேணும் நமக்கொரு நீத…
-
- 0 replies
- 812 views
-
-
தமிழனே வாழ்கையின் விழ்ச்சி நாம் தோற்றிட அல்ல பகைவரின் வெற்றி நாம் பயந்திட அல்ல சொத்தின் இழப்பு நாம் செத்திட அல்ல சொந்ததின் இழப்பு சோகமாய் நாம் வாடிட அல்ல ஊரவர் வெறுப்பு நாம் ஒழிந்திட அல்ல உரிமையின் மறுப்பு நாம் உறங்கிட அல்ல தமிழனே எழுந்திரு வீரமாய் கடலிலும் வேகமாய் இழந்தது உனை சேரும் பிரிந்தது இன்று உனை நாடும் மறந்தவர் கை கோர்ப்பார் தொடர்ந்திடும் உலகம் என்றும் உன் நிழலை அருவி கவித்தொகுப்பு தமிழருவி வானொலியின் நேரடி
-
- 0 replies
- 631 views
-
-
-
-
விடுதலை வேள்வியில் விறகானாய்! வீரர்களின் சுடர்களுடன் இணையானாய்! வெந்திட்ட புண்ணுக்குள் வேல்கொண்டு குத்திவிட்டார் தந்திரமாய்ப் பேச்சுவார்த்தை புதைகுழிக்குள் தள்ளிவிட்டார் விந்தையல்ல நீதிகொல்லல் எங்களுக்கே என்று காட்ட இயந்திரக் கழுகுகொண்டு குண்டுவீசிக் கொன்று விட்டார்! ஆயுதங்கள் போரில்நிற்க அறிவுடனே பேசி நின்று ஆயிரமாய்ப் பொய்யுரைப்போர் நேரெதிர்க்கும் ஆற்றல்தன்னைத் தகர்ப்பதற்கு ஆள்அழித்தல் என்றுநிற்கும் கோழைகளால் அகம்அழவே அகிலமெங்கும் தமிழரினம் கலங்குதம்மா! சத்தியத்தைத் தலைநிமிரற் கிடமளியோம் என்பவர்க்கே சுற்றிநின்று துணைபுரிவோர் இதற்கும்கூடத் தலையசைப்பார் பற்றிநின்று சுதந்திரத்தை மீட்கநிற்போர் வழிமறுப்பார் பற்றுகின்ற தீபெருக மட்டுமன்றி என்னச…
-
- 0 replies
- 1.5k views
-