Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பேசவேண்டும் யார் இருக்கிறீர்கள் வெறுமையாகிப்போன தேநீர்க் கோப்பையில் நிறைகிறது என் குரல். நீங்கள் எனக்காவும் பேசுவதாக இருந்தால் தேநீர்க் கோப்பையை கவிழ்த்துவிடலாம் என் வெற்றிடங்கள் நிறைந்து கொள்ளும். எதைப்பற்றி பேசுவீர்கள்.. வழிக்காத என் தாடியைப் பற்றி கசங்கிப்போன என் ஆடையைப் பற்றி கிழிந்துபோன காலனி பற்றி அருகில் இருப்பவரைப் பற்றி.. ஓ, நீங்கள் என்னைப்பற்றி பேசவே மாட்டீர்களா? ஓசைகளை கழற்றி எறிந்துவிட்டு சொற்களை கொட்டுவீர்கள் பின் எப்போது சிதை ஏற்றுவீர்கள் நான் செத்தபின்பா அப்போதாவது என்னைப் பற்றி பேசுவீர்களா என்ன. எப்போதுதான் பேசுவீர்கள் என்னைப்பற்றி? எனக்குத் தெரியும் உங்களால் பேசவே முடியாது. ஏனென்றால், நீங்கள் உங்க…

  2. கருணாநிதியின் உண்மை முகம் http://www.youtube.com/watch?v=SPGH4I6y0NQ&feature=feedf

    • 0 replies
    • 1.9k views
  3. நீ நாட்டை ஆழலாமோ...??? குருதி நீரினிலே குளியல் செய்கின்ற மடையன் மகிந்தாவிற்க்கு மக்களாட்சியேன்...??? சினை கொண்ட சமரசத்தை சிதைக்க நினைக்கின்ற வெறி பிடித்த மடையனுக்கு வெள்ளை மாளிகையேன்...??? பிண பூவால் மாலைகட்டி தினம்தோறும் போடுமவன் நாட்டதிபனாகி நாடதனை ஆழலாமோ....??? சுதந்திரத்தை பறித்தின்று சுடுகாட்டில் புதை;துவிட்டு மக்களை பிடித்தின்று மயாணத்திற்கனுப்புகின்ற மாபாவியிவன் நாடதனை ஆழலாமோ...?? ஒளி கொடுத்த உதயத்தை சிறையிலே அடைத்து விட்டு விடியலை பேசுகின்ற வீணாண மனிதனிவன் நாட்டதிபரென்று நாடேறியாழலாமோ...??? - வன்னி மைந்தன் -

  4. ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ! ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ! காராரும் வானத்தில் காணும் முழுநிலவே! நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே! ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே! ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே! உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில் பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே! சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய் கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு! நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச் சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில் கனலேற்ற வந்த களிறே, எனது மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே! தேக்குமரம் கடைந்து செய்ததொரு தொட்டிலிலே ஈக்கள் நுழையாமல் இட்ட திரைநடுவில், பொன்முகத்தி லேயிழைத்த புத்தம் புதுநீலச் சின்னமணிக் கண்ணை இமைக்கதவால் ம…

    • 2 replies
    • 1.3k views
  5. பள்ளிப்பருவத்திலே சித்திரம் வரைவதில் வாலி அவர்கள் மிகவும் முனைப்பாக இருந்தாராம். அப்போதைய காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஒவியத்தில் கரை தேர்ந்து இருந்தவர் ஓவியர் “மாலி”. அவரது தீவிரமான ரசிகரான இவருக்கு, பள்ளித் தோழன் பாபு என்பவன் ” வாலி ” என்னும் பெயர் சூட்டி ஓவியத்தில் மாலியைப் போலவே நீயும் ஒரு கலக்கு கலக்குவாய் என்று வாழ்த்தினானாம். அப்போது அவர் பாரதியாரின் ஒவியம் ஒன்றை வரைந்து அதன் கீழ் வாலி என்று கையொப்பமிட்டு அதைத் தனது தமிழ் வாத்தியாரிடம் காட்டினாராம். அதைப் பார்த்துப் பாராட்டிய தமிழ் வாத்தியார் “உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலி என்று பெயர் சூட்டினாய்?” என்று கேட்டாராம். அதைக் கேட்ட சுற்றி நின்ற மாணவர்கள் சிரித்து விட்டார்களாம். அப்போது ஒரு துண்டுக் காகித…

  6. கோயிலைத்தான் சுற்றிவருகிறார்கள் உன்னைத் தருசிக்காத பக்தர்கள் மட்டும் * உனக்காகவே நட்டு வைத்த பூச்செடியில் யார்யாரோ பறித்து செல்கிறார்கள் தங்கள் காதலியை கண்டுபிடித்தவர்கள் * என் காதல் திருமணத்தில் முடியவில்லைத்தான் ஆனாலும் மரணம்வரை வாழ்த்திருக்கிறது இல்லையென்றால் தற்கொலை செய்திருப்பேனா...? * என்னைப்போல் யாரும் உன் அமைதியை விரும்ப மாட்டார்கள் உன் கீழ் உதடாய் நீ மாறும்போதும் உன் மேல் உதடாய் நான் மாறும் வரையிலும் * இன்றுவரை காதலோடு வரும் எந்த பெண்களுடனும் நான் உரையாடியதில்லை காரணம் எனக்கே தெரியாத உனக்கு துரோகம் செ ய்யக் கூடாது என்பதால் * முடிந்தவரை உன் வீட்டுக் கண்ணாடி முன் நின்று என்னோடு உரையாடு எத்தனை தடவை …

    • 5 replies
    • 1.2k views
  7. காலை எழுந்தவுடன் email வாலைக் குமரியுடன் facebook சாலை முழுவதும் Mobile Talk மாலை முடியும் வரை Chit Chat மாலை முடிந்ததும் Work Hour Start பொய்யுரை எழுத Status Reports மெய்யுரை சொல்ல Company Reports பொய்யை மெய்யாக்க Status Call மெய்யை உறுதியாக்க Conference Call பொய்யும் மெய்யும் கலந்த Live Call டாகுமென்ட் எழுத Copy & Paste ப்ரோக்ராம் எழுத Cut & Paste மறந்ததைப் படிக்க E-Learning படிக்காமல் உறங்க Audio-Learning படித்ததை நினைவூட்ட Google Search கூடிப் பேச Conference Hall கூடாமல் பேச Coffee Break காதல் செய்ய Live Chat குறட்டை விட Training Session அரட்டை அடிக்க Lunch Break ஓசியில் திங்க Team Lunch தின்றதைச் செரிக்…

  8. (A9 in 2006) கொக்காவில் தனில்.. கொடும் பகைவர் விதி முடித்து.. சீறும் அந்தப் புலி - நடுவே பதிந்து நிற்க பறந்த அந்தச் செங்கொடி... மாங்குளந்தனிலும் ஏற அண்ணன் போர்க் கரும்புலியாய் வாகனம் ஏறி ஏக வழிவிட்ட வீதி..! ஆகாய கடல் வெளியில் எம் சொந்தங்கள் சுகமாற..சுமந்த வீதி பால்ராஜும் சூசையும் களம் பார்க்க பாதை காட்டிய சுதந்திர வீதி..! யாழ் தேவி கொண்டு பகை.. புறப்பட புலி வீரர் காட்டிய தீரத்தில் அது தடம்புரள.. சத்ஜெயவால் அது தொடர.. அடிக்கு அடி எம் சொந்தங்களின் தசைகளின் சிதறலில் பசி தீர்த்து ஜெயசிக்குறுவில் மிச்ச இரத்தம் குடித்து ஏப்பம் விட்டு.. சிங்களம் கேடயம் தந்து வெற்றி விழா எடுக்க... சினங் கொண்ட எம் பு…

  9. உன் கள்ளம் பிடிபட்டது ..... கண்ணாடியில் நீயே.... உன்னைபார்த்து பேசுகிறாய் .... என்றுதான் இதுவரையும் .... நினைத்தேன் ....!!! இல்லை இல்லை ....!!! என் உருவத்தை நினைத்து .... என்னோடு பேசுகிறாய் .... என கண்டுகொண்டேன் .....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 01 #### ஏய் .... நீ தூங்கிவிட்டு எழுந்த ..... போர்வை கசங்கியிருக்கும் .... வடிவத்தை பார் ...... இதய வடிவத்திலேயே .... சுருண்டு கிடக்கிறது ..... அத்தனை நினைவகளுடன் .... கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 02

  10. இறக்கபோகிறேன் ... என்று தெரிந்துகொண்டு.... தீக்குச்சி எரிகிறது .... தீக்குச்சிக்கு அது இறப்பல்ல .... தீக்குச்சியின் வாழ்க்கை....!!! இறப்பு பெரிதல்ல .... எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம் ....!!! தான் மட்டும் எரிந்து .... சாம்பலாகவில்லை ... இன்னொன்றுக்கு ... வாழ்க்கையும் ...... கொடுத்துவிட்டு ....... சங்கமமாகிறது தீக்குச்சி ....!!! ^ முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயல் இனியவன்

  11. மகிந்தவுக்கு ஏழரை ஆரம்பம். புலிகளினி அழிந்தாரென்ற கிழவன் செத்தும் புலிதன் வீரம் மாறாமல் வீச்சோடு மீண்டு எழ மீளவும் புலிகளொடு போராட புத்த புதல்வர்கள். போராடிப் போராடி புலிகளிடம் தோற்றவர்கள் ஈடாடி இயங்க முடியாமல் ஊரெல்லாம் ஒப்பாரி வைச்சு பாரெல்லாம் பழுதென்று பதுக்கின ஆயுதங்கள் தாவென்று வாங்கி தம் பலம் இழந்தவர்கள். கிளிநொச்சி வீழ்ந்திடுமாம் கொடியேற்றிக் குத்தியனை முதலமைச்சராக்கும் கனவோடு மகிந்த மாத்தையா உதயநாணயக்கார கனவுகளில் மண். மாவீரர் மாதம் நெருங்கும் ஐப்பசியில் மகிந்தவுக்கு அட்டமத்தில சனி. சனி பிடிச்சா ஏழாண்டு உலைச்சல் இது சாத்திரம் சொல்லும் விதி. மகிந்தவுக்கும் ஏழரை மாத்த முடியா விதி. ம…

  12. Started by shanthy,

    அழகிய கனவு.....! கிழைகளைக் குடையக் காற்றுத் தரையில் மிதக்கிறது இலைகள். மஞ்சள் இலைகளின் அழகு போய் மார்களி வருதல் சாத்தியமாய் மரங்கள் வெறித்துப் போகிறது. குளிர்கால ஆரம்பம் மந்தப் பொழுதாக மழையிருள் வானமும் மாரியின் வருகையும் மனசுக்குள் இதமாயில்லை... வசந்தம் வரும்வரை இரவினி நிரந்தரம் ஒளிக்குமிழின் துணையின்றி இந்த நாட்கள் விடியாது. நள்ளிரவும் நாய்களின் ஊளையுமற்ற பின்னிரவில் எழுந்து வேலைக்கு ஓடும் அவசரம் இவ்விரவுகள் மிகக்கொடுமையானவை. கைவிறைக்க கால்கள் நடுங்கும் உறைபனிக் காலத்திலும் ஓய்வில்லை. பணமரமாய் நான் பெற்றவர்க்கும் மற்றவர்க்கும் வெளிநாடு மிகவும் அழகான கனவு. கழுவுதலும் துடைத்தலும் கோப…

    • 2 replies
    • 988 views
  13. என்ன தேசமோ .......... செந்நீரால் ஒரு தேசம் , எழுதப்பட்டு கொண்டு இருக்கிறது . கால மாற்றத்தின் தண்ணீர் வெள்ளம் காலன் மகிந்து ஏவும் ,கொத்துக்குண்டு, கிளஸ்டர் அகோரம் , தாயை இழந்த பிள்ளை ,தலை சிதறிய தந்தை , பங்கருக்குள் அம்மம்மா ஐயோ என்னும் அவலக்குரல் கால் வயிறுககும் கஞ்சி இல்லை கை குழந்தையை தவறவிட்ட தாய் தாயும் மூன்று மாத குழந்தையும் , ஒரு பக்கம் தந்தை மண் மீட்க அக்காவை இழந்த தம்பி , ஊரை உறவை தொலைத்த சொந்தங்கள். இப்படி உங்கள் வாழ்வில் கேட்டதுண்டா ? தலை சிதறி ,தசை துண்டங்களாக வீதி யோரம் , உருக்குலைந்து , அடையாளமற்று , இறந்தவனை புதைக்க , இப்படி ஒரு அவலம் கண்ட தேசம் உண்டா? கிளியை பிடித்தோம் முல்லையை பிடித்தோம் , ஆன…

  14. கஸல் கவிதைகள் 1) கடவுளே என்னை மன்னித்துவிடு நான் காதலை கும்பிடுகிறேன் 2) நீ அழகுக்கு நேர்ந்துவிடப்பட்டவள் 3) உனக்கான அரிதாரத்தை மான்களே கொண்டுவருகின்றன 4) உண்மையாகச் சொல் நீ தேவதைகளின் அசலா! நகலா! 5) உன்னை சுவைபட சொல்ல வேண்டும் என்றால் நான் சோகப்பட வேண்டும் 6) இரவு நதியில் உன் ஆனந்த வெள்ளம் கரைபுரண்டோடுகின்றது 7) நீ தாவணி அணிந்தபோதுதான் என்னில் பிரபலமானாய் 😎 உன் ரகசியத்தை அறிந்ததால் நான் அம்பலமானேன் 9) என் இதயத்தில் நீ தங்காவிட்டாலும் பரவாயில்லை வந்தாவது போ 10) விளக்குகள் அணைக்கப்பட்டால் நீ எரிகிறாய் 11) அவளைப் பிரிந்துவிட்டாயா பரவாயில்லை தேடாதே நீ கவிஞன் ஆகும் வாய்ப்பை இழந்துவிடுவ…

  15. அம்மா கவனம் அம்மா இந்த நாட்கள் எம்முடனேயே முடியட்டும். இனி எவரும் இப்படி வாழவேண்டாம் . இவ்வாறு சாகவேண்டாம். உன்வைற்றில் உள்ள என் இளையவனோ இளையவளோ நான் பட்ட துன்பம் நீபட்ட சிரமத்தை நினைக்கவே கூடாது! இத் துன்பங்களும் அவர்களை நெருங்கவும் கூடாது!! நாம் நெருங்க விடவும் கூடாது! அப்பா இல்லை.இருக்கிறாரோ தெரியவில்லை! இருந்தாலும் இனி மனிதனாக நடமாடக்கூடியதாக அவர்கள் விட்டு வைத்துள்ளார்களா தெரியாது...??? ஆமி பிடிச்ச எதிர் வீட்டு மாமா திரும்பி வந்தபோது அவர் வந்தது எவ்வாறு எனக்கு தெரியும்.! அம்மா நீ கவனம் அதைவிட உன்னுள் உறங்கும் என் இளையவர் மிகக்கவனம். இப்போ சிங்களவன் இலக்கு பிறக்காத குழந்தைகள் தான். அவர்களுக்கு விருப்பம் தமிழ் சிசுவின் கொல…

  16. இது எனக்கான பாடல். எனக்கான இந்த பாடல் உங்களுக்கான அடையாளங்களை சுமந்திருக்கலாம் ......... ஆனாலும் -இது எனக்கான பாடலேதான். தரவையிலும் தரிசுநிலத்திலும் பாடிக்கொண்டிருக்கும் ஒற்றைப்பறவையின் பாடலொன்றை ஆழ்ந்து கேட்டிருந்தால், ஆளரவமற்று வெறுமையோடு அடங்கிக்கிடக்கும் பெருவீட்டில் அமைதியோடு முடங்கிக்கிடக்கும் நாயொன்றின் விழிகளை கூர்ந்து பார்த்திருந்தால், கனிநிறை மரத்தில் கிளைதாவி குரலெடுக்கும் அணிலொன்றின் தவிப்பின் காரணத்தை ஒருநாளாவது தேடியிருப்பின், எனக்கான இந்தபாடலின் நியமம் புரிபடக்கூடும். இல்லையேல், ஓசைப்பிணைப்புக்களாலும் வார்த்தைச்சிக்கல்களாலும் உணர்த்தப்படப்போவது எதுவென்று புரியப்போவதில்லை உங்களுக்கு எனது ப…

  17. நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள் ( மாலினோஸ்க்னா ) மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம் கடத்தப் போகின்றன நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள் இவற்றின் வருகைக்காகக் காத்திருக்கும் குஞ்சுகளுக்கு என்னவொரு மனமிருக்கப்போகிறது பசுங்குளத்தின் தண்ணீர் காய்ந்த கதை வந்து சொல்லும் கொக்குகளை மீண்டும் மீண்டும் நம்புகின்றன குஞ்சுகள் செத்த மீன்கள் பற்றிய கனவுகளோடு முன்பொரு நாள் குளத்தோடு முரண்பட்டு வெளியேறிய கொக்குகள் மீண்டும் குளத்திடமே வந்தன தம்மை உரு மாற்றிக் கறுப்பு நிறச் சொற்களோடு நீர்த்தணலில் வாழும் மற்றோர் மீன் பறவை நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகளை நோக்கி நா கூசும் வார்த்தைகளால் சபிக்கத் தொடங்கின கொக்குகளிடமிருந்து மூத்திர நெட…

  18. பார்த்தலையும், புன்னகைத்தலையும், நிராகரித்துவிடும் பலரை கடக்கவேண்டியிருக்கிறது. அரவணைப்புகான ஏக்கத்தைதையும் இன்றின் ஏமாற்றத்தையும் சுமந்து திரியும் சிலரையும் கடக்கவேண்டியிருக்கிறது. வீடுகளில், வேலைத்தளங்களில் - இருந்து ஏதாவதொன்றைக் காவி வருபவர்களையும், ஒரு சீக்கரெட் , கபே வழியாக ஏதோவொன்றை இறக்கி வைக்க முயல்பவர்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. லெதர் ஜக்கெற்றுக்களும் மப்ளர்களும் மனதையும் மூடிவிட ஐபோனும் கூலிங்கிளாசும் பொறிகளையும் தின்றுவிட கொட்டடி முதல் கொடிகாமம் வரை உறவாடி உணர்வோடு இருந்தம் என்பவரையும் பொறுத்துக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. சென் நதியிலும் லூவர் மியூசியத்திலும் ஈபிள் கோபுரத்திலும் நீண்ட மெற்றோக்களிலும் ஏறிவந்த பின்னும்…

  19. செத்துவிட்டாள் அம்மா பேப்பரில் போடுங்கள் முடிந்தால் கொழும்பு பேப்பரிலும் போடுங்கள் தப்பாமல் வீடியோவும் எடுத்திடுங்கள் இயலுமாயின் வானொலிக்கும் குடுத்திடுங்கள் இணையதில் போட்டால் இன்னமும் நல்லம் கொள்ளி வைக்க யாரும் இல்லை எனின் எங்கள் வள்ளி மகன் வைப்பான் கொள்ளி.... இக் கவியில் தாய் இறந்த செய்தி கேட்ட மகன் அல்லது மகள் ஊரில் உள்ளவருக்கு தொலைபேசியில் கொடுக்கப்பட்ட கோரிக்கை...ம்ம்ம் இதிலே வள்ளி மகன் என்பது வேலைக்காரியுன் மகன்...இப்படி தான் இன்றைய காலத்தில் தாய் இறந்தால்...சில பிள்ளைகளால் கடமை செய்யபடுகின்றது...என்ன உலகமோ

    • 7 replies
    • 1.8k views
  20. தொலைந்த மனிதனை தேடிக்கொள்... உன்னுடைய பாதைகளை நீயே அமைத்துக்கொள் அடுத்தவன் பாதைகளில் ஆசைப்படாதே.. உன்னுடைய சிலுவைகளை நீயே சுமந்துகொள் அடுத்தவன் தோளுக்கு அதிகாரமிடாதே.. உன்னுடைய செடிகளை நீயே வளர்த்துக்கொள் அடுத்தவன் தோட்டத்தில் பூக்களைப்பறிக்காதே.. உன்னுடைய குறைகளை நீயே சொறிந்துகொள் அடுத்தவன் குறைகளை சொறிய நினைக்காதே.. உன்னுடையா மதத்தில் உண்மகளை தேடிச்செல் அடுத்தவன் மதத்தில் ஓட்டைகளைத்தேடாதே.. உன்னையே நீ தேடி உண்மைகளைக்கண்டு உன்னுள் தொலைந்த மனிதனை மீட்டுக்கொள்

  21. Started by nochchi,

    அன்னையே போய்வா! ---------------------------------- அன்னையே போய்வா தமிழுக்குத் தாயகனைத் தந்த அன்னையே போய்வா! இது விடை பெறும் நேரமென்று விதியெழுதிப் போகிறது வென்று வரும் காலமதில் விண்ணிருந்து போற்றுகையில் மண்ணிருந்து வணங்கிடுவோம் தேசத்தின் பேரன்னையே! மண்ணிருந்து வணங்கிடுவோம் தேசத்தின் பேரன்னையே! காலவெளியறுத்துத் தேசமதை மீட்டு பாசமுடன் தழுவுகின்ற வேளையொன்றில் உந்தனுக்கு ஆலயங்கள் அங்கிருக்கும் அந்தக் காலம் வரை எம் நெஞ்சமதே ஆலயமாய் வீற்றிருக்கும் வீரருடன் வந்திருப்பாய் எம் தாயே! குமுறியழுகின்ற தாய்மாரை தேற்றுதற்கு முடியாது தேசமது துடிக்கிறது எம் தெருவெங்கும் பகை சூழ்ந்து எம்மினத்தை அழிக்கிறது பகை மீண்டு தலைநிமிரும் காலம் …

    • 0 replies
    • 1.3k views
  22. Started by அஞ்சரன்,

    கையில் நெருப்பிருக்கு என்னிடம் .. பற்றவைக்க தான் திரி இல்லை .. ஆடைக்கடை முன் நின்று பார்த்தால் .. ஆடை யாரு கொடுப்பார் இலவசம் .. ஆயிரம் கேள்வி எழும் மனதில் .. ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் வேணும் .. என்னை துறந்து பார்க்க விரும்பி .. அதுக்கான படிப்பை ஏன் நான் படிக்கவில்லை .. வீழ்த்தவர் எல்லோரும் அரக்கராம் பூவியில் .. அதுவும் தமிழாரம் வரலாற்றில் எப்ப மாறும் .. ஆரியன் கொன்றது தமிழனை என்றால் .. முருகன் வதைத்தது யாரை என்னும் கேள்வி .. தமிழ் மொழியா அல்லது தனி இனமா .. யாரு பிரித்தார் ஏற்ற தாழ்வை .. ஆண்டாண்டு காலம் கடைபிடித்த எல்லாம் .. நவீன யுகத்தில் மட்டும் எப்படி பிழையானது .. என் பாட்டன் சிந்திக்கவே இல்லையா .. எனக்கு மட்டும் எப்படி வந்தது …

  23. Started by Iraivan,

    காதல் மனம் தனியே சிரித்திருக்கும். தனிமையில் நிலைத்திருக்கும். காணுமிடமெல்லாம் தன் காதலையே பார்த்திருக்கும். ஊனுள் உருகிநிற்கும். உள்ளத்தை மறைத்து வைக்கும். தாம் மட்டுந்தானென்றே தம்மையே புகழ்ந்து நிற்கும். காலத்தால் அழியாது என்றும் காவியத்தி உள்ளோமென்றும் போதை தலைக்கேறினாற் போல் பொய்களும் உரைத்து நிற்கும். அன்னைக்கு அடங்கேனென்றும் தந்தை சொற் கேட்கேனென்றும் இன்பம் காதல் ஒன்றே என்று எப்போதும் இறுமாந்திருக்கும். உங்கள் காதல் மனங்களையும் அவிழ்த்து விடுங்கள்.

    • 11 replies
    • 1.9k views
  24. Started by சுபேஸ்,

    பிரிவு... நீயில்லாத நிமிடங்களில் ஒவ்வொரு நொடிகளும் எனைப்பிடித்துப் பெருஞ்சர்ப்பத்தைப்போல அணுவணுவாக விழுங்கிவிடுகின்றன காற்றில்லாத வெற்றிடமொன்றில் அடைத்து விடப்பட்டதுபோல நீயில்லாத கணங்களில் என் ஒவ்வொரு சுவாசங்களும் பெருஞ்ச்சுமையாய் இடம்பெறுகின்றன அருகேதானே இருக்கிறேன் என்று தொலைபேசியில் நீ சிணுங்கினாலும் சுடர் அணையும் சிறுகணத்தில் கனமாய் இறங்கும் இருளைப்போல சிலுவைகளாய்க் கனக்கின்றன நீயற்ற சிறு நொடிகளும் பிரிவு முடித்து உன் ஒவ்வொரு மீள்கையிலும் நீயற்ற நிமிடங்களின் வலிகளை அனுப்பிவிட்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாயைப்போல ஒவ்வொரு தடவையும் பூரித்துப்போகிறது எனதுள்ளம் எல்லாப்பிரிவுகளின் முடிவிலும் இன்னமும் இன்னமும் பேரன்…

  25. கவிதை எழுதுகிறேன் ரசிகர்கள் ஆயிரம்.. கஞ்சிக்கு அழுகிறேன் கவனிப்பார் யாருமில்லை.! என் தாடியின் ரகசியம் காதல் தோல்வி அல்ல.. வெட்டி மழிக்க காசில்லை..!

    • 28 replies
    • 3.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.