Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by putthan,

    அவர் வருவாரா எனது உடைந்து போன நாட்டை ஒட்ட வைக்க அவர் வருவாரா பள்ளத்தில் உள்ள என் ரட்ட(நாடு) சர்வதேசத்தில் உடட்ட(மேலே)வர அவர் வருவாரா தொப்பியை கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம் என் அமைச்சர் உன் அமைச்சர் சண்டை பிடிக்கும் அரசியலில் இது பரம்பரை பழக்கம் ஸ்டிவாய் யிருக்கும் அவர் மூஞ்சி ஸ்மூத்தாய் செய்வார் சாணாக்கியம் என்னை விட அவருக்கே என் நாட்டில் அதிக நாட்டம் ஆகவே அவர் வருவார் போகப் போக பார் இன்னும் புயல் அடிக்கும் அவர் வந்து போன பின் வட மாகாண சபை இருக்காது மாகாணசபை பொலிஸ் பிடிக்காது தமிழனையே பிடிக்காது அவர் வருவார் பூமி மீது நான் பிறந்ததற்க்கு பொருளிருக்கு பொருளிருக்கு......

    • 19 replies
    • 1.1k views
  2. அவர்களா இவர்களா ? மண் ஒழுங்கையும் மழை வெள்ளம் அரித்த மார்க்கண்டர் வளவும் மெளனம் கரைத்த சூனியப் பொழுதொன்றில் - உன் உயிர் குடித்த வேட்டொலியும் மீதமாய்........ சாட்சிக்கும் ஆளின்றி சட்டமும் அரவமின்றி காட்சிக்கு வைத்தாற் போல் காலையில் நீ கண்கள் பிதுங்கி பிடரிக்குள் புகுந்த சன்னத்தின் கோதுகள் ஆதாரமாய்.... 'புலி" செத்துக்கிடப்பதாய் பொய் சொல்லிப் போனார்கள் நீ என் அயலான் என்று சொல்லும் துணிவின்றி நானும் மெளனமாய்.... ஆளவரம் கேட்கிறது அகால இருள் திரள்கிறது ஆட்காட்டிப் பறவையின் அந்தரக் குரல்.... அவர்களா இவர்களா எவர்கள் ? என் வீட்டுப் படலையின் கிடுகுத்தட்டி விலகுகிறது மனிதவுரிமை மன்றில் - அன்றேல் ம…

    • 2 replies
    • 1k views
  3. அவர்கள் பேனைகள் எடுத்தனர் ...நாங்கள் ஆயுதம் எடுத்தோம் ..அவர்கள் வாட்டாரி எடுத்தனர் ...நாங்கள் ஏகே துடைத்து கொண்டு இருந்தோம் ..அவர்கள் திசைகாட்டி எடுத்தனர் ... நாங்கள் மோட்டாருக்கு பாகை பிடித்தோம் ... அவர்கள் வரைபடம் பார்த்தனர் .. நாங்கள் ஜிபிஸ் இல் இலக்கு வகுத்தோம் .. அவர்கள் கட்டிடம் கட்டினர் அழகா ... நாங்கள் அவைகளுக்கு குண்டு வைத்தோம் ... அவர்கள் அரசியலை படித்தனர் .. நாங்கள் அரசியல் படிப்பித்தோம் .... அவர்கள் நல்லுறவு பற்றி பேசினார் .. நாங்கள் நாலுபேரை போட்டா சரி என்றோம் .. அவர்கள் நாடுகளை அணைத்து வந்தனர் ... நாங்கள் உள்ளவன் எல்லாம் துரோகி என்றோம் .. அவர்கள் எம்மை அழிக்க வேண்டியவர்கள் என்றனர் .. நாங்கள் முடிந்தா செய்யேன சவால் விட்டோம் .. அவர்கள் முன் நகர முன் நகர .. நாங…

  4. அவர்களை விடுவிப்போமா.... முட்கம்பியின் பின்னால் நீர் நிறைந்த விழிகளுடன் பல திசையும் நோக்கி பல ஆயிரம் கண்கள்..... இரவு பகல் பாராது எட்டுத்திசையும் நோக்கி எவராவது வருவாரா எம் ஏக்கம் தீர்க்க.... இது தான் இன்றைய கேள்வி அங்கே... பதில் தெரியாமல் துடித்து பிணமாகும் உயிர்கள் அங்கே.... படுக்கை மலசல கூடத்தில் மலசல கூடமோ படுக்கையில்.... பகைவென்று நிலமாண்ட பிரபாகரன் தேசம் பகைவனின் கூடாரத்தில் பல நூறு சித்திரவதையில்.... ஏங்கும் விழிகளுக்கு தூக்கம் கொடுப்பதற்கும் பட்டினி வயிற்றை பசியாற விடுவதற்கும் நாம் என்ன செய்தோம்...? இனியாவது என்ன செய்வோம்...? முடியாத காரியமும் முடித்துக் காட்டிய தலைவனின் பாசறையில் தவண்ட …

  5. அவர்கள் பார்வையில் எனக்கு முகம் இல்லை இதயம் இல்லை ஆத்மாவும் இல்லை அவர்களின் பார்வையில்- இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல் சிறிய இடை பருத்த தொடை இவைகளே உள்ளன சமையல் செய்தல் படுக்கையை விரித்தல் குழந்தை பெறுதல் பணிந்து நடத்தல் இவையே எனது கடமைகள் ஆகும் கற்பு பற்றியும் மழை பெய்யெனப் பெய்வது பற்றியும் கதைக்கும் அவர்கள் எப்போதும் எனது உடலையே நோக்குவர் கணவன் தொடக்கம் கடைக்காரன் வரைக்கும் இதுவே வழக்கம்........ அ.சங்கரி http://noolaham.net/project/01/16/16.htm

  6. அவலத்தில் இருந்து ஒரு குரல் ஈழத்தமிழராக பிறந்த நாங்கள்அழிவை மட்டும் கண்டு நிற்கும் ஏதிலிகள். நின்மதியாய் வாழ ஏங்கும் அகதி அற்ற வாழ்வுக்கு ஏங்கும் மானிடத்தின் பகுதி நாங்கள்.பிறந்தவர்க்கு இறப்பு நிஜம் எங்களின் முற்றத்தில் நித்தமும் நிஜம். இரத்தவாடை எங்கள் வீட்டில் இன்றும் கந்தகப்புகைஎங்கள் மண்ணில். துன்பம் மட்டும் மீதிவாழ்வில் சற்றும் இன்பம் இல்லை சமாதானம் வந்ததுண்டு ஆனால் எந்த பயணும் தந்ததில்லை. பேச்சுக்கள் பல நடந்ததுண்டு உடன்பாடு கண்டதில்லை. பேச வந்த நாடு எல்லாம் புலிகளாகி போன பின்பு தனியனாக நாங்கள் இங்கு. சுற்றி நின்ற சொந்தமில்லை இறந்து கொஞ்சம் அழிந்து போச்சு பறந்து கொஞ்சம் தூரப்போச்சு. வேர்வை விட்டு கட்டி வைத்து அழகுபார்த்த வீட்ட…

  7. அவலம் உனக்கு காண்...! காட்டு மிருகமுடன் கலவியாடி பெற்ற பிள்ளை நாட்டை ஆளுதென்றால்- நாடு நாறாமல் என் செய்யும்...?? கூற்றுவனே அவனாகி- தமிழர் குரல் வளை அறுக்க வந்தால் ஏ.கே.யை தூக்காமல்- என்ன ஏப்பையா அவர் எடுப்பார்...? விழுந்து படுத்ததென்றா- புலி வீராப்பு நீர் போட்டீர்...? எழுந்து பாயும் இனி - உன்னை எவன் வந்து தான் காப்பார்...?? அரக்கர் குலம் நீவீர்- தமிழரை அழிக்க வருகையிலே- புலி பார்த்தா நிற்க்கும் என்ன பைத்திய காறர்களே...?? சிந்தனை உமக்கென்றா சிறகடித்து நீர் பறந்தீர்..? ஒடிந்து விழுந்தீர் பார்- இனி ஓலம் உமக்கு காண்...! -வன்னி மைந்தன் - http://www.kalakam.com/forum/viewtopic.php?p=125#125 …

    • 7 replies
    • 1.8k views
  8. Started by nige,

    பல நாள் தவமிருந்து விரதங்கள் பல பிடித்து கிடைத்த வரம் இவள் கொட்டிக்கிடக்கும் சந்தோசத்தில் மணம் வீசும் மலராய் தினமும் வளர்ந்து மங்கையானாள் வந்தான் ஒருவன் மலர் என்றான் தேன் என்றான் உலகில் நீயே அழகி என்றான் அன்பிற்கு நீயே அகராதி என்றான் மயங்கிப் போனாள் அன்பிற்கு புது அர்த்தம் சொன்னான் காதலை கண்ணால் கற்பித்தான் உறவை புது வழியில் ஒப்பித்தான் அவனின் காதல் மொழியில் அவள் சிறைப்பட்டுப் போனாள் தன்னை மறந்து தன்னையே கொடுத்தாள் பழத்தை உண்டதும் அவன் பறந்து போனான் காத்திருந்தாள் காதலன் வரவில்லை காதல் பொய்த்த பின்னும் காத்திருக்கிறாள் காதலனுக்காக அல்ல சூதுவாது எதுவும் அறியா அந்த பிஞ்சு உயிருக்காய் ........

    • 26 replies
    • 3.1k views
  9. Started by கவிதை,

    பூக்கள் பூப்பதற்கு காத்திருப்பதைப் போல உன் அழைப்புக்களுக்காக விழிகள் பூத்திருப்பேன்! இந்த உலகத்தில் பறக்கும் அத்தனை பட்டாம்பூச்சிகளும் என்னைச் சுற்றியே பறப்பதாய் உணர்வேன்... நீ என்னோடு பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில்! இத்தனை இனிமை இருப்பதாய்க் கேள்விப்பட்டால்... தேனீக்கள் உன்னை மட்டும் சுற்றியே வட்டமிடும்! நிலவும் உன்னைப் பார்க்கப் பூலோகம் வரும்! தென்றலும் உன்னைத் தேடி தெருத்தெருவாய் அலையும்! கடலலைகள் உன் காலடியில் தவங்கிடக்கும்! என்னைப் போலவே....!

  10. அவளும் அலரி மாளிகை விருந்தும்...! -எஸ்.ஹமீத்- பாழும் போரில் பதியிழந்து பணியிழந்து நிதியிழந்து நிம்மதியிழந்து நின்ற வேளை சுதந்திரப் பசியெழுந்தது பெரிதாய்...! ***** அடிமைத் தளையறுக்கும் விடுதலைக் கனவால் ஆயுதங்களுடன் உறவாடி- ஆவேசத்துடன் போராடி- இரத்தத்தில் நீராடி- எதிரிகளைப் பந்தாடி ஈற்றில்... இலட்சியக் கோட்டை இடிந்துவிழ- தோற்றுத் துவண்டு சரணடைந்து- இன்றோர் மொட்டைத் திரியாய்- பட்ட கொடியாய் கெட்ட குடியாய்- ஓலைக் குடிலுள் ஒடுங்கிய வாழ்வு...! ***** சீராட்டி வளர்த்த சின்னக்கா, சிறு வயதிருந்தே சேர்ந்து வாழ்ந்த சினேகிதிகள், அப்பாவின் அண்ணன்மார் தம்பிமார் அவர்தம் குடும்பத்து அங்கத்தவர்கள் இன்னும்... உற்றார் உறவினர் ஊராரென அத்தனை பேரும் விட…

  11. அவளை அனுபவிக்கஇ அணு அணுவாய் உள்ளிழுக்கஇ இதழ் குவித்து இன்பம் காணஇ சுற்றம் மறந்து சுகம் காணஇ சற்று நேரம் சொர்கம் செல்லஇ விரல் இடுக்கில்இ இதழ் இடுக்கில் - இறுதியில் இதய அடுக்கில் - இன்பமாய் இடம் மாறிட. வெண்ணிற மேனியில் பொன்னிற கேணியில் மூழ்கி நான் மூச்சிழுக்க... அவளை அழைத்துஇ ஆடை உரித்துஇ வாயில் பொருத்தினேன் - சிகரெட்

    • 7 replies
    • 3.6k views
  12. Started by pakee,

    உயிரை எரித்து காதல் வளர்த்தேன் கடைசியில் அவளை இழந்து தனியாக நிற்கிறேன்..

    • 0 replies
    • 545 views
  13. வேதனையை வாழ்க்கை ஆக்கிவிட்டவள் அன்புக்கு அர்த்தம் கேட்டால் காயங்களை மட்டும் காரணமின்றி தந்தவள் காதலுக்கு கருத்து கேட்டால்... நேற்று வந்த யாரையே நேசித்தவளுக்கு... நெடுநாளாய் நேசத்தை மட்டும் காட்டிய என் உணர்வு உறைக்காமல் போனது -என் துரதிஸ்டமே... கற்பனையில் என் காதல் கடந்து சென்று விட்டது களிப்புடன் -அதற்குள் கனவை கலைத்ததால் கழிப்பும் காணாமல் போனது ஆயிரம் சோதனை தாங்கிய ஆணிவேர்கள் கூட அழிந்திடும் நிச்சயம் காதலில் தோற்றிருந்தால் ஆனாலும்... இறைவனிடம் கேட்க எஞ்சியிருக்கிறது ஒரு கேள்வி நிறைவேறா ஆசையினை முடிவுறா பயணமதை வாழ்வழிக்கும் காதலை- ஏன் வரவைத்தாய் என் மனதில்? சத்தியம் செய்து விட்டதால் சமர்களம் எனை வெறுத்த…

  14. அவளை யார் அறிவார் ??? பால்குடி மாறிப் பத்துவயது நடந்தபொழுது அடிவயிற்றில் ஓர்வலி கீறலாய் உதித்தது . எதுவுமே புரியாத அவளுக்கு அவள் அம்மா எடுத்துரைத்தாள் பருவத்தின் அழைப்பு மணியை அவள் வாழ்வு பூராக அவளுடன் தொடரப்போகும் இந்தப் புரியாத வலி அவளிற்குச் சத்தியமாகத் தெரியாது ........ பருவத்தின் தூரிகைகள் அவள் உடலில் பக்குவமாய்க் கோலமிட , அவள் பள்ளிக் கூட்டுகள் பதறியே அவளை நோக்க பாவை அவள் மனதும் கர்வத்தால் பறந்தே திரிந்தது........ முகத்தைக் காட்டும் கண்ணாடி அவள் உற்ற தோழியானது றெக்ஸ்சோனாவும், பெயர் அண்ட் லவ்லியும் அடிக்கடி கரைந்தே போனது !!!! காலதேவன் போட்ட கோலம் அவளை கட்டிளம் குமரியாக்க, அவளை கட்டியேபோட அவள் அப்பா அலைமோதி அலைந்தார் ....... …

  15. Started by nedukkalapoovan,

    அழகே என்றேன்.. அருகே வந்தாள் கண்களால் பேசினாள் கருத்தைக் கவர்ந்தாள் கதைகள் பேச முதலே.. கன்னத்தில் தந்தாள்..! டேய் நாயே.. வெளவாலா தேடுறாய் போர்த்திக் கொண்டே ஓடினாள்..! என் கண்களின் வாக்கு அவள் அறியாள்..!

  16. Started by இலக்கியன்,

    வான் வெளியில் வண்ண நிலா பொட்டு வைத்த வட்ட நிலா சேயைத்தாலாட்டும் தங்கத்தாய் அவளா கார் இருளில் விண் தாரகையா கண் சிமிட்டும் பெண் காரிகையா காதலன் விழிகளில் காதல் பைங்கிளியா வான வில்லின் வர்ண ஜாலங்களா கண்களில் அவள் காமா பாணங்களா மேகத்தில் தீட்டிய மேனகைதான் அவளா பொறுமையில் அவள் பெண் பெட்டகமா உயிர் கொடுத்த உன்னத சித்திரமா சுமைதாங்கும்-அந்த தூண்கள் அவள்தானா கவிதைகளில் அவள் காதல்க் கற்பனையா இனிக்கின்ற தமிழ் தேன் சுவை உச்சமமா பேசும் மொழிகளின் தாயும் அவள்தானா அவள் என்கின்ற தலைப்பில் முத்தமிழ்மன்றத்துக்காக புனைந்த கவி இது

  17. Started by கார் முகிலன்,

    அலங்கரித்த தலைமுடியலில் ஆயிரம் கவிதைகள் நெகிழ்கிறது கண்டேன் அந்த கருவிழிகள் இடது பக்கமாக திரும்பி ... என் இதயத்தை குத்திய பொழுது.... கமல மேனியில் கள்ளச் சரிரிப்பு கொண்ட அதன் இதழ்கள் சுவைக்க அழைக்குது உன் இமைகள் என்னை தண்டிக்க காத்திருக்கிறது அம்பு போல் (எதிர்ப்பு) சிவந்த மேனியில் பொண்ணும் மங்கிப்போகிறது... கைவிரல்கள் நளினமாக பற்றிய இடம் யாவும் சிலையாய் போகிறது மெய்சிலிர்த்து கல்லும் சிதறுகிறது குமுதச் சிரிப்பில் கவர்ந்த கள்ளி குங்குமமும் நிறம் குறைவோ உன் இதழ் அழகிற்கு... பஞ்சு மேனி பவளப்பாறை என் இதயத்தை உடைத்து உன் அழகை சேகரிக்கிறது.... விலை மதிப்பில்லாமல் உயர்கிறது உன் அழகு என் இதயத்தில்... …

  18. மண்ணும் விண்ணும் மட்டுமல்ல மனசும் பூச்சூடிய ஒரு இரவின் பாடல். அதை எப்படி ஆரம்பிப்பது ? யார் எடுத்துத் தந்த அடியிலிருந்து ? இல்லை எடுத்துச் செல்லுங்கள் உங்கள் அதீத கற்பனைகளை. மதுவும் விந்தும் ஊறிய சொற்க்களை. கனவு வரை மண் தோய அவள் இட்ட அடிகளில் உள்ளதே கவிதை. அவள் பி.ஏ முடிக்கவில்லை என்றார்கள். அவள் காட்டில் என்றார்கள் மேலும் அவள் ஒரு கெரிலா போராளி என்றார்கள். நானோ அவளை கொழும்பு நகரத் தெருவில் பார்த்தேன். நான் உறைந்தது அச்சத்திலா ஆச்சரியத்திலா அல்லது அவள் மீதான மதிப்பினிலா. கோப்பிக் கடை மேசையுள் மறைத்தேன் நடுங்கும் என் கால்களை. அவள் அதே அமைதி ததும்பும் முகமும் குருத்துச் சிரிப்புமாய் முகவரி கேட்காதீர்கள் என்றாள். …

    • 12 replies
    • 2.4k views
  19. அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு வசந்த்தின் இசையில் சுஜீத் மற்றும் ஸ்ரெபியா டன்ஜா ஆகியோரின் குரலில் வெளிவந்திருக்கும் இந்தப்பாடலை எழுதியவரும் சுஜீத் தான். சந்தூரின் உதவியுடன் லண்டினில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது இந்தப்பாடல். சுஜீத்தின் சிங்கிள் என்ற அல்பத்தில் இடம்பெற்ற பாடல்களை நீங்கள் ஏற்கனவே சயந்தன் அண்ணாவின் சுஜீத்திடுனான நேர்காணலின் மூலம் அறிந்திருப்பீர்கள்.இன்று கூட வசந்தன் அண்ணா சுஜீத்தின் அடுத்த அல்பத்தில் இடம்பெறுகின்ற "விடுதலை" என்ற பாடலின் ஒளிப்பதிவை வசந்தம் வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார். ஒருதடவை பார்த்தபோதே "இது கதையல்ல நியம்" என்ற இந்தப்பாடல்என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.பாடலைப் பார்க்கும்போது மலேசியத்திரைப்படமான "ஆண்டாள்" கண்முன்னே …

  20. பள்ளிச் சீருடையில் பட்டென்று வந்தவளா இவள்.. கண்கள் அகல விரிய பார்வை விழுந்தது அவள் மீது..! நேற்று அவள் வகுப்பில் என்னோடு கதிரைக்கு சண்டை பிடிக்க தள்ளி விட்டதில் சிறு உரசல் கத்தியே உயிரை எடுத்தாள் வாத்தியார் தந்த அடியோடு அது நினைவில் பதியும் வரை. அன்று அவள் சிறுமி நான் சிறுவன். வளர்ந்தோம் இருவரும் பருவமும் வந்து சேர்ந்தது அவள் கடைக்கண் பார்வை வீச நானும் பதிலுக்கு பேச ஆசைகள் அரும்பின அதற்கு அன்பு என்று பெயரிட்டோம். கடிதங்கள் பரிமாறி கடலையும் போட்டு கையும் கோர்த்து வலண்டைனும் கொண்டாடினோம். காலமோ ஓட்டமாய் ஓடியது.. ஓர் நாள் சொன்னாள் "அப்பாக்கு லண்டனில் நிரந்திர விசா வந்திட்டுது நாங்களும் போகப் போறம்." மின்னலா…

  21. [size=4]என் இரவுகள் அவள் குரல் கேட்டே விடிந்தது என் விடியல்கள் அவள் முகம் பார்க்க துடித்தது என் விரல்கள் அவள் தலை கோத விழைந்தது என் சுவாசம் அவள் வாசத்தால் நிறைந்தது என் குறும்புத்தனங்கள் முழுதும் அவளின் செல்ல கோபத்திற்கவே உருவானது நான் வாங்கும் பொருட்கள் எல்லாம் அவளாலே அழகானது ஏனோ நான் காதல் சொன்ன போது அவளின் மொழி மட்டும் மௌனமானது..![/size]

    • 5 replies
    • 1.4k views
  22. Started by கஜந்தி,

    வானமே இல்லாத நிலவாய் தென்றலே தொடாத மலராய் எழுதப்பட்ட புத்தகத்தில் வர்ணிக்கப்படாத கவிதையாய் கண்களின் கண்ணீரைப் புரிந்து கொள்ளா உறவுகளின் சுமைதாங்கியாய் மூடநம்பிக்கையின் ஆணிவேரில் தொலைந்து விட்ட சந்தோஷங்ககளாய் இரவின் வரவிற்காய் காத்திருக்கும் அல்லிமலராய் கனவுக்குள் நிஜத்தை தோடுபவளாய் தலையணைக்கு மட்டும் தெரிந்த கண்ணீரின் ஈரத்தை சொல்ல யாருமில்லாத அவள் யார்?

  23. காதலர்களாக சுற்றித் திரிந்த வேளையில் முதல் முதலாக ஒரு முத்தம் கொடுத்த பொழுது, அவள் சொன்னால் சீ அசிங்கம் என்று.... கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் எப்ப பார்த்தாலும் இது தானா என்றால்... இரண்டு குழந்தைகள் பெற்ற பின் அடுப்பு வீட்டில் யாரும் கவனிக்காத போது அவள் கழுத்துக்குக் கீழ் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு என்றால்... சில காலத்திற்கு பிறகு கன்னத்தில் சுருக்கு விழுந்து பழைய நினைவுகலுடன் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா என்றால் அவள்... …

  24. கண்கள் மேய விரல்கள் தடவ வெளிச்சத்தில் இது நடக்க.. அவள் வேண்டும். பக்கம் பக்கமாய் பாகம் பாகமாய் பிரித்துப் படிக்க.. காரியம் முடிக்க சித்தி பெற அவள் வேண்டும். சிந்தனைக்கு ஓர் புத்துணர்ச்சி இரத்த நாளங்களுக்கு ஓர் கிளர்ச்சி..! அவள் சேவை தேவை வாழ்க்கை எங்கும்..! சோம்பல் போக்க படுக்கையில் கூட எனக்கு அவள் வேண்டும். இன்றேல் பைத்தியம் தான் பிடிக்கும்..! இத்தோடு சிந்தனைக்கு சிறையிடுங்கள் அவள் வேறு யாருமல்ல.. நான் படிக்கும் பாடப் புத்தகம்..! Spoiler படுத்திருந்து புத்தகம் படிப்பதே எனக்கும் பிடிக்கும். இதில் பல இலாபம் அதில் ஒன்று.. அப்படியே நித்தாக்குப் போயிடலாம்.

    • 21 replies
    • 1.4k views
  25. அவள் 1 மண்ணும் விண்ணும் மட்டுமல்ல மனசும் பூச்சூடிய ஒரு இரவின் பாடல். அதை எப்படி ஆரம்பிப்பது? யார் எடுத்துத் தந்த அடியிலிருந்து? இல்லை எடுத்துச் செல்லுங்கள் உங்கள் அதீதக் கற்பனைகளை. மதுவும் விந்தும் ஊறிய சொற்களை. கனவுவரை மண் தோய அவள் இட்ட அடிகளில் உள்ளதே கவிதை. அவள் பி.ஏ. முடிக்கவில்லை என்றார்கள். அவள் காட்டில் என்றார்கள். மேலும் அவள் ஒரு கெரிலா போராளி என்றார்கள். நானோ அவளை கொழும்பு நகரத் தெருவில் பார்த்தேன். நான் உறைந்தது அச்சத்திலா ஆச்சரியத்திலா அல்லது அவள் மீதான மதிப்பினிலா. கோப்பிக் கடை மேசையுள் மறைத்தேன் நடுங்கும் என் கால்களை. அவள் அதே அமைதி ததும்பும் முகமும் குருத்துச் சிரிப்புமாய் முகவரி கேட்காதீர்கள் என்றாள். வாழ்வு புதிர்கள் போன்…

    • 4 replies
    • 705 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.