கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
"போலிச்சாமி வண்டியில் போகிறார்" "திருட்டு முழி முழிக்க திரும்பி பார்த்து பார்த்து திருநீர் அள்ளித் தூவி திருநங்கை ஒன்றைத் தேடுறான்!" "குருவி சாஸ்திரம் கூறி குருட்டு நம்பிக்கை வளர்த்து குருவாய் தன்னை நினைத்து குருதி கொதிக்க குழைகிறான்!" "ஊரு பேரு தெரியாதவன் இருளும் பகலும் புரியாதவன் தருமம் பற்றி பேசுகிறான் செருக்கு பிடித்து அலைகிறான்!" "தெருவில் தனிய நின்றால் அருகில் வந்து போதிக்கிறான் புருஷன் இல்லை என்றால் புருவம் உயர்த்தி பார்க்கிறான்!" "அருள் வேண்டி பத்தினி அருகில் நெருங்கி வந்தால் அரு…
-
- 0 replies
- 78 views
-
-
"புரியாத புதிர் அவள் ??" "நிலா ஒளியில் காய்ந்து கனா கடலில் மிதந்து நலமா என கேட்டு நங்கை இவள் வந்தாள்!" "பலா பழம் சுவைத்து கானா பாட்டு பாடி சுகமா என கேட்டு சுந்தரி இவள் வந்தாள்!" "நெருங்கி வந்து இருந்தாள் நெஞ்சம் குளிர கதைத்தாள் குறும்பாய் சில செய்தாள் மறுத்தால் முறைச்சு பார்த்தாள்!" "சுருங்கி சிணுங்கி குழைவாள் கொஞ்சம் விலத்தி இருப்பாள் வெறுப்பாய் நான் பார்த்தாள் நறுக்காய் அவள் சிரிப்பாள்!" "மனம் திறந்து பேசுவாள் கள்ளம் கபடம் இல்லை சொல்ல எதோ வருவாள் நாணி கோணி போயிடுவாள்!" "சினம் கொண்டு முறைப்பாள் உள்ளம் அவளுக்கு கொதிக்கும் கொல்ல அவளுக்கு தோன்றும் கூனிக் குறுகிக் போயிடுவாள்!" "சந்த…
-
- 0 replies
- 338 views
-
-
"பக்கத்து வீட்டுப் பைங்கிளி" "பக்கத்து வீட்டுப் பைங்கிளி கோடியில் நிற்குது வெக்கத்தை விட்டு அது ஆடிப் பாடுது தூக்கத்தை கலைத்து எனக்கு துடிப்பை தருகுது ஏக்கத்தைக் கூட்டி மனதை நொடியில் வாட்டுது" "மேகத்தைக் கூட்டி மழை தானாய் கொட்டுது தேகத்தைக் நனைத்து கிளி கானா பாடுது ராகத்தை வீசி என்னை மீனாய் பிடிக்குது மோகத்தைக் கொட்டி அது மானாய் மறையுது" "ஆற்றம் கரையில் பைங்கிளி அன்னநடை போடுது நூற்றுக்கு மேல் அன்னம் பின்னால் தொடருது காற்று வேகத்தில் தாவணி மின்னலாய் மறையுது முற்றும் துறந்த முனியும் தன்னை மறக்குது" "வயல் வெளியில் பைங்கிளி துள்ளி திரியுது கயல் விழியில் கவர்ச்சியை அள்ளி எறியுத…
-
- 0 replies
- 80 views
-
-
"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்" "இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனு போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவேற்றேன்" "இசை போன்ற அழகிய பேச்சில் இடைவெளி விட்டு தள்ளி அமர்ந்து இறைவி நேரே வந்தது போல இதயம் மகிழ பாடம் தொடங்கினாள்" "இலக்கியம் கொஞ்சம் எடுத்துக் காட்டி இரு வரி திருக்குறள் கூறிக்காட்டி இயல் இசை நாடகம் சொல்லிக்காட்டி இயற்றமிழ் தொல் காப்பியம் இயம்பினாள்" "இரட்டைக் கிளவி பயிற்சி தந்து இலக்கணம் ஐந்துக்கும் விளக்கம் கூறி இடைச்சொல் கூறி கயல் விழியாள் இடை வளைவு குலுங்க புன்னகைத்தாள்" "இலக்கியம் சொல்லா குறுநகை அழகில் இதயம் பறிகொடுத்து கிட்ட நெருங்க இளமையும…
-
- 0 replies
- 108 views
-
-
"கருப்பு பூனை குறுக்கே பாய" "கருப்பு பூனை குறுக்கே பாய கருப்பாயி கலங்கி பயணம் நிறுத்த மருண்டு அருண்டு எலி பதுங்க வெருண்டு வெறுத்து பூனை பார்க்குது!" "கருப்பு காகம் முற்றத்தில் கரைய கருப்பாயி வாசல் கதவு பார்க்க கருப்பன் வரும் நம்பிக்கை துளிர நெருப்பு மனது எரியுது தவிக்குது !" "கருப்பு விழிக்கு விக்கல் வர கருப்பன் இவள் நினைவோ என வருடி அழுத்தி நெஞ்சை இளக்க இருந்த விக்கல் மறையுது போகுது!" "கருப்பு பல்லி தலையில் விழ கருப்பாயி நெஞ்சம் பதைத்து துடித்து கருப்பன் என்ன ஏதோ என ஒரு தீபம் கொளுத்துது காட்டுது!" "கருப்பு இருட்டில் சென்ற கருப்பன் வெருண்டு அலைந்து வீடு திரும்ப குருட்டு பிசாசு ப…
-
- 0 replies
- 204 views
-
-
"என்று - நான் உன்னைக் காண்பேன்??" "ஆந்தை அலறவில்லை?- சுடர் ஒளி அணையவில்லை? எந்தை அவள் - தன் ஒளி அணைத்துவிட்டாள் முந்தை நாளில் - கொஞ்சி கூடி குலாவினாள் பந்தை அடித்து - சேயுடன் ஆனந்தக் கூத்தாடினாள்" "சிந்தை ஓடவில்லை? - என் மனம் ஆறவில்லை? எந்தை அவள் - கண் மூடி உறங்கிவிட்டாள் நிந்தை பேசாள் - நினைவிலும் கெடுதல் செய்யாள் விந்தை புரிந்தாள் - எந்நாளும் உள்ளம் கவர்ந்தாள்" "மந்தை கூட்டம் போல் நாம் இருந்தோம்! தந்தை தாயாக சேர்ந்து நாம் இருந்தோம்! இந்தை பிள்ளை இன்னும் கண்ணீர் துளியில் கந்தை கொண்டு கண் துடைக்க வாரயோ?" "குந்தை அண்டி அவள் ஒய்யாரமாய் இருப்பாள் விந்தை காட்டி சேயுடன் ஒன்றி இருப்பாள் சிந்தை குளிரும் அ…
-
- 0 replies
- 249 views
-
-
"இலங்கையைச் சேர்ந்த தயா நிகஹெட்டியா / Mr Daya Nikahetiya வின் ஆங்கில கவிதை " Amanda , My pretty little sister ..." இன் தமிழ் ஆக்கம்" "அமந்தா, அழகான எங்கள் குட்டி தங்கையே" "அழகான எங்கள் குட்டி தங்கையே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் எம்மை தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ ?" "வாய் மடித்து கண் சுழன்று வான் உயர கை அசைத்து வாட்டம் இன்றி துள்ளி சென்றவளே வான் இருண்டும் வராதது எனோ ?" "மணலில் கதிரவன் புதையும் மாலையில் மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில் மரணம் தழுவ தொடர்வண்டியின் முன் மடையர் போல் பாய்ந்தது எனோ ?" "செவ்வாய் நீயோ வீடு வந்தாய் செவ் இதழ் நீயோ திறக்கவில்லை செல்வச் செழிப்ப…
-
- 0 replies
- 109 views
-
-
"ஒட்டாவா வீதியில் காலை பொழுதில்" "ஒட்டாவா வீதியில் காலை பொழுதில் ஓட்டா வாழ்வை கொஞ்சம் சிந்தித்தேன் காட்டின் நடுவே கேம்ப் போட்டு காட்டாத வாழ்வை கனவு கண்டேன்" "கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது பாட்டா சொல்லி தேவதை வந்தது" "சுட்டி பொண்ணு புன்னகை சிந்தி பாட்டி கையை மெல்ல பிடித்து வட்ட மிட்டு வானத்தில் இருந்து கூட்டி வந்து இன்பம் பொழிந்தது" "மெட்டி ஒலி காற்றோடு கலக்க முட்டி மோதி நிமிர்ந்து நடந்து பொட்டக் குட்டி பாட்டி பெயரில் லூட்டி அடிச்சு அட்டகாசம் போடுது" "கட்டு மரமாக வாழ்வில் மிதந்து ஆட்டி படைத்த நினைவுகளை எறிந்து குட்டி பாட்டி மழலையில் மகிழ்ந்து …
-
- 2 replies
- 356 views
-
-
"பல்கலைக்கழக வாழ்வின் நினைவுகள்" [பாடல் 02] [பல்கலைக்கழக நினைவு இதழில் வெளியானது / பேராதனை, இலங்கை ] "தேடிய இன்பம், ஆடிய நையாண்டி மடியில் கொட்டுது, ஆயிரம் பாடல்கள் வாடிய இதயம், பூக்குது மீண்டும் கூடிய எம்மிடம், குதித்து துள்ளுது" "ஆண்டு ஒன்று அஞ்சி கழிந்தது ஆண்டு இரண்டு நிமிர்த்தி சென்றது ஆண்டு மூன்று துணிந்து நின்றது ஆண்டு நான்கு அறிவால் மலர்ந்தது" "நிறைந்த படிப்பு, இடையில் காதல் குறைந்த கூத்து, மத்தியில் தேர்வு உறைந்தது நெஞ்சம்,முடிவு கண்டு திரையும் வீழ்ந்தது, சிமிட்டில் பறந்தது" "நினைவுகளை விட்டு, மறைந்தது பல்கலைக்கழகம் சுனைகளாய் நெஞ்சில், நல்லவை நின்றன நனைக்கவில்லை எம்மை, பாரபட்சமும் இனவெறியும…
-
- 0 replies
- 195 views
-
-
"யாரோ? நான் யாரோ ?" "தெருவோர மதகில் இருந்து ஒருவெட்டி வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும் செய்யா கருங்காலி தறுதலை நான்" "கருமம் புடிச்ச பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும் குனிந்து விலக எருமை மாடு நான்" "வருடம் உருண்டு போக வருமாணம் உயர்ந்து ஓங்க கருணை கடலில் மூழ்க மிருக-மனித அவதாரம் நான்" "தருணம் சரியாய் வர இருவர் இரண்டாயிரம் ஆக ஒருவர் முன் மொழிய தரும-தெய்வ அவதாரம் நான்" "ஊருக்கு கடவுள் நான் பாருக்கு வழிகாட்டி நான் பேருக்கு புகழ் நான் பெருமதிப்பு கொலையாளி நான்" "குருவிற்கு குரு நான் …
-
- 2 replies
- 417 views
-
-
"படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன" "நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க" வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம் முழங்கினர், க…
-
- 0 replies
- 203 views
-
-
"என் இறுதி சடங்கில்" "என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது" "ஓய்வு எடுக்க பெட்டியில் வைத்து ஒளி தீபங்கள் சுற்றி வைத்து ஒதுங்கி இருந்து தமக்குள் கதைத்து ஒழுங்கு படுத்துவது எனக்கு தெரிகிறது" "சிறந்த ஆடைகளை தேர்ந்து அணிவித்து சிறப்பான அலங்கார பாடை தருவித்து சிறார்கள் கையில் பந்தம் கொடுத்து சிரிப்பு இழந்து தவிப்பதை பார்க்கிறேன்" "நரம்பு நாடி தளர்ந்து போகையில் நம்மைநாடி நோய் வந்து சேர்கையில் நமக்கு பிடித்தவர் இல்லாமல் போகையில் நல்வரமாய் தான் இறப்பு இருக்குது" "மன்னனாய் பிறந்தாயென்று கர்வம் கொள்ளாதே மன்மத அழகனென்று லீலைகள் செய்யாதே மதுபோதை…
-
-
- 4 replies
- 371 views
- 1 follower
-
-
"என்னைப் பற்றி மனதில் பட்டவை" "என்னை நினைத்தேன் சிரிப்பு வருகுது அவளை நினைத்தேன் அழுகை வருகுது வாழ்வை நினைத்தேன் ஆத்திரம் வருகுது மரணத்தை நினைத்தேன் மகிழ்ச்சி வருகுது!" "குழந்தை பருவம் சுமாராய் போச்சு வாலிப பருவம் முரடாய் போச்சு படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு பழக்க வழக்கம் கரடாய் போச்சு!" "உண்மை தேடி உலகம் சுற்றினேன் வேஷம் போட்ட மனிதர் கண்டேன் மாற்றி அமைத்த வரலாறு பார்த்தேன் காசுக்கு மாறும் காதல் கண்டேன்!" "ஒற்றுமை கொண்ட தமிழர் தேடினேன் மரண வீட்டிலும் வேற்றுமை கண்டேன் பதவி ஆசை பிரித்து விளையாடுது பணம் தேடி வியாபாரம் செய்யுது!" "ஒத்த தறிவான் உயிர் வாழ்வான் பிரிந்து கிடப்பவன் மரித்து …
-
- 3 replies
- 455 views
-
-
"என் பிறந்த நாளுக்கு மனதில் உதித்தது" "அழகான வாழ்வு முடிவுக்கு பயணிக்குது அன்பான இதயங்களை எண்ணிப் பார்க்குது அதிகாரம் செலுத்திய காலமும் உண்டு அறிவு கொண்டு உணர்ந்ததும் உண்டு!" "ஆரம்பித்த எதுவும் முடிவு காணுமே ஆத்திரம் குறைத்தால் வாழ்வு சிறக்குமே ஆசை கொண்டு ஈடுபட வேண்டும் ஆணவம் துறந்து செயல்பட வேண்டும்!" "இன்பம் துன்பம் நீயே தேடியது இருப்பதைக் கொண்டு வழியை அமை இதயம் திறந்து வரவேற்க பழகு இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதைத் தவிர்!" "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே ஈகை என்பது வறியவர்க்கு கொடுப்பதே ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன் ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!" "உயர்ந்த நோக்கம் மனதில் எழுக உரிமை கெடாமல் ஒப்பந்தம் செய்க …
-
- 2 replies
- 315 views
-
-
'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும். நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட…
-
-
- 4 replies
- 793 views
-
-
செய்தி : அமெரிக்காவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணம் செய்த சிங்கப்பூர் கப்பல் அமெரிக்க தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் பிரான்சிஸ் ஸ்காட் கீ அவர்களின் பெயர் கொண்ட பாலத்தில் மோதியது. பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இன்று ஒரு கப்பலால் காணாமல் போனது ஒரு கப்பல் பாலத்தை இடித்தது ஒரு கப்பல் அவசர நிலையைப் பிரகடனம் செய்தது ஒரு கப்பல் அமெரிக்க தேசிய கீதம் பாடிய கவிஞன் பெயரை தண்ணீரில் வீழ்த்தியது ஒரு கப்பல் இலட்சம் பேரின் வேலையை கேள்விக்குறி ஆக்கியது இன்றைய குளிர் இரவில் அந்தப் பயங்கரம் நடந்தது இரும்புச் சட்டங்கள் காற்றில் பறந்தன பயணிகள் பலர் நீரில் மூழ்கினர் ஒரு நாட்டின் அடையாளம் நதியில் மூழ்கியது ஒரு கப்பலால் அதைச…
-
-
- 12 replies
- 880 views
-
-
உள்ளதை மறைத்து உள்ளவரோடே உறவாடும் ஊடக நரிகளின் உஷ்ணப் பேருமூச்சோ . வள்ளலார் வாக்கையே வசைபாடிய - நம் வம்சம் போக்கற்ற போலிச்சாமியார்களின் புகலிடம் ஆனது கண்ட பூமித்தாயின் கனல் முச்சோ மாட்டுக்கே நீதி தந்ததோன் - மண்ணில் மட்டற்ற மாசு புரிந்தார் பணம் செய்யும் மாயத்தால் மண்புளோராய் மாறி மானமின்றித் திரிதல் கண்டு வெட்கித் தன் விழி மறைத்த நீதித் தாயின் சின மூச்சோ சுழலத் தொடங்கிய மின்விசிறி என் சிந்தனைக்கு சுவரிடவே வழமை வாழ்க்கைக்குத் திரும்பியவளாய்...... …
-
- 2 replies
- 892 views
-
-
நாங்க தமிழர்! நாங்க கனடா. ஆனால் மற்ற தமிழர்கள் கனடா வர வேண்டாம் என்று சொல்லுவம். நாங்க தமிழர்! கனடாவில் வேலை இல்லை என்று செல்லுவம். ஆனால் இரண்டு வேலையும் நல்ல சம்பளத்தோட நல்ல வேலை செய்வம். நாங்க தமிழர்! கனடாவில் கஸ்ரம் என்று சொல்லுவம். ஆனால் இரண்டு வீடு வைத்திருப்பம். இரண்டு மில்லியன் dollars மேல் சொத்து வைத்திருப்பம். நாங்க தமிழர்! குளிர் வராதேங்கோ எண்டுவம். நாடு போனா வெக்க தாங்க மாட்டம் என்று படம் காட்டுவம். நாங்க தமிழர்! என்னோட பிள்ளை கனடாவில் என்று பெருமை பீத்துவம். ஆனால் பக்கத்து வீட்டு காறன் போறான் என்றால் வயிறு கூட ஒரு நிலைக்கு வர முடியாம தவிப்பம். நாங்க தமிழர்! எங்கட…
-
- 4 replies
- 704 views
-
-
யாழ்ப்பாணம் வந்தாராம் ரணிலார் சோக்கான கதை எல்லாம் சொன்னாராம் சேர்ந்து பல பேருடன் நின்று செல்பியும் எடுத்தாராம் நல்லவன் போல நடிப்பார் நாம் நினைப்பது போல அவர் இருக்கார் அது தருவன் இது தருவன் என்றாராம் அவர் அருகோட நின்று தலை ஆட்டிப் பொம்மைகள் தாளங்கள் போட்டாராம் அவர் சொன்னதை செய்வார் என்றும் சொன்னாராம் போன சுதந்திரத்துக்கு முன் ஏதோ தருவன் என்றாராம் இந்த சுதந்திரத்தோட என்னதான் தருவாராம் எல்லாமே மறந்தாராம் எதுகுமே பேசாராம் நம்புங்கள் ரணிலை நல்லது நடக்கும் என்றாராம் சேர்ந்து தாளம் போடும் சில சில்லறை மனிதர் தந்திரக்கார ரணிலார் தான் ஒரு சமாதான காரன் போல் காட்டியும் நடிப்பார் …
-
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 702 views
-
-
பற்றி எரிகிறது பாலஸ்தீனம்-பா.உதயன் பற்றி எரிகிறது பாலஸ்தீனம் அன்று ஒரு நாள் முகம் எரிந்த முள்ளிவாய்க்கால் போலவே எரிந்துகொண்டிருப்பது பாலஸ்தீனம் மட்டும் இல்லை அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் பொய்ச் சத்தியமும் போலி முகங்களும் வரலாற்றுத் துரோகங்களும் அவர்கள் மனசாட்சியும் கூடவே எரிகிறது ஐ நாவின் அறமும் அதன் தர்மமும் அமைதியாகவே பார்த்திருக்கிறது எரிந்து கிடக்கும் சாம்பலில் இருந்து எப்போதாவது ஒரு பூ பூக்காத என்று ஏங்கித் தவிக்கின்றன பாலஸ்தீன குழந்தைகள். பா.உதயன்✍️
-
- 2 replies
- 414 views
-
-
மனைவியை ஒய்ஃப் என்றோம். வாழ்க்கையை லைஃப் என்றோம். கத்தியை நைஃப் என்றோம். புத்தியை புதைத்தே நின்றோம் ! அத்தையை ஆன்ட்டி என்றோம். அவள் மகளை ஸ்வீட்டி என்றோம். கடமையை டுயூட்டி என்றோம். காதலியை பியூட்டி என்றோம்! காதலை லவ்வென்றோம். பசுவை கவ்வென்றோம். ரசிப்பதை வாவ் என்றோம். இதைதானே தமிழாய் சொன்னோம்! முத்தத்தை கிஸ் என்றோம். பேருந்தை பஸ் என்றோம். அளவை சைஸ் என்றோம். அழகை நைஸ் என்றோம் ! மன்னிப்பை சாரி என்றோம். புடவையை சேரி என்றோம். ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம். தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்! மடையனை லூசு என்றோம். வாய்ப்பை சான்சு என்றோம். மோகத்தை ரொமான்ஸ் என்றோம். தமிழை அறவே மறந்த…
-
- 1 reply
- 656 views
-
-
பதின்மூன்று கிடந்து படும் பாடு போதும் -பா.உதயன் இந்த முறையும் இந்தியா சொல்லலாம் 13 ஐ பார்த்து கொடுக்கச் சொல்லி செய்கிறோம் என்று இலங்கை சொல்லும் பின் தெரியாதது போல் மறந்து போய் இருக்கும் கொடுங்கள் என்றும் கொடுக்கிறோம் என்றும் சும்மா சொல்லிச் சொல்லியே காலம் போச்சு அவர் அவர் நலனில் அக்கறையே தவிர அது பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை ஏமாத்துக் காரன் இலங்கை என்று இன்னும் இந்தியாவுக்கு தெரியாமல் இல்லை இந்தியாவுக்கு தலையும் சீனாவுக்கு வாலும் காட்டும் இந்து சமுத்திரத்தில் கிடக்கும் நழுவல் மீன் இது என்று இந்தியாவுக் இன்னும் புரியாமல் இல்லை இருவரும் சேர்ந்து இன்றும் ஏமாத்துவது ஈழத் …
-
- 5 replies
- 836 views
-
-
தாயின் பாசம்-பா.உதயன் உரிமை மறுக்கப்பட்ட தேசம் ஒன்றில் ஓரமாக ஒரு மர நிழலில் உட்கார்ந்தபடி தனிமையாக பேசிக் கொண்டிருந்தாள் கரும்புலியின் தாய் ஒருத்தி அவர் அவர் பிள்ளைகளுடன் கொஞ்சிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் எங்கும் உலா வருகிறார்கள் எங்கள் பிள்ளைகளை இப்போ மறந்திருப்பவர்கழும் அவர்கள் தியாகத்தை பேசாமல் இருப்பவர்களும் நாளை உன்னை பேசாமல் இருந்திருப்பார்கள் என்று நினைத்து நீயும் போய் இருக்க மாட்டாய் போகட்டும் விடு மகனே யார் மறந்தால் என்ன மூக்கும் முழியுமாய் உயிர் தந்து உன்னை பெற்றெடுத்த தாய் மனம் உனக்காய் அழுகிறது மகனே காற்றோடு சொல்லி கண்ணீரில் எழுதி அனுப்புகிறேன் உன்னை நான் கண்ணுறங்க …
-
- 0 replies
- 408 views
-
-
நண்பியின் டயரியில் இருந்து ...... நான் காதலித்த போது ..அம்மா படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்றார்.(அப்போதும் காதல் தொடர்ந்தது ) படித்து முடித்து பணிக்கு சேர்ந்த போது சிக்கனமாய் செலவு செய் என்றார்.சில காலம் செல்ல திருமணத்துக்கு தயாராகு பையனை பார்க்கிறோம் என்றனர். அப்போதும் காதல் தொடர்ந்தது . முடியாது நான் காதலித்தவனையே செய்து கொள்வேன் என்றேன். எமது தகுதிக்கு அவன் சரியில்லை என்றனர். பதிவு திருமணம் செய்யப்போகிறேன் என்றேன்.எங்கள்வீட்டுக்கு வராதே என்றனர். அப்போதும் அவன் என்னைக் காதலித்தான். திருமணம் முடிந்தது யாரும் வரவில்லை ...காலம் ஓடியது ...முதல்குழந்தைக்கு தாயானேன். அம்மா ரகசியமாய் வந்து பார்த்தாள். வங்கிக்கு போய் வரும் வழியில் கண்ட அப்பா நல்லா இ…
-
- 2 replies
- 514 views
- 1 follower
-