Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மே 18!!! குற்றுயிராய் ஒரு உயிர் குடல் கிழிந்து ஒரு உயிர் பாதி எரிந்தபடி ஒரு உயிர் உருக்குலைந்து ஒரு உயிர் அழுகுரலோடு ஒரு உயிர் அனாதையாய் ஒரு உயிர் நஞ்சுண்டபடி ஒரு உயிர் கடந்து ஓடினோம் உணர்வும் செத்து உயிரும் செத்து முள்ளிவாய்க்கால் வரை!!! எல்லாம் தின்று ஏப்பம் விட்டு நந்திக்கடலில் கறை படிந்த கை கழுவி ஒன்றுமில்லை என்றான் புத்தன்!! மே மாதம் நினைவழியா மாதம் இன்றும் பிண்வாடையும் கந்தகவாசமும் நாசில் அரிக்கும் மாதம்... சூட்சிகள் செய்து மனட்சாட்சிகள் இல்லா கொலைக்களம் சாட்சிகள் ஆனவர் நாக்குகள் அறுத்து ஊமைகள் ஆன சோகம் செங்குரிதி ஓடி வெந்தணல் ஆன எம்மவர் நினைவுகள் அழியா மாதம் இது ஊழிக்கூத்து நிகழ்ந்த மாதம்! அடி மனதோடு…

    • 3 replies
    • 831 views
  2. இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு அரசியல் எண்ணம் இதில் வாழும் தெய்வம் மைத்திரி நீ(நீங்கள்) உயிரில் கலந்து பேசும் பொழுது எதுவும் அரசியலே அரசியல் பேச்சுக்கள் எதுவும் புதிதல்ல ஒப்பந்தங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல எனது இதயம் ஒன்றுதான் புதிது நீயும் நானும் போவது அரசியல் என்ற பாதையில் சேரும் நேரம் வந்ததும் தமிழன் வாக்கு போட்டு கவுத்தானே ஒற்றையாட்சியில் ஒரு தீர்வை சிங்களவன் தடுத்தானே சிங்களவனின் நாடு சிங்களவர்க்கே எனதாருயிர் ஜீவன் என்னை ஆண்டாயே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே எந்த தலைவனிடமும் இல்லாத ஒன்று உன்னிடம் உள்ளது அது எதோ அதை அறியாமல் விட மாட்டேன்....

  3. காலங்கள் மாறுகின்றன காட்சிகள் மாறுகின்றன ஆட்சிகள் மாறுகின்றன ஆனாலும் மாறாத காயம் ஒன்று தான் அது முள்ளிவாய்க்கால் சோகம் மட்டும் தான் கோரத்தின் காட்சியும் அதுவே கொடுங்கோலின் ஆட்சியும் அதுவே அதர்மத்தின் சாட்சியும் அதுவே, அய்யோ, பரிதாபத்தின் காட்சியும் அதுவே பட்ட துயருக்கு நீதி வேண்டும் பலி கொடுத்த உயிருக்கு நியாயம் வேண்டும் இழந்த இழப்புகளுக்கு நீதி வேண்டும் நாம் தலை நிமிர்ந்து வாழ வழி வேண்டும் நம் செல்வங்கள் வாழ வேண்டும் நம்பிக்கையுடனே ஒன்று சேர வேண்டும் நம் வாழ்வில் விடிவொன்று உருவாக வேண்டும் நம் தமிழீழ கனவும் மலர வேண்டும் மீரா குகன்

    • 0 replies
    • 818 views
  4. மரணம்! ஆண்டுத்திவசத்தோடு மறந்துவிடுகிறோம் விபத்து! காயத்துக்கு கட்டுப்போட்ட கையோடு மறந்துவிடுகிறோம் இழப்பு! நிவாரணம் கிடைத்ததும் மறந்துவிடுகிறோம் தேர்தல்! விரல் மை காயமுன் மறந்துவிடுகிறோம் விடுதலை! அற்ப சொற்ப சலுகைகள் கிடைத்ததும் மறந்துவிடுகிறோம் தியாகம்! நவம்பர் 27 இல் தீபங்கள் அணைத்ததும் மறந்துவிடுகிறோம் ஒற்றுமை! கூட்டம் முடித்து காரில் ஏறியதும் மறந்துவிடுகிறோம் துரோகம்! செய்தவனையே மறந்துவிடுகிறோம் மறதி!!! ஈழத்தமிழனுக்கு கிடைத்த வரமும்... சாபமும்...!!! -தமிழ்ப்பொடியன்-

    • 2 replies
    • 841 views
  5. ஆறு வருடங்கள் ஆறுமோ? சொற்கேளாப்பிள்ளையெனினும் ஏறிக் கூரையில் ஏந்திய பொறி ஏற்றாதா சுடர் ஏங்கியமக்கள் நெஞ்சிலும் விழுந்தன தணல்கள். அகம் அழிந்து திரிந்ததும் அறம்பிறழ்ந்ததும் களத்தில் ஆயிரம் கணைகள் பறந்ததும் மறவர்மடிந்ததும் கையறுந்ததும் கண்டவர் விண்டிலர் விண்டவர்கண்டிலர் தீய்ந்தது காடு படர்ந்தது நெருஞ்சி திறமென்றதுஉலகம் தீராது பிணக்கு வராது வழக்கு வரினும் பிழைக்கும் கணக்கு கால ஆற்றில் கண்ணீரா செந்நீரா? படகுகள் பார்ப்பதில்லை போகட்டும் உணர்வழியாது நினைவழியாது என்பிள்ளை தன்பிள்ளைக்குச் சொல்லும் இச்சாவின் கதை எழுதும்: ஈழம் அரும்கனவு. தேவ அபிரா வைகாசி 2015 http://www.globaltamilnews.net/GTMNEd…

    • 0 replies
    • 510 views
  6. மரணம் அல்ல ஜனனம் பூஜைக்கென்று பூத்த மலர் புயலடித்து சாய்ந்ததம்மா! கண்ணியிலே கால் இடறி கன்னிமயில் வீழ்ந்ததம்மா! செம்புழுதிக் காற்றே சொல்லு புங்கை நகர் தேவதை எங்கே! பள்ளிக்குப் போன எங்கள் பருவநிலா தொலைந்த தெங்கே! வன்கொடுமைத் தீயில் வீழ்ந்து வதைப்பட்ட போது நெஞ்சில் என்ன நினைத்தாளோ! ஐயோ!..... பெண்பிறப்பே கொடியதென்று சொல்ல நினைத்தளோ! வெறி புடிச்ச நாய் கடிச்சா யாரை தப்பு சொல்வது வெறிநாயை விட்டுவைச்ச சமூகத் தப்பு அல்லவா! மாநிலத்தில் தமிழ் ஆட்சி வெறும் காட்சி மாற்றம்தான் கண்ணகி சிலை மறைப்பில் காம வெறி ஆட்டம்தான்! கண்ணா!......கண்ணா!....என்று கத்தினாள் பாஞ்சாலி அண்ணா!.......அண்ணா!......என்று அலறித் துடித்தாயோ! …

  7. அன்புக்கொரு அடைக்கலமாய் அண்ணான்னு அழைத்திடும் மழலை மொழியாள் செந்தமிழாள் அஞ்சரன் அவன் தங்கை. வெந்தனள் போகினள் பூமகள் வெறுமையின் வெளிக்குள் அண்ணனை தள்ளி. ஆற்றுதற்கு வார்த்தைகள் இல்லை இவ்வுலகில்..! கேடும் தீதும் கொண்டு மனிதர் தாம் வருவதில்லை இவ்வையம்.. வந்த இடத்தில் கற்றுக்கொடுக்கிறார் அதை..! பாசத்தை நேசத்தை மனிதத்தை தொலைத்த மிருகங்களாய் சக மனிதர் தம் உணர்வுகள் சாகடிக்கும் நிலையில்.. தங்கமடா அவள் கை என்றே பற்றித் திரிந்த தங்கை ஒன்றை எப்படிக் காப்பான் இவ்வுலகில் ஓர் அன்பு அண்ணன்...?!

    • 2 replies
    • 936 views
  8. தங்கைகள் தேவைப்படுகிறார்கள்... நடை பழகும் நாட்களில் கைபிடித்து கொள்ள அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்... அடம் பிடித்தோ அழுது புரண்டோ பொட்டோ, பூவோ முதல் முதலில் தங்கைக்கே வாங்குகிறான் அண்ணன்... '' அ" வில் தொடங்கி சைக்கிள் பழக்கி மகிழுந்து வரை அண்ணன்களே ஆசிரியர் தங்கைகளுக்கு... அண்ணனாக மட்டுமன்றி நண்பனாகவும் சில நேரங்களில் தந்தையாகவும் மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்... தங்கைகளின் எந்தவித கோரிக்கையும் அண்ணன்களிடமே வருகிறது தங்கைகளுக்கான முதல் சிபாரிசை அண்ணன்களே முன்னெடுக்கிறார்கள்... அக்காக்களிடம் மறைத்த அண்ணன்களின் காதலை அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்... அண்ணன்களுக்காக அப்பாக்களிடம் கோபம் கொள்வதில் தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்... தங்கைகளி…

    • 8 replies
    • 26.7k views
  9. யார் சொன்னது ...? கூப்பிட்ட குரலுக்கு ... கடவுள் வராது என்று ...? கூப்பிட்டு பார் உன் அம்மாவை ......!!! அம்மா கடுகு கவிதை எவராலும் முடியாது .. நொடிக்கு நொடி என்ன ... தேவை என்பதை... உணரும் மனோ தத்துவ .. ஞானதன்மை ...!!! அம்மா கடுகு கவிதை பிறந்தபோது... ஈரத்துடன் பார்த்த ... முகத்தையே - இறந்து ... கிடக்கும் போது இதே ... முகமாக பார்க்கும் ... ஒரே -ஜீவன் - அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை உயிருடன் ... இருக்கின்ற போது மட்டும் ... அழைப்பதில்லை ... அம்மா ....!!! மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் அழைக்கும் உடன் சொல் .... ஒரே உலக சொல் -அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை இந்த உலகு புவி சுற்றால்... இயங்க வில்லை -தாயின் .. தூய அன்பால் சுற்றுகி…

  10. முள்ளிவாய்க்கால் காற்றிடை வாழும் உயிர் பேசியது.. உலோகத் துகள்களிடை உடல் துகள்களாகி சிதறி நிற்க காற்றுக் கூட அவதிப் பட்டது அகதியாகி சன்னங்களிடை தன் இடம் பிடிக்க. இட நெருக்கடியில் உயிர்கள் உரசிக் கொண்டன செல்லுமிடம் சொர்க்கமோ நரகமோ திசைகள் தெரியாமல் சன்னங்களில் அவை படுத்துறங்கின. ஊழியக் காலமோ கலி காலமோ அல்ல அல்ல.. தமிழர் அழிப்புக் காலமாய் அது நிகழ்ந்து கொண்டிருந்தது..! சாத்திரங்கள் பொய்த்து வீழ்ந்தன சதா மரண ஓலங்கள் உலகை ஆளும் அலைகளின் ஊளைகளை தாண்ட வழியின்றி களைத்தே மெளனித்தன. உலக மானுட மனச்சாட்சி கண்ணை மூடி மூச்சிழுத்துக் கிடந்தது...! மீண்டும்.. காற்றிடை வாழும் உயிர் பேசிக் கொண்டது.. அந்தக் கொடுமையின் தாண்டவம் கண்டு ஆண்டுகள் …

  11. நிலவே .... உன்னை உவமையாக கூறி .... காதல் செய்தும் காதலரை .... வாழ்த்திட ஒருமுறை வருவாயோ ..? உன்னையே உவமையாக கூறி .... காதலியை ஏமாற்றிய .... காதலனை சுட்டெரிக்க .... ஒருமுறை வருவாயோ ..? நிலவே உன்னிடம் .. நீர் ,நிலம், காற்று இருக்கிறதா ..? தொடரட்டும் விஞ்ஞான ஆய்வு ....! பூலோகத்திலோ உன்னால் ... நீர் ,நிலம், காற்றுமாசடைகிறது ....!!! நிலவே ஒருமுறை வருவாயோ .. சூழலை மாசுபடுத்தும் இவர்களை .... எச்சரிக்க மாட்டாயோ ...? நிலாவில் பாட்டி இருக்கிறார் .... இன்றுவரை நம்பும் குழந்தைகள் ....!!! பாட்டியுமில்லை பாட்டனுமில்லை ... வான் வெளி தூசிகளே அவை .... நிரூபிக்க ஒருமுறை வருவாயோ ...? மூடநம்பிக்கையை உடைத்தெறிய ... ஒருமுறை இறங்கி வருவாயோ ...?

  12. உலா - வ.ஐ.ச.ஜெயபாலன் நீலப் பாவாடையில் குங்குமமாய் எழுஞாயிறு கசிய பூத்தது விடலை வானம். வாழ்த்துடன் நிறைந்தன வலசைப் பறவைகள். எனினும் அன்பே உலாவுக்கான உன் செல்பேசி அழைப்புத்தான் இந்த வசந்த நாளை அழகாக்கியது, வண்ணத்துப் பூச்சிகளாய் காற்றும்பூத்துக் குலுங்கும் வழி நெடுக. காவியம் ஒன்றின் இறை வணக்கம்போல கைகளும் படாத வெகு நாகரீகத்தோடுதான் உலாவை ஆரம்பித்தோம். காடு வருக என கதவுகளாய்த் திறந்தது. சிருஸ்டி வேட்கையில் உருவிப்போட்ட கூறைச்சேலையாய் வண்டாடும் மரங்களின்கீழ் உதிரிப்பூ கம்பளங்கள். என் அன்பே முகமறைப்பில் இருளில் இணையத்தில் கண்காணா தொலைவில்தான் இன்னும் தமிழ்பெண் சிறகசைக்க ம…

    • 18 replies
    • 2.1k views
  13. ஆக்கிரமிப்பு நிலங்கள் .... மீளளிப்பு செய்யப்படுகின்றன .... ஆவலுடன் சென்ற மக்களின் ... திகைப்பும் திண்டாட்டமும் ..!!! எது என் குடியிருப்பு ...? எது எங்கள் சுடுகாடு ...?

  14. முயற்சி இல்லாமல் இருப்பதும் .... வைத்திய சாலையில் கோமாவில் .... இருப்பதும் ஒன்றுதான் ..!!! *********************** முதுகில் வெறும் கையால் குத்துவதை விட .... கண்முன் கத்தியோடு நின்று ..... மிரட்டுபவன் எவ்வளவோ மேல் ...!!!

  15. பல வருடங்களுக்கு முன்னர் எழுதிக் கைவிடப்பட்ட கவிதையொன்று இன்று தட்டுப்பட்டது. உங்கள் பார்வைக்கு. உயிர்த்தேன் வ.ஐ.ச.ஜெயபாலன் காலப் பாலை நடுவினிலே வினோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா என் வார்த்தைகள் காவியமாய் * கூதிர் இருட் போர்வை உதறி குவலயம் கண் விழிக்க போதியோடு இலை உதிர்த்த இருப்பும் புன்னகைத்தே துளிர்க்க மனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன் மண்ணைப் புணருகின்றான். மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா மூச்சால் உயிர் மூட்டி. * கடைசித் துளியும் நக்கி காலி மதுக் கிண்ணம் உடைத்து என் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன். நீ கள்நதியாக நின்றாய். உயிர்த்தும் புத்துயிர…

    • 9 replies
    • 1.3k views
  16. Started by nochchi,

    மழை! ----------- இன்று மழை தூறிக்கொண்டேயிருந்தது! மேதினத்தில் தொழிலாளரின் கண்ணீர் துளிகளாய்!

    • 4 replies
    • 783 views
  17. Started by karu,

    இன்பமெங்கே? 1. இன்பத்தைத் தேடுகிறாய் தம்பி இன்பத்தைத் தேடுகிறாய் இங்குள தங்குள தென்றலைந்தே அதை எங்கெங்கு தேடியும் காணக் கிடைக்காமல் இன்பத்தைத் தேடுகிறாய் தம்பி இன்பத்தைத் தேடுகிறாய் 2. ஏழ்மையதின்பமடா தம்பி ஏழ்மையதின்பமடா வாழ்வினில் வீணே வழிகெட்டுப் போகாமல் வாய்த்த தவஞானம் தோய்ந்து சுகம் பெறில் ஏழ்மையதின்பமடா தம்பி ஏழ்மையதின்பமடா 3. அறியாமை இன்பமடா தம்பி அறியாமை இன்பமடா நெறியோடு ஞானப் பிழம்பென வாழ்ந்(து) உள நிம்மதியோடுயர் நன்மதி கூட்டிடில் அறியாமை இன்பமடா தம்பி அறியாமை இன்பமடா 4. புகழின்மை இன்பமடா தம்பி புகழின்மை இன்பமடா இகழ்பவர் யாவரும் ஈசனென்றே மனம் இன்ப நிலை கண்டு துன்பத்தை மாயத்திடில் புகழின்மை இன்பமடா தம்பி புகழின்மை இன்பமடா 5. நோயதும் இன…

    • 6 replies
    • 1k views
  18. என் உழைப்பை உறிஞ்சும் வரிப் பணத்தில் கொடிக்கம்பம் நட்டு கொடி ஏற்றும் தினமே மே தினம்..! பஞ்சமும் பட்டினியும் வேலை இன்மையும் கூலி இன்மையும் இன்றும் தொடர்கதை தான் ஆண்டுகள் தோறும் ஒப்புக்குத் தோன்றும் மே தினம் போல்..! ஊழலும் ஏய்ப்பும் நிறைந்த உலகில் இன்னொரு புரட்சி புதிய அடக்குமுறை தாண்டி வெடிக்கும் வரை வராமல் போ கொடுமைகள் மறைக்கும்.. மே தினமே..!

  19. பொய் சொல்லவத்தில்லை.... ஆனால் நடந்த தெரிந்த புரிந்த .... உண்மையை மறைத்திருகிறோம்.... இதை விட கொடுமை பாதி உண்மை.... பேசியிருக்கிறோம் - கொடுமையில்.... கொடுமை பாதி உண்மைபேசுவது... இதை எல்லாம்செய்து விட்டு நன்றாக நடிக்கிறோம் ..... நல்லவனாக நடிக்கிறோம் .....!!! தப்பு என்று தெரிந்து கொண்டு... தப்பு செய்திருக்கிறோம் .... மற்றவர்கள் செய்யாத தப்பையா....? நான் செய்கிறேன் -சமுதாயத்தை அடமானம் வைத்துதப்பு செய்கிறோம் .... நன்றாக நடிக்கிறோம் .... நல்லவனாக நடிக்கிறோம் ....!!! திட்ட மிட்டு பிறர் காசை திருடியது இல்லை ஆனால் வழியில் கிடந்த பணப்பையை யாரும் உரிமை கோராதபோது எம் பணமாக்கி செலவு செய்கிறோம் மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம் வழியில் கிடந்த காசு பொது சொத்து யாரும் பயன்படுத்தலாம் …

  20. கவிதை எழுதுகிறேன் ரசிகர்கள் ஆயிரம்.. கஞ்சிக்கு அழுகிறேன் கவனிப்பார் யாருமில்லை.! என் தாடியின் ரகசியம் காதல் தோல்வி அல்ல.. வெட்டி மழிக்க காசில்லை..!

    • 28 replies
    • 3.5k views
  21. இரவல் மொழியில் பெருமை பேசி இழந்த உண்மை இன்பம் கோடி கோடி இரைந்து கத்தும் காகத்தை போன்று இல்லாமையில் பெருமை தேடும் பலர் இங்கே தட்டி தமிழ் மகான்கள் சொன்னப் போது தாழ்மையுடன் உணர்ந்தோம் நம் பெரும் பிழையை தாயாய் காக்கும் நம் தமிழ் மொழியை தரணி எங்கும் வாழ்த்த வழி செய்வோம் வெளிநாட்டு மோகம் எம்மை ஆட்கொண்டு வெள்ளையர் வாழ்வு சீர் என நினைத்தும் ஏன் ? வெளிர் நிறத்தில் உள்ள அழகும் நிலையில்லையே …

  22. என்னில் உன் விழியும் ... உன்னில் என் விழியும் .... இடம் மாறியதே -காதல் ...!!! நீ என்னை பார்க்கும் ... போதெல்லாம் என் ... கண் வலிக்கிறது ... என் விழி .... உன் விழியில் ...!!!

  23. மனதெங்கும் எத்தனையோ மாயங்கள் அலைகளாய் எண்ணத்தில் தோன்றுவது எழுத்தில் வடித்திட முடியாததாய் காணும் காட்சிகள் கண்விட்டுப் போவதுபோல் நினைவுகளின் நீட்சிகள் தொடராதிருந்தால் எத்தனை இன்பம் மனம் எப்போதும் கொண்டிடும் காலத்தின் பதிவுகள் கனவின் கோலங்களாய் மனதில் மகிழ்வு தொலைத்து கண்கட்டிவித்தையில் கண் மூடும் வேளைகளில் கூட கபடியாடுகின்றன பகுக்க முடியாத எண்களாய் பகிரப்படும் நாட்கள் பம்பரமாய் சுழன்று மீண்டும் பரிதவித்து நிற்பதுவாய் நிமிடங்கள் நகர்த்தும் நாட்களாய் நெடுந்தூரம் செல்கின்றன தவிர்க்கவும் மறுக்கவும் மறக்கவும் முடியாததான பிணைப்பின் வலிமையில் மறுதலிக்கும் மனதின் செயல் எத்தனை கடிவாளமிடினும் எதுவுமற்றதாய் ஆகிவிடுகையில் எப்போதும் போல் என்னிலை ஏக்கங்…

  24. அழவேண்டும் ஒரேயொரு முறை ஓங்கி அழவேண்டும். அழுகை அடையாளமாகவோ அவதானமாகவோ இருந்துவிடக் கூடாது. அழுகை மீதான குறிப்புக்கள் இன்னொருவரால் கடத்தப்படுமாகையால் அழுகைக்கு காரணமாகிவிடவும் கூடாது. தலைகோதவும் விரல்களைகளை வருடவும் மடி சாய்த்து கன்னம் தடவவும் அணைத்து முதுகை நெகிழ்க்கவும் ஒருவரும் இருக்கவும் கூடாது. என் அழுகை இறுதியானதாகவும் இயல்பானதாகவும் உண்மையானதாகவும் இருக்க உதவுங்கள். எப்போது அழுதேன். சுயநலத்தால் குரலெடுத்து கண்ணீர்விட்டுத் தொலைத்ததையெல்லாம் அழுகைக்குள் எப்படியடக்குவது. ஒலியில்லாமல் கண்ணீரில்லாமல் ஒடுங்கி தளர்ந்து நின்றதையெல்லாம் எதில் அடக்குவது? அழவேண்டும் ஓங்கி அழவேண்டும் அது நான்…

  25. தோழன் சிவராமுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் எழுந்துவரும் சூரியன் எடுத்துக் கால் வைக்கின்ற கீழைக்கரை மட்டுநகர் ஈழக்கரை விடிய வென்று ஈன்று தந்த தாரகையே பாடுமீன் வாவியழ பனந்தோப்பின் காற்றும் அழ மன்னாரின் கரை நெடுக முத்தெடுத்தோர் பேரர் அழ வன்னிக் காடெல்லாம் மார்புதட்டிச் சூழுரைக்க வெண்பனியின் துருவத்தும் விம்மித் தமிழர் அழ விடிவெள்ளி தனை அழித்தால் வானம் இருளுமென்றா மூடர்களே சிவராமன் மூளைதனைச் சிதறடித்தீர் – அவன் எண்ணமோ வண்ணமயில் எழுதுகோல் வடிவேலாம் மண்ணில்விழ விடுவோமோ – அந்த மாதவனின் வடிவேலை -வ.ஐ.ச.ஜெயபாலன் (ஏப்பிரல் 2005)

    • 5 replies
    • 752 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.