கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
திலீபன் புன்னகைக்கும் இதயம் கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும் அழத் தோன்றும் முகத் தோற்றம் நேசத்தை யாசிக்கும் யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் ! திலீபன் ! காற்றில் உதித்தவன் ! நெஞ்சங்களில் அநேகமானவற்றை விட்டுச் சென்ற முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில் ஒரு ‘கமா’வாக மறைந்த விலைமதிப்பற்ற யௌவனத்தை கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த நேர்மையான புன்னகையும் தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன் அன்றிலிருந்து இன்று வரை கண்ணீர் ருசிக்கும் அன்னையர் கைகளிலில்லா ஐவிரல்களையும் தேடியலையும் தந்தையர் ஒன்றின் மீதொன்றாக அடுக்கப்பட்டிருக்கும் புதல்வர்களின் சடலங்களின் மீது ஓலமிட்டழுபவர்கள் எல்லா இடங்களிலிலும் இரு…
-
- 19 replies
- 1.9k views
-
-
மின்சார ரயில் மெல்ல மெல்ல .. வேகம் கொள்ளும் நிலை போல் .. உன் மின்சார பார்வை என்னையும் .. லேசா லேசா திரும்பி பார்க்க தூண்ட ... உடைந்து விழும் கண்ணாடி போல் .. மனதில் ஒரு சிதறல் கோடு .. நீ பாடல் கேட்டு தலை அசைப்பது .. எனக்கு ஏனோ சம்மதம் சொல்வதாய் .. உன் விரல்கள் கோலம்மிடும் கைபேசி திரை .. என் மூச்சு காற்றின் வெப்பம் அறியும் .. நீ பாடல்களை மாற்றிக்கொண்டு இருக்கிறாய் .. நான் வாழ்வின் பல படியை உன்னோடு கடக்கிறேன் .. ஒவ்வெரு தரிப்பிடமும் மூச்சு வாங்குது .. நீ எழுத்து போகக்கூடாது என்று வரம் கேட்குது .. நீ நிமிர்த்து பார்க்கும் நொடிகள் தான் .. நான் வாழ்தலின் பலனை எண்ணுகிறேன் .. என்றாவது ஒருநாள் உன் அருகில் நான் .. சேர்த்து பயணிப்பேன் என் காத…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஆள் ஆரவாரமற்று கிடக்கிறது வேப்பங்கிளையில் தூளி.., ஒன்றுகூட பசியாற்றா பாவத்தில் கிளைநிரப்பிய கொய்யா.., யாரினிதென்று இரைந்தபடி கிடக்கின்றன யாழும் குழலும்.., விண்ணவரும் கண்ணுறங்கி விட்டனர் இன்னும் முடிக்கவில்லையொரு கதைசொல்லி.., புள்ளதாச்சி குழிகளின் சாபம் முத்துக்களை உதிர்த்தபடி பல்லாங்குழி.., மழைநீரால் ஒளிந்து கொள்ளும் பழைய கொள்ளைபுற நீர்த்தொட்டி.., சிலேட்டு பலப்பத்தில் உயிர்த்தெழ வரிசையில் நிற்கின்றன அ,இ,ஆ,உ.., விடுப்பு கடிதமெழுதி அனுப்புநர் முகவரி தொலைத்த விடுமுறைகாலம்.., மழைநீரை வெறித்தபடி கவலைகளில் மிதக்கின்றன சில காகிதங்கள்.., புதுவர்ண பூச்சு அலங்கோலம் தூரிகை மாயம் சுவற்றில்.., மதிப்பிழந்த சில்லறை காசுகள் அறைகளில் அங்கொன்றும் இங்கொன்றும்.…
-
- 54 replies
- 7.2k views
-
-
கதிரவன் கதிர்களைத் தூரிகையாக்கி வானில் வண்ணம் தீட்டுகிறான் சித்திரமாய் வானம் சிவப்பின்றி வசந்த காலத்தை விரட்டியபடி சோர்வுடன் சொல்லிழந்து நிற்கின்றது புள்ளினங்கள் கூடப் புதர்களில் மறந்துவிட புரிந்துகொள்ள முடியாக் கோடுகள் பார்க்குமிடமெங்கும் பரவிக்கிடக்கிறது பகட்டாய்க் கிளை பரப்பி நின்ற பாதையோரத்து மரங்கள் கூடச் பச்சை தொலைத்த இலைகளுடன் செருக்கிழந்து நிற்கின்றன பாதை நிறைத்துக் கிடக்கும் பழுத்துப் பழுப்பான இலைகள் பரிதவித்து நிலை மறந்து பக்கம் பக்கம் கிடக்கின்றன குளிர் கலந்து வீசும் காற்று என் குதூகலம் கொஞ்சம் கலைத்து கூதல் கொள்ளும் உடலசைத்து குளிர் உதற முனைகிறது கண்மூடி ஒருகணம் காலக் கணக்கை வியந்தபடி கனக்கும் மனம் சுமந்து கால்வீசி நடக்கின்றேன்
-
- 11 replies
- 1.4k views
-
-
இலை உதிர்காலத்தின் சாலையில் செல்கின்றேன் பச்சையான மரங்கள் மஞ்சளாகிக்கொண்டிருக்கின்றது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இலைகள் உதிர்ந்துகொண்டிரக்கின்றது உணவின்றி கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருந்த ஒருவன் நினைவுக்கு வந்தான் குளிர்காலம் முடிந்ததும் இந்த மரங்கள் மீண்டும் துளிர்விடும் உயிர் உதிர்ந்த மரத்தை கொத்தி விறகாக்கி சோறாக்கி தின்று தேசீயம் என்று ஒரு ஏவறை விட்ட ஞாபகங்கள் வந்துபோயின. கால்களுக்குள் இலை உதிர்காலத்து சருகுகள் கேவலமாகப் பார்த்தபடி காற்றில் சலசலத்துச் சென்றது மண்ணோடு மக்கி மீண்டும் மரத்தில் துளிர் விடுவேன் என்ற என்னிடம் இல்லாத உண்மை அதனிடம் இருந்தது. இயற்கையின் விதிவிலக்குகளில் நானும் ஒருவன் என்ற பெருமூச்சு என் காதுகளுக்கு கேட்காதபடி சருகுகள…
-
- 0 replies
- 1.3k views
-
-
வாழும் வயது அது பார்த்தீபா .. வண்ணங்கள் கோடி உண்டு உலகில் .. எண்ணங்கள் சுமந்து நீயும் .. எம்மைப்போல் வாழ்த்திருக்கலாம் .. திண்ணமாய் நீர் எடுத்த முடிவு .. கொள்கையின் பற்றும் பிணைப்பும் .. இலக்கினில் கொண்ட உறுதியும் .. எம்மைப்போல் மாறுது இருந்ததால் .. மரணித்து எம் மனங்களில் நிறைந்தாய் .. விடுதலை போரில் நாம் இழந்திருக்க கூடா புலி .. உன்னைப்போல் அரசியலின் தீர்க்கதர்சி எவர் .. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று அன்று... சொல்லிப்போன உன் வாய்மொழி இன்று .. வெடித்து நிக்கு ஐநா முன்றலில் கூட்டமா ... பார்த்தீபன் என்னும் விடிவெள்ளி எம்மை .. ஈழம் என்னும் நாடு நோக்கி அழைக்கும் .. தாகம் என்னும் சொல் இனி திலீபன் ஆகும் .. தவித்து வந்தது எமக்கு கண்ணீர் .. தாகத…
-
- 0 replies
- 749 views
-
-
கால்களில் கிடந்த மண் பொருக்குகளை தட்டிக் கொண்டிருக்கையில் சிதைந்து ஓலமிடத் தொடங்கின விளையாதுபோன பாட்டனின் கனவுகள். கதைகளில் சொல்லாத ரேகைகளில் கூறாத விரல்களால் தீட்டாத பாட்டனின் கனவுகள் கூடி மொய்க்கத்தொடங்கின, விளைந்த நெருக்கத்தில் நான் அறியாத பாட்டனின் முத்தமொன்றை பரிசளித்தன, உடல் சிலிர்க்க நடுக்கத்தோடு முத்தம் வெளியேற்றிய கண்ணீரை முகர்ந்தவை, கால நாற்றங்களால் உணர்வடக்கிக் கொண்டன, கண்ணீர் வெளியேறிய வெற்றிடத்தில் பாட்டனின் வயல் வளரத்தொடங்கியது. விளையாத கனவுகள் உணர்வுடைத்து இனி வேர்விடக் கூடும். எனிலும், நான் இன்றே எனது வயலை கொலை செய்துவிடப் போகிறேன்.
-
- 3 replies
- 914 views
-
-
நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர்... உன்னத தியாகம்! பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு... அன்று, பாரதம் செய்ததோர் மகா பாதகம்!! ஆறுநாள் விரதத்துக்கே வரமருளும் வேலவன் கூட அவன் கண்மூடும்வரை... கண்திறக்கவில்லை ! நல்லூர்க் கந்தனும் கருணையற்றவனானான் !! இந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதி தியாக தீபமொன்றை அணைத்தது விதி சிந்திய கண்ணீரில் மூழ்கியதே நல்லூரான் வீதி அகிம்சையே அறமென்ற இந்திய தேசம்... ஈழத்தில் செய்த முதல் நாசம் ! பார்த்தீபனின் பட்டினிப்போரால்... வெளுத்துப்போனது... பாரதத்தின் அகிம்சை வேஷம்! 'பஞ்ச வேண்டுதலோடு' பட்டினி கிடந்து போராடி... பார்த்தீபன் மடிந்த போதுதான்... மகாத்மாவுக்கும் புரிந்திருக்கும், கோட்சேயின் துப்பாக்கி…
-
- 5 replies
- 1.9k views
-
-
முதல் வெடியோசையில் பிறக்கிறது காதல் .. பக்கத்துக்கு கூடாரம் யாராக இருக்கும் .. எண்ணிய வேளையத்தில் பிள்ளை வேகமா வா .. என் அழைக்கும் அவள் அம்மாவின் சத்தம் .. நிலா ஒளியில் அவள் நிலா முகம் பார்க்கிறேன் .. ஓடி சென்று மாமர அருகில் இருந்தவாறு .. ஒன்னை பெத்து வைத்திருக்கிறேன் .. கட்டிகாக்க நான் படும் பாடு பெரும்பாடு . . என்னும் ஏக்க பெரும்மூச்சு விடும் அவள் அம்மா .. கற்பூர வள்ளி போல வாடாமல் இருக்கிறாள் .. கண்களில் மட்டும் சிறு நீர் நிரம்பி இருக்கு .. அது ஒரு வயது பார்த்தவுடன் வாழ்க்கை கொடுக்கும் .. கட்டினால் இப்படி ஒரு பிள்ளையைத்தான் .. என்னும் மன ஓட்டத்தில் இயங்கும் நிலை .. எம்மை பற்றி சிந்தித்ததை விட அவளை பற்றி அதிம் .. அடிக்கடி பவுடர் போடும் …
-
- 7 replies
- 907 views
-
-
மாட்டுக்கறி எங்கள் பண்பாடு மாட்டுக்கறி - எங்களது வாழும் பசுமை வாழ்க்கையின் பன்முகம் எங்கள் ஆன்மாவின் உயிர்மூச்சு "மாட்டுக் கறி உண்ணாதீர்கள்" நான் உன்னை கேட்கிறேன் - "எப்படி உண்ணாமல் இருப்பது?" நீ யார் எனக்கு அறிவுரை கூற, எங்கிருந்து வந்தவன்? எனக்கும் உனக்கும் என்ன உறவு? நான் கேட்கிறேன். இன்று வரைக்கும் நீ ஒரு ஜோடி காளை மாடுளை வளர்த்திருப்பாயா? ஒரு ஜோடி ஆடுகளையாவது? ஒரிரண்டு எருமைகளை? அவைகளை மேய்த்த அனுபவமுண்டா? குறைந்தபட்சம் கோழியாவது வளர்த்ததுண்டா? இவைகளுடன் ஆற்றில் இறங்கி அவற்றை தேய்த்துக் குளிப்பாட்டியதுண்டா? காளையின் காதை அறுத்து துளையிட்டதுண்டா? இல்லை, அவற்றின் பற்களைப் பிடித்து பார்த்திருக்காயா? அவற்றுக்கு பல்வலி வந்தால் என்…
-
- 3 replies
- 2.7k views
-
-
விழியோரங்கள் அரும்பிய நீர் துடைத்து கயிற்று நிரைகளுக்குள் அடங்கி இருக்கும் மக்கள் கூட்டம் நடுவிருந்து கண்கள் அவனையே நோக்குகின்றன..! பின்புலத்தில் சீறிப் பாயும் புலியா யாழ் இந்துவின் உண்மைப் புதல்வனா தாய் தமிழீழத்தின் செல்லப் பிள்ளையா மக்கள் விடுதலையின் ஒற்றைக் குரலா... கேள்விகள் அவன் கோலம் கண்டெழுகின்றன..! சின்னஞ்சிறுசுகளின் மாமா.. எங்கள் அண்ணா உங்கள் தம்பி பலரின் பிள்ளை சிலரின் எதிரி சிந்தனை ஒன்றை வைத்து உண்ணா நோன்பிருந்து மக்களை துயில் எழுப்பிக் கொண்டிருந்தான்..!! கனவுகள் அவன் தனக்காக கண்டதில்லை..! சனத்துக்காக தன் சாவிலும் கூட மேலிருந்து விடுதலையை காண்பேன் என்றே மொழிந்தவன்... தேகத்தையே தேசத்தில் பிள்ளைகள் படிக்க கொடுத்தவன…
-
- 9 replies
- 937 views
-
-
மக்கள் புரட்சிக்கு வித்திட்ட மனுநீதிச் சோழன். பட்டினித் தீ மூட்டிய பெருந்தீ பாரதப் பேரரசின் பாராமுகம் பலியெடுத்த பெரு வீரன். மக்கள் புரட்சிக்கு வித்திட்ட மனுநீதிச் சோழன். எங்கள் மனமெங்கும் எரிகின்ற அணையாச்சுடர். ஆண்டுகளாய் அடிமையின் மீதமாய் நீண்டு போன வரலாற்றில் தமிழர் நிலைமாற்றப் பிறந்த நியாயத்தின் சுடர். நிலம் வாழும் வரையுந்தன் வரலாறும் வாழ்வின் அர்த்தமும் வீரமும் ஈகமும் - என்றும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். - சாந்தி - rameshsanthi@gmail.com http://mullaimann.blogspot.de/2014/09/blog-post.html
-
- 0 replies
- 682 views
-
-
என் தொப்பியையும், துப்பாக்கியையும் தொலைத்துவிட்டு... சட்டைப் பையில் மீதமாய் இருப்பது, என் வியர்வையின் ஈரம் ஊறிய பாண் துண்டு மட்டுமே... இங்கே அறைகள் சுத்தமாகவும், சுவர்கள் கதகதப்பாகவும் இருக்கின்றன நான் தேநீர் குடிக்கின்றேன், என் வாய் யாரையும் சபிக்கவில்லை கொஞ்சம் புகை பிடிக்கின்றேன் ஆம், இப்படித்தான் ஒருமுறை இருந்தது..... „நான் என் பயத்தை தொலைத்துவிட்டேன் இங்குள்ள தாங்க முடியாத வெக்கையால் எழும் பயம், ஒவ்வொரு குளிகாலப் பயத்தை நினைவுபடுத்திச் செல்கிறது அங்கே எங்கோ ஓர் இடத்தில் தொலைத்த என் பயத்தை நான் தேடவில்லை.... வயிறு நிறைய உண்டபின் உறங்க விரும்புபவர்கள் போல மரணத்தைக் காதலித்து வீழ்ந்துகிடந்த என் நண்பர்களைக் கடந்து செல்கின்றேன் ஆம்…
-
- 8 replies
- 2.2k views
-
-
-
மனமேடை ஊஞ்சலிலே நடனமிடும் இசையசுரா உனதோடு சொன்னதையே உதையாக ஏன் நினைத்தாய்? நினைவிடையே தினவெடுக்கும் நீஎந்தன் நட்பென்று எனையா நீஎண்ணிவிட்டாய் உனையிகழும் பிறப்பென்று? பணமேதும் பகைக்கவில்லை பிணமாக மணக்கவில்லை குணமாக்கும் சிறுவார்த்தை பாசாணம் ஆனதுவோ எழுத்தின் எதிர்வீச்சால் என்னெண்ணம் கன்றியதோ வழுக்கிய வார்த்தையில் அழுக்கும்வந்து அணைத்ததுவோ?! துரும்பும் தூணாகும் காற்று கனத்திடுமா புகையும் நெருப்பாகும் படத்தில் எரிந்திடுமா திசைகள் மாறிடுமா பசைகள் விலத்திடுமா விதிகள் இதுவென்றால் விலத்தல் எவ்வாறு?!
-
- 1 reply
- 834 views
-
-
-
- 1 reply
- 749 views
-
-
புதியவள் ஒருத்தி என் அறையில் என்னோடு.. நடு நிசியை நோக்கி நேரம் ஆகிறது.. படுக்கைக்குப் போக.. விளக்கை அணைக்கவா இல்லை விடவா.. உள்ளம் தடுமாறுகிறது...! உள்ளூர ஒரு பயம் என்னை அணுகுவாளா உயர நகர்வாளா பின் என் உடல் மீது பாய்வாளா.. அவளிடம் அகோரத்தனம் இருக்குமா..??! அனுபவமின்றியவன் நான் சற்றே சிந்திக்கிறேன்.. தயங்குகிறேன்... அவளோ என் அறைக்குள் துணிவோடு.. அனுமதி இன்றி நுழைந்தவளாய் சுவரோடு ஒட்டியவளாய் நகர்வின்றி... என்னையே கண்ணெடுத்துப் பார்க்கிறாள் அதை அழைப்பு என்பதா எச்சரிக்கை என்பதா..??! சிந்தனை குழம்புகிறது..!! போனால் போகுது எனியும்.. விடுவதில்லை இவளை..! விட்டால் என் நித்திரை இன்றி இரவுகளுக்கு யார் பதில் சொல்வது..??! நொடிகளை வீணாக்காமல் …
-
- 20 replies
- 1.8k views
-
-
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த குடி ... சங்கள் தொடங்கி வயிறு வளர்க்கிறது .. மாதம் மாதம் கூடுகிறார் சேர்கிறார் .. டீயும் ..வடையும் ..ரோலும் கட்டியபடி .. ஒரு குடும்பம் அதில் நாலுபேர் நாங்களே .. எல்லாம் மாமன் மச்சான் சித்தப்பன் .. நீ இன்று தலைவர் நான் நாளைய தலைவர் .. எங்களுக்குள் எடுக்கும் தீர்மானம் இது .. கணக்கும் இல்லை வழக்கும் இல்லை .. கேள்விகேட்க பத்து ரூபா கொடுக்கணும் .. பதில் சொல்ல செக் கொடுக்கணும் போல .. சிட்டைகள் வந்து விழுகுது சிரமதான வேலையாம் .. சீரழிந்து கிடக்கும் உறவு பாணுக்கு காசில்லாமல் ஊரில் .. சீட்டு காசும் வட்டிகாசும் வெள்ளையா ஆகுது சங்கத்தில் .. சின்னவீடு எல்லாம் பெரியவீடு ஆகுது லோனில் .. சின்னக்கடை சூப்பர் மார்கெட் ஆனது ஊரான் காசில்…
-
- 3 replies
- 814 views
-
-
மலரோடு நேசம் வைக்க குருவிக்கு கற்றுத் தரத் தேவையில்லை.. நிலவோடு நேசம் வைக்க வானுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை.. இதழோடு நேசம் வைக்க முத்தத்துக்கு எச்சில்கள் தேவையில்லை.. சூரியனோடு நேசம் வைக்க சூரியகாந்திக்கு மின்னஞ்சல் தேவையில்லை.. தென்றலோடு நேசம் வைக்க தோப்புக்கு பேஸ்புக் தேவையில்லை.. காலத்தோடு நேசம் வைக்க வாழ்க்கைக்கு செல்போன் தேவையில்லை.. கருவோடு நேசம் வைக்க இலத்திரனுக்கு புவிஈர்ப்பு விசை தேவையில்லை.. என்னோடு நேசம் வைக்க.. மின்னணுக்களில் மின்னிய உன் காதலை அழிக்கத் தேவையில்லை.. காரணம்... உன் மின்னணுக்கள் என் உடலணுக்கள் எங்கும் நிலைபெற்று விட்டதால்..! Spoiler (யாவும் கற்பனை என்று சொல்ல முடியல்ல. பழைய மின்னஞ்சல்களை வாசித்த…
-
- 5 replies
- 1k views
-
-
-
- 4 replies
- 744 views
-
-
ஒரு நாளும் மழையில் நனையாத நான் நேற்று மட்டும் ஏன் நனைந்தேன்.....? மழைத்துளியில் குளித்தாவது உடல் வெப்பதை போக்கி கொள் என உள்மனம் சொல்லிச் சென்றது. ஒரு சிறு பொழுது மனிதர்களால் செய்ய முடியாத ஒன்று அந்த மழை கூட எனக்காக அழுதது போலும்.. நாட்கள் வாரங்கள் மாதங்கள் வருடங்களாய் வண்ண வண்ணப் பூக்களாய் பூத்து நின்ற கனவுகள் காரணமின்றியே உலர்ந்து கொட்டி விட்டன.... என் ஒரு கனவாவது பலித்திடனும் என பகல் இரவாய் விரதம் இருந்தென்ன பயன்..... கண்ட கனவுகள் எல்லாம் பகல் கனவாகி போக என் கனவுகளும் காணாமல் போனோர் பட்டியலில் உரிமை கோர வழியின்றி விழி பிதிங்கி நிற்க ஒருவர் மட்டுமே நிழலாய் தோன்றினார். தூங்கும் போது காண்பது கனவு அல்ல தூங்க விடாமல் காண்பத…
-
- 11 replies
- 1.1k views
-
-
எனது அறையில் எனது இரவுகளில் எல்லாம் உயிர்பித்திருக்கிறது உனது அன்பின் கிருபையால்... உன் கூந்தலின் கருந்சாந்தெடுத்து பூசிய மேற்கூரையின் இருண்ட வெளியின் தனிமை தீர்க்க உன் வெண்பற்கள் வெண்மைகொண்டு வரைந்த நட்சத்திரங்கள் போதாதென்று சமைந்தது பிறைநிலா நீ வெட்டியெறிந்த நகத்துண்டுகள் சேர்ந்து கோள்கள் சில செய்தேன் முகப்பருக்கள் அளவு கொண்டு புருவங்கள் இணைந்து வானவில் பிறந்தது சுவற்றில் கண்ணீர் பெருக்கில் சமுத்திரங்கள் கலந்தது நதிக்கு வடிவம் தராது திகைத்தேன் சுழித்தாய் உதட்டை மார்பு குவியம் மலைத் தொடரானது வேர்வையில் நனைந்த ரோமங்கள் மழைக் காடுகளாய் மாறியது நெற்றிப் பொட்டை சூரியனாய் தந்துவிட்டு போர்வையினுள் புகுந்தாய் மெல்லினம் வல்லினமாய் மிகுந்து உன் பெண்மையி…
-
- 28 replies
- 2.3k views
-
-
உன் வலிகளின் பெறுமதி அறிவேன் கண்ணே! சிறகெனச் சொல்லி சிலுவை தந்து சுமக்கச் சொல்வர்! முத்துநகை சிதறிவிழ முள்முடி சூடி அழகு பார்ப்பர்! கருணையுடன் கைகளில் ஆணிகள் கடாவிக் களிப்புறுவர்! எட்டி நின்று எட்டி தந்து குடிக்கச் சொல்வர்! ஏனெனில் கடவுளின் மகள் நீ! என் அன்புச் சகோதரி யாயிக்காக 01 sep 2014
-
- 0 replies
- 748 views
-
-
ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்வில்லை யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும் கொண்டாட்டநாட்கள் வரும்போதும் அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தூங்கி எழும்பும்போதும் பள்ளிக்கூடம்செல்லும்போதும் அண்ணா எப்பொழுது வருவான்? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை வருடங்கள் பல ஓடிய பின்னரும் யாரைப் பார்த்தாலும் எங்காவது அண்ணாவைக் கண்டீர்க…
-
- 3 replies
- 768 views
-
-
ஊனத்தின் வலியறியா மானிடா ஓரே ஒரு பொழுது உன் காலையோ கையையோ கட்டிப் போட்டு கிடந்து பார் . ஊனத்தின் வலியறிவாய்....
-
- 38 replies
- 2.8k views
-