கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
" உனக்கென இருப்பேன்" என்னை விட்டுச்செல்லாதே எந்தன் பூமி சுற்றாதே உன்னை நீங்கிப்போனாலே உயிரும் என்னில் தங்காதே! காணும் காட்சி உன்னோடு! கவிதைச்சொல்லும் உன்னோடு! வாழும் காலம் எல்லாமே அன்பே நானுன் நெஞ்சோடு! இருளைக்கிழித்த சூரியனாய் எனக்குள் வந்து கதிர் விரித்தாய்! எழும்பி நடக்க நீதானே அன்பே உந்தன் விரல் தந்தாய்! எனக்கே எனக்கென புது உலகம் உன்னால்தானே உண்டாச்சு?! உன்னைச் சேர்ந்த பின்னால்தான் வாழ்வே அர்த்தம் என்றாச்சு?! காதல் என்றெ சொல்லுக்கே உந்தன் பெயரே பொருளாச்சு! இருக்கும் காலம் வரையிலுமே உனக்கே எந்தன் உயிர்மூச்சு! உயிரில் வந்து கலந்தவனே என் உணர்வாய் என்றும் நிறைந்தவனே! இமைபோல் காக்கும் க…
-
- 1 reply
- 808 views
-
-
உனக்கென்ன இனி பேச்சு....??? நாடு நாடாய் ஏறி ஓடி நாட்கணக்காய் பேசியாச்சு.... ஆனாலும் இன்று அங்கு கண்ட தீர்வு என்ன ஆச்சு....??? சுற்று சுற்றாய் வந்து நீங்க சுற்றி சுற்றி பேசியாச்சு.... இன்று வந்து சிங்களமோ தந்த தீர்வு என்னாச்சு....??? எம் தமிழர் இன்னல்களை தாங்கி தாங்கி ஓடினீக..... அந்த மக்கள் அவலங்களை அங்கு வைத்து உரைத்தீர்களே.... உலகத்தார் செவிகளிலே சங்கெடுத்து ஊதினீரே.... மூன்றாம் தரப்பாய் அவரை முன்னுக்கு இருத்தினீரே.... இருந்தும் என்ன பயன் என்ன தீர்வு கண்டீரோ....??? சமாதாணம் வந்ததென்று சந்தோசம் அடைந்த மக்கள்..... தெருக்களிலே பிணங்களாகி தின…
-
- 3 replies
- 1.1k views
-
-
உனக்கென்ன சீதனமா...? /தங்க தாலியெடுத்து தமிழா நீ கட்டிக்கடா-உன் சம்பிர..தாயம் இது வென்றால் தமிழா நீ முடிச்சுக்கடா.... ஆயிரம் பவுணில தாலி அட மனைவிக்கு ஏனடா வேலி...? ஆடம்பரம் எல்லாம் போலி அதை உணரலென்னா ..நீயோ..காலி..காலி.. ஏழ்மை வாழ்விலை நிலையில்லடா- இதை புரிஞ்சிட்டா நீயோ..புனிதனடா.... திருமண வாழ்விற்கு சீதனமா நீயென்ன விலை போகும் கேவலமா...? முதுகெலும்பு இல்லாத ஆணினமா- நீ ஊா்வன பட்டியல் சோ்வனவா..? பிச்சை எடுக்கின்ற வாழ்வுனக்கா வாழ்க்கையில் உனக்கென்ன மதிப்பிருக்கா...? வியா்வையால் உழைத்து முன்னேறடா விலை போகும் நிலையை மாற்றிட..டா.. அடிமையாய் வாழ்வது முறையில்லடா..- மொத்த ஆணிற்கும் இதனால் வெட்கமடா...…
-
- 0 replies
- 1.3k views
-
-
(நண்பன் ஒருவன் 2005இல் தனது முதற்காதல் பற்றிச் சொன்னதில் அவனது வலியினை கவிதையாக்கினேன்) என் சுவாச அறைகளின் சுழற்சியாய் இருந்தவளே ! காதல் வார்த்தையையே கௌரவப்படுத்திய கற்பூரமே. கடைசியாய் நீ தந்த கடிதம் என்றோ நீ சொன்னது போல கைகூடாத காதலின் சாட்சியாக.... உனது கண்ணீர் முழுவதையும் கட்டியனுப்பிய கடலது. கட்டுநாயக்கா நான் தாண்ட நஞ்சு தின்ற என் காதலியே ! எங்கேயடி இருக்கிறாய் ? கசங்கிய உன் கடைசிக் கடிதத்துடன்.... கண்ணீரைத் துடைத்தபடி நான்.... முதற் காதல் - நீ தந்த முத்து(த)க் கையெழுத்துக்கள் இன்னும் விரல்களில்.... வாசமடிக்கிறது. கூடப்பிறந்தவர்க்கும் , உன்னைக் காதலிக்க உயிர் தந்தவர்க்கும் அர்ப்பணமாய் என் காதல். அம்மாவி…
-
- 16 replies
- 1.2k views
-
-
எதையும் தாங்கும் இதயம் எனக்குள் இருக்கிறதென நீண்ட காலமாய் நினைத்துக் கொண்டிருந்தேன் உண்மை அதுவல்ல என்று உண்மையைச் சொன்னது உனது பிரிவு!...
-
- 2 replies
- 1.1k views
-
-
உனனைத் தொடமாட்டேன் உன்னைத் தொடமாட்டேன் வெண்நிலவே உன்னைத் தொடமாட்டேன் கண்களிலே உன்னை நானும் கொள்ளை இடமாட்டேன் காதல் என்று சொல்லி உன்னை இழுக்கமாட்டேன் உன்னைப்போல நானும் தேய்ந்து வளரமாட்டேன் காதல்கன்னி அவள்போல உன்னை இம்சை செய்யமாட்டேன் எட்டாத உயரத்தில்-நீ ஏனி வைத்தும் உன்னைப் பிடிக்கமாட்டேன் உன்னைப்போல நானும் இங்கே தனிமையில் ஏங்கமாட்டேன் தேன் நிலவு தேவதையே-நான் தேம்பியழமாட்டேன் தேடி நீ என்னை வந்தாலும் உன்னைத் தீண்டிவிடமாட்டேன்
-
- 15 replies
- 2.1k views
-
-
உனை வர்ணிக்க....... கண்மணி உனை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் போதவில்லை என்று வானவில்லை நாட்டினேன் வானவில்லின் நிறங்கள் கூட உனை வர்ணனை செய்ய மறுத்துவிட்டதால் தென்றலிடம் நாடினேன் தென்றல் கூட தான் அடிக்கடி சூறாவளியாக மாறுவதால் மறுத்துவிட கடலிடம் சரணடந்தேன் கடல் கூட தான் பல பேரின் உயிரைக் குடித்துவிட்டேன் என்று கவலையோடு உரைத்துவிட நிலவை நாட்டினேன் நிலவு கூட உன் அழகிய வதனம் கண்டு பொறாமையோடு மறைந்து சென்றுவிட அன்பே...அன்பே நான் எதைக்கொண்டு உன்னை வர்ணிக்க..???? ஒன்றே ஒன்று மட்டும் என் மனதில் பிரசவித்த வார்த்தை அம்மணி..... நீ.... என் உயிரினில் பூத்துவிட்ட அ…
-
- 10 replies
- 1.9k views
-
-
இத்தனை அழகாய் இருப்பிடம் வேறெங்கும் இருக்குமா தெரியவில்லை. வேளைக்கு உணவு; நோய் காணும் முன்னே மருந்து; யாருக்கு கிடைக்கும் சொல்லுங்கள். விரட்டி உயிர் பறிக்கும் வேட்டையன் இல்லை. மட்டற்ற கலவிக்கு சாஸ்த்திரமும் வேண்டியதில்லை. ஜாலத்தில் கிளர்கிறது வர்ணங்களால் வடிவம் கொண்ட உலகு. உயிர் வாழ்வதுக்குண்டான அனைத்து உத்தரவாதமும் உனக்குண்டு. இத்தனைக்கும் எதிர்மாறாய் சேறும் சகதியுமாக நிலையாமையில் கட்டமைக்கப்பட்டதென் அழுக்காறு உலகு. இரையில் பொறி வைத்து உயிர் பறிக்கும் குரூரம். நெளியும் புழுவில் ஒழியும் முள் குரல் வளை கிழிக்கும். உணவுக்குள் மரணம் ஒளிந்திருக்கும் சாபம். உயிர் காவும் வேட்டையன்…
-
- 0 replies
- 1.9k views
-
-
உன் உயிர் தந்து எமை கொன்றாய்....... கவிதை - இளங்கவி உன் உயிர் தந்து எமை கொன்றாய்....... கவிதை - இளங்கவி நீர் உமது உயிரைப் போக்க எங்கள் இதயத்தின் மூலையில் நம் குருதிகள் உறையும்...... நீர் உமது லட்சியம் அடைய நம் காதுகளில் உங்கள் இறுதி மூச்சொலி கேட்கும்..... கடலில் தொலைந்த உமது உடலையும்...... நிலத்திலே கருகிய உமது உடலையும்.... தேடித் தேடி நம் கண்கள் தூக்கத்தை தொலைக்கும்..... கணவனுக்கு தன் மனைவியின் அணைப்பு பிடிக்காது அவள் நெருப்பாய் சுடுவாள்...... மனைவிக்கு கணவனின் அணைப்பு விறைத்த உடலுக்கு விருந்துபோல் உணர்வாள்...... காதலனுக்கு இனிக்கும் காதலி அன்று மருந்தாய் கசப்பாள்.... காதலிக்கோ காதலனின் தொடுகை …
-
- 13 replies
- 1.7k views
-
-
ஒவ்வொன்றாய் மலர்கள் பூக்கும் அதத்தனையும் மண்ணில் கவிதையாகும்; வாசம் வானம் துளைக்கும் – அதைக் கடந்தும் தமிழ் இலக்கியமாய் காலத்தில் நிலைக்கும்; பாசமற உள்ளம் சேரும் பாட்டில் பாடம் தேடும் காடு கனக்கும் பொழுதில் – தமிழே நின்று தலைமேல் வாழும்; யாரும் பாடும் ராகம் எங்கும் ஒளிரும் தீபம் வாழ்வின் நகரும் தருணம் நாளை தமிழில் வரலாறாகும்; பேசும் உலகம் பேசும் மறந்து மறைந்துப் பேசும் கூசும் நாக்கை அறுக்கா துணிவில் தலையை ஆட்டும்; துடைத்த இனத்தின் மீதம் துளியேனும் நிலைக்க எழுவோம் துடித்து அழுத வலியை இனி திருப்பித் திருப்பித் தருவோம்; தடுக்க இயலா வேகம் – தமிழர் மரபிலிருக்கு அறிவோம்; திரட்டி திரட்டி சேர்த்து – நம் ஒற்றுமை பலத்தை உ…
-
- 0 replies
- 671 views
-
-
-
- 27 replies
- 6.8k views
-
-
உன் கற்பனை -----------;;;;;? அறிவான புூவே ...நீ அன்புபடைத்த குணமே உனக்கு உன் பேச்சி; ஓர் இiசையே பல சோகங்கள் மனசில் கொண்டு வெளியில் நல்ல மனிதன் போல் நடமாட? உன் மனசி;ல் குடி கொண்டிருக்கும் ஓர் இளம் காற்று--? அந்த காற்றை தேடித் தேடி பாக்கிறாய் காணவில்;லை ? கனவில் வரும் கற்பனைகள் வளர--- கண்களில் நீர்கசிய கல்லான இதையத்தை கனிய வைத்து காற்ரேயே நினைத்த படி கலங்கி நிக்கின்றாய் நீ------? காற்றின் இசையை கேட்டு அழவில்லாத கற்பனைகளை வளர்த்து தல்லாடும்உன் நெஞ்சம் ஏமாத்துவாளா என்று ஓர் பயம் அவளின் இசைகளைஉன் மனதில் அளவில்லாமல் வளர்த்துக்கொண்டாய் --நீ அந்த காற்றின் இசைகளைக் கேட்டு வீனான கற்பனைகளைவளர்த்த நீ அவளை மறக்கவும் முடிய…
-
- 15 replies
- 2.4k views
-
-
உன் கல்லூரி நண்பி மனிதக் கூடுகளைச் சுமந்தலையும் உயிர்களுக்கு மத்தியில் ‘மனிதம்’ காட்டி என்னை மயங்க வைத்த தோழனே ! உன்னைப் பிரிவதற்கு என் மனம் ஒப்பவில்லை நண்பா. வார்த்தையில் வர்ணஜாலங்களை வாரி இறைத்த என் கல்லூரிக் கலைஞனே என் உயிரை அழுத்திப் பெருவலியெடுக்க, உன்னைப் பிரிவதை எண்ணி நான் துடித்துப் போகிறேன். காயமற்ற இடங்களில் கூட உன் பிரிவு வலியைத் தருகிறது தோழா ! உடைந்த சிலம்பின் கதறலாய் தனித்து விடப்பட்ட சிறு தீவின் குமுறலாய் துயரெடுத்துப் புலம்புகிறது என் இதயம். என் உயிர் நண்பனே ! உன் கைப்பேசியில் என் எண்ணை அழுத்தி அடிக்கொரு ஒரு ‘குறுஞ் செய்தி’ அனுப்…
-
- 7 replies
- 4.2k views
-
-
காதலிக்கிறேன் என்றாய்... பல பல பொய்கள் புனைந்து புகழின் விளிம்பில் இட்டு சென்றாய்... காதலில் இது சகஜம் என நினைத்தேன்... இன்று நீ... அதையே வேறோருவளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாய்.... சற்றும் மாறாமல்.....
-
- 22 replies
- 1.7k views
-
-
. எல்லாம் நிறைந்ததே வாழ்க்கை வாழ்க்கையின் எல்லா மணித்துளிகளும் சந்தோசமானவையல்ல எவன் ஒருவன் துன்பத்தை எதிர்த்து போராடுகிறானோ அவனே வாழ்க்கையில் வெற்றிபெறுகிறான் இறக்கும் திகதி தெரிந்து யாரும் பிறப்பதில்லை பிறந்த எல்லோரும் சாதனை படைத்து இறப்பதில்லை எதைக் கண்டும் அஞ்சாதே எதை செய்வதாக இருந்தாலும் ஆழமாய் யோசி யோசித்தது சரியா என்று இன்னொரு முறை யோசி உன்னை நீ நம்பு யாரலும் முடியாததைக்கூட முயற்சித்தால் உன்னால் முடியும் என்று நம்பு வாழத் தெரியாதவன் தற்கொலை செய்து இறந்து போகிறான் …
-
- 4 replies
- 1.1k views
-
-
உன் தாய் தந்தையின் அருமை நீ வளரும் பொது தெரியாது உன் பிள்ளையை வளர்க்கும் போது தான் தெரியும்...
-
- 5 replies
- 1.3k views
-
-
உன் தோள் சாய ஆசைதான்...... அன்பே... உன் தோள் சாய நான் தூங்காமல் கத்திருக்கிறேன் தூக்கத்தில் மட்டும்தான் நீ வருவயா? நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் நீ விழி மூடிக் கிடக்கிறாய் நான் விழி மூடும் நேரமெல்லாம் என் விழிகளுக்குள் நடக்கிறாய் இருவரும் சேர்ந்தே விழிப்பதும் சேர்ந்தே நடப்பதும் எப்போது? பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் எம்மால் முடிகிறது உடலுக்கு மட்டுமல்ல உணர்வுகள் மனதுக்கும் உண்டு முடிவே இல்லாத வாழ்வும் பிரிவே இல்லாத உறவும் என்றுமே இல்லை இருந்தும் ஏகாந்தத்தை ரசிப்பதுவும் நேசிப்பை ருசிப்பதுவும் எமக்குப் பழக்கமானவை ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
உன் நினைவால் வாடுகிறேன்...... கவிதை.... காலையிலே எழுவதற்கு மறுக்கும் கண்கள்... சில நாளாய் அதிகாலை விழிக்கிறது.... மனதெல்லாம் லேசாகி பஞ்சாகப் பறக்கிறது.... இந்த மாற்றம் என் மனதில் சில நாள்தான்.... என் மனதை வாடகைக்கு எடுத்துக்கொண்ட வஞ்சிமகள் நினைவால்தான்.... வாடகை தராதே நிரந்தரமாய் வந்துவிடு... சொல்ல நினைக்கிறேன் முடியவில்லை; காரணம் நான் அவளின் முகமின்னும் பார்க்கவில்லை.... என் காதலை சொல்வதா விடுவதா...? அவளின் கண்பார்த்தால் தெரிந்துவிடும்... இல்லையேல் அவள் கதை கேட்டால் புரிந்துவிடும்... அவளின் கண்ணும் பார்க்கவில்லை... அவள் பேச்சும் கேட்கவில்லை... ஆனாலும் அவளின் கண்ணாடி உருவம…
-
- 0 replies
- 788 views
-
-
பள்ளி நாட்களில் பட்டாம் பூச்சிபோல் பழகிய உன் நினைவு பசுமையாக என் மனதில்... பல்லாண்டுகள் பல பொழுதுகள் பறந்து போனாலும் பால் நிலவாக உன் நினைவு... நட்புக்கு நீயும் தோழி இரங்குவதில் நீயும் என் தாய் அன்புக்கு நீயும் காதலி அறிவில் நீயும் என் ஆசான் உன்னை நான் சந்தித்தேன் இளவேனிற்காலம் உன்னை நான் பிரிந்தேன் இலையுதிர்காலம் உன்னைப்பிரிந்த பின் என்வாழ்வு மாரிகாலம் வாழ்கை என்பது உன் நினைவுகள் உறங்குமா உன்
-
- 15 replies
- 1.9k views
-
-
நீ கொடுத்ததில் விலை மதிக்கமுடியாதது எது தெரியுமா? நீ உனக்கே தெரியாமல் எனக்கு கொடுத்த உன் நினைவுகள்தான்...
-
- 0 replies
- 814 views
-
-
[size=4]உன் நினைவுகள் வரும் போது அழத்தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை கவிதைகளாக எழுதுகிறேன்...[/size]
-
- 2 replies
- 572 views
-
-
என்றும் என்னில் கலந்த உறவே எப்போதும் எனக்காய் வாழும் உயிரே என் தாய் போல் அன்பு காட்டிய நீயே என் தவிப்பு புரியாமல் மௌனமாக என் மனவாசல் கதவின் தாழ் திறந்த நீ காலங்கள் வரும் காத்திரு என்றாய் காலங்கள் ஓடுகின்றன உன் நினைவுகளுடன் காலமகளும் சிரிக்கிறாள் உன்வார்த்தைகள் காணாமல் போனதாக கடைவாய் சிரிப்புடன்
-
- 1 reply
- 943 views
-
-
உன் மீது நான் கொண்ட காதலை இறைவனிடம் கொண்டிருந்தால் எப்போதோ எனக்கு மோச்சம் கிடைத்திருக்கும் உனக்காய் எழுதிய கவிதைகளை அச்சடித்திருந்தால் புதிய காவியம் ஒன்று கிடைத்திருக்கும் நீயோ.... காதலால் எனக்கு அழகானாய் கவிதையால் எனக்கு நிலவானாய் ஆனாலும் நீ நினைத்த மாதிரியே என் இதயத்தை ஒத்திகை மேடையாக்கி உன் காதல் அபிநயங்களை அழகாய் பழகிச் சென்று விட்டாய் இதில் என்ன ஆச்சரியம் என்றால் கொஞ்ச காலமெடுத்தாலும் ஆசிரியர் இல்லமாலே நீ நீயாவே நடன ஆசிரியையானதுதான் திருவிழா நெரிசல்களில் தொலைத்துவிட்டாலும் தேரில் பவனி வந்து எனக்குத் தரிசனம் தருவது உன் நினைவு மட்டும்தான் மறப்பதா..? உன்னையா...? நானா..? பேசாமல் என்னை நீ செத்துப்போ…
-
- 2 replies
- 1k views
-
-
உன் நிழல் கூட இனி உனக்கு இல்லை!! வெட்டி வெட்டி எறிந்தாலும் நகம் துளிர்விடும்...! துட்டகைமுனு படை... விட்ட தவறை.... சரி செய்ய.. விளங்காமல் தவிக்கும்! செத்து செத்து பிழைக்கும்... இனத்தின் முகத்தில்-ஒரு சிரிப்பு பூக்கும்...!! யூலை படுகொலை... ஆரம்பம் அவருக்கே-இனி முடித்து வைக்க.... முடியுமா அவராலே? தன் வினை.. தன்னைச் சுடும்... தமிழனை எரித்தவர்.. வாழ்வு........ இனி தலைவர் அனுமதி பெற்றே... தன் நிழலைக்கூட இனி தான் நம்பும்!!
-
- 16 replies
- 2.3k views
-
-
உன் நெஞ்சக் கூட்டறையில் நிலவரசி முற்றத்தில் வந்திருந்து கதைபேசும் வரம் ஒன்று வேண்டும் :lol:
-
- 17 replies
- 1.3k views
-