கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வணக்கப்பாடலும் மாவீரர் வணக்கமும் எம் தலைவரின் சிந்தனையும் திருவள்ளுவர் ஆண்டும் மாதமும் திகதியும் நேரமும் கூடவே பண்பலை வானலையில் .. என்ன வேலை இருப்பினும் வானொலி அருகிருக்கும் மறவர் வீரம் பாடி அரசியல் அலசும் தாமரை தட்டாகம் பின்னர் ஒரு குறு நாடகம் ஒலிவடிவில் .. உண்மை வந்திடும் என்னும் பயத்தில் தேடி வந்து தாக்குவார் சிங்களம் கோபுரத்தில் சேதம் வரும் ஆனாலும் கொள்கையில் சிறிதும் வராது ... செய்திகள் இனிதே வரும் வெற்றிகள் சொல்லி எப்படி முடியும் என்பார் அதிர்ச்சியில் பலர் கோபுரம் சாய்ந்ததால் என்ன பற்றி எரிந்தால் என்ன பனையிலும் பாலை மரத்திலும் அண்டனா இருக்கும் .. தவபாலன் குரல் வருமா இனி எமக்கு புதுவையின் கவி வருமா வீரரை போற்றி அண்ணனின் உரைவருமா மாவீர…
-
- 10 replies
- 790 views
-
-
அண்டையில் இருக்கும் அசிங்கமே அநியாயமே 87 இல் ஈழத்தில் தமிழனைக் காப்பதாய் படைகள் கொண்டு வந்தாய் சிங்களத் துவக்கால் அடியும் வாங்கினாய் இருந்தும் அவன் வால்பிடித்து கரம் குலுக்கி அடித்தவனைக் காத்தாய்.. நண்பனெனும் வரமும் கொடுத்தாய்..! வரவேற்று.. பூமாலை போட்ட தமிழனை "பூமாலை" என்ற பெயரில் படைகள் ஏவிக் கொன்றாய் குவித்தாய் சொந்த இனத்தைச் சூறையாட கூலிகளை வளர்த்தாய் இறுதில் சுருட்டியதோடு கூட்டிக் கொண்டு ஓடினாய்..! நீண்ட தொல்லை இது துரத்தாமல் தீராது என்றே.. வீரப் புலிகள் விரட்டி அடிக்க ஓடிய நீ... மீண்டும்... கொல்லைப்புறந்தில் இருந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் சிங்களத் துணையோடு வேட்டைகள் ஆடினாய்..! தமிழர் சாவினில் அரசியல் செய்தாய் காந்தியம…
-
- 5 replies
- 700 views
-
-
பிரளயத்தின் சாட்சி கண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர் பின்னர் ஆண்குறிகளால் பின்னர் துப்பாக்கிகளால் அழுகிய பிணங்களைப் புணரும் வீரமிகு படைகள் வேறெதைச் செய்வர்? யாருமற்ற கடற்கரையில் ஈனக்குரல் எழுப்புகையில் ஒரு ஊர்க்குருவியும் துணைக்கில்லை வற்றப்பளையம்மன் எங்கு சென்றாள்? யாராலும் எழுத முடியாது நேரிட்ட நிர்க்கதியை சிந்திய கண்ணீரை உறிஞ்சபடப்ட்ட இரத்தத்தை பிய்த்தெறியப்பட்ட கதையை இறுதிக்குரலை நிராயுதயபாணிகளை வேட்டையாடும் கொலையாளிகளிடம் ‘அது நானில்லை’ என்று சொன்னாய் யாரை அவர்கள் விட்டு வைத்தனர்? அன்றொ…
-
- 0 replies
- 618 views
-
-
தன்னைக் கொன்றவனின் வாக்குமூலம் ஆராய்தலின் பின் தற்கொலையென்று தள்ளி வைக்கப்படுகிறது. அங்கு, தன்னைக் கொன்றவனின் வார்த்தைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்காது. தன்னைக்கொல்ல துணிந்தவனின் வார்த்தைகள் வாழ்க்கைக்குள் தன்னை கொன்றவனுக்கு எப்படிப் புரிந்திருக்கும் ? தன்னைக் கொல்லுதல் மலர் உதிர்வதுபோலவும் இருக்கலாம். மை கரைவது போலவும் இருக்கலாம். ஒரு மரம் சரிவது போலவும் இருக்கலாம். தன்னைக்கொன்றவனின் கடைசி நிமிடங்கள் பற்றி எவரும் பேசுவதில்லை, அவன் சுமந்திருந்த தனிமையை எவரும் உணர முயல்வதுமில்லை. அவன் உருவாக்கிய வெற்றிடம் குறித்தும் எவரும் கவலைப்படுவதில்லை, ஆனாலும், தன்னைக்கொன்றவனைத் தாண்டிவிட முடிவதில்லை எவராலும் வழமைபோல, அவனுக்கு அந்த நேரத்தில் தேவையாக…
-
- 8 replies
- 709 views
-
-
ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...! காலம் 2013 ஆடி..., இரவு கரையும் ஈரத்தில் நந்திக்கடல் ஆழத்தில் நிலவு கரையும் நாளொன்றில் அர்த்த இரவொன்று....! அமைதியாய் ஓடியலைந்த அலையில் முகம் நனைத்த அன்றைப் பொழுதின் இனிமை இதய அறைகளில்...! காலம் 2009 மேமாதம்...., காலழைந்த அந்தக் கன இருளின் திரையூடே களமாடியகதை சொன்ன தோழியின் காலடிகள் மீளத் தேடியது நினைவு....! ஆழத்தொலைந்த அலைகளோடு என் ஆத்மா நிறைந்த ஆயிரமாயிரம் பேரின் முகங்களின் ஞாபகம் கண்ணீராய்....! மீளத்தொலைந்து போனது கடைசிக் கதைகளும் காலம் மறைத்த துயர்களும் பின்னிரவுக் கனவுகளில் பிரளயமாக....! பிரியம் நிறைந்த தோழி இசைப்பிரியாவின் இறுதிக் குரலின் துயர் படமாய் ஒருநாள் பலந…
-
- 15 replies
- 1.9k views
-
-
மரண நாடொன்றில் மாநாடு வைக்கப்போகும் மான்புமிகு நாடுகளின் மாபெரும் மனிதர்களே!! கட்டுநாயக்கா உங்களை கட்டுக்கடங்கா மகிழ்ச்சியோடு வரவேற்கும்! அங்கு வீசும் காற்றில் சுற்றும் வண்ணக் காற்றாடிகளின் வண்ணத்தில் உங்கள் எண்ணமெல்லாம் வண்ணமாகும்! அக்காற்றோடு கலந்து வரும் கந்தகவாடையும் வெந்தக வாடையும் உங்களுக்குப் புரியாது! அலங்கார மண்டபத்தில் சிங்கார மங்கைகளின் ஆரவார வரவேற்பில் எங்களின் அவலக்குரல் உங்களுக்குக் கேட்காது!! வரும் வழியில் பாருங்கள் தமிழனின் மண்டையோடுகள் உங்கள் கண்களிலும் தென்படலாம்! நீங்கள் உட்காரும் நாற்காலிகளின் அடியில்கூட தமிழனின் எலும்புக்கூடுகள் உக்கிக்கொண்டிருக்கும்! சர்வாதிகாரி வீட்டில் சர்வதேச விருந்து...! சிங்களம் படைக்கும் சிங்…
-
- 10 replies
- 873 views
-
-
ஆரியச் சக்கரவர்த்தி ஆசோகனின் காடைக் கடையன் விஜயன் பரம்பரையில் உதித்த சிங்கள தேசத்தில் 50 களில் தமிழ் பெண்கள் மார்பறுத்து கொதி தார் ஊற்றி... அனல் தணல் மீது விட்டெறிந்து கொடுமை செய்து.. கூடி நின்று கேலி செய்து வெற்றிக் கோசம் போட்டு மகிழ்ந்த கூட்டம்... 83 இல் அதையே அகலப்படுத்தி தமிழச்சிகள் சேலை களைந்து மானபங்கப்படுத்தி தமிழர் குடியையே ஆடை இன்றி விரட்டி அடித்து மகிழ்ந்து நின்று.. மகாவம்சம் வழி வீரம் பேசிக் கொண்டது. அந்தக் காடைக் கழுதைகளை காட்டேரிகளை.. இராணுவம் என்ற பெயரில் உலக நாடுகள் அள்ளி வழங்கிய கொலைக்கருவி கொடுத்து தமிழர் பகுதிக்கு அனுப்பி வைத்தான் ஜே ஆர்..! ஒப்பரேசன் லிபரேசன் முன்னாடி தொடங்கி ஒப்பரேசன் லிபரேசனில் தமிழ் பெண்கள் …
-
- 9 replies
- 1.9k views
-
-
உறவுகளே... ஒரு கவிதைக்கு அதைப் படைத்தவனால்தான் பூரணமான உயிர்ப்பினையும் உணர்வினையும் பூரணமாகக் கொடுக்க முடியும் என எண்ணுகின்றேன். அத்தகைய என் முயற்சியில்.... பரீட்சார்த்தமாக இன்று முயற்சிசெய்ததன் விளைவே இந்த ஒளிப்படத் தொகுப்புடனான கவிதை. இதனை என் சொந்தக் குரலில் படைத்திருக்கின்றேன். தயவுசெய்து சகித்துக் கொள்ளுங்கள் !!!
-
- 21 replies
- 3k views
-
-
இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து…. ஒரு மானுட வதை:- ஆதிலட்சுமி Tuesday, November 5, 2013 @ 11:50 PM இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து…. ஒரு மானுட வதை மகளே……. பிறக்கும் போது யாருக்கும் பிறப்பின் அருமை தெரிவதில்லை நீ பிறந்த போதும் அப்படித்தான். நீ மட்டுமல்ல… லும்பினியில் மாயாவின் மடியில் சித்தார்த்தன் பிறந்தபோதும் அவன் பிறப்பை யாரும் உணரவில்லை…. மாட்டுத் தொழுவத்தில் மரியாளின் மடியில் உதித்தபோது… ஏசுவையும் எவரும் கண்டுகொள்ளவில்லை…. மக்காவில் நபிகள் பிறந்து 40 வயதாகும் வரை அவர் பெருமை யாருக்கும் புரியவில்லை… சரவணப் பொய்கையில் தாமரைப் பூக்களாய் தோன்றிய போது சூரனை வதம் செய்ய வந்தவன் என முருகனை யாரும் நினைக்கவில்லை அப்படித்தான்….. நீ பிறந்தபோதும் உலக…
-
- 1 reply
- 847 views
-
-
பல்லவி ஆள்காட்டி ஆள்காட்டியே அன்புள்ள ஆள்காட்டியே தூது செல்ல மாட்டாயோ சேதி சொல்ல மாட்டாயோ அனுபல்லவி அன்னை மண்ணே அன்னை மண்ணே உன்னை இழந்து போகின்றேன் -என் ஆசையுள்ள காதலியாள் எங்கேயென்று தேடுகின்றேன்… வெட்டைவெளி தாண்டி நாங்கள் நடைப்பயணம் போகின்றோம் வாழவழி தேடி நாங்கள் வழிப்பயணம் போகும் நேரம் – என் பாசமுள்ள காதலியைக் கைப்பிடிக்க முடியலையே… (ஆள்காட்டி ஆள்காட்டியே…) சரணம் கிட்டிப் புள்ளு அடித்து நாங்கள் கெந்தித் தொட்டு ஆடி அங்கே தொட்டுத் தொட்டுப் பேசி முன்னே காதல் செய்து மகிழ்ந்திருந்தோம் சுற்றிவர முள்வேலி அதன் நடுவே சிறு குடிசை சிறு குடிசை தாண்டி நானும் தேடுகிறேன் காதலியை கண்தொலைவில் அவ…
-
- 7 replies
- 1.1k views
-
-
போதி மரப் புத்தனே..! உன் ஞானம் எங்கே..?? பார்த்தாயா உன் புத்திரரை...??? சிங்கம் வழி வந்த வம்சம்... அசிங்கம் செய்யும் மிருகங்களா? ஐந்தறிவு மிருகங்களுக்குக் கூட கொஞ்சமேனும் இரக்கம் இருக்குமே..! உனைத் துதிக்கும் இனத்திடம் எதுவும் இல்லையே புத்தா...!!! நீ போதித்த பெளத்த தர்மம் இதுதானோ? 'பூமி நோகாமல் நட' என்றாயே..! எறும்புகள் மிதிபடும் என்றுதானே...!! எங்கள் அரும்புகளையெல்லாம் கொத்துக் கொத்தாய்ச் சிதைத்தார்களே...!!! அப்போது... எங்கே போனாய் புத்தா? 'தமிழனைக் கொன்று வா...! வென்று வா...!' என்று நீதான்... வாழ்த்தி வழியனுப்பி வைத்தாயோ..? உன் புத்திரரின் பாதகங்களை பார்த்து ரசித்தாயோ...? தமிழச்சிகளை சீரழிக்க நீ சிரித்து மகிழ்ந்தாயோ...?? எத்தனை இசைப்பிரியாக்களில…
-
- 10 replies
- 1.4k views
-
-
நான் இசைப்பிரியா ஓயாத கடலின் அலைகள் இடைவிடாது என்னுடலில் மோதியபடி மடிந்து சரிகின்ற வேளையில் ஆழமாய் வேர்ப் பரப்பி விரிந்திருக்கும் நீர்த்தாவரத்தைப் போல என்னை இழுத்துச் செல்கிறாய் என் காலடியிலிருந்து ஒழுகி வழியும் நீர்த்துளிகள் உன் அழித்தொழிப்புக்குச் சாட்சியாய் வெளியெங்கும் உருண்டு கொண்டிருக்கும். அடர்ந்த வனத்தில் தனித்துத் திரியும் மிருகத்தின் வெறிகொண்டு என்னை வல்லுறவு செய்கின்றாய் சதையை ஊடுருவிய உன்னால் என் நிலத்தின் நிணநீர் ஓடும் எலும்புகளை என்ன செய்ய இயலும்? என் மார்பகங்களை அரிந்து வீசிய உனக்கு அதன் அடியிலிருக்கும் நெருப்பின் சூடு தகிக்கவில்லையா? நீ ஏந்திய இரும்புக் கருவியும் பாய்ச்சிய உடற்குறியும் இனி எழுச்சியின் அமிலத்தில் கரைந்தே போகும் …
-
- 3 replies
- 944 views
-
-
இக்கவிதையின் நாயகியான் என் மனைவி வாசுகிக்கு சமர்ப்பணம் என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் * அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய பாசி படர்ந்த குளமென்றிருந்தேன். * ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி ஜாடை காட்டினாள். மறுநாள் அங்கிருந்தது என் கூடு. இப்படித்தான் தோழதோழியரே எல்லாம் ஆரம்பமானது. தண்ணீரை மட்டுமே மறந்துபோய் ஏனைய அனைத்துச் செல்வங்களோடும் பாலை வழி நடந்த காதலர் நாம். * அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை. நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக…
-
- 16 replies
- 4.6k views
-
-
தேச ஒருமைப்பாடென்று கூடிக் கற்பழித்தவர்கள் எங்கள் வாய்கால்களில் தங்கள் குறிகளை கழுவிக்கொண்டிருக்கிறார்கள். வாருங்கள் மன்றாடுவோம். கழுகின் நிழல்களில் ஒதுங்கி வாள் சுமந்த நீதிதேவதை வெள்ளையாடையோடு வருகிறாள் உயர்ந்த ஜனநாயகநாடும் காந்தியச் சக்கரங்களால் சாம்பல் மேடுகளிலும் எலும்புச்சிதைவுகளிலும் ஏறி வருகிறது. காடுகளை அழிக்கையில் உறங்கி இருந்திருப்பார்கள். அல்லது விருந்தில் இருந்திருப்பார்கள். இவர்களுக்கு எதுவுமே தெரியாது வாருங்கள் மன்றாடுவோம். நீதி கேட்போம். வண்ணாத்துப்பூச்சிகளையும் மின்மினிப்பூச்சிகளையும் கொன்று சிதைத்த கதைகளை சொல்லுவோம். கூட்டம் கூட்டமாய் தவித்து நின்ற மான்குட்டிகளை நஞ்சு பூசிக்கொன்ற கதைகளை சொல்லுவோம். ஒலிவ்இலைகளை சுமந்த வெள்ளைப…
-
- 10 replies
- 1.1k views
-
-
பார்த்தலையும், புன்னகைத்தலையும், நிராகரித்துவிடும் பலரை கடக்கவேண்டியிருக்கிறது. அரவணைப்புகான ஏக்கத்தைதையும் இன்றின் ஏமாற்றத்தையும் சுமந்து திரியும் சிலரையும் கடக்கவேண்டியிருக்கிறது. வீடுகளில், வேலைத்தளங்களில் - இருந்து ஏதாவதொன்றைக் காவி வருபவர்களையும், ஒரு சீக்கரெட் , கபே வழியாக ஏதோவொன்றை இறக்கி வைக்க முயல்பவர்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. லெதர் ஜக்கெற்றுக்களும் மப்ளர்களும் மனதையும் மூடிவிட ஐபோனும் கூலிங்கிளாசும் பொறிகளையும் தின்றுவிட கொட்டடி முதல் கொடிகாமம் வரை உறவாடி உணர்வோடு இருந்தம் என்பவரையும் பொறுத்துக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. சென் நதியிலும் லூவர் மியூசியத்திலும் ஈபிள் கோபுரத்திலும் நீண்ட மெற்றோக்களிலும் ஏறிவந்த பின்னும்…
-
- 9 replies
- 871 views
-
-
-
- 7 replies
- 851 views
-
-
ஓ துகிலுரியப்பட்ட தங்கையே துட்சாதனன்களோடு நவகண்ணன்களும் கைகோர்த்துச் செய்த கொடுமை... பிணங்களின் நினங்களின்மேல் அபிவிருத்திப் பாடைகட்டும் அரக்க உலகே எப்போது உன் மனச்சாட்சி திறக்கும்... மனமிருக்கிறதா இருந்தால்.............. இன்றேனும் இல்லை நாளையேனும் உன் மனதைத் திறப்பாயா இல்லை சிங்களத் திமிரோடு சங்கமித்து சங்கமித்திரையையும் சாகடித்துப் புணர்வாயா? புணர்வதற்கு பெண்ணெண்ண பிணமென்ன.... தூ........... சிங்கம் புணர்ந்தெடுத்த சிங்களத்து வம்சமது செங்களத்தில் பட்டபாட்டை இப்படித்தான் தீர்த்ததுவோ! இதன்பின்னும் ஈனர்களாய் ஒரு கூட்டம் வீணர்களாய் ஒரு கூட்டம் வெட்டிகளாய் ஒரு கூட்டம் வேண்டாம் தாயே நீ எம்மை மன்னிப்பாய்! காத்திடவும் முடியாது நீதி காண்பதற்கும் முடி…
-
- 10 replies
- 863 views
-
-
1996 இல் சந்திரிக்காவின் வெற்றிக்கு பள்ளி சிறுமியவள் கிருசாந்தி என்ற பிள்ளையை சிங்கள நாய்களுக்கு பரிசளித்துக் கொன்றாயேடா செம்மணியில் அதைப் புதைத்தும் நின்றாயேடா அன்றும் சாட்சியாய் நீயே..!! வேலணையில் வைத்திய சேவகியை தாதியை புங்குடுதீவில் சாரதாம்பாள்,தர்மினியை உன் காலடியில் தின்று கொன்று புதைக்க கூட்டாகி நின்றாயேடா அங்கும் சாட்சியாய் நீயே..! நெடுந்தீவுப் பூமகள் லக்சினியை இளஞ்சிட்டை உன் சொந்தக் கூலியை ஏவித் தின்று கொன்றாயேடா நேற்றும் சாட்சியாய் நீயே..! இப்படி.. ஆயிரம் ஆயிரம் எம் தங்கைகளை அக்காக்களை கண்முன்னே சீரழிதவன் நீ.. அங்கெல்லாம்.. மெளனம் காத்து கொடூரருக்கு உதவி நின்றவன் நீ.. இசைப்பிரியா என்ற மகள் அழிவதை சிதைவதை வேடிக்கை பா…
-
- 2 replies
- 897 views
-
-
காலம் கனிகிறது நேரம் நெருங்குகிறது நெருப்பு வைத்தவர் நெஞ்சேறி மிதிக்கவென பற்ற வைக்கக் குச்சி கொடுத்தவர் படம் காட்டி எம்மை பதற வைக்கிறார் எமக்காக அவர் ஏதேதோ செய்கிறார் ஏக்கத்துடன் நாம் பார்த்திருக்கிறோம் எம் பெண்களை எப்படி வதைத்தார் துணி களைந்து துடிக்க வைத்தார் நிர்க்கதியாக்கி நெரித்துக் கொன்றார் ஆவிதுடிக்க அந்தரிக்க அத்தனை வதைகளும் எம்மவருக்கு எத்தர்கள் செய்தார் அத்தனையும் நாம் பார்த்திருக்கிறோம் அழுதுவிட்டுக் காத்திருக்கின்றோம் இன்னும் எத்தனை படங்கள் போடுவார் ??? எதிரியை எப்போ சிக்க வைப்பார் ???? நீதிமன்றின் முன் நிக்க வைப்பார் ???? எத்தனை கேள்விகள் எம்மிடம் உண்டு ஆயினும் மற்றவன் எமக்காய் எல்லாம் செய்வதை மானம் கெட்டுப் பார்த்திருக்கின்றோம் ந…
-
- 4 replies
- 609 views
-
-
நீ செத்துவிட்டதாய் அறிந்தபோது நம் தோழிகளில் ஆயிரக்கணக்கான ஒருத்தி இறந்துவிட்டாள் என்றிருந்தது நீ படுகொலை செய்யப்பட்டாய் என்றறிந்தபோது படையினரிடம் சரணடைந்தபின் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தோழிகளில் நீயும் ஒருத்தியாகிவிட்டாய் என்று வேதனையாய் இருந்தது. ஆனால் இன்று..... நீயேகூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத அரசபடையின் கோரமுகத்தை நேரில் கண்டவள் நீயாகி உலக மனச்சாட்சிகளை உலுக்கும் பேரொலியாகிவிட்டாய். உன் வெற்றுடம்பில் சூடுகண்ட பிசாசுகளையும் அதன் பின்னணியில் இருக்கும் மனிதமுகம் போர்த்திய அரக்கர்களின் முகமூடிகளையும் கிழித்தெறியும் சக்தி உன் அம்மணத்திற்கும் இருக்கிறது. கதிர்காம அழகி மன்னம்பெரியை அவமானப்படுத்துவதாய் எண்ணிய சிங்களவர்கள் தம்மீது அழிக்க ம…
-
- 2 replies
- 708 views
-
-
ஈனக்குரல் - தேவஅபிரா அலையிழந்து அடங்கியகடல் ஆடையிழந்து கூடாகிய உடல் நிலைகுலைந்து நின்றது நீயும் நீ அவளில்லை. அவள் நீயில்லை. எவளில்லை நீ? எவளென்றாலும் கறைபடிந்த உள்ளாடையுடன் காத்திருப்பர். கூடு கலைந்து ஒடியநாளில் கைவிடப்பட உயிர்களிடம் எஞ்சியிருந்தவற்றைக் காவி வந்தவர்கள் எவருமில்லை படிமங்கள் ஆயிரம் புனைவுகள் கோடி போரையும் வாழ்வையும் சொல்ல முடிந்த கவிஞர்கள் இங்கில்லை. யாரையும் நோகாது செல்லக் காற்றுக்கு முடியும்; கண்ணீருக்கு முடியாது. பெண்ணே நீ நின்ற கடல் சேறானது. உன்னைக் கைவிட்ட காலம் ஊனமானது. செய்யாதன செய்த அவன் அரியாசனம் பற்றி எரிகவென்று அறம்பாடச் சொல்வறண்டு போன கவிஞனடி நான். பொன்னே பொய்வாழுதடி போடி போன இலட்சம் உயிர்களோ…
-
- 0 replies
- 509 views
-
-
நீர் பகைஅருகில் போகும்போது பாம்புகளும் நடுங்கும் பாதைதனை விடும் .. கம்பி பட்டு முள்வேலிகள் பூமாலையாய் தெரியும் .. எதிரியின் மண்ணரன் சிறு புற்றாய் இருக்கும் . கந்தகப்பொதி புத்தக்பைபோல இருக்கும் சுடுகோல் எழுதுகோலாய் இருக்கும் கைக்குண்டு அழி ரப்பர் ஆகமுன் நிங்கள் அதிகாலை மீண்டும் வந்திடுவீர் ஓய்விடம் ... மச்சான் நீ எனக்கு பூசிவிட்ட கரி போகவில்லை நாளை உனக்கு பூசுறன் கரி எண்ணை கலந்து கழுவினாலும் போகாது காய்ந்தாலும் போகாது பருவாயில்லை மச்சான் வெடிவிளுந்தா போயிடும் ... டேய் நான் பக்கத்தில் உள்ளவரை ஒரு ரவை .. உன்னை நெருங்கா வேங்கையா கொக்கா .. என்று நீ கட்டி என்னை அணைத்த கணம் நினைவில் ... கண்கள் கண்ணீரை தூவுதடா உன் மேல் என் பாசக்கார தோழா..
-
- 3 replies
- 765 views
-
-
பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள் o தீபச்செல்வன் ------------------------------------------------------------------ (இன்னுமின்னும் அறியாத சேதிகள் அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன) நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே! உன்னை உரித்து சிதைத்தவர்களின் கைளிலிருந்து எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது. கண்டெடுக்கப்படாவர்களின் சடலங்களுக்கு என்ன நேர்ந்திருக்குமென்று தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம் எண்ணிக்கையற்ற முனைகளில் நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது. …
-
- 12 replies
- 3.2k views
-
-
சைவ சமயம் உட்பட பல சமயங்களில் இறைவனைத் தொழ பதிகங்கள் இயற்றி கோவில்களில் தேவாலயங்களில் பாடி இறை நம்பிக்கைகளை பன்னெடும் காலம் வளர்த்து வரும் நிலையில்... எமது இனத்தின் இருப்பின் முதலாய் நிற்கும் தெய்வத்தையும் கடந்து நினைவில் என்றும் இருக்க வேண்டிய மாவீரர்களை நெஞ்சால் தொழுது இலட்சியத்தால் அவரின் கனவு வென்று நிற்க.. தோத்திரங்கள் பதிகங்கள் இயற்றி நிற்போம். அவை பண்.. தாளம் கொண்டு புனிதம் நிலைக்க.. பாடப்படும் நிலை இயற்றுவோம்..! வீழ்ந்த வீரரின்.. இலட்சியம் காவி நிற்போம். அந்த வரிசையில்.. எங்கள் பங்களிப்பு... உங்கள் பங்களிப்பையும் ஆற்றி நில்லுங்கள்...! பண் - தாளத்துடன் பாடக் கூடியது. பண் - தாளம் - அறியப்பட வேண்டியது. மாநிலத்தின் தமிழ் மரபு காத்தாராய் தமிழ்…
-
- 9 replies
- 910 views
-
-
விரிந்து கிடக்கும் பூக்களில் தேன் குடிக்கும் வண்டினைப்போல்... திறந்து வைத்த ஜன்னலோரத்தில் நான்!!! அதிசயம் ஆனால் உண்மை...! பக்கத்து வீட்டில்தான் பால்நிலா வசிக்கிறது!!! நிலவுக்கும் எனக்குமான சில அடி தூரங்களும் பலகோடி ஒளியாண்டு இடைவெளியாய்த் தெரிகிறதே!!! இத்தனை நாளாய்ப் பார்க்காமல் எத்தனை அமாவாசைகளை கடந்திருப்பேன்!!! ஏய் நிலவே...!!! பறந்து போகும் என் எண்ணங்களுக்கு சிறகுகளை இலவசமாய்... நீதான் கொடுத்தாயோ??? மொத்தமாய் மறந்துபோகிறேன் என்னை நானே..!!! வீசுகின்ற பருவக் காற்றை நீதான் அனுப்பி வைத்தாயோ??? மெதுவாய் என் பக்கம் வந்து உன் பருவத்தின் வாசனையை பக்குவமாய்ச் சொல்லுதடி!!! அங்கே நீ எட்டிப் பார்த்துச் சிரிக்கையிலே இங்கே கூடுவிட்டு நழுவுதடி எ…
-
- 16 replies
- 1.3k views
-