வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
மூன்று வருடங்கள் கழித்து நயன்தாராவை இயக்கியுள்ளேன்: விக்னேஷ் சிவன் குஷி! லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இசை - அனிருத். ஆகஸ்ட் 17 அன்று வெளிவரவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலைத் தான் இயக்கியுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இது இப்படத்தின் விளம்பரப் பாடல். ரவி வர்மன் போன்ற ஒரு மேதையும் இணைந்து பணியாற்றியுள்ளேன். நயன்தாராவை மூன்று வருடங்கள் கழித்து இயக்கியுள்ளேன் என்று எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன். …
-
- 5 replies
- 932 views
-
-
வன்முறையை ரசிப்பது எப்படி? தொலைக்காட்சித் தொடர்கள் கற்றுத் தருகின்றன - இளமதி "ஆனந்தம் முடியும்போது வீட்டுக்காரர் வருவாரு. 'சொர்க்கம்' போடும்போது மதிய சாப்பாட்டுக்குப் பிள்ளைங்க வருவாங்க. செய்தி போடும்போது சாப்பிடுவோம்" என்று ஒவ்வொரு அன்றாட நிகழ்வையும் தொலைக்காட்சித் தொடர்களின் நேரத்தோடு இணைத்து நிகழும் உரையாடல்களைக் கேட்டிருப்போம். பெண்களின் அன்றாட வாழ்வில் இந்தத் தொடர்களுக்கு அப்படியொரு பங்கு இருக்கிறது. "அந்த அபிய ஜெயில்ல வச்சே கதைய முடிச்சிடணும். எனக்குப் போட்டியா அவ தொழில்ல தலைகாட்டக் கூடாது." "சி.ஜே.வ நான் கல்யாணம் பண்ணியே தீருவேன். அதுக்காக செல்விய என்ன வேணாலும் பண்ணுவேன்"... என்று நாம் பார்க்கும் தொடர்கள் பழிவாங்கும் மனநிலையில் வெளிப்படும் …
-
- 0 replies
- 932 views
-
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்த ஒரே காரணத்திற்காக தமிழ் சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட வைகை புயல் நடிகர் வடிவேலு, ம.தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென்று தனிப்பாணியில் செயல்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்தார். இதன் விளைவாக வடிவேலு வீடு, அலுவலகம் தாக்கப்பட்டது. இதற்கு பழிவாங்குவதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது ஜ…
-
- 9 replies
- 932 views
-
-
சில ஆச்சரியங்கள்,சில அதிர்வுகளைக் கொடுத்துவிட்டு தமிழ் சினிமாவிற்கு ‘குட் பை’ சொல்லியிருக்கிறது 2010. இந்த வருடம் மட்டும் நூற்றிமுப்பத்தியாறு படங்கள் வெளி வந்திருக்கின்றன.அதில் டாப் 10 படங்கள் எவை? சினிமா விமர்சகர்கள், சினிமா துறைகளில் அனுபவம் அதிகமுள்ளவர்களிடம் கேட்டுத் தயாரித்த, பட்டியல் இது. 2010-இல் ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, பரத் என தமிழ் சினிமாவின் ‘ஆல் ஏஜ் குரூப்’ முன்னணி ஹீரோக்கள் அனைவரது படங்களும் வெளிவந்தது ஒரு கலர்ஃபுல் கமர்ஷியல் கலாட்டா.இதில் கதையை நம்பிய நாயகர்களே கமர்ஷியல் கதாநாயகர்களாக பந்தயத்தில் முந்தியிருக்கிறார்கள். இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதை, கதாபாத்திரங்களுக்கு பொ…
-
- 0 replies
- 932 views
-
-
இதைத்தான் பெரியவர்கள் 'ஆடத் தெரியாதவனுக்கு மேடை குற்றம்' என்று அழகாக சொல்லியிருக்கிறார்கள். தமிழ், மலையாளப் படங்களில் நடிக்காததற்கு நல்ல கேரக்டர்கள் கிடைக்காததுதான் காரணம் என்று கூறியிருக்கிறார் நயன்தாரா. மலையாள சினிமாவில் பத்தோடு மலையாள சினிமாவில் பத்தோடு பதினொன்றாக அறிமுகமாகி, பெரிய ஹீரோக்களின் தங்கையாக, ஹீரோயின் தோழியாக கூட்டத்தோடு கும்மாளம் போட்டவரை, தேடிப் பிடித்து கிரேனில் வைத்தது தமிழ் சினிமா. நயன்தாரா தமிழில் அறிமுகமான 'ஐயா' படமே உண்மையில் இவருக்கு சரியான சினிமா விலாசமாக அமைந்தது. ரஜினியுடன் ஜோடி சேர்ந்ததால், ஒரே படத்தில் தென்னிந்தியாவின் நம்பர் 1 நடிகையாக உயர்ந்தார். 'வல்லவன்' படத்துக்குப் பிறகு சிம்புவுடன் ஏற்பட்ட மோதலும், தெலுங்கு தேசத்தில் கொட்டி…
-
- 0 replies
- 931 views
-
-
ஓய்வெடுக்க இது நேரமல்ல! - நடிகை சமந்தா பேட்டி “சென்னை பல்லாவரம் பெண்ணான சமந்தா தற்போது ஆந்திர சினிமாவின் முன்னணி நட்சத்திரக் குடும்பமான அக்கிநேனி வீட்டு மருமகளாக ஐக்கியமாகிவிட்டார். ட்விட்டரிலும் தனது பெயரை ‘சமந்தா அக்கிநேனி’ என மாற்றிக்கொண்டிருக்கும் இந்த புதுமணப் பெண், தமிழ், தெலுங்கு சினிமாவில் இன்று அறிமுகமான கதாநாயகிபோல இளமை குன்றாமல் வலம் வந்துகொண்டிருக்கிறார். மத்தாப்புச் சிரிப்பை எப்போதும் அணிந்திருக்கும் இந்தத் தலைத் தீபாவளி நாயகியிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி… விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறீர்கள், எப்படி இருந்தது அனுபவம்? விஜய் சாருடன் நடிப்…
-
- 0 replies
- 931 views
-
-
நடிப்பு - சூர்யா, அசின் இயக்கம் - ஹரி இசை - யுவன்ஷங்கர்ராஜா (கதை) ஆயிரம் அரிவாளால் சாதிக்கமுடியாத ஒரு விஷயத்தை, ஆறு அறிவால் சாதிக்க முடியும் என்பதே படத்தின் மையக்கரு. (நடிகர்) சூர்யா, அசின், வடிவேலு, நாசர், சரண்ராஜ், கலாபவன்மணி, சார்லி, அம்பிகா மற்றும் பலர். (சிறுதுளிகள்) * 'பேரழகன்' படத்திற்கு பிறகு சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். * 'கஜினி' படத்தைத் தொடர்ந்து சூர்யா ஜோடியாக நடிக்கும் அசின், ஐயர் வீட்டு பெண், மார்டன் கேள் என இருவித…
-
- 0 replies
- 931 views
-
-
கமல் நடித்து வெளியாகப்போகும் விஸ்வரூபம் திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 11ல் வெளியாகும் என்பதில் கமல் உறுதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் திடீரென தேவி தியேட்டர் இன்று மாலை முதல் முன்பதிவை நிறுத்திவிட்டது. அதற்கு திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகுமா? என்று கோலிவுட்டில் கிளம்பிய பெரும் வதந்திதான் காரணம் என கூறப்படுகிறது. தியேட்டர் அதிபர்கள் சங்கத்தில் முடிவு செய்யப்பட்ட சில முக்கிய அம்சங்களை கமல் தரப்பில் ஏற்றுக்கொண்டதாகவும், அதன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படலாம் என்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்துள்ளதால், ரிலீஸ் தேதி ஜனவரி 25க்கு மாறலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் டி.டி.எச்சில் ஜனவரி 10ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 24ஆம் தேதி இரவு ஒளிபரப்பாகும் என்றும் எதிர்ப…
-
- 2 replies
- 931 views
-
-
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் நடிகை லட்சுமிராய் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஸ்ரீசாந்தை சூதாட்ட புகாரில் போலீசார் கைது செய்துள்ளனர். சூதாட்டத்தில் சேர்த்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீசாந்துடன் தொடர்பு வைத்து இருந்த கிரிக்கெட் சூதாட்ட தரகர்களும் கைதாகி வருகிறார்கள். சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று மும்பை போலீசார் அறிவித்து உள்ளனர். இதனால் திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஸ்ரீசாந்துடன் நெருக்கமாக இருந்த நடிகைகள் யார் யார் என்ற விவரங்களை போலீசார் சேகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீசாந்தும் இந்தி நடிகை சுர்வின் சாவ்லாவும் ரிய…
-
- 4 replies
- 930 views
-
-
Sunday, December 19th, 2010 அசின் நடிப்பில் வெளிவரும் காவலன் படத்தை புறக்கணிப்போம் தமிழர்களே! அன்பார்ந்த உலகத் தமிழ் மக்களே… வெகு விரைவில் வெளிவர இருக்கும் விஜய் அசின் நடித்த காவலன் படத்தை உலகமெங்கும் புறக்கணிக்குமாறு உரிமையோடு வேண்டும் அதே நேரம் அதற்கான வலுவான காரணங்களையும் முன்வைக்க விரும்புகின்றோம். முதலில் படப்பிடிப்புக்கு மட்டுமே இலங்கை சென்றேன் என்றார் அசின் பின்பு போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவே சென்றேன் என பல்டியடித்தார். எல்லாவற்றையும் விட கொடுமையான விடயம் எதுவெனில் ஒருவருக்கு கண் சிகிச்சை முடிந்த பின் நீங்கள் முதலில் யாரை பார்க்க விரும்புகின்றீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் அசினை மட்டுமே பார்க்க விரும்புகின்றேன் என அவர் கூற…
-
- 2 replies
- 930 views
-
-
பொதுவாக தென்னிந்திய நடிகைகள் கால்ஷீட்டுக்கு முதலிடம் கொடுப்பது தமிழ் அல்லது தெலுங்குப் படங்களுக்குத்தான். ஆனால் தமிழில் அறிமுகமான பூஜா காந்திக்கு கன்னடப் படங்கள் மீதுதான் காதல். கொக்கி படத்தில் கரணின் காதலியாக அறிமுகமானவர் பூஜா காந்தி. இது சொந்தப் பெயர், தமிழில் சஞ்சனா என்ற பெயரில் நடித்தார். அந்தப் படம் கரணுக்கு கை கொடுத்த அளவுக்கு பூஜாவுக்கு அமையவில்லை. அப்போதுதான் கன்னடத்தில் முங்காரு மலே எனும் படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. ஒரே படத்தில் கன்னடத்தின் நம்பர் ஒன் நடிகையாகிவிட்டார். இப்போது எண்ணுவதற்கு கை விரல்கள் போதாத அளவுக்கு கன்னடப் பட வாய்ப்புகள் குவிகின்றன அவருக்கு. இடையில் இரு தமிழ்ப் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை வேண்டவே…
-
- 0 replies
- 930 views
-
-
'பருத்திவீரன்' படத்துக்கு பைனான்ஸ் சிக்கல், தயாரிப்பாளரிடமிருந்து படத்தை வாங்கியிருக்கிறார் இயக்குனர் அமீர்! சில வாரங்கள் முன் வந்த இந்த செய்தி முழுக்க உண்மை. ஆச்சரியம் என்னவென்றால், பைனான்ஸ் சிக்கலில் மாட்டிக்கொண்ட படம் என்று சொல்லமுடியாத அளவுக்கு காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்கள். முக்கியமாக ஒரு சண்டைக்காட்சி. பருத்திவீரனான கார்த்தி புழுதிக் காட்டில் வில்லன்களுடன் மோதுவதாக ஒரு காட்சி வருகிறது. இதற்காக தேனி மாவட்டத்தை சல்லடை போட்டு சலித்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிக்கு ஐம்பது ஏக்கர் பரப்பளவாவது வேண்டும் என இயக்குனர் அமீர் சொன்னதால்தான் இந்த தீவிர வேட்டை. கடைசியில் புரொடக்ஷ்ன் ஆள்கள் ஐம்பது ஏக்கரில் நிலமொன்றை பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஒரு குறை. நிலம் புழு…
-
- 0 replies
- 930 views
-
-
இந்தியாவில் தயாரான முதல் படம் இந்தியாவில் தயாரான முதல் படம் "அரிச்சந்திரா" 1913_ல் வெளிவந்தது. மேல் நாட்டில் தயாரான ஊமைப்படங்கள், இந்தியாவிலும் திரையிடப்பட்டன. இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் திரைப்படத்தின் பெயர் "ஏசுவின் வாழ்க்கை". இந்த ஊமைப்படம், 1896_ம் ஆண்டு பம்பாயில் (இன்றைய மும்பை) திரையிடப்பட்டது. பால்கே வேறு புதுப்படம் வராததால், இந்தப்படம் தொடர்ந்து "ஏசுவின் வாழ்க்கை" படத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் டுபான்ட் என்ற பிரெஞ்சுக்காரர். அவர், இந்தியாவின் ஒவ்வொரு நகரமாக அந்த பிலிம் பிரதியைக் கொண்டு வந்து திரையிட்டார். திரையில் மனிதர்கள் ஓடுவதையும், ஆடுவதையும் கண்டு மக்கள் பிரமித்தனர். டுபான்ட், திருச்சிக்கு வந்து அப்படத்தை …
-
- 0 replies
- 930 views
-
-
சிலருக்கு மட்டுமே உருமாற்றம் சாத்தியம். பிரகாஷ்ராஜ் இதில் டாக்டரேட்! புரியவில்லை? ஒரு படத்தில் துரத்தி துரத்தி காதலித்து விட்டு அடுத்தப் படத்தில் அதே நடிகைக்கு அப்பாவாக நடிப்பது சாதாரணமா? எஸ்., பிரகாஷ்ராஜுக்கு இது சாதாரணம் மனிதர் ஐ லவ் யூடா செல்லம் என ஒரு படத்தில் மிரட்டுவார். அடுத்தப் படத்தில் சிரிப்பு வைத்தியம் என்று கிச்சு கிச்சு மூட்டுவார். இன்னொன்றில் பீத்தேவன் பிறந்த நாளுக்கு பீர் குடித்து நம் வயிற்றை புண்ணாக்குவார். பீடிகை போதும். விஷயத்துக்கு வருவோம். ராதாமோகனின் புதிய படத்தை அதே பழைய பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரிக்கிறது. பிரகாஷ்ராஜ் படத்தின் பிரதான கேரக்டர். இன்னொருவர் த்ரிஷா. 'கில்லி' படத்தில் ஐ லவ் யூடா செல்லம் என த்ரிஷாவை துரத்தி துரத்தி ஸாரி,…
-
- 0 replies
- 929 views
-
-
தேர்தல் முடிவு வந்தவுடன் வேலாயுதம் ட்ரெய்லரை ஜெயா டிவியில் உற்சாகமாக ஒளிபரப்பினார்கள். இந்த பரபரப்பில் ஒன்றை பலரும் கவனிக்க தவறினர். அது சகுனி படத்தின் ட்ரெய்லர். இதுவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. சகுனி கார்த்தி நடிக்கும் அரசியல் படம். அதாவது இரு கட்சிகளுக்கிடையே சண்டை மூட்டி அதில் குளிர் காயும் அரசியல்வாதியின் கதை. கோள் மூட்டியே பெரியாளாகிறார் கார்த்தி. இந்த ஒன் லைனில் பல கதைகள் வந்திருக்கின்றன. இதனால் அவற்றிலிருந்து வித்தியாசப்படுத்த அரசியல் தரகர் நீராராடியாவின் கதையை உள்ளீடாக சொல்லியிருக்கிறார்களாம். ஆளும் கட்சியே வெற்றி பெற்றிருந்தால் சகுனிக்கு சங்கு ஊதியிருப்பார்கள். வெற்றி பெற்றது எதிர்க்கட்சி என்பதால் கெத்தில் இருக்கிறது சகுனி டீம் http://www…
-
- 0 replies
- 929 views
-
-
தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்த பாலன் குற்றஞ்சாட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கடந்த 66வது திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்த கன்னடப் படமான கே.ஜி.எஃப் படத்திற்கு சிறந்த சண்டை திரைப்படத்திற்கான தேசிய விருதும், மகாநதி (தெலுங்கு) படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான உரி திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் என்பவருக்கு சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த …
-
- 0 replies
- 929 views
-
-
குஷ்பு போல அரசியலில் குதிக்க விருப்பமா? த்ரிஷாவின் அதிரடி பதில் ... சமூகத்தில் பெண்களை பாதிக்கிற விஷயங்கள் நிறைய உள்ளன. பெண் சிசு கொலை, பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் போன்றவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. இது போன்ற செய்திகள் அன்றாடம் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு முடிவு கட்டி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம். இதற்காக சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மேல் மட்டத்தில் இருந்து இதற்கான மாற்றங்கள் உருவாக வேண்டும். பாலியல் வல்லுறவு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தண்டனை வழங்கும்படி சட்டம் கொண்டு வர வேண்டும். நடிகைகள் குஷ்பு, ராதிகா போன்றோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருப்பது சந்தோஷமான வி…
-
- 1 reply
- 929 views
-
-
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அனில்கபூர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிறது.கமல்ஹாசனும், அனில் கபூரும் இணைவது இது முதல் முறை. அதேசமயம், இருவருக்கும் ஏற்கனவே ஒரு தொடர்பு உண்டு. கமல்ஹாசன் தமிழில் உருவாக்கிய பிரமாண்ட வெற்றிப் படமான தேவர் மகனை இந்தியில் ரீமேக் செய்து நடித்தார் அனில்கபூர். அப்படம் அங்கு விராசத் என்ற பெயரில் வெளியாகியது. அதேபோல சலங்கை ஒலி படத்தையும் ரீமேக் செய்து நடித்தார் அனில் கபூர். சமீபத்தில் சென்னை வந்திருந்த அனில் கபூர், கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும், அதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறினார் அனில். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த கமல், சரி நடிக்கலாம், கதையை ரெடி செய்யுங்கள் என்றாராம். கமல் டக்கெ…
-
- 0 replies
- 929 views
-
-
4 மணி நேரத்தில் ரூ 50 லட்சம்-டிக்கெட் விற்பனையில் எந்திரன் சாதனை! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 26, 2010, 12:40[iST] சென்னை: திரையுலகம் இதுவரை காணாத பெரும் வசூல் சாதனையைச் செய்து வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். இந்த சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர வேறு யாராலும் தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று கோடம்பாக்கத்தில் பிரதானமாக எழுந்து நிற்கிறது. டிக்கெட் விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை. சென்னை அபிராமி மெகா மாலில் 20 நிமிடங்களில் 8 நாட்களுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50 லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை என்றும் அபிரா…
-
- 3 replies
- 928 views
-
-
முதல் பார்வை: அடங்க மறு உதிரன்சென்னை சட்டப்படி தன் கடமையைச் செய்ய முடியாத போலீஸ் அதிகாரி அந்த வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு குற்றவாளிகளைத் தண்டித்தால் அதுவே 'அடங்க மறு'. சென்னை அண்ணா நகரில் காவல் உதவி ஆய்வாளராக வேலைக்குச் சேர்கிறார் சுபாஷ் (ஜெயம் ரவி). உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஒரு மதுக்கடையை மூடக் கோரி நடைபெறும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தச் செல்கிறார். ஆனால், எஸ்.ஐ. சுபாஷின் நூதன ஆலோசனையால் மாணவர்கள் மதுக்கடையைச் சூறையாடுகின்றனர். ஓர் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்க, அதை தற்கொலை என்று சொல்லி வழக்கை முடித்து வைக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் (மைம் கோபி) முடிவெடுக்கிறார். சுபாஷ் அதையும் முறியடிக்கிறார். அந்தக் கொலை வழக்கு சம்பந…
-
- 4 replies
- 928 views
-
-
இப்படியான சினிமா எங்களுக்கு வேண்டாம் : சஞ்ஜயன் நேற்று இங்கிலாந்துத் தமிழர்களின் தயாரிப்பான ”யாவும் வசப்படும்” என்னும் முழு நீ(ல)ளத் திரைப்படத்தை பார்க்கக்கிடைத்தது. அண்மையில் NorTamil.no என்னும் இணையத்தளத்தில் ஈழத்து திரைப்படத்துறையின் இயக்குனர்களில் ஒருவரும், பெரும் அனுபவசாலியும், நோர்வேயில் வாழ்பவுருமான சிவபாலன் காசிநாதர் அவர்கள் ”ஈழத்தமிழரும் சினிமாவும் – ஒரு முதியவனின் சில அனுபவக் குறிப்புக்கள்” என்னும் கட்டுரையில் சிறந்த திரைப்படங்களைப் பாருங்கள், என பலதையும் வகைப்படுத்தி, அவை உங்களுக்கு பலதையும் கற்றுத்தரும் என்று மறைமுகமாக சில கருத்துக்ளை தற்போதைய திரைப்படக்கலைஞர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அவரின் கருத்து மிகவும் கச்சிதமாக ”யாவும் வசப்படும்” குழுவின…
-
- 4 replies
- 928 views
-
-
திருமண வாழ்க்கைக்கு உண்மையும் விட்டுத்தருவதும் முக்கியம்: சன்னி லியோன் பேட்டி சன்னி லியோனி | படம்: சந்தீப் சக்சேனா வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு உண்மையும், விட்டுக்கொடுத்தலும் தான் முக்கியம் என்கிறார் நடிகை சன்னி லியோன். திரையுலக நட்சத்திர தம்பதிகளுக்கிடையில் பிரச்சினைகள் எழுவது சகஜம். இந்த வருடம் பாலிவுட்டில், இரண்டு ஜோடிகள் பிரிந்துவாழ முடிவு செய்துள்ள நிலையில், சன்னி லியோன் தன்னுடைய திருமண வாழ்வின் ரகசியத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். 2009-ல் டேனியல் வெபரைத் திருமணம் செய்துகொண்டார் சன்னி லியோன். அவர் சினிமா, திருமண வாழ்க்கை குறித்துப் பேசியதாவது: வெற்றிகரமான மணவாழ்க்கைக்கு என்ன தேவை?…
-
- 3 replies
- 928 views
-
-
குறிப்பிட்ட ரசிகர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி ரசிக்கப்படும் நடிகர்களுள் ஒருவர் விக்ரம். கஷ்டப்பட்டு நல்ல நடிகர் என்ற இமேஜையும், தேசிய விருதையும் பெற்ற அவரது படங்களை ரசிகர்கள் ஓரளவுக்கு எதிர்ப்பார்க்கவே செய்கிறார்கள். தெய்வத் திருமகள் படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் காப்பியாக இருந்தாலும், விக்ரம் நடிப்புக்காக அந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அதற்குப் பிறகு அதிரடியாக ஒரு படம் தருவதாகக் கூறி ராஜபாட்டையை வெளியிட்டுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் நேற்று வெளியான இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. குறிப்பாக திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த சுசீந்திரன், தேசிய விருது பெற்ற விக்ரம் காம்பினேஷனில் உருவாகும் படம் என்பதால், தூள்…
-
- 0 replies
- 927 views
-
-
-
- 1 reply
- 927 views
-
-
உதாவாக்கரை என்று அப்பாவால் பட்டம் கட்டப்பட்ட பிள்ளை தலையெடுத்து குடும்பத்தைக் காப்பாற்றும் அரதப்பழசானக் கதையுடன் கொஞ்சம் காமெடி - செண்டிமெண்ட் கலந்து எடுக்கப்பட்டப் படம் தான் பாண்டி. கண்டிப்பான பள்ளி ஆசிரியர் நாசர். அவரது மனைவி சரண்யா. ஸ்ரீமன், லாரன்ஸ் மற்றும் மூன்று பெண்கள் குடும்பத்தின் இளைய வாரிசு லாரன்ஸ். தன் சண்டியர்தனமான நடவடிக்கைகளால் நாசரால் வெறுக்கப்படும் லாரன்ஸ் மலை போல நம்புவது அம்மா சரண்யாவை மட்டும். ஒரு கட்டத்தில் மகளின் திருமணத்திற்காக கடனாக வாங்கிய பணம் காணாமல் போக - பழி லாரன்ஸ் மீது விழுகிறது. நாசர் லாரன்ஸை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். தங்கைகளின் திருமணத்தை நடத்தவும், தனது அம்மா ஆசைப்பட்டபடி சொந்தமாக ஒரு வீடு கட்டுவதற்காகவும் கிடைக்கும் வேலையை ஒத்த…
-
- 0 replies
- 927 views
-